தாரகை 15

“மித்ரா” கிஷோர் அறைக்குள் நுழைந்து விசயத்தை சொல்ல, எல்லாரும் அதிர, அவன் மீண்டும் வெளியே வந்தான்.

“கிஷோர் நீ எங்க போற?” அவன் தந்தை சத்தமிட, அவன் காதில் வாங்கவேயில்லை. அவன் ஜோவை பார்த்து….சிவாங்கி தானா? வாயசைத்து கேட்டான்.

ஜோ தலையை ஆட்ட, கிஷோர் வெளியிலிருந்து அவளை பார்க்க முயன்றான்.

சீனியர், “நீங்க ரெஸ்ட் எடுங்க. நாங்க இங்கேயே இருக்கோம்” ஸ்ரீநிதி கூற, “இல்லை” தலையசைத்து அமர்ந்தான்.

“ஜோ அவளோட பெற்றோரிடம் சொல்லணும்” ஸ்ரீநிதி கூற, “என்னிடம் அவளோட தம்பி நம்பர் இருக்கு” கிஷோர் அவனை அழைக்க, அவன் எடுக்கவில்லை.

“தனுவிடம் சொல்லலாம்” ஜோ அவளிடம் கூறி பெற்றோரிடம் சொல்ல, அவர்களுடன் தனுவும் கிளம்பி வந்தாள்.

“அண்ணா, நீயும் அண்ணியும் இங்க இருக்கக் கூடாது. வீட்டுக்கு போகணுமாம்”  தனு குரல் நடுங்க வந்தது.

“நாங்க இருக்கோம்” ரிஷி கூற, “போங்க..விசயம் இல்லாமல் பெரியவங்க சொல்ல மாட்டாங்க” ஜோ அவர்களை அனுப்பி வைத்தான்.

அவர்கள் செல்லவும் தன்வி ஜோவிடம் வந்து, “என்ன தான்டா ஆச்சு?” கேட்டாள்.

“கார் விபத்து” ஜோ சுருக்கமாக சொல்லி கிஷோரை பார்த்தான்.

தன்வி அவனை பார்த்து விட்டு, “இவன் தான் காரணமா?” சினமுடன் கேட்டாள்.

இல்ல தனு. நீ அமைதியா மட்டும் இரு..

ஜோ, அவங்க ரொம்ப கஷ்டப்படுற குடும்பம். இப்ப பணத்துக்கு என்ன செய்வாங்க? தன்வி வேதனையுடன் கேட்டாள்.

“நான் பார்த்துக்கிறேன்” கிஷோர் கூற, “அப்ப நீ தான காரணம்” சினமுடன் தன்வி அவனிடம் செல்ல,… “தனு அமைதியா இருன்னு சொன்னேன். அவரும் பேசண்ட் தான். சும்மா ஏதாவது பிரச்சனை பண்ணாத” ஜோ சினமுடன் கத்தினான்.

“நான் பிரச்சனை பண்றேனா? உனக்கு என்னை பார்த்தால் எப்படி தெரியுது? திடீர்ன்னு நல்லா பேசுற? திடீர்ன்னு கோபப்படுற? இப்ப நான் பிரச்சனை பண்றேன்னு சொல்ற?” அழுது கொண்டே தனியாக சென்று அமர்ந்தாள்.

கிஷோர் இருவரையும் பார்த்தான்.

மூச்சை உள்ளிழுத்து உஃப்பென ஊதி விட்டு ஜோ தன்வி அருகே சென்று அமர்ந்து அவளை பார்த்தான்.

“தனு” அவன் அழைக்க, அவன் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

எனக்கு பயமா இருக்குடா. இப்ப நடக்கும் எல்லாமே எனக்கு தப்பாவே தெரியுது. சிவாவுக்கு ஏதாவது ஆனால் அவளோட குடும்பமே பாதிக்கப்படும். இவள் பணத்தில் தான் தம்பி படிச்சிட்டு இருக்கான். ஒரு வருசமா சரியா தூங்கலடா அவ. அவளுக்கு ஏதும் ஆகாதுல்ல அவனை இறுக பற்றி அழுதாள். ஜோவும் கண்கலங்க அமர்ந்திருந்தான்.

“தனு, அவ பெற்றோர் எங்க?” கிஷோர் கேட்டான்.

“வரவேற்பறையில் பேசிட்டு இருக்காங்க” என்றவுடன் யோசனையுடன் கிஷோர் எழுந்தான். அவன் தந்தை அவ்விடம் வந்து, “நான் பார்த்துக்கிறேன்” என்றார்.

தனு அவரை பார்த்து விட்டு ஜோவை பார்த்தாள்.

கிஷோர் அப்பா சரியில்லை என்பது போல கண்ணை காட்ட தன்விக்கு புரியவில்லை.

“தனு நீ இரு. நான் வந்துடுறேன்” சொல்லி எழுந்தான். “நானும் வாரேன்” மித்ரா கூற, “நீ எதுக்கு வரணும்?” ஜோ கேட்டான்.

ஹேய்..நான் உன்னிடம் கேட்கலை..

“மித்து” கிஷோர் அழைக்க, “மாமா” என்று அவள் அழைக்க, மாமாவா? தனு கிஷோரை பார்க்க, தன்வியின் தோழிகள் அங்கே வந்தனர்.

கிஷோரை பார்த்து விட்டு தனுவை தனியே அழைக்க, அவர்களுடன் செல்ல இருந்த மித்ராவை நிறுத்தி, “நீ அம்மாவோட இரு” அனுப்பி விட்டான் கிஷோர்.

ஜோ அவர்களுடன் செல்ல, ஜோ “கிஷோர் சீனியரோட அப்பா நம்ம சிவாவோட அம்மா, அப்பாவை மிரட்டி பணம் கொடுத்துட்டு இருந்தாரு” சொல்ல, ஜோ அவர்களை பார்க்க ஓடினான்.

“அவங்க பணம் வேணாம்ன்னு அவரிடம் கொடுத்து ஏதோ பேசிட்டு இருந்தாங்க” என்றாள் அனன்யா.

வாடி போய் பார்க்கலாம்..

நான் வரலை. எதுக்கு வம்பு? கிஷோர் சீனியரோட அப்பா நல்லவராக இருந்தாலும் பணம், கௌரவம்ன்னு வாழ்றவரு..

“அடியேய் ஜோ போயிருக்கான். அவன் பிரச்சனை செய்து நம்ம சிவாவுக்கு தான் பிரச்சனை வரும். வாங்க..” தன்வி அழைக்க, “நீ போ. நாங்க அவளோடவே இருக்கோம்” கிஷோருக்கு எதிரே வந்து அமர்ந்தனர்.

ஜோ செல்லும் போது சிவாங்கி பெற்றோர் தன் மகளை காண துடிதுடித்து வந்து கொண்டிருந்தனர்.

ஆன்ட்டி, “அவரு என்ன சொன்னாரு?” இடைமறித்து ஜோ கேட்க, “ஜோ தான?” அவள் அப்பா கேட்டார்.

ஆமா அங்கிள். என்னோட பொண்ணு உயிரோட வாழணும். அதுக்காக நாங்க எதுவும் செய்வோம். எதுவும் அங்க வந்து பேசாதீங்க. அமைதியா இருங்க. அவங்ககிட்ட பணம் இருக்குப்பா. எங்க பிள்ள மீதும் தப்பிருக்கு. தகுதி தராதாரம் பார்த்து காதலிக்கணும். இப்படி பெரிய வீட்டு பிள்ளையை காதலிச்சா இப்படி தான் பேசுவானுக என்று வேதனையுடன் உதவுறேன்னு எங்க விசயத்துல்ல தலையிடாதப்பா..

“புரியுது அங்கிள். நான் உங்க கூடவே இருக்கேன்” ஜோ அவர்களை அழைத்து வந்தான்.

மித்ரா தன்வியின் தோழிகளை பார்க்க, எல்லாரும் அவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

மித்து, கிஷோர் வாங்க. அந்த பொண்ணோட பெற்றோர் வந்துட்டாங்க கிஷோர் தந்தை கூற,

கிஷோரை பார்த்து, “நாங்க பார்த்துக்கிறோம்ப்பா. உங்க அப்பா எங்களுக்கு வேணும்ங்கிற பண உதவி செய்திட்டார்” சொல்ல, மித்ரா அவனை பார்த்தாள்.

“டாக்டரை பார்த்துட்டு போறேன் அங்கிள்” அவன் தந்தையை கண்டுகொள்ளாமல் அமர்ந்தான் கிஷோர்..

“நாங்க பார்த்துக்கிறோம் சீனியர்” இமையா கூற, “நான் பார்த்துட்டு போறேன்” என்றான் அவன்.

சார், “உங்க பையன் வந்துருவார்” ஜோ அவரிடம் கூறி விட்டு சிவாங்கியின் பெற்றோரை பார்த்தான்.

அவர்கள் அழுது கொண்டிருந்தனர். அவள் தம்பியும் பரபரக்க ஓடி வந்தான்.

அம்மா, “அக்கா” அவன் தொண்டை அடைக்க கேட்க, அவர்கள் உள்ளே காட்டினார்கள். ஏதும் தெரியவில்லை.

மருத்துவரும் செவிலியர்களும் வெளியே வந்தனர்.

“சார், அவங்களுக்கு ஒன்றுமில்லையே!” கிஷோர் கேட்க, “ஆப்ரேசன் சக்சஸ். அவங்களுக்கு ப்ளட் அதிகமா லாஸ் ஆகி இருக்கு. மற்றபடி எல்லாம் ஓ.கே தான்” அவர்கள் செல்லவும் ஜோ கிஷோரை அவனறைக்கு அனுப்பினான்.

அவன் செல்லவும் அவன் பெற்றோர்களும் தோழிகளும் அவளை காண உள்ளே சென்றனர். தலையில் பெரிய கட்டுடன் சிவாங்கியை பார்க்கவும் அனைவரும் அழுதனர்.

அம்மாடி தனு, எங்களுக்கு பெருசா யாரையும் தெரியாது. ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணும்மா. இவளை இப்பவே கார்ல்ல ஏத்தணும். யாராவது கார்ல்ல வந்துருக்கீங்களா? கேட்க, “எதுக்கும்மா? அக்கா விழிக்க கூட இல்லை” சிவாங்கி தம்பி கேட்டான்.

நடந்ததை கூறினார்கள்.

எம் பிள்ளைய எல்லார் முன்னாடியும் ரொம்ப கேவலமா பேசிட்டாங்கப்பா. அவ அந்த பையனை மடக்க தான் வேலைக்கு சேர்ந்திருக்கா என்றும் அவனுடன் சேர்ந்து ஊர் சுற்றினான்னு பேசிட்டாங்க..

அவங்களுக்கு என்னோட பொண்ணை பற்றி தெரியல.அவ சொக்கத்தங்கம் கண்ணீருடன் அவள் அம்மா…காதல் தான் எல்லா பிள்ளைங்க வாழ்க்கையையும் சீரலிக்குது வேதனையில் கூறினார்.

என்னோட பிள்ளைய வேற ஹாஸ்பிட்டலில் சேர்க்கவும், அவங்க பையனை இனி பார்க்கக் கூடாதுன்னு பணம் கொடுத்தாருப்பா. நான் அதை அவரிடமே கொடுத்துட்டு அவளோட இந்த மாத சம்பள பணத்தை மட்டும் வாங்கிட்டேன். இனி அவர் மகன் பக்கம் எம் பிள்ள வராதுன்னு சத்தியம் செய்துட்டேன்.

உடனே எம் பிள்ளையை வேற ஹாஸ்பிட்டலில் சேர்க்க மட்டும் உதவுங்கப்பா சிவாங்கி தந்தை தன்வியை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.

“அப்பா, அவ என்னோட ப்ரெண்டு. அவளுக்காக எல்லாத்தையும் நான் ஏத்துக்கிறேன். இப்பவே ஏற்பாடு செய்கிறேன்” தன்வி அவளது பிக்ப்பாவை அழைத்து விசயத்தை சொல்ல, ஐந்தே நிமிடத்தில் ஏற்பாடு செய்து விட்டு சந்திரமுகன் அங்கே வந்து விட்டார்.

அவரை பார்த்த சிவாங்கி பெற்றோர் கையெடுத்து கும்பிட, நீங்க இந்த ஊர்ல கொஞ்ச நாள் இல்லாமல் இருக்கீங்களா? அவர் கேட்க, நாங்க எதுக்கு ஒளியணும்? அவள் தம்பி சத்தமிட்டான்.

நான் உங்களை ஒளிய சொல்லவில்லை. உங்க பிள்ளை தான் அந்த பையனை காதலித்து இருக்கா. இங்கிருந்தால் அவ தான் கஷ்டப்படுவா..

“பிக்ப்பா நான் அவளை தினமும் பார்க்கணும்” தன்வி கூற, நீயும் வேணும்ன்னா அவளோட போய் தங்கிக்கோ..

எங்க அரேஞ்ச் பண்ணி இருக்கீங்க பிக்ப்பா?

அவர் புன்னகையுடன் ஊட்டி என்றார்.

ஊட்டியா? அக்காவோட இந்த நிலையில் ஊட்டி வரை எப்படி செல்வது?

செவிலியர் ஒருவர் எப்போதும் உடன் இருப்பார். தனு..போறீங்களா? அவர் கேட்க, இங்க அண்ணா திருமணம் இருக்கே! ஜோவை பார்த்தாள்.

அதனால் என்ன? அந்த நேரம் வாங்க. இங்க சும்மா தான இருப்பீங்க? என்றார்.

இடுப்பில் கை வைத்து, “பிக்ப்பா” தன்வி முறைக்க, அங்கிள் சிலருக்கு உண்மையை சொன்னால் கோபம் வருது தான? ஜோ கூற, பொண்ணுங்க சிரிக்க..ஜோ நீயும் பிக்ப்பாவோட சேர்ந்துட்டியா? சினமுடன் முறைத்தாள்.

சரிங்க சார். நாங்க போறோம்..

அங்க என்னோட ப்ரெண்டோட மகன் பேக்டரி வச்சிருக்கான். அவனிடம் சொல்லி இருக்கேன். உங்க பொண்ணு சரியானவுடன் அங்கேயே வொர்க் பண்ணலாம். உங்க பையன் படிக்கவும் ஏற்பாடு செய்யலாம் கூறினார்.

சிவாங்கி பெற்றோர் அவர் காலில் விழ, நானும் உங்களை மாதிரி மனுசன் தான் என்று அவர்களிடம் பேசி இப்பவே கிளம்புங்க, அவர் கூறி தனுவை பார்க்க, இப்பவே வா? நம்ம வீட்ல கூட சிவா இருக்கட்டுமே பிக்ப்பா? என்றாள் தன்வி..

தனும்மா, போகணும்ன்னு விருப்பமிருந்தால் போ.

தனு நீ இரு.. அண்ணா மேரேஜ் வருது என்று சாதனா ஜோவை பார்க்க, சந்திரமுகன் புன்னகைத்தார்.

யாரு போறீங்க? அனன்யா கேட்க, “நானே போறேன்” சாதனா அவர்களுடன் கிளம்பினாள்.

அம்மா, அப்பாகிட்ட சொல்லணுமே! தனு நீ சொல்லிரு. அப்புறம் பேக்கேஜை அனுப்பு என்று சாதனா தன்வியை வம்புக்கு இழுக்க, அடியேய் உனக்கு என்னை பார்த்தால் பார்சல் சர்வீஸ் மாதிரி இருக்கா? கேட்டாள்.

“இல்ல” சாதனா புன்னகைத்தாள்.

சாதனாவும் சிவாங்கி குடும்பமும் ஊட்டி நோக்கி பயணிக்க தொடங்கினார்கள். ஜோ அவன் வீட்டிற்கு செல்ல, சந்திரமுகனுடன் தன்வி அவள் வீட்டிற்கு சென்றாள்.

மித்ராவையும் அவள் அம்மாவையும் கிஷோர் தந்தை அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு கிஷோரை டிஸ்சார்ஜ் செய்வதை பற்றி மருத்துவரிடம் பேசினார்.

டாட், அதுக்குள்ள பண்ணணுமா? கிஷோர் அண்ணன் கேட்டான்.

“இப்ப தான் அந்த ஸ்ரீநிதி பொண்ணுகிட்ட இருந்து வெளிய வந்தான். அதுக்குள்ள இவ காதல்ன்னு வருவான்னு நினைக்கலை. இவன் இங்கேயே இருந்தான்னா அந்த பொண்ண பார்க்க போயிடுவான். பின் அவனுக்கு விசயம் தெரிந்து விடும். அதனால இப்பவே டிஸ்சார்ஜ் பண்ணிடணும்” மருத்துவரிடம் பேசி வெளியே வந்து கிஷோரை இருக்கும் அறைக்கு வந்தார்.

மாம், எங்க அவனை? கிஷோர் அண்ணன் கேட்க,

அந்த பொண்ணை பற்றி விசாரிச்சான். உன் அப்பாவால அந்த பொண்ணு வேற ஹாஸ்பிட்டல் போயிட்டான்னு தெரிஞ்சு தேட போயிட்டான். இதோ..இந்த நர்ஸ் பொண்ணு என்ன சொல்லியும் கேட்காமல் ஊசியை தூக்கி போட்டு போயிட்டான் கிஷோர் அம்மா அழுதார்.

“இது தான் நடக்கக் கூடாதுன்னு நினைச்சேன்” கிஷோர் அப்பா சினமுடன் கத்தினார்.

மாலை வரை கிஷோர் சிவாங்கியை தேடி அலைந்து சோர்ந்து ஸ்ரீநிதி வீட்டிற்கு வந்தான்.

ஜோ அவனை பார்த்து, ஹே..என்னாச்சு? ஹாஸ்பிட்டலில் இருக்காம இங்க என்ன பண்ற? கேட்டான். பனிமலர் அவனை எட்டி பார்த்து விட்டு ஸ்ரீநிதியை அழைத்தார்.

சிவாங்கி எங்க போனா? கிஷோர் ஜோவையும் ஸ்ரீநிதியையும் பார்த்து கேட்டான்.

எதுக்கு கேக்குறீங்க? ஜோ கேட்க, அவ என்னை லவ் பண்றாளா? உங்களுக்கு தெரியுமா?

லவ் பண்ணி என்ன பிரயோஜம்? அதான் அவங்க பெற்றோரையும் அவங்களையும் கேவலமா பேசி பணம் கொடுத்தாருல்ல உங்க அப்பா. அவர்கிட்ட கேட்கலையா? ஜோ சினமுடன் கூறி விட்டான்.

ஸ்ரீநிதி முகம் மாறியது.

என்னோட அப்பா என்ன செய்தார்?

“அதெல்லாம் ஒன்றுமில்லை சீனியர். ஜோ அமைதியா இரு” ஸ்ரீநிதி கூற, “நிது” கிஷோர் அவளை பார்த்தான்.

சீனியர், வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க..

ஜோவும் ஸ்ரீநிதியை பார்த்தான்.

நான் ரெஸ்ட் எடுப்பது இருக்கட்டும். உன்னையும் அவர் ஏதாவது? கிஷோர் தடுமாற்றத்துடன் கேட்டான். ஸ்ரீநிதி கண்ணீர் சொட்டியது.

“நிது” ஜோ அழைக்க, கண்ணீரை துடைத்தாள் ஸ்ரீநிதி.

நீ என்னிடம் கூட சொல்லவில்லை..

உன்னிடம் எப்படிடா சொல்ல முடியும்? சொன்னால் இப்ப இவன் இங்கே இருக்க முடியுமா? சினமுடன் பனிமலர் கேட்டுக் கொண்டே…

“உன் அப்பா நல்லவன் வேசம் போட்டுட்டு இருக்கான். எனக்கு என் பொண்ணிடம் அவன் என்ன பேசினான் தெரியாது. ஆனால் அவன் உன் குடும்பத்தை ஏமாத்திட்டு இருக்கான். அவன் நடத்தும் பவுடர் பிசினஸ் ஏற்றுமதியில் ஒரு பாக்ஸ் விடாமல் செக் செய்து பாரு. உனக்கு உண்மை தெரிய வரும்” கூறினார்.

“அம்மா” ஸ்ரீநிதி அழைக்க, என்ன இருக்கு? கிஷோர் கேட்க, “நீயே பாரு. முதல்ல உட்காரு” அவனை சோபாவில் அமர வைத்து ஜூஸ்ஸை கொடுத்தார்.

காலையில கட்டை போட்டுட்டு இப்ப அலைஞ்சு களைச்சு தெரியுறான். எப்படி அப்படியே விடுறது? குடிச்சிட்டு கிளம்பு…

உன் அப்பன் பணம் இருப்பவனை பார்த்தால் பல்லை இளிப்பான் இல்லைன்னா இப்படி தான். நல்லவேலை எம் பிள்ளை உன்னை காதலிக்கலை ஆதங்கமுடன் பேசினார்.

தலையை பிடித்து அமர்ந்த கிஷோர் அருகே அமர்ந்த ஸ்ரீநிதி, சீனியர் உங்க அப்பா என்னை சந்திக்க வந்த போது நான் முதல் வருடம் தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். நான் தனியே இல்லை. புகழ் இருந்தான். அவன் என்னை தேற்றினான்.

சிவாங்கி, நீங்க படித்த பள்ளியில் படிச்ச பொண்ணு. அப்பொழுதிலிருந்தே அவளுக்கு உங்களை பிடிக்கும். அவள் நம்ம கல்லூரியில் சேர்ந்த போது தான் எனக்கு தெரியும். எனக்கு அவளோட காதல் தெரிஞ்சிருக்கு. உங்களுக்கு தெரியல..

நீங்களும் ரிஷியும் இந்த விசயத்தில் ஒன்று தான். நீங்க என் பின்னாடி சுத்துனீங்க. அவர்.. நண்பர்கள், பப், பாடல்ன்னு சுத்திட்டு இருந்தாரு…

நம்மை விரும்புபவர் அருகே இருக்கும் போது அவரின் விருப்பம் நம்ம கண்ணுக்கு தெரிவதில்லை. தூரம் சென்ற பின் தான் தெரியும் கண்ணீருடன் நானும் புகழை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். இனி உங்கள் முடிவு…. சொல்லி எழுந்தாள்.

“ஜோ நீ வெளிய போகணும்ன்னு சொன்னேல்ல?” ஸ்ரீநிதி கூற, அவளை பார்த்தான் கிஷோர்.

நிது, அவர் என்ன சொன்னார்?

இனி அது தேவைப்படாது சீனியர்..

இல்ல தலையசைத்த கிஷோர், சிவாங்கியை என்ன சொன்னாரு? கேட்டான்.

“எனக்கு தெரியாது” ஸ்ரீநிதி ஜோவை பார்த்தாள்.

“அதான் சொன்னேன்ல்ல” ஜோ சினமுடன் முறைத்தான்.

நீ என்னிடம் தெளிவா சொல்லலை.

தெளிவான்னா டேமோவா காட்ட முடியும்? சீறினான் ஜோ.

ஜோ….

சீனியர், அது தெரிந்து இப்ப ஏதும் ஆகப் போறதில்லை.

இல்ல ஜோ, ஆகும்..சொல்லு? கிஷோர் கேட்டான்.

உங்க கூட ஊர் சுத்தினாலும் உங்களை மடக்க தான் அவ உங்க கம்பெனியில சேர்ந்தாளாம். இன்னும் என்ன செய்தான்னு அவருக்கு தெரியாதாம் பல்லை கடித்துக் கொண்டு ஜோ கூறினான்.

இப்ப அவ எங்க இருக்கா ஜோ?

“என்னால இதை மட்டும் சொல்லவே முடியாது. சிவாங்கி என்னோட படிச்ச பொண்ணு. அவளை பற்றி எனக்கும் தெரியும். அதிர்ந்து கூட யாரிடமும் பேச மாட்டாள். நல்லா பேசினாரு உங்க அப்பா. அவள விட்ருங்க” ஜோ முகத்தை திருப்பினான்.

இனி தான் விடக் கூடாதுன்னு நினைக்கிறேன். சரிதான நிது..?

என்ன சீனியர்?

என்னோட அப்பா தான பேசினாரு? இதெல்லாம் நடந்தால் கிஷோர் கேட்க, ஜோ அவனை சினமுடன் பார்த்தான்.

அடிச்சிறாதடா. ஏற்கனவே நொந்து போய் இருக்கேன். சிவாங்கி காதலை சொன்னேன்.

“புரியல” ஜோ கையை இறுக்கினான்.

டேய், அவள லவ் பண்ணலாம்ன்னு நினைக்கிறேன்.

லவ் பண்ண நினைக்கிறீங்களா? ஜோ கேட்க, ஆமா யாரோ ஒரு பொண்ணை பார்த்து காதலிப்பதை விட என்னை காதலிக்கும் பொண்ணை பார்க்கணும். காதலிக்கணும். மேரேஜ் பண்ணிக்கணும் கிஷோர் ஸ்ரீநிதியை பார்த்தான்.

“சூப்பர் சீனியர்” கிஷோர் கையை பிடித்து குலுக்கினாள் ஸ்ரீநிதி.

நீங்க என்ன சொன்னாலும் அவ எங்க இருக்கான்னு நான் சொல்ல மாட்டேன்.

ஓ.கே, நானே அவளை தேடிக்கிறேன்.

சீனியர், சாப்பிட்டு போங்க..

“நிது ஒரே ஒரு உதவி. நான் வீட்டிற்கு இப்ப வரலைன்னு மட்டும் அம்மாவிடம் சொல்லி விடேன்” கிஷோர் கூறினான்.

அக்கா நீ யாருக்கும் கால் பண்ண வேண்டாம். நான் சொல்றேன் ஜோ

அலைபேசியை எடுத்து கிஷோர் கூறியது போல் சொன்னான். கிஷோர் அங்கிருந்து கிளம்பினான்.

எங்க போகப் போறீங்க சீனியர்? ஸ்ரீநிதி கேட்க, அவளை பார்த்து கண்ணடித்து உன்னோட வீட்டுக்கு தான் போகப் போறேன்.

என் வீட்ல தான…என சொல்லிக் கொண்டிருந்த ஸ்ரீநிதிக்கு உரைத்தது ரிஷி வீட்டை சொல்கிறான் என்று…

“அவங்களுக்கு எதுவும் தெரியாது” ஜோ பதற, சிரித்த கிஷோர் தனுவுக்கு தெரியாமல் எப்படி சிவாங்கி இங்கிருந்து போவா? காரை எடுத்து சென்றான்.

ஜோ அவளுக்கு அழைக்க, அவள் எடுக்கவேயில்லை. ஜோ பைக்கில் கிஷோர் வீட்டிற்கு சென்றான். அவனுக்கு கிஷோர் தந்தை நிதுவிடம் என்ன பேசி இருப்பார்? அவரை சும்மா விடக் கூடாது எண்ணத்துடன் சென்றான்.

கிஷோர் வீட்டிற்கு வந்த ரிஷி அதிர்ந்து அனைவரையும் பார்த்துக் கொண்டே முன் வந்து, “ஜோ அந்த பொண்ணை விடு” என்றான்.

ஜோ உடைந்த கண்ணாடித்துண்டை மித்ரா கழுத்தில் வைத்திருந்தான்.

இருக்கட்டும் அண்ணா. என்னோட தாத்தா பேசணும் என்றாள் மித்ரா.

என்ன பேசணும்?

நிது உனக்கு யாருன்னு சொன்ன?

நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு..

இதான் சொன்னீயா?

அவ..அவ..என்னோட பொண்டாட்டி..

ம்ம்..இந்தாளு என்னோட நிது அக்காவிடம் ஏதோ சொல்லி இருக்கான். மித்ராவை காட்டி. இவளோட மாமா இவர் என்ன சொன்னார்ன்னு கேட்டதும்…பட்டென நிதுவுக்கு கண்ணீர் வந்துடுச்சு..

“நிது அவ வலிய வெளிய காட்ட மாட்டா. அவ கண்ணீர் வந்தால் இவன் ஏடாகூடாம ஏதோ பேசி இருக்கான்” ஜோ சீற்றமுடன் சொன்னான்.

என்ன சொல்ற? இவர் எதுக்கு ஸ்ரீயிடம் எதுவும் பேசணும்?

நீ கோமாவிலா இருக்க? இவர் பையன் தான் என்னோட அக்கா பின்னாடியே சுத்தினான். அப்ப தான் காலேஜ் முதல் வருசம் படிச்சிட்டு இருந்திருக்கா. அப்ப அவகிட்ட பேசி இருக்கார். புகழ்கிட்ட அறையும் வாங்கி இருக்கார்.

புகழ் அடிச்சிருக்கானா? ரிஷி கேட்க, அதான் சொல்றேன். இந்தாளு ஏதோ தப்பா பேசி இருக்கான்..

ஜோ கையிலிருந்த பெரிய கண்ணாடி துண்டை தட்டி விட்ட கிஷோர் அம்மா, தன் கணவனின் சட்டையை பற்றி அந்த பொண்ணுங்ககிட்ட என்ன பேசுனீங்க? கேட்டார்.

இரும்பால் செய்து வைத்த சிலை போல் நின்றார் அவர். அசைய கூட இல்லை..

சொல்லுங்க? அழுதார் அவர் மனைவி.

இவன் சொல்வான் என்று தனு கிஷோர் அப்பாவின் செயலாளர் சட்டையை பிடித்து இழுத்து வந்தாள். அவள் பின் கிஷோரும் வந்தான்.

சொல்லுங்க? வெறியுடன் கத்தினான் கிஷோர்.

அன்று கல்லூரியில் அந்த பொண்ணை பார்க்க போனோம். அந்த பொண்ணு ஒரு பையனுடன் கேண்டியனில் அமர்ந்திருந்தாள்.

என்னிடம் அங்கிருக்கும் மாணவ, மாணவியரை நகர்த்த சொல்லி இருந்தார். நான் செய்து விட்டு அவரிடம் வந்து நின்றேன்.

கிஷோரை பார்க்கக் கூடாது, பேசக் கூடாது, பழகக்கூடாதுன்னு சொன்னார்.

அதற்கு அந்த பையன், உங்க பையனுடன் நாங்க பேசலை பழகலை. அவன் தான் சுத்திட்டு இருக்கான்னு சொன்னாரு..

அதுக்கு இவர் என்று செயலாளர் கிஷோரின் அப்பாவை பார்த்து விட்டு…

நீ ஒரு நாள் என்னோட படு. நான் அதை வைத்து என் பையனை உன்னிடமிருந்து விலக்கிறேன்னு சொன்னாரு என்று சொல்ல, தனு சீற்றமுடன் அவரிடம் வந்து அவரை அடிக்க கையை ஓங்கினாள்.

தனுவை பிடித்த கிஷோர், உங்க புருசனோட லட்சனம் இப்ப தெரியுதா அம்மா? இதை விட இவர் சிவாங்கி பெற்றோர்கிட்ட எப்படிப்பட்ட வார்த்தையை கேட்டிருக்காரு. அதுவும் எப்படி?

உங்க பொண்ணுக்கு சரியானவுடன் அனுப்புங்க. அவளை நான் வச்சுக்கிறேன். பணம் தாரேன். என் மகன் பக்கம் மட்டும் உங்க பொண்ணு போகக் கூடாதுன்னு.. அவங்க எப்படி துடிச்சு போயிருப்பாங்க?

என் பக்கம் வரக் கூடாதுன்னு எதுக்கு சொல்லி இருக்கார் தெரியுமா? பணத்துக்காக.

என் கல்யாணத்தை வைத்து பணம் சம்பாதிக்க பார்க்கிறார். ஏற்கனவே இதனால் தான் அக்கா மாமாவோட சண்டை போட்டு இங்க வந்தா. இனி எங்க வாழ்கையையும் பணயம் வைத்து பணம் சம்பாதிக்கப் போறார்.

கிஷோர் அம்மா அப்படியே அமர்ந்து விட, அவன் அக்கா அதிர்ந்து அவரை பார்த்தார். மித்ராவோ தன் தாத்தாவை கேவலமாக கண்ணீருடன் பார்த்தாள்.