நடுநிசியில் தர்மாவிற்கு பிரணிதாவிடமிருந்து அழைப்பு வந்தது.
தன்னை பயன்படுத்த எண்ணி இருக்கிறாள். தன் மீது எந்த உணர்வும் இல்லை. அவளுக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்ற எண்ணம் அவனை சூழ, அவன் எடுக்கவில்லை. அவளும் விட்ட பாடில்லை. அழைத்துக் கொண்டே இருந்தாள்.
பெருமூச்சுடன் அலைபேசியை எடுத்தான். பேசி விட்டு அலைபேசியை வைத்து தன் காரை எடுத்து சென்றான்.
நடுஇரவு யாருமில்லா வீதியில் பாவமாக நின்று கொண்டிருந்தாள் பிரணிதா.
“என்ன?” தர்மா காரில் இருந்தவாறு கேட்க, முகத்தை சுளித்து அவள் நகர்ந்தாள்.
சம்பத், சர்வாவை மரத்தின் கீழ் கயிற்றால் கட்டிப் போட்டிருந்தாள். குடி போதையில் இருவரும் இருந்தனர்.
“தர்மா” என்று அவன் காரருகே வந்து, நிம்மதியா தூங்க கூட விட மாட்டேங்கிறானுக. நல்லா குடிச்சுட்டு கால் பண்ணி உலறுனானுக. அக்காவை தனியே விட்டு அப்பாவுக்கு தெரியாமல் வந்திருக்கேன். ரெண்டும் குடிச்சிட்டு அலப்பறை பண்ணுதுங்க. என்னால இந்த இரவில் வேறு யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை.
ப்ளீஸ் இவனுகள வீட்ல மட்டும் விட்றலாமா?
நீ எப்படி வந்த?
நடந்து தான்…
நடந்தா? இந்த இரவிலா?
உன்னோட கேள்விகளுக்கு அப்புறம் பதில் சொல்லவா? ப்ளீஸ் வா..
கீழே இறங்கி, “எதுக்கு கட்டிப் போட்டு வச்சிருக்க?” கட்டை அவிழ்த்துக் கொண்டே கேட்டான்.
“இருவரையும் என் தோளில் போட்டு நடந்தேனா? இவன் இடது பக்கம் இழுக்கிறான். அவன் வலது பக்கம் இழுத்தான். உனக்கு கால் செய்த போது அண்ணா எழுந்து அவன் பாட்டுக்கு நடக்க ஆரம்பிச்சுட்டான்” சைகையுடன் அழகாக பேசினாள். தர்மாவின் மனம் மேலும் அவளிடம் சாய்ந்தது
இவன் உன் அண்ணனா? தெரியாதது போல கேட்டான்.
கண்கலங்க..இல்லை..அண்ணான்னு அழைத்து பழகிடுச்சு. என்னோட தோழியின் அண்ணா. பள்ளியிலிருந்தே பழக்கம் தான்.
தர்மா கோவிச்சுக்காம நீயே கார்ல்ல அவனுகள ஏத்திடுறியா? எனக்கு இந்த ஸ்மல் உமட்டிட்டு வருது…ப்ளீஸ்..
ம்ம்..என்று சம்பாவை முதலில் காரில் போட்டு சர்வாவை தூக்க, “செல்லம்…ரொம்ப பசிக்குது….” சர்வா உலறினான்.
“பைத்தியக்கார நாயே! ரெண்டு பேரும் இப்படி குடிச்சிட்டு விழுந்து கிடக்கீங்க? பொறுக்கி பய எவனும் வந்து கொன்னு போட்டா கூட தெரியாது” அவனுக்கு பின்னே ஓங்கி எத்தினாள்.
அவன் புருவம் உயர்த்த, “தர்மா உன்னை இல்லை” வேகமாக அவனருகே வந்து காரில் ஏற, அவன் காரை கிளப்பினான்.
“என்னை இல்லையா?” அவன் கேட்க, தொண்டையில் கை வைத்து…சத்தியமா உன்னை சொல்லலை..
நடிப்பழகி தான்டி நீ? மனதில் எண்ணினான்.
அப்சராவை அழைத்து அவள் விசயத்தை சொல்ல, அவள் திட்டிக் கொண்டே காரருகே வந்து தர்மாவை பார்த்து இறுக வாயை மூடிக் கொண்டு இருவரையும் பார்த்தாள்.
தர்மராஜ் அவனாகவே இருவரையும் வாசலருகே வரை சென்று விட்டு செல்ல,
“ஏய்ய்ய், இவனோட எதுக்கு வந்த? அவன் உன்னை ஏதும் செய்திடாமல் வீட்டிற்கு போனவுடன் எனக்கு அழை” அப்சரா பிரணிதாவை திட்டி சென்றாள்.
புன்னகைத்த பிரணிதா தர்மா அருகே வந்து ஏறினாள். அவன் காரை கிளப்பினான்.
தர்மா, உன்னிடம் ஒன்று மட்டும் சொல்லவா?
பதிலளிக்காமல் அவளை பார்த்தான்.
நீ ஏன் இந்த கொலை செய்றது…. இத்தியாதி இத்தியாதியை விடலாமே!
ஏதும் சொல்லாமலே அவன் வந்தான்.
“உனக்கு பீவர் ஏதும் இருக்கா? ரொம்ப அமைதியா இருக்க” அவள் தொட்டு பார்க்க, அப்பொழுதும் அவன் அமைதியாக இருந்தான்.
“இன்னொரு விசயம்?” அவன் முகத்தை பார்த்தாள்.
காரை நிறுத்தினான்.
“உன்னோட ஆளுங்க யாரையும் முழுசா நீ நம்பாத! நீ என்னை என்ன செய்தாலும் பரவாயில்லை. எனக்கு சொல்லணும்ன்னு தோணுது. அதான்…” அவனை பார்க்க, அவன் முகம் உணர்ச்சி பசையற்று இருந்தது.
வேற…
கவனமா மட்டும் இரு…
நீ சொன்னதை நான் கேட்டால் மற்றவர்களுக்காக இல்லாமல் உனக்காக என்னிடம் வருவாயா? அவன் கேட்க, தர்மா…நான்… தயங்கினாள்.
விரக்தி புன்னகையுடன், “நான் முயற்சி செய்கிறேன்” மனம் மாறி அவன் கூற, என்ன சொன்ன? ஆர்வமாக கேட்டாள்.
கொலை செய்யாமல் இருக்க முயற்சிக்கிறேன். அந்த இத்தியாதி இத்தியாதியை நான் விட்டுட்டேன்..
வாவ் தர்மா…சூப்பர் அவள் அவனுக்கு கை கொடுக்க, பற்றிய கரத்தை அவன் வேகமாக இழுத்தான். இருவர் இதழும் ஒட்டும் தூரம் நிற்க, விழித்து அவனை பார்த்தாள் பிரணிதா.
தர்மா இதழ் கோர்க்க, அதிர்ச்சியில் அப்படியே இருந்தாள். விலக்கி அவளை அணைத்தான்.
அவன் கண்ணீர் சொட்டுவதையே கண்ணிமைக்காது அவர் அறையிலிருந்து கந்தசாமி பார்க்க, தர்மாவும் அவர் பார்ப்பதை கண்டு கொண்டு அவள் கவனிக்காதவாறு கண்ணீரை மறைத்து, “உன்னோட வீடு வந்துருச்சு..” என்றான்.
அதிர்ச்சி மாறாமல் பிரணிதா கீழே இறங்கினாள். தர்மா பிரணிதாவை திருமணம் செய்யும் கட்டுப்பாட்டை தகர்த்தெறிய முற்பட்டான். மனதில் உள்ள காதலையும் மறைத்தான். ஆனால் அவள் உணர்ச்சிப்பிடியில் சிக்கினாள்.
தன் மகள் பத்திரமாக வீட்டிற்கு வரவும் நிம்மதியுடன் கந்தசாமி உறங்க சென்றாலும் தர்மாவின் கண்ணீர் தன் பெண்ணுக்காகவா? இல்லை வேறு காரணம் இருக்குமோ? சிந்தனையுடன் துயில் கொண்டார்.
மறுவிடியலில் எழுந்த பிரணிதாவின் கரங்கள் தானாக இதழிற்கு வந்து, “ஷ் காம் டவுன் பிரணி” அவள் அவளை சரிசெய்து தயாரானாள். தர்மாவை சந்திக்கும் எண்ணம் இருந்தாலும் ஏனோ அவளுக்கு மனம் ஒப்பவில்லை.
வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே ஆபிஸிற்கு சென்றாள். அவளது ஆபிஸிற்கு அவள் சென்று விட்டால் என தெரியவும் அவள் தந்தையை சந்திக்க பிரணிதா வீட்டிற்கு சென்றான் தர்மராஜ்.
கதவை திறந்த பிரணிதாவின் சகோதரி தர்மாவை கண்டு பயந்து, “அப்பா…” அழைத்தாள்.
என்னம்மா, வலிக்குதா? கந்தசாமி ஓடி வந்தார்.
“நான் உங்களை எதுவும் செய்ய வரவில்லை” தர்மராஜ் குரலை கேட்டு, “தர்மா நீ….” கந்தசாமி தன் மகளை பார்த்தார்.
நான் உங்களிடம் தனியாக பேசணும்…
ம்ம்! வா தர்மா, உட்காரு…டீ எடுத்துட்டு வாரேன்.
பிரணிதா அறையை பார்க்கணும் என்றான்.
எ..எ…எதுக்கு? பதட்டத்தில் திக்கினாள் சகோதரி.
“சும்மா தான். அவளோட அறையை பார்த்ததில்லை” கந்தசாமியை பார்த்தான்.
போ. ஆனால் அவளது பொருட்கள் எதையும் தொடாதே! தப்பா எடுத்துக்காத தர்மா.
ம்ம்! பிரணிதாவின் அறைக்கு சென்றான் தர்மராஜ்.
அவனை வரவேற்றது அவளின் குடும்ப புகைப்படம். சகோதரி, வந்தனாவுடனான பிரணிதாவின் புன்னகை. அவளின் மனம் மாறாத புன்னகை அவனுக்கும் லேசான புன்னகையை கொடுத்தது.
விழிவிரித்து அவனை வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் பிரணிதாவின் சகோதரி.
பெண்கள் பயன்படுத்தும் வளையல், அழகு சாதனப்பொருட்களும் இருந்தது. அனைத்தையும் பார்த்து விட்டு அவனது அலைபேசியில் பிரணிதாவை மட்டும் தனியே புகைப்படமாக எடுத்துக் கொண்டான்.
“அம்மாடி, நீ ஓய்வெடு. நான் பேசிட்டு வந்துடுறேன்” அவளறைக்குள் சென்று கதவை தாழிட்டு, அவர் தயாரித்த தேனீரை அவனிடம் கொடுத்து “அமரு தர்மா”என்ன விசயம்? கேட்டார்.
“பிரணிதாவை திருமணம் செய்ய உங்களை மிரட்டியதற்கு என்னை மன்னிச்சிருங்க சார்” என்றார்.
சாரா? தர்மா…
ம்ம்! இனி என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. திருமணம் வேண்டாம். நிறுத்திக்கலாம். அப்புறம் இன்னொரு விசயம் அவன் பேசத் தொடங்க, கதவு தட்டப்பட்டது.
சம்பத் வெளியே நின்றிருந்தான்.
“வா சம்பா” அவனை மட்டும் உள்ளே அழைத்து மீண்டும் கதவை மூடினார் கந்தசாமி.
அங்கிள்..இவன்…
உட்காரு சம்பா..
தர்மா, எனக்கு அடுத்து என்னோட பொண்ணுங்களுக்கு பெருசா யாருமில்லை சம்பத்தை தவிர. அதான் அழைத்தேன்.
வந்தனா விசயம் எனக்கு முழுதாக எதுவும் தெரியாது. அந்த பொண்ணு கடைசியா எந்த கேஸ் விசாரிச்சாங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?
ஏன்? உன் தம்பியை காப்பாற்ற என்ன செய்யலாம்ன்னு பாக்குறியா? சம்பத் சீறினான்.
தர்மா கந்தசாமியை பார்த்து, நாங்க தவறானவர்கள் தான் இல்லைன்னு நான் சொல்லவில்லை. என் தம்பியை வளர்க்க தான் சிறு வயதிலே அரிவாளை கையிலெடுத்தேன். ஆனால் அவனும் என் போல வளர்வான்னு நான் எண்ணவில்லை.
தான் கெட்டாலும் தன் தம்பியை படிக்க அனுப்பியதே! என் போல அவனும் ஆகக் கூடாது என்று தான்..
நிரா பற்றிய விவரம் தெரிந்தால் எனக்கு கொஞ்சம் சொல்லுங்கள். எந்த பொண்ணுடன் பழகி கொன்று இருக்கான்னு தெரியணும்…
ஏன்? சம்பத் சினமாக கேட்க, என் தம்பி செய்யும் எதையும் விசாரிக்கும் நிலையில் நான் இல்லை. உங்கள் உதவி எனக்கு தேவை.
உங்கள் வந்தனாவிற்கு நியாயம் கிடைக்க நான் உதவுகிறேன். நானும் சரணடைய தயாராக இருக்கிறேன் என்றான்.
இருவரும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.
தர்மா, என்ன சொல்ற?
சார்..ப்ளீஸ், வேறெதுவும் கேட்காதீங்க. நான் கண்டிப்பாக சரணடைகிறேன். என் தம்பியையும் சேர்த்து தான் கூறுகிறேன்..
என்ன திடீர்ன்னு? சம்பத் கேட்டான். அதற்கு காரணம் உள்ளது. என்னால் சொல்ல முடியாது..
நாங்கள் எப்படி உன்னை நம்புவது?
சிறுவயதில் எதுவும் புரியாமல் தம்பிக்காக என்று அனைத்தையும் செய்தேன். இதுவரை யாரும் எனக்கு பெரிதாக அறிவுரை கூறியதில்லை. சிறு வயதில் அம்மா கூறியது மனதில் இருந்தாலும் என் வாழ்க்கைக்கு ஒத்து வரவில்லை. இப்பொழுது…நிறுத்தி கந்தசாமியை பார்த்தான்.
மீதமிருக்கும் வாழ்க்கையை நிம்மதியாக கழிக்க எண்ணுகிறேன் என்றான்.
தர்மா மனம் மாற என் பொண்ணு பிரணிதா தான் காரணம் என்று எண்ணியவாறு தர்மராஜை பார்த்தார்.
அவங்களுக்கு தெரிய வரும் போது தெரிந்து கொள்ளட்டும்.
“புதிர் போடாமல் விசயத்தை சொல்லு தர்மா” கந்தசாமி கேட்டார்.
சாரி சார், என்னால எதையும் முழுதாக சொல்ல முடியாது. நான் சொல்வதை மட்டும் கேளுங்க…
எப்படியும் நாளை இல்லை மறுநாளைக்குள் நிரஞ்சன் இங்கே வந்து விடுவான். அவனை வர சொல்லி இருக்கிறேன். நானோ இல்லை என்னோட ஆட்களோ அவனை கண்காணிக்கிறோம்.
நீங்க குரு மூர்த்தி சாருக்கும் சுதாகரன் சாருக்கும் ஏதும் ஆகாமல் பார்த்துக்கோங்க. உங்களுக்கு தெரிந்த போலீஸ் மூலம் பாதுகாப்பிற்கு சிறையில் ஆள் போடுங்க.
சுதாகரன் சாருக்கும் நிரஞ்சன் செய்த கொலைகளுக்கும் சம்பந்தம் இருக்காது. அவருக்கு குருமூர்த்தி சார் சொத்து வேண்டும். அவ்வளவு தான். அவர் வேறெதுவும் செய்யவில்லை. என்னிடம் குருமூர்த்தி சாரை கொல்ல உதவி கேட்டார். எனக்கு மனமில்லாமல் முடியாதுன்னு சொல்லீட்டேன்.
அப்புறம் அவரை சிறையில் தான் பார்த்தேன். அவர் சம்பத் மீது தான் கோபமாக இருக்கிறார். அது உங்களது குடும்ப பிரச்சனை. பார்த்து நடந்துக்கோங்க.
வந்தனா வீடியோ எப்படி அவர் கைக்கு சென்றதுன்னு தெரியல. கேட்டால் அவர் சொல்லவும் இல்லை. அதனால் சம்பா நீங்க சுதாகரன் சார் அறையில் வந்தனாவோ இல்லை வேறு பெண்கள் பற்றிய விவரமோ தெரியுதான்னு பாருங்க…
தயங்கியவாறு கந்தசாமியிடம்… அப்புறம் உங்க பொண்ணையும் அடிக்கடி கண்காணிங்க. உங்க பொண்ணு என்னோட வீட்டுக்கு வந்தது உங்களுக்கு தெரியுமான்னு தெரியல.
அன்றொரு நாள் என்னை கொல்ல என்னோட எதிரிகள் வராங்கன்னு நினைச்சேன். ஆனால் அந்த லாரி ஓட்டுநரை கண்டறிந்து விசாரித்த பின் பிரணிதாவை தான் கொல்ல ஆட்கள் வந்தாங்கன்னு புரிஞ்சது. அதனால அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
சம்பா, உங்களது தங்கை இங்கே தான் தங்கி இருந்தாங்கன்னு நினைக்கிறேன். இங்கே அவங்க ஆதாரம் ஏதாவது வச்சிருக்காங்களான்னு பாருங்க…நீங்க இருவரும் உங்க குடும்பத்தை பாதுப்பா பார்த்துக்கோங்க.
“என்னோட எண்ணை மாத்தி இருக்கேன்” தர்மராஜ் அவனது அலைபேசி எண்ணை கொடுத்து, “நான் கிளம்புறேன். பார்த்துக்கோங்க. என்னை நம்புங்கள்…” விறுவிறுவென வெளியேறினான்.
அங்கிள், இவன் என்ன சொல்றான்? பிரணி எதுக்கு அவன் வீட்டுக்கு போனா? சம்பத் கேட்க, நேற்று நடந்ததை கூறினார்.
தர்மாவால் தான் பிரணியை கொல்ல ஆட்கள் வந்தாங்கன்னு நினைச்சு விலக எண்ணி இருக்கலாம் இல்லைன்னா அவனுக்கு தகுதி இல்லைன்னு நினைச்சு இருக்கலாம்…
இவனை நம்பலாமா அங்கிள்?
தர்மா தவறானவன் தான். ஆனால் அவ்வளவு மோசமானவன் இல்லை. மோசமாவனாக இருந்தால் பிரணியை இதுவரை தொடாமல் பத்திரமாக பார்த்துட்டு இருந்திருக்க மாட்டான். எனக்கு நம்பலாம்ன்னு தான் தோணுது.
சரிங்க அங்கிள், அவன் சொன்னது போல சுதாகரன் அங்கிள் அறையை பார்க்கிறேன். நீங்க இவங்க அறையில தேடுங்க. பார்க்கலாம் சென்றான் சம்பத்.
தர்மாவும் சம்பத்தும் சென்ற சிலமணி நேரத்திலே பிரணிதாவின் சகோதரிக்கு வலி வந்து விட்டது. கந்தசாமி சின்னவளை அழைத்து விசயத்தை கூறி விட்டு பெரியவளை மருத்துவமனையில் சேர்த்தார்.
சர்வாவும் அவனுடைய ஆபிஸ் ஆட்களும் பிரணிதாவிடம் ஒரு கேஸ் விசயமாக வந்திருந்தனர்.
கந்தசாமி அழைப்பை ஏற்ற பிரணிதாவின் முகம் புன்னகையில் மலர்ந்தது.
அலைபேசியை துண்டித்து, “சார் முக்கியமான வேலை இருக்கு. நாளை மீட் பண்ணலாம்” எழுந்தாள்.
“மேம், இன்றே கோர்ட்டிற்கு செல்லணும்” ஒருவர் கூற, சர்வா அவளை முழுதாக ஆராய்ந்தான்.
கார்த்திக்கை அழைத்து, “சார் இவன் பார்த்துப்பான். பேமிலி விசயம். இமீடியேட்டா நான் போகணும்” அவளது இடத்தை ஒதுக்கி விட்டு… “கார்த்திக் பார்த்துக்கோ. நாளை வாரேன்” சர்வாவை பார்த்துக் கொண்டே ஓடினாள்.
மேம், பிராபிளமா? கார்த்திக் சத்தமிட, “நோ… அக்கா மருத்துவமனையில் இருக்கிறாள்” சொல்லிக் கொண்டே ஓடினாள்.
கார்த்திக் புன்னகையுடன் சர்வாவிடம் சென்றான்.
“மேம், குடும்பத்துக்காக வேலையையும் வேலைக்காக குடும்பத்தையும் எப்போதும் விட்டு கொடுக்க மாட்டாங்க…” அவர்கள் முன் அமர்ந்தான்.
நம்மை விட சிறிய பெண் நொடிப் பொழுதில் எப்படி தெளிவாக சிந்திக்கிறாள்? பிரணிதா பற்றிய சிந்தனையுடன் இருந்தான் சர்வா.
மருத்துவமனையில் தன் சகோதரி வலியில் கத்துவதை பார்த்து மனம் பதறி வராந்தாவில் நடந்து கொண்டிருந்தாள் பிரணிதா.
பிரணிம்மா, அமரு… இருக்கையை காட்டினார் கந்தசாமி.
அப்பா…அக்கா கத்திட்டு இருக்கா. எப்படி நிம்மதியாக அமருவது? நடந்தாள்.
புன்னகையுடன் அவளை அமர்த்தி அவளருகே அமர்ந்து, “இது எல்லா பெண்களும் கடந்து வரும் நேரம் தான்ம்மா. உனக்கும் இந்த நேரம் வரத் தான் செய்யும்..” பிரணிதாவை ஆராய்ந்தார்.
அடப் போங்கப்பா, நானே டென்சனில் இருக்கிறேன் என்று அவள் வெட்கமுடன் கூறிய விதம் தந்தை மனதில் குளிர்வாக இருந்தாலும் காரணம் தர்மாவாக இருக்குமோ என்றும் சிந்தித்தார். இவளும் அவனை காதலிக்கிறாளோ? அவர் எண்ணினார்.
அங்கே தான் தர்மாவும் அவன் தம்பியால் பாதிக்கப்பட்ட பெண்ணை பார்க்க வந்திருந்தான். மனதில் வந்தவுடன் ஆரம்பித்து விட்டானா? சலிப்புடன் தான் வந்தான்.
ஆம்..நிரஞ்சன் காலையிலே தர்மாவின் வீட்டிற்கு வந்து விட்டான். பிளைட்டில் வரும் போது ஒரு பெண்ணிடம் பேசி ஏமாற்றி அழைத்து வந்தவன் தவறாக நடந்து கொள்ள தடுத்த அப்பெண்ணை கொலை செய்யும் முன் தர்மா அப்பெண்ணை காப்பாற்றி தன் தமையனை அங்கேயே விட்டு வந்திருந்தான்.
மதியம் மூன்று மணியளவில்…
சார், உங்களுக்கு பேத்தி பிறந்திருக்கிறாள் செவிலியர் குழந்தையை கந்தசாமி கையில் கொடுக்க, “என்னோட சின்ன பொண்ணுகிட்ட கொடுங்க” என்றார்.
அப்பா…
வந்தனாம்மா..கண்கலங்கினார்.
குழந்தையை கையில் வாங்கி விழி அகலாது குழந்தையை கண்டு அகம் மகிழ்ந்த பிரணிதாவிற்கு கண்ணீர் வந்தது.
“அப்பா, பாப்பாவை பார்த்துக்கோங்க. நான் இனிப்பு வாங்கி எல்லாருக்கும் கொடுக்கணும்” என்று தாத்தா பாட்டியை அழைத்து கூறினாள். பின் அனைவருக்கும் விசயத்தை கூறினாள்.
மருத்துவமனையில் அனைவருக்கும் இனிப்பை வழங்கிக் கொண்டே வந்தாள். தர்மா இருக்கும் அறையை நெருங்கும் போது அவளுக்கு அழைப்பு வந்தது..
அவளது தந்தை அழைத்திருந்தார். தாத்தா, பாட்டி, சம்பத், அப்சரா, சர்வா வந்திருந்தனர். புன்னகையுடன் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.
“அப்பா..இப்ப வந்துடுறேன்” வண்டியை தர்மா வீட்டிற்கு விரட்டினாள்.
புன்னகையுடன் அவள் வீட்டிற்குள் ஓடி வந்து, சமையலறையில் இருந்த வேலையாளுக்கு இனிப்பை கொடுத்தாள்.
“யாரும்மா நீ? நீ பாட்டுக்கு உள்ள வர்ற? இனிப்பு தர்ற?” அவர் கேட்க, அவர் பேசுவதை கண்டு கொள்ளாமல் தர்மாவை சந்திக்க ஆவலுடன் ஓடினாள்.
அதே சமயம் உள்ளே வந்தான் தர்மராஜ் அவனுடைய ஆட்களுடன்.
அறையினுள் வந்த பிரணிதா, தர்மா என்று நிரஞ்சன் அருகே அமர்ந்து இனிப்பை கையிலெடுத்து ஊட்ட சென்று அதிர்ந்து இனிப்பை கீழே விட்டாள். அவள் கையிலிருந்த இனிப்புகள் அனைத்தும் கொட்டி இருந்தன.
“யார் பேபி நீ?” நிரஞ்சன் அவளை அவன் பக்கம் இழுக்க, விரைந்து விலகி அவனை வெறித்து பார்த்தாள்.
நிரஞ்சன் எழுந்து அவளை நெருங்க, வெளியேற நகர்ந்தாள்.
அவளை இழுத்து சுவற்றில் சாய்த்து, என்னிடம் வந்த யாரையும் சும்மா விட்டு எனக்கு பழக்கமில்லை என்று அவளை அணைக்க நெருங்க, கண்ணீருடன் வந்தனா முகம் நினைவுக்கு வந்தது பிரணிதாவிற்கு…
“நிலவொளியில் ஏன் இந்த கண்ணீர் கறை? நன்றாக இல்லை” அவனது நாவை அவளது கண்கள் அருகே கொண்டு செல்ல, வெறியுடன் அவனை தள்ளினாள் பிரணிதா.
ஏன் பேபி…?? அவளது முடியை பிடித்து இழுத்து படுக்கையில் தள்ள, கண்ணீருடன் படுக்கையில் கிடந்த தன் பிரணிதாவை கண்டு உள்ளம் பதைத்து, “நிரா” சத்தமிட்டான் தர்மா.
“அண்ணா..வா..வா…யார் இந்த பொண்ணு? ரொம்ப அழகா இருக்கா” நிரஞ்சன் மேலும் அவளிடம் செல்ல, அருகே இருந்த போர்வையை அவன் முகத்தில் போட்டு அவனை வெறியுடன் கீழே தள்ளினாள் பிரணிதா.
அதிர்ச்சியுடன் பிரணிதாவை மற்றவர்கள் பார்க்க, நிரஞ்சனுக்கு சினம் பீறிட்டு வந்தது. பிரணிதா அவனை மிதிக்க…விரைந்து தர்மா அவளை இடையோடு தூக்கி வெளியே வந்து கதவை தாழிட்டான்.
அண்ணே! அண்ணீ….
ஷ்..என்ற தர்மா பிரணிதா இனி இங்கே வராதே! கிளம்பு என்றான்.
தம்பி வரவும் நான் உனக்கு இடைஞ்சலாகி விட்டேனோ? நான் வர தான் செய்வேன். அதற்கு முன் உன்னோட தம்பியை கொல்லாமல் விட மாட்டேன்…கத்தினாள்.
வெளிய போ….தர்மா சினமுடன் சத்தமிட்டான்.
கண்ணீருடன் வேக வேகமாக ஓடினாள்.
அண்ணே! ஒருவன் அழைக்க, மற்றவர்கள் வேடிக்கை பார்த்தனர்.
அண்ணா, யார் அந்த பொண்ணு? எவ்வளவு தைரியம் அவளுக்கு? நிரஞ்சன் சத்தமிட, முதன் முறையாக கை நீட்டி அவனை அறைந்தான் தர்மராஜ்.
அண்ணே! மற்றவர்கள் அழைக்க,
என்னை அடிச்சிட்ட. இப்ப சொல்றேன் நல்லா கேளு. அவ என்னோட கையால தான் சாவா…சத்தமிட்டான் நிரஞ்சன்.
அவளை யாரும் தொட முடியாது. தொடவும் விட மாட்டேன் நிரஞ்சா. என்னோட பாதி அவ. உனக்கு புரிஞ்சதா? உன்னை படிக்க அனுப்பினால் ஏதோ பெண்கள் மீதுள்ள ஆசை என்று எண்ணி இருந்தேன். கொலை செய்யும் தைரியம் உனக்கு யார் கொடுத்தது?
கொலையா? நானில்லை அண்ணா…
இல்லையா? சினமுடன் சம்பத் சுதாகரன் அறையிலிருந்து எடுத்து அனுப்பிய பைல்களை தூக்கி தன் தம்பி மீது எறிந்தான்.
நம்ம வீட்டை விட்டு காலை வெளியே எடுத்து வச்ச தம்பின்னு பார்க்க மாட்டேன். வெட்டி போட்டு போயிருவேன். உன்னை எப்படி வளர்க்க எண்ணி நானே தவறு செய்து விட்டேன். இதற்கு பிச்சை எடுத்திருக்கலாம்…கதறி அழுதான் தர்மராஜ்.
உன்னை அவ நல்லா மயக்கி வச்சிருக்கா. அதான் இப்படி பேசுற…
“மயக்கலைடா. புரிய வச்சா. வாழ்க்கைன்னா எப்படி இருக்கும்ன்னு புரிய வச்சிருக்கா. அவ்வளவு தான். நான் சொன்னது நினைவில் இருக்கட்டும்.
“இவன் வெளியே காலெடுத்து வைத்தால் மறுநிமிடம் அவனை கொன்னுடுங்கடா” தன் ஆட்களுக்கு ஆணை பிறப்பித்து அங்கிருந்து நகர்ந்தான் தர்மராஜ்.