சர்வா தான் என அறிந்து, ஹாரனை அழுத்திக் கொண்டே இருந்தாள்.
சினமுடன் காரை திறந்து, அவளை யாருமில்லா தனி இடத்திற்கு அழைத்து சென்றான். அவன் பின்னாலேயே கார்த்திக்கும் சென்றான்.
ஹெல்மேட்டுடன் அவ்விடத்தை கடந்து செல்ல இருந்த தர்மராஜ் சர்வா காரையும் பிரணிதா பைக்கையும் பார்த்து வேகத்தை குறைத்து நிறுத்தினான்.
காரிலிருந்து இறங்கிய அப்சராவை பார்த்து, “இந்த பொண்ணு இங்க?” என்று அன்று பிரணிதாவை கண்டதை சிந்தித்தான்.
அப்சரா உள்ளே செல்ல, தர்மராஜூம் பைக்கை மறைவாக நிறுத்தி அவள் பின்னே சென்றான்.
“உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?” சர்வா பிரணிதாவை திட்டிக் கொண்டிருந்தான்.
ஏதும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள் பிரணிதா. அப்சராவும் தர்மாவும் மறைந்து இவர்களை கவனித்தனர்.
சொல்லு? சீறினான் சர்வா.
மேம்…பேசுங்க. நீங்க எதுக்கு தர்மா வீட்டுக்கு போனீங்க? அது எவ்வளவு ஆபத்து தெரியாதா? கார்த்திக்கும் சினந்தான்.
செட் அப்…செட் அப்…செட் அப்… வெறி பிடித்தவள் போல கத்தினாள் பிரணிதா.
“பிரணி…” சர்வா மீண்டும் சத்தமிட்டான்.
தர்மா தான் என்னை திருமணம் செய்யணும்ன்னு சொன்னான்னு உனக்கு தெரியாதா சர்வா?
அவன் உன்னை நெருங்க கூடாது என்று தான் உன்னை ஒரு மாதம் அவனிடம் நேரம் கேளுன்னு சொன்னோம்.
நான் போறதுல உனக்கு என்ன பிரச்சனை?
எனக்கு என்ன பிரச்சனை? அவனுக்கு உன்னை பற்றி தெரிந்தால் கொல்லாமல் விட மாட்டான்.
“கொன்னா கொல்றான்… உனக்கென்ன?” அவள் வீம்புடன் திமிறாக பேச, அவளை அடித்து விட்டான் சர்வா.
தன் கரத்தை இறுக மடித்த தர்மா, பிரணிதா தன் தம்பியை பற்றி எதற்காக பேசினாள்? என அறிய எண்ணி அமைதியாக அங்கேயே நின்றான்.
“கொன்னா கொல்லட்டும்ன்னு சாதாரணமா சொல்ற? உன்னோட குடும்பத்தை பற்றி எண்ணினாயா?” சீறினான் சர்வா.
என்ன சொன்ன? அவன் சட்டையை கொத்தாக பிடித்த பிரணிதா அவன் முகத்தை ஏறிட்டாள்.
குடும்பமா? உனக்கு நினைவிருந்ததா?
வந்து ஒரு அவசரம்ன்னு கால் பண்ணாலே எடுத்தியா?
“மேம்…” கார்த்திக் அழைக்க, வாய மூடு. நான் உன்னிடம் பேசலை.
நீ கோர்ட்டிலே இருந்தாலும் வெளிய வரவும் எடுத்திருக்கணும். எடுத்தாயா? என்ன செஞ்ச? மறந்துட்ட…அவ எவ்வளோ பயந்துருப்பா. அந்த நிலையில கூட அவ உன்னை பத்தி தான்டா யோசிச்சா.
என்கிட்ட உன்னை திருமணம் செய்ய சொல்லி சொன்னா…தெரியுமா?
சம்பத் அண்ணா உன்னோட தோழன் தான! அவரை பற்றி சிந்தித்தாயா? அவர் பெற்றோர், தங்கை, சித்தி, சித்தப்பா அனைவரையும் இழந்து எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பார்..
சரி அவரையும் விடு…
உன்னோட குடும்பம்..
தாத்தா, பாட்டியை உன்னோட அம்மாவும், அத்தையும் சேர்ந்து வீட்டை விட்டு அனுப்பீட்டாங்க. அப்சரா அண்ணீ எவ்ளோ கஷ்டப்பட்டாங்க தெரியுமா? வீட்டு வேலைக்காரியை விட மோசமா நடத்துனாங்க. ஒரு பொறுக்கி நாய் அவங்களிடம் தப்பா நடந்துக்க பார்த்தான்…
உன்னோட அம்மாவால தான் சித் மாமா வீட்டை விட்டு போனார். நல்ல வேலையாக தாரா, சம்பத் அண்ணா கண்ணிலும் பட்டார். வேறு யாராவது அவரை கண்டிருந்தால் என்ன ஆகி இருப்பார். உயிரோட இருந்திருப்பாரா?
குரு சார்……எதுவும் செய்ய முடியாத நிலையில் தவித்து இருந்தார் அவள் பேச பேச அப்சரா விக்கித்து போனாள்.
அப்சரா அண்ணீயை ஹாஸ்பிட்டல் சேர்த்தது சம்பா அண்ணா சித்தப்பா சிவக்குமார் தான். அவர் என்னை தான் அழைத்தார். நான் தான் அப்சரா அண்ணீ விழிக்கும் வரை அவங்களை பார்த்துக் கொண்டேன்.
சர்வா அலைபேசி அலறியது. அவன் கையிலிருந்த அலைபேசியை பிடுங்கி அதை பார்த்தாள்.
யாதவ் அழைக்க, அழைப்பை எடுத்து அவனிடமும் கத்தினாள்.
பக்கி பரதேசி, நீ மனுசனாடா? அந்த கீர்த்தியோட சேர்ந்து நீயும் அண்ணீயை கஷ்டப்படுத்தினேல? அவங்க தப்பான முடிவு எடுத்திருந்தா என்ன செஞ்சிருப்ப? அலைபேசியை தூக்கி எறிந்தாள். அவன் புரியாது அலைபேசியை பார்த்தான்.
“இவளை தவறாக எண்ணி விட்டோமே!” மனமுடைந்து அமர்ந்தாள் கண்ணீருடன் அப்சரா. அவளை பார்த்து விட்டு திகைப்புடன் பிரணிதாவை பார்த்தான் தர்மராஜ்.
வந்தனா உன்னோட காதலின்னா எனக்கு தோழிடா. எனக்காக தான் இங்கே வந்தாள்.
பள்ளிப்படிப்பை நான் பாட்டி வீட்டில் பொள்ளாச்சியில் தான் படித்தேன். இருவருக்கும் பிரிய முடியாத நட்பு.
அம்மா என்னை கல்லூரி இங்கே தான் படிக்கணும்ன்னு உத்தரவு போட்டாங்க. என்னால் மீற முடியவில்லை. வந்தனா கொடைக்கானல் எனக்காக வந்தாள்.
உனக்கு தெரியாதா? ஆறு வருடங்கள் எங்கள் வீட்டில் தான் இருந்தாள் இல்லை வாழ்ந்தாள்.
அக்கா இப்ப கூட எனக்கு வந்து தான் மகளாக பிறப்பாள்ன்னு சொல்லிட்டு இருக்காங்க தெரியுமா? அவனை விட்டு நகர்ந்து மண்டியிட்டு கதறி அழுதாள்.
சம்பத் அண்ணாவும் அவளுக்காக மருத்துவப்படிப்பை இங்கே தான் படித்தார். அவர் கிராமத்தில் முகாமிற்கு சென்ற நேரம்…எல்லாம் போச்சு தலையில் அடித்து கதறி அழுதாள் பிரணிதா.
இதயம் நின்று விட்டது போல இருந்த தர்மராஜ் தடுமாற்றமுடன் நின்றான். “வந்தனா” இப்பெயரை தன் தம்பி கூறி கேட்டிருக்கிறான்.
வந்து…போயிட்டா. எனக்கு என்னோட உயிரே போனது போல தான் இருந்தது. அம்மாவை இழந்ததை விட வந்து இல்லாததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் பைத்தியக்காரி போல இருந்தேன்.
அடுத்து நடந்த அனைத்தும் உன் வீட்டினரை பாதித்ததோ இல்லையோ என்னை மிகவும் பாதித்தது.
ஆண்கள் மீதுள்ள நம்பிக்கையை மொத்தமாக இழந்தேன். யாரையும் என்னருகே விடவேயில்லை. அப்பாவை கூட அருகே விடவில்லை..
தாரா இருந்ததால் தான் சம்பத் அண்ணா எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்தார். இப்படி அண்ணீயை திருமணம் செய்வார்ன்னு நான் எண்ணவில்லை. யாதவ், குரு சார் மீது தான் அவர் சந்தேகம் இருந்தது. ஆனால் நிச்சயமாக சொல்றேன். உன்னோட அப்பாவுக்கு இதுல சம்பந்தம் இருக்கு.
நான் தர்மா மீதுள்ள சந்தேகத்தில் அவனை நெருங்கவில்லை. நிரஞ்சனை பிடிக்கணும்ன்னா அது தர்மாவால் தான் முடியும்.
விரக்தியுடன் சர்வாவை பார்த்த பிரணிதா தர்மாவை கூட நம்பிடலாம். ஆனால் உன்னை போல பிரச்சனையில இருந்து ஓடிப் போறவனை நம்பவே முடியாது அவள் சொல்ல, கண்ணீருடன் தலைகவிழ்ந்து நின்றான் சர்வேஸ்வரன்.
இந்த இரு வருடத்தில் இவங்க எல்லாரும் பட்ட கஷ்டத்தை விடவா நீ கஷ்டப்பட்ட…. சொல்லு? அவனது சட்டையை பிடித்து இழுத்தாள்.
மேம், என்ன இருந்தாலும் நிரஞ்சனை விட பெரிய கொலைகாரன் தர்மா தான் கார்த்திக் கூற,
சிரித்த பிரணிதா.. தர்மா கொலைகாரன் பொறுக்கி தான். ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.
அவனுக்கே தெரியாமல் அவனை சுற்றி ஏதோ தப்பா இருக்கு. அவன் பெண்களுடன் உறவில் இருந்தாலும் கொலை செய்யும் அளவிற்கு போக மாட்டான். அவனுக்கு பின்னே யாரோ இருக்காங்க. அவன் அவங்க மேல வச்சிருக்கிற நம்பிக்கையை அவங்க பயன்படுத்திட்டு இருக்காங்க.
ஒரு விசயம் சொல்லவா? தர்மா கொலைசெய்வது, தவறான உறவில் இருப்பதை விட்டால் அவனும் நம்மை போல சாதாரண மனிதன் தான்.
நிரஞ்சன் பெண்களை கொலை செய்யும் விசயம் தர்மாவிற்கு தெரியாது. என்னோட வந்துவை கொன்ற நிரஞ்சன் அவன் அண்ணனையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். பாவம் தர்மாவிற்கு இதெல்லாம் தெரியாது.
கொலையும் யாரோ கூறி தான் அவன் செய்கிறான். அவனுக்கென ஒரு குடும்பம் இருந்தால் தவறான பாதையில் சென்றிருக்க மாட்டான்.
பிரணிதா சொன்னதை கேட்ட தர்மா அதிர்ந்து, நிரா என்னை ஏமாற்றுகிறானா? சிந்தனையுடன் அவன் நகர,
“அவனுடன் பழகவும் அவன் உனக்கு நல்லவனாக தெரிகிறானோ? இல்லை அவனை காதலிக்கிறாயா?” சர்வா கேட்ட கேள்வியில் நின்றான் தர்மராஜ்.
அவனுடன் இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் காதலெல்லாம் வரலை. எனக்கு யார் மீதும் காதல் வராது. என் நம்பிக்கையை பெற கஷ்டப்படணும். அதனால் தான் நான் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.
வந்து…என்னை உன்னை…சர்வா இழுக்க, உனக்கு அந்த எண்ணம் வேறையா? உன்னை நம்பி பைத்தியக்காரத்தனம் செய்த வந்துவை போல நானிருக்க மாட்டேன்.
என்னோட குடும்பம் தான் எனக்கு முக்கியம். அதே போல என்னால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுவேன். அதை விட்டு உன்னை திருமணம் செய்ய எண்ணுவேனா? எந்த காலத்திலும் நான் உன்னை திருமணம் செய்யவே மாட்டேன்.
“எனக்கு என்னமோ தர்மாவை நீங்கள் காதலிப்பது போல உள்ளது” கார்த்திக் கூற, பிடிக்கும் தான். நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன். காதல் வராது. அவன் உயிரை எடுப்பவன். நான் காப்பாற்ற எண்ணுபவள். அதை விட எங்களுக்குள் நிறைய வித்தியாசம் உள்ளது.
எனக்கு அவனை எண்ணி ஒரே ஒரு வருத்தம் தான். அவன் நம்பிக் கொண்டிருப்பவர்கள் அவனை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவனுக்கு தெரிந்தால் வருத்தப்படுவான் அவள் வருந்த, மனதினுள் கார்த்திக் பிரணிதாவை எண்ணி வருந்தினான்.
தேம்பிக் கொண்டிருந்த அப்சரா ஓடிச் சென்று பிரணிதா காலில் விழுந்தாள். மூவரும் அதிர்ந்தனர்.
“சாரி சாரி….நான் உன்னையும் அவரையும் தவறாக புரிந்து கொண்டேன். நீ அவரை பற்றி எவ்வளவு வருந்துகிறாய்? நான் அவரை பற்றி அறிந்து கொள்ள எண்ணவேயில்லை” அழுதாள் அப்சரா.
அண்ணீ, என்ன சொல்றீங்க? சம்பா எனக்கு அண்ணா. அவர் என்னை தங்கை என்பதை விட வேறு எண்ணத்தில் பழகியதில்லை.
அப்சரா மேலும் அழுதாள்.
என்னாச்சு அண்ணீ?
அவருக்கு என்னை பிடிக்கலை. அதான் என்னை விட்டு விலகியே இருந்திருக்கார். இதுக்கு தான் ஒப்பந்த திருமணம் செய்யலாம்ன்னு சொன்னேன் அவள் கூற,
அப்பூ என்ன பேசுற? அதட்டினான் சர்வா.
அவர்களின் திருமணத்தை பற்றி அப்சரா கூற, திருமணம் என்ன எல்லாருக்கும் விளையாட்டா போச்சா? பிரணிதா சினமுடன் அப்சராவை உலுக்கினாள். அப்சரா அழுது கொண்டே நின்றாள்.
காலடி சத்தம் கேட்க, தர்மா மறைந்து கொண்டான்.
சம்பத்தும் யாதவும் சேர்ந்து வந்தனர்.
அப்சரா அழுவதை பார்த்து, “அப்சா எதுக்கு அழுற? எல்லாரும் இங்கே என்ன பண்றீங்க? அப்சராவை நெருங்கினான்.
“நில்லு…” பிரணிதா சத்தமிட்டாள்.
புருவம் சுருக்கி அவளை பார்த்தான் சம்பா.
“அண்ணா, என்ன செஞ்சு வச்சிருக்க? திருமணம் உனக்கு விளையாட்டா தெரியுதா? உன்னோட பொண்டாட்டி நம்மை பற்றி தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறாள். தாராவின் காதலுக்காக திருமணமா? அப்ப அப்சா அண்ணீ நிலைமை?” சீறிக் கொண்டு சம்பத்திடம் வந்தாள்.
“அப்சா பிரணி என்ன சொல்றா? என்ன தவறான எண்ணம்?” சம்பத் சினமுடன் அப்சராவை முறைத்தான்.
எதுக்கு இப்ப அவங்கள முறைக்கிற? உன்னால தான் அவங்களுக்கு அந்த எண்ணம் வந்துருக்கு. நீங்க இருவரும் பிடித்து திருமணம் செய்திருக்கணும். அதை விட்டு தாராவுக்காகவும், சித் மாமாவுக்காகவும் எண்ணி இப்படி உங்க வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கீங்க? அப்சராவையும் சேர்த்து திட்டினாள்.
“நான் ஒன்றும் அவரை பிடிக்காமல் திருமணம் செய்யவில்லை. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவருக்கு தான் என்னை பிடிக்கவில்லை” அழுது கொண்டே அப்சரா பிரணிதாவை பார்த்தாள்.
“அவர் எங்க குடும்பத்தில் இருப்பவர்களை பழி வாங்க தான என்னை திருமணம் செய்து கொண்டார். உன்னோட அண்ணாவுக்கு பிடிக்கலைன்னா டிவர்ஸ் பண்ணிக்க சொல்லு” அப்சரா கண்ணீருடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“சம்பா என்னடா இதெல்லாம்?” சர்வா கேட்க, “மாமா நீயும் யாதுவும் கூட அவர் உன்னோட தோழன்னு சொல்லவில்லை. எல்லாரும் என்னை ஏமாத்தி இருக்கீங்க” எழுந்து அப்சரா நகர்ந்தாள்.
“அப்சா……” சம்பத் அவளது கரத்தை பற்றினான்.
“உங்களுக்கு தான் என்னிடம் பேச கூட நேரம் வேணுமே! யார் கூட வேண்டுமானாலும் நேரம் செலவழித்து பின் பிடிச்சிருந்தா பார்க்கலாம் இல்லைன்னா என்னை டிவோர்ஸ் பண்ணீட்டு உங்களுக்கு புடிச்ச பொண்ணா கல்யாணம் பண்ணிக்கோங்க” அழுது கொண்டே அவனது கரத்தை தட்டி விட்டு ஓடினாள்.
“ம்ச்ச்…அப்சா என்னோட மனசுல எந்த பொண்ணுக்கும் இதுவரை இடம் கொடுத்ததில்லை” அவள் பின்னே பேசிக் கொண்டே சென்றான் சம்பத்.
தர்மராஜ் தன்னுடைய பைக்கை வீட்டிற்கு விரட்டினான்.
ஆமா, இப்ப தான் யாரோ உங்க மனசுல இருக்காங்கல்ல. என்னமும் செய்யுங்க அவள் முன்னே செல்ல, நான் சொல்லிகிட்டே இருக்கேன். புரிஞ்சுக்காம பேசிட்டே போனேனா என்ன அர்த்தம்? அவளை அவன் பக்கம் திருப்பினான்.
கண்ணீருடன் அப்சரா சம்பத்தை முறைத்தாள்.
“நான் உன்ன தான்டி சொன்னேன்” இழுத்து அவளது இதழ்களை முற்றுகையிட்டான் சம்பத்.
“மாமா, நாங்க இங்க தான் இருக்கோம்” யாதவ் இருவரையும் பார்க்க, “நீ போடா” பிரணிதா அவனை இழுத்து சென்றாள். மற்றவர்களும் அவ்விடம் விட்டு கிளம்பினார்கள்.
மாமா, என்னாமா கோபப்படுறாங்க? செல்லும் பிரணிதாவை பார்த்து யாதவ் கூற, எனக்கும் வேலை இருக்கு. நீ காலேஜ் போகலையா?
போகலை…
ஏன்டா?
அதான் உங்க தங்கச்சியும் அம்மாவும் இருக்காங்களே! வசந்தி அம்மாவை ஏதும் செஞ்சிருவாங்களோன்னு அப்பூ பயப்படுறா. என்னோட அம்மாவை என்னாலே நம்ப முடியாது. அவருடன் தான் இருந்தேன்.
முதல்ல இவங்களுக்கு முடிவு கட்டணும். வா…சர்வா யாதவுடன் வீட்டிற்கு சென்றான்.
வீட்டிற்கு சென்ற சர்வா தன் தாயை அழைத்தான்.
என்னடா, இந்த வேலைக்காரவங்க யாரும் சீக்கிரமே கேட்பதை செய்து முடிக்க மாட்டேங்கிறாங்க..
அம்மா, அப்பூ புருசன் உன்னையும் கீர்த்தியையும் தான் வேலை பார்க்க சொன்னார். நீ என்ன கால் மீது கால் போட்டு சொகுசா அமர்ந்திருக்க? சத்தமிட்டான்.
“நல்லா கேளு சர்வா. நான் கேட்டதுக்கு உன் வேலையை பாரு கிழவின்னு சத்தம் போடுறாடா” பாட்டி சர்வாவிடம் கம்பிளைண்ட் செய்தார்.
“இது சரிப்பட்டு வராது. வா…நாம தனியே வாடகை வீட்டுக்கு போயிடலாம்” தன் அன்னை கரத்தை பிடித்து சர்வா இழுக்க, வாடகை வீடா…என்னால எல்லா வேலையும் பார்க்கலாம் முடியாது. நான் இப்படியே பழகிட்டேன்.
அதான் இப்ப இப்படி ஆடுற? அத்தை எங்க இருக்கீங்க? சத்தமிட,
தனலட்சுமி கையில் கரண்டியுடன் சமையலறையிலிருந்து வந்தார்.
அத்தை…
“சர்வா, என் மீதும் தவறிருக்கு. எனக்கு உன்னோட மாமா பத்திரமா வீட்டுக்கு வந்தா போதும். எல்லாமே நானே பார்த்துக்கிறேன். அவர் இல்லாமல் எனக்கு மனசே சரியில்லை. அவருக்கு ஏதும் ஆகிடுமோன்னு பயமா இருக்கு” அழ ஆரம்பித்தார் தனலட்சுமி.
அவன் தன் பாட்டியை பார்க்க, “ஆம்” அவரும் தலையசைத்தார்.
“மாமாவுக்கு எதுவும் ஆகாது. நான் பார்த்துக்கிறேன்” அவர் கையை பிடித்தான்.
“அத்தை, நீங்க வீட்டை பார்த்துக்கோங்க. நான் என் அம்மாவிற்கும் கீர்த்திக்கும் வீடு வாடகை பார்த்து அவர்களை அனுப்பி விட்டு வாரேன்” தன் தாயை ஓரக்கண்ணால் பார்த்தான் சர்வேஸ்வரன்.
வேண்டாம் வேண்டாம்….நானும் வேலை செய்கிறேன்.
இன்று மட்டுமா? அதட்டினான் அவன்.
“தினமும்…தினமும் செய்கிறேன். தனியா விட்டு வந்துறாதப்பா. அப்படியே உன்னுடைய தந்தையையும் வெளியே எடுக்க ஏற்பாடு செய்யேன்” ஜெயா பாவமாக முகத்தை வைத்தார்.
முயற்சி செய்கிறேன். வசந்தி அத்தைக்காக தனியே செவிலியர் ஏற்பாடு செய்து அனுப்புகிறேன் என்று யாதவிடம் கூறி வெளியே சென்றான்.
தர்மா அவனறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.
பிரணிதா அறியாமல் பேசுகிறாளா? உண்மையை தான் கூறுகிறாளா? நிராவிற்கு கொலை செய்யும் பழக்கம் வந்து விடக் கூடாதுன்னு தான் நான் அந்த வயதிலே ஆயுதத்தை கையிலெடுத்தேன். என்னை ஏமாற்றுகிறானா இல்லை இவள் பிதற்றுகிறாளா? தலையை பிடித்தவாறு அமர்ந்தான்.
அவனறையில் அன்று பிரணிதா மாற்றி இருந்த குர்தி இருந்தது. எழுந்து அதனை கையிலெடுத்தான். குர்தியின் ஓரப்பாக்கெட்டிலிருந்து புகைப்படம் ஒன்று லேசாக அழிந்து காய்ந்து இருந்தது. அதனை உற்றுப்பார்த்தான்.
பின்னே ஏதோ எழுத்துக்களும் இருந்தது.
என்ன இது? மிகவும் சிரமப்பட்டு அதனை கண்டறிந்தான்.
லவ் யூ வனா வா?
வந்தனா….புகைப்படத்தை பார்த்தான். அவனுக்கு பெயர் மட்டும் தான் தெரியும். புகைப்படத்தில் அழிந்த இடத்தை அவனே இணைத்து வரைந்தான்.
பிரணிதாவை வந்தனா கன்னத்தில் முத்தமிடுவது போல புன்னகையுடன் இருந்தது.
இவள் தான் வந்தனாவா?சம்பத்தின் தங்கை. என் பிரணிதாவின் உயிர்த்தோழி. அவள் கூறியது இந்த பெண்ணை தான்..
தன் ஆட்களில் நம்பிக்கையான ஒருவனை மட்டும் அழைத்து பொள்ளாச்சியில் சம்பத் குடும்பத்தை விசாரிக்க நேரடியாக சென்றான்.
அவனுக்கு கிடைத்த விவரப்படி மத்தியரக குடும்பம். நல்ல பிள்ளைகள். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வரும் என்பது மட்டுமே எதிராக இருந்தது. மற்றபடி அனைத்தும் பிரணிதா கூறியது போல தான் இருந்திருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டான்.
பின் பூம்பாறை சென்று சேந்தனை பின் தொடர்ந்தான். அவனுடன் சுற்றும் சித்தார்த்தையும் தாரணியையும் பார்த்து, இதுவும் பிரணிதா கூறியது சரி என்ற எண்ணமுடன் வீட்டிற்கு வந்து, தன் தமையனை அழைத்தான்.
குருமூர்த்தி, சிவக்குமார், சுதாகரன், கந்தசாமி பற்றி முழுதாக தர்மாவிற்கு ஏற்கனவே தெரியும்.
மீதமிருப்பது தன் தமையனும், அவனோட குருவும் தான்.
“அண்ணா என்ன திடீர்ன்னு கால் பண்ணி இருக்க?” போதையில் குலறலுடனான பேச்சும், பெண்களின் குரலும் கேட்டது.
உனக்கு வந்தனா தெரியுமா?
ம்ம்! நல்லா தெரியுமே! என்ன பிகர் தெரியுமா? அவ உயிரோட இருந்திருந்தா விட்டிருக்க மாட்டேன். என்னோட அழைச்சிட்டு வந்திருப்பேன். ஆனா என்ன அவளால தான் நான் உன்னை விட்டு வெகுதூரம் வந்திருக்கேன். ஏதேதோ இன்னும் உலறினான் நிரஞ்சன்.
“சரி… உடனே வா” வைத்து விட்டான் தர்மா.
அவளால நீ போன என்றால் அவர் கூறாமல் நீ போயிருக்க மாட்ட? வந்தனா பற்றியும் விசாரித்து அறிந்து கொண்டான்.
அந்த பொண்ணுக்கு நிரஞ்சன், குரு பற்றிய ஆதாரம் ஏதோ வச்சிருந்திருக்கா. ஆனால் பிரணிதா கூறியது தன் தம்பி கற்பழிக்கும் பெண்கள் அனைவரையும் கொல்கிறான் என்று…அதற்கு முன் அவன் பழகிய பெண்கள் பற்றி கண்டறிய வேண்டும் என எண்ணியவாறு படுத்தான்.