காதல் 18

தர்மாவிற்கு தன் குரு சேதுபதியின் மீது மனக்கசப்பு ஏற்பட்டது. அவரை சந்திக்க சென்றான்.

“பசங்களா நம்ம தர்மா மாப்பிள்ளையாக போறானாம்” கேலி கூறுவது போல சேதுபதி ஏளனமுடன் சிரித்தான்.

“குரு, என்ன செஞ்சு வச்சிருக்கீங்க? நிராவிற்கு கொலை செய்யும் எண்ணத்தை தூண்டி இருக்கீங்க” சத்தமிட்டான்.

என்னடா என்னிடமே சத்தம் போடுற?

உங்களுக்காக வேலை செய்ய தான் நான் இருக்கிறேனே! எதற்கு அவனுக்கும் இந்த பழக்கத்தை கற்றுக் கொடுத்தீங்க?

நானா கற்றுக் கொடுத்தேன். நீ பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை கண்ட அவனும் பழகினான். ஒரு பெண் அவனை நிராகரித்ததால் கொலை செய்தான். அன்று அவனுக்கு வந்த ஆசை இந்த கொலை.

குரு, நீங்கள் அவன் மனதை மாற்றி இருந்திருக்கலாம் இல்லை என்னிடம் அவனது எண்ணத்தை தெரிவித்து இருக்கலாம். அதை விட்டு அவனை கொலை செய்ய வச்சிருக்கீங்க.

நீ தான் அவனுடைய முன்னுதாரணம்..

குரு, அவன் முன் நான் என்றும் கொலை செய்ததில்லை. எங்கள் இருவரையும் வைத்து ப்ளே பண்ணாதீங்க. நான் செய்தால் நீங்க தாங்க மாட்டீங்க சேதுபதியை மிரட்டினான் தர்மராஜ்.

தர்மா, நீ திருமணம் என்றவுடன் உடலுக்காக என்று எண்ணினேன். ஆனால் அவள் உன் மனதை மொத்தமாக மாற்றி இருக்கிறாள். எப்போதும் போல எந்த கேள்வியும் இல்லாது சொல்வதை செய் இல்லை அவளும் சரி அவளது குடும்பமும் உயிரோட இருக்க மாட்டாங்க.

மொத்த குடும்பமாக கொலை செய்து வெகு வருடமாகி போனது. செய்ய வைத்து விடாதே! உறுமினான் சேதுபதி.

“குடும்பமாக கொலையா?” மனதில் எண்ணியவாறு தர்மா தனது கூர்விழிகளுடன் அவரை ஏறிட்டான்.

என்ன பாக்குற? வயசாகிடுச்சு. முடியாதுன்னு நினைக்கிறியா?

பிரணிதாவை மட்டுமல்ல அவள் குடும்பத்தை உங்களால் தொட முடியாது…

என்னிடமே சவாலா?

ம்ம்! சவால் தான்..

அந்த சர்வா, சம்பா இருக்கானுகன்னு தைரியமா?

எதற்கு அவர்களை இவர் இழுக்கிறார். குருமூர்த்தி சார் போல அவர் குடும்பத்தை ஏதும் செய்யும் எண்ணம் உள்ளதோ? எண்ணமுடன்….ஓ, வந்தனா கொலை கூட இவரால் இருக்கலாம் என எண்ணியவாறு அவரை முறைத்து நகர்ந்தான்.

“டேய், தர்மாவை பின் தொடருங்கடா…” சேதுபதி கூற, அவர் ஆட்கள் அவனை பின் தொடர்ந்தனர்.

எண்ணமெல்லாம் தன் குடும்பம் மீது வந்து விழுந்தது தர்மராஜிற்கு.

கேஷ் வெடித்து தன் குடும்பம் வீழவில்லையோ? அவன் வாழ்ந்த வீட்டிற்கு செல்ல எண்ணினான். இவர்களை பின் தொடர்வதை பார்த்து வீட்டிற்கு சென்று விட்டான்.

இரவில் சம்பாவிடமிருந்து தர்மராஜிற்கு அழைப்பு வந்தது.

சொல்லு?

“பிரணி அங்க வந்துருக்காளா?” சம்பத் கேட்கவும் பதறினான் தர்மா.

ஏன் என்னாச்சு? அவள் இன்னும் வீட்டிற்கு வரவில்லையா?

எதுக்கு இப்படி பதறுற? சம்பா கேட்க, அவனிடம் அலைபேசியை வாங்கிய பிரணிதாவின் அக்கா கணவன், வர நேராகும்ன்னு சொன்னா. அவளது ஆபிஸ்லயும் இல்லை. எங்களுக்கு தெரிந்த வேறெங்கும் இல்லை. அதான் உங்க வீட்டிற்கு வந்தாளான்னு கேட்டோம்.

இல்லையே! வேகவேகமாக கீழிறங்கி வந்தான்.

கந்தசாமி அவர்கள் அலைபேசியின் ஊடே வந்தார்.

மாமா..

பிரணி வீட்டுக்கு வந்துட்டா மாப்பிள்ள. பிரச்சனையில்லை என்றார்.

இதை கேட்கவும் தர்மா பெருமூச்சுடன் அமர்ந்தான்.

“நாம் இப்பொழுது சந்திக்கலாமா?” பிரணிதாவின் மாமா கேட்க, “வேண்டாம்” சட்டென கூறினான் தர்மராஜ்.

என்னாச்சு தர்மா? பதட்டமாகவே இருக்க? பிரச்சனையா? சம்பத் கேட்டான்.

ஒன்றுமில்லை.

“சரி வெளிய வா…” சம்பத் அழைக்க, வெளிய வா?…

நாங்கள் வெளியே தான் இருக்கோம்.

“எதுக்கு வீட்டுக்கெல்லாம் வந்தீங்க?” சத்தமிட்டான்.

எதுக்கு இவ்ளோ சத்தம் போடுறான்? சுற்றும் முற்றும் பார்த்த சம்பத் கண்ணில் ஆட்கள் சிலர் அவர்களை கவனிப்பதை பார்த்தான்.

ஹலோ, யார் நீங்க? சம்பத் கேட்க, அவன் மீது கத்தியை வீசினான் ஒருவன். சம்பத் கத்தி மேலே படாமல் பின் விலகி அவர்களை பார்த்து அதிர, அவர்கள் பிரணிதாவின் மாமா அருகே சென்றனர்.

வாசலருகே வந்து கொண்டிருந்த தர்மராஜ் விரைந்து அவர் முன் நின்று சேதுபதியின் ஆட்களை வெறித்து பார்த்தான்.

“இருவரும் வீட்டுக்குள்ள போங்க” தர்மராஜ் கூற, இருவரும் அவனது சீற்றமான முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றனர்.

போங்க…கத்தினான் தர்மராஜ்.

இருவரும் உள்ளே செல்லவும், இனி என்னை எவன் பின் தொடர்ந்தாலும் உயிரோட இருக்க முடியாதுன்னு அவர்கிட்ட போய் சொல்லுங்க.

“தர்மா நீ செய்றது சரியில்லை” ஒருவன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தர்மராஜ் முன் வந்தான்.

“வேண்டாம்..கிளம்புங்க” பல்லை கடித்து கூறினான்.

நீயும் நிரஞ்சனும் உயிரோட இருக்க காரணமே நம்ம அய்யா தான்..

“போங்கன்னு சொன்னேன்….” சினமுடன் தர்மா ஒருவனை அடிக்க, மற்றவர்கள் அவனை தாக்க பிரணிதாவின் மாமாவும் சம்பத்தும் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை அடித்து அனுப்பிய தர்மராஜ் கையை உதறிக் கொண்டே உள்ளே வந்தான்.

“என்ன விசயம்? சொல்லுங்க…” முகம் கடுமையாக இருந்தது.

“இப்படி மூஞ்சிய வச்சுக்கிட்டு இருந்தா எப்படி பேசுறது?” பிரணிதாவின் மாமா கேட்டார்.

சொல்லுங்க? அவனால் அவன் முகத்தை மாற்ற முடியவில்லை. அவ்வளவு சினம்…

உங்க தம்பியை போலீஸிடம் ஒப்படைக்கலாமே! அவர் தான் திருந்துவதாக இல்லையே!

சம்பத்தை பார்த்தான் தர்மராஜ்.

நீ கஷ்டப்படுறதை விட ஒப்படைப்பது நல்லது. எப்படியும் சரணடையும் நோக்கம் தான? எங்கோ பார்ப்பது போல கேட்டான் சம்பத்.

நிரஞ்சன் தன் பேச்சை கேட்கும் நிலையிலும் இல்லை. இவனுக கையில மாட்டுனா அவனை நமக்கு எதிராகவே திருப்புவானுக. அதனால் இவர்கள் கூறுவதும் சரி.. எவங்கிட்டயும் அடி, குத்து பட்டு சாவதை விட இது மேல் என்று எண்ணினான்.

வெயிட் பண்ணுங்க வாரேன்.

பிரணிதாவின் மாமா தர்மராஜ் கையை பிடித்து, எப்படி உடனே ஒத்துக்கிட்ட?

அவன் திருந்துவானா இல்லையான்னு தெரியல. ஆனால் அவன் இப்பொழுது வெளியே இருப்பது சரியில்லைன்னு எனக்கு தெரியும் என்று அவர் கரத்தை எடுத்து விட்டு, தன் தம்பி கற்பழித்து கொலை செய்த பெண்களின் பட்டியலை கொடுத்தான்.

உடனே நிரஞ்சனை தூக்கிலிடவும் செய்வாங்க. உனக்கு தெரியும்ல்ல தர்மா? சம்பத் கேட்க, ம்ம்! கலங்கிய மனதுடன் கூறினான்.

எனக்கு முடிக்க வேண்டிய வேலை ஒன்று உள்ளது. அது முடியவும் நானும் என்னை பற்றிய ஆதாரத்தை கொடுத்து சரணடைந்து விடுகிறேன் என்று நிரஞ்சன் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை கொடுத்தான்.

நிரஞ்சன் பற்றிய ஆதாரத்தை என்னறைக்கே வந்து திருடி இருக்கானுக? அதான் உன்னிடம் கேட்கிறோம்?

தெரியும்…அந்தாளை நீங்க எதிர்க்க வேண்டாம். நான் பார்த்துக்கிறேன் என்றான் தர்மராஜ்.

தர்மா நீ ஓ.கே வா? சம்பத் தர்மராஜ் தோளில் கை வைக்க, தர்மா அவனை கட்டிக் கொண்டான்.

நான் ஏற்கனவே கூறியது போல உங்களது இரு குடும்பத்தையும் பத்திரமா பார்த்துக்கோ…

இவங்க யாரு தர்மா? உன்னோட ஹெட் ஆட்களா? வினவினார் பிரணிதாவின் மாமா.

“அவன் ஏதும் கூறாமல் சீக்கிரம் வீட்டுக்கு கிளம்புங்க. எதுவும்ன்னா கால் பண்ணுங்க. வீட்டுக்கு யாரும் வர வேண்டாம்” எச்சரித்து அவர்களை கிளப்பி விட்டு அங்கேயே படுத்துக் கொண்டான்.

தர்மராஜிற்கு அவனது தாயின் உருவம் நிழலாடிக் கொண்டே இருந்தது. இறுக தன் விழிகளை மூடிக் கொண்டான்.

காலை விடிந்தவுடன் நிரஞ்சனை கைது செய்ய போலீஸ் வந்து நின்றனர்.

“அண்ணா, என்ன செஞ்சு வச்சிருக்க? நான் உன்னோட தம்பி” நிரஞ்சன் சத்தமிட்டான். அதனால் தான் உன்னை கைது செய்ய ஆதாரத்தை சமர்ப்பித்தேன்.

“அந்த பொண்ணு உன்னை அப்படி மயக்கி வச்சிருக்காளா? பார்த்துக்கிறேன். அய்யா என்னை வெளியே எடுப்பார்” நிரஞ்சன் கூற, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் தர்மராஜ்.

கண்டவனை அய்யான்னு சொல்லாத. நம்முடைய தந்தை மிகவும் நல்லவர். நம்மை போல் கேடுகெட்டவர் இல்லை.

எல்லாம் என்னால் தான். நான் உனக்கு தவறான பாதையையும் வாழ்க்கையையும் ஏற்படுத்தி கொடுத்து விட்டேன். நானும் சீக்கிரமே சரணடைவேன். இத்தனை வருடமாக செய்த பாவத்தில் ஒரு பங்கையாவது கரைத்து விட்டு வந்துருவேன் நிரஞ்சனை கையெடுத்து கும்பிட்டு,

“என்னை மன்னிச்சிருடா. அப்பா போல என்னால் உன்னை நல்லவனாக வளர்க்க முடியாமல் போனது” தரையில் அமர்ந்து அழுதான் தர்மராஜ்.

அவனை கண்டவாறே சென்றான் நிரஞ்சன்.

நிரஞ்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாலை வரை தர்மா அறைலிருந்து வெளியே வரவேயில்லை.

அவனறையில் படுத்திருந்த போது பிரணிதாவிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

“இவள் வந்து என் வாழ்க்கையையே மாற்றி விட்டாள்” அலைபேசியை தூக்கி போட்டான்.

“இவளுக்கு எப்படி என்னுடைய புது எண் தெரியும்?” சிந்தனையுடன் அலைபேசியை எடுத்து காதில் வைத்தான்.

“தர்மா குருமூர்த்தி சார் வீட்டுக்கு இப்பொழுதே வா” சொல்லி அழைப்பை துண்டித்து விட்டாள்.

“ஏதும் பிரச்சனையாக இருக்குமோ? குரு யாரையும் ஏதும் செய்து விட்டாரோ?” அப்சரா வீட்டிற்கு விரைந்தான்.

நிரஞ்சன் கற்பழித்து கொலை செய்த வழக்கில் வந்தனா பெயரும் இடம் பெற்றிருக்க குருமூர்த்தியை வெளியே அனுப்பினார்கள். அவரும் அவர் வீட்டில் இருந்தார்.

சம்பத்திற்கு முதலில் தன் நன்றியை கூறி விட்டு சர்வா, அப்சரா, யாதவை அணைத்துக் கொண்டார்.

தன் பெற்றோரிடம் மன்னிப்பை யாசகம் கேட்ட குருமூர்த்தியை அவர்கள் ஏற்றுக் கொண்டு பாசத்தால் அவரை கட்டி அணைத்தனர்.

தனலட்சுமி, ஜெயா, கீர்த்திகாவை பார்த்துக் கொண்டே தன் முதல் மனைவியை காண சென்றார். அங்கே ஒரு செவிலியரும் இருந்தார்.

வசந்தி, சீக்கிரம் எழுந்திரும்மா. நம்ம பொண்ணுக்கு திருமணம் முடிஞ்சிருச்சு. அவள் பிறந்த போது ஆசையாக என்னிடம் கூறிய எல்லாவற்றையும் செய்யணும்.

“உங்களை நான் வெளியே அழைச்சிட்டு போறேன். இதுவரை குடும்பமாக நாம் நேரம் செலவழித்ததேயில்லை. எழுந்திரும்மா…நம் சித்தார்த்தும் நன்றாக இருக்கிறான். எழுந்து வாம்மா…” வசந்தி கரத்தை தன் கரத்தினுள் வைத்து குலுங்கி குலுங்கி அழுதார்.

“அப்பா…” அப்சரா அவர் தோளில் கை வைத்தாள்.

நீ அருகே இருந்த போது எனக்கு பெரிதாக எதுவும் தெரியவில்லை. உடல் நலமில்லாமல் படுத்த பின்னும் நீ அருகே இருக்கன்னு தான் அமைதியாக இருந்திருக்கேன். ஆனால் சிறையில் இந்த ஒரு மாதங்களாக உன்னை பற்றியும் நம் பிள்ளைகள் பற்றியும் தான் எண்ணம்.

நம்ம யாது உன்னை தினமும் வந்து பார்க்கிறான். உனக்கு அவன் உன்னிடம் பேசியது கேட்டதா? அவன் மட்டும் பக்கம் வரவே மாட்டேங்கிறான்னு வருத்தப்படுவேல்ல. இப்ப வந்துருக்கான். புள்ளைங்க, மாப்பிள்ளங்க எல்லாரும் இருக்காங்க… எழுந்திரும்மா..அழுதார்.

கண்ணீர் கசிய அனைவரும் குருமூர்த்தியை பார்த்தனர்.

தன் குடும்பமென்று அனைவரையும் கூறும் தன் கணவன் தன்னை சேர்க்கவில்லையே! வேரறுந்த நிலையில் தனலட்சுமி அமர்ந்து விட்டார்.

“அண்ணா” ஜெயா அருகே வர, “நில்லு பக்கம் வாராதே!” சத்தமிட்டு, சர்வா மாப்பிள்ள உங்க அம்மாவும் அவங்க பொண்ணும் நம் வீட்டினர் பக்கம் வரவே கூடாது. வெளிய அனுப்புங்க. அவங்களுக்காக ஏற்கனவே பிரித்து வைத்திருந்ததை கீர்த்திகா பெயருக்கு மாற்றி இருக்கேன்…

நம்ம வக்கீல் பொண்ணு தயார் செய்து வச்சிருப்பாங்க. போங்க வாங்கிட்டு வந்து அவங்களுக்கு கொடுங்க.

“தப்பா எடுத்துக்காதீங்க மாமா. அப்பா இல்லாத இந்நிலையில் இருவரையும் என்னால் தனியே விட முடியாது. அதனால் நானும் போகிறேன்” சர்வா கூற, “மாமா…..” அப்சரா அவனருகே வந்து நின்றாள்.

“சர்வா உன்னை போக நானும் விட மாட்டேன்” குருமூர்த்தி அவனருகே வந்தார்.

இல்ல மாமா, இதை நீங்கள் முன்பே செய்திருந்திருக்கணும். இது எங்களது வீடில்லைன்னு எனக்கு நன்றாக தெரியும் என்று தன் அன்னை தங்கையை பார்த்து, “என்னோட வரப் போறீங்களா இல்லை வேற பணக்காரன் எவனும் மாட்டுறானான்னு பார்க்க போறீங்களா?” சீற்றமுடன் கேட்டான்.

கீர்த்திகா சர்வா அருகே வந்து, “உன்னோடவே வந்துடுறோம் அண்ணா” தன் அன்னையை பார்த்தாள். ஜெயாவும் வேறு வழியில்லாமல் சர்வா அருகே வந்தார்.

பாட்டியும் தாத்தாவும் சர்வாவை கண்கலங்க ஏறிட்டனர்.

“நாங்க வாரோம்…” சர்வா திரும்ப, அப்சரா அவன் கையை பிடித்து…மாமா, நீங்க எங்கு வேண்டுமானாலும் போய்க்கோங்க. ஆனால் மூன்று வேளையும் நம் வீட்டிற்கு உணவுண்ண வரணும்..

சாரி அப்பூ…என்னால முடியாது..

ப்ளீஸ் மாமா…அவள் கெஞ்ச, ஒரு நேரத்துக்காகவாது வரலாமேப்பா? தாத்தா ஏக்கமுடன் தன் பேரனை பார்த்தார்.

ம்ம்! சரிங்க தாத்தா. கண்டிப்பாக வருவேன். ஆனால் உங்கள் மகள் இனி இந்த வீட்டிற்கு வர மாட்டார். தன் அன்னையை பார்க்க, சர்வா நாங்களும் இரவு மட்டும்..இழுத்தார் ஜெயா.

அம்மா, நீ செய்ததெல்லாம் போதும். அவங்க இனி நிம்மதியாக வாழட்டும். அவங்கள விட்ரு. மாமா உன்னை தனியே விடலை. சொத்து, வீடு கொடுத்திருக்கார்.

“நான் மட்டும் இரவு உணவிற்கு வருவேன்” சம்பத்தை பார்த்து, “சம்பா எல்லாரையும் கவனமா பார்த்துக் கொள்” வெளியேறினான்.

இரவு பணியை முடித்து விட்டு நேராக சம்பத்தை காண வந்து விட்டான் சர்வா. அனைவரும் குடும்பமாக காபி அருந்திக் கொண்டிருந்த போது தர்மராஜ் வந்து நின்றான்.

“தர்மா, நீ இங்க என்ன செய்ற? வா…” சம்பத் அழைக்க, குருமூர்த்தி அவனை வெறித்து பார்த்தார்.

பிரணிதா வரச் சொன்னாள் என்றான்.

பிரணியா? எங்களிடம் எதுவும் கூறவில்லையே! அப்சரா அனைவரையும் பார்த்தாள்.

குருமூர்த்தியிடம் நடக்கும் அனைத்தையும் பகிர்ந்திருப்பான் சம்பத்.

“மாமா, அவளுக்கு கால் பண்ணுங்க” அப்சரா சம்பத்திடம் கூறினாள்.

“பாட்டி….” ஆரவாரமுடன் வீட்டினுள் ஓடி வந்தாள் பிரணிதா. அவள் விழிகள் தர்மாவை கண்டு நிம்மதியுடன் பாட்டியிடம் நேராக சென்று, “பாட்டி ஸ்வீட் எடுத்துக்கோ” இனிப்பை அவருக்கு ஊட்டி விட்டாள்.

ஏய்..பிரணி, இவனை எதுக்கு வீட்டுக்கு வரச் சொன்ன? சர்வா பேசுவது காதில் விழாதது போல, உன்னோட மூத்த பொண்ணு பேரழகி குடும்பத்தை கண்டு பிடிச்சுட்டேன்…

“என்ன?” குருமூர்த்தி அதிர்ந்து அவளை நெருங்கினார்.

மூத்த பொண்ணா? யார சொல்ற பிரணி? அப்சரா கேட்டாள்.

பதினேழாம் வயதில் பணத்திற்காக ஆட்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக செய்தி வந்த உன்னுடைய அத்தை பேரழகி பற்றி தான் கூறுகிறேன்.

“பாட்டி…..” சர்வா அழைக்க, தாத்தா பிரணிதாவிடம், “உண்மையாக எங்கள் மகள் தானா? எங்கே இருக்கிறாள்?” கேட்க, “தாத்தா..” பிரணிதா தர்மராஜை பார்த்தாள்.

“அவனுக்கு விசயம் புரிந்து போனது. எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்புகிறேன்” விறுவிறுவென தர்மா நகர, “தர்மா நில்லு” பிரணிதா அழைத்தாள். அவன் காதிலே வாங்கவில்லை.

“பாட்டி, உம் பொண்ணு பேரழகியோட பசங்க தான் தர்மாவும் நிரஞ்சனும். அவனை நிற்க சொல்லு” சத்தமிட்டாள்.

“இவனா?” சர்வா முகம் சுருங்கியது.

அதுமட்டுமல்ல உம் பொண்ணும் அவ குடும்பமும் கேஸ் வெடித்து இறந்ததாக ரெக்கார்ட்ஸ் இருக்கு பட் அவங்கள கொன்றுக்காங்க கத்தினாள்.

தர்மா ஒரு நிமிடம் நின்று மேலும் நகர, “தர்மா” சம்பத் அழைத்தான்.

“என்னது இவர் எனக்கு மாமாவா?” அப்சரா முகம் கோணியது.

“ஏய்…நில்லுடா” குருமூர்த்தி சத்தமிட நின்றான்.

பிரணிதா சினமுடன், ஏன்டா தொண்டை கிழிய கத்த வைக்கிற…

தொண்டையை செறுமி, பாட்டி உம் பேரனுக்கு பழி வாங்க நேரமா இல்லை. என்னை கத்த வைக்கிறான்.

எப்படிம்மா சொல்ற? குருமூர்த்தி அவளருகே வர, அனைவரும் அவர்களை சூழ்ந்து நின்றனர்.

தர்மராஜின் குடும்ப புகைப்படத்தில் அவனது அம்மாவையும் அவனது சிறுவயது புகைப்படம் அவன் தாய் தந்தை, நிரஞ்சன் கைப்பிள்ளையாக இருக்கும் புகைப்படத்தை காட்டினாள்.

“எனக்கு யாருமில்லை. என்னோட தம்பியும் சிறையில் இருக்கிறான்” சொல்லி மீண்டும் தர்மராஜ் நகர, அவனை மறித்து நின்றார் தாத்தா.

“உன்னை பார்த்தவுடன் என் உள் மனது ஏதோ சொன்னது. ஆனால் நீ…..” தர்மராஜின் கன்னத்தில் கை வைத்தார் பாட்டி. மளமளவென அவன் கண்ணீர் வழிந்தது.

“உனக்கு ஏற்கனவே தெரியுமா?” பிரணிதா சிந்தனையுடன் தர்மராஜை பார்த்தாள்.

“நீ அங்கிள்கிட்ட சொல்லீட்டு வந்தீயா? இல்லையா?” சர்வா பிரணியை பார்க்க, “சொல்லீட்டா போச்சு” தர்மாவை பார்த்தாள்.

அம்மா இந்த வீட்டு பொண்ணுன்னு தெரியாது. இன்று தான் என் குடும்பத்தை ஒருவன் கொன்றிருக்கான்னு தெரிந்தது.

“யாருன்னு தெரியுமா?” பிரணிதா கேட்க, எல்லாரும் அவனை பார்த்தனர்.

என்னால உங்கள என்னோட உறவா ஏத்துக்க முடியாது. நான் கிளம்புகிறேன்…

பாட்டி தன் மகன் குருமூர்த்தியிடம், “கண்ணா நானும் என்னோட பேரனுடன் அவன் வீட்டிற்கு செல்லவா?” கேட்டார்.

தர்மராஜ் அதிர்ந்து, வேண்டாம்…நீங்க இங்கேயே இருங்க பாட்டி. என்னோடு இருப்பது ஆபத்து.

அப்படின்னா, நீ இங்கே வந்துரு தாத்தா கூற,

நான் கிளம்புகிறேன் அவன் செல்ல, அவன் யாருன்னு சொல்லு? கேட்டார் குருமூர்த்தி.

சொல்ல முடியாது சார். யாரும் இந்த விசயத்தை இப்பொழுதைக்கு வெளியே சொல்ல வேண்டாம்.

அவன் உனக்கு சார் இல்லை மாமான்னு கூப்பிடு கண்ணா..

இல்ல பாட்டி, இப்பொழுதிருக்கும் நிலையில் யாரும் என் பக்கம் வர வேண்டாம். அது மேலும் ஆபத்தாகி விடும். நான் செய்த வினை என்னை விரட்டுகிறது. நானே பார்த்துக்கிறேன்…

அறியாத வயதில் செய்ததை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது தாத்தா கூற, “ஒரு மாதத்திற்கு முன் கூட ஒருவனை கொன்றேன்” சம்பத்தை பார்த்து தர்மா வெளியேற, பாட்டி மயங்கினார்.

“பாட்டி” அனைவரும் பதற, புதிதாய் அறிந்த பந்தமாயிற்றே! தர்மாவும் உள்ளே வந்தான்.

எல்லாரும் அவனை ஒருவாறு முறைக்க, அவன் புரியாமல் பார்த்தான்.

நீ இங்கே இருக்கலாம். ஆனால் ஒரு கண்டிசன். உன்னோட ஆளுங்கன்னு எவனும் வீட்டுக்குள்ள வரக் கூடாது… குருமூர்த்தி கூறினார்.

நான் என்னோட வீட்டுக்கு பாட்டியையும் தாத்தாவையும் அழைச்சிட்டு போறேன்.

“நீ வெளியே இருக்கும் சமயம் அவங்களுக்கு ஆபத்து வராதுன்னு என்ன நிச்சயம்?” சம்பத் கேட்டான்.

“மாமா, இவன் நம்ம வீட்ல வேண்டாம்” முகத்தை சுளித்தான் சர்வா.

“ஹேய், தர்மா உனக்கு அண்ணன். ஒழுங்கா மரியாதை குடு” விழித்த பாட்டியை பார்த்து, “பாட்டி சரிதான?” சர்வாவை பார்த்து உதட்டை கோணினாள் பிரணிதா.

“அவனை சொன்னால் இவளுக்கு என்னவாம்?” முணங்கினான் சர்வா.

அவன் காதருகே வந்த அப்சரா, மாமா பிரணி அவ காதல்ல தெளிவா இருக்கா. நிரஞ்சன் உள்ள போயிட்டான். தர்மாவிற்கு என்ன தண்டனை கிடைக்கப் போகுதோ? அந்நேரம் பாருங்க. அழுதுட்டு இருப்பா..

“தண்டனையா? எல்லாரும் நடுரோட்டுல வச்சு அவனை சுட்டு தள்ளப் போறானுக” வெறியுடன் சர்வா கூற, அவன் முகத்தை ஏறிட்ட அப்சரா, “மாமா உனக்கு தர்மா மாமா மீது அவ்வளவு வெறுப்பா?” அவன் மீது ஆராய்ச்சி பார்வையை செலுத்தினாள்.

“அங்க என்ன பேசிட்டு இருக்கீங்க?” யாதவ் கேட்க, மாமா இப்ப பாரு என்ற அப்சரா…

“பாட்டி நீ தர்மா மாமாவை எண்ணி தான வருத்தமா இருக்க? பேசாமல் அவரை உன்னோட பேத்தி கீர்த்திக்கு கல்யாணம் செய்து வச்சிரு.. கீர்த்துவுக்காக மாமாவிற்கு தண்டனை குறையும்” என்றாள்.

“என்னது?” உதட்டசைத்த பிரணிதாவை கண்டு, “மாமா…அவள பாரேன்” சர்வாவை பார்த்தாள். அவன் அவளை முறைத்து பார்த்தான்.

அச்சோ கீர்த்தி, உன்னோட தங்கையோ? என்றவாறு நகர்ந்தாள்.

“அப்பூ அமைதியா இரு” என்ற குருமூர்த்தி, அம்மா உன்னோட பேரன் எங்கும் போக மாட்டான். இப்பொழுதிலிருந்தே இங்கே தான் உன்னுடன் இருப்பான் என்றார்.

பிரணிதா அப்சராவை, “வெளிய வா வச்சுக்கிறேன்..” முணுமுணுத்தாள்.

அப்சரா விரலை தர்மாவிடம் காட்டி, “சிக்கிட்டேல்ல” என்றாள். பிரணிதா அவனை பார்க்க, அவன் சம்பத்தை பார்த்தான்.

“பார்த்துக்கலாம்” இவர்களின் சமிஞ்சையை புரியாமல் விழித்தாள் பிரணிதா.

“பாட்டி, உன்னோட சின்னப்பேரனை காப்பாற்றணும்ன்னு நினைச்ச நான் பொல்லாதவளாகிடுவேன்” பிரணிதா கூற, தர்மா மறந்தும் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை.

பாட்டி பாவமாக முகத்தை வைக்க, இந்த மூஞ்சிக்காக தான் கஷ்டப்பட்டு உன்னோட பேரனை கண்டுபிடிச்சேன் சொல்லி விட்டு,

சார் நான் சர்வாவிடம் அவருக்கு உரிய சொத்துக்களை மதிய வேளையிலே ஒப்படைத்து விட்டேன். என்னோட அப்பா என்னை தேடுவார். நான் கிளம்புகிறேன் அப்சரா அருகே வந்து, “தேவையில்லாமல் பேசாத” சொல்லி சென்றாள்.

“அம்மாடி, சாப்பிட்டு போ…” தாத்தா அழைக்க, முதல்ல பாட்டியையும் உங்க பேரனையும் கவனிங்க. நான் என்னோட செல்லக்குட்டியை கவனிக்க போகிறேன் பை..பை…ஓடினாள்.

“பரவாயில்லை நன்றாக பேச ஆரம்பித்து விட்டாள்” குருமூர்த்தி பிரணிதாவை மெச்சியவாறு புன்னகையுடன் தர்மாவை பார்த்தார்.