சுவிசர்லாந்தின் குளிரில் படத்தின் நாயகனுக்கு காய்ச்சல் வந்து விட்டது. மருத்துவமனையில் காண்பித்த போது ஏதோ தொற்று இருப்பதாக சொல்லி அட்மிட் செய்து விட்டனர்.
இந்தப் படத்தில் இரண்டு காதநாயகர்கள், ஒருகதாநாயகி.
இங்குகாட்சியாக்கவேண்டிய பாடலின் படப்பிடிப்பை முடித்து விட்டு படத்தின் மற்றொரு கதாநாயகனுக்கான பாடலை படமாக்கவேறுநாடுசெல்கிறார்கள்.
மிதுவிடம் பேசினால் இதை சொல்லாமல் இருக்க முடியாது என்பதால், படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் சிக்னல் கிடைக்காது, சில நாட்கள் கழித்துதான் உன்னிடம் பேசுவேன் என சொல்லியிருந்தான் ஜீவா.