காதல் 7

அப்சரா கீர்த்திகாவை பார்த்து அதிர்ந்து எழ முயன்றாள்.

“அப்சா உட்காரு” சத்தமிட்டான் சம்பத்.

விழித்து இருவரையும் பார்த்தாள் அப்சரா.

“அதான் டார்லிங் சொல்றாருல்ல அப்பூ உட்காரு” பவ்வியமாக இருவருக்கும் இடையே நந்தி போல கால் மீது கால் போட்டு அமர்ந்தாள் கீர்த்திகா.

“சார், இவங்க என்னோட அத்தை பொண்ணு கீர்த்திகா” அறிமுகப்படுத்தினாள் அப்சரா.

சம்பத் பார்வை அவளை மேலும் கீழுமாய் அளந்தது. அப்சராவின் முகம் தான் வெளுத்தது.

தற்பொழுது என் மனக்கண்ணில் வந்த இவரையும் தட்டி பறிக்க வந்து விட்டாளே! இவரும் அவளை ரசிப்பது போல பார்க்கிறாரே! மனம் குமுறியது. அவளது காயத்தில் உள்ள வலியை விட அப்சரா மனம் அடிபட்டு போனது.

“ஹாய், ஐ அம் கீர்த்திகா. கீர்த்து..” கொஞ்சலுடன் பேசி கையை நீட்டினாள்.

“ஹாய் ஐ அம் சம்பத். மருத்துவன்” அவளுடன் கையை குலுக்கினான்.

“இவளிடமும் நல்ல விதமாக நடந்து கொள்கிறானே!” மனம் வெதும்பியது அப்சராவிற்கு. கண்ணில் நீர் கோர்த்தது. அதை மறைக்க அலைபேசியை எடுத்து பார்த்தாள்.

சம்பத்தும் கீர்த்திகாவும் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்க, அப்சராவால் அவ்விடம் இருக்க முடியவில்லை. அழ வேண்டும் போல அவளுக்கு உணர்வுகள் மேலோங்கியது.

இதுவரை சுவாரஸ்யமாக இவர்களை பார்த்துக் கொண்டிருந்த அனைவர் முகமும் மாறியது.

வரவேற்பரை பொண்ணு வேகமாக ஓடி வந்து அப்சரா காதில் ஏதோ கூற, “விழ வேண்டாம்” என இருந்த கண்ணீர் பட்டென விழுந்து விட்டது.

கீர்த்திகாவிடம் பேசிக் கொண்டிருந்தவன் அப்சராவின் கண்ணீர் ஏதோ செய்ய, அதற்குள் அவள் ஏதும் கூறாமல் வெளியே சென்றாள்.

“ஏய்..” சம்பத் அவள் பின் செல்ல, “சார் அப்சரா மேம் தோழன் வந்துருக்கார். அவரை பார்க்க தான் போயிருக்காங்க” என கூறவும் கீர்த்திகாவை கண்டு கொள்ளாமல் அப்சராவின் பின்னே ஓடினான் சம்பத்.

கீர்த்திகா கடும் சினமுடன் இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தாள்.

வெளியே வலியுடன் காலணி கூட அணியாமல் ஓடியவள் அவளது தோழனை அணைத்து அழுதாள்.

“அப்பூ, எதுக்கு அழுற? இதென்ன கட்டு?” தலையையும் காலையும் பார்த்தான் விசுவநாதன்.

கண்ணீரை உள்ளிழுத்து, “அதை விடுடா” அவனை நிமிர்ந்து பார்த்தாள் அப்சரா.

அப்பூ, உனக்கும் அம்மா, அண்ணாவுக்கும் பாஸ்போர்ட், வீசா எல்லாமே வாங்கியாச்சு.

அவர்கள் அருகே வந்த சம்பத் அவன் கையிலிருக்கும் பாஸ்போர்ட் வீசாவை பார்த்து அப்சராவை பார்த்தான்.

“விச்சு, இதை நீயே வச்சிரு. நான் கேட்கும் போது தாரீயா?” அவள் கேட்டுக் கொண்டே சம்பத்தை பார்த்தாள்.

சம்பத் விச்சுவின் கையிலிருக்கும் இவர்களது பாஸ்போர்ட் வீசாவை பிடுங்கினான். அவன் பின் வந்த கீர்த்தனாவை பார்த்து விசுவநாதன் அதிர, அப்சரா சம்பத்தை இழுத்து அணைத்து..

“சார், கீர்த்துக்கு தெரியாம வைச்சிருங்க. ப்ளீஸ்” அவனை அணைத்துக் கொண்டே பேச, அதனை தனது ஆடையினுள் மறைத்தான் சம்பத்.

“அப்பூ….” சத்தமிட்ட கீர்த்திகா அப்சராவை அடிக்க கையை ஓங்கினாள்.

அவள் கையை பிடித்த சம்பத், “வாட் கீர்த்திகா? எதுக்கு என்னோட கெர்ல் ப்ரெண்டை அடிக்கிறீங்க?” அப்சராவை இழுத்து தன் பக்கம் வைத்து அவள் தோளில் கை போட்டான்.

“கெர்ல் ப்ரெண்டா?” கீர்த்திகா சினமுடன் கேட்க, “ஆம்..நாங்க தற்செயலாக தான் மீட் பண்ணோம். இன்று அப்சாவிற்கு பிரப்போர்ஸ் செய்ய தான் அழைத்தேன்” என்று அவனது பைக் அருகே சென்று சில பலூன்களையும், கேக்கையும் எடுத்து வந்து…“வில் யூ மேரி மீ பேபி?” சம்பத் அப்சராவிடம் நீட்டினான்.

பலூன்ஸ் அப்பூவுக்கு பிடிக்கும்ன்னு கூட உங்களுக்கு தெரியும்ன்னா நிஜம் தானா? விசுவநாதன் வியந்து, “சார் ஐ அம் விசுவநாதன். நாங்க கல்லூரி தோழன், தோழிகள்” என்றான்.

சம்பத் அவனை பார்த்து விட்டு அப்சராவை பார்த்தான். அவள் நம்பமுடியாமல் அவனையே பார்க்க, “வேண்டாமா பேபி” சம்பத் கேட்க, விரைந்து வாங்கிக் கொண்ட அப்சரா தன் நண்பன் தோளில் கையை போட்டு அவன் காதருகே சென்று,

“விச்சு, இங்க நடக்குறது உண்மையா? சம்பா சார் எனக்கு கேக், பலூன்ஸ் தர்ற மாதிரி கனவு வருதுடா” அவள் ஹஸ்கி வாய்சில் பேச, விசுவநாதன் அவளது கையை தட்டி விட்டு…

“சார், அவள பிடிங்க. விழப் போறா. கனவுல இருக்கோமான்னு கேக்குறா?” சொல்லி கலகலவென சிரித்தான் அவன்.

வாயை பிளந்து அவனை பார்த்த அப்சரா, “கனவில்லையா?” ஒரு கையில் பலூடன் சம்பத் தோளில் கை போட்டு மறு கையில் கேக்குடன் விழிவிரித்து அவனை பார்த்தாள்.

அப்சராவின் அழகான மருண்ட பார்வையை பார்த்து புன்னகைத்த சம்பத், “இதுக்கு மேல கண்ணை உருட்டி பார்த்த நான் மயக்கம் போடாமல் நீ தான் பிடிக்கணும்” என்றான்.

ஹம்…..என்ன? அவள் கேட்க, அவள் கையிலிருந்த கேக்கை சீற்றத்தில் தட்டி விட்டாள் கீர்த்திகா.

“கீர்த்திகா” சத்தமிட்ட சம்பத், அவளை முறைத்து மறுபடியும் அப்சராவை தூக்கி நடந்தான்.

“சார் நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?” விசுவநாதன் சம்பத் பின்னாடியே ஓட, சர்ரென சீற்றமுடன் காரை எடுத்து பறந்தாள் கீர்த்திகா.

சம்பத் தன்னை அறிமுகப்படுத்தினான்.

தனக்கு யாருமில்லை என்று அவன் கூறவும் மேலும் அவனை விழித்து பார்த்தாள் அப்சரா.

“நாங்க பேசணுமே!” சம்பத் விச்சுவை பார்த்தான்.

சார், சீக்கிரம் இவள கல்யாணம் பண்ணிக்கோங்க இல்ல இவங்களால எங்க அப்பூ ரொம்ப கஷ்டப்படணும். நான் வாரேன் அப்பூ..

“விச்சு…” சம்பத்தின் கையிலிருந்தவாறே விசுவநாதனை அழைத்தாள் அப்சரா.

மாமா..

ம்ம்! கண்டுபிடிச்சிட்டாங்க. முதல்ல நான் பேசிக்கிறேன்.

“விச்சு…நானு….” பாவம் போல முகத்தை வைத்தாள் அப்சரா.

“சார், எங்க அப்பூவுக்கு எல்லாமே அவளோட மாமா சர்வா தான். நான் கூட இவங்க தான் நல்ல கப்புல்லா இருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனால் நீங்க அவரை விட அப்பூவுக்கு பொருத்தமா இருக்கீங்க. இனி இவளை பற்றி நான் கவலைப்பட மாட்டேன்” அவன் புன்னகையுடன், “நான் கால் பண்றேன்” விசிலடித்தவாறு நகர்ந்தான்.

கையிலிருந்த பலூனையும் கீழே சிந்திக் கிடந்த கேக்கையும் பார்த்தாள் அப்சரா.

பைக்கில் அமர வைத்து அவளை பார்த்து, “நான் கேக் வாங்கிட்டு வாரேன்” என்றான். அவன் கையை பிடித்த அப்சரா…சார்..கொஞ்ச நேரம் முன் நீங்க சொன்னது..

உண்மை தான். நாம கல்யாணம் பண்ணிக்கலாம். அதன் பின் பிரச்சனையை பார்த்துக்கலாம்.

நாம கல்யாணம் செய்தால் நான் உங்க வீட்டுக்கு வந்துருவேன். அப்புறம் எப்படி பிரச்சனையை சரி செய்வது? விச்சுகிட்ட உங்களுக்கு யாருமில்லைன்னு சொன்னீங்க?

தாரா பற்றி சொன்னால் உன் அண்ணா பற்றியும் எல்லாருக்கும் தெரிய வரும். சொல்லட்டுமா?

“நோ சார்” பதறினாள்.

சார் இல்லை சம்பான்னு அழை.

பெயர் சொல்லி எப்படி அழைப்பது?

சும்மா அழை.

நான் வேணும்னா மாமான்னு அழைக்கவா?

மாமாவா?

ம்ம்! சர்வா மாமா மாதிரி..

சம்பத் அவளை முறைத்தான்.

ஏன் சார், மாமா பிடிக்கலையா?

ஓ.கே…

சரி சொல்லுங்க. எப்படி திருமணம் முடிந்த பின் பிரச்சனையை சரி செய்து அண்ணாவை உள்ளே கொண்டு வருவது?

அதுக்கு நான் உங்க வீட்டோட மாப்பிள்ளையா வரணும்.

எனக்கே மரியாதை இருக்காது..

புன்னகைத்த சம்பத், சும்மா ஒன்றும் நான் என்னோட மாமனார் வீட்ல இருக்க போறதில்லையே!

அப்புறம்?

நீ உங்க கம்பெனி பொறுப்பை ஏற்று நடத்த தயாரா இரு. உனக்கு உதவியாளனாக எப்போதும் உன்னுடன் இருக்கிறேன். எல்லாவற்றையும் சரி செய்து சித்தார்த்தை உள்ளே கொண்டு வரலாம்.

இது சாதாரணமில்லை.

நான் நினைத்த எதையும் முடிக்காமல் விட்டதில்லை. இதை நான் பார்த்துக்கிறேன்.

சுதாகர் மாமா ரொம்ப மோசமானவரு..

“பார்த்திடலாம்” கையை நீட்டினான். அவளும் கையை கொடுத்தாள். புன்னகையுடன் அவளை அணைக்க, மகிழ்ச்சியில் திக்குமுக்காடினாள் பெண்ணவள். அவன் இதழ்களும் அவனை மீறி புன்னகைத்தது.

சம்பத் அவளை பைக்கில் ஏற்ற, நானே போய்க்கிறேன். இப்ப நீங்க வேற யாரையும் பார்க்க வேண்டாம்.

“உன் வீட்டின் அருகே விட்டு செல்கிறேன்” பைக்கை எடுத்த சம்பத் யாரையோ பார்த்து அப்சராவை அங்கேயே விட்டு வேகமாக ஓடினான்.

“நில்லுங்க” அப்சரா நொண்டிக் கொண்டே அவன் பின் ஓடினாள்.

நடுரோட்டில் சம்பத் நின்று, “சித்தப்பா” உரக்க கத்தி அழைத்தான்.

ஆனால் அங்கு யாருமில்லை. அவன் விழி மூடி நிற்க, கார் ஒன்று அவனை நோக்கி வந்தது.

“மாமா…” சத்தமிட்ட அப்சரா, ஓடி வந்து அவனை தள்ளி விட்டு அவன் மீதே விழுந்தாள்.

திடீரென அவள் மேலே விழ, இருவரையும் கடந்து சென்ற காரை பார்த்து திகைத்த சம்பத் அவன் மீது படர்ந்திருந்த அவளது கூந்தலை விலக்கி விட்டு அவளது முகத்தை கையில் ஏந்தினான்.

காலில் இரத்தப்போக்கு ஏற்படவும் வலியில் மயங்கி விட்டாள் அப்சரா.

“அப்சா..” பதறி அவளை எழுப்ப முயன்றான். அவள் எழவில்லை. வெறும் காலோடு ஓடி வந்ததில் மேலும் காயமாகி இருக்கிறது. தனக்காக தான் வந்தால் என அவன் மனம் அவனையே கடிந்துரைத்தது.

அப்சராவை தூக்கி அருகே இருந்த மருத்துவமனையில் சேர்த்தான்.

காயத்தை சுத்தப்படுத்தி மருந்தை போட்டு விட்டு அவளை விழிக்க வைத்தனர்.

விழித்தவுடன் அவள் முன் நின்ற சம்பத்தை பார்த்து, வேகமாக எழுந்து அமர்ந்தாள்.

“பார்த்தும்மா…” செவிலியர் கூற, “உங்களுக்கு ஒன்றுமில்லைல்ல?” எழுந்து சம்பத்தை அணைத்துக் கொண்டாள்.

என்ன செய்கிறாள் இவள்? நான் இவளை பயன்படுத்த தான் நினைக்கிறேன். இவள்…சம்பத் அவளை நகர்த்தி பிடித்திருந்தான்.

அவனது பார்வையில் தான் அவனிடம் எல்லை மீறி விட்டோமோ? எண்ணியவளுக்கு அவன் தன் தங்கைக்காக தான் தன்னை திருமணம் செய்ய கேட்டிருக்கிறான்.

அண்ணாவின் மாறுதலும் வாழ்க்கையும் தான் முக்கியம் எண்ணிக் கொண்டு, “சாரி” அவன் கையை நகர்த்தி விட்டு செவிலியர் கையை பிடித்துக் கொண்டாள்.

“உன்னை பார்த்துக்க யாரை வர சொல்றது?” சம்பத் கேட்க, “நீங்க கிளம்புங்க. நான் டிரைவர் அங்கிளை வரச் சொல்லிக்கிறேன்”.

சாப்பிட வாங்கிட்டு வரவா?

வீட்ல சாப்பிட்டுக்கிறேன். நீங்க கிளம்புங்க. அண்ணா அண்ணீ தனியா இருப்பாங்க. வேற யாரும் பிரச்சனை செய்திடாமல்…

நீ கவனமா இரு. அந்த கீர்த்தி சரியில்லை தான்.

ம்ம்! அவள் அவனை பார்த்தாள்.

அவளை ஒரு முறை பார்த்து விட்டு சம்பத் வெளியேறினான்.

செவிலியர் உள்ளே வந்தார். அப்சரா கண்ணீரை உள்ளிழுத்து அவரை பார்த்து புன்னகைத்தார்.

ஒரு தலைக்காதலாம்மா?

ம்ம்! தலையை மட்டும் அசைத்தாள். பின் டிரைவர் சிவக்குமாரை அழைத்து விசயத்தை கூறினாள். அவர் அவளை வீட்டிற்கு அழைத்து சென்றார்.

வீட்டிற்கு வந்த அப்சராவை நேராக அவளறைக்கு அழைத்து சென்றார் சிவக்குமார். ஜெயாவும் கீர்த்திகாவும் மறைந்து நின்று இவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அங்கிள், அப்பா தான் அந்த பொண்ணை…” அப்சரா கண்கலங்கி சிவக்குமாரை பார்த்தாள்.

அப்சரா தலை கோதி, நடக்க வேண்டியதை பாரும்மா…

அங்கிள், நான் ஒருவரை திருமணம் செய்துக்க போறேன்..

யாரும்மா? அப்பா இல்லாத நேரம்…

அங்கிள், அத்தை என்னை அந்த பாவியை கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க. அவன் எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையோட விளையாடி இருக்கான்…

“சரிம்மா, யாரும்மா அந்த பையன்? நல்லவரா? உனக்கு ஏற்றவறா? வசதியானவரா? கேள்விகளை அவர் அடுக்க, அங்கிள் அவர் நல்லவர். மருத்துவர். எனக்கு இவர் கிடைத்தாலே என் பாக்கியம். நான் பாதுகாப்பாக இருப்பேன்” புன்னகையுடன் வெட்கத்தில் அப்சரா கன்னங்கள் சிவந்தது.

உனக்கு பிடிச்சிருக்குன்னா சரிம்மா. ஆனால் யார் உன்னுடைய திருமணத்தை ஏத்துப்பாங்க? உங்க அத்தை வேற மாப்பிள்ள பார்த்து வச்சிருக்காங்க. அவங்கள மீறி அந்த பையன் நிற்பாரா? யோசிச்சுக்கோம்மா..

நிற்பார் அங்கிள். நிச்சயமா நிற்பார்..

சரிம்மா. திருமணம் எப்படி?

தெரியல சார். அவர்கிட்ட பேசணும்.

“நான் கிளம்புகிறேன்மா. எதுக்கும் உன்னோட குடும்பத்திடம் ஜாக்ரதையா இருங்க” அவர் கீழிறங்க, யாதவ் அவளறைக்கு சென்றான்.

உள்ளே வந்ததும் யாரவன்? கேட்டான்.

யார கேக்குற?

யாரோ ஒருத்தனுக்காக நீ இப்படி மேலும் காயப்படுத்தி வந்துருக்கேல்ல?

“நான் சொல்றேன். எனக்கு நேரம் வேணும். நான் அவரை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். நீ வேணும்ன்னா அவங்களிடம் சொல்லிக்கோ…” முகத்தை திருப்பினாள் அப்சரா.

புன்னகையுடன் யாதவ் அவளை திருப்பி, மாமா யாருன்னு மட்டும் சொல்லு. நானே உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன்.

நிஜமா தான் சொல்றீயா?

ம்ம்! இவங்கள அவரால சமாளிக்க முடியுமா? நீ இதுவரை பட்ட கஷ்டம் போதும். அவரோட போயிடு.

சிறு புன்னகையுடன், நான் போகலை. அவர் நம்ம வீட்டுக்கு வருவார்.

என்ன?

வீட்டோட மாப்பிள்ளையா வாரார். வந்து நமக்கானதை நமக்கு சேர்க்க உதவுவார்.

“என்ன சொல்ற? யாரும் இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க. பணத்துக்காக இருக்குமோ?”

“கண்டிப்பாக இல்லை. பணத்துக்காக இல்லை. எனக்காக வருகிறார்” புன்னகைத்து மனதில் வேதனையுடன் பதிலளித்தாள்.

அக்கா, உன்னை காதலிக்கிறாரா?

நம்ம கீர்த்து முன் பிரப்போஸ் செய்தார்.

“பிரப்போஸா? அதை அவள் சொல்லவில்லை. ஏதோ அவர் அவளை காதலிப்பதாகவும் நீ அவரை மயக்கிட்டியாம்” கூறிக் கொண்டிருக்கிறாள்.

அவள நீ நம்பணும்னா நம்பிக்கோ..

அப்பூ, நான் சர்வா மாமா கஷ்டப்படும் போது அவரிடம் பேசினேன். அவர் தான் எனக்கு புத்தியில ஏறும் படி பேசி என் மனதை மாற்றினார். எப்படி அவருக்கு தங்கையா இவ புறந்தான்னு தெரியல. நான் எப்போதோ உங்க பக்கம் வந்துட்டேன். அண்ணாவும் இருந்தால் நல்லா இருக்கும். அவர் இருக்கும் போது அவரறை பக்கம் கூட நான் சென்றதில்லை. இப்ப அவர் இல்லை. என்ன செய்கிறாரோ?

அப்சரா கண்ணீர் பட்டென வழிந்தது.

“அக்கா, வருத்தப்படாத. அண்ணாவுக்கு ஒன்றும் இருக்காது” அலைபேசியை எடுத்து உணவை வர வைத்து, அவனே அப்சராவிற்கு ஊட்டி விட்டான்.

“யாது, நீ மாறிடாதடா. இப்படியே இரு. நாளை கல்லூரி போகணும்ல்ல? நீ உணவை முடித்து உன்னறைக்கு போ” அப்சரா கூற, “என்ன நடந்தாலும் நான் மாற மாட்டேன்” அவள் கையை அழுந்த பற்றி உறுதியளித்து அவன் நகர்ந்தான்.

சிந்தனையுடன் அலைபேசியை பார்த்த அப்சரா சம்பத்தை அழைக்க, அப்பொழுது தான் அவன் வீட்டினுள் நுழைந்தான். தாரணி அவன் அலைபேசியை கவனிக்க, அதை மறைத்தவாறு வெளியே வந்து எடுத்தான்.

சார்..

பெயர் சொல்லி அழை. இல்ல நீ கூப்பிட்டேல்ல அது போல அழை.

நான் ஒன்று கேட்கவா?

என்ன?

விருப்பம் இல்லாமல் நீங்க என்னை கஷ்டப்பட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.

ஏன்?

பிடிக்காத மேரேஜ் தான! அதனால..அவள் இழுத்தாள்.

அதனால…

ஒப்பந்த திருமணம் பண்ணிக்கலாமா?

ஏன் என்னை திருமணம் செய்ய உனக்கு பிடிக்கலையா?

அப்படியில்லை சார். உங்க தங்கைக்காக நீங்களும் என் அண்ணாவுக்காக நானும் வாழ்க்கையில் இணைவது சரியாக தோன்றவில்லை.

ஏன் தோன்றவில்லை? என் மீது நம்பிக்கை இல்லையா?

அய்யோ சார்! அப்படியெல்லாம் இல்லை. காலை நகர்த்தியவளுக்கு வலி உயிர் போனது.

ஷ்ஷ்…என்றாள்.

என்ன பண்ற?

காலை நகர்த்த முடியல. ரொம்ப பெயினா இருக்கு.

“சிபியை உன்னை பார்க்க வர சொல்றேன். நீ சாப்பிடு” அவன் வந்து இன்ஜெக்சன் போடவும் தூங்கு. பெயின் குறையும்.

அப்புறம்…திருமணம் உண்மை தான். எனக்கு இந்த மாதிரி ஒப்பந்த திருமணமெல்லாம் பிடிக்காது. நீ யாரையும் காதலிக்கிறாயா?

இல்ல, அத்தை சித்தியை எண்ணினால் பயமா இருக்கு…

அதை நான் பார்த்துக்கிறேன். உன் உடல்நிலை சரியாகட்டும். அப்புறம் நானே பேசிக்கிறேன். அந்த கீர்த்தி எதுவும் பண்ணாலா?

இல்ல..

“ம்ம்! கவனமா இரு” எச்சரித்து அலைபேசியை வைத்தான்.

“யாரு அண்ணா? அண்ணீயா? அவங்க உன்னை லவ் பண்றாங்களா?”

சம்பத் புன்னகைத்து உள்ளே சென்றான்.

“அண்ணா, யாருன்னு சொல்லு?” தாரணி சம்பத் பின்னாலேயே சென்றாள்.

சொல்றேன்ம்மா…நேரம் வரட்டும்..

“அண்ணா புகைப்படத்தையாவது காட்டு. நான் அவங்கள பார்க்கணும்” அவன் அலைபேசியை பிடுங்க வந்தாள்.

தன் கையை பின்னே மறைத்து சம்பத் நகர, சம்பத் எதிர்பாராத நேரத்தில் அவன் கையிலிருந்த அலைபேசியை சித்தார்த் பிடுங்கி புகைப்படத்தை பார்த்து அதிர்ந்தான்.

சம்பத் எவ்வித பதட்டமும் இல்லாமல் அவன் கையிலிருந்து அலைபேசியை வாங்க, “சம்பா பாப்பாவை உனக்கு தெரியுமா?” கேட்டான் சித்தார்த்.

பாப்பாவா? அண்ணா சித் என்ன சொல்றான்?

தாரா, சித் தங்கையை பார்த்தேன். அவளாகவே வந்து பேசினாள். சித் வீட்டிற்கு வர சில ஏற்பாடுகளும் செய்யப் போகிறோம்..

ஏற்பாடா? நான் அங்க வரவே மாட்டேன். சம்பா அவள இங்க கூட்டிட்டு வந்துரு..

முடியாது சித். உங்க கம்பெனி மொத்தமும் உன்னோட மாமா கைக்கு போயிருச்சு. அவரால நிறைய குடும்பங்கள் அழிய வாய்ப்பிருக்குன்னு அப்சா என்னிடம் உதவி கேட்டிருக்கா..

அப்புறம் நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம். நான் உங்க வீட்டுக்கு போகப் போறேன்..

“அண்ணா….” தாரணி சத்தமிட்டாள்.

வாழ்நாள் முழுவதும் அல்ல. திட்டம் இருக்கு. அதை நான் பார்த்துக்கிறேன் என்ற சம்பா சித்தார்த் பக்கம் திரும்பினான்.

இதுல முக்கிய விசயம். உங்க எல்லா கம்பெனியையும் நீ தான் பார்த்துக்கணும். உன்னோட குடும்பம் மற்றும் கம்பெனியை உன் தங்கையுடன் சேர்ந்து சரி செய்கிறேன். நீ கண்டிப்பாக உன் வீட்டிற்கு வந்தே ஆகணும்..

“நான் வர மாட்டேன்” கோவித்துக் கொண்டு அறைக்கு சித்தார்த் செல்ல, சம்பத் தாரணியை பார்த்தான். அவள் ஓடிச் சென்று சித்தார்த்தை மறைத்து நின்றாள்.

தாரா, நான் போக மாட்டேன்.

“நீ போகணும் சித். எங்க குடும்பம் அழிய கூட சிலர் காரணம் தான். அது போல யாருக்கும் எதுவும் ஆகக் கூடாது” கண்கலங்க தாரணி கூறவும் சித்தார்த் அவளையும் சம்பத்தையும் பார்த்தான். சம்பத் முகம் இறுகி இருந்தது. அவன் கைகளை இறுக்கி வைத்திருந்தான்.

சித்தார்த் சம்பத்திடம் சென்று அவன் கையை பிடித்து, “பாப்பாவுக்கு பிடிச்சி தான் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா? அம்மா காதல் இல்லாத வாழ்க்கை குப்பைக்கு சமம்ன்னு எப்பவும் சொல்வாங்க….” சம்பத் கண்களை நோக்கினான்.

பிடித்து தான் திருமணம் செய்யப் போறோம் பட் அதுல ஒரு பிரச்சனை. உங்க சித்தியும் அத்தையும் அப்சாவுக்கு வேற ஒரு பணக்கார மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்காங்க..

அய்யோ அண்ணா, இப்ப என்ன பண்றது?

அத நான் பார்த்துக்கிறேன். சித்…நீ சேந்தன் சொல்ற எல்லாமே கேட்கணும் என்று வெளியே அவன் பைக்கிலிருந்து ஒரு பார்சலை தூக்கி வந்து சித்தார்த் கையில் கொடுத்தான்.

அண்ணா, சித்துவுக்கு பரிசா?

சம்பத் புன்னகையுடன், இதில் பிசினஸ் சம்பந்தமான புத்தகங்கள் இருக்கு. எல்லாவற்றையும் இவன் படிக்கணும். தெளிவா தைரியமா போல்டா இருக்கணும். தாரா அவன் படிக்க நீ உதவணும். வீட்ல அவனை சும்மா இருக்கவே விடாத..

அப்புறம் எங்க மேரேஜூக்கு நீங்க வர வேண்டாம். சித்தும் நீயும் மறைந்திருப்பது தான் நல்லது.

சித் ஓ.கே அண்ணா, நானும் எதற்கு? தாரா கேட்டாள்.

அவன் கம்பெனியை நன்றாக நடத்த தொடங்கிய பின் உங்களுக்கு திருமணம் செய்து வைக்கணும். அதற்கு முன் அவர்கள் ஒருவர் கண் முன் கூட நீ வரக் கூடாது. புரியுதா? கேட்டான் சம்பத்.

நான் இல்லாமல் திருமணம் பண்ணிக்கப் போறீயா?

சிம்பிளா செய்து தான் இணையத்தில் பகிரும் திட்டத்தில் இருக்கேன்.

அண்ணா..

எதுவும் பேசாத தாரா. எங்களுக்கு நீங்க இருவரும் முக்கியம். கவனமா இருக்கணும்.

“ம்ம்! சரி அண்ணா. ஆனால் அண்ணீயுடன் அதற்கு முன் நான் பேசணும்” சித்தார்த்தை பார்த்தாள்.

முதல்ல அவளோட திருமணத்தை நிறுத்தணும்..

சம்பத்திடமிருந்து அலைபேசியை பிடுங்கி தாரணி ஓடிக் கொண்டே அப்சராவின் புகைப்படத்தை பார்த்து நின்றாள்.