தர்மா காரருகே சென்று வண்டியை நிறுத்தினாள் பிரணிதா. அவன் சீட்டிற்குள் மறைந்தான். அவன் ஆட்கள் அவனை வித்தியாசமாக பார்த்தனர்.
பிரணிக்கு அழைப்பு வந்திருக்கும்.
சொல்லுக்கா?
“ஈவ்னிங்கா? ஓ.கே வர ட்ரை பண்றேன்” அலைபேசியை வைத்து அவள் சென்றாள்.
அண்ணே! நீங்க எதுக்கு மறைஞ்சீங்க?
அவள் பார்த்து விட்டால்? என்றவன், பார்த்தால் தான் என்ன? ஆட்களை பார்த்து விட்டு கதவை திறக்க, சர்வா அவர்களை கடந்து சென்றான்.
சுதாகரன் சார் மகனுக்கும் பிரணிதாவிற்கும் என்ன சம்பந்தம்?
அண்ணே! அண்ணீயும் சாரும் ஒரே கல்லூரி தான்.
அப்படியா?
அண்ணே! காதலாக இருக்குமோ?
காதலா?
ஆமா அண்ணே! சீக்கிரம் அண்ணீயை கல்யாணம் பண்ணுங்க. அவங்க ஒத்து வரலைன்னா தூக்கிடலாம். சுதாகரன் சார் மகன் உங்களை விட அழகாகவும் அறிவுள்ளவராகவும் இருக்கிறார்.
இதெதுக்குடா? நம்ம அண்ணே என்ன அண்ணீயை காதலிக்கவா திருமணம் செய்ய போகிறார்? மற்றவன் கேட்க, தர்மராஜிற்கு பிரணி கூறிய விளக்கம் நினைவுக்கு வந்தது.
காதல் எப்படிடா செய்யணும்?
அண்ணே! அதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது. கண்ணும் கண்ணும் பார்க்கணும். கையும் கையும் கோர்க்கணும். நிறைய பேசணும். அவங்க கூப்பிடும் போதெல்லாம் நாய்க்குட்டி போல போய் நிக்கணும்..ஒருவன் கூற,
அதான் அண்ணீ சொன்னாங்கல அண்ணே! என்றான் மற்றவன்.
“வண்டியை நம்ம குடோனுக்கு விடு” தர்மராஜ் சொல்ல, சென்றனர்.
மதிய வேளையில் அப்சரா அறையில் இருந்த சம்பத் பிரணிதாவை அழைத்து பேசினான். அவள் மீது அக்கறையுடன் அவன் பேசும் அனைத்தும் அப்சராவிற்கு தவறாகவே பட்டது.
எப்போதும் போல தர்மராஜை சந்திக்க சென்றாள் பிரணிதா.
அண்ணீ, நீங்கள் மாலை வாருங்கள். அண்ணாவை சந்திக்கலாம் ஒருவன் கூற, படியிலிருந்து ஒப்பனையுடன் மாடர்ன் ஆடையில் பெண்ணொருத்தி வந்தாள்.
அந்த பெண்ணை பார்த்து, தர்மராஜ் ஆட்களை பார்த்தாள் பிரணிதா.
முகம் சுளித்த அந்த பெண் பிரணிதாவை மேலிருந்து கீழாக பார்த்து சென்றாள். அவள் பார்வையில் பிரணிதாவிற்கு சினம் வர,
அவள் பின்னே சென்று, “ஹேய், எதுக்கு என்னை அப்படி பார்த்த? உன்னை மாதிரி கேவலமான பிறவி நானில்லை..” விளக்கம் கொடுத்தாள்.
அப்புறம் எதற்கு இங்கே வந்தாய்? தர்மா சார் பற்றி தெரியாமல் ஒரு பெண் அவளை நெருங்கினால் என்னவாக இருக்கும்? பதில் வீசினாள் அப்பெண்.
சுரீரென இருந்தது பிரணிதாவிற்கு.
அவனை திருமணம் செய்யப் போகிறேன் என்றா கூறுவாள். அவளுக்கும் திருமணத்தில் விருப்பமில்லை தானே! தர்மா பெண்களுடன் உறவு கொள்வான் என்று தெரிந்து தானே திருமணம் செய்ய ஒத்துக் கொண்டாள்.
கண்கள் கலங்க அந்த பெண்ணை கடந்து வெளியேறினாள். மனம் பாடாய் படுத்தியது.
“ஊரை காலி செய்து கிளம்பி விட்டால் வந்தனா கொலை பற்றிய விடயம் தெரியாமல் போய் விடும். இவனுடன் பழகுவதே அதற்காக தானே! அவனும் நம்மிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை. இதுவே போதுமானது தான்” தனக்குள் மருகியவாறு வண்டியை எடுத்தாள். ஆனால் அந்த பெண் கூறியது தவறு செய்கிறோமோ? என்ற எண்ணமே வலுபெற்றது.
பைக்கை ஓரம் நிறுத்தி முகத்தை மறைத்து பைக்கிலே சாய்ந்து கொண்டாள். அவள் வாழ்க்கையை எண்ணி அவளுக்கே கண்ணீர் வந்தது.
“நம்ம அண்ணன் கிட்ட சொல்லிடலாம்டா” ஒருவன் கூற, அண்ணாவிற்கு இந்த நேரம் தொந்தரவு செய்தால் பிடிக்காதுல்ல. எப்படி பேசுவ? அவர் கோபப்படுவார் என்றான் மற்றவன்.
அண்ணா அவங்களை திருமணம் செய்யணுன்னு சொல்லி இருக்கார். அவர்களின் உறவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவங்க தான் நம்ம அண்ணீ…. தெரியும்ல்ல? அண்ணீ கண்களும் கலங்கி இருந்தது. அண்ணாவிடம் சொல்லாமல் விட்டு அண்ணீ சொல்லாமல் போய் விட்டால் என்ன செய்றது? அண்ணனுக்கு கிடைத்த இந்த உறவும் இல்லாமல் போயிடும்…வருத்தமாக பேசினான் ஒருவன்.
“சரி, நீயே அண்ணாவிடம் பேசு” ஒருவன் கூறினான்.
இரவு முழுவதும் அந்த பெண்ணுடன் சரசத்தில் இருந்த தர்மாவின் ஓய்வு நேரம் இது. நேரத்தை கூட கவனிக்காது அவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.
“அண்ணே! அண்ணீ வந்தாங்க” என்றவுடன் விரைந்து படுக்கையை விட்டு அறைக்கதவை திறந்தான்.
அண்ணே! ஆடை போடுங்க என சொல்லி நடந்ததை தர்மாவின் ஆள் கூற, “எதுக்குடா அவளை போக விட்டீங்க?” சத்தமிட்டு ஆடையை அணிந்து கொண்டே கீழே வந்தான்.
அண்ணே! அவன் தலையை கைக்காட்டினான்.
ம்ச்ச்…என்றவன் அப்படியே தன்னுடைய வண்டியை எடுத்து கிளம்பினான்.
தூரத்திலே பிரணிதாவை கண்டு காரை நிறுத்தினான்.
தம்பதியினர் மற்றும் சிறுமியுடன் வண்டியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். வண்டியை கொஞ்சம் அருகே நகர்த்தி நிறுத்தினான்.
“எல்லாமே சரியா போகுதா?” அந்த பெண்ணிடம் அவள் கேட்க, ஆமா மேம். உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்.
சிறுமியை தூக்கி, பாப்பா அப்பா இன்னும் அம்மாவை அடிக்கிறாரா? கேட்டாள்.
இல்ல ஆன்ட்டி, எனக்கு பர்த்டே கையிலிருந்த மிட்டாயை அவளிடம் நீட்டியது.
புன்னகையுடன் அதை வாங்கிய பிரணிதா தன் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை கழற்றி அந்த சிறுமிக்கு போட்டு விட்டாள்.
மேம், இதெல்லாம் வேண்டாம்.
நான் உங்களுக்கு தரவில்லை. பாப்பா பர்த்டே கிப்ட் என்றாள். சிறுமி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
நல்லா படிக்கணும். அம்மா, அப்பாவை பார்த்துக்கணும். சரியா? சிறுமிக்கு ஹை பை கொடுத்தாள்.
ஓ.கே ஆன்ட்டி..
சிறுமியின் தந்தையை பார்த்து, ரொம்ப நல்ல விசயம். மதுவிற்கு அடிமையாகாமல் உன் குடும்பத்தை பார்த்துக் கொள். மறுபடியும் ஏதாவது பிரச்சனைன்னு தெரிஞ்சது. பேச மாட்டேன் புரியுதா? சத்தமிட்டாள்.
“குடிக்க மாட்டேன் மேம்…” அவன் மனதார சொல்ல, அவள் புன்னகைத்தாள்.
அவர்கள் செல்லவும் தர்மாவின் எண்ணத்தில் மனம் மேலும் சுருண்டது. ஊருக்கு உபதேசம் கூறும் என்னால் அவனிடம் இதையெல்லாம் பேசவா முடியும்? பெருமூச்சு விட்டாள். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு தான் இருந்தான் தர்மராஜ்.
காற்றின் வேகம் திடீரென அதிகமாக அவளது கருப்புநிற கோர்ட்டு அவளது வண்டியிலிருந்து விழுந்தது.
தூரத்தில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது தர்மாவின் கண்ணில் தப்பாமல் விழுந்தது. அவன் சிந்தனையுடன் அதனை பார்த்தான்.
திடீரென அந்த லாரி வேகமெடுத்தது. அவன் புரியாமல் பார்க்கும் சமயம் பிரணிதா வண்டியிலிருந்து இறங்கி அவளது கோர்ட்டை எடுத்தாள்.
லாரிக்காரன் பிரணிதாவை அடித்து தூக்கும் சமயம் உள்ளே புகுந்து அவளை தன்னோடு கட்டிக் கொண்டே குதித்து கீழே விழுந்தான் தர்மராஜ்..
அவன் மீது வந்த அந்த பெண்ணின் நறுமணத்தில் முகம் சுளித்து, அருவருப்புடன் உணர்ந்தாள் பிரணிதா.
இருவரும் விழுந்த மறுநொடி அவளை விட்டு நகர்ந்த தர்மராஜ் தன் வண்டியிலிருந்த அரிவாளை எடுத்து லாரி டயரை நோக்கி வீசினான். அவன் வீச்சலில் பாய்ந்த அரிவாளால் லாரி டயர் கிழிபட்டு கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை இடித்துக் கொண்டு ஆற்றில் விழுந்தது.
உடனே தர்மாவும் ஆற்றில் குதித்தான். நடப்பவற்றை நம்ப முடியாமல் அதிர்ந்து பயந்து அவ்விடம் ஓடி வந்தாள் பிரணிதா.
தர்மா தென்படவில்லை எனவும் அவளுக்கு பதட்டமானது.
தர்மா…தர்மா..அவள் சத்தமிட, அவன் லாரி ஓட்டுனரை பிடிக்க தான் குதித்தான். அன்றைய குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது.
ஓட்டுநரை நழுவ விட்ட கடுப்புடன் நடுக்கத்தை வெளியே காட்டாமல் மேலே வந்தான்.
“தர்மா, ஆர் யூ ஆல் ரைட்?” பதட்டமாக பிரணிதா கேட்க, அவளை இழுத்து கட்டிக் கொண்டான். அவள் உணர்வு பெற்றவளாக அவனை தள்ளி விட்டு நகர்ந்து நின்றாள்.
எதுக்கு இதெல்லாம்?
“என்னோட எதிரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்” சிந்தனையுடன் அவன் அவ்வாற்றை பார்த்தான்.
ஏதும் பேசாமல் அவள் நகர, “பிரணிதா” அழைத்தான்.
அவள் திரும்பி கூட பார்க்கவில்லை.
ஈரமான ஆடையுடன், “அந்த பொண்ணு எதுவும் சொன்னாளா? கோபமா இருக்கிறாயா?” கூர்ந்து கவனித்தான்.
உன் மேல நான் எதற்கு கோபப்படணும் தர்மா? அந்த பொண்ணு பார்வையும் பேச்சும் தான் எனக்குள் ஏதோ செய்கிறது. பரவாயில்லை. நான் கிளம்புகிறேன்..
என்ன? அதிர்ந்து அவனருகே வந்தாள். மழைச்சாரல் தொடங்கி மழையாக அவளை தன் காருக்குள் அமர வைத்தான்.
குளிரில் நடுங்கிய அவள் இதழோடு அவன் இதழ் கோர்க்க, அவனை தள்ளி விட்டு அழுது கொண்டே கீழே இறங்கினாள்.
“பிரணிதா” சினமுடன் அவன் அழைக்க, காற்றுடன் சேர்ந்த மழையின் குளிரில் நடுங்கியவாறு அழுது கொண்டே நடந்தாள்.
அந்த பெண்ணை போல தன்னையும் எண்ணி விட்டான் என்ற எண்ணம் அவளுள் வலம் வந்து இம்சித்தது.
கொஞ்சமும் தாமதிக்காது அவளை தன் தோளில் போட்டு காருக்குள் தள்ளி நேரம் கொடுக்காமல் காரை அவன் வீட்டிற்கு விரட்டினான்.
வீட்டின் முன் காரை நிறுத்தி அவளை தூக்கி நடக்க, அவள் அவனை அடித்துக் கொண்டே வந்தாள்.
பூவின் கரங்கள் வண்டிற்கு பாரமாகுமா என்ன? மேலும் சுகத்தை தந்தன.
அண்ணே! என்னாச்சு? ஆட்கள் அவன் பின் ஓடி வந்தனர்.
இவர்கள் முன் எவ்வாறு ஹாலில் விடுவது என எண்ணிய தர்மராஜ் நேராக அவனறைக்கு ஏதும் பேசாமல் நடந்து சென்று, கதவை அடைத்து அவளை படுக்கையில் கிடத்தினான்.
இதனை எதிர்பார்க்காத பிரணிதா அரண்டு விட்டாள்.
விரைந்து படுக்கையிலிருந்து இறங்கினாள். ஏற்கனவே படுக்கையில் இருந்த சுருக்கத்தை கண்டவளுக்கு மேலும் மனம் அரிக்க தொடங்கியது.
“தர்மா, நான் வீட்டுக்கு போகணும். என்னோட வண்டி இப்ப எனக்கு இங்க வரணும்” சீறினாள்.
“என்ன பேசணும்? நேரடியாக பேசு” துவாலையை எடுத்து ஈரமான அவன் தலையை துவட்டு விட்டு அவளது தலையில் போட்டான்.
“நான் வீட்டுக்கு போகணும்…” உதட்டை பிதுக்கினாள்.
புருவம் சுருக்கி பிரணிதாவை பார்வையில் அளந்தவாறு, அவளை நெருங்கினான்.
கண்ணீர் வந்தது விட்டது அவளுக்கு.
நின்ற தர்மா அவளது முகத்தை நிமிர்த்தினான்.
எதுக்கு அழுற?
“நான் அந்த மாதிரி பொண்ணில்லை. நான் போகணும்” கண்ணீருடன் கூறினாள்.
நானும் உன்னை அப்படி எண்ணவில்லை. அதனால் தான் திருமணம் செய்ய கேட்டேன். அவன் மேலும் பேச வந்த சமயம், அவளது பாக்கெட்டில் அலைபேசி ஒலித்தது.
சர்வா எண்ணை பார்க்கவும், கையிலிருந்த துவாலையால் முகத்தை அழுந்த துடைத்து தர்மாவிடமிருந்து நகர்ந்து தண்ணீரை அருந்தி விட்டு அழைப்பை எடுத்தாள்.
பிரணி, எங்க இருக்க? ஆபிஸ்லயும் இல்ல, வீட்லயும் நீ இல்லை அவன் கேட்க, அலைபேசியை நகர்த்தி தொண்டையை செருமி…
“நான் எங்க இருந்தால் உனக்கென்ன? நீ எங்க இருக்க? வீடா ஆபிஸான்னு என்னை கேக்குற?”
ம்ம்! நீ எங்க வேணும்ன்னாலும் இரு. நான் உன்னோட ஆபிஸ்ல தான் இருக்கேன். இப்பவே வந்தால் ஓகே இல்லைன்னா, உன் பொருட்களை கலைத்தாவது எனக்கு தேவையானதை எடுப்பேன்.
வாட்? இடியட்…என்னோட திங்ஸை நீ எடுத்த உன்னை கொல்லாமல் விட மாட்டேன். என்னோட ஆபிஸ்ல உனக்கு என்ன வேலை? ஒழுங்கா ஊர் போய் சேரு…
ஊரா? சிரித்த சர்வேஸ்வரன். நான் எங்கேயும் போகப் போறதில்லை. இனி இங்க தான்.
வாட்?
அச்சோ! உனக்கு விசயம் தெரியதா? துரை சார் அவராகவே அவர் பொறுப்பை என்னிடம் கொடுத்து விட்டார்.
வாட் தி கெல்..காட்…காட் தலையை பிடித்தவாறு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு, அவர் என்னிடம் சொல்லவில்லை. அவர் கூட என்னுடைய பொருட்களில் கை வைத்ததில்லை. எதையும் எடுக்காத. மாலையில் பேசிக்கலாம்.
மாலையா? இப்பொழுது நீ வர முடியாதா? எங்க இருக்க?
நான் கிளைண்ட்டை மீட் பண்ண வந்திருக்கேன். லன்ட்ச் அவரோடு தான். அதனால ஆபிஸ்ல இருந்து கிளம்பு. இல்ல…
இல்ல..என்ன? சர்வா கேட்க,
சர்வா என்னை தொந்தரவு செய்யவே வந்தீயா? உன்னோட வேலையை பாரு. மாலை மீட் பண்ணலாம்ன்னு சொல்றேன்ல்ல?
“கண்டிப்பா மாலை வருவேன்” அவன் அலைபேசியை வைக்க, “ஷ் ஹைப்பா….” அவள் வீட்டில் இருப்பது போல சாவகாசமாக கார்த்திக்கை அழைத்து சர்வா மீதுள்ள கோபத்தை காட்டினாள். “என் தலையெழுத்து” அவன் வாங்கி வைத்து விட்டான்.
வெற்று மேலுடலுடன் கால் மீது கால் போட்டு சுருட்டை பிடித்தவாறு அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் தர்மராஜ்.
சுருட்டின் நெடி அவளை தாக்கவும் தான் தர்மாவின் வீட்டில் இருக்கிறோம் என்று வந்தனா பற்றி அவன் முன் பேசவில்லையே என சர்வாவிடம் பேசியதை ஓட்டிக் கொண்டிருந்தாள்.
“சுதாகரன் சார் மகன் எதற்கு உன்னிடம் அடிக்கடி பேசுகிறான்?” புகையை வெளியே தள்ளியவாறு தர்மராஜ் கேட்டான்.
“அது எதுக்கு உனக்கு? நான் கிளம்புகிறேன்..” எழுந்தாள்.
கிளைண்ட்டோட மதிய உணவை முடித்து விட்டு போகலாமே!
அவனை முறைத்து பார்த்தாள்.
“சரி…இதை மாற்றி விட்டு போ” ஒரு புடவையை அவளிடம் நீட்டினான்.
“யாருக்கு இது? அந்த பொண்ணுக்கு வாங்கியதை எனக்கு கொடுக்காத” சினந்தாள்.
இது என்னுடைய அம்மாவுடையது….
அம்மாவா? என்னிடம் கொடுக்குற?
அவங்க இல்லைல்ல. அதான் உன்னிடம் கொடுக்கிறேன்.
வாங்கிக் கொண்டாள்.
அந்த காலத்து புடவை என்றாலும் பிரணிதாவிற்கு கச்சிதமாக பொருந்தி இருந்தது.
“வா..நானே உன்னை இறக்கி விடுகிறேன்” வாய் தன் போக்கில் பேச, அவன் கண்கள் விரிந்தது விரிந்தவாரே இருந்தது.
இருவரும் ஜோடியாக இறங்கி வருவதை அவன் ஆட்கள் வாயை பிளந்து பார்த்தனர்.
நிரஞ்சன் பற்றி சேகரித்த தகவல் எதையும் சர்வாவிடம் பிரணிதா காட்டவேயில்லை. இன்று போய் நாளை வா என்பது போல ஏமாற்றிக் கொண்டிருந்தாள்.
சர்வாவிடம் பேசும் போதெல்லாம் பிரணிதா தர்மராஜ் வீட்டில் தான் இருந்தாள். சர்வாவிற்கு சந்தேகம் துளி விட்டது.
தர்மாவிற்கு பிரணிதா மீது அசைக்க முடியாத நேசம் பிறந்தது. அவன் ஆட்களில் ஒருவன் மட்டும் பிரணிதாவை முறைப்புடனே பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் யாரையும் கண்டுகொள்ளவில்லை.
பிரணிதா, தினமும் அந்த பெயிண்ட்டிங்கை பார்க்கிறாய்? உனக்கு என்ன தெரிகிறது? அவளது தோளில் கை போட்டான் தர்மராஜ்.
கையை நகர்த்தி, “ஏன் தர்மா இதில் நீ மட்டும் இல்லை…” கேட்டாள்.
அதிர்ந்து, உனக்கு எப்படி புரிந்தது? கேட்டான்.
இவர்கள் உன்னோட குடும்பத்தினர்கள் தானே…! நீ இல்லை…அவனை பார்த்தாள்.
அவங்க தான் விட்டு போயிட்டாங்களே! நான் தனியாக தானே இருக்கிறேன்.
அதான் உன்னுடைய தம்பி இருக்கிறானே! அவள் கூற, திகைத்து அவளை பார்த்தான்.
உனக்கு அவனை தெரியுமா?
ம்ம்! கேள்விப்பட்டிருக்கேன்.
என்ன கேள்வி பட்ட?
உன்னை போல அவனும் பொறுக்கி தானே! என்றாள் சாதாரணமாக.
“நான் உன்னிடம் பொறுக்கி போலவா நடந்து கொள்கிறேன்?” சினமுடன் கேட்டான்.
இல்லை. ஆனால் ஊர் உலகத்திற்கு கட்டப்பஞ்சாயத்து செய்றவன் என்றாலும் நீ பொறுக்கி, கொலைகாரன் தான். அதை மாற்ற யாரால் முடியும்?
“எங்க அண்ணா முன்னாடி என்ன பேசுறீங்க?” பொங்கிக் கொண்டு வந்தான் ஒருவன்.
நான் தவறாக ஏதும் சொல்லவில்லை. உன் அண்ணா போன வாரம் கூட சுதாகரன் சார் உதவியாளனை கொன்று இருக்கிறார்.
“உனக்கு என் மீது கோபம், பயம் இல்லையா?” அவளது தைரியத்தில் புன்னகைத்து கேட்டான் தர்மராஜ்.
“நான் என்ன செய்தேன் பயப்பட?” சோபாவில் அமர்ந்தாள்.
ஒருவேலை நான் உன்னை கொன்று விட்டால்…..
“கொன்னுக்கோ…” கையை விரித்து அவனை பார்க்க, அவன் ஆட்கள் மிரட்சியுடன் பிரணிதாவை பார்த்தனர்.
என்னோட பொண்டாட்டிக்கு தைரியம் அதிகம் தான்…
“நாம இன்னும் திருமணம் செய்துக்கலை. முன்னாடியே பொண்டாட்டி, வப்பாட்டின்னு பேசாத” நேரடியாக கூறினாள்.
அண்ணீ, உங்களுக்கு பிடிக்கலைன்னு வீட்டுக்குள்ள உங்களை தவிர எந்த பொண்ணும் வரக் கூடாதுன்னு அண்ணா சொல்லி இருக்கார். நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க? ஒருவன் கேட்க,
உன்னோட அண்ணா ஒன்றும் உத்தமனோ நல்லவனோ இல்லையே! என்னையும் மிரட்டி தானே திருமணம் செய்ய ஒத்துக்க வச்சாரு.
நானா உன்னை தினமும் வரச் சொன்னேன்?
நானாக தான் வந்தேன். எப்படியும் இங்க தான வரணும். நீ பாட்டுக்கு என்னோட அக்காவை ஏதாவது செஞ்சுட்டன்னா என்னோட அப்பாவும் நானும் என்ன செய்றது? அதான் உன்னை பத்தி இன்னும் தெரிஞ்சுக்க வந்தேன்.
என்ன தெரிஞ்சுக்கிட்ட?
அவனை பார்த்து சிரித்தாளே தவிர பதில் கூறாமல் எழுந்து, “தர்மா…இன்று மதியத்தின் பின் கோர்ட்டுக்கு போகணும். கொஞ்சம் ஆபிஸ்ல்ல போய் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன்” எழுந்தாள்.
ஒருவன் அவளை வழி மறித்து, “அண்ணா கேட்டதற்கு பதில் கூறவில்லை” முறைப்புடன் கேட்டான்.
“சொல்ல முடியாது. என்ன கொல்ல தான செய்வீங்க. கொன்னுக்கோங்க……” மறுபடியும் அவள் அதையே கூறி, தர்மாவிற்கு மனம் பிசைந்தது.
ஏன் கொலை செய்வதையே கூறுகிறாள்? அவளை கொல்ல மாட்டேன் என்று அசட்டு நம்பிக்கையுடன் இருக்கிறாளோ? எண்ணினான்.
“பை…பசங்களா. நாம நாளை சந்திக்கலாம்..” சென்று விட்டாள்.
அண்ணே! இவங்க இப்படி பேசுறாங்க? எனக்கு ஏதோ தப்பா தெரியுது அண்ணே, இனி இவங்கள நம்ம வீட்டுக்குள்ள விடவே கூடாது என்றான் ஒருவன்.
பார்க்கலாம் என்றவன் அவளிடம் பேச எண்ணி அவனது காரை எடுத்தான். கார் பஞ்சராகி இருக்க, அவனது பழைய பைக்கை எடுத்தான்.