‘ஏன் பேர் சொல்லிப் பேசமாட்டானோ, இந்த ஜெம் (GEM)’ என மனதில் வசைபாடினாள்.

 “இந்நிகழ்ச்சியை மாலை 6 மணிக்கு ஒளிபரப்ப எண்ணம் உள்ளது, மாலை ஆரம்பித்தவுடன் , அழுகை, ஆர்ப்பாட்டம் , வில்லத்தனம் என இல்லாது மனதை வருடுவது போல் நிகழ்ச்சியை அமைக்க யோசனை…” என அர்ஜுன் நிறுத்தினான்.

‘மேலும் சொல்’ எனப் பார்க்க , 

அர்ஜுன் உற்சாகமாய்,  “இது குழந்தைகள் நிகழ்ச்சி. ஆனால் அவர்களின் திறமைகளைக் காட்டும் நிகழ்ச்சி அல்ல,  குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கும் நிகழ்ச்சி..” 

“ஓ.கே.,  தென்..?” 

“4 வயது முதல் 8 வயது வரை உள்ளவர்களே பங்கேற்பாளர்கள். அவர்களுடைய மழலை,  அறியாமை தான் பிரதானமாக இருக்கும்…”

“இனியா..” என்று அழைத்தான்,  அவள் அருகில் வர, 

“இந்நிகழ்ச்சிக்கு, புது வீஜே இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது,  இனியா இதற்கு நன்றாகப் பொருந்துவாள் எனத் தேர்ந்தெடுத்துள்ளோம்” என்று முடித்தான்.

அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு,  அர்ஜுனிடம் திரும்பி, “உங்களை நம்புகிறேன்,  நீங்கள் வேலையைத் தொடங்குங்கள்…”  அப்புறம், “முதல் எபிஷோட் சூட் முடிந்தவுடன் எனக்கு  அனுப்புங்கள். அப்புறம் நிகழ்ச்சிக்கு என்ன பெயர்?” 

“இன்னும் முடிவு செய்யவில்லை ஸார்” 

 “ஓ.கே… , எல்லாம் முடிந்தவுடன் எனக்குத் தெரிவியுங்கள்…” என்று கூறிவிட்டுச் சென்றான். 

அனைவருக்கும் மலையைப் புரட்டிய ஆசுவாசத்துடன் இருந்தாலும்,  ஒருபுறம் உற்சாகமும் இருந்தது.

அத்தியாயம் 4

 ‘வாவ்…!’ என்று அந்த மேஜையில் இருந்த பேனாவை இனியா எடுக்க,

 “அர்ஜுனிடம் கொடு இனியா…..”  என்றாள் அனு.

 “ஏன்? யாருடையது?” என்று வழக்கம் போல் வம்படிக்க ,

“விக்ரம் சாரோடது,  மிகவும் விலை உயர்ந்தது, அர்ஜுன் கொடுத்து விடுவான்…. “

“ஓ! அவன் பெயர் விக்ரமா….?” என மனதில் குறித்துக் கொண்டாள். பின், “1000 ரூபாய் இருக்குமா?” என விளையாட்டாகப் பேனாவை ஆட்டியபடி கேட்க ,

“ 35000 ரூபாய் இருக்கும்…” என்றாள் அனு.

“ஆ…..!” என்றவாறு, “தங்கத்தில் செய்த பேனா வா?” என இனியா நக்கலடிக்க ,

“இல்லை , தங்கத்தில் செய்த நிப்பு….” என்றான் அர்ஜுன் .

“ஓ..!, இந்தப் பேனா மட்டும் வேற வேலையா செய்யும் , இரண்டு ரூபாய் பேனா போல எழுதத்தானே போகிறது….” என வியாக்கியானம் பேசியபடி , பேனாவை ஆட்டிக் கொண்டே திரும்ப , அப்படியே அசையாமல் நின்றாள்.

 என்னவென்று அனைவரும் திரும்பிப் பார்க்க , விக்ரம் வாசலில் நின்றிருந்தான்.

விக்ரம் உள்ளே வந்து அவள் முன் நின்று , கையை நீட்ட , பேனாவைக் கொடுத்தாள். 

இனியாவைத் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்ந்தான்.

இனியா ‘ஊப்…’ என அமர , அங்கே ஒரு சிரிப்பு அலை கிளம்பியது. 

“வாயெல்லாம் எங்கக்கிட்ட தான்..” எனக் கேலி செய்ய,  அசட்டுச் சிரிப்போடு தப்பிக்கும் விதமாக அனுவை இழுத்துக் கொண்டு கேண்டீன் சென்றாள்.

“அங்கே ஜெம்மைப் பற்றிச் சொல்….” என்று அனுவிடம் நச்சரிக்க , 

 புரியாத பார்வையை அனு வீச, “எல்லாம் உங்க விக்ரம் சாரைப் பற்றித் தான்…” என்று நொடித்தாள் .

“ ஜெம் என்றாள் என்ன? , அதை முதலில் சொல்” என்று அனு விசாரிக்க , 

அதற்கான விளக்கவுரையை இனியா சொல்ல ,  

“இதை மட்டும் அவருடைய ரசிகர் பட்டாளம் கேட்கனும், மவளே நீ காலி” என அனு வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ,

“என்னப்பா, பில்டப் எல்லாம் பெரிசா இருக்கு” என இனியா அங்கலாய்த்தாள் .

அப்போது அங்கே வந்த அர்ஜுன், “அனு, உன்னோட சிரிப்பு,  நம்ம ஃபளோர் வரைக்கும் கேட்குது, அது அப்படியே என்னை இழுத்து வந்துவிட்டது…” என்று அனுவிடம் வழிய,

அனு முறைக்க, 

 உடனே இனியாவிடம்,  “நீ சொல்லுமா ? என்ன விசயம்?” எனப் பம்மினான்.

“ஒன்றுமில்லை பாஸ் , நம்ம விக்ரம் சார் பற்றி விவரம் கேட்டேன்…” என்று நல்ல பிள்ளையாகச் செப்பினாள்.

“நம்பிட்டேன் , நம்பிட்டேன்  உங்க முஞ்சிகளைப் பார்த்தாலே தெரியுது” என்று நம்பாத பார்வை பார்க்க ,

“இல்லை…” என்று அனு ஆரம்பிக்க ,

 இனியா அவளை மறித்து,  “நீங்க சொல்லுங்கள் பாஸ்…” எனத் தூண்ட ,

“மவளே…. நீ மாட்டினாய் , விவரம் கேட்பது யாரிடம் , ரசிகர் மன்ற தலைவனிடம்….” என்று மனத்தில் நக்கலடித்துக் கொண்டே அனு வேடிக்கை பார்க்க ,

“உனக்கு வீ.ஆர். குரூப் தெரியுமா?” என அர்ஜுன் உற்சாகமாகக் கேட்க ,

“லூசாப்பா நீ?” என்பது போல் இனியா அவனைப் பார்த்துவிட்டு. “அதைத் தெரியாமல் யாராவது இருப்பார்களா?”

அர்ஜுன் முகத்தில் பெருமை பொங்க,  “அது நம்ம விக்ரம் சாரோடது தான்.”

“ஓ..! அது தான் நம்ம ‘தல’ அவ்வளவு காஸ்ட்லி பேனா வைத்திருக்குதா?” என நினைத்தாள்.

“அப்புறம்….?” 

உடனே “விழுப்புரம்…” என்றான் அர்ஜுன்.

 

உடனே, “உங்க ஜோக்,  அர்த்தப் பழசு பாஸ், சகிக்கவில்லை , நீங்கெல்லாம் இயக்குனர் வேற,  காலக் கொடுமைடா சாமி…” என இனியா அலுத்துக் கொள்ள , 

உடனே  அனு ஹைஃபை தட்ட , 

“ஓ.…! சரி,  அப்படியா?  நான் கிளம்புகிறேன்….” என பிகு செய்தான். 

  இரண்டு பேரும் வேகமாகச் சரண்டர் ஆக, “இது நல்ல பிள்ளைக்கு அழகு…” என்றபடி, “ அதில் உள்ள ‘வி’ ஸாரோட தாத்தா விக்ரமன், முன்னாள் மத்திய மந்திரி. ‘ஆர்’ ரகுராம் அப்பா , தற்போதைய தமிழக மந்திரி,  மருத்துவம், பொறியியல் கல்லூரி,  வி.ஆர் . மருத்துவமனை,  மால் எனப் பல தொழில்கள்,  பல இடங்களில் உள்ளன.

மேலும், “நல்ல மனிதர்கள்,  ஒரளவு நேர்மையான அரசியல்வாதிகள்,  பரம்பரைப் பணக்காரர்கள்…” எனப் புகழ் பாடினான் .

“பார்ன் வித் டைமண்ட்,  ப்ளாட்டினம் ஸ்பூன் என்று சொல்லுங்க பாஸ்..…” என்றாள் இனியா .

“ஆமாம்….. , ஆனால் நம்ம விக்ரம் ஸார் ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா?”  

“என்னவாம்?”என இழுத்தாள் .

 

“ விக்ரம் ஸாரைப் பற்றி யாரும் ஒரு குறை சொல்ல முடியாது , வேலை வாங்கும் முறையாக இருக்கட்டும்,  பெண்களிடம் நடந்து கொள்ளும் முறையாக இருக்கட்டும்,  ஹி இஸ் ஏ ஜெம் ஆஃப்  அ பர்ஸன் தெரியுமா?  என்றதும்….” இருவரும் சிரித்து விட, 

“என்ன?” என்று துருவினான் .

“அது ஒரு பழைய ஜோக் பாஸ்,  நீங்கள் மேலே சொல்லுங்கள்…” 

அர்ஜுன் முறைத்தபடி,   “ எப்பவும் லோ பரோவைலில் தான் இருப்பார். பெண்களுடன் கிசுகிசுக்கப்பட்டதே இல்லை..” 

“அப்புறம்..” என உந்த,

“அமெரிக்காவில் இருந்து படிப்பு முடித்து வந்தவுடன்,  தனக்கெனத் தனித்தொழில்,  தனி அடையாளம் வேண்டும் என நினைத்து, நட்டத்தில் இருந்த இந்தச் சேனலை வாங்கினார் .

அதை நிர்வாகித்து,  இரண்டே ஆண்டுகளிள்,  அதுவும் இந்த இள வயதில், 28 வயதில்,  அதில் வெற்றியும் பெற்று விட்டார். இன்று நாம் தான் நம்பர் ஒன் தெரியும்தானே..?” எனப் பெருமையாகச் சொல்ல ,

“காசு இருந்தால்,  வெற்றி பெற முடியாத என்ன?”  என  இனியா இழுக்க,

 

உடனே இடைமறித்த அர்ஜூன்,  உன்கிட்ட இந்த மாதிரியான பேச்சை எதிர்பார்க்கவில்லை இனியா” என்று கோபப்பட்டான்.

“ஓ.கே….,ஓ.கே… சில் பாஸ்,  சும்மா விளையாட்டுக்குத்தான்….” என்று சமாதானம் செய்தாள் .

 

அர்ஜுன் சமாதனமாகாமல்,  “உழைப்பைக் கேலி செய்யக்கூடாது இனியா….” என்று கடுமை காட்டினான்.

“ஸாரி பாஸ்,  நம்ம ‘தல’ கெத்து தான், ஒத்துக்கிறேன்…” என்று சரண்டரானாள் .

அர்ஜுனின் முகம் தெளிவடையாததைக் கண்ட அனு,  இனியாவை பார்த்து கண் ஜாடை செய்ய, 

“பாஸ் மன்னிச்சு…. விக்ரம் ஸார் நல்லவர் வல்லவர்,  நாலும் தெரிந்தவர்….” என எழுந்து நின்று கைகளைக் குறுக்கி குனிந்து ‘நண்பன்’ பட ஸ்டைலில் மன்னிப்பை வேண்ட,

அர்ஜுன் சற்று முறைப்போடு, “ம்ம்..” என்றான். 

உடனே இனியா முகம் வாட , 

உடனே அனு,  “விடு அர்ஜுன் ,சும்மா கேலிதான் செய்திருக்கிறாள்… ” எனச் சமாதனப்படுத்தினாள்.

“சரி,விடு, இனி இப்படிப் பேசாதே…” என்று அர்ஜுன் விட்டுக் கொடுக்க

“சொல்றவங்க, சொன்னால் தான் சமாதானம் ஆவீர்கள் போல…” என்று வம்புக்கு இழுக்க

“உன்னை….” என அர்ஜுன் இனியாவைக் கொட்ட வருவது போல் கையைத் தூக்கினான்

“இதெல்லாம் அநியாயம் பாஸ், ஸாரி சொன்ன பிறகும் கொட்டா…” என்றபடி கையைத் தடுத்தாள். 

அர்ஜுன் , அனுவை ஓரு பார்வை பார்க்க, சட்டென்று அனு தலையைத் தாழ்த்தினாள் . 

 

இந்த நாடகத்தைப் பார்த்தும் பார்க்காமல்,  தங்களைக் கடந்து செல்லும் விக்ரமை,  வெட்கமே இல்லாமல் இனியா வேடிக்கைப் பார்க்க, 

விக்ரம் கூர்மையான பார்வையுடன் அவளைக் கடந்தான்.

“பாஸ் , பாஸ்.., ‘தல’ கேண்டீன்,  வந்திருக்கார்…?” என ரகசியம்  பேசினாள் .

 

சுதாரித்த இருவரும் என்னவென்று பார்க்க , 

அதற்குள் விக்ரம் அவர்களைக் கடந்து சென்று இருந்தான். அங்கு இருந்த உணவை ருசி பார்த்துக் கொண்டிருந்தான். 

அவரை தொந்தரவு செய்யத் தயங்கியபடி , ‘விக்ரம் ஸார் பார்த்தால் சிரிப்போம் அல்லது விஷ் செய்வோம்’ என நினைத்து அர்ஜுன் அங்கொரு பார்வை வைத்தபடி பேசிக்கொண்டிருந்தான்.

 

இனியா அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் மிக முக்கியமாக, “‘தல’ 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடாமல், என்ன இங்க சாப்பிட்டுகிறார்..?” என அதி முக்கியமானக் கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தாள். 

 “உஷ்….” என்றவாறு, “ஸார் எல்லா டிப்பார்ட்மெண்ட்டையும் செக் செய்வார்,   அதுவும் அவர் வெற்றிக்கு ஒரு காரணம்…” என அர்ஜுன் மீண்டும் புகழ் பாட ஆரம்பிக்க , 

மற்ற இருவரும் “வம்பே வேண்டாம்” எனக் கைகளைத் தூக்கிப் பெரிய கும்பிடாகப் போட்டார்கள் . 

“நீங்களே கேட்க வேண்டியது… , அப்படியே ப்ளெட்டைத் திருப்பி ஓட்ட வேண்டியது, ஏதாவது கேளுங்கள், அப்போது வைத்துக் கொள்கிறேன்..” என்று முறுக்கினான்.

அனுவிடம் திரும்பி,  “இவளுடன் சேராதே. உன்னைக் கெடுத்து விடுவாள்…” என்று அர்ஜுன் பொறிய,

“வாய்ப்பில்லை பாஸ், அதுக்கு வாய்ப்பேயில்லை….” என இனியா கண் சிமிட்டினாள்.

 

ஒரு நிமிஷம் திகைத்த அர்ஜுன்,  பின் “கெட்ட பொண்ணு நீ..”  எனச் சொல்ல , 

அனு அவள் தோளில் அடிக்க என அந்த இடம் கலகலத்தது.

      ஏற்கனவே விக்ரம் உள்ளே வரும்போதே  இனியாவின் பேச்சைக் கேட்டிருந்தான்,  பின் மெல்ல நிதானித்து, தான் கேட்டிருக்கக்கூடும் என்ற எண்ணம் வராதவாறு சில நிமிடங்கள் போன் பேசுவது போல் நின்று தாமதித்து, உள்ளே வந்தான். 

மேலும் சாப்பிட்டுக் கொண்டே விக்ரம்,  அவர்கள் அறியாதவாறு கவனித்துக் கொண்டு இருந்தான். 

அர்ஜுனின் தயக்கம்,  இவர்களின் வம்பு  ஆகியவற்றை  கொண்டு இப்பொழுதும் அவர்கள் தன்னைப் பற்றித் தான் ஏதோ பேசுகிறார்கள் எனப் புரிந்து கொண்டான்.

கண்களில் குறும்பு,  நொடிக்கு ஒரு முறை கலகலவெனச் சிரிப்பு என்று இனியா அங்கிருப்பவர்களை அடிக்கடித் திரும்பிப் பார்க்க வைத்தாள்.

அவர்கள் கிளம்புவதை உணர்ந்த விக்ரம்,  தலையை உயர்த்த,  விஷ் செய்து விட்டு நகர்ந்தனர்.

அன்று வீடு வந்த இனியா,  ஹாலில் உட்கார்ந்த படி, “அம்மா ஸ்டராங்கா ஒரு காபி..” என்று ஆர்டர் போட,

அப்போது அடுப்படியில் இருந்து முறுக்கோடு வெளியே வந்த காவியா, “என்னக்கா ஆபீஸில்…?” எனக் கதை கேட்க, 

உடனே அளக்க ஆரம்பித்தாள்,  “இன்று என் சேனல் ஹெட்டைப் பார்த்தேன்” .

உடனே காவியா,  “சொட்டை மண்டைக்கிட்ட திட்டு வாங்கினியா?” 

“போடி,  எங்க பாஸ் செம ஹான்டசம்…” என்று கெத்துக் காட்டினாள்.

 

“இல்லையே…” என்றவாறு காவியா கூகுளை நோண்ட, ரகுராமின் படம் வந்தது, 

“இதுதான் உங்க ஊரில் ஹான்டசம்மா?”  எனப் படம் காட்டிச் சிரிக்க,

 

அதை வாங்கி விக்ரம் என அடிக்க , அதில் வந்த போட்டோவைக் காண்பித்தாள்

“வாவ்…! ஆளு நடிகர் அஜித் மாதிரி இருக்கிறார் . சோ ஹான்ட்சம் அக்கா..” என ஜொள்ளினாள் 

“முக்கியமான விசயம் கவனித்தாயா ?  சிங்கம் சிங்கிள் அக்கா”

“நீ வேற… சிங்கம் இல்லடி,  ‘தல’ ஜெம் டி, சிரிக்கக் காசு கேட்பார் போல…”

“சோ சாட்…”   எனச் சோகமான பார்வை பார்க்க, அப்போது காபியோடு கவிதா வர,  அனைத்து விவரங்களையும் மீண்டும் கூறினாள்.

இதைக் கேட்ட கவிதா, “பெரிய இடத்தில் விளையாட்டுத்தனமாக இருக்கக் கூடாது. கவனமாக இருக்க வேண்டும்” என்று அறிவுரை வழங்கினார்.

 எதிர்வாதம் செய்ய முனைந்தவள்,  அம்மாவின் முகத்தைப் பார்த்து விட்டு, “சரிம்மா, கவனமாக இருக்கிறேன்..” என முடித்தாள் .