காதல் 13

வந்தனா இறக்கும் முன் சர்வாவை அழைத்திருந்தாள். அப்பொழுது நாங்கள் எங்களது குடும்ப விழாவிற்கு சென்றிருந்தோம்.

அவள் இறந்த விசயம் தெரிந்த பின் தான் பிரணி அலைபேசிக்கு இந்த வீடியோ வந்திருந்தது என பிரணிதாவின் அக்கா பிரணிதா அலைபேசியில் இருந்ததை ஓட விட்டாள்.

ஓரிடத்தில் மறைந்திருந்த வந்தனா, முகம் வியர்க்க சிவந்த கண்களுடன் மரண பயத்தை தத்தெடுத்து இருந்தது.

பிர..பிர..ணி..நா உயிரோட இருப்பேன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. நிரஞ்சன் பெண்களை கற்பழித்து கொலை செய்து தற்கொலை போல காட்டுகிறான். அவன் விசயத்தை சும்மா விடாத. நம்முடன் படித்த லட்சுவையும் அவன் தான் கொன்றிருக்கான் பதட்டமாக கூறினாள்.

பின் ஆழ்ந்து மூச்செடுத்து விட்டு அப்புறம்… அண்ணாகிட்ட விசயத்தை சொல்லாத. அம்மா அப்பாவை பார்த்துக்கோ.

சரா..என்று அவள் கூற,

“எங்க போனா? எப்படிடா விட்டீங்க?” ஆட்களின் சத்ததில் அவர்களை எட்டிப் பார்த்து மெது மெதுவாக நகர்ந்து பெரிய சுவற்றின் பின் வந்தாள்.

பிரணி..சரா…சராவ நீ தான் பார்த்துக்கணும். அவனை நீ தான் மேரேஜ் பண்ணிக்கணும். எப்படி செய்வன்னு தெரியாது பட் செய்யணும். இது என்னோட கடைசி ஆசை. இது எம் மேல பிராமிஸ்..

சரா உதவியுடன் அந்த நிரஞ்சனை எப்படியாவது சிறையில் அடைக்கணும் இல்லைன்னா பல பெண்கள் பாதிக்கப்படுவாங்க…

சரா கிட்ட கடைசியா லவ் யூ சொன்னேன்னு சொல்லிடு. என்னை நினைச்சி யாரும் வருத்தப்படக் கூடாது. பிரணி..ஐ மிஸ் யூ டி அழுதாள்.

“இங்க இருக்காடா” அவளது முடியை ஒருவன் பிடித்து இழுக்க, அலைபேசி செடி கொடிகள் அடர்ந்த புதருக்குள் விழுந்தது.

ஷ் ஆஆஆஆஆ……வந்தனா கத்திய சத்தமுடன் வீடியோ முடிந்து இருந்தது. சம்பாவும் சர்வாவும் துடிதுடித்து போனார்கள்.

சர்வா…பிரணிகிட்ட இதை உன்னிடம் அன்றே சொல்ல சொன்னோம். ஆனால் அவள் இருந்த நிலையில் கேட்கவில்லை. உன்னிடம் சொல்ல அவள் உன்னை தேடிய சமயம் நீ இங்கில்லை. அதனால் உன் மீது பிரணியும் கோபமாக இருக்கிறாள்.

வந்தனா கூறியதற்காக தான் அப்பா பிரணிக்கு வந்த வரனெல்லாம் தள்ளி விட்டுக் கொண்டிருந்தார். இப்பொழுது இப்படி அவள் திருமணம் கேள்விக்குறியாய் நிற்கும் என்று நாங்கள் எண்ணவில்லை அழுதார்.

தன் மகளை அணைவாய் பிடித்த கந்தசாமி, வீடியோவை வைத்து அலைபேசி சிக்னல் கண்டு நாங்கள் அவ்விடம் தேடிப் போனோம். பாழடைந்த வீடு தான் இருந்தது. அது சிறு வயதில் தர்மா, நிரஞ்சன் குடும்பத்துடன் வாழ்ந்த வீடு.

குடும்பமா?

ஆமா சம்பா, அவர்களுக்கு குடும்பம் இருந்திருக்காங்க. ஏதோ விபத்துல தான் இவர்கள் சிறுவர்களாக இருந்த போது அனைவரும் இறந்துட்டாங்க.

தர்மராஜ் தான் தன் தம்பியை படிக்க வைத்தான். ஏழ்மையான அந்நிலையில் யாரும் அவனுக்கு உதவவில்லை. சொந்தபந்தங்களிடம் கெஞ்சினான். யாரும் அவனை பொருட்படுத்தவில்லை. ஆனால் உயிருக்கு பயந்து உதவியதை பார்த்து அதனை கையிலெடுத்தான் தர்மா.

அந்நேரம் அவன் குடும்பம் உயிரோடு இருந்தால் அவன் இப்படி அரக்கனாக இருந்திருக்க மாட்டான் வருந்தினார் கந்தசாமி.

நம்ம வந்துவோட உடல் இன்று வரை கிடைக்கவில்லை. ஆனால் இந்த வீடியோ எப்படி வெளியே வந்தது? என்று தான் புரியவில்லை.

அங்கிள், யாதவ் அவ்வீடியோவில் இருப்பது போல செய்து குரு மாமாவை மிரட்டினார்கள்.

ம்ம்! தெரியும் சர்வா. நானும் வந்து இறப்பிற்கு நீதி தேடி கிளம்பினேன். கடைசியில் வேலையை விட்டது தான் மிச்சம். பெரிய ஆளுங்க தொடர்பும் இதில் இருக்கு.

தர்மாவாக இருக்குமோ? அக்கா கேட்க,

இருக்கலாம்மா. தர்மா வெளியுலகை பொறுத்தவரை கட்டப்பஞ்சாயத்து தான் நடத்திட்டு இருக்கான். அவனும் பெண்கள் விசயத்தில் தவறானவன் என்று எனக்கு தெரியும். கட்டாயப்படுத்தும் ரகம் இல்லை..ஆனால் நம்ம பிரணியை தான் அவர் கண்கலங்கினார்.

உங்க சதாசிவம் சார் கூட கொலை தான் செய்யப்பட்டார் சர்வா. அவர் கடைசியாக விசாரித்த கேஸை பற்றி இப்பொழுது வரை பிரணி தேடிக் கொண்டு தான் இருக்கிறாள். எங்கும் ஒரு ஆதாரம் கிடைக்கவில்லை.

“அங்கிள், நான் பார்த்துக்கிறேன்” சர்வா எழ, “நான் எதற்கு இருக்கேனாம்?” சம்பத்தும் எழுந்தான்.

சம்பா, யாதவ் நம்ம வந்தனா விசயத்தில் தவறு செய்யவில்லை. யாதவை பழி வாங்குறேன்னு உன் வாழ்க்கையை அழிச்சுக்காத பிரணிதாவின் அக்கா கூற, ம்ம்! என்றான்.

ஆமா, அப்சரா ரொம்பவே வெகுளி. கஷ்டப்படுத்திறாத என்றார் கந்தசாமி.

தன் நண்பனை பார்த்தவாறு, “ஓ.கே அங்கிள்” சம்பத் கூற, சர்வா பிரணி திருமண விசயம்? கேட்டார்.

“சாரி அங்கிள்…” அவன் வெளியேறினான்.

முதல்ல பிரச்சனை முடியட்டும் அங்கிள். அப்புறம் பிரணி மேரேஜ் தான் என்ற சம்பத், “அவளை பார்த்துக்கோங்க. அவனிடம் கவனமா இருங்க” வெளியேறினான்.

சம்பாவிற்கும் சர்வாவிற்கும் இருந்த இடைவெளி குறைந்தது. சர்வா தன் நண்பனை கட்டிக் கொண்டு பைக்கில் பயணம் செய்தான்.

நாம சேர்ந்து வந்ததால் கேள்விகள் எழும். யாரிடமும் எதையும் காட்டிக்காத. பதிலும் சொல்லாதே! சம்பத் கூற, அப்பூ? கேள்வியுடன் அவனை நோக்கினான் சர்வா.

என்னால் இப்பொழுதைக்கு கூற முடியாது. உன்னோட அம்மா தங்கைக்கு தெரிந்தால் சும்மா இருக்க மாட்டாங்க .

“சாரி சம்பா, வந்து அழைத்தவுடன் நான் சென்றிருக்கணும்” அழுதான் சர்வா.

சம்பா பைக்கை நிறுத்தி சர்வாவை கட்டிக் கொண்டு, “அவள் மீது தப்பு இருக்கு. தனியா போகாத. யாரிடமாவது விசயத்தை சொல்லிட்டு தான் எங்கேயும் போகணும்ன்னு அப்பா அடிக்கடி சொல்வார்டா. அவ தான் சொல்லாமலே போனா…விடு…” சம்பத்தும் முகத்தை இறுக்கமாக வைத்து சர்வாவை கட்டிக் கொண்டான்.

“சரி வா… அப்சா காத்திருப்பாள்” சம்பா கூற, இருவரும் சில மணி நேரத்திலே வீட்டிற்கு வந்தனர்.

சர்வா முகம் இறுக நேராக அவனறை கதவில் காயப்பட்ட கரத்தை பதிக்க, “மாமா…” சத்தமிட்டாள் அப்சரா.

யாதவ் வேகமாக படிகளில் ஏற, எல்லாரையும் பார்த்த அவன் மேலும் அழுத்தி கரம் பதித்து கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.

சம்பா அவனது வண்டியை நிறுத்தி, முகம் யாருக்கும் தெரியாதவாறு கவிழ்ந்தவாறு விறுவிறுவென அறைக்கு நடந்தான்.

யாதவ் சர்வா அறைக்கதவை பார்த்து விட்டு சம்பாவை கண்டு, “மாமா நில்லுங்க” அழைத்து படியிலிருந்து இறங்கினான்.

நின்ற சம்பத் யாரையும் நிமிர்ந்து கூட பாராது மீண்டும் அவனறைக்கு செல்ல, அவன் கதவடைக்கும் முன் அப்சரா உள்ளே நுழைந்து கதவை தாழிட்டாள்.

“மாமா…” தயங்கி அவள் அழைக்க, கதறி விட்டான் சம்பத்.

அப்சரா பதற, அவளை நெருங்கி அணைத்து கதறி அழுதான்.

“என்னாச்சு மாமா?” அவனை கட்டியவாறே அவனது முதுகினை தடவினாள்.

“எதுவும் கேட்காத. ப்ளீஸ் அப்படியே இரு” அவளை விடாமல் கட்டிக் கொண்டான் சம்பத்.

சற்று ஆஷ்வாசமடையவும் அப்சராவை நகர்த்தி அவளை அமர வைத்து அவள் மடியில் படுத்துக் கொண்டான்.

“அந்த பொண்ணு யாரு? என்ன பிரச்சனை மாமா?” மனதின் சஞ்சலத்தை மறைத்து கேட்டாள் அப்சரா.

என்னால இப்பொழுது எதுவும் கூற முடியாது. நேரம் வரவும் சொல்கிறேன்..

அப்சரா அமைதியாக இருந்தாள்.

அப்சா, உன்னோட மாமா பற்றி உனக்கு வேற ஏதாவது விவரம் தெரியுமா?

சர்வா மாமா…

நான் கேட்டது சுதாகரன்..

மாமா…எனக்கு தெரியாதே! எதுக்கு கேக்குறீங்க?

சும்மா தெரிஞ்சுக்க தான்..

“என்ன இருந்தாலும் உன்னோட அப்பாவிடம் பேசி இருக்கலாம். அவர் வருத்தப்பட்டார்…” சம்பத் அப்சராவை பார்த்தான்.

அவரை என்னோட அப்பான்னு சொல்லவே பிடிக்கல..

“உன்னோட அப்பா மேல உனக்கு இவ்வளவு தான் நம்பிக்கையா?” அவன் கேட்க, “அப்பா எதுவும் செய்யலையா?” அவனை பார்த்தாள்.

கண்டிப்பாக இல்லை என்றான் சம்பத்.

அப்புறம் எதுக்கு அப்பா உள்ள இருக்கார். வாங்க அவரை வெளிய அழைச்சிட்டு வரணும்.

அவர் உள்ளே இருந்தால் தான் பாதுகாப்பாக இருப்பார் என்றான் சம்பத்.

என்ன சொல்றீங்க?

“இதையும் நேரம் வரும் போது சொல்றேன்” அவன் கூற, அவனை வெறித்தாள்.

நான் தயாராகி வருகிறேன். ஆபிஸிற்கு நேரமாகிடுச்சி என்றான்.

ம்ம்! அவள் முகத்தை சரி செய்து வெளியே சென்று அமர்ந்தாள். கீர்த்திகாவும் ஜெயாவும் அவளையே பார்த்தனர்.

என்னடி உம் புருசனை காணோம்?

வருவார் அத்தை…

சர்வா தனியாக தன் வந்தனாவின் இறப்பை எண்ணி குமறிக் கொண்டிருந்தான். அவன் எண்ணத்தில் பிரணிதாவை மேரேஜ் பண்ணிக் கொள்ள அவள் கேட்டது வந்தது.

நான் எப்படி வந்து? உன்னால எப்படி சொல்ல முடிந்தது? ஆனால் நீ கூறியது போல பிரணிதாவுடன் சேர்ந்து அந்த நிரஞ்சனை விடவே மாட்டேன் என்ற உத்வேகத்துடன் எழுந்து தயாராகி வழக்குரைஞர் சர்வேஸ்வரனாக வெளியே வந்தான். சம்பாவும் தயாராகி வந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

நண்பர்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் பேசும் எண்ணம் வந்தது.

“யாது வா, உன்னை காலேஜ்ல்ல டிராப் பண்ணீட்டு போறேன்” சர்வா அவன் கரம் பற்றினான்.

மாமா, எப்படி டிரைவ் பண்ணுவீங்க? எங்க போகணும்ன்னு சொல்லுங்க? நான் உங்களை விட்டு செல்கிறேன்.

லாயர் ஆபிஸ் போகணும். எனக்கு நேரமாகும்.

அண்ணா, நீ கிளம்பலையா? கீர்த்திகா அதிர்ந்து சர்வேஸ்வரனை பார்த்தாள்.

“இனி நான் எங்கும் போகப் போறதில்லை. எனக்கு இங்க நிறைய வேலை இருக்கு” தன் அன்னையை பார்த்தான் சர்வேஸ்வரன்.

“மாமா, நிஜமா தான் சொல்றீங்களா?” புன்னகையுடன் தன் கணவனிடமிருந்து அப்சரா சர்வாவிடம் ஓடி வந்தாள்.

புடவை தட்ட, “பார்த்து வா அப்பூ. இப்ப நீ சின்ன பொண்ணு இல்லை” என்றான் சர்வா.

“சரி மாமா” தன் கணவனை கவனித்தாள். அவனுக்கு தான் சர்வா பற்றி தெரியுமே! எவ்வித பொறாமை உணர்வும் இல்லாமல் அமைதியாக இருந்தான்.

சூப்பர் மாமா…இதை முன்பே செய்திருந்தால் யாரும் ஓவரா ஆடி இருக்க மாட்டாங்க என்றான் யாதவ். பாட்டியும் தாத்தாவும் வீட்டினுள் நுழைந்தனர்.

யாதவ் சிரிப்புடன் அவர்களிடம் சர்வா கூறியதை சொன்னான்.

சர்வா அவர்கள் காலில் விழ, ரொம்ப நல்லதுப்பா… ஆசி வழங்கினார்கள்.

ஹெட் ஆபிஸ்ல்ல எழுதி கொடுக்கணுமேப்பா! போக வேண்டியிருக்குமே! தாத்தா கேட்டார்.

மெயில் பண்ணிட்டேன் தாத்தா. அவங்க அக்சப்ட் பண்ணீட்டாங்க. கபீல் சார் தான் வருத்தப்பட்டார்.

அதுக்கென்ன? உன்னோட திருமணத்துக்கு அவரை அழைக்கலாம் பாட்டி கூற,

ஆமா பாட்டி சரியா சொன்னீங்க. உங்க பேரன் திருமணத்திற்குள் எல்லாமே சரியாகிடும் என்று கீர்த்திகாவையும் அவளது தாயையும் பார்த்தான் சம்பத்.

சர்வா அவனை முறைக்க, தாத்தா உங்க பேரன் என்னை முறைக்கிறான் கம்பிளைண்ட் செய்தான் சம்பத்.

சர்வா எதுக்கு மாப்பிள்ளைய முறைக்கிற?

அதெல்லாம் இல்லை தாத்தா. அதான் மாப்பிள்ளையும் நானும் பேசிக்க ஆரம்பிச்சுட்டோமே! அவர் கேலி செய்கிறார்.

“தாத்தா, எனக்கு தெரிஞ்ச பொண்ணு கூட தயாரா இருக்காங்க. சொன்னா உடனே திருமணம் தான்” சம்பத் சர்வாவை வம்பிற்கு இழுத்தான்.

பொண்ணு தயாரா? யாரு மாப்பிள்ள? உங்க உறவா? தாத்தா கேட்க, சிவக்குமார் உள்ளே வந்து புரியாமல் சம்பாவை பார்த்தார்.

இல்ல தாத்தா. நான் சொல்கிறேன். நேரம் வரட்டும். சரி தான மாப்பிள்ள? சர்வா தோளில் சம்பத் கை போட, வாயை பிளந்து பார்த்தனர்.

அப்புறம் யாது மச்சான், சர்வா மாப்பிள்ளைய பத்திரமா இறக்கி விட்டு நீங்க கல்லூரிக்கு போங்க சம்பத் கூற,

மாமா…என்னையா? திருதிருவென விழித்தான் யாதவ்.

“உன்னை தான் யாது…..” சம்பத் உரிமையாக பேச, இருவருடன் யாதவ் இணைந்து கட்டிக் கொண்டான்.

என்ன நடக்குது? யாருக்கும் புரியவில்லை…

சர்வா சம்பத்தை வித்தியாசமாக பார்த்தான்.

“அப்சா, வா நாம கிளம்பலாம்” சம்பத் அப்சரா பெரியவர்களில் ஆசி பெற்று கிளம்பினார்கள்.

அண்ணே! அண்ணே! அரக்கப்பறக்க ஓடி வந்தான் ஒருவன்.

“ஏன்டா, கத்திட்டே இருக்க. அமைதியா தான் வாவேன்” தர்மராஜ் அவனிடம் சத்தமிட்டான்.

அண்ணே! அண்ணீ வந்துருக்காங்க….

“என்ன?” விரைந்து வெளியே வந்தான் தர்மராஜ்.

ஹாலில் மாட்டி இருந்த பெயிண்டிங்கை உற்று நோக்கி பின் நகர்ந்து மீண்டும் உற்று பார்த்துக் கொண்டிருந்தாள் பிரணிதா.

கச்சிதமாக பொருத்தப்பட்டிருந்த அந்த குர்தியில், பச்சை பசேலென விரிந்த அப்பெயிண்டிங்கின் நடுவே சில மறைந்த முகங்கள்…அதை ஆர்வமுடன் பார்க்க அவ்வாறு செய்து கொண்டிருந்தாள்.

சிரிப்புடன் தன் காப்பை ஏற்றி விட்டு மடித்திருந்த வேஷ்டியை இறக்கி மீசையை முறுக்கியவாறு அவளருகே வந்தான்.

பிரணிதா…அவன் அழைக்க, கம்பீரமுடன் பெண்களை கவரும் வண்ணம் தான் இருக்கிறான். செய்யும் செயல் தான் மனதில் எண்ணிய பிரணிதா புன்னகைத்தாள்.

உடனே வருவன்னு நான் நினைக்கவில்லை என்றான்.

பிரேக் பாஸ்ட் எடுத்து வந்தேன். திருமணத்திற்கு தான் ஒரு மாதம் இருக்கே! அதுவரை ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்கலாமே! கேட்டாள்.

உரக்க சிரித்த அவன், “புரிஞ்சுட்டு என்ன பண்றதாம்?” கேட்டான்.

“என்ன தர்மா இப்படி கேட்டுட்ட?” அவள் பேச, அங்கிருந்த அவன் ஆட்கள் அவளை அதிர்ந்து பார்த்தனர்.

அவன் கோட்டைக்குள் வந்து அவனையே பெயர் கூறி அழைக்கிறாளே! இந்த தைரியம் கூட அவனுக்கு பிடித்திருந்தது.

“உட்காரு” அவளை அமர வைத்து அவளை நெருங்கி அமர்ந்து அவள் தோளில் கை போட்டான். அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.

தர்மா, திருமணம் சாதாரண விசயமில்லை. திருமணத்தில் அன்பு, பாசம், ஒற்றுமை, புரிதல் இருக்கணும்.

ஓ! அப்படியா? அப்புறம்….

நான் கதை பேச வரலை. நீ சாப்பிடு வா அவன் கையை பிடித்து இழுத்தாள்.

டைனிங் டேபிளில் அவன் அமர, எடுத்து வந்த உணவை எடுத்து வைத்தாள்.

நீ செய்தாயா? புருவத்தை உயர்த்தி கேட்டாள்.

இல்ல, அப்பா தான். பாசத்தை மொத்தமா கொட்டி செஞ்சிருக்காரு. உனக்கும் எடுத்து வந்தேன் என்றாள்.

பாசமா? அவன் முகம் சுருங்கியது.

ஆமா, சாப்பிட்டு பாரு. அதோட உணர்வே தனிதான்…..கையை விரித்து உணர்வுடன் பேசினாள்.

அவளின் செய்கையில் புன்னகையுடன் உண்டான்.

ஓ.கே, நான் கிளம்புகிறேன். ஆபிஸிற்கு நேரமாகுது. பை…அவள் நகர, அவளது கை பிடித்து அவன் முத்தமிட வந்தான்.

“நோ….தர்மா…தர்மத்தை கடைபிடிக்கணும்” அவனை நகர்த்தி, “ஈவ்னிங் முடிந்தால் வாரேன்” கையசைத்து ஓடினாள்.

ஏதோ ஒரு மனநிறைவு தர்மாவினுள்.

அண்ணே! இப்ப சொல்லுங்க. அவங்க இன்று உங்க படுக்கையறையில இருப்பாங்க என்றான் ஒருவன்.

“வேண்டாம்” அவசரமாக கூறி புன்னகைத்து அறைக்கு சென்றான்.

அவன் கண்ட பெண்களை நெருங்கினால் பணத்திற்காக ஒன்றி விடுவார்கள். திருமணம் என்று பேசிய பின்னும் அவளின் விலகலில் பிரணிதாவின் பால் தர்மராஜ் மனம் தடுமாறியது.

தர்மராஜ் வீட்டிற்கு வெளியே வரவும் அவளுக்கு அழைப்பு வந்தது. அவளது ஜூனியர் கார்த்திக் அழைத்திருந்தான்.

“கார்த்திக் நேராக கோர்ட்டிற்கு எல்லாவற்றையும் எடுத்து வா” அதிகாரமுடன் பேசினாள்.

மேம், இங்க சர்வா சார் வந்துருக்காங்க. உங்களை பார்க்காமல் போக மாட்டேன்னு உங்க அறையில் இருக்காங்க.

என் அறைக்கு எதுக்குடா விட்ட?

நான் சொன்னேன் மேம். அவர் கேட்கவில்லை..

சரி, இப்பவே வாரேன்னு சொல்லு…

மேம், கோர்ட்டு..

“அவரை பார்த்துட்டு நாம போகலாம்” அலைபேசியை வைத்தாள் பிரணிதா.

அப்சராவும் சம்பத்தும் கம்பெனிக்குள் நுழையவும், மாமா பர்ஸ்ட் மீட்டிங் அரேஜ் பண்ணனும்.

நான் அவள் கணவன். நான் ஏன் செய்யணும் என்ற பாகுபாடின்றி சம்பத் அப்சரா கூறும் அனைத்தையும் அவளது உதவினாளனாக செய்தான். அவளுக்கு தான் கணவனிடம் வேலை சொல்ல தயக்கமாக இருந்தது.

இருவரும் அவர்களின் அண்ணன், தங்கைக்காக என மனதை தேற்றிக் கொண்டு அவரவர் பணியை தொடங்கினார்கள்.

விறுவிறுவென ஆபிஸ் நோக்கி வந்த பிரணிதா கார்த்திக்கை முறைத்து, “பைல்ஸை எடுத்துட்டு வா” அறைக்கதவை திறந்தாள்.

திரும்பி பார்த்து சர்வா கையை ஆட்டினான்.

அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, எதையோ தேடினாள். பைல்லை எடுத்து மேலே வைத்தாள்.

பிரணி, நான்…சர்வா பேசும் முன், “எக்ஸ்யூஸ்மி மேம்” கார்த்திக் அழைத்தான்.

எஸ், கம் இன் என்று அவன் கொண்டு வந்திருந்த பைல்லை வாங்கி சர்வாவை பார்த்தாள்.

“சார், நீங்க என்ன கேட்க வந்துருக்கீங்கன்னு எனக்கு புரியுது. என்னால தர முடியாது. நீங்க கிளம்பலாம்” என்றாள் முறைப்புடன்.

பிரணி அவன் மேலும் பேச, “கார்த்திக் நீ வெளியே இரு” அதிகாரமுடன் அவனை வெளியே அனுப்பி விட்டு, “எனக்கு நிறைய வேலை இருக்கு சார். எதுவாக இருந்தாலும் அப்புறம் பார்க்கலாம்” அவள் பைல்லை எடுத்துக் கொண்டு அவளறையை விட்டு வெளியே வந்தாள்.

மேம், ஒரு பொண்ணு அழைக்க, “அந்த விவாகரத்து கேஸை இந்த வாரத்துக்குள்ள முடிக்க பாருங்க” அந்த பெண்ணிடம் கூறி விட்டு வெளியே வந்தாள்.

சர்வா அவள் பின்னே வந்தான்.

அறைக்கு சென்ற தர்மா இருக்க மாட்டாமல் பிரணிதாவை சந்திக்க அவளது ஆபிஸிற்கே வந்து விட்டான். வெளியே காரில் அமர்ந்திருந்தான்.

ஹேய் பிரணி, அட்வகேட்டிற்காக எதையும் தர வேண்டாம். உன்னுடைய அண்ணாவின் நண்பனுக்கு தரலாமே! சிரிப்புடன் அவள் பின்னே வந்தான் சர்வேஸ்வரன்.

காற்றை ஊதித் தள்ளிய பிரணிதா, “சர்வா உனக்கு என்ன தான் பிரச்சனை? நான் தர முடியாது. அதுல நிறைய விசயம் புதைஞ்சு இருக்கு…” அவனருகே சினமுடன் சென்றாள். கார்த்திக் போல தர்மராஜூம் இருவரையும் பார்த்தான்.

அதை தோண்டி எடுக்கணுமே!

நானே பார்த்துக் கொள்கிறேன்.. மீண்டும் அவனிடமிருந்து விலகி நடந்தாள்.

ஓ.கே போ…நான் உன்னோட அண்ணாகிட்ட சொல்லிக்கிறேன்.

ம்ச்ச்ச்ச்ச்…. சரி சொல்லிக்கோ. நான் யாருக்கும் பயப்படுறதில்லை. நான்…சொல்ல வந்து நிறுத்தினாள்.

என்ன சொல்ல வந்த? சர்வா அவளருகே வர, அவனை பார்க்காது மறுபக்கம் திரும்பிய பிரணிதாவின் கண்ணீர் அவளது கன்னம் வழியே உருண்டோடியது. அவளது கண்ணீர் அவளை கவனித்துக் கொண்டிருந்த தர்மாவிற்கு என்னவோ செய்தது..

கண்களை துடைத்து அவள் நகர, சர்வா அவள் கரத்தை அழுந்த பற்றி, சொல்லீட்டு போ..

அவனை சினமுடன் தள்ளிய பிரணிதா, என்ன சொல்லச் சொல்ற? நான் நானா இல்லை. நான் அவளாகிட்டேன். இல்ல..உன்னால தான்…எல்லாமே உன்னால தான்” மேலும் தள்ள, சர்வா கீழே விழுந்தான்.

“சார்….” கார்த்திக் அவனை தூக்கி விட, அவன் அங்கேயே அமர்ந்து அவளை வெறித்தவாறு, “நீ எதுக்கு மாறணும்?” சீற்றமுடன் கேட்டான்.

ஏன்னா? பேச வந்த பிரணிதா சுற்றிலும் ஆட்கள் இருப்பதை கவனித்து அமைதியாக நகர, “பிரணி சொல்லீட்டு போ….” சீறினான்.

ஒரே வார்த்தையில் அவனை அடக்கினாள்.

“அன்று அவள் அழைத்து என்ன செஞ்ச?…” கோபப்பார்வையுடன் “கார்த்திக் வா” அழைத்து செல்ல, சர்வாவிற்கு மனம் சில்லுசில்லானது. அவன் அப்படியே அமர்ந்திருந்தான்.

அவனுக்கான பதில் கிடைத்து விட்டது. வந்தனா…

அவளை போல இவள் மாறி விட்டாளா?

ஏனென்று கேட்டால், “அன்று அவள் அழைத்து என்ன செஞ்சன்னு கேக்குறா?” அப்படின்னா யாருக்கும் தெரியாமல் இவளும் ஏதோ செய்கிறாள். அவனுக்கு மனம் முரண்டியது. முதன் முறையாக வந்தனா பற்றிய சிந்தனையை நகர்த்தி பிரணிதா பற்றி எண்ணத் தொடங்கினான்.