அத்தியாயம் 2

 

“நாம் பேசும் வார்த்தைகளுக்கு என்று தனியாக மணமும்., துர்நாற்றமும் உள்ளது. சில வார்த்தைகள் கசக்கும், சில இனிக்கும், சில ஒளிவீசும், சில இருட்டைப் போர்த்தும், சிலவற்றிற்கு நிறமுண்டு,சில உயிரை குடிக்கும், சில உயிர்ப்பிக்கும், சில வார்த்தைகள் ஈட்டியாய் குத்தும், சில மயிலிறகாய் தடவி இதம் சேர்க்கும்,சில வார்த்தைகள் நமக்கு அணிகலன், சில நமக்கு தூக்குக்கயிறு , சில கல்லைப் போன்று கனப்பவை… அவற்றை வாழ்நாள் முழுவதும் நாம் சுமக்கிறோம்…. சிலவற்றை கேட்டவுடனே மறந்து விடுகிறோம்…. சில வார்த்தைகள் நம்மை பாதாளத்தில் வீழ்த்தும்….. சில நம்மை புதிய உலகிற்கு வழிகாட்டும்….. வார்த்தைகளின் வடிவங்கள் பற்றி இன்னும் சொல்லலாம்”

           கல்லூரிக் காலத்தில் நடந்த விஷயங்களை நினைத்துக்கொண்டிருந்தாள் நந்தினி….

           அவள் கல்லூரியில் சேர்ந்த புதிது…. அவனை யாரென்று தெரியும் இருந்தாலும் கண்டும் காணாமல் தான் செல்வாள்….. கல்லூரி வரும் போது செல்வகுமரனின் கட்டுப்பாடு இது தான்…. தன்னைவிட தகுதி குறைந்தவர்களிடம் பேசக்கூடாது என்று… அந்த வயதில் அவளுக்கும் தன் அப்பா சொல்வது தான் சரி என்று தோன்றியது… அவளும் யாருடனும் பேச மாட்டாள்…..

           அவளை விட நான்கு வயது மூத்தவன் கல்லூரியில் மரத்தடியில் எப்போதும் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருப்பான்…. சில நேரம் பெண்  தோழிகளும் உண்டு…. போன புதிதில் இது எதையும் கண்டு கொள்ள மாட்டாள்…..

          அவன் எம் .இ படித்துக்கொண்டிருந்த நேரம்…. இவள் முதல் வருடம் இன்ஜினியரிங் கல்லூரியில் கால் வைத்திருந்தாள்….

                 முதல் வருடம் எதுவும் தோன்றவில்லை…. அதற்கு அடுத்த வருடம் அவன் பேச்சு சிரிப்பு பெண்களுடன் சிரித்து பேசுவது எல்லாம் சேர்ந்து அவனை பொறுக்கி என்று நினைத்து விட்டாள்… அங்குள்ள நடவடிக்கை மட்டுமன்றி வீட்டிலும் சில நேரம் அவனைப் பற்றிய பேச்சு வரும்போது ஏனோஅவளுடைய தந்தை எப்பொழுதும் அவனைப் பற்றி கோபமாக பேசுவார்… அதுவும் சேர்ந்து அவளுக்கு அவன் மேல் ஒரு தவறான கண்ணோட்டம் வந்தது….

                ஒருமுறை சொந்தம் என்ற முறையில் உறவுக்காரர் ஒருவர் அவனுக்கு பெண் கொடுக்கும் முறை என்று செல்வகுமரன் இடம் சாதாரணமாக பேசி விட…. அதை மனதில் வைத்துக் கொண்டு செல்வக்குமரன் அவனைத் திட்ட தொடங்கி விட்டார்.,… அவன் உருபடாமல் சுற்றுபவன்… ஒரு தறுதலை…. என்று வார்த்தைகளை விட்டு விட்டார்….. அதை வீட்டில் மற்றவர்கள் அறியாவிட்டாலும் அந்த உறவினர் மூலமாக இளமாறன் அறிந்துவிட்டான்…. அதிலிருந்து அவன் சற்று ஒதுங்கி தான் போவான்….. மனதிற்குள் கொஞ்சம் வன்மத்தோடு……

          ஒருமுறை நந்தினி அவன் இருக்கும் இடத்தை கடந்து போகும் போது…. அவனுடைய தோழன் ஒருவன் மாறா இவள் உனக்கு சொந்தம் தானே என்று கேட்டுவிட்டான்…..

             அவனும் கிண்டலுக்கு…. ஆமாம்…முறை பொண்ணு என்று சொல்லி விட்டான்… உடனே நந்தினி கோவத்தில் கத்த தொடங்கி விட்டாள்….

                இருந்திருந்து இந்த மாதிரி எனக்கு சொந்தமா… இவனே ஒரு பொறுக்கி…. இவனை எல்லாம் சொந்தம் என்று சொல்லாதீர்கள் என்று கத்திவிட்டு போனாள்…

                       அதையும் சேர்த்து மனதினுள் கோபத்தை வளர்த்துக்கொண்டான்…. இவர்கள் முன் முன்னேறி காட்ட வேண்டும் என்ற வெறியோடு படித்து முன்னேறினான்…. கேம்பஸ் இன்டர்வியூவில் இவனுக்கு வேலை கிடைத்த அன்று நந்தினியை தனியே சந்தித்தான்…இவனெல்லாம் என்ன செய்வான் என்ற தைரியத்தில் அவள் இருக்க…. பொறுக்கி என்றால் எப்படி இருப்பான் தெரியுமா என்று அவள் தனியே மாட்டி இருந்த மரத்தடியில் வைத்து யாரும் கேட்க முடியாத அளவிற்கு அவளிடம் மட்டமாக பேசி விட்டு சென்றான்….. அதன் பிறகு இவள் மற்றவர்களைப் பற்றிப் பேசுவதை நிறுத்தி விட்டாள்…..

“சில வார்த்தைகள் கொல்லும்… சில வார்த்தைகள் வெல்லும்…. எனவே நாம் உபயோகிக்கும் வார்த்தைகளில் கவனம் வேண்டும்…. இவை பின்னாளில் நம்மை தாக்கக் கூடியவை….”

            அவளும் படித்து முடித்த உடனே கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைக்க….. வீட்டில் திருமணம் என்ற பேச்சை எடுக்கவும்…. இவள் முடியாது என்று சொல்லிவிட்டாள்…. திருமணம் என்பதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மனம் இருப்பதாக தோன்றவில்லை….. நான்கு வருடங்களாக பெங்களூரில் வேலை பார்த்து வருகிறாள்…..

             அவன் கேட்ட வார்த்தைகள் அப்படி வசதி இருந்தால் என்ன நாளும் பண்ணுவீங்களா டி…. என்றதோடு அசிங்க அசிங்கமாக திட்டி விட்டு…. உங்க அண்ணன் எப்படி என்று ஊருக்கே தெரியும்…. ஆனா அது வெளியே தெரியாது…. இதே இது கஷ்டப்பட்டவன் ன்னா…. நாங்க பொண்ணுங்க ட்ட பேசினால் கூட தப்பா சொல்லுவீங்க….. உங்க அப்பா என்ன தருதலைக் உருப்படாதவன் சொல்லுவாரு…. உங்க அண்ணன் யோக்கியமானவனா இருந்தா….. உங்க அப்பா என்ன சொல்ல வேண்டியதுதான்….. அது என்ன எப்ப பார்த்தாலும் என்னை மட்டும் கறிச்சுகொட்டிட்டு இருக்காரு உங்கப்பா….

                 தன் அண்ணனை கொஞ்சம் சரி இல்லை என்று அன்று தான் அவளுக்கு தெரியும் அதன் பிறகு அதில் இரண்டு வருட படிப்பு முடியும் வரை அதிகமாக யாரிடமும் பேசியதில்லை வீட்டிலுமே…..

                  அவள் வேலைக்கு போன பிறகு அவனது நண்பர்கள் மூலமாக தொலைபேசி எண்ணை வாங்கி எத்தனையோ முறை சாரி கேட்டு மெசேஜ் அனுப்பினாள்….. ஒரு முறை கூட அவன் பதில் அனுப்பவில்லை…. பார்த்தானா… பார்க்கவில்லையா…. என்று தெரியாமல்…, வாட்ஸ் அப் எண்…. இமெயில் மூலமாகவும் மெசேஜ் அனுப்பினாள்…., அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை…. பார்த்தான் என்று தெரிந்தாலும் அவன் ஏன் பதிலளிக்கவில்லை என்று அதிகம் முறை யோசித்திருக்கிறாள்….

             அப்பா திடீரென்று வேலையை விட்டு விட்டு கிளம்பி வா…. அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை என்று மட்டுமே போன் செய்தார்….. அதை நம்பி அவசரமாக வரவும்.., வந்து பார்த்தால் திருமணம் பேசி முடிக்கப்பட்டு இருந்தது…. வேறு யாருடனாவது திருமணம் என்றால் கஷ்டப்பட்டு என்றாலும் திருமணத்தை நிறுத்தி இருப்பாள்….. மாப்பிள்ளை இளமாறன் என்று தெரிந்ததால் தான் அமைதியுடன் சம்மதித்தாள்….

          அவளுக்கும் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்…. அவன் எப்படி திருமணத்திற்கு சம்மதித்தான்…. தன்னுடைய மெசேஜ் மற்றும் மெயிலுக்கு பதில் இல்லாமல் போனதுதான்…. ஆனால் திருமணத்திற்கு ஏன் சம்மதித்தான்.., எப்படி சம்மதித்தான்.., என்ற கேள்வி மனதில் அரித்துக் கொண்டே இருந்தது….. ஆனால் அதற்கான விடை இப்போது கிடைத்து விட்டது…. தன்னை கஷ்டப்படுத்தி பார்ப்பதற்காக மட்டுமே திருமணத்திற்கு ஒத்துக் கொண்டான் என்று மனதிற்குள் தோன்றியது…..

              அவன் மனதிற்கு இது தான் நிம்மதி தரும் என்றால் ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்…. என்று நினைத்துக் கொண்டான்….. தப்பு செய்யாத ஒருவனை தப்பாக வெளியே சொல்லுவதும் அவனை மற்றவர்கள் தவறாக எண்ணும் வண்ணம் மட்டம் தட்டுவதும் எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்து கொண்டாள்…. அந்தத் தவறை தன் தந்தை செய்ததை புரிந்து கொண்டாள்…. அண்ணன் மேல் உள்ள தவறை வெளியே தெரியக்கூடாது… என்று மற்றவர்கள் பிள்ளைகளை மட்டம் தட்டிபேசியுள்ளார்……

        அதற்காகவே தன்னை திருமணம் செய்ய சம்மதித்து இருப்பான் என்று நினைத்துக் கொண்டாள்….

           வாழ்க்கை தனக்கு என்ன வைத்து காத்திருக்கிறது., என்று தெரியாமல் முதலடியை எடுத்து அவனோடு வாழ்வில் இணைந்துவிட்டாள்…,

          அதிக நேரம் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துவிட்டு….. இத்தனை யோசனைகளோடு நடு இரவுக்குப் பிறகு தூங்கினாள்…… அதிகாலையில் விழித்து விட்ட இளமாறனோ…..கண்விழித்ததில் இருந்து நந்தினியை பார்த்துக் கொண்டிருந்தான்…. சரியான திமிர் புடிச்சவ எப்படி இப்படி மாறினா…. இங்க ஒர்க் பண்ணும் போதே சாரி கேட்டு மெசேஜ் பண்ணிட்டு இருந்தா…. ஆனால் யூ . எஸ் போன அப்புறம் ரெண்டு தடவை மெயில் மட்டும் வந்துச்சு அதுக்கப்புறம் எதுவுமில்லை…. அனலைஸ் பண்ணிட்டாளா…… குடும்பத்திலுள்ள உள்ளவங்கள பத்தி புரிஞ்சுக்கிட்டாளா…. என்று யோசனையில் இருந்தான்….

             எப்படி கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சா….. அது மட்டும் இன்னும் புரியவில்லை….. அப்பா சொன்னதற்காக எல்லாம் கல்யாணம் பண்ற ஆள் இல்ல…. நான் பழி வாங்குறதுக்கு வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு கல்யாணம் பண்ணினேன்….. இவ…

திட்டு வாங்க ன்னு கல்யாணம் செய்ய சம்மதிச்சா போல…. என்று நினைத்துக் கொண்டான்…… அவளுக்கு அவன் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது….. அது காதலா என்று எல்லாம் தெரியாது….. அவன் படித்து முடித்து போன பின்புதான் ஈர்ப்பு இருப்பதையே தெரிந்து கொண்டாள்….. அவனுக்கு அவளை முதலில் இருந்தே பிடிக்கும்…. ஆனால் அவளுடைய தந்தைக்கு பயந்தே பேசமாட்டான்….. அதுமட்டுமல்லாமல் அவளும் கொஞ்சம் திமிர் பிடித்தவள் என்பதால்…..

              சுருண்டு படுத்திருந்தவளை பார்க்கும்போது பாவமாக இருந்தாலும்….. திமிர் பிடிச்சவ போர்வை எக்ஸ்ட்ரா வேணும் என்று கேட்டிருக்கிறாளா பாரு…. என்று அதற்கும் கோபப்பட்டான்….. திமிரு….. என்று நினைத்துக் கொண்டான்….

“என்னவென்று நினைப்பது

நீ என்னோடு வாழ்வில்

அடியெடுத்து வைப்பதை…..

என் கோபமும் வஞ்சமும்

உனை கொல்ல இருப்பதை

நீ அறிவாயா……

தீயாய் எரியும் என்

கோபத்தில் நீ பொசுங்கி

போய் விடுவாயோ…..

எப்போதோ உன் மேல் வந்த

சிறு ஈர்ப்பு காதலாய் மாறி

உன்னை காக்குமா….

இல்லை என் கோபக் கனல்

உன்னை பொசுக்குமா……”

         அப்பா வீட்ல இருக்கிற நினைப்பு போல இன்னும் தூங்குறத பாரு….. எப்படி எழுப்ப என்று யோசனையுடன் எழுந்து அவள் படுத்திருந்த இடத்திற்கு அருகில் போய் நின்றான்…..

        நீளமாய் கிடந்த அவளது தலை பின்னலை பார்த்தான்… மெதுவாக அமர்ந்து அவளது பின்னலை எடுத்து அதன் நுனி பாகத்தை கொண்டு அவளது காதிலும் கழுத்திலும் கூசும்படி கிச்சு கிச்சு மூட்டினான்…..

இரண்டு முறை தட்டி விட்டவள்… மூன்றாம் முறையாக மெதுவாக கண் திறந்து பார்த்தாள்… முதலில் எங்கிருக்கிறோம் என்று கொஞ்சம் குழம்பியவள்… அருகில் மாறனை பார்க்கவும்…. முதலில் கனவு என்று நினைத்தே கண் முடினாள்…. அவன் பிடித்திருந்த மூடியை பிடித்து இழுக்கவும்….

அவசரமாக எழுந்து அமர்ந்தாள்….

என்ன மேடம் எந்திரிக்க மனசு வரலையா…

சாரி…..

    குளிச்சிட்டு கீழ போ…. யாரும் மாடி க்கு க்ளீன் பண்ண வர்றேன் ன்னு சொல்லிட்டு வந்துறாம…. வேண்டாம்னு சொல்லிரு…. நானே கிளீன் பண்ணிக்கிறேன்… அப்படின்னு சொல்லிட்டு நீ மேல வந்து க்ளீன் பண்ணு….

    பதிலே பேசாமல்…. ம்ம்ம்…. என்ற சத்தத்துடன் குளிக்க சென்றாள்….

   அவள் குளித்துவிட்டு வந்து அறையை சுத்தம் செய்யும் போது அவன் ஒரு ஓரமாய் அமர்ந்து அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான்…. எதுவும் பேசவில்லை…. செல்லைப் பார்ப்பதுபோல இவள் செய்யும் வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான்….

   ஆளே மாறிட்டா….. பழைய நந்தினியா இருந்தா இந்நேரம் ஒரு சண்டை போட்டு இருப்பாள்….. திட்டினா கூட அப்படியே வாங்கிறா…. கோவமா கூட பாக்க மாட்டேங்கற….. புரியலையே மாறா நடிக்கிறாளா…. மாறிட்டாளா…. ன்னு….

  அறையை சுத்தம் செய்துவிட்டு கீழே போக முயற்சிக்கும் போது….. நந்தினி என்று அழைத்தான்….

      ஒரு நிமிடம் அமைதியாக அவன் அழைத்ததை உள் வாங்கி கொண்டாள்…. ஏனெனில் முதல் முறையாக அவளை பெயர் சொல்லி அழைத்து இருக்கிறான்….

       முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவனை திரும்பி பார்க்கவும்…. காபி எடுத்துட்டு வா…. என்று வேலை கொடுத்தான்…..

       அவன் முகத்தையே பார்த்தபடி தலையாட்டிவிட்டு கீழே சென்றாள்…..

சரியான தூக்கம் இல்லாமல் கலைத்து வந்த அவளது தோற்றம்….. மற்றவர்களுக்கு எதை எதையோ உணர்த்த அவர்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்…. இவளோ மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்….

       எதையோ நினைத்துக் கொள்ளுங்கள் என்று அவள் அதைக் கண்டு கொள்ளாமலேயே இருந்தாள்…

         அவளுக்கு காபியை கையில் தேவகி கொடுத்தார்… அத்தை அவங்களுக்கு காபி என்று கேட்டாள்…..

         நீ முதல்ல குடி….அவனுக்கு கொஞ்சம் சூடா கேட்பான்….. போட்டு தரேன்….

        நான் வேண்டுமென்றால் அவங்களுக்கு குடுத்துட்டு வந்து குடிக்கட்டுமா என்று கேட்டாள்….

       நீ குடிமா…. நான் கலந்து தர்றேன் அதுக்குள்ள என்று சொல்லி…. அவளை குடிக்க வைத்தார்….

       காபி கொடுத்துட்டு அவனும் குளித்துக் கிளம்பி வர சொல்லு….. இரண்டு பேரும் கோயிலுக்கு போயிட்டு வாங்க என்று சொன்னார்….. சரி என்று சொன்ன படி காபியை எடுத்துக் கொண்டு மாடிக்குப் போனாள்….

        இவளை எதிர் பார்த்தபடி அமர்ந்திருந்தான்…. காபியை கையில் கொடுக்கவும் வாங்கிக் கொண்டான்…..

       அமைதியாக அவள் நிற்கவும்…. என்ன விஷயம் சொல்லு என்றான்….

        தேவகி சொன்ன கோயில் போகும் விஷயத்தை சொன்னவுடன் வெயிட் பண்ணு குளிச்சிட்டு வரேன் என்றான்….

உன்கிட்ட யாரும் எதுவும் கேட்டாங்களா….

இல்லை என்னும் படியாக தலையை மட்டும் அசைத்தாள்……

        காபி டம்ளரை வாங்கிக் கொண்டு கீழே இறங்கவும்…. அம்மா கேட்டா கிளம்பி வரேன் ன்னு சொல்லு என்று சொல்லி அனுப்பினான்…

அவன் கிளம்பி வரும்போது இவளும் தயாராக இருந்தாள்….

      இவர்கள் கோயிலுக்கு கிளம்பவும் கூடவே இருந்த சொந்தகார பெண்கள் இருவர் கிளம்பி போனார்கள்…. அதனால் வேறு வழி இன்றி அனைவரையும் காரில் அழைத்துக் கொண்டு சென்றான்…..

         அவளை வேண்டுமென்றே நடக்க வைத்து கோயில் வரை அழைத்துச் செல்ல வேண்டும்…. என்று நினைத்திருந்தான் அது முடியாமல் போகவும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது….

       கோவிலுக்குப் போய் திரும்பி வந்த பின்பு நந்தினிக்கு கொஞ்சம் உடல் நலம் சரியில்லாதது போலவே ஒரு உணர்வு இருந்து கொண்டே இருந்தது…. இதுவரை தரையில் படுத்து பழக்கம் இல்லாததால் உடல் வலிப்பது போன்ற ஒரு பீல் இருந்தது… அது மட்டுமின்றி இரவில் சரியான தூக்கம் இல்லாததால் அதுவும் அவளுக்கு கஷ்டத்தைக் கொடுத்தது…. இதை மற்றவர்களிடம் எப்படி சொல்வது என்று ஒரு குழப்பமும் இருந்தது…..

      அவள் அண்ணி நந்தினியைப் பார்க்க இங்கு வரவும்….அவளிடம் சொல்லலாம் உடல் வலி என ஒரு மாத்திரை வாங்கிக் கொள்ளலாம்., என்று நினைத்து அவளிடம் மெதுவாக கேட்க அது காட்டுத் தீ போல் பரவி அவர்கள் வேறு மாதிரி நினைக்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டது…. வேறு வழியே இல்லாமல் தலையில் அடித்துக் கொண்டு மாறனிடம் போய் நின்றாள்….

     அதற்குள் அந்த விஷயம் மாறனின் ஒன்றுவிட்ட அக்கா கணவன் மூலமாக மாறனின் காதிற்கும் வந்திருந்தது…. அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சிரித்து சமாளித்து விட்டு போனை வைத்தான்….

    இவள் வந்து நிற்கவும்….. அவளின் முகத்தைப் பார்த்தவுடன் சிரித்து விட்டான்….

      என்ன பண்ணி வச்சிட்டு வந்து இருக்கே ன்னு தெரியுமா…. என்று கேட்டான்

     சாரி எனக்கு இப்படி தப்பா எடுப்பாங்கன்னு தெரியாது…. நான் சொன்னதுக்கு ரீசன் இது மட்டும்தான் என்று காரண காரியங்களை விளக்க….

    அதை என்னிடம் சொல்லி இருக்க வேண்டியதுதானே என்று கோபப்பட்டான்…..

       மறுபடியும் சாரி என்று சொல்லிக் கொண்டு நின்றாள்….. மனதிற்குள்ளோ காலையில் எந்திரிச்சத்திலிருந்து எத்தனை சாரி சொல்றேன்…. கணக்கே இல்லாமல் போய்விட்டது என்று நினைத்துக் கொண்டாள்……

      இரு நான் மாத்திரை வாங்கி தரேன்…. ஆனா அதையும் போய் யார்கிட்டயும் சொல்லிடாத…

மொத்தமா மாத்திரை வாங்கி தரவா…. என்று கேட்டான்..

இவளோ கேள்வியாக அவனை பார்க்கவும்……

        இனி தினமும் கீழே தானே படுக்கணும்…. அப்ப உடம்பு வலிக்க தானே செய்யும் என்று கேட்டேன்…. உங்க வீட்ல பெட்டில் படுத்த ஆள் இல்ல…. அதுக்கு தான் கேட்டேன் என்று நக்கலாக கேட்டான்……

மௌனமாக அவன் முகத்தை பார்த்து விட்டு திரும்பவும்…….

      உடம்பு வலித்தால் மாத்திரை போட்டு விடலாம்….மனசு வலிக்கிறதுக்கு எதை போட என்று கேட்டான்….

         அவனைப் பற்றி அவளுடைய தந்தை குறைவாக பேசிய நிமிடங்கள் ஒவ்வொன்றும் இப்போது கண்முன் வந்து சென்றது போல் அவளுக்கு தோன்றியது….

மறுபடியும் சாரி என்ற வார்த்தையோடு அங்கிருந்து நகர்ந்தாள்….

       அவளின் முகம் வாடி இருப்பதைப் பார்த்தவுடன் அவனுக்கும் கஷ்டமாக தான் இருந்தது…. ஆனால் மனதில் இருந்த வலி அதனை துடைத்தெறிந்தது…..

“ஒரு யுத்தத்தை வார்த்தைகளால்

தொடங்க முடியும்.

அல்லது அமைதியை அதனால்

உண்டாக்க முடியும்.

வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும்

நம்மை இணக்கமாக வைப்பது

வார்த்தைகளே…

வார்த்தைகளை நாம் கட்டுப்படுத்தினால்

வாழ்வில் வெற்றிகரமான

இணக்கம் நிலவும் சந்தேகமில்லை.”

– பெர்கென் இவான்ஸ்……