தாரகை 16

“நான் என் வீட்டுக்கே போறேன்” கிஷோர் அக்கா சொல்ல, விரக்தியுடன் சிரித்தான் கிஷோர்.

“எங்க போகப் போற? இன்று காலையே உம் புருசனுக்கு வேற பொண்ணுடன் கல்யாணம் முடிச்சிருச்சு” கிஷோர் சொல்ல, “மாமா” சத்தமிட்டாள் மித்ரா.

ஆமா மித்து, உங்க அப்பா உன்னோட அம்மாவை அழைச்சிட்டு போக எத்தனை வருசமா பொறுமையா காத்திட்டு வந்தார் தெரியுமா? எவன் வருவான்?

“மாமா” கண்ணீருடன் அவள் அழைக்க, நீ இங்க இரண்டு வயசுல வந்த? இப்ப உனக்கு எத்தனை வயசு? பதினாறாகுது. பதினான்கு வருசமா அவரு உன்னையும் பார்க்க முடியாமல் உன் அம்மாவையும் சமாதானப்படுத்த முடியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கார்..

நீயாவது ஒரு முறையாவது அப்பான்னு அவரிடம் போயிருப்பீயா?

டிவோர்ஸ் பண்ணாம செகண்ட் மேரேஜ் பண்ண முடியாதே! ஜோ கேட்டான்.

அதை தான் இந்த பெரிய மனுசன் என் அக்காவுக்கே தெரியாம ஏதோ சொல்லி வாங்கி கொடுத்துட்டார்.

அக்கா, நீ தான் கையெழுத்து போட்டியான்னு மாமா கேட்டார்? நீயும் ஆமான்னு சொன்னீயே! மறந்து போச்சா..

“நான்…” கண்ணீருடன் கிஷோரை பார்த்தாள் அவன் அக்கா.

உன்னை ஏமாத்தி வாங்கி கொடுத்துட்டார்ல்ல. நான் சொல்ல வந்தால் நீ கேட்கவே மாட்ட. மாமான்னு சொன்னால் உனக்கு வெறுப்பா தான இருந்தது.

அவரு சந்தோசமா மேரேஜ் செய்திருக்கார்.

அந்த பொண்ணு விதவை. அவளோட புருசன் இறந்துட்டான். அவங்களுக்கு ஒரு பையனும் இருக்கான். ரொம்ப நல்லவங்க. நானும் பேசி இருக்கேன். அவங்க வாழ்க்கையில குறுக்கிடாமல் இரு..

“மாமா” மித்ரா சினமுடன் அழைக்க, “கடந்த பதினான்கு வருசமா உன்னோட அப்பா முகத்தில் சிரிப்பே இல்லை. ஆனால் இன்று சந்தோசமா இருக்கார். அவங்க அவரை நல்லா பார்த்துப்பாங்க. அவரை விட்ருங்க. அவராவது சந்தோசமா இருக்கட்டும்” கையெடுத்து கும்பிட்டு தன் அம்மாவை பார்த்தான்.

“உன்னோட பொண்ணோட வாழ்க்கை உன் அமைதியில் மொத்தமா அழிஞ்சு போயிருச்சு. போம்மா..போ” தனுவை ரிஷியிடம் அழைத்து வந்தான்.

கண்கள் சிவக்க ரிஷி கிஷோர் தந்தையை தான் வெறித்துக் கொண்டிருந்தான்.

என்னடா ரிஷி? உனக்கு கோபம் வருதா? உனக்கு புரியுதா? ஒன்று மட்டும் நான் சொல்றதை கேட்டுக்கோ..

“நிது, புகழை சுற்றி இருக்கும் எல்லாரும் உன்னையும் புகழையும் ஒப்பிட்டு பார்த்திருக்காங்க. ஆனால் நிது இதுவரை பார்த்ததேயில்லை. அவ உன்னோட பொக்கிஷம் பார்த்துக்கோ. அவ மட்டும் புகழோட உன்னை ஒப்பிட்டு பார்த்தால் நீ கீழ இறங்கிடுவடா. பார்த்து…சீக்கிரமே உன்னோட காதலை கண்டுபிடி” கிஷோர் தன் தந்தையை பார்த்தான்.

எனக்கு இந்த வீட்ல இருக்க பிடிக்கலை. நிது மேரேஜ் முடிந்த பின் நான் கொஞ்ச நாள் வெளிய எங்காவது போகலாம்ன்னு இருக்கேன்.

அம்மா, அக்கா, மித்து…நீங்களும் இந்த வீட்ல இனி இருக்க முடியாது. எங்க போகப் போறீங்கன்னு யோசிச்சிக்கோங்க..

ஏன் இருக்க முடியாது மாமா? மித்ரா கேட்க, வீட்டிற்குள் போலீஸ் வந்தனர்.

சார், நீங்க சர்க்காருக்கு எதிரான விசத்தை உள்நாடு, வெளிநாட்டிற்கு விற்பனை செஞ்சிட்டு இருந்திருக்கீங்க? இதனால் பலர் பாதிக்கப்பட்டிருக்காங்க. உங்களை கைது செய்ய ஆர்டர் வந்திருக்கு..

ஆதாரம் இல்லாமல் என்னோட அப்பாவை கைது செய்ய முடியாது கிஷோர் அண்ணன் கூற, உங்களையும் சேர்த்து தான் சார் கைது செய்ய வந்திருக்கோம்..

நீங்க பள்ளியில் படிக்கும் பசங்களுக்கு கஞ்சா சப்ளை பண்ணி இருக்கீங்க? உங்க இருவர் பற்றிய எல்லா ஆதாரமும் இருக்கு. உங்க மகன் கிஷோர் தான் எல்லாவற்றையும் கொடுத்தார் என்றனர்.

எல்லாரும் கிஷோரை பார்க்க, “ஆமா நான் தான் கலெக்ட் செய்து கொடுத்தேன். நானும் இங்கிருந்து கிளம்புகிறேன்” அவன் அவனறைக்கு சென்று பையுடன் கீழே வந்தான்.

மாமா, எங்கள தனியா விட்டு எங்க போகப் போற?

புன்னகைத்த கிஷோர், என்னோட சிவாங்கியை தேடி போறேன்.

“நானும் வாரேன்டா” அவன் அம்மா கூற, “நானும் வாரேன்” அழுதார் அவன் அக்கா.

அம்மா, மித்துவை கூட நான் பார்த்துப்பேன். காதலித்து கைபிடித்தவனிடமே நீ அதிகாரத்தை வைத்து என்னவெல்லாம் செய்ற? மாமாவோட காதலை திருமணத்தின் முன் மதிச்ச. அதன் பின் அவரை மிதிக்க தான செய்த? இதே தான் எல்லாருக்கும் செய்வ? என்னால உன்னை பார்த்துக்க முடியாது..

என்னோட வரணும்ன்னா அரைமணி நேரம் தாரேன். சீக்கிரம் வாங்க. எல்லாவற்றையும் வித்து ஆசிரமத்துக்கு எழுதிட்டு என்னுடைய நியாயமான உழைப்பில் இப்பொழுதைக்கு வீடு பார்க்கலாம் கிஷோர் கூறினான்.

அதெல்லாம் வேண்டாம். என்னோட வீட்டுக்கு வாங்க ரிஷி அழைத்தான்.

இருக்கட்டும் ரிஷி. நான் என்னோட குடும்பத்தை பார்த்துக்கிறேன். நான் சொன்னதை நினைவில் வச்சுக்கோ. நிதுவை மிஸ் பண்ணிடாத…

ம்ம்..மித்ரா ஜோவை பார்க்க, அவன் பாவமாக அவள் அம்மாவை தான் பார்த்தான்.

ஆன்ட்டி, நீங்க எங்க பாட்டி வீட்டுக்கு வர்றீங்களா? ஜோ கேட்க, அனைவரும் அதிர்ந்தனர்.

கிஷோரின் அப்பாவையும் அண்ணனையும் போலீஸ் கைது செய்து இழுத்து சென்றனர். மீடியா முழுவதும் விசயம் வைரலானது.

கிஷோரை அவர் மாமா அழைக்க, “நான் பார்த்துக்கிறேன் மாமா. நீங்க உங்க குடும்பத்துடன் சந்தோசமா இருங்க” அலைபேசியை வைத்து விட்டான்.

கிஷோரை அவன் அக்கா பார்க்க, விருப்பமிருந்தால் ஜோ பாட்டி வீட்டிற்கு போ. மித்து என்ன செய்யப் போற? கிஷோர் அவளை பார்த்தான்.

நான்..அவள் தயங்கி பார்த்தாள்.

என்னோட நீயும் வர மாட்டியாடி? அவளை ஏக்கமுடன் பார்த்தார் மித்ராவின் அம்மா.

தன் அம்மாவை அணைத்து, மாமா..நான் அம்மாவுடன் இருக்கேன்.

மாமா, நாம எல்லாரும் இங்கேயே செட்டில் ஆகுமாறு பார்த்துக்கோ என்றாள் மித்ரா.

செட்டில்? அவன் சிரித்தான்.

இல்ல மாமா..அவள் பதற,

ஒன்றுமில்லை.

“அவங்க ஊட்டில்ல தான் இருக்காங்க. நிது மேரேஜூக்கு இன்னும் இரு வாரம் இருக்கு. உங்க அம்மாவை அழைச்சிட்டு போய் அவங்க எல்லாரையும் சமாதானப்படுத்திட்டு வாங்க” ஜோ சொல்ல, கிஷோர் அவனை அணைத்து.. ஊட்டில எங்க? அவன் கேட்க, ஜோ தனுவை பார்த்தான்.

“நான் முகவரி தாரேன். பார்த்து பேசுங்க. பணத்தை பற்றி ஏதும் பேச வேண்டாம்” தன்வி சொல்லி அனுப்பினாள்.

“தேங்க்ஸ் தனு” அவளை அணைக்க வந்தான்.

“இருக்கட்டும் இருக்கட்டும்” அவள் நகர்ந்து கொண்டாள். கிஷோர் புன்னகைத்தான்.

 ரிஷி தன் தங்கையுடன் வெளியேற, ஜோ கீழே வந்து கொண்டிருந்த கிஷோரையும் அவன் அம்மாவையும் பார்த்து கண்ணை காட்டினான். கிஷோர் கண்ணை மூடி திறந்தான்.

மித்ராவும் அவள் அம்மாவும் ஜோ அருகே வந்து நின்றனர்.

நாம பாட்டி வீட்டுக்கு போகணும். வர்றீங்களா இல்லை என்று அவன் வெளியே பார்க்க, வாரோம்..எங்களுக்கு என்ன பிரச்சனை? மித்ரா அம்மா கூற, அவள் அவளோட அம்மாவை பார்க்க, ஜோ புன்னகைத்தான்.

“மாமா” மித்ரா கிஷோரை அணைத்து, சீக்கிரமா என்னை கூப்பிட வந்திருங்க என்றாள்.

ம்ம்! ஜோ சொல்றதை கேட்டு நடந்துகிட்டா நான் சீக்கிரம் உங்களை கூப்பிட வந்திருவேன்.

தலையசைத்து தன் பாட்டியை அணைத்தாள்.

“தம்பி மித்துவை பார்த்துக்கோங்க” கிஷோர் அம்மா கூற, அதெல்லாம் என்னோட பாட்டிங்க பார்த்துப்பாங்க அவன் கூற, பாட்டிங்களா? எத்தனை பேர்?

மூவர் என்றான்..

போகலாமா? கேட்டான்.

மித்ரா அம்மா வேகமாக தலை ஆட்டினார். புன்னகையுடன் அவன் செல்ல, அவன் பின்னே வந்தவர்கள்..பைக்கா? கார் இல்லையா? கேட்டனர்.

இருக்கு. நான் பயன்படுத்த மாட்டேன் என்று கூலரை போட்டு அவர்களை பார்த்து பைக்கை எடுத்தான். மித்ரா வேகமாக அவனிடம் ஓடிச் சென்று அமர, நான் எப்படி உட்காருவது? மித்ரா அம்மா கேட்டார்.

இப்படி தான் என்று ஒரு பக்கமாக அமர வைத்தான்.

கவலையுடன் அவர் அமர, மித்ரா அவன் தோளில் கை போட்டு, உற்சாகமூடன் காற்றை சுவாசித்து மகிழ்ந்தாள். இருவரின் செய்கையையும் பார்த்து அவன் புன்னகைத்தவாறு சென்றான்.

            (பாட்டி வீட்டில்…)

இவங்க என்னோட பாட்டி இல்லை. என் நண்பன் புகழின் பாட்டிகள் என்றான்.

ம்ம்! இருவரும் வீட்டிற்கு வந்தனர்.

கடைசி பாட்டியும் தாத்தாவும் வெளியே அமர்ந்திருந்தனர்.

“பாட்டி” கை விரித்துக் கொண்டு சிறுபையன் போல அவர்களிடம் ஓடி வந்தான் ஜோ.

ஐய்யா…வாய்யா…நீ எப்ப வருவன்னு தான் யோசிட்டு இருக்கேன்..

“வாடி நம்ம ஜோ வந்துட்டான்” பாட்டி சத்தமிட, மற்ற பாட்டி வெளியே எட்டி பார்த்தார்.

வாய்யா..வா பாட்டியை மறந்துட்டன்னு நினைச்சேன். இன்னும் நிது வரலைடா வருத்தப்பட்டார்.

“வர வச்சிட்டா போச்சு பாட்டி” அவரை அணைத்துக் கொண்டான்.

உங்க பாட்டி மட்டும் தான் உனக்கு கண்ணுக்கு தெரியுறாங்களா பேரான்டி? தாத்தா பாவமாக அவனை பார்த்தார்.

“மை ஒன்லி ஒன் கோல்ட் தாத்தா நீ” அவரை அணைக்க வந்தான்.

“முந்தி போல இப்ப இல்லை தாத்தா உடம்பு” பாட்டி சொல்ல, ஆமா..தொப்ப போட்டிருக்கு சிரித்தான்.

இந்த புள்ளைங்க தானா? பாட்டி கேட்க, ஆமா பாட்டி ரகசியமாக இருவரும் பேசினார்கள்.

எங்க வீட்டுக்குள்ள வரணும்ன்னா புள்ளைங்க பேண்டு சட்டையுடன் வரக் கூடாது.

ஏலேய் நம்ம பவியோட பாவாடை தாவணியை எடுத்து போட்டு வர சொல்லு..

எனக்கு அதெல்லாம் உடுத்த தெரியாது.

பொம்பள புள்ளைங்க எப்படி இருக்கணும்ன்னு கத்துக்கோங்க. மித்ரா முகம் வாட அவள் அம்மாவையும் பார்த்தாள்.

எங்க இருக்கு? நான் உடுத்தி விடுறேன்டி என்றார்.

“பிள்ளைங்க இப்ப தான வந்திருக்குக. இப்பவே ஆரம்பிக்காத” தாத்தா பாட்டியிடம் கூறினார்.

“நீங்க தலையிடாதீங்க” பாட்டி சினமுடன் கூறினார்.

“நிது வந்துட்டா” அவளை பார்த்தனர்.

“ஆடையை மாத்திட்டு வாங்க. பெரிய பாட்டியை பார்க்கணும்” ஜோ இருவரையும் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றான்.

பெரிய வீடெல்லாம் இல்லை…அன்றைய காலத்து வீடு..

ஸ்ரீநிதியை பார்த்து மித்ரா அவளிடம் சென்று, “நாங்க இங்க தான் தங்கணுமா?” வருத்தமுடன் கேட்டாள்.

ஏன்? உனக்கு பிடிக்கலையா? ஸ்ரீநிதி யாருக்கும் கேட்காதவாறு கேட்டாள்.

“பிடிக்கலை. இவங்க என்னை அடிக்கிற மாதிரி பாக்குறாங்க” மித்ரா உதட்டை பிதுக்கிக் கொண்டு, “நான் மாமாகிட்ட போகணும்” பாவமாக ஸ்ரீநிதியை பார்த்தாள்.

“என்ன சொல்றா நிதும்மா?” பாட்டி கேட்க, பாட்டி உங்க எல்லாரையும் மித்துவுக்கு பிடிச்சிருக்காம்.

மித்துவா…என்ன பேர்? உன்னோட தம்பி பேர் போலவே இருக்கு முகத்தை சுளித்தார் இரண்டாவது பாட்டி..

“பாட்டி” ஜோ சத்தமிட, “ஆன்ட்டி பாட்டி காலில் விழுந்திருங்க” ஸ்ரீநிதி கூற,  மித்ரா ஓடிச் சென்று பாட்டி காலில் விழுந்து…என்னோட பாட்டி மாதிரி என்னை பார்த்துப்பீங்களா? கடைசி பாட்டியிடம் கேட்டாள்.

உன்னோட பாட்டி மாதிரி நான் எதுக்கு உன்னை பார்த்துக்கணும்?

மித்ரா ஸ்ரீநிதியை பார்க்க, “பேசு” சைகை செய்தாள்.

என்னோட பெயர் மித்ரா. நான் பதினொன்றாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கேன்.

சரி..பாட்டி அவளை பார்க்க, கண்கலங்க தாத்தாவை பார்த்தாள்.

பாட்டி அருகே சென்று அமர்ந்து, மித்து… தண்ணீர் எடுத்துட்டு வா என்றான் ஜோ.

ம்ம்! அவள் ஸ்ரீநிதியை பார்க்க, அவள் கையை காட்டினாள்.

உள்ளே சென்ற மித்ராவிற்கு எதை வைத்து எடுப்பது? தெரியவில்லை. தம்ளர் ஜக் பயன்படுத்துபவளுக்கு செம்பே தெரியவில்லை அவள் திணறி நிற்க, அவள் அம்மா வந்தார்.

அவர்களை எட்டி பார்த்த ஸ்ரீநிதி…பாட்டி..அவங்கள ரொம்ப கஷ்டப்படுத்திறாதீங்க. அவங்க வசதியாவே பழக்கப்பட்டவங்க. அதைவிட மித்துவுக்கு கேட்டது இருந்த இடத்திலே கொடுத்து பழக்கி வச்சிருக்காங்க.

அதுக்காக இங்கேயும் அப்படி இருக்க முடியுமா நிது? கடைசி பாட்டி சினமுடன் கேட்டார்.

பாட்டி, எதையும் சொல்லிக் கொடுத்தால் மித்து கத்துப்பா. அவளோட அம்மாவை நீங்க என்னமும் செய்யுங்க.

நிது என்ன இப்படி சொல்ற?

“அவங்கள கொஞ்சம் விட்டால் அவ்வளவு தான். எங்க திருமணம் முடிவதற்குள் எல்லாவற்றையும் பழக்கி விடுங்க. ப்ளீஸ் பாட்டி..” பாட்டி கையை பற்றினாள்.

உன்னோட புருசனுக்காக பேசுறவ. இப்ப என்ன இவங்களுக்காக கேக்குற?

சீனியர், என்னிடம் இதை மட்டும் தான் கேட்டாங்க. அதே போல அவங்க வாழ்க்கையில் இதையெல்லாம் பழகுவது அவசியம்..

“சரிடா” தாத்தா சொல்ல, மித்ரா கத்தினாள். எல்லாரும் பயந்து அவ்விடம் செல்ல, மித்ராவின் அம்மா கீழே விழுந்திருந்தார்.

ஆன்ட்டி, என்னாச்சு? ஸ்ரீநிதி கேட்க, மித்ரா ஸ்ரீநிதியை பார்த்து…நிது அங்க என்று கையை காட்ட, ஜோ உள்ளே வந்து பார்த்தான்.

எலியை பார்த்தா கத்துனீங்க? மித்து…இங்க பல்லி, எலி எல்லாமே இருக்கும். அது தான் உன்னை பார்த்து பயந்திருச்சி..

ஆஹ..ஆஹ… நிதுவிடம் ஓடி வந்து அணைத்து மித்ரா அழுதாள்.

“நிது நான் மாமாகிட்ட போகணும். எனக்கு இங்க பயமா இருக்கு” அழுதாள்.

“மித்து” அவள் அழைக்க, பாட்டி தாத்தா எல்லாரும் அவர்களை பார்த்தனர்.

“நிது மாமாவுக்கு கால் பண்ணு. நான் போகப் போறேன்” தேம்பி தேம்பி அழுதாள்.

“ஐய்யோ! ஒன்றுமில்லை மித்து” இனி எதுவும் வாராமல் பார்த்துக்கிறோம்.

வந்தால் என்னவாம்? இதுக்கெல்லாம் பயப்பட்டால் என்ன அர்த்தம்? இரண்டாவது பாட்டி சத்தமிட்டார்.

பயத்துடன் மித்ரா அவரை பார்க்க, அவள் அம்மா தன் மகளின் பாதுகாப்பிற்காக இங்கே தான் இருக்கணும். வேற வழியில்லை என்று எண்ணியவாறு, “நாங்க இங்கேயே இருந்துக்கிறோம்” என்றார்.

“மாம் எனக்கு பயமா இருக்கு” மித்ரா அவள் அம்மாவை அணைத்தாள்.

பழகிக்கலாம் மித்து. உன்னோட அப்பா வீட்ல அவரோட நான் இருந்திருந்தால் உனக்கு இப்படி கஷ்டம் வந்திருக்காது.

இங்க என்னம்மா கஷ்டத்தை கண்ட? பாட்டி சினமுடன் கேட்டார்.

தப்பா எடுத்துக்காதீங்க. இதுவரை உங்க வீடு போல இருக்கும் வீட்டை எம் பொண்ணு பார்த்ததேயில்லை. அதான் அவளுக்கு கஷ்டமா இருக்கு.

முதல்ல ஆடையை மாத்திட்டு எங்க அக்காவை பார்த்துட்டு வாங்க என்றார்.

ஆன்ட்டி நீங்க இருங்க. நான் மித்ராவிற்கு தாவணி உடுத்த சொல்லித் தாரேன் ஸ்ரீநிதி சொல்ல, அவள் உடுத்தினாள்.

“அழகா இருக்க மித்து” ஸ்ரீநிதி கூற, அவள் மனம் எதிலும் லயிக்கவில்லை.

என்னாச்சு மித்து? பயப்படாத.

“நான் உங்க வீட்டுக்கு வந்துறவாநிது?” பாவமாக அவளை பார்த்தாள்.

அங்க ஜோ இருப்பானே!

பரவாயில்லை நிது.

“சரியில்லை மித்து. இங்க உட்காரு” பேசிக் கொண்டே அவளுக்கு வகிடெடுத்து இரண்டை சடை பின்னினாள்.

புரிஞ்சுக்கோ மித்து. உன்னோட மாமா வந்தாலும் முன் போல உங்களது வாழ்க்கை இருக்காது. பாட்டி, தாத்தா எல்லாரும் ரொம்ப நல்லா பார்த்துப்பாங்க. பயப்படாத. உனக்கான டாஸ்க்கா எடுத்துக்கோ..

ம்ம்..மாமா அந்த பொண்ணோட வந்தால் எங்களை அவர் வீட்டுக்குள்ள விட மாட்டாரா? கண்ணீருடன் மித்ரா கேட்க, கண்டிப்பா இல்லை. சீனியருக்கு யார் வந்தாலும் முதல்ல நீ தான் முக்கியம்.

அப்புறம் எதுக்கு இங்க விட்டுட்டாங்க.

சின்னப்பொண்ணு மாதிரி யோசிக்காத மித்து. உன்னோட மாமா நீயும் அவர் வாழ்க்கைக்கு பழகணும்ன்னு தான் எண்ணுகிறார்.

என்ன பண்ணனும்?

உன்னோட வேலையை நீ பார்க்கணும். பாட்டி தாத்தா உதவி கேட்டால் செய்யணும். கேட்கலைன்னாலும் செய்யலாம். சமையல் கத்துக்கலாம்..

சமையலா? அவள் பயத்துடன் ஸ்ரீநிதியை பார்த்தாள்.

நீ தான் பள்ளிக்கு போயிருவேல்ல. பெரியவங்க என்ன சொன்னாலும் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ. மருந்து தேய்த்து விட சொல்லுவாங்க. தண்ணீர், உணவு எடுத்து தர சொல்லி கேட்பாங்க. அவங்களிடம் நல்லா பேசு..பயப்படாத..அவங்களுக்கு உன்னை கண்டிப்பாக பிடிக்கும். உன்னோட பாட்டி உனக்காக எல்லாம் செஞ்சாங்க.

ஆனால் இங்க இருப்பவர்களுக்கு நீ செய்யணும். கத்துக்கோ…

ம்ம்…எனக்கு தெரியலைன்னா..அமைதியா பாட்டி அருகே சென்று அவர் கை, கால்களை இப்படி பிடித்து விட்டு பேச்சு கொடுத்து, உனக்கு தேவையானதை தெரிஞ்சுக்கோ என்றாள்.

திட்ட மாட்டாங்களா?

உனக்கு முக்கியமானவங்களா எல்லாரையும் பார்த்தால் உனக்கு எல்லாம் பழகிடும்..

ம்ம்! “நம்ம பவியை விட அழகா இருக்க” ஸ்ரீநிதி சொல்லி கண்ணாடியை காட்டினாள்.

நல்லா இருக்கு. தினமும் உடுத்தணுமா?

பள்ளிக்கு போயிட்டு வந்து உடுத்தணும்..

இதை உடுத்தி எப்படி தூங்குறது?

இப்படி போர்த்திக் கொண்டு தூங்கு..

“தேங்க்ஸ் நிது. போகலாம்” இருவரும் வெளியே வந்தனர்.

ஹ..இது எப்படி இருக்கு? புன்னகைத்தார் தாத்தா.

பட்டுக்குட்டியை சைட் அடிக்கிறீங்களா தாத்தா? சிரித்துக் கொண்டே ஸ்ரீநிதி கேட்டாள்.

பரவாயில்லை என்னை விட இல்லைன்னாலும் அழகா தான் இருக்கா கடைசி பாட்டி சொல்ல, என்னது? மித்ரா அம்மா அதிர, நிது பாட்டி அறையில எடுத்துட்டு வா. இரண்டாவது பாட்டி சத்தம் போட்டார்.

மித்ரா அவள் பின்னே செல்ல, ஏய்..நீ எங்க போற?

நிது..

வருவா…நீ வா அவளை பாட்டி அழைத்தார்.

“பாட்டி” ஸ்ரீநிதி மல்லிகை பூவை நீட்டினாள்.

மூவரும் பிரிச்சு எடுத்துக்கோ..வச்சு விடு..

“என் பொண்ணுக்கு நானே வச்சு விடுவேன்” மித்ரா அம்மா சொல்ல, நீ புருசனை விட்டு அம்மா வீட்ல இருந்த மாதிரி உம் பிள்ளையும் இருக்கணுமா? வார்த்தையால் பாட்டி குத்தினார்.

மித்ரா அம்மா கண்கலங்க அவளை பார்க்க, அவள் பாட்டியை முறைத்தாள்.

உன்னோட அம்மாவுக்காக முறைக்கிற? உன்னோட அப்பனை பார்க்கணும்ன்னு என்றாவது நினைச்சிருப்பீயா? அப்பாவோட வாழும் பொம்பள பிள்ளைங்க குடுத்து வச்சவங்க. புகுந்த வீட்டுக்கு போன பின் தான் அப்பா இருந்தால் நல்லா இருக்கும்ன்னு தோணும்.

உன்னோட அம்மாவுக்கு இருவரும் இருந்தாங்க. உனக்கு அப்பா இல்லையே! நீ இப்படி தான் முறைப்ப அவளையும் குறை கூறினார்.

மித்ராவிற்கு அவள் அம்மாவின் தவறு புரிந்தது. தன் அம்மாவை பார்க்க, அவர் குற்றவுணர்ச்சியில் நிமிரவேயில்லை.

நிது…சாப்பிட்டு போகலாமே!

பாட்டி, நான் இப்ப இவங்களுக்காக தான் வந்தேன். இப்ப நான் போகல அம்மாவும் அத்தையும் உங்களுடன் சண்டைக்கு வந்திருவாங்க.. பெரிய பாட்டியை பார்க்க, “இவங்கள அழைச்சிட்டு போ ஜோ” கடைசி பாட்டி கூற, அழைத்து சென்றான்.

படுத்திருந்த பாட்டி எழுந்து அமர்ந்தார். இவங்க வெளிய வர மாட்டாங்களா?  மித்ரா கேட்டாள்.

தாத்தா இறந்ததிலிருந்து பாட்டிக்கு அவரை தவிர யாரும் நினைவில்லை..

லவ் மேரேஜா? அவள் கேட்க, இல்ல..அரேஜ் மேரேஜ் என்றான்.

லவ் இல்லாமலே இவ்வளவு பாசமா? ஜோவை பார்த்தாள்.

லவ் மேரேஜ் இல்லைன்னு தான் சொன்னேன். திருமணத்தின் பின் இருவரும் ஒருவரை ஒருவர் தாங்கி வாழ்ந்தாங்க. தாத்தா இறந்து பத்து வருசமாச்சு. இன்னும் அவங்க யாருடனும் பேசியதில்லை வருத்தமாக கூறினான்.

இவங்க எல்லாரும் உங்க அம்மாவோட சொந்தமா?

இல்ல..புகழோட பாட்டி தான் இரண்டாவது பாட்டி..

ஓ! மத்தவங்க..

ஆனால் அந்த பாட்டி குங்குமம் வச்சிருக்காங்க.

தாத்தா மேல கோபத்துல்ல பிரிஞ்சு வந்துட்டாங்க. ஆனால் இருவரும் பார்க்காமல் இருக்கவே மாட்டாங்க.

அந்த தாத்தா எங்க இருக்கார்? மித்ரா கேட்க, அது உங்களுக்கு தேவையில்லை என்று சொல்லி பாட்டி கையை பிடித்து, “பாட்டி இவங்க நமக்கு உதவியா வந்திருக்காங்க. கொஞ்ச நாள் நம்முடன் தான் இருப்பாங்க” என்றான் .

பாட்டி இமைகளை மட்டும் அசைத்து இருவரையும் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டார்.

வாங்க போகலாம்.. ஜோ இருவரையும் அழைக்க, கண்காட்சியை பார்ப்பது போல பாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

ஏய் வா…

பாட்டி அவள் கையை பிடித்திருந்தார். ஜோ அதிர்ந்து அவளையும் பாட்டியையும் பார்த்து வெளியே ஓடி வந்து விசயத்தை சொன்னான். எல்லாரும் உள்ளே வந்து பார்க்க, மித்ரா பாட்டியின் கன்னத்தை தொட..அவர் கண்ணீர் தரையில் விழுந்தது.

என்ன அதிசயம்? கடைசி தாத்தா கூற, என்னால நம்பவே முடியல. இரண்டாவது பாட்டி மித்ராவை உற்று உற்று பார்த்தார்.

எதுக்கு எம் பிள்ளைய இப்படி பாக்குறீங்க? மித்ரா அம்மா கேட்க, நாங்க, எங்க பேரம் பேத்திகள் வந்து பேசினால் கூட கண் இமைகள் மட்டும் தான் அசையும். எதுவுமே செய்ய மாட்டாங்க. உன்னோட பிள்ள கையை பிடிக்கிறாங்க. கண்ணீர் வருது ஆச்சர்யமாக பேசினார்கள்.

“பாட்டிக்கு நினைவு வந்திருக்கும். எல்லாரும் வாங்க” ஸ்ரீநிதி அழைத்து ஜோவிடம் கண்ணை காட்டினாள்.

“நாங்க வாரோம் பாட்டி. அம்மா தேடுவாங்க” ஜோ சொல்லி கிளம்ப, ஸ்ரீநிதி மித்ராவை பார்த்தாள்.

“மித்து ஆல் தி பெஸ்ட்” கையை உயர்த்த, மனதார கையை உயர்த்தி புன்னகைத்தாள். அவளுக்கு பெரிய பாட்டியை பிடித்து போனது.