காதல் 10

தனலட்சுமி ஆலம் கரைத்து மணமக்களை வரவேற்க, மாடியிலிருந்து கீர்த்திகா பொருட்களை வெறியுடன் கீழே எறிந்து கொண்டிருந்தாள்.

சித்தார்த், அப்சரா, அவளது அம்மா வசந்தியுடனான சேர்ந்திருந்த புகைப்படம் நொருங்கி அப்சராவின் காலடியில் வந்து விழுந்தது.

கண்ணீருடன் அப்சரா அதை எடுக்க சென்றாள். அவள் கையை பிடித்த சம்பத் கண்ணாடி துண்டுகளை ஓரமாக போட்டு அவர்களின் படத்தை எடுத்து அவள் கரம் பற்றி உள்ளே அழைத்து சென்றான்.

நேராக பூஜை அறைக்கு சென்ற மணமக்களை ஜெயாவும் சுதாகரனும் வெறித்தனர்.

பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை வழிபட்டு வெளியே வந்தனர் சம்பத்தும் அப்சராவும்.

சம்பத் அனைவரையும் பார்க்க, சர்வாவும் கீர்த்திகாவும் அங்கு இல்லை. அவன் தான் அவளை சமாளித்து அவளறைக்குள் இழுத்து சென்றிருந்தான்.

கீர்த்திகா தன் அண்ணனிடம், “எனக்கு அவன் வேண்டும்” என்று சொல்லவும், அவள் கன்னத்தில் பளாரென அறைந்தான் சர்வேஸ்வரன்.

“அவளுக்காக இதுவரை பேசிட்டு தான் இருந்த. இப்ப அவளுக்காக அடிச்சுட்டேல்ல. அதெப்படி எல்லா ஆம்பளைகளையும் அவ பக்கம் வச்சுக்கிறா?” சீற்றமுடன் கீர்த்திகா பேச, சத்தம் கீழே கேட்டது.

அப்சரா சம்பத்தை பார்க்க, அவன் அவள் கரம் பற்றி அமர வைத்து தானும் அமர்ந்தான்.

“இருங்க மாப்பிள்ள. நான் அவகிட்ட பேசுறேன்” தனலட்சுமி கூற,

“என்னடி எம் புள்ளகிட்ட பேசப் போற? சொத்து அவகிட்ட இருக்குன்னு அவ பக்கம் சாஞ்சுட்ட. எம் புள்ள ஒன்னும் தப்பா சொல்லலையே! முதல்ல எம் புள்ளைகிட்ட வழிஞ்சுட்டு இருந்தா. அப்புறம் அவ அப்பனையும் யாது மாப்பிள்ளையையும் அவகிட்ட வச்சுக்கிட்ட…இப்ப இவரு…”

யாதவ் சினமுடன், “அத்த அசிங்கமா பேசாதீங்க. அப்பூ ஒண்ணும் சர்வா மாமாவை காதலிக்கல. நீங்க கஷ்டப்படுத்துறதுனால அவர் அவளுக்காக பேசினார். நான் அப்பூவோட தம்பி. பெத்த அப்பனையும் சேர்த்து உறவையே கொச்ச படுத்துறீங்க”…

அப்பூவிற்கு ஆண் தோழர்கள் இருந்தாலும் இதுவரை அவள் யாரிடமும் எல்லை மீறி பழகியதில்லை. அவள் காதலித்தவரை தான் கை பிடிச்சிருக்கா. உங்க பொண்ணு மாதிரி ஆள மாத்தலை..

“அத நீ சொல்றீயா? நீ என்னோட புள்ளைய ஏமாத்திட்டு தான இருந்த?” சீறிக் கொண்டு வந்தார் சுதாகரன்.

நான் என்றாவது கீர்த்துவை காதலிக்கிறேன். கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்கேனா? நீங்களா முடிவெடுத்துட்டா நான் என்ன செய்றது?

ஆரம்பத்தில் கூட அத்தை பொண்ணுன்னு ஆர்வம் இருந்தது. அவள் பள்ளியில் படிக்கும் போதே எத்தனையோ பசங்களுடன் சுற்றி இருக்கா. என் முன்னாடியே எல்லாம் பண்ணுவா. நான் எப்படி அவளை காதலிக்கவோ திருமணம் செய்யவோ முடியும்?

“அவ என் பின்னாடி சுத்திட்டு தான இருந்தா? இப்ப எதுக்கு மாமா மேல ஆர்வம் வரணும்?” சம்பத்தை பார்த்தான்.

பின் அப்சராவை பார்த்து, “கீர்த்துவுக்கு அப்பூவை கஷ்டப்படுத்தணும். அதுக்கு தான் மாமாவை டார்கெட் பண்ணிட்டு இப்படி கத்திட்டு இருக்கா? இப்படி உங்க புள்ளைய ஊர் மேய விட்டு அப்பூவை பத்தி பேசுறீங்க?” யாதவ் சத்தமிட்டான்.

அவன் கன்னத்தை பழுக்க வைத்திருந்தார் சுதாகரன்.

விரக்தியுடன் அவரை பார்த்த யாதவ், “என்னோட மாமாவும் அப்பாவும் சொன்னதை முன்பே கேட்டிருக்கணும். பழக கூடாதவர்களுடன் பழகியதற்கு எனக்கு இது வேணும்” கண்கலங்க அவன் பேச, அப்சரா சம்பத்தை பார்த்தான். அவன் யாதவிற்கு உதவி கரம் நீட்டுவான் என்று. ஆனால் அவன் அமைதியாக இருந்தான்.

“அப்பா…..” சர்வா வேகமாக கீழிறங்கி வந்து, “இப்ப எதுக்கு யாதுவை அடிச்சீங்க? அவனை அடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை”.. சத்தமிட்டான்.

“உரிமை இல்லையா?” ஜெயா புருவம் உயர்த்த, ஆமாம்மா…உரிமை வார்த்தைகளால் வரக் கூடாது. செயலில் வர வேண்டும்.

“நீங்க அவனுக்கு அத்தை, மாமா தான? ஆசையா அவனுக்கு ஊட்டி விட்டுருக்கீங்களா? அவனுக்கு என்ன நான் உங்க பையன் தான? எனக்கு என்ன செஞ்சீங்க? படிக்க வச்சிருக்கீங்க. அது கூட மாமாவால தான்…இப்படியொரு வாழ்க்கை வாழ்ந்ததுக்கு நான் அநாதையா இருந்திருக்கலாம்” அவன் கூற, “மாமா….” சத்தமிட்டாள் அப்சரா.

சம்பா தன் நண்பனின் ஆதங்கமான பேச்சில் இறுகி அமர்ந்திருந்தான். சம்பத்திற்கு  அவன் கஷ்டம் தெரிந்தது தான்.

“அப்பூ நீ அமைதியா இரு. நானும் பொறுமையா இருக்கணும்ன்னு பார்த்தால்…..” என்று கண்கள் சிவக்க தன் தந்தை அருகே நெருங்கிய சர்வேஸ்வரன்..

அப்பா, என்னோட வந்து என்னை விட்டு போக நீங்க மட்டும் காரணமாக இருந்தால் அப்பான்னு பார்க்கலாம் மாட்டேன். நான் உங்க மகனாக இருந்தாலும் அவளோட உயிர் நான்…என்னோட உயிர் அவள்..

புருவத்தை சீற்றமுடன் உயர்த்தி பல்லை கடித்து, “நான் என்ன செய்வேன்னு உங்களால யூகிக்க முடியாது” தன் அன்னையை பார்த்து விட்டு, சம்பத் அப்சராவிடம் வந்து நின்றான்.

“அப்பூ நீங்க இங்க இருக்கிறது சரியாக இருக்குமான்னு தெரியல” சம்பத்தை பார்த்தான்.

யார் என்ன செய்தாலும் பேசினாலும் நாங்க இங்க தான் இருப்போம் என்றான் சம்பத் உறுதியுடன். அவன் கரத்தை கோர்த்து நின்றாள் அப்சரா.

சர்வாவின் மனம் மென்மையடைய, “ஹாப்பியா இரு. நானிருக்கேன்” தன் தந்தையை முறைத்து விட்டு யாதவ் கரத்தை பற்றினான் சர்வா. சம்பத்திற்கு சினம் தலைக்கேறியது.

அதையெல்லாம் கண்டுகொள்ளாத சர்வா, “யாது யார் இருந்தால் என்ன இல்லைன்னா என்ன? நான் இருக்கேன். வா நாம வெளிய போகலாம்”..

“தம்பி…..” சிவக்குமார் அழைக்க, எல்லாரும் அவரை பார்த்தனர்.

“திருமணம் முடிந்து வந்துருக்காங்க” அவர் கூற, தனலட்சுமியை பார்த்தான் சர்வா.

ஜெயா பேசியதில் சினத்தில் இருந்தவர், “நான் என்ன செய்தாலும் சொத்துக்காக செய்வதாக சொல்வாங்க” அவர் முகத்தை திருப்பினார்.

“அத்த…அப்பூவை உங்க பொண்ணா நினைச்சா பார்க்கலாம். அடுத்தவங்க என்ன பேசினாலும் பரவாயில்லை” தன் அன்னையை முறைத்தான் சர்வா.

மேலே நின்று இவர்களை பார்த்துக் கொண்டிருந்த கீர்த்திகா கண்கள் அப்போதும் சம்பத்தை தான் சுற்றிக் கொண்டிருந்தது.

ஒரு நிமிஷம் என்ற சம்பத்…அப்சராவை தன்னுடன் நெருங்க நிற்க வைத்து “நாளைக்கு எங்களுக்கு ரிசப்சன் ஏற்பாடு நடக்கணும்” என்றான்.

அப்சரா அவன் முகத்தை ஏறிட்டாள்.

“வேண்டாமா?” சம்பத் அவளை நோக்க, “அப்படியில்லை..இங்க பிரச்சனையா இருக்கு..” தயங்கினாள்.

பிரச்சனையா? சிரித்தான் சம்பத்.

எல்லாரும் அவனை புரியாமல் பார்க்க, “குடும்பம்ன்னா பிரச்சனை இருக்க தான செய்யும். கேளு உன்னோட மாமாகிட்ட. அதுக்காக ரிசப்சன் வேண்டாம்ன்னா எப்படி?”

“வேண்டாம்ன்னு சொல்லலை” அப்சரா சர்வாவை பார்த்தாள்.

அப்புறம்….

அவள் தயங்க, “நாளை கண்டிப்பாக உங்க ரிசப்சன் நடக்கும். நீங்க யாரை அழைக்கணும்ன்னாலும் அழைக்கலாம்” சர்வா தாரணியை மனதில் வைத்து சம்பத், சிவக்குமாரை பார்த்தான்.

அவர் புன்னகைத்தார். யாதவுடன் சர்வா வெளியேறினான்.

அம்மாவை பார்த்து விட்டு வரலாமா? அப்சரா சம்பத்தை ஏறிட்டாள். இருவரும் வசந்தி அறைக்கு சென்றனர்.

அன்றிரவு மணமக்களுக்கு முதலிரவிற்காக ஏற்பாட்டை கவனித்துக் கொண்டிருந்தனர் சர்வேஸ்வரனும் யாதவும்.

அப்சரா தயாராக உதவ வந்த தன் சித்தியை “வேண்டாம்” என்று அனுப்பி தானாக தயாராகிக் கொண்டிருந்தாள்.

தயாராகி வெளியே வந்த அப்சரா கையில் வெதுவெதுப்பான பாலை வெள்ளி செம்பில் கொடுத்த தனலட்சுமி, அவளை முதலிரவு அறைக்கு அழைத்து சென்றார்.

ஒரு பக்கம் இவர்களும் மறுபக்கம் பட்டு வேஷ்டி சட்டையில் சம்பத்தும் அவ்வறைக்கு வந்தனர்.

அறையிலிருந்து சர்வாவும் யாதவும் வெளியே வந்தனர்.

புன்னகையுடன் தன் நண்பனை கண்ட சர்வா, “ஆல் தி பெஸ்ட்” கையை நீட்ட, சம்பத்திற்கு அவன் முன் அவனது சிறுவயது சர்வா கை நீட்டுவது போல இருந்தது. அவனையும் மீறி கண்கள் கலங்கியது. அவனாகவே சர்வாவை அணைத்தான்.

சர்வா புன்னகையுடன், “பார்த்துக்கோடா மச்சான்” நகர்ந்து, அப்சரா தலையில் கை வைத்து அவளையும் சம்பத்தையும் பார்த்து யாதவுடன் செல்ல, தனலட்சுமியும் அப்சராவை விட்டு சர்வாவுடன் சென்றார்.

மணமக்கள் உள்ளே சென்று கதவை அடைக்க, மறுநொடியே கதவு தட்டும் ஓசை கேட்டு சிந்தனையுடன் அப்சராவை பார்த்துக் கொண்டே கதவை திறந்தான் சம்பத்.

ஆக்ரோஷமாக உள்ளே நுழைந்த கீர்த்திகாவை கண்டு இருவரும் அதிர, சர்வா கதவின் ஓசை கேட்டு திரும்பி கீர்த்திகாவை கண்டு அவளருகே வந்தான். கதவு திறக்கவும் வேகமாக உள்ளே வந்தாள்.

வந்தவள் ஆக்ரோஷமாக அப்சராவை தாக்க முனைந்தாள். அப்சரா கை பிடித்து தன் பக்கம் அவளை விரைந்து இழுத்தான் சம்பத். அப்சரா அதிர்ந்தது அதிர்ந்தவாறே நின்றிருந்தாள்.

ஏய்ய்ய்! சத்தமிட்டான் சம்பத்.

சர்வா இடைபுகுந்து தன் தங்கை கன்னத்தில் ஓங்கி அறை விட்டான். அவள் அவனை முறைத்து மீண்டும் அப்சரா அருகே செல்ல சென்றாள்.

அவளை துள்ள துள்ள இழுத்த சர்வா….சாரி என்று இருவரையும் பார்த்துக் கொண்டே வெளியே இழுத்து வந்து மீண்டும் அறைந்தான்.

மாமா….அப்சரா அழைக்க, சம்பத் அவளை தடுத்து அறைக்கதவை சாற்றினான்.

அண்ணா, இவ உனக்கு அவ்வளவு முக்கியம்ன்னா எதுக்கு அவளோட சுத்துன? அந்த வந்தனா நல்லவலெல்லாம் இல்லை. அவ எத்தனை பசங்களுடன் ஊர் சுற்றுவாள் தெரியுமா? ச்சீ…

யார என்ன சொன்ன? சர்வா கர்ஜனையுடன் கீர்த்திகா கழுத்தை பிடித்து தூக்கினான்.

“மாமா, அவ செத்துறாம… அவளை விடுங்க” யாதவ் சர்வாவை தடுக்க, சீற்றமுடன் அவனையும் நகர்த்தி விட்டு கண்ணீருடன் நகர்ந்தான்.

அனைத்தையும் கேட்ட சம்பத் கண்கள் செங்கணலாய் எறிந்தது.

“மாமா…” அவன் தோளை அப்சரா தொடவும், உணர்ச்சிவசப்பட்ட சம்பத் அவளது கையை இறுக பிடித்து அப்சராவை சினமுடன் தள்ளினான். அவள் படுக்கையில் பொத்தென விழுந்து திகைத்து பார்த்தாள்.

மா..மா…

அப்சராவை அடிக்க கையை ஓங்கிய சம்பத் நினைவுக்கு வந்தவனாக அவளை விட்டான்.

அவன் ஏன் இவ்வாறு நடந்து கொண்டான்? அப்சராவிற்கு ஏதும் புரியவில்லை. மனம் கனத்து போனது. மனதில் பயமும் பிறந்தது.

அப்சரா சம்பத்தை பார்க்க, சாரி என சாதாரணமாக கூறி விட்டு மனப்பதட்டத்தை காட்டிக் கொள்ளாமல் படுத்து விட்டான்.

கண்ணீருடன் தன் வாழ்க்கையை எண்ணி பயத்துடன் படுக்கையில் ஓரத்தில் படுத்து அழுது கொண்டிருந்தாள் அப்சரா. அப்படியே உறங்கியும் போனாள்.

வெகுநேரம் கழித்து தன் மனம் முழுவதும் சமாதானமடையவும் தன்னருகே அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தவளை பார்த்தான் சம்பத். அவள் முதுகு காட்டி படுத்திருந்தாள்.

எழுந்து அவள் முகத்தை பார்த்தான். அழுத கண்ணீரின் தடத்தை பார்த்து வருந்தினான். பின் அமைதியாக அவளை நெருங்கி படுத்து கண்ணை மூடினான் சம்பத்.

உறங்க முடியவில்லை. மனம் கனத்து இருந்தது.

கீர்த்திகா மீதுள்ள சினத்தை இவள் மீது காட்டி விட்டோமே! கட்டிடப்பட்டிருந்த அவளது பாதமருகே அமர்ந்து, அவளது கட்டில் கை வைக்க, ஷ்…என்றவாறு முகத்தை சுளித்து திரும்பி படுத்தாள். அவன் கண்களில் நீர் கோர்த்தது. படுக்கையில் படுத்தான்.

திடீரென அவன் தாலி கட்டிய பின் அப்சரா தன் மீது தாவியது எண்ணத்திற்கு வர தானாக புன்னகை அரும்பியது. அவளும் அவன் பக்கம் திரும்பி படுத்திருக்க, அவளருகே படுத்து அவளையே இன்முகமுடன் பார்த்தான் சம்பத்.

நேற்றே சம்பத் தாரணி சித்தார்த்திடம் இவர்களது திருமணத்தை கூறி இருப்பான். தொலைக்காட்சியிலோ இல்லை அலைபேசியிலோ பார்த்தால் அவர்களுக்கு சினம் வந்து விடும் என்று முதலிலே அவர்களை அழைத்து கூறி விட்டான்.

ரிசப்சனுக்கு கூட இருவரையும் வர வேண்டாம் என கூறி விட்டான்.

தன் கதிர்வீச்சை பரப்பியவாறு பகலவன் அழுது சோர்ந்திருந்த அப்சராவை காண ஓடோடி வந்து விட்டான்.

சம்பத் தான் முதலில் விழித்தான். ஆனால் எழாமல் அப்சராவை ரசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அப்சரா மீது காதல் இல்லை என்றாலும் தன் மனைவி என்ற உரிமை இருக்கிறதன்றோ?

சிலமணி நேரத்திலே அப்சரா இமைகள் அசைய, விழிகளை மூடினான் சம்பத்.

சம்பத்தை மிக அருகில் கண்ட அப்சராவிற்கு நேற்றைய அவனது செயலில் பயந்து விரைந்து நகர்ந்தாள். அவள் இமைகளில் நீர் குளம் கட்ட, மறுபக்கம் திரும்பி அமர்ந்தாள். அவள் விலகலில் மனம் துவண்டான் சம்பத்.

அவள் எழுந்து அவனை பார்த்து விட்டு குளியலறை சென்று குளித்து வந்தாள்.

ஏதும் அறியாதவன் போல படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தான் சம்பத்.

சேந்தன் அழைக்க, சொல்றா? அழைப்பை எடுத்தான்.

இருவரும் அவர்களது ஜிம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்சரா வெளியே வந்து அந்த ஆளுயர்ந்த கண்ணாடி முன் நின்று அவளது கருமை நிற கூந்தலை ஒரே பக்கமாக நகர்த்தி திரும்பி கழுத்தின் பின்னிருந்த முடிச்சை போட்டுக் கொண்டிருந்தாள்.

பேசிக் கொண்டிருந்த சம்பத்தின் குரல் கம்மியது. அவன் கண்கள் தானாக தன் மனைவியின் பளிங்கு முதுகின் பின் சென்றது.

அங்கே ஒருவன் கத்துவது சம்பத் காதில் ஏறவில்லை.

அவன் அமைதியை கண்ணாடியின் வழியே பார்த்த அப்சரா, அவன் தன்னை தான் பார்க்கிறான் எனவும் கண்ணாடியின் முன் அமைதியாக அமர்ந்து அவனை கண்டு கொள்ளாமல் தயாராக துவங்கினாள்.

அலைபேசியை துண்டித்த சம்பத் அவளை நெருங்க, அவள் மனம் அடித்துக் கொண்டிருந்தது.

“அப்சா” அவன் அழைக்க, பட்டென கண்ணீர் வந்து விட்டது அப்சராவிற்கு.

அவளை தன் பக்கம் திருப்பிய சம்பத் கண்ணீரை துடைத்து விட்டு அவளது கரம் பிடித்தான். மேலும் அவள் கண்ணீர் உதிர்க்க, அவள் நிலை புரிந்தது.

அழாத அப்சா. என்னை மீறியும் கோபம் வந்து விட்டது என்று அவளை படுக்கையில் அமர வைத்து அவளது  கையை வருடினான்.

நேற்று சினமுடன் அவளை பிடித்து தள்ளும் போது அவன் பிடியில் சிவந்திருந்த கையில் அவனது இதழ் பதித்தான். அப்சரா வேகமாக விலகினாள்.

சாரி..

எனக்கு எப்படி வலித்தது தெரியுமா? தேம்பி தேம்பி அழுதாள்.

அவளது கையை தன் கைக்குள் வைத்து, சாரிம்மா…இனி இவ்வாறு கண்டிப்பாக நடக்காது உறுதியளித்தான்.

“ம்ம்! நீங்க குளிச்சிட்டு வாங்க” அவள் நகர, அவளது கையை பிடித்து, என்னை மன்னிச்சிட்டேல்ல? கேட்டான்.

ம்ம்!

நெற்றியில் பொட்டு வைக்கவில்லை அவன் கூற, அச்சோ மறந்துட்டேன் என்று கண்ணாடி முன் வந்தாள். அவன் அவள் பின் வந்து நிற்க, அவளுக்கு பதட்டமானது.

அதே நேரம் அவன் அலைபேசி அழைக்க, எவன்டா அவன்? முணங்கியவாறு அழைப்பை எடுத்தான். அவளின் முகத்தில் அரும்பிய சிரிப்பை பார்த்து சம்பத் மனம் குளிர்ந்தது.

சொல்லு தாரா…

அண்ணா, கோவிலுக்கு…

ஈவ்னிங் ரிசப்சன் இருக்கே!

காலை வரலாமே!

“பார்த்துட்டு கால் பண்றேன்” அலைபேசியை வைத்து விட்டு அப்சராவை தேடினான். அவள் வெளியே சென்று விட்டாள்.

குளித்து தயாராகி சம்பத்தும் வெளியே வந்தான்.

தனலட்சுமி தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்க, ஜெயா ஏதோ சிந்தனையுடன் அமர்ந்திருந்தார். கீர்த்திகா கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தாள்.

சம்பத் தன் மனைவியை தேடினான். உணவின் வாசனை வரவும் சமையலறையில் இருக்கிறாள் என புரிந்து, “அப்சா” வீடே அதிரும் வண்ணம் கத்தினான்.

அதிர்ந்து அனைவரும் அவனை பார்க்க, அறையினுள் இருந்த சர்வாவும், ஆடையை கூட மாற்றாது யாதவும் எட்டிப் பார்த்தனர். சுதாகரன் கூலாக வந்து அமர்ந்தார்.

அப்சரா பதறிக் கொண்டு வெளியே வந்தாள்.

என்னாச்சு மாமா?

என்ன பண்ணீட்டு இருக்க?

சமையல்..

இவங்க எல்லாரும் வெட்டியா தான இருக்காங்க. இவங்க தான் இனி சமையல் வேலை பார்க்கணும் என்றான்.

சர்வா புன்னகைக்க, மற்றவர்கள் அவனை திகைத்து பார்த்தனர்.

“மாமா வேண்டாம், நான் பார்த்துப்பேன்” அப்சரா கூற, அவளது இடையை பற்றி அவனருகே இழுக்க, அவளுக்கு கூச்சமாகி போனது.

மாமா…விடுங்க அவள் தயங்க, நீ என்னோட பொண்டாட்டி. இவங்க யாருக்கும் வேலைக்காரி இல்லை.

“நாங்க வேலை பார்க்கணுமா? வேலையாள் இருக்கும் போது நாங்க எதுக்கு வேலை செய்யணும்?” வெகுண்டு எழுந்தார் ஜெயா.

“இத்தனை நாள் இவ தான பார்த்தா? இனியும் அவளே பார்ப்பா” கீர்த்திகா முகத்தை சுண்டினாள்.

தன் கைபிடியில் இருந்த தன் மனைவியின் தோளில் கை போட்டு கீர்த்திகா அருகே வந்த சம்பத், இத்தனை நாள் ஓசில தான தின்ன? இனி வேலை செய்தால் தான் உனக்கு உணவு…

நான் செய்ய மாட்டேன்…

“எம் பிள்ளைய வேலை பார்க்க சொல்ற?” ஜெயா சீறினார். சுதாகரனும் சினமுடன் எழுந்தார்.

இங்க எல்லாரும் ஒரு விசயத்தை மறந்துட்டீங்க. இது எங்களது வீடு. வீடும் எனது மனைவி பெயரில் தான் உள்ளது. நாங்கள் கூறுவதை கேட்டால் நீங்கள் எங்களது வீட்டில் இருக்கலாம் இல்லை வாயிலை காட்டினான் சம்பத்.

யார வெளிய போன்னு சொல்ற? எத்தனை வருசமா என் உழைப்பை போட்டிருக்கேன்.

கலகலவென சிரித்த சம்பத் அவனது அலைபேசியை எடுத்து முகத்தை சீரியசாக்கி, “இன்னும் எவ்வளவு நேரமாகும்?” யாரிடமோ கேட்டான்.

“சார்” வீட்டினுள் சத்தம் கேட்க, வந்தவனை கண்டு சுதாகரன் அதிர்ந்தார். அவரின் உதவியாளன் தான் வந்திருந்தான்.

ஏய், நீ இங்க என்ன பண்ற?

அவன் நேராக சம்பத்திடம் சில கோப்புகளை கொடுத்தான்.

நாற்காலியை இழுத்து போட்டு நடுநாயகமாக கம்பீரமாக அமர்ந்த சம்பத், கோப்புகளை பார்த்து தவறுள்ள இடத்தை தன் மனைவியிடம் சுட்டிக் காட்டினான்.

சுதாகரின் உதவியாளன் கம்பெனியின் அக்கவுண்ட் விவரம் தான் எடுத்து வந்திருந்தான்.  சுதாகரன் சேர்ந்த நாளிலிருந்து கையாடல் செய்திருந்த அனைத்தும் தெளிவாக இருந்தது.

“மாமா…” அப்சரா அழைக்க, சர்வாவும் யாதவும் அவளிடம் வந்தனர்.

கோப்புகளை கையில் வாங்கிய சர்வேஸ்வரன், “என்னதுப்பா இது?” சீற்றமுடன் கேட்டான்.

கம்பெனி பணத்தை வைத்து சுதாகரன் தனியாக ஒரு கம்பெனியையும் நடத்தி வருகிறார் கள்ளத்தனமாக என்றவுடன் சினம் ஏறியது சர்வேஸ்வரனுக்கு.

ச்சே…என்று அவன் தன் தந்தை அருகே வந்து,

கம்பெனில மாமாவை விட அதிக உரிமையை எடுக்கும் போது எனக்கு சரியாக எதுவும் புரியவில்லை. மாமா உங்களது பொறுப்பில் விட்டு தான் செய்கிறீர்கள் என்று எண்ணினேன். ஆனால் இவ்வளவு பெரிய துரோகத்தை அவங்களுக்கு செய்திருக்கீங்க. இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது. நாம இங்கிருந்து செல்வது தான் நல்லது…

“அதெல்லாம் வேண்டாம்” என்ற சம்பத் சர்வாவிடம், இந்த வீட்ல தான் நீங்க எல்லாரும் இருக்கணும். இத்தனை வருடமாக என் மனைவி பட்ட கஷ்டத்திற்கு உங்களை நான் எப்படி விடுவேன்னு நினைச்சீங்க?

உள்ளே ரிப்போர்ட்டர் ஒருவருடன் போலீஸ் வந்தனர்.

“சார் அழைத்திருந்தீர்கள்” ஒருவர் கேட்க, ம்ம்…என்று சுதாகரின் செயலை கூறி ஆதாரத்தை போலீஸிடம் சமர்ப்பித்தான் சம்பத். அவர் சுதாகரனை கைது செய்தார்.

“இவர் யாருன்னு தெரியாதா உங்களுக்கு?” ஜெயா ஆங்காரத்துடன் கேட்டார்.

அதான் தெரியுதே! என்ற ரிப்போர்டர், போலீஸ் சுதாகரை கைது செய்வதை நேரலையாக்கி செய்தியை பரப்பினார். அவர் சம்பத்தை முறைத்தவாறு நகர்ந்தார். ஜெயாவும் கீர்த்திகாவும் அவர் பின் சென்றனர்.

“நான் சீக்கிரமே வெளியே வருவேன்” அவர் சென்றார்.

ஜெயா சினமுடன் உள்ளே வந்து அப்சராவிடம் கையை ஓங்கினார்.

அவர் கரத்தை பிடித்து தள்ளிய சம்பத், இதுக்கு மேல அப்சா மீது கை வைக்கவோ, அவளை பற்றி பேசவோ உங்களுக்கு உரிமை இல்லை.

“சீக்கிரம் காபி போட்டு எடுத்து வாங்க” அப்சராவுடன் அமர்ந்தான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கீர்த்திகா அவனை முறைத்து பார்க்க, “என்ன முறைக்கிற? போ காபி எடுத்து வா” அமர்ந்தான் யாதவ். சர்வேஸ்வரன் சம்பத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருந்தான்.

தனலட்சுமியை அழைத்த சம்பத், உங்களையும் சேர்த்து தான் சொன்னேன். வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் அவர்கள் சரியாக வேலை செய்கிறார்களா? பாருங்கள் என்றான்.