பொறுமையை கடைபிடிக்கும் சர்வா சினமுடன், “வந்து உன்னை பற்றி என்ன ஆதாரம் வைத்திருந்தாள்?” கேட்டான்.
பாதி தான்..ஆனால் மீதி இப்பொழுது…என்று சேதுபதி நகர்ந்து பிரணிதாவை எட்டி பார்த்தார்.
“பிரணிதா என்ன ஆதாரம் உன்னிடம் இருக்கு?” தர்மராஜ் சினமுடன் கேட்டான்.
எல்லாமே வச்சிருக்கா…
அதை ஒப்படைத்தால் எல்லாரையும் விட்ருவேல்ல?
“இல்லை” இடவலமாக தலையசைத்த சேதுபதி, ஆதாரமும் இவளும் வேண்டும். பிரணிதாவை விட்டு நீங்க எல்லாரும் போகலாம்..
“என்னை விட்டு போகணுமா?” தர்மாவையும் சம்பாவையும் பார்த்துக் கொண்டே சேதுபதியை பார்த்தாள். வயதானவன் கொலை தவிர என்ன செய்யப் போகிறான்? என்ற எண்ணம் அவளுக்கு.
“முடியாது” சம்பத் பிரணிதா கரத்தை பற்ற, தர்மாவும் அவளது கையை பிடித்தான்.
“என்னடா பண்றீங்க? பேசுறீங்க?” இருவர் கையையும் தட்டி விட்டு சேதுபதி அருகே அவள் செல்ல, அவளை இழுத்து அடித்து விட்டான் தர்மராஜ்.
கன்னத்தில் கை வைத்து புரியாமல் தர்மாவை பார்த்தாள் பிரணிதா.
“உன்னோட அசட்டு தைரியம் தான் இந்த வரைக்கும் கொண்டு வந்திருக்கு. இன்னும் என்ன பண்ணனும்?” சத்தமிட்டான் தர்மா.
சேது எங்களை விட்ரு இல்லை ரொம்ப வருத்தப்படுவ என்றார் சிவக்குமார்.
மூளைக்கார பொண்ணுன்னு உன்னை நினைச்சேன். ஆனால் சிரித்த..சேதுபதி,
“அப்படியெல்லாம் விட முடியாதே! தர்மா உனக்காக என்னையே எதிர்க்கிறான். உனக்கு புரியலையா? திருமணம் செஞ்சுக்க போறேல்ல. முதலிரவு சமாச்சாரமெல்லாம் எப்படி? நான் சொல்லித் தரவா?” பிரணிதாவை நெருங்கினான் சேதுபதி.
அவன் கூறுவது மூளைக்கு எட்டவும் அருகே வந்த சேதுபதி கன்னம் பழுத்தது. சேந்தன் அறைந்திருந்தான்.
உனக்கு பொண்ணு இருந்தா பிரணி வயதிருந்திருக்கும். அவகிட்ட என்ன பேசுற?
ஏய்ய்ய்ய்ய்ய்….கத்திய சேதுபதி, யாரும் உயிரோட போகக் கூடாது. சுட்டுத் தள்ளுங்கடா சத்தமிட்டார்.
“அதுக்கு தான் வாய்ப்பில்லையே!” வாயிலில் டிஜிபி போலீஸாருடன் நிற்க, பிரணிதாவை இழுத்து அவளது நெற்றில் துப்பாக்கியை வைத்தான் சேதுபதி.
சம்பத், யாராவது ஒருவர் என் பக்கம் வந்தாலும் உன் தங்கை வந்தனா நிலை தான் இவளுக்கும் என்று அருகே இருந்த அறைக்குள் பிரணிதாவை இழுத்து சென்றான் சேதுபதி. எல்லாரும் திகைத்து விழித்தனர்.
பிரணி…
“அண்ணா, பிரணியையும் வந்து மாதிரி விட்றாதீங்க” தாரணி அழுதாள். நடக்கும் எதுவும் புரியாமல் சித்தார்த் கவனித்துக் கொண்டிருந்தான்.
“தர்மா…” டிஜிபி சத்தமிட்டார்.
தாமதிக்காது அறைக்கதவை உடைத்தான் தர்மராஜ். உள்ளே யாருமில்லை.
“எங்க போனாங்க? அறைக்குள் எந்த வழியும் இல்லையே!” சேந்தன் கேட்க, சுவற்றில் இருந்த பட்டனை அழுத்தினான் தர்மா. இது தான் அவனது பழைய வீடாயிற்றே!
சுவறு பிளந்து அறையாக இருந்தது. பிரணிதாவிடம் எல்லை மீறிக் கொண்டிருந்தான் சேதுபதி. அவள் விழிகள் மலங்க அவனுடன் போராடிக் கொண்டிருக்க, சர்வாவிற்கு அந்நிலை தன் காதலி வந்தனாவை நினைவு படுத்தியது.
எல்லாருக்கும் முன் சென்று சர்வா சேதுபதியை பிடித்து இழுத்து வெறியுடன் தாக்கினான். தலையிலிருந்து குபீரென இரத்தம் பீறிட்டு வந்தது. அங்கேயே சரிந்து விட்டார் சேதுபதி. ஆனாலும் கோபம் தீராமல் அவன் தாக்க….அவனை தர்மாவும் சம்பத்தும் சேர்ந்து இழுத்து நகர்த்தினர்.
“சர்வா அவன் செத்துட்டான்” சம்பத் தன் நண்பனை கண்ணீருடன் அணைத்தான்.
தாரணி பிரணிதாவிடம் ஓடிச் சென்று அவளது ஆடையை சரி செய்தாள். பிரணிதா தாரணி மீது மயங்கினாள்.
சம்பத் பிரணிதாவை தூக்கி காரில் போட்டு, “சர்வா பிரணி பக்கத்திலே இரு” என்று உள்ளே செல்ல, சர்வா தன் தாயிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“என்னோட வேலை முடிந்தது. என்னையும் கைது செய்யுங்க சார்” கையை நீட்டினான் தர்மராஜ்.
உன்னோட தந்தையும் நல்ல காவலர். சூழ்நிலை காரணமாக தான் நீயும் உன் தம்பியும் மாறி இருந்தீங்க. அதுவும் தவறு தான்..
உன்னோட நல்ல எண்ணத்திற்காக உன்னை கைது செய்யாமல் விடுகிறேன். அத்தோடு உன்னை போலீஸ் பயிற்சியிலும் சேர்க்க எங்களது டீம் முடிவெடுத்து இருக்கோம் என்றார் டிஜிபி.
சாரி சார். எனக்கு இதில் விருப்பமில்லை. என்னால் குற்றவுணர்வுடன் வெளியே இருக்க முடியாது. என்னோட வீட்டுக்கு சர்ச் வாரண்ட் குடுங்க. நான் செய்த கொலைக்கான ஆதாரம் அதில் இருக்கும்.
“தர்மா…..” சம்பத் அழைக்க,
“சாரி சம்பா. என்னோட மனசு ஏத்துக்காது. எல்லாரையும் பத்திரமா பார்த்துக்கோ” கையை அவன் நீட்ட, டிஜிபி உத்தரவின் பெயரில் போலீஸ் தர்மராஜை கைது செய்தனர்.
சார்…அப்புறம் நான் கொலை செய்ததாக இருக்கும் ரெக்கார்டில் இருபது பேர் உயிரோட அமெரிக்காவில் இருக்காங்க. அவங்களை என் நண்பன் காலை அழைத்து வருவான். அவர்களை அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து விடுங்கள் என்று சர்வாவையும், சீட்டில் மயங்கி இருக்கும் பிரணிதாவையும் பார்க்க கண்கள் குளம் கட்டியது தர்மாவிற்கு.
தொண்டை அடைக்க சர்வா அருகே வந்து, “அவளை பார்த்துக்கோ” பிரணிதாவை பார்த்துக் கொண்டே தர்மராஜ் சென்று விட்டான்.
வீட்டிற்கு வந்த சம்பா, சர்வாவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி.
தனலட்சுமி இறந்து இருந்தார். குருமூர்த்தி அவர் மீது சாய்ந்து அழுது கொண்டிருந்தார். யாதவும் அப்சராவும் சம்பத்தை பார்த்து அவனிடம் ஓடி வந்தனர்.
“மாமா, அம்மாவை கொன்னுட்டானுக…” சம்பத்தை கட்டிக் கொண்டு அழுதான் யாதவ். அப்சராவும் அழ, அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
பாட்டியும் தாத்தாவும் சித்தார்த்தை பார்த்து மகிழ்வுடன் சென்றாலும் அவர்கள் தர்மாவை தேடினார்கள்.
“பாட்டி, தர்மா செய்த தவறுக்கான தண்டனை அனுபவிக்க போறேன்னு போயிட்டான்” சர்வா சொல்ல, பாட்டி தாத்தாவை கட்டி அழுதார்.
கந்தசாமி கட்டுடன் வீட்டிற்கு வந்தார். பிரணிதா விழித்து பதறினாள்.
“ஒன்றுமில்லைம்மா. சம்பா சொன்னான்” தன் மகளை அணைத்துக் கொண்டார்.
“மாமா, நாங்க நாளை மறுநாள் சென்னை கிளம்பணும்” பிரணிதாவின் மாமா கூற, “குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவை முடித்து கிளம்பலாம்” என்று நிறுத்தி விட்டார் கந்தசாமி.
கொடைக்கானலில் இருந்து சென்னை வரை தினமும் காரில் பயணித்து வந்தார் பிரணிதாவின் மாமா.
பிரணிதாவின் எண்ணம் முழுவதும் தர்மாவிடம் வந்தது. அவனை காண செல்ல, எல்லாரையும் பார்க்கும் அவன் அவளை மட்டும் பார்க்க முடியாது என்று தடை போட்டிருந்தான்.
மாதங்கள் உருண்டோடி வருடங்களானது.
சித்தார்த் அனைத்தும் கற்றிருந்தான். கம்பெனி சென்று வந்து கொண்டிருந்தான். யாதவும் அவனுடன் சென்று வந்தான். இருவரும் ஒத்துமையாக இருந்தனர். வசந்திக்கு இன்னும் உடல்நிலை சரியாகவில்லை. குருமூர்த்தி அருகே இருந்து தன் மனைவியை கவனித்துக் கொண்டிருந்தார்.
சம்பத்தின் பெற்றோர்கள் போலீஸாரால் அவனிடம் ஒப்படைக்கப்பட்டனர். சம்பத் வீட்டில் அவன் பெற்றோர், அப்சரா, சிவக்குமார், தாரா, அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
நம் சம்பத் – அப்சராவிற்கு அபிதரன் என்ற மகன் இருந்தான். ஒரு வயதாகிறது. தன் அத்தை தாராவை படுத்தி எடுப்பான் அபி. அவள் அவனை கவனிக்கிறேன் என்று குளித்து நனைந்து வருவதை அனைவரும் கேலி செய்வார்கள்.
சிறைக்கு செல்லும் முன் தர்மா சுதாகரனை சந்தித்து பேசி இருந்தான். சுதாகரன் சிறையிலிருந்து மனம் திருந்தி வந்தார். அவரை இன்னும் நம்பாமல் சர்வா அவன் குடும்பத்தையே இத்தாலிக்கு அனுப்பி விட்டான். அவர்கள் அங்கே வசிக்கிறார்கள்.
சித்தார்த் திறம்பட அனைத்து பொறுப்பையும் செயலாற்ற தொடங்கிய மூன்றாவது வருடத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அத்தோடு முறையான சிகிச்சையில் வசந்தியும் குணமடைந்தார்.
தாரணி – சித்தார்த் திருமணம்.
“அம்மாடி, மாப்பிள்ள வீட்ல இருந்து எல்லாரும் வந்துருவாங்க. சீக்கிரம் தாராவை தயார்படுத்துங்கள்” சம்பத்தின் தாய் மணமகள் அறையிலிருந்து நகர்ந்தார்.
“மாமா, அபி எங்க?” அப்சரா சத்தமிட, “அப்சா இவனை எப்படி சமாளிக்கிற? ஒரு சட்டையை போடுறதுக்குள்ள எங்காவது ஓடிருறான்” அலுப்புடன் மனைவியை கட்டிக் கொள்ள வந்தான் சம்பத்.
“டாட், மாம் பக்கம் போகாத!” கையை இடுப்பில் வைத்து சம்பத்தை பார்த்தான் அபி.
புன்னகையுடன் சம்பத்தை பார்த்த அப்சரா, “மாமா பையன் சொல்றான் கேட்க மாட்டீங்களா?” செல்லமாக அவன் கன்னத்தை தட்டினாள்.
மாம்ம்ம்….அபி கையை உயர்த்தினான்.
மகனை அள்ளிக் கொண்டு மாமா, நீங்க போங்க. நானே இவனை தயார் படுத்தி அழைத்து வாரேன்.
அப்சா…நான்…அப்சராவை சம்பத் நெருங்க, “டாட்…….” காது கிழியும் வரை கத்தினான் அபி.
“போறேன் போறேன்……அபி இன்றிரவு உன்னையும் உன் அம்மாவையும் பிரித்து விடுவேன்” மனதில் எண்ணிக் கொண்டு நகர்ந்தான்.
“ரொம்ப ஃபன்னி தான்” அவளை போல உதட்டை கோணிக்காட்டி சம்பத் செல்ல, வயிற்றை பிடித்துக் கொண்டு அப்சராவும் அபியும் சிரித்தனர்.
சம்பத் அப்சராவின் காதலில் முற்றும் முழுதாய் மாறினான் இல்லை மாற்றி விட்டாள். யாரிடமும் சண்டைக்கு செல்வதையும் தவிர்த்திருந்தான். ஆனால் அவனது உதவும் மனம் மட்டும் மாறவில்லை.
தாரணியுடன் அவள் தோழிகள் மட்டும் இருந்தனர். அவள் முகம் லேசான வாட்டமுடன் இருந்தது.
“என்னடி மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இருக்க?” தோழி கேட்க, “வந்து இல்லாமல் எனக்கு திருமணம் நடக்குது” கலங்கினாள்.
“வருத்தப்படாதடி…..” தோழிகள் அவளை தேற்றினர்.
“பிரணி, எல்லாமே எடுத்து வச்சுட்டியா?” வசந்தி கேட்க, “பெரியம்மா ஒண்ணு மறந்துட்டேன்” என்று பூக்களை எடுத்து வந்தாள். அலைபேசியில் மூழ்கியவாறு சர்வா அவளை இடித்து விட்டான்.
“ராஸ்கல்..” புடவையை அவள் மேலே ஏற்ற, “அடியேய் என்ன பண்ற? அப்புறம் வேலையை பார்க்காமல் புடவை கலஞ்சிருச்சுன்னு அறைக்குள் மாத்துறேன்னு போன…” வசந்தி அவளை விரட்டினார்.
“தாத்தா…” அழைத்துக் கொண்டே பூத்தட்டை ஓரிடத்தில் வைத்தாள்.
உஃப் என்ற வசந்தி, இவள பாருங்க மாமா. கண்ட இடத்துல வைக்கிறா?
அய்யோ பெரியம்மா, அது கண்ட இடமில்லை. நம்ம வீடு தான்.
உன்னோட நக்கல் பேச்சை நிறுத்தீட்டு வேலையை பாரு.
பிரணி, உன்னோட அப்பா கிளம்பீட்டானா? குருமூர்த்தி கேட்டார்.
கிளம்பீட்டார் ..
அம்மா, நாம இங்கிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்ல்லம்மா? குருமூர்த்தி பாட்டியிடம் ஆலோசனை கேட்டார்.
கிளம்பலாமே! அவர் புன்னகையுடன் பிரணிதாவை அழைத்தார்.
“எல்லாத்தையும் கார்ல்ல எடுத்து வையுங்க. நாங்க இப்ப வந்திடுறோம்..” பாட்டி அவரறைக்கு பிரணிதாவை அழைத்து சென்றார்.
என்ன பாட்டி? அவள் கேட்க, நடிக்காம மனசை சந்தோசமா வச்சுக்கோம்மா..
பாட்டி..
பெருமூச்சுடன், “இது உனக்காக நாங்க வாங்கினோம்” என்று விலைஉயர்ந்த வைர அட்டிகையை போட்டு விட்டார்.
பாட்டி, என்ன பண்றீங்க? எனக்கு இதெல்லாம் வேண்டாம்.
போட்டுக்கோடா. பாட்டிக்காக போட்டுக்க மாட்டாயா?
ம்ம்..கண்கலங்க அவரை அணைத்தாள்.
“சரி சரி…வா நேரமாகிடும்..” வெளியே அழைத்து வந்தார்.
வாவ் அண்ணா, சூப்பரா இருக்க? வேஷ்டி சட்டையில் அம்சமோ அம்சம் என்று சித்தார்த்தை சொல்ல, அவனுக்கு செம்மை பூசியது.
பொண்ணு தான் வெட்கப்படணும். ஆனாலும் சூப்பர்…திருஷ்டி கழித்தாள் பிரணிதா.
“எனக்கு தோணாமல் போனதே!” வசந்தி கூற, “அம்மாடி பிரணி என் காந்தியோட செகண்டு வெர்சன்” கூறி சிரித்தார் தாத்தா.