காதல் 4

மாலை நேரம் அக்கோவில் கலைகட்டியது. தாரணியும் சித்தார்த்தும் தாரணியின் ஸ்கூட்டியில் வந்து இறங்கினார்கள். சம்பத் பின்னே சுற்றிக் கொண்டிருந்த அப்சரா இருவரும் ஜோடியாக வருவதை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

சம்பத்திடம் அவர்கள் செல்லவும் மூவரையும் பின் தொடர்ந்து கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்து அவர்களுக்கு முன்னதாகவே வெளியே வந்தாள்.

இரவாகி இருந்தது. கடைவீதிகளில் சுற்றிக் கொண்டிருந்தனர் மூவரும். அங்கே விற்பனையாகிக் கொண்டிருக்கும் திண்பண்டங்களை ஆசையுடன் பார்ப்பதும் இவர்களை பின் தொடர்வதுமாக அப்சரா வந்து கொண்டிருந்தாள்.

சில பொருட்களை வாங்கி வீடு திரும்ப அவர்கள் முற்படும் நேரம் புருவம் சுருக்கி ஓரக்கண்ணால் பின்னால் முறைத்து பார்த்தான் சம்பத். அவனுக்கு யாரோ நம்மை பின் தொடர்கிறார்கள் என நன்றாக தெரிந்தது.

அதே நேரம் ஒரு பெண்ணின் கத்ததில் அவ்வீதியில் கூட்டம் கூடியது.

கர்ப்பவதி குழந்தை பேறு வலியில் துடித்துக் கொண்டிருந்தார்.

“தங்கராசு வண்டி எடுத்துட்டு வாடா” சம்பத் சத்தமிட, “அண்ணா..அம்மா விரதம்” என்றான் அவன்.

கூட்டம் பாராபட்சம் பார்க்காமல் நகர்ந்தது.

“அக்கா வலியில் துடிக்கிறாங்க. உதவ வாங்க” தாரணி பெண்களை அழைத்தாள்.

தாரா, இவள பத்தி ஊருக்கே தெரியும். புருசனே இல்லாமல் இப்படி வந்து நிக்குறா. இவளுக்கு உதவ போய் சாமிக்குத்தம் ஆகப் போகுது என்றார் ஒருவர்.

“அக்கா….” தாரணி சத்தமிட, சம்பத் கொஞ்சமும் சிந்திக்காது அந்த கர்ப்பிணிப் பெண்ணை தூக்கிக் கொண்டு, “தாரா சித் வீட்டுக்கு போங்க. நான் வந்துருவேன். பார்த்து போங்க” சொல்லி மருத்துவமனைக்கு ஓடினான்.

அவனது இச்செயலில் அவன் பக்கம் அப்சரா மனம் சென்றது. அவளும் அவன் பின்னே ஓடினாள்.

மருத்துவமனையில் அப்பெண்மணியை சேர்த்து விட்டு வெளியே நடந்தான். அவன் பின்னே அவளும் வந்தாள்.

அவன் நிற்க, விரைந்து மறைந்து நின்றாள்.

“உதட்டை கடித்து சென்று விட்டானோ?” மெதுவாக எட்டி பார்க்க, சம்பத் அவள் கையை பிடித்து வெளியே இழுத்தான்.

அப்சரா பயந்து அவளது குண்டு குண்டு விழிகளை உருட்டி அவனை பார்த்தாள்.

“யாரோ கொல்ல வந்திருக்கிறார்களோ?” எண்ணிய சம்பத் அவளது விழி உருட்டலிலும், அவளது கதை சொல்லும் விழிகளை ஆழ்ந்து பார்த்தான்.

அவன் கரங்கள் அவளது கரத்தை இறுக்க, அவன் கையை உதற முயன்றவாறு “வலிக்குது சார்” என்றாள்.

தன்னிலை வந்த சம்பத், “யார் நீ? யார் உன்னை அனுப்பியது? அந்த நிலனுக்கு வேண்டியவளா?” வினாக்களை வரிசையாக தொடுத்தான்.

“வலிக்குது சார்” அப்சரா விழிகளிலிருந்து கண்ணீர் உருண்டோடி கீழே விழுந்தது.

சம்பத் அலைபேசி அழைக்க, “அவள் தப்பக் கூடாது” என எண்ணி அவளது கையை விட்டு அவளை யாரும் பார்க்காதவாறு சுவற்றில் சாய்த்து அவனது ஒரு கையால் அணை போட்டு மறுபக்கம் நின்று அலைபேசியை எடுத்தான்.

அவன் செய்கையில் அப்சராவிற்கு மூச்சடைத்தது. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அலைபேசியில் புதிதாக சேர்த்த பயிற்சியாளனிடம் பேசிக் கொண்டிருந்தான் சம்பத்.

அவள் தப்பக் கூடாது என எண்ணிய சம்பத் அவளை கவனிக்க தவறி பேசிக் கொண்டிருக்க, அப்சரா மனதில் ஆழ பதியத் தொடங்கினான் சம்பத்.

அவளுக்கு தன் அண்ணன் சித்தார்த் எண்ணம் வர, சம்பத் அசந்த நேரம் தப்பி ஓட முயன்றாள். ஆனால் அவளது லேசான அசைவில் கண்டு கொண்ட சம்பத் அவள் அணிந்திருந்த உல்லனை பிடித்து இழுக்க, அவள் அதனை கழற்றி விட்டு அவனிடமிருந்த தப்பி ஓடி விட்டாள்.

கருப்பு நிற டாப்பும் ஜீன்ஸ் பேண்ட்டும் மயில் தோகை போல விரிந்திருந்த அவளது சிகையும்… பார்த்துக் கொண்டிருந்த அவனை, ஓடிக் கொண்டிருந்த அப்சரா திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.

இதுவரை அவளை தப்பிக்க விடக் கூடாது என இருந்தவன் அவளை கவனித்து அலைபேசியை அவ்விருட்டில் கீழே விட்டு இப்பொழுது தேடிக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் அவன் அலைபேசியை கண்டறிந்து கிளம்ப, மறைந்திருந்த அப்சராவும் அவனை மீண்டும் பின் தொடர்ந்தாள்.

அவர்கள் இருட்டாக இருக்கும் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

திடீரென ஆக்ரோசமாக பிளிரும் யானையின் சத்தமும், மரம் முறிந்து கீழே விழும் சத்தமும் கேட்க பைக்கை காட்டின் இருட்டு பகுதியில் நிறுத்தி மறைந்து கொண்டான் சம்பத்.

அவனை பின் தொடர்ந்து வந்த அப்சராவிற்கு அவன் செயல் புரியவில்லை.

யானை மரத்தை முறிப்பதை பார்த்து அதிர்ந்து அப்படியே வாயில் கை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

யானை அவள் பக்கம் திரும்பும் நேரம் சம்பத் அவளது வண்டியை அவ்விடம் விட்டு அவளை அலேக்காக தூக்கி வந்து மறைந்து நிற்க வைத்து அவள் வாயை அடைத்தான்.

யானை பிளிறியவாறு வண்டியை எட்டி உதைத்து கத்தியது. பயந்து அவனை இறுக பற்றி அவன் மார்பில் புதைந்து கொண்டாள் அப்சரா. அவன் கவனம் யானை மீதே இருந்தது. அது நகரவும் தான் அவள் தன் மார்பில் தஞ்சம் புகுந்ததை பார்த்து அவளை தள்ளினான்.

அப்சரா அவனை பார்த்து விட்டு வண்டியை கண்டு அதிர்ந்து நின்றாள்.

அப்சராவின் அலைபேசி ஒலித்தது.

சம்பத் அவளிடமிருந்து அதை பிடுங்க, “சார் நான் பேசிக்கிறேன். நான் இப்ப ஓட மாட்டேன்” கண்கலங்க கூறி அலைபேசியை காதில் வைத்து “அங்கிள்” என்றார்.

அம்மா சீக்கிரம் மருத்துவமனைக்கு வா. உன்னோட அப்பா இங்க தான் இருக்கார்.

ஹா..திகைத்து தன் மருண்ட விழிகளால் விழித்து உதடுகள் நடுங்க, “அங்கிள், சித்தி அத்தை?”.

முதல்ல வாம்மா. இல்லை உன்னோட அண்ணனும் மாட்டிப்பான்.

அங்கிள்….

என்னை வேற வேலையா போக சொல்லி இருக்காங்க. அதான் உன்னிடம் சொல்ல முடிந்தது. சீக்கிரம் போயிரும்மா சிவக்குமார் வைக்க, அழுகையுடன் “அங்கிள் அங்கிள்..” அழைத்தாள்.

சம்பத் புருவம் சுருக்கி அவளை பார்த்தான்.

வேகமாக தன் வண்டி அருகே சென்று பார்த்தவளுக்கு இதயத் துடிப்பு நின்றது போல உணர்ந்தாள்.

நடுவீதியில் அமர்ந்து அழத் தொடங்கினாள்.

சம்பத் சினமுடன் அவளிடம் வந்து, “நீ யாரு?” கேட்டான்.

விரைந்து அவனிடம் வந்து, “சார் அண்ணாவுக்கு மாதிரி எனக்கும் ஒரே ஒரு உதவி மட்டும் செய்யுங்களேன்!” கண்ணை துடைத்துக் கொண்டே கேட்டாள்.

“அண்ணாவா? நீ இந்த ஊர் பொண்ணா?”

“இல்ல சார்” அவளது கண்ணை மட்டும் உயர்த்தி அவனை பார்த்தாள்.

அந்த நிலனா?

“அய்யோ! அந்த பொறுக்கிலாம் இல்லை” தாழ்வான குரலில் உங்க வீட்ல இருக்கிற சித்தார்த் தான் என்னோட அண்ணா..

“வாட்? சித் உன்னோட அண்ணனா?” அதிர்ந்து கேட்டான்.

ஆமா சார், எனக்கு பசிக்குது. இப்ப நான் பிரச்சனையில் இருக்கேன்.

கொடைக்கானல் வரை என்னை டிராப் மட்டும் பண்றீங்களா? பயத்துடன் அவனை பார்த்தாள்.

“சித் சொன்ன பாப்பா நீ தானா?” மனதில் எண்ணிய சம்பத், “ஏன்? உங்களிடம் கார் இல்லையா? நீங்க யாரு? அவன் சொல்லவே மாட்டேங்கிறான்?” கேட்டான் சம்பத்.

சாப்பிட்டுகிட்டே பேசலாமா? மதியமும் நான் சாப்பிடலை. இப்ப மட்டும் வாங்கித் தாங்க. அடுத்த முறை வரும் போது நான் பணம் தந்துடுறேன்.

“அதெல்லாம் வேண்டாம் வா” அவளை தன் வண்டியில் அழைத்து சென்று ஓர் உணவகத்தின் முன் நிறுத்தினான்.

சர்வரை பார்த்து எக்குதப்பாக நிறைய ஆர்டர் செய்தாள் அப்சரா.

“நீ மட்டும் தான சாப்பிடணும். உன்னோட குடும்பமே வரப் போறாங்களா?”

வாயில் தோசையை திணித்து சார், “கண்ணு வைக்காதீங்க. நான் தான் பணம் தாரேன்னு சொன்னேன்ல்ல?”

“சாப்பிட்டு பேசலாமா?” அவன் புன்னகைத்து கேட்க, விழித்து அவள் பார்க்க விக்கல் வந்தது அவளுக்கு. அவளுக்கு தண்ணீர் ஊற்றி கொடுத்தான் சம்பத்.

குடித்து நன்றி கூறி விட்டு, “இப்பொழுதே சொல்றேன் சார். நேரமில்லை. இப்பவே நான் போகணும்” கண்கலங்கிக் கொண்டே உணவுண்ண, உணவு உள்ளே போக மாட்டேன் என்றது.

உஃப் காற்றை ஊதி, முதல்ல சாப்பிடு பார்த்துக்கலாம்..

“இல்ல சார்” மடமடவென நீரை அருந்தி விட்டு கூற ஆரம்பித்தாள்.

சுருக்கமாக அவளது வீட்டினரையும், அவள் தாயின் நிலை, அவர்களுக்கு சொத்து வேண்டும் என்று சித்தார்த்தை அடைத்து வைத்ததை கூறிய அவள் தன்னுடைய கஷ்டத்தை கூறவேயில்லை.

உன்னோட அப்பா யாரு?

“குரு குரூப்ஸ்” சேர்மன் குருமூர்த்தி அவள் சொல்லவும் சம்பத்திற்கு தூக்கி வாரி போட்டது. மனம் அடித்துக் கொண்டாலும் அப்சராவிடம் ஏதும் காட்டிக் கொள்ளவில்லை சம்பத்.

உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். அண்ணாவை காணோம்ன்னு கேட்ட போது அங்கிள் தான் சொன்னார். அவரை பார்க்க தான் வந்தேன்.

பட்டென சம்பத் கையை பிடித்து, “ரொம்ப தேங்க்ஸ் சார். அண்ணாவை பார்த்துக்கோங்க”.

அப்புறம் அவள் தயங்கி, “உங்களை போல அவனுக்கும் சண்டை போட கத்துக் கொடுங்களேன். இவன் எப்படியும் வீட்டுக்கு வரணும். இல்ல சொத்து அவங்க கைக்கு போச்சுன்னா பல பேர் குடும்பத்தை நாசமாகிடுவாங்க”.

என்ன சொல்ற?

சார், அப்பா எதுக்கு அமைதியா இருக்கார்ன்னு தெரியல. அவருக்கு தனா சித்தியை பிடிக்கும்ன்னு திருமணம் செய்தார்.

அதுமட்டுமல்ல.. அப்பாவோட தங்கை புருசன். எங்க மாமா சுதாகரன். நான் தான் எல்லாமே என்று கம்பெனியை அவர் இஷ்டத்துக்கு இழுத்துட்டு இருக்கார். அவர் தவறான வேலையெல்லாம் செய்கிறார். அவர் வெளிய போகணும்ன்னா என்னோட அண்ணா உரிமையுடன் உள்ள வரணும். அவருக்கு உங்களால பயிற்சி கொடுக்க முடியுமா?

சரி, உன் அண்ணன் தான் படிக்கலையே!

அவருக்கான கல்லூரி சான்றிதழ் வாங்கி வச்சிருக்கேன்.

வாட்?

ஆமா சார், என்னோட அத்தை மகன் சர்வா மாமா தான் அப்ளே செய்தார். நான் படித்த எல்லாமே அவருக்கு சொல்லி கொடுத்து படிக்க வைத்தேன்.

அண்ணா…ஜஸ்ட் மக்கப் செய்து தான் எக்ஸாம் எழுதினான். அதுவும் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக வீட்டினர் வெளியே சென்ற நேரம் தான் செய்தோம்..

மாமா உதவலைன்னா அண்ணாவிற்கு பேச கூட தெரியாமல் போயிருக்கும்.

அவனுக்கான “எம்.பி.ஏ” சான்றிதழ் மாமாவிடம் தான் இருக்கு.

“உன்னோட மாமாவிடமே உதவி கேட்கலாமே!”

வந்து…மாமா காதல் தோல்வியிலும் வீட்டினரின் இவ்வித செயலிலும் வெறுத்து பாரின் போயிட்டாங்க. அவரிடம் பேச கூட என்னால முடியல.

“உன்னோட மாமான்னு சொல்ற? காதலா?”

“சார் நான் பிரச்சனையை பற்றி பேசிட்டு இருக்கேன். இது வேறையா? மாமாவை நான் காதலித்தால் அத்தை….” நிறுத்தி அவனை பார்த்தாள்.

சொல்லு? உன்னோட அத்தை என்ன செய்வாங்க?

இல்ல சார், அவரை நான் காதலிக்க மாட்டேன். அண்ணா போல தான் அவர் எனக்கு. அவரும் என்னை அவர் தங்கை போல தான் பார்ப்பார்.

சரி, இப்ப நான் என்ன பண்ணனும்? நான் உங்களுக்கு உதவி என்ன ஆகப் போகுது?

சார், தாராவும் என்னோட அண்ணாவும் லவ் பண்றாங்க. எனக்கு தெரியும் என்றாள்.

உனக்கு எப்படி தெரியும்? எத்தனை நாளா பாலோ பண்ற?

“பாலோ பண்ண விட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க. நானே திருட்டு தனமாக வந்திருக்கேன்” பரோட்டாவை வாயில் திணித்தாள்.

காலை தான் வரவே செய்தேன். மருத்துவமனையிலிருந்து வந்ததில் பணம் கூட எடுத்துட்டு வரலை. அதான் மதியம் சாப்பிட கூட இல்லை வயிற்றை தடவினாள்.

அதான் இப்ப வெளுத்து வாங்குறியே!

சார், நீங்க எல்லாரிடமும் கோபமா பேசுனீங்க? என் மீது கோபம் வரலையா? நான் உங்களை ஸ்டாக் செய்திருக்கேன்.

சம்பத் புன்னகைத்து, மதியமிருந்து எனக்கு தோன்றியது பட் அது ஒரு பொண்ணுன்னு நான் எண்ணவில்லை.

கையை கழுவி விட்டு தயங்கி அவனை பார்த்தாள்.

அவன் பணத்தை கொடுத்து விட்டு “வா” அழைத்தான்.

உன்னோட நேம்?

அப்சரா சார்.

ஓ! சார் உன்னோட அடைமொழியா? கேட்டான்.

சார்…இழுத்தாள்.

கொடைக்கானல் இவளை அழைத்து சென்றால் சித், தாராவை பற்றி சிந்தித்து, அலைபேசியை எடுத்து பக்கத்து வீட்டு அங்கிளுக்கு அழைத்து, இன்று தாரா சித்துவை அவர்களை வீட்டில் பார்த்துக்க சொல்லி அவன் அப்சராவுடன் கிளம்பினான்.

அவன் பைக் அருகே வந்து அவள் கையை தேய்த்துக் கொண்டே நின்றான். அவளது உல்லன் சட்டையை அவளுக்கு போட்டு விட்டு, “ஏறு கிளம்பலாம்” என்றான்.

மெய் மறந்து நின்ற அப்சரா சுதாரித்து அவனுடன் பைக்கில் ஏறி கிளம்பினாள்.

தாரணியின் பைக்கில் ஏறிய சித்தார்த் கர்ப்பிணிப் பெண் கத்துவதையே திரும்பி திரும்பி பார்த்தான்.

“சித் நேரா உட்காரு” தாரணி பைக்கை கிளப்பினாள். இருவரும் வீட்டிற்கு வந்தனர்.

கதவை திறந்து தாரணி உள்ளே செல்ல, அவள் பின்னே சென்ற சித்தார்த் அவள் நிற்பதை கவனிக்காமல் இடித்து நின்றான்.

“சித், என்ன யோசனையுடன் இருக்க?” தாரணி தொலைக்காட்சியை போட்டு சோபாவில் அமர்ந்து பாடலை ஒலிக்க விட்டாள்.

தாரா, அவங்க வயிறு எதுக்கு பெருசா இருக்கு? அவங்களுக்கு வியாதியா? வலிச்சிருக்குமோ? அதான் அழுதாங்களா?

சித், அவங்க கர்ப்பமா இருக்காங்க. வலி வந்துருச்சு.

கர்ப்பமா?

ஆமா சித், அவங்க வயிற்றில் பாப்பா இருக்கு. அது வெளிய வரப் போகுது. அதான் வலி தாங்க முடியாமல் அழுதாங்க.

சித்தார்த் அவன் வயிற்றை தொட்டு பார்த்தான்.

சித், ஆண்கள் வயிற்றில் பாப்பா வராது. பொண்ணுங்க வயிற்றில் தான் பாப்பா வரும் அவள் புன்னகையுடன் கூறி, பாடலை முணுமுணுத்தாள்.

சித்தார்த் அவளருகே வந்து அமர்ந்து, அவள் வயிற்றில் கை வைத்தான்.

ஷாக் அடித்தது போல அவனை பார்த்தாள் தாரா.

“தாரா, உன்னோட வயித்துல்ல பாப்பா வருமா?” அவன் கையெடுக்காமல் அவளை பார்த்தான். அவனின் தொடுகையில் அவள் உணர்வுகள் கட்டுப்படுத்த முடியாமல் வெளியே வந்தது.

“தாரா” சித்தார்த் அவளை அழைக்க, அவன் கையை நகர்த்தி விரைந்து நகர்ந்து அமர்ந்தாள்.

“உன்னோட வயித்துல்லையும் பாப்பா இருக்கா. அப்பூ போல இருக்குமா?” அவன் வெகுளியாக கேட்டான்.

“இல்ல சித், நான் என்னோட அறைக்கு போறேன்” எழுந்தாள்.

அவள் கையை பிடித்து, “எதுக்கு உன்னோட வயித்துல பாப்பா இல்லை” அவனும் எழுந்தான்.

சித், கையை விடு.

தாரா சொல்லேன். பாப்பா எப்படி அவங்க வயித்துல மட்டும் இருக்கும்?

“சித்” அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, அவனின் அப்பாவியான அழகான பூனைக்குட்டி முகம் அவளை மேலும் கவர்ந்தது.

அது…தரையை பார்த்தவாறு அவங்க திருமணம் பண்ணிட்டாங்க..

திருமணம் பண்ணா பாப்பா வந்துருமா?

மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்து, நிலன் காட்டிய வீடியோ..தயங்கினாள்.

தப்பான வீடியோவா?

இல்ல இல்ல..அது தப்புன்னு சொல்ல முடியாது. ஒரு பொண்ணு ஒரு பையனை மட்டும் தான் திருமணம் செய்யணும். ஒருவனுக்கு ஒருத்தி தான் நம்ம கலாச்சாரம்.

திருமணம் முடிந்த அன்று நடக்கும் சம்பிரதாயம் தான் முதலிரவு. ஒரு பொண்ணும் ஆணும் காதலுடன் உயிரும் உடலுமாக இணைவாங்க. அந்த வீடியோ போல தான். ஆனால் ஒருவருக்கு ஒருவர் மட்டும். அந்த ஒருவருடன் மட்டும் தான்….. அவள் அவனை பார்த்தான்.

சித்தார்த் கவனம் தொலைக்காட்சியில் இருந்தது. அதற்கேற்றவாறு ரெமான்டிக் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டே சித்தார்த் தாரணியை இழுத்து அணைத்தான். உணர்வுகளின் பிடியில் சிக்குண்ட அவள் ஏதும் சொல்லாமல் இசைந்து கொடுத்தாள்.

தொலைக்காட்சியை அவன் பார்க்க, அவன் மார்பில் முகத்தை மறைத்துக் கொண்டாள் வெட்கத்தில் பெண்ணவள்.

அவன் அவள் இதழ்களை பார்த்துக் கொண்டே அவளை நெருங்கி இதழருகே செல்ல, தாரணி அவன் இதழ்களில் முத்தமிட, இருவரின் முத்தத் தேடல் நீண்டது.

அவன் தலையை அழுந்த இடையில் பதித்து கண்களை மூடினாள்.

அவன் மனம் மொத்தமாக காமமாக மாறியது. அதை தாரா உணரவில்லை. அவன் திடீரென அவளது ஆடைகளை கிழித்தான்.

அவள் பயந்து, “சித்” சத்தமிட்டு அவனை தள்ளினாள். அந்த வீடியோவில் மூழ்கிய அவனுக்கு கோபமும் வந்தது. அவளது கையை சேர்த்து தன் மொத்த பலத்தால் அடக்கினான்.

அதிர்ந்த தாரணி கண்ணில் கண்ணீர் வரவும் தான் நிலைக்கு வந்தான் சித்தார்த். அவளது கையை விடவும் அவள் முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.

தா..தா.. தாரா…வார்த்தைகள் தடுமாறி அவளை விட்டு நகர்ந்து அலைபேசியை தூக்கி எறிந்து சில்லு சில்லாக்கினான் சித்தார்த்.

தாரா அழுது கொண்டே இருக்க, “தாரா….அந்த வீடியோ” அவன் தடுமாற, தாரணி வேகமாக எழுந்து தன்னுடலை மறைத்து குளியலறைக்குள் ஓடினாள்.

அவளது கிழிந்த ஆடையை பார்த்து, “நான் பேட் பாய் ஆகிட்டேன். நிலன் போலவா?” அழுதான் சித்தார்த்.

ஆடையை மாற்றி விட்டு வந்த தாரா சித்தார்த் அழுவதை பார்த்து முறைத்து விட்டு நகர, அவளை பார்த்ததும் அவளை கட்டிக் கொண்டு,

“நான் பேட் பாய் ஆகிட்டேனா? என்னோட பேச மாட்டாயா? நிலனை போல போலீஸ்ல பிடிச்சி குடுத்திருவியா?” அழுதான்.

அவனை நகர்த்தி, என் மேலையும் தப்பு இருக்கு. உன்னை என்னுடைய மென்மையான சித்துவாக பார்த்து விட்டு, அந்த ஆக்ரோசமான முகத்தை பார்க்கவும் பயந்து விட்டேன். செய்யக் கூடாது தவறுன்னு சொல்லியும் செய்துட்ட… .  நீ பார்த்த வீடியோவை மறந்துரு சித்.

பாப்பா வேண்டாமா?

“வேண்டாம்” தலையசைத்து நகர்ந்தாள்.

அப்பொழுது பக்கத்து வீட்டு பெண்மணி சத்தம் கேட்டு அவளை கண்ணாடியில் பார்த்து சரி செய்து விட்டு வெளியே சென்றாள். அவள் பின்னாடியே சித்தார்த்தும் சென்றான். இருவரையும் அவர் வீட்டுக்கு அவர் அழைத்து சென்றார்.