என்னோட ஆட்கள் வெளியே இருக்கும் அவுட் ஹவுஸிலாவது இருக்கட்டுமா? ஆபத்துன்னா உதவுவாங்க என்றான் தயக்கமுடன்.
“அப்பூ, அவுட் ஹவுஸ் தயார் செய். தங்கிக்கட்டும்” அவர் உணவுண்ண அமர்ந்தார்.
“உணவுண்ண எல்லாரும் வாங்க” அப்சரா அழைக்க, “எனக்கு பசிக்கலை” தர்மா அங்கேயே நின்றான்.
“வாய்யா சாப்பிட…” பாட்டி அழைக்க, தம்பி அங்கே சாப்பிட்டிருக்க மாட்டானே பாட்டி…
காலையில் இருந்து இன்னும் சாப்பிடலையா தர்மா? கேட்டான் சம்பத்.
எனக்கு பசிக்கலை. பாட்டி உங்க அறை எங்க இருக்கு?
கீழிருக்கும் அறையை காட்டினார் குருமூர்த்தி.
இப்படி உணவுண்ணாமல் இருந்தால் எப்படி? தாத்தா அவனை அமர வைக்க, “வேண்டாம் தாத்தா” அவன் எழுந்தான்.
“உட்காருங்க மாமா. எந்த பிரச்சனையாக இருந்தாலும் உணவை நிராகரித்தால் உணவை அவமதிப்பது போலாகும். சாப்பிடுங்க…” அப்சரா அக்கறையுடன் உணவை எடுத்து வைத்தாள்.
“உனக்கு இப்பொழுது பயமாக இல்லையா?” தர்மராஜ் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
கோபப்பட்டால் அவரை பார்த்தால் கூட பயப்பட தான் செய்வேன் சம்பத்தை பார்த்தாள். அவனும் அவளை பார்த்தான்.
“மாமா சாப்பிடலாமா? அப்புறம் உங்களோட ரொமான்ஸை வச்சுக்கோங்க. ரொம்ப பசிக்குது” யாதவ் கூற, “எல்லாரும் இருக்காங்க. என்ன பேசுற?” அவனை இடித்தாள் அப்சரா.
லுக் விடும் போது எல்லாரும் இருக்காங்கன்னு உனக்கு தெரியலையா? யாதவ் கேட்க, அவன் காலை மிதித்து, வாய மூடிட்டு சாப்பிடு இல்ல பட்னியா தான் இருக்கணும்.
“டாட்…இவளை பாருங்க…” யாதவ் குருமூர்த்தியை அழைக்க, பாவம் போல அமர்ந்திருந்தார் தனலட்சுமி.
“சித்தி சாப்பிடுங்க” அப்சரா கூற, அவர் தன் கணவரை பார்த்தார். அவர் கண்டுகொள்ளாமல் உணவை உண்டார்.
“அப்பா….” அப்சரா அழைக்க, அப்பூ நீ மாப்பிள்ளையோட அமர்ந்து உண்ணு.
அப்பா சித்தி…
“சாப்பிடுன்னு சொன்னேன்” சத்தமிட்டார்.
குருமூர்த்தி குரலை உயர்த்தி பார்த்திராத தனலட்சுமி மனதில் கலக்கம் பிறந்தது.
“டாட், மாம் இப்ப முன் போல் இல்லை” யாதவ் கூற, உண்டு கொண்டிருந்த உணவை விட்டெறிந்து அவரின் மூத்த மனைவி வசந்தி அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டார் குருமூர்த்தி.
அழுது கொண்டே தனலட்சுமி அவரறைக்கு செல்ல, சித்தி என்ற அப்சரா கரத்தை பற்றி நிறுத்தினான் சம்பத்.
யாரும் யாரையும் சமாதானப்படுத்த வேண்டாம். அவங்க பிரச்சனையை அவங்க பார்த்துக்கட்டும்.
“மாமா….” அப்சரா அழைக்க, “உன்னை அவங்க கஷ்டப்படுத்தும் போது பெத்த அப்பனா எதுவும் செய்ய முடியாத நிலையில் உன் தந்தை இருக்கும் போது அவர் மனநிலையை உன் சித்தி எண்ணவில்லை தானே!” சம்பத் கேட்டான்.
“யாது” அப்சரா அழைக்க, தர்மா அவன் கரத்தை பற்றி “அமரு. சாப்பிட்டு உன்னோட அம்மாவை கவனி” உணவுண்டு எழுந்தான். பின் அவன் ஆட்களை செட்டில் செய்து விட்டு வீட்டினுள் வந்தான்.
பாட்டி அவனை அழைத்து செல்ல, தாத்தா பாட்டி அறையில் அவர்களுடன் மனநிறைவுடன் நிம்மதியாக உறங்கினான் தர்மராஜ்.
சம்பத் அலைபேசி நடுஇரவில் சிணுங்கியது.
யாரது? எட்டிப் பார்த்தான்.
“மாமா…” அப்சரா திரும்பி அவன் மீது கையை போட அவளை நகர்த்தி விட்டு அலைபேசியை எடுத்து குளியலறைக்கு சென்றான்.
கந்தசாமி அழைத்திருந்தார்.
அங்கிள்…
சம்பா சீக்கிரம் வெளிய வா. நிரஞ்சன் தப்பிக்க ஒருவன் உதவி இருக்கான். பின் அவனே நிரஞ்சனை வெட்டி விட்டானாம். அவர்களிடமிருந்த நிரஞ்சன் தப்பி ஓடிக் கொண்டிருக்கிறான். போலீஸ் ஒருவரின் அலைபேசியிலிருந்து எனக்கு அழைத்து சொன்னான்.
“விசயம் தர்மாவிற்கு தெரியக் கூடாது. அவனது ஆட்களை மட்டும் அழைத்து சீக்கிரம் வா” இடத்தை கூறி வைத்து விட்டு அவர் வண்டியை வேகமெடுத்தார்.
அவுட் ஹவுஸில் இருக்கும் தர்மாவின் ஆட்களுடன் சம்பத் அவ்விடம் விரைந்தான்.
தான் கண்ட கனவில் திடுக்கிட்டு எழுந்த தர்மா வெளியே வந்தான். அப்பொழுது தான் சர்வாவும் தர்மா ஆட்களும் பதட்டமாக செல்வதை பார்த்து தர்மராஜூம் பின் தொடர்ந்தான்.
நடுவீதியில் கந்தசாமி மார்பினில் இருந்த அரிவாள் வெட்டும், அவருக்கு அருகே கீழே சரிந்திருந்த நிரஞ்சன் இரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.
“அங்கிள்” சம்பத் விரைந்து அவர்களை நெருங்க எதிரே சர்வாவும் அவரருகே வந்தனர்.
“நிரஞ்சா…” தர்மா வியர்த்து விறுவிறுக்க ஓடி வந்து தன் தமையனை தன் மடியில் போட்டு கதறி அழுதான்.
சீற்றமுடன் இதை பார்த்த சர்வா, “இது போல தான் நீ எல்லாரையும் கொல்லும் போது மற்றவர்களுக்கும் வலித்திருக்கும்” தர்மாவிடம் கத்தினான்.
ஊசலாடிக் கொண்டிருந்த உயிரை கரத்தில் பிடித்தவாறு கந்தசாமி கரத்தை பிடித்தான் நிரஞ்சன்.
சா…சா..சார்..அண்ணா உ..உயி..உயிரோட இருக்கணும் உ.. உங்..உங்களால முடியும் என்று தன் அண்ணனை பார்த்து, எ எ..என்னை மன்னிச்சிரு..
நிரஞ்சனின் உயிர்ப்பறவை பிரிந்து சென்றது.
“நிரஞ்சா…” தன் தம்பியை கட்டிக் கொண்டு கதறினான் தர்மராஜ்.
“சம்பா, இவங்கள பார்த்துக்கோ” வேஷ்டியை மடித்து கட்டி கீழே கிடந்த அரிவாளை எடுத்தான் தர்மராஜ்.
“அவனை போக விடாத. அவனை அழைச்சிட்டு வா…” கந்தசாமி கூற.,
சம்பத் தர்மராஜ் அருகே செல்ல,
“சம்பா நீ போ…அவனை சும்மா விட மாட்டேன்” கத்திக் கொண்டே சீற்றமுடன் அவன் நகர, சம்பத் பேசும் எதுவும் அவன் காதில் விழவில்லை.
சினமுடன் “தர்மா” என்று அவனை இழுத்து அறைந்தான் சம்பத்.
வா..அவன் கரத்தில் பற்றியிருந்த அரிவாளை தட்டி விட்டு தர்மாவுடன் ஆம்புலன்ஸில் ஏறினான் சம்பத்.
தர்மா, உனக்காக நான் டிஎஸ்பி யிடம் பேசினேன். நீ இந்த கொலைகாரனை பிடிக்க உதவினால் உன்னுடைய அனைத்து கொலைக்கான ரெக்கார்ட்ஸை அழித்து விடுவதாக கூறினார்.
என்ன சொல்றீங்க அங்கிள்?
ஆமா சர்வா, தர்மா கொலைகாரனாக இருந்தாலும் அவனுக்குள் இருக்கும் நல்லவன் சிலரை காப்பாற்றியும் இருக்கான்.
இவன் காப்பாற்றினானா?
யாரோ சொல்லி தான் கொலை செய்வான் தர்மா. அதையும் விசாரித்து செய்வான். இவனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டவர்களில் இருபது பேர் உயிரோட இருக்காங்க. அதில் முக்கியமானவர்கள் சம்பாவின் பெற்றோர்..
“அங்கிள்…” சம்பத் அழைத்து தர்மராஜை பார்த்தான்.
என்னடா சொல்றாங்க?
“முதல்ல இவரை மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போங்க” தர்மா கூற, தர்மராஜிற்கு அழைப்பு வந்தது.
வன்மமான சிரிப்பலையை புரிந்து சேதுபதி என அறிந்து, “என்னோட தம்பி என்னோட பேச்சை கூட தயாராக இல்லை. உன்னை நம்பி வெளியே வந்திருக்கான். இப்படி கொன்னுட்டீயே!” சீறினான்.
சர்வா அவனது அலைபேசியை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டான்.
குடும்பாக கொலை செய்து வெகுநாளாச்சு. இப்பொழுது அதற்கான வாய்ப்பு கிடைச்சிருக்கு. அந்த குருமூர்த்தி உன்னோட தாய்மாமான்னு உனக்கு தெரிஞ்சு போச்சோ தர்மா…
ஆமா, எதுக்கு இப்ப குடும்பத்தை பற்றி பேசுற? மற்றவர்களை பார்த்துக் கொண்டே கேட்டான் தர்மராஜ்.
வெரி சாரி தர்மா. மறுபடியும் நீ உன் குடும்பத்தை இழக்கப் போகிறாய். அதை விட உன் தம்பிக்கு அடுத்தபடியாக உன் மனதில் இருக்கும் அந்த பொண்ணு இப்பவே சாகப் போறா என்றவுடன் அனைவரும் அதிர்ந்தனர்.
யாருடா நீ? என்னோட பிள்ளைய எதுவும் செஞ்சிறாத? அந்த நிலையிலும் தன் மகளை எண்ணி பதறினார் கந்தசாமி.
யாரு? நம்ம எஸ். பி கந்தசாமியா? நீ எதற்காக வேலையை விட்டாயோ? அதே வேலையை உன்னோட பொண்ணு கையில் எடுத்திருக்கா. யாரும் என்னருகே இவ்வளவு சீக்கிரம் நெருங்கியதில்லை. அவ்வளவு என்னை நெருங்கிட்டா… இதுக்கு மேல அவளை விட்டால் நன்றாக இருக்காதுல்ல..அதான் தூக்கிட்டேன்.
எல்லாரும் அதிர்ந்தனர்.
“பிரணிதாவை விடு. என்னை என்ன வேண்டுமானாலும் செய். நான் இப்பொழுதே வருகிறேன்” என்றான் தர்மா.
அப்பப்பா…மிக உயரிய காதல் தான் போலவே! ஆனால் பாரேன் தர்மா… இங்கிருந்த அனைவரும் கவனித்துக் கொள்ள ஆட்கள் வைத்திருந்த நீங்கள்…பூம்பாறையை மறந்துட்டீங்க..
“ஏய்…” சம்பத் சத்தமிட்டான்.
அமைதி சம்பத். அங்க ஒருத்தனுக்கு உன் தங்கைன்னா பைத்தியமா இருக்கான். அதான் இன்னும் சற்று நேரத்தில் உன் தங்கை தாராவிற்கும் நிலன்….நினைவில் இருக்கா அவனுக்கும் முதலிரவு என்றான்.
“யாரு தான் நீ?” கந்தசாமி சத்தமிட்டார்.
நான் சேதுபதி. நினைவுக்கு வருதா கந்தசாமி. செய்யாத தவறுக்காக சிறையில் அடைத்தாயே அதே சேதுபதி.
சம்பா, உன்னோட அப்பன் கம்பெனி தயாரிப்புகளை என்னுடன் சேர்ந்து நன்றாக தான் சேல்ஸ் பண்ணிட்டு இருந்தான். ஆனால் அவனிடம் ஒன்று மட்டும் தான் கேட்டேன். அவன் தர மாட்டேன்னு சொல்லீட்டான். அதான் களத்தில் இறங்கி தர்மாவை வைத்து தான் கொன்றேன்.
தர்மா நீ கூறவில்லையா? சம்பத்தின் பெற்றோர் உன் கையால் இறந்ததை..
“அப்பாவிடம் என்ன கேட்ட?” சம்பத் வினவ, உன் அம்மா தான்.
சம்பத் பல்லை கடித்தான்.
நான் எதையும் அறிந்து செய்யவில்லை. அவ்விடத்தில் நீ கத்தியோடு நின்றிருந்தாய். என் கண்ணால் தான் பார்த்தேனே! தோய்ந்து கூறினார் கந்தசாமி.
பார்த்தால் விசாரிக்க மாட்டாயா? சேதுபதி சினமுடன், அந்த கொலையை நான் செய்யவில்லை. ஆனால் அதற்கு முன் ஒரு குடும்பத்தை கைலாசம் அனுப்பீட்டு தான் வந்தேன்.
ஏன்டா தர்மா, உன்னோட அப்பன் என் தோழன்னு நான் சொன்ன எல்லாமே கேட்டாயே! உன் அப்பன் எனக்கு பயந்து தான் தோழனாக பழகுவது போல நடித்தான் தெரியுமா?
உன் தந்தையும் காவலன்னு உனக்கு தெரியும். அவன் என்னை சீண்டியதால் உன்னுடைய அத்தையை கடத்தினேன். ஆனால் என்ன… எனக்கு என் வயது கோளாறு காரணமாக உன் அத்தையை விட மனதில்லாமல் அருகே வைத்துக் கொண்டேன். அவளை வைத்து தான் மிரட்டி வந்தேன். எல்லா திருட்டு, கொலையிலிருந்து தப்பினேன்.
ஒரு கட்டத்தில் உன் அப்பன் அவளது தங்கையை கண்டறிந்து காப்பாற்றி என் மீது புகார் அளிக்க சென்று விட்டான். வேறுவழியில்லாமல் தான் குடும்பத்தோடு கொன்று விட்டேன். உனக்கும் உன் தம்பிக்கும் அன்று நல்லநேரம் போல…தப்பிச்சுட்டீங்க.
உங்களிடம் நல்லவிதமாக பேசி உங்களை என்னுடன் இழுக்க எண்ணினேன். நீ உன்னுடைய தம்பியை என் பக்கம் வர விடலை. உனக்கே தெரியாமல் நீ மற்றவர்களை கொலை செய்வதை காட்சியாக அவனுக்கு காட்டினேன். அவனும் பழகினான்.
“உலகில் குற்றமே நிகழக் கூடாதுன்னு போராடிய ஒரு தந்தையின் மகன்கள் கொலைகாரர்கள் என்றால் எப்படி இருக்கும்? எனக்கு அப்படியொரு திருப்தி” கத்தி சிரித்தான் சேதுபதி.
கந்தசாமி மயங்க மருத்துவமனையும் வந்தது.
“ச்சீ…வாய மூடு. நீ செஞ்ச இந்த கேவலமான வேலைக்கு உன்னை சட்டத்தின் முன் நிறுத்தி இறந்த அனைவருக்கும் நீதி வாங்கித் தருவேன்” சர்வா சீறினான்.
மேலும் சிரித்தான் சேதுபதி.
உன்னோட வந்தனா தோழி என்னருகே! அப்புறம் உன் தோழன், சம்பத்தின் சின்ன தங்கை தாரணியும்..
பச்சிளம் குழந்தை மனதுள்ள உன் மச்சான் சித்தார்த்தும் இங்கே தான் இருக்கான். சம்பாவின் உற்ற தோழன் சேந்தனும் சித்தப்பா சிவக்குமாரும் மயக்கத்தில் இருக்காங்க.
பெண்களை அனுபவித்து எல்லார் வயிற்றிலும் கத்தியை இறக்கப் போறேன் சில மணி நேரங்களிலே…
உங்களது இரு குடும்பமும் அச்சோ…கேஸ் வெடித்து தூள் தூளாக கரையப் போறாங்க சிரித்தான்.
தர்மாவும் மற்றவர்களும் பதட்டமானார்கள்
தர்மாவின் ஆள் ஒருவனிடம், “இவர் அருகே எவனும் நெருங்கக் கூடாது. பார்த்துக்கோ” கந்தசாமியை மருத்துவமனையில் விட்டு, தன் மாமாவை அழைத்து சம்பத் எரிபொருளை செக் செய்ய சொன்னான்.
பிரச்சனையா மாப்பிள்ள?
ஆமா மாமா, பெரிய பிரச்சனை. வீட்டுக்குள்ள ஆட்கள் வந்துருக்காங்களான்னு பாருங்க. நாங்க போலீஸ் அனுப்புகிறோம். பத்திரமா இருங்க என்று சம்பத், பிரணிதா மாமாவிடமும் எச்சரித்தான்.
சர்வா, நீ நம்ம வீட்டுக்கு போ.
அதுக்கெல்லாம் நேரமில்லை என்ற தர்மா, தன் ஆட்களை பார்த்தான்.
“இதோ கிளம்புகிறோம்” என்று அவர்களுக்கு தெரிந்த ஆட்களை துணைக்கு அழைத்து வீட்டிற்கு கிளம்பினார்கள்.
“தர்மா அவன் எங்க இருப்பான் தெரியுமா?” சம்பத் கேட்க, ம்ம்! எங்களுடைய வீடாக தான் இருக்கும். மூவரும் அவ்விடம் விரைந்தனர்.
எரிபொருளில் பிரச்சனையில்லை எனவும் குருமூர்த்தி தன் குடும்பத்தில் அனைவரையும் ஒன்று சேர்த்து வைத்தார். வீட்டினுள் நுழையும் ஆட்களை தர்மாவின் சில ஆட்கள் சமாளித்துக் கொண்டிருக்க, அவர்களுடன் யாதவும் சேர்ந்து கொண்டான்.
தாரா, இவனுக கேடுகெட்டவனுக. கொலையெல்லாம் சாதாரணமா பண்ணுவாங்க. நம்மை கடத்தியவனால் தான் நம் வந்து உயிர் சென்றிருக்கும்.
நிரஞ்சன்..
அவன் தான் நம்ம வந்துவை கொன்றான். ஆனால் அவன் யாரோ சொல்லி தான் செய்திருக்கான். இவனுக செய்ததெற்கெல்லாம் என்னிடம் ஆதாரம் இருக்கு. என்னை கடத்தி இருக்கானுக. உன்னை சித் மாமாவை எதுக்கு கடத்தி இருக்காங்க?
மாமாவா?
ஆமா உனக்கு மாமான்னா எனக்கும் மாமாதானே!
இல்ல, நீ அண்ணான்னு அழை.
பாருடா.
ஆமா, சம்பா அண்ணாவை கூட நீ மாமான்னு அழைச்சுக்கோ..
என்னது? பிரணிதா அதிர, ஹம் எனக்கு தெரியும். இரவு அண்ணாவிடம் பேசினேன். உன்னோட லவ்வர் தான் சித்தோட மாமாவாம். அப்ப நீ சித்தை அண்ணான்னு தான் அழைக்கணும்.
யாரோ நம்மள பிடிச்சு வச்சிருக்காங்க. முறை சொல்லி அழைக்க இருவரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க? நீங்க யாரு? சித்தார்த் பிரணிதாவை கேட்டான்.
நானா? நான் உன்னோட… பிரணிதா சிரிப்புடன் தங்கை முறை.
“ஹப்பாடா…” பெருமூச்சு விட்டாள் தாரணி.
சித் அண்ணா, தாராவுக்கு உங்க மேல எவ்ளோ பொறாமை?
சித்தார்த் தாரணியை பார்த்து சிரித்தான்.
“இங்க என்ன உறவுமுறை போட்டியா நடக்குது?” கேட்டுக் கொண்டே பெருஞ்சிரிப்புடன் உள்ளே வந்தான் நிலன்.
“நிலன் நீயா?” தாரணி அதிர்ந்து சித்தார்த் பின் சென்று நின்றாள்.
“யாருடா நீ?” பிரணிதா கேட்க, அவளை மேலிருந்து கீழாக பார்த்து, “எதுக்கு டியர் அவசரம். எனக்கு முதலில் தாரா தான் வேண்டும். பின் நாம…ஹ..ஹ……” கேவலமான ஒரு சிரிப்பை உதிர்த்தான் நிலன்.
“இவனுக்கெல்லாம் பயப்படுற தாரா” பிரணிதா அவனது கையை பிடித்து முறுக்க, அவன் வெறி கொண்டு அவளை தள்ளி விட்டு தாராவை முன் இழுத்தான். பிரணிதா நெற்றியில் அடிபட்டு இரத்தக்காயத்துடன் கீழே விழுந்தாள்.
சித்தார்த் தாராவின் கையை இறுக பற்றி நிலனை தள்ளி தன் பின்னே நிற்க வைத்தான்.
உன்னோட மச்சான் உனக்கு சண்டை கற்று கொடுத்து விட்டானோ?
ஆமாடா பொறம்போக்கு என்ற சித்தார்த்தை வியந்து பார்த்தான் நிலன்.
அட, இதெல்லாம் கத்துக்கிட்டீயா? ஒரு மாதம் தானே ஆகும். அதுக்குள்ள…ம்ம்! என்ற நிலன் சித்தார்த்தை தாக்க, இருவரும் சண்டை போட, சித்தார்த்தால் நிலனுக்கு ஈடு கொடுக்கவில்லை.
நிலன் இவர்களை நெருங்கவும் விழித்த சேந்தனும் சிவக்குமாரும் கீழே ஆட்களிடம் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர்.
உள்ளே நுழைந்தனர் சம்பா, சர்வா, தர்மா. இருபதுக்கும் மேற்பட்ட ஆட்கள் இருந்தனர்.
சம்பத், தர்மா, சர்வா, சேந்தன், சிவக்குமார் ஒருவரை ஒருவர் கண் நோக்கி ஒருவாறு களத்தில் குதித்தனர்.
நிலனுக்கு ஈடாக முடியாமல் சித்தார்த் அடி வாங்கிக் கொண்டிருந்தான். தாரணி அழுது கொண்டிருந்தாள். பிரணிதா மெதுவாக எழுந்தாள்.
சித்தார்த்தை கண்டபடி அடித்து அவனை துவல வைத்து விட்டு தாரணியை நெருங்கினான் நிலன்.
“நிலன் வேண்டாம். என்னோட அண்ணாவை பற்றி தெரியும்ல்ல? உன்னை கொல்லாமல் விட மாட்டான்” அழுது கொண்டே பின்னே நகர்ந்தாள் தாரணி. அவளது தாவணி முந்தானையை பிடித்து இழுக்க, தாரணியின் தாவணி நழுவியது.
துடித்து கதறிய அவளை காக்க எண்ணிய பிரணிதா அரவமில்லாமல் எழுந்து கழுத்தில் சுற்றியிருந்த துப்பட்டாவை நிலன் கழுத்தில் போட்டு அவனை இழுத்தாள். தாரணி அப்படியே அமர்ந்து அழுதாள்.
“தாரா…எழுந்திரு” பிரணிதா சத்தமிட, துப்பாட்டாவை இழுத்து அவனை சுவற்றில் முட்ட வைத்தாள். அவன் பட்டென துப்பட்டாவை பிடித்து பிரணிதாவை இழுத்தான். அவள் நேராக அவனிடம் வந்து முட்டினாள்.
கழுத்தில் மாட்டி இருந்த துப்பட்டாவை தூக்கி எறிந்து அவளை சுவற்றில் சாய்த்து பிரணிதா கழுத்தை தூக்கி பிடித்தான். அவளது வாசனையில் அவன் மனம் சிக்குண்டது.
பல்லை காட்டியவாறு கீழே விட்டான். சித்தார்த் இரத்தக்களறியுடன் எழுந்து நின்றான்.
“பரதேசி..கொஞ்சம் விட்டிருந்தால் செத்திருப்பேன்” நிலனை திட்டிக் கொண்டே பிரணிதா சித்தார்த்தை பார்த்தாள்.
சண்டையில் இருந்த அனைவரும் பிரணிதாவின் பேச்சில் நின்று பின் மீண்டும் சண்டை தொடர்ந்தது.
அடித்து போட்டு அவர்கள் பெண்கள் இருக்கும் அறைக்கு வந்தனர்.
நிலனை சமாளிக்க ஒரு பொருள் கூட அவ்வறையில் இல்லை.
ஆண்கள் உள்ளே செல்ல, படுக்கைக்கு கீழே சித்தார்த் கழுத்தை மிதித்தவாறு பிரணிதா முடியை கொத்தாக பிடித்துக் கொண்டு தாராவின் மீது படர்ந்திருந்தான் நிலன். தாரா கதறிக் கொண்டிருக்க, பிரணிதா கத்திக் கொண்டிருந்தாள்.
இவர்களுக்கு முன்னதாக தர்மா நிலனை இழுத்து அவனை மாத்து மாத்து என மாத்திக் கொண்டிருந்தான். நிலனால் தர்மாவின் அடியை தாங்க முடியவில்லை. அவன் சோர்வுடன் கீழே விழ, அனைவரும் கீழே இறங்கி வந்தனர்.
சர்வா சும்மா இல்லாது பிரணிதாவிடம், “அறிவிருக்கா உனக்கு? அவனிடம் சீண்டிக்கிட்டு இருக்க? அவனை பார்த்தாலே போதையில் இருப்பது போல இருக்கு” திட்டினான்.
அவன் கன்னத்தில் பளாரென அறைந்தாள் பிரணிதா.
எல்லாரும் திகைக்க அவன் போதையில் இருந்தால் என்ன? இல்லைன்னா என்ன? நாங்க தப்பிக்க என்ன செய்யணுமோ அதை தான் செய்தோம்… தர்மாவை போல கையை உதறிக் கொண்டே நடந்தாள்.
“ஹம்..அப்படியா? அதான் சித்தார்த்தை மாமான்னு அழைக்கணுமா? அண்ணான்னு அழைக்கணுமான்னு? விவாதம் நடத்துனீங்களா?” நக்கலாக கேட்ட சேந்தன், அதை செய்ததற்கு தப்பிக்கும் வழியை கண்டுபிடித்திருக்கலாம் என்றான் அலட்டலுடன்.
“சும்மா இருக்க மாட்ட….” பிரணிதா அவனை நெருங்க, ஷ்ஷ்ஷ்…என்றான் தர்மா.
இவர்கள் அடித்து போட்ட ஆட்கள் யாரும் அவ்விடம் இல்லை.
“சம்பா…..” தர்மராஜ் அழைக்க, துப்பாக்கியுடன் அவர்களை சுற்றி வளைத்தனர் சேதுபதியின் ஆட்கள்.
“இவங்கள விட்ருங்க. நம்ம பிரச்சனையை நாமே தீர்த்துக் கொள்ளலாம்” தர்மராஜ் கூற, “உன்னோட குடும்பம் போல இவங்களுக்கும் ஏதும் ஆகிடுமோன்னு பயமா இருக்கா” கேட்டுக் கொண்டே வெளியே வந்தார் சேதுபதி.