இறை வழிபாட்டை முடித்து அவர்களை அழைத்து வரலாம். மதியத்தின் பின் தயாரானாள் போதுமே! அப்சராவை பார்த்தான்.
ம்ம்!!
கோவிலில் தாரணி சித்தார்த்தையும் பார்த்தனர். சர்வா யாதவும் உடன் வந்திருந்தனர்.
சர்வா தாரணியை கண்டு புன்னகைக்க, அவள் அவனை முறைத்து விட்டு தன் அண்ணனை தனியே இழுத்து சென்றாள். சர்வா முகம் வாடியது. இவர்கள் அனைவரையும் கவனித்துக் கொண்டிருந்தான் யாதவ்.
அண்ணா, இவங்க தான் சித்துவின் குடும்பமா? அவன் யாருன்னு உனக்கு தெரிந்தும் மறைச்சிருக்க? சினமுடன் கேட்டாள்.
தாரா, நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.
“என்னால முடியாது. சித்துவை என்னால பார்த்துக்க முடியாது. நீயே அழைச்சிட்டு போ” சீறினாள்.
கையை கட்டி அவளை ஆழ்ந்து பார்த்தான் சம்பத்.
“நான் நிஜமா தான் சொல்றேன்” தொண்டை வறண்டது தாரணிக்கு.
உன்னுடைய காதல்?
வேண்டாம்…
சித் உன்னை விட்டு இருப்பான்னு நினைக்கிறியா இல்லை உன்னால் தான் முடியுமா?
கண்கலங்க திரும்பி சித்தார்த்தை பார்க்க, எல்லாரும் அவர்களை தான் பார்த்தனர்.
“உன்னுடைய காதல் உண்மை தானா?” தாரணி சம்பத்திடம் எதிர் கேள்வி தொடுத்தாள்.
“இல்லை” தலையை ஆட்டினான்.
அண்ணா தப்பு பண்ற. ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளையாடாத.
நானா? அப்சா என்னோட மனைவி. எந்த நிலையிலும் அவளை கை விட மாட்டேன்.
அவளின் தந்தை தான் நம்ம வந்துவை…
“இல்லை” தலையசைத்தான்..
என்ன?
அவர் ஏதோ காரணத்திற்காக தான் சிறைக்கு அவராகவே சென்றிருக்கிறார்.
என்ன சொல்ற? அப்ப இவங்க குடும்பம் இல்லைன்னு சொல்றீயா?
அது தெரியவில்லை.
சித்தார்த் அப்சராவை பார்க்கவும் அவளை அணைத்துக் கொண்டான்.
“அண்ணா நானும் அவரும் திருமணம் செய்து கொண்டோம்” என்றாள்.
யாதவை பார்த்தான் சித்தார்த். யாதவ் அருகே வர சித்தார்த் விலகினான்.
அண்ணா, நான் உங்கள் தம்பி..
“இல்லை” தலையசைத்தான் சித்தார்த்.
யாதவ் கண்ணீருடன் அவனை பார்க்க, சர்வா அவன் தோளில் கை வைத்தான்.
“மாமா…..
“சித்….” சர்வேஸ்வரன் புன்னகைக்க, அவனை அணைத்துக் கொண்டான் சித்தார்த்.
“அந்த பொண்ணு யாரு?” தெரியாதது போல தாராவை பற்றி கேட்டான் சர்வா.
தாரா. நாங்களும் திருமணம் பண்ணிக்கப் போறோம்.
திருமணமா? சர்வா அதிர்ந்தான்.
அப்சராவை பார்த்து, “தாரா என்னோட பேச மாட்டேங்கிறா?” உதட்டை பிதுக்கினான் சித்தார்த்.
ஏன்? நீ என்ன செஞ்ச? அப்சரா கேட்டாள்.
நான் எதுவுமே செய்யல. நேற்றிலிருந்து நான் பக்கம் சென்றால் அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொள்கிறாள் என்றான் வருத்தமுடன். சர்வாவிற்கு அதன் காரணம் நன்றாக புரிந்தது.
மாப்பிள்ள கிட்ட பேசுறேன். அவள் பேசுவாள் என்றான் சர்வா.
தாரணி கரத்தை பற்றிய அப்சரா, “அண்ணாவை பார்த்துக்கோ. அப்புறம் ஈவ்னிங் ரிசப்சனுக்கு வாங்க” அவள் தயங்க, “சரி அண்ணீ” சித்தார்த் கையை பிடித்து இழுத்து சென்றாள். அவன் நால்வரையும் பார்த்துக் கொண்டே சென்றான்.
வழிபாட்டை முடித்து பாட்டி தாத்தாவுடன் வீட்டிற்கு வந்தனர்.
ரிசப்சனுக்கு வேலைகள் நடந்து கொண்டிருந்தது. சர்வாவும் யாதவும் அதனை கவனிக்க சென்று விட்டனர்.
ஏற்கனவே சர்வா தாத்தா பாட்டி செல்லம். இப்பொழுது அவர்களின் மனதில் சம்பாவும் இடம் பிடித்தான். மனமார இருவரும் வாழ்த்தினார்கள்.
அவர்களை கண்டவுடன் அம்மா என்று ஒப்பாரியுடன் ஜெயா வந்து நிற்க,
அவரை தவிர்த்த பாட்டி…. “பேரான்டி நல்லது நடக்குற இடத்துல இவங்க இருக்காங்க?” கேட்டார்.
“நல்லது இருக்கும் இடத்தில் தானே கெட்டதும் இருக்கும் காந்தி” தாத்தா சபேசன் ஜெயாவை முறைத்தார். தனலட்சுமி அவர்களை மனதில் திட்டி பல்லை காட்டியவாறு, “வாங்க அத்தை மாமா” அழைத்தார்.
“ம்ம்! ஏற்பாடெல்லாம் எப்படி போகுது?” தாத்தா கேட்டுக் கொண்டே அவரின் மூத்த மருமகள் வசந்தியை தேடினார்.
“தாத்தா அம்மா அங்க இருக்காங்க” அவர் கரத்தை பிடித்து அப்சரா செல்ல, அவர்களுடன் சம்பா, பாட்டியும் சென்றனர்.
“இந்த கிழத்துக்கு திமிறப் பாறேன்” தன் தந்தையை திட்டி தீர்த்தார் ஜெயா.
பஞ்சிங் பேகை கைகளாலும் தலையாலும் தட்டிக் கொண்டிருந்தவன், அண்ணே! என்ற சத்தத்தில் அவன் அதை எட்டி உதைத்தான். அதிலுள்ள மணலெல்லாம் கொட்டியது.
வெளியே வந்து, “ஏன்டா கத்துற?” சத்தமிட்டான் தர்மராஜ்.
அண்ணே! நம்ம சுதாகரன் சாரை பணம் கையாடல் செய்து கம்பெனி நடத்துறார்ன்னு கைது செஞ்சிருக்காங்க…
வாட்? எப்படி?
குரு சாரோட மாப்பிள்ளை தான் அண்ணே!
குரு உனக்கு சாரா? சத்தமிட்டான்.
அண்ணே! தெரியாமல் சொல்லீட்டேன்.
சரி, நம்ம வக்கீலை என்னை பார்க்க வர சொல்லு? முகத்தை அழுந்த துடைத்து குளிக்க சென்றான் தர்மராஜ்..
ஆஜனுபானுவான உடலமைப்பு, கழுகின் பார்வை, தனிமையான உலகம் அவனிது. ஒருவன் தன்னை எதிர்க்கும் முன் அவனை வெட்டி வீழ்த்துபவன் தான் தர்மராஜ். இந்த வருட முடிவில் அவனின் வயது முப்பது.
செய்திகளை பார்த்தவன், “அவனை தூக்கிட்டு வாங்கடா” சத்தமிட்டான்.
அரை மணி நேரத்தில் தர்மராஜ் முன் நடுக்கமுடன் நின்றான் சுதாகரனின் உதவியாளன்.
“சார்….” இவன் அழைக்க, தர்மாவிடம் பேச்சே இல்லை. தன் கூரிய வாலை சுதாகரனின் உதவியாளன் உடலில் திணித்தான். குபீரென குருதி வழிய கீழே சரிந்து உயிரை விட்டான் உதவியாளன்.
“உணவை எடுத்து வைடா. இவனை எறிச்சு ஆத்துல கரைச்சிரு” சொல்லி சாதாரணமாக உணவுண்டான் தர்மா. அவனுடன் இருப்பவர்கள் கூட அவனுக்கு அஞ்சுவர்..
“தர்மா, வர சொல்லி இருந்தாயா?” அவனது வழக்கறிஞர் கேட்டார்.
சுதாகரனை வெளிய எடுக்கணும். இந்தா இதுல பணம் இருக்கு..
அவர் தயக்கமுடன், தர்மா அது முடியாது. ஆதாரம் கோர்ட்டில் கொடுத்து அவரை உடனே ஆஜர் படுத்தீட்டாங்க.
என்ன? சீற்றமுடன் எழுந்தான்.
ஆமா தர்மா, சுதாகரனின் மகன் கூட அவருக்காக வந்து நிற்கவில்லை. இன்று மாலை குருவின் மகளுக்கு ரிசப்சன்.
புது மாப்பிள்ளையை கவனிக்கணுமே!
இப்பொழுது இதனை ஆறப்போடுவது தான் சரி தர்மா. குருவின் மாப்பிள்ளை மிகவும் தெளிவாக இருக்கிறான். நேற்றைக்கு முதல் நாளிலே குருமூர்த்தியை காண சிறைக்கு சென்று அவரிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி சொத்துக்களை அவரின் பொண்ணு பெயருக்கு அவசரமாக மாற்றி இருந்திருக்கான்.
அவனுக்கு பெரிய ஆளுங்க பழக்கம் இருக்கா?
அப்படி ஏதும் தெரியவில்லை தர்மா.
ஒரு வருடத்தின் முன் தான் குருமூர்த்தியின் குடும்ப வக்கீல் இறந்து விட்டார்.
இப்பொழுது அவரின் குடும்ப வழக்கறிஞராக யார் இருக்கிறார்?
ஒரு பொண்ணு…நம்ம பாண்டி கேஸை முடிச்சி குடுத்துச்சே! உனக்கு நினைவிருக்கா?
அட, ஆமா…அழகுன்னா அழகு பேரழகாச்சே! என்றாவது அந்த பொண்ணை அழைச்சிட்டு வா..
தர்மா, அவ குடும்ப குத்துவிளக்கு. உன்னை பார்க்க கூட மாட்டாள்.
எஸ் பி கந்தசாமி இருக்காரே! அவர் பொண்ணு.
கந்தசாமியா? அவர் தான் பணியில் இல்லையே!
ஆமா தர்மா, அவர் மூத்த மகளுக்காக தான் பணியிலிருந்து நின்றார். அந்த பொண்ணு மாசமா இருக்கு.
இவ இளையவள் பிரணிதா. வாதம் என்று வந்தால் வெளுத்து வாங்குவாள். கையில் எவ்வித ஆதாரமும் இல்லாமல் கோர்ட் படி ஏற மாட்டாள். இந்த ஒன்றரை வருடமாக தான் பணியில் இருக்கிறாள். எல்லாம் வெற்றியே!
இன்ட்ரஸ்டிங்…எனக்கு எப்படி இவளை பற்றி தெரியாமல் போனது?
அதான் கூறினேனே! என்றான்.
மனம் குளிர்ந்து இருக்கு.
தர்மா, அந்த பொண்ணை சாதாரணமா நினைக்காத. குருமூர்த்தி யாரை தேர்ந்தெடுத்தாலும் காரணம் இருக்கும்.
ம்ம்! பார்த்திடலாம். சுதாகரனுக்கு என்ன தீர்ப்பு வந்தது?
அவனுக்கு ஒரு வருட சிறைதண்டனையும், அவன் கள்ளத்தனமாக தொடங்கிய கம்பெனியை குருமூர்த்திக்கே ஒப்படைத்து விட கூறி தீர்ப்பு வழங்கப்பட்டது.
“சரி கிளம்புங்கள். நான் அவனை பார்த்து வருகிறேன்” சிறையில் இருக்கும் சுதாகரனை காண சென்றான் தர்மராஜ்.
இரவு நேர நிலவு அனைவரையும் காண, அந்நிலவையொத்த பெண்ணவள் அந்த அரங்க மேடையில் முகம் மலர்ச்சியுடன் ஜொலிப்புடன் நின்றிருந்தாள். அந்நிலவை மேலும் மெருகேற்றும் விதமாக அவளருகே அவளின் கண்ணாளன் சம்பத் நின்றிருந்தான்.
பாட்டி தாத்தா புன்னகையுடன் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
ஜோடியென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று ஒருவர் கூறுவது சர்வேஸ்வரனின் மனதுக்கு நிறைவாகவும் மகிழ்வுடனும் இருந்தது.
அனைவரும் அவர்களை வாழ்த்தி விட்டு, பஃபே முறையில் அமைக்கப்பட்ட உணவை உண்ண சென்றனர்.
“வந்துவா? மாமா…அவங்க இல்லை. நல்லா பாருங்க” பல்லை கடித்தான் யாதவ்.
ம்ம்! கண்ணை மூடி திறந்து பெருமூச்சுடன் பிரணிதாவா? இவளை யார் அழைத்தது? சம்பாவாக இருக்குமோ? சிந்தனையுடன் அவளை பார்த்தான்.
பிரணிதா சேரி வியர் லெஹங்கா அணிந்திருந்தாள். அடர் பச்சை நிறம் அவளின் பால் நிறத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாக சிம்பிள் டிசைன் நெக்லஷூடன் இருந்தாள். பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.
மேடையில் ஏறிய பிரணிதாவை கண்ட சம்பத் முகம் மலர்ந்தான்.
பட்டென அவனை அணைத்த பிரணிதா, “அண்ணா என்ன பண்ணீட்டீங்க? எதுக்கு இவங்கள கல்யாணம் செஞ்சீங்க?” கேட்டாள்.
அருகே இருந்த அப்சராவிற்கு வயிறு பற்றிக் கொண்டு எறிந்தது.
“ஷ்..அப்புறம் பேசலாம்” மெதுவாக அவளுக்கு கேட்குமாறு கூறி அவளை விலக்கினான்.
“கங்கிராட்ஸ்” அவன் கரம் பற்றி கூறி விட்டு, யாரிடமோ கூறுவது போல கங்கிராட்ஸ் அவள் வாங்கி வந்திருந்த பிரசன்ட்டை அப்சராவிடம் கொடுத்து விட்டு சம்பத்தை முறைத்துக் கொண்டே கீழே சென்றாள்.
கீர்த்திகா, ஜெயா, தனலட்சுமி கண்களுக்கு மட்டும் அப்சராவின் பயம் தெளிவாக தெரிந்தது. கால் வலிக்க நிற்க முடியாமல் சோர்ந்திருந்தாள்.
கீழே சென்ற பிரணிதா அருகே சர்வேஸ்வரன் வர, இடையிட்ட ஜெயா…நீ இங்க எப்படிம்மா? உனக்கு மாப்பிள்ளையை தெரியுமா? கேட்டார்.
“ம்ம்! அவர் மருத்துவர். அதனால் நன்றாக தெரியும்” சொல்லிக் கொண்டே நிற்காமல் நகர்ந்தாள்.
ஜெயா அவள் பின்னே வந்து அவளது கையை பற்றினார்.
அவள் புருவம் உயர்த்தினாள்.
என்னோட புருசனை சிறையிலிருந்து அழைத்து வர உதவும்மா?
வாட் ரப்பிஸ்? அவர் எங்க குரு சாரை ஏமாற்றி இருக்கிறார். அதுவும் தெளிவாக எனக்கு தெரியவில்லை. ஏமாற்றினாரா? மிரட்டினாரா? என்று…ஒரு போதும் உங்கள் கணவருக்காக உதவ முடியாது. அவர் கையை எடுத்து விட்டு நகர்ந்து குளிர்பானத்தை கையில் எடுத்து ஓரிடத்தில் அமர்ந்தாள்.
சர்வா அவள் முன் வந்து நின்றான். அவனை முறைத்து எழுந்து மற்றுமொரு இடத்தில் அமர்ந்தாள். அங்கும் அவன் வந்தான். இதனையும் அப்சரா கவனித்தாள்.
“மாமாவிற்கும் இவளை தெரியுமா? யார் இவள்?” அப்சரா மூளை குடைந்தது.
சேந்தன் அவ்விடம் வர, “எக்ஸ்யூஸ்மி” சொல்லி அவன் முன் வந்தாள் பிரணிதா.
“வாவ் பிரணி, யூ ஆர் லுக் பிரிட்டி” புகழ்ந்தான்.
ஏதும் கூறாமல் என்ன நடக்குது?கேட்டாள். அவன் சர்வேஸ்வரனை பார்த்தான்.
சர்வா அவனருகே வர, “பிரணி இங்க நிறைய நெகட்டிவ் வைஃபா இருக்கு. வா அங்க போய் பேசலாம்” அவளை நகர்த்தி அழைத்து சென்றான் சேந்தன்.
அப்படின்னா இந்த பொண்ணும் இவரும் காதலிக்கிறார்களோ? தவறாக எண்ணியவள், காதல் என்றால் இப்படி நேரடியாக பேச மாட்டார்கள் என்று எண்ணத் தவறினாள்.
தாரணி போல தான் பிரணிதாவும் பழி வாங்க சம்பத் திருமணம் செய்ததாக எண்ணிக் கொண்டிருந்தாள். அதான் சம்பத் மீது கோபமாகவும் இருக்கிறாள்.
மேடை அருகே வந்த தாத்தா பிரணிதாவை கண்டு, “காந்தி இங்க பாரு. யாரு வந்திருக்காங்கன்னு” சத்தமிட, பாட்டியும் அங்கு வந்தார்.
“பிரணி…” தாத்தா அழைக்க புன்னகைத்தாள்.
பிரணிம்மா எப்ப வந்த? பாட்டி கேட்டு விட்டு, நீ எப்படி இங்க வந்த? கேட்டார்.
“சார் எனக்கு தெரியும்” சம்பத்தை பார்த்து விட்டு இருவர் காலிலும் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டாள்.
“நல்லா இரும்மா” பாட்டி அவள் தலையில் கை வைத்தார்.
“அம்மா, உனக்கு எப்படி இவளை தெரியும்?” ஜெயா கேட்க, “உனக்கு பிரணியை தெரியுமா?” அவர் கேட்டார்.
நம்ம வக்கீல் பொண்ணு..
நம்ம குடும்பத்துக்கா? சதா? தாத்தா கேட்டார்.
“தாத்தா அவர் உயிரோடு இல்லை” என்றாள் வருத்தமுடன்.
சதாசிவம் தான் முதலில் இருந்தார். அவரின் ஜூனியர் தான் பிரணிதா. அவருக்கு பிள்ளைகளும் இல்லை. அதனால் இவர்களின் குடும்பத்தை பற்றி கூறி குருமூர்த்திக்கு துணையாக இருக்க கூறினார் அவள் தந்தை.
சதாசிவமும் பிரணிதா தந்தை கந்தசாமியும் நண்பர்கள்.
சந்தோசம்மா…என்ற தாத்தா ஜெயாவை பார்த்து, “நீங்க தான் எங்களை வெளியே அனுப்பி விட்டீர்களே! இந்த இரு வருடமாக எங்களை அடிக்கடி வந்து பிரணி தான் பார்த்தாள்” தன் பேரன் சர்வாவை கவனித்தார்.
“இவள் யாரிடமும் பேச கூட மாட்டாள். இவள் எதற்கு என் பாட்டி தாத்தாவை பார்த்துக் கொண்டாள்?” சிந்தனையுடன் அவளை பார்த்தான்.
சம்பத்திற்கும் ஆச்சர்யமாக தான் இருந்தது. ஆனால் அப்சராவின் முகம் மொத்தமாக மாறியது.
யார் இவள்? மனதினுள் குமுறினாள்.
வக்கீல் பொண்ணு நீ எதுக்கு என் பெற்றோரை பார்க்க போன? எங்களை மடக்க இப்படி என் பெற்றோருடன் பழகி இருக்கிறாய் என்று ஜெயா கூறவும் பிரணிதா அமைதியாக நின்றாள்.
பாட்டி ஜெயா கன்னத்தை சிவக்க வைத்தார்.
உன்னை மாதிரி அவ இல்லை.
நீ உன்னோட மகன் வீட்டை விட்டு செல்லவும் நான் அவனை கவனிக்க மாட்டேங்கிறன்னு சொன்ன ஒரே காரணத்திற்காக எங்களை வீட்டை விட்டு அனுப்புன.
எங்க போனோம்? என்ன செய்தோம்? என்றாது எங்களை பற்றி சிந்தித்தாயா? சினமுடன் கேட்டார் பாட்டி.
பாட்டி…அதனால் தான் வெளிய போனீங்களா? சர்வேஸ்வரன் கேட்டான்.
ஆமா மாமா என்றான் யாதவ்.
இந்த பொண்ணோட அப்பன் தான் எங்களுக்கு ஒரு கிராமத்தில் அவருக்கு தெரிந்தவரிடம் சொல்லி தங்க வைத்தான். இவள் தான் அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டாள் தாத்தா கூறினார்.
“மாமா…” தனலட்சுமி அருகே வர, “நீயும் சேர்ந்து தானம்மா வெளிய எங்க விரட்டுன? இப்ப கூட நம்ம மாப்பிள்ளைக்காக தான் வந்தேன்” சம்பத்தை பார்த்தார்.
அனைவரும் வேடிக்கை பார்த்தனர். அப்சரா கண்கலங்கினாள். அவளும் அதன் பின் தானே அதிக கஷ்டத்தை தனியே சமாளித்துக் கொண்டிருந்தாள்.
அதிவேகமாக வந்த கார் நேராக உள்ளே வந்து அனைவர் முன்னும் நின்றது. இறங்கினான் தர்மராஜ்.
நிகழ்ச்சிக்காக வந்தவர்கள் அவர்களுக்குள் பேச, சம்பத்தை நோக்கி நடந்த அவனது கால்கள் பிரணிதாவை காணவும் நின்றது.
ஹாய்….ப்யூட்டி, வாட் எ சர்பிரைஸ்? கேட்டான். அவள் அமைதியாக நின்றாள்.
யார் நீங்க? தாத்தா கேட்க,
நான் தர்மராஜ். கட்டபஞ்சாயத்து பண்ணீட்டு இருக்கேன் என்று அவன் பிரணிதாவை பார்த்த பார்வையில் தாத்தா சினமானார்.
பிரணிம்மா, இந்தாளை உனக்கு தெரியுமா? கேட்டார்.
நேம் கேள்விப்பட்டிருக்கேன் தாத்தா. இப்பொழுது தான் பார்க்கிறேன்.
ஆம். எனக்கும் இதான் முதல் முறை. அவன் பார்வை மேலும் அவளது அங்கம் தொட, அங்கிருந்தவர்கள் முகம் சுருங்கியது. உடல் கூசி அருவருப்பாக உணர்ந்தாலும் அதனை காட்டாது தைரியமாகவே அவனை பார்த்தாள்.
சம்பத்திற்கு சினம் தலை தூக்க, அவளை மறைத்து நின்றான் சேந்தன்.
ஹலோ, நீங்க யாராக வேண்டுமானாலும் இருங்க. ஒரு பொண்ணை இப்படி பார்ப்பது முறையா? தர்மராஜை முறைத்து பார்த்தான்.
யாரடா முறைக்கிற? தன் ஆயுதத்தை தர்மராஜ் சேந்தன் மீது வீச, மேடையிலிருந்து குதித்து இறங்கிய சம்பத் அவன் கையை தட்டி விட்டு, அவனை ஓங்கி அறைந்தான்.
அவன் என்னோட தோழன். அவன் மீது கை வைத்தால் என் மீது வைத்தது போல கத்தினான் சம்பத்.
ஹேய்…….தர்மராஜ் கர்ஜித்தான்.
“பிரணி, சேந்தா இருவரும் கிளம்புங்க” சம்பத் கூற, அவன் வயிற்றில் தர்மராஜ் குத்த வந்த கத்தியை தன் இரு கைகளால் பற்றினான் சர்வேஸ்வரன். அனைவரும் அவர்களை அதிர்ந்து பார்த்தனர்.
“சர்வா…” சேந்தன் பதற, கத்தியை உருவினான் தர்மராஜ். சர்வேஸ்வரனின் இரு கைகளிலும் இரத்தம் வழிந்தது.
ஏற்கனவே சினத்தில் இருந்த சம்பத், தர்மராஜ் கையிலிருந்ததை தட்டி விட்டு அவனை அடிக்க, அவனும் இவனை அடித்தான். இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
“மாப்பிள்ள வேண்டாம்…” தாத்தா பதற, அப்சரா வேகமாக கீழிறங்கி வந்தாள்.
இருவரையும் சேந்தனும் மற்றவர்களும் விலக்கி பிடித்தனர்.
“மாப்பிள்ள அமைதியா இருங்க. அழைக்காத இடத்திற்கு வந்து பிரச்சனை வேறு செய்கிறான்” கூட்டத்தில் ஒருவர் கூற, ஏதும் பேசாமல் சினமுடன் நகர்ந்தாலும் தர்மராஜூன் பார்வை பிரணிதாவை தொட்டது. அவள் கண்கலங்க கட்டிட்ட சர்வாவின் கைகளில் இருந்தது.
தர்மராஜ் சென்ற பின் ஒவ்வொருவராக உணவை முடித்து நகர்ந்தனர்.
அவன் யாரை காண வந்தான்? பிரணி உனக்கு எப்படி அவனை தெரியும்? சேந்தன் கேட்டான்.
என்னோட ஒரு கிளைண்ட் பேசி கேட்டிருக்கேன். மற்றபடி அவனை பார்த்தது கூட இல்லை.
“ஆனால் அவன் உங்களை தெரிந்தது போல பேசினான்” யாதவ் பிரணிதா அருகே ஆர்வமுடன் சென்று அமர்ந்தான்.
“என்னை தெரியும் அனைவரையும் எனக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை” சர்வேஸ்வரனை பார்த்தாள்.
“நேரமாகுதுடா. நீ உணவை முடித்து கிளம்பு” தாத்தா உணவை எடுத்து வந்து அவளுக்கு கொடுத்தார். அப்சரா சினமுடன் பிரணிதாவை முறைத்தாள்.