காதல் 3

சித், என்ன பண்ணீட்டு இருக்க?

சம்பத்தின் கையை பிடித்து அவன் கேபினுக்கு அழைத்து சென்று அவன் பெற்றோரை பென்சிலால் வரைந்த ஓவியத்தை காட்டினான் சித்தார்த்.

அதையும் சுவற்றில் இருந்த அவன் பெற்றோரை புகைப்படமாக பார்த்த சம்பத் கண்கள் கலங்க சித்தார்த்தை இழுத்து கட்டி நன்றி கூறினான். பின் அவனை நகர்த்தி, “அழகா வரைஞ்சிருக்க?” பாராட்டினான்.

சித்தார்த் புன்னகைத்தான்.

இரவு இருவரும் வீட்டிற்கு வந்தனர். மதிய நேரம் போல் தாரணி சித்தார்த்திற்கு உணவை எடுத்து வைத்தாள். அவனும் சிந்தி உணவை உண்டு முடித்தான்.

“சித் வா நாம போகலாம்” சம்பத் சித்தார்த்தை அழைத்தான். தாரணி உணவை அவளுக்கு எடுத்து உண்ண அமர்ந்தாள்.

சித்தார்த் சம்பத்தை பார்த்துக் கொண்டே தொலைக்காட்சியை பார்த்தான்.

“டீவி பார்க்கணுமா?” தாரணி அவனிடம் கேட்டாள். அவன் ஏதும் கூறாமல் சம்பத்தையும் அவளையும் பார்த்தான்.

அண்ணா, நீ ரெஸ்ட் எடு. அவன் சிறிது நேரம் டீவி பார்த்துட்டு வருவான். நான் உறங்க செல்லும் போது அவனை உன்னறையில் விட்டு செல்கிறேன்.

புருவம் உயர்த்தி சம்பத் சித்தார்த்தை பார்த்தான்.

தாரணி தொலைக்காட்சியை போட்டு விட்டாள். அதில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. வேகமாக உணவு மேசையிலிருந்து சித்தார்த் தொலைக்காட்சி முன் அமர்ந்தான். அவள் புன்னகையுடன் நகர்ந்து சம்பத்திடம் சென்றாள். சித்தார்த் இருவரையும் ஒரு முறை கவனித்து விட்டு தொலைக்காட்சியை கவனிக்கலானான்.

அண்ணா, அவன் வருவான். நீ ரெஸ்ட் எடு. நாளை நம்ம தெருக்கோவில் திருவிழா சம்பத்திற்கு நினைவு படுத்தினாள்.

“ம்ம்! ஏற்கனவே நான் மருத்துவமனைக்கு விடுப்பு சொல்லீட்டேன் தாரா. நம்ம ஜிம்மை நிலன் பார்த்துப்பான். நீ வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் உறங்க செல்” சொல்லி சம்பத் சித்தார்த்தை பார்த்துக் கொண்டே நகர்ந்தான்.

தாரா இடத்தை ஒதுக்கி சமையலறை சென்று அவள் வேலையை தொடர்ந்தாள். தன் வியர்வையை துடைத்து விட்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த் அருகே வந்து அமர்ந்தாள்.

சித், உனக்கு சாங்ஸ் பிடிச்சிருக்கா?

சித்தார்த் ஏதும் கூறாமல் அவள் தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் அதிர்ந்து அப்படியே இருந்தாள். நிலன் கூறியது போல அவளது முகத்தை தன் விரல்களால் அளந்து கொண்டே அவளது இதழில் விரல் வைத்தான்.

அவனின் புதுவித தொடுகையில் விழிபிதுங்கி அவனை பார்த்துக் கொண்டிருந்த தாரணி அவனது விரல் இதழை கடந்து கீழே செல்லவும் சுதாரித்து அவன் விரலை தட்டி விட்டு அவனை தள்ளினாள்.

சித்தார்த் பயந்து அவளை பார்த்தான்.

முகத்தை தாழ்த்தி கண்ணீர் வடிய, “என்ன பண்ற சித்?” கேட்டாள்.

“நானும் உன்னை காதலிக்கணும்ல்ல? அதான் நிலன் சொன்னது போல செய்தேன்” நேரடியாகவே சொன்னான்.

நிலனா?

ஆமா. நீ என்னை திருமணம் செய்யணும்ன்னு சொன்னேல? என்று நிலனிடம் பேசியதை கூறிய சித்தார்த் அவன் கூறியதை சொல்லவும் அருவருத்து போனாள் தாரணி.

சம்பத் வந்த பின் நிலன் அகன்றிருப்பான். சில மணி நேரம் கழித்து சித்தார்த் நிலனை சந்தித்து பேசி இருப்பான். அப்பொழுது நிலன் அவனிடம்…உடலுறவு வீடியோவை காட்டி இது போல செய். தாராவுக்கு உன்னை இன்னும் பிடிக்கும் என கூறி இருப்பான்.

அவன் கையிலிருந்த அலைபேசியை பார்த்து, “இது யார் உனக்கு வாங்கி கொடுத்தது?” சினமுடன் கேட்டாள்.

இது நிலனுடையது. அவன் தான் எனக்கு பிரசன்ட் பண்ணான்..

சம்பத் அறையை பார்த்து விட்டு, சித்தார்த் கையை பிடித்து தனியே அழைத்து சென்று அந்த அலைபேசியை கீழே போட்டு உடைத்தாள் தாரணி.

தாரா, எனக்கு அது வேணும்..

சித், இட்ஸ் பேடு திங்..

“நீயும் சம்பாவும் வச்சிருக்கீங்க” அவன் குழந்தை போல கண்ணீருடன் கோபமாக கேட்டான்.

நிலன் சொல்லி கொடுத்த எல்லாமே தப்பு.

எனக்கு உன்னை பிடிக்கும். காதலிக்கிறேன். திருமணம் கூட அண்ணா செய்து வைப்பான். ஆனால் நீ இப்ப செய்தது தெரிந்தால் உன்னை கொன்னே போட்ருவான். எனக்கு உன்னை பிடிக்க முத்தமோ வேறெதுவும் தேவையில்லை. பாசம் போதும். அவன் சொன்ன எல்லாமே மோசமானவங்க செய்றது. அவங்க எல்லாரும் தவறானவர்கள்.

அப்ப இதெல்லாம் என்னது? அவன் வெகுளியாக கேட்க,

ஒரு நிமிடம் தடுமாறியவள், “இது காதலிப்பவர்கள் திருமணம் செய்த பின் இருவருக்குள்ளும் நடக்கும் சீக்ரெட். நீ அந்த நிலனோட பேசாத!” அவன் முகபாவனையை ஆராய்ந்தாள்.

இதெல்லாம் இப்ப செய்யக் கூடாதா? நிலன் தவறானவனா?

ம்ம்! இது ரொம்ப தவறு என்று சித்தார்த் கையை பிடித்து, “யாரையும் முழுசா நம்பாத சித்”.

நீ?

நான்….

நீ இங்கிருந்து போகலைன்னா. நான் உன்னுடன் எப்போதும் இருப்பேன்.

“நாம திருமணம் பண்ணிக்கலாமா?” அவன் கேட்க, புன்னகையுடன் பண்ணலாம். அதுக்கு நேரம் வரணும். முதல்ல நீ இந்த உலகத்தை பற்றி முழுதாக அறிந்து கொள்ளணும். உனக்கான மரியாதையை தேடிக்கணும். இதுக்கு மேல என்னிடம் எதுவும் கேட்காத. தூக்கம் வருது. நீ அண்ணா அறைக்கு போ. நிலன் பேசியதை அண்ணாவிடம் சொல்லாத. அவனை நான் பார்த்துக்கிறேன் என்றாள்.

“முத்தம் கொடுக்கலாமா? அம்மா எனக்கு கொடுப்பாங்க” அவன் கேட்க, அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “போ தூங்கு” அவனை சம்பத் அறைக்கு அழைத்து செல்ல, சித்தார்த் தாரா எதிர்பாராத நேரம் அவள் கன்னத்தில் முத்தமிட்டு சம்பா அறைக்குள் சென்று அவனை கட்டிக் கொண்டு படுத்தான்.

சம்பா உறங்கவில்லை. அவன் அனைத்தையும் கேட்டு விட்டான். நிலன் மீது கொலைவெறியில் இருந்தவன் சித்தார்த்தை கவனிக்கும் எண்ணமில்லாமல் உறங்காமல் அவனை விட்டு எழுந்து வெளியே சென்று படுத்துக் கொண்டான்.

கதிரவன் உதிக்கும் முன் எழுந்த சம்பத் சித்தார்த் உறங்கும் அறையை வெளியே இருந்து பூட்டி விட்டு அலைபேசியுடன் வெளியே சென்றான்.

சற்று நேரத்தில் விழித்த சித்தார்த் அருகே சம்பத் இல்லாமல் இருப்பதை கண்டு விரைந்து கதவை திறக்க முயன்றான். சம்பத் தான் அவனறைக்கதவை பூட்டி சென்றிருந்தானே!

இவ்வுலகம் சுழல தலையை பிடித்து கதவருகே அமர்ந்தான் சித்தார்த்.

தாரா அப்பொழுது தான் விழித்து வெளியே வந்தாள்.

“அண்ணா இன்னுமா எழவில்லை” கொண்டையிட்டுக் கொண்டே சம்பத் அறையை திறந்தாள்.

சித்தார்த் கதவருகே சுருண்டு தரையில் கிடந்தான்.

சித் என்னாச்சு? அவள் பதறி, “அண்ணா….” கத்தினாள்.

தாரணியின் குரலில் சித்தார்த் கண்களை லேசாக திறந்தான்.

தாரா…

சித், என்ன செய்யுது? அண்ணா எங்க? கேள்விகளை அடுக்கினாள். அவள் மண்டியிட்டு அவனிடம் பேச, அவளை பாய்ந்து இறுக கட்டிக் கொண்டான் சித்தார்த்.

ஏதோ நினைவில் அவளை நகர்த்தி வேகமாக மாடிப்படியில் ஏறினான்.

அவள் புரியாமல் விழித்து, “சித் எங்க போற?” அவன் பின்னே ஓடினான்.

மொட்டை மாடியின் உச்சியில் நின்று சித்தார்த் குதிக்க அவனது சட்டையை பின்னிருந்து இழுத்தாள் தாரணி.

அவன் முழு உடலுடன் அவள் மீது சாய, இருவரும் கீழே விழுந்தனர். அவனது எடை தாங்க முடியாமல் தாரணி கத்தி விட்டாள். சித்தார்த் பயந்து ஓரமாக அமர்ந்தான்.

நிலன் அவன் வீட்டில் இல்லாது போக சம்பத் மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்தான். மாடியில் தாரணி சத்தம் கேட்டு வேகமாக படிகளில் ஏறினான்.

சம்பத் சினமுடன், “என்னடா பண்ண?” சித்தார்த்தை அடித்தான்.

சினத்தில் சம்பத் அடித்த அடியில் சுவற்றில் இடித்து சித்தார்த்திற்கு இரத்தம் வந்தது.

“அண்ணா..” அழைத்த தாரணி, அவன் மீது தவறில்லை. நான் தான் கத்தி விட்டேன்.

சித்தார்த் சம்பத்தை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சம்பத் தன் தங்கையை பார்த்து விட்டு, சித்தார்த் அருகே செல்ல அவன் நகர்ந்தான்.

சித்…. தாரணி எழுந்து நடந்ததை கூறினாள்.

சம்பத் தன் தலையை தட்டிக் கொண்டே அவனருகே வந்து அமர்ந்தான்.

எதுக்கு குதிக்க போன?

“அவங்க தான் குதிக்க சொன்னாங்க. அது போல இருந்தது” ஏதேதோ உலறினான். அவனுக்கு கண்ணீர் வந்தது.

சம்பத் அவனை தன் பக்கம் திருப்பி, “அழாத..சாரி..நீ பயப்படுவன்னு தெரியாம பூட்டிட்டு போயிட்டேன்”.

தாரா, நீ எங்கும் வர வேண்டாம். ஓய்வெடு.

அண்ணா, ஈவ்னிங் கோவிலுக்கு வாரேன்.

ம்ம்! நீ ஓய்வெடு. வா சித் என சித்தார்த்தை அவனுடன் அழைத்து சென்றான்.

மருத்துவமனையில் காலையில் விழித்த அப்சரா டிரைவர் சிவக்குமாரை தான் பார்த்தாள்.

“அங்கிள், அண்ணா…” எழுந்து அமர்ந்தாள் அப்சரா.

“ரெஸ்ட் எடும்மா” அவர் அவளை படுக்கையில் சாய்க்க, அங்கிள் எனக்கு அண்ணாவை பார்க்கணும். அவனுக்கு ஏதும் ஆகி இருக்குமோன்னு பதட்டமா இருக்கு.

அம்மா, நீங்களே மருத்துவமனையில் சேர்ந்து இரு நாளாகிடுச்சு. ஓய்வெடுங்கம்மா..

“அங்கிள், அண்ணா பற்றி தெரிந்தும் நீங்க என்னை பத்தி பேசிட்டு இருக்கீங்க? நான் நல்லா தான் இருக்கேன். இப்பவே அவனை நான் பார்க்கணும்” அழுதாள்.

சுற்றும் முற்றும் பார்த்த சிவக்குமார், “அவருக்கு ஒன்றுமில்லைம்மா. பயப்படாதீங்க”..

அங்கிள்..

அன்றிரவு உணவை சின்னம்மா அய்யாவுக்கு கொடுத்திருக்காங்க. அவர் சாப்பிடலை. அதனால் அவர் மீது கோபத்துல்ல அடிச்சிட்டு ஏதோ சொல்லி இருக்காங்க. சித்தார்த் அய்யா அவரறையிலிருக்கு குதிக்க முற்பட்டார்.

கீழிருந்த நான் அவரை பார்த்துட்டேன். விரைந்து பஞ்சுப் பொதிகளை அவர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு கீழே அடுக்கி மறைந்து கொண்டேன். அவர் பொதிகளில் விழுந்து சின்னம்மாவை பார்த்து விட்டு ஓடினார்.

மேலிருந்து அவர் தப்பி செல்வதை பார்த்த சின்னம்மா அலைபேசியில் யாருடனோ பேசினார். எனக்கு சந்தேகமாக இருந்தது. அய்யாவை பின் தொடர எண்ணினேன். அதற்குள் அவர் காணாமல் போயிட்டார்.

தேடினேன்…. பக்கத்தில் தான் இருக்கார்.

பூம்பாறையில் தான் பார்த்தேன்.

காரில் சென்ற நான் உதவ எண்ணிய போது அவர் ஓரிடத்தில் மறைந்து நின்றார். ஒருவன் அவர் என வேறொருவனை பள்ளத்தில் தள்ளி விட்டான். அவர் இறந்து விட்டதாக எண்ணி அனைவரும் சென்று விட்டனர். நான் அருகே சென்று பார்த்த போது மறைந்த இடத்தில் அவர் இல்லை.

சிந்தனையுடன் காரை எடுத்து ஓட்டிக் கொண்டிருந்தேன். அய்யா மீது தெரியாமல் இடிக்க சென்று விட்டேன்.

“அய்யோ! என்னாச்சு அண்ணாவுக்கு?”

அவரை ஒரு பொண்ணு காப்பாற்றியது. நான் காரை நிறுத்தாமல் அவ்விடம் விட்டு தள்ளி வந்து மறைந்து அவர்களை பார்த்தேன்.

ஐயா, ரொம்ப பயந்து இருந்தாங்க. இனி அவரை பற்றி நாம கவலைப்பட வேண்டாம். பாதுகாப்பான வீட்டில் தான் அவர் இருக்கார். அவரை இங்கு அழைத்து வந்தால் மறுபடியும் கஷ்டப்படுவார்.

அந்த பொண்ணு யாருன்னு விசாரிச்சீங்களா அங்கிள்?

ம்ம்! அந்த பொண்ணு பெயர் தாரணி. அவளோட அண்ணா சம்பத். மருத்துவன். ஜிம் வச்சி நடத்திட்டு இருக்கான். முரடனாம். ஆனால் நல்லவன். அவன் வீட்டில் தான் தற்போது ஐயா இருக்கார்..

அங்கிள், நான் அண்ணாவை பார்த்துட்டு வரவா?

சிவக்குமார் தயங்கினார்.

என்னாச்சு அங்கிள்? நான் பார்த்துட்டு வந்திருவேன்.

அது கஷ்டம்மா..

எப்படி போவீங்கம்மா? அதான் சின்னம்மா உங்களை விட மாட்டாங்களே!

மருத்துவரை பேச வைத்துக் கொள்ளலாம் அங்கிள். நான் ஓய்வெடுக்கணும். யாரும் தொந்தரவு செய்யக் கூடாதுன்னு சொல்ல வச்சிட்டு என்னை இப்பவே அங்க விட்டு நீங்க வந்துருங்க.

நான் அண்ணா பக்கம் போகாமல் தூரம் நின்று பார்த்துட்டு வந்துடுறேன். என்னோட ஸ்கூட்டி இருக்குல்ல?

ம்ம்! சரிம்மா..சீக்கிரம் வந்துருங்கம்மா. உங்க சித்தி, அத்தையை சமாளிக்கவே முடியாது. அதுவும் அந்த பொண்ணு இருக்காளே!

“சரி அங்கிள், மருத்துவரை பார்த்து பேசிட்டு விசயத்தை வீட்ல சொல்லீட்டு வாங்க” அவருக்காக காத்திருந்தாள் அப்சரா.

அவர் புன்னகையுடன் கட்டை விரலை உயர்த்த, சிறு புன்னகையுடன் விரைந்து அவரிடம் வந்தாள். இருவரும் பூம்பாறை செல்ல தயாரானார்கள்.

சிவக்குமார் ஓர் சிறு பொட்டிக் முன் ஸ்கூட்டியை நிறுத்தி அப்சரா அணிய ஆடை வாங்கிக் கொடுத்தார்.

“தேங்க்ஸ் அங்கிள்” என்று பிளாக் டாப்பும், ஜூன்ஸ் பேண்ட் வித் உல்லன் கோர்ட் அவளை முழுதாக மறைத்திருக்க முயல் குட்டிக்கு ஆடை என்பது போல வந்தாள். அவர் புன்னகையுடன் “அழகா இருக்கும்மா” என்றார்.

“தேங்க்ஸ் அங்கிள்” புன்னகையுடன் அவருடன் கிளம்பினாள்.

சிவக்குமார் பூம்பாறையில் அப்சராவை இறக்கி விட்டு அவர் பேருந்தில் பயணித்தார்.

சம்பத் வீட்டை பார்த்தவாறு தூரத்தில் நின்று கொண்டிருந்தாள் அப்சரா. அவள் அண்ணன் சித்தார்த் சம்பத் பைக்கிலிருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றான்.

சம்பத் மட்டும் ஏதோ சிந்தனையுடன் அலைபேசியை பார்த்து விட்டு, பக்கத்து வீட்டு பெண்மணி வீட்டிற்கு சென்றான்.

சித்தார்த் அமைதியாக அவனறைக்கு செல்ல, “சித்” தாரணி அழைப்பில் நின்று அவளை பார்த்தான்.

சாப்பிடலையா? உனக்கு பசிக்கலையா?

சித்தார்த் தலை கவிழ்ந்து “சாரி” என்றான்.

எதுக்கு சாரி? அவன் தோளில் அவள் கை வைக்க, அவன் அவளை அணைத்து அழுதான்.

சித்…..

எனக்கு பாப்பா பாக்கணும் என்றான்.

அவனை நகர்த்தி அவங்க பெயர் என்ன?

அப்பூ…

பெட் நேம் மாதிரி சொல்ற?

எல்லாரும் அப்படி தான் கூப்பிடுவாங்க..

முழுபெயர் என்ன?

அப்சரா..

வாவ்! நேம் அழகா இருக்கு. அவங்களும் அழகா இருப்பாங்களா?

ம்ம்!

அவங்ககிட்ட சொல்லீட்டு வந்தீயா?

“இல்ல, அவங்க அவள அடிப்பாங்க. அவ அழுதுட்டு இருப்பா” சித்தார்த் அழுதான். உள்ளே வந்து கொண்டிருந்த பெண்மணியும் சம்பத்தும் நின்று விட்டனர்.

சம்பத் சித்தார்த்தை நெருங்கி அவன் கையை பிடித்து அவனறைக்கு இழுத்து சென்றான்.

“அண்ணா…” தாரணி பின்னே செல்ல, சம்பத் கதவை அடைத்தான்.

சற்று நேரத்தில் சம்பத் மட்டும் சினமுடன் வெளியே வந்தான்.

அண்ணா..சித்..

அவளை முறைத்து விட்டு சம்பத் வெளியேற, அப்பெண்மணி சம்பத் பின்னே வந்தார்.

“ஆன்ட்டி நீங்க கிளம்புங்க..” அவன் சொல்லிக் கொண்டிருக்க, தாரணி சம்பத்தை நெருங்கி, “அவனை அடிச்சியா?” கேட்டாள்.

உள்ளே பார்த்தவன், “இல்லை. நான் எதுக்கு அடிக்கணும்? அவனுக்கே அவன் தங்கை மீது அக்கறை இல்லை” சினமுடன் அவன் பைக்கை விரட்டினான்.

தூரமிருந்து இவர்களை கவனித்துக் கொண்டிருந்த அப்சரா சம்பத்தின் கோபத்தை பார்த்து அவனை பின் தொடர தொடங்கினாள்.

யாருமில்லா ஓரிடம் சென்று மரத்தில் தன் கைகளால் ஓங்கி குத்தினான். திகைத்து அப்சரா அவனை பார்த்தாள். அவன் முன் சிலர் வந்தனர். அவனை சுற்றி நின்றனர். மேலும் திகைத்தாள் அப்சரா.

“நீ என்ன பெரிய இவனாடா? எங்க அண்ணனையே அடிச்சிருக்க?” அடிக்க வந்தவனை ஒரே அடியில் கீழே விழ வைத்தான் நம் மருத்துவன்.

உன்னோட அண்ணன் பொறுக்கின்னு தெரியாம நான் வேலைக்கு எடுத்துட்டேன். அவனுக்கு கொடுத்ததை விட பல மடங்கு வாங்கி அவனுக்கு பாதிய கொடுத்திருங்க..

“நீ கொடுப்பது இருக்கட்டும். இப்ப எங்க அண்ணா எங்க இருக்காருன்னு நினைக்கிற?” சத்தமாக ஒருவன் சிரித்தான்.

அவன் சட்டையை கொத்தாக பிடித்த சம்பத், “என்ன சொல்றீயோ நேரடியா சொல்லு?” சீறினான்.

என்னோட அண்ணா ரொம்ப நாளா உன்னோட தங்கச்சி மேல கண்ணு வச்சிருந்தான். அவ திடீர்ன்னு ஒருத்தன் வரவும் யாரையும் பார்க்காத அவள் அவன் பக்கம் சாய்றால்ல. இனி அவள் எண்ணினாலும் அவன் அவளை சீண்ட கூட மாட்டான்..

“என்னடா சொல்ற?” கர்ஜித்தான் சம்பத்.

“உன்னோட தங்கச்சி இப்ப எங்க அண்ணன் நிலனுக்கு விருந்தாகப் போறா” சொன்ன நிமிடம் அவன் கழுத்தை பிடித்து வெறியுடன் அவனை தூக்கி எறிந்தான்.

வியர்த்து வழிய அவன் கோபத்தை பார்த்த அப்சராவிற்கு அவர்கள் பேசியதில் திகைத்து எல்லாரையும் பார்த்தாள்.

எல்லாரையும் நொடிக்குள் வீழ்த்தி பைக்கை விரைந்து எடுத்தான் சம்பத். அப்பொழுதும் அவனை பின் தொடர்ந்தாள் அப்சரா.

அவள் தூரமாக நின்று கொள்ள, சம்பத் வீட்டிற்குள் சென்றான்.

அப்பெண்மணி மயங்கி இருந்தார். தன் தங்கையின் கதறலை கேட்டுக் கொண்டே வீட்டினுள் நுழைந்த சம்பத், கைகளை மடித்து கதவை குத்திக் கொண்டிருந்த சித்தார்த்தை பார்த்து அவனை தள்ளி விட்டு வேகமாக தன் தோள்ப்பட்டையால் கதவை இடித்து தள்ளினான்.

படுக்கையில் தாரணியிடம் எல்லை மீறிக் கொண்டிருந்த நிலனை பிடித்து தள்ளி விட்டு அவளது தாவணியை எடுத்து கொடுத்து விட்டு நிலனை இழுத்தான் சம்பத்.

இருவருக்கும் இடையில் சரியான சண்டை நடக்க, தாவணியை மேலே போட்டு அழுது கொண்டே வந்த தாரணி சித்தார்த்தை அணைத்து அழுதாள். அவனும் அவளை அணைத்து அழுது கொண்டே “சாரி சாரி சாரி சாரி…” சொல்லிக் கொண்டே இருந்தான்.

லேசாக வீட்டினுள் எட்டி பார்த்த அப்சரா தன் அண்ணன் அவளை அணைத்து நிற்பதை பார்த்து அதிர, அப்பெண்மணி லேசாக கண்ணை விழிக்க வெளியே ஓடி விட்டாள் அப்சரா.

பக்கத்து வீட்டு பெண்மணி எழுந்து இருவரையும் பார்த்து தாரணியிடம் வந்து அவள் ஆடையை சரி செய்து விட்டு அவளை சம்பத் அறைக்கு அழைத்து சென்றார்.

சம்பத் நிலனை இழுத்து வீட்டிற்கு வெளியே தள்ளி சித்தார்த்தை அழைத்து கத்தினான்.

சித்தார்த் வெளியே வர, “இவனை அடிக்கிற. அடிடா” சத்தமிட்டு அவன் நகர, சித்தார்த்திற்கு தாரணியின் கத்தல் கேட்டுக் கொண்டே இருக்க முகத்தை உர்ரென வைத்து அவனிடம் வந்து அவனை அடித்தான்.

நிலன் நக்கலாக சித்தார்த்தை பார்த்து அவனும் இவனை அடித்தான். நிலனோ பாடி பில்டர். சித்தார்த் மென்மையான மனமும் உடலும் கொண்டவன்.

திகைத்து பார்த்த அப்சரா சித்தார்த்தை அவன் அடிக்கவும் அழுது கொண்டே சம்பத்தை பார்த்தாள். அவன் இருவரையும் பார்த்துக் கொண்டே நின்றான்.

“அண்ணா, என்ன பண்ற?” வேகமாக தாரணி அவர்களிடம் செல்ல, அவள் கையை பிடித்து சித்தார்த்திற்கு நேராக நிற்க வைத்தான் சம்பத்.

யாருக்கும் புரியவில்லை. சித்தார்த்திற்கு ஏற்கனவே அவளது அழுகை தொந்தரவு செய்ய இப்பொழுது அவளை பார்க்கவும் அவனை மீறியும் கோபம் வந்தது.

இப்பொழுது நிலன் அடிக்க வரும் போது அவன் கையை பிடித்து தள்ளி அருகேயிருந்த பெரிய கல்லை தூக்கி அவன் மீது போட சென்று விட்டான் சித்தார்த்.

“சித் கீழ போடு” தாரணி அவனது கையை பிடித்தாள். அப்சரா சித்தார்த்தை விழிவிரித்து பார்த்தாள்.

போலீஸ் அவ்விடம் வந்து நிலனை இழுத்து செல்ல, அவன் சம்பத்தை பார்த்து, “உன்னையும் இவனையும் சும்மா விட மாட்டேன்டா” கத்திக் கொண்டே சென்றான்.

“முதல்ல போடா” சம்பத் அவனிடம் கத்தி விட்டு சித்தார்த் அருகே வந்து அவன் தோளை தட்டி விட்டு, தாரா உன்னை சித்திற்கும் பிடிச்சிருக்கு. திருமணம் இப்ப வேண்டாம்…

அவன் வேலை ஏதாவது பார்க்கட்டும். அவனால முடியும். என்னடா பண்ணலாம்ல்ல? சம்பத் கேட்டான்.

செய்வேன்..

“அண்ணா…ஈவ்னிங்….” சம்பத் கையை பார்த்து, என்னாச்சு அண்ணா? கேட்டாள்.

“ஒன்றுமில்லை ஈவ்னிங் போகலாம்…”. அவன் வெளியே சென்று விட, மகிழ்ச்சியுடன் அவனை பின் தொடர்ந்தாள் அப்சரா.