“நீ டிரைவ் பண்ணு. நான் வரேன்” என்றான் சர்வேஸ்வரன்.
அவருக்கு அடிபட்டிருக்கு. வேண்டாம் தாத்தா. நான் பார்த்துக்கிறேன் என்று அவள் அலைபேசியை எடுத்தாள்.
பாட்டி அதனை பிடுங்கி, இந்த நேரம் கேப் வேண்டாம்மா..
அவள் தயக்கமுடன் சம்பத்தை பார்த்தாள்.
“சம்பத் கூறாமல் எதுவும் செய்ய மாட்டாயோ?” சேந்தன் கேலியுடன் கூற, அப்சராவிற்கு சுருக்கென ஆனது.
சேந்தனை செல்லமாக அடித்தாள் பிரணிதா.
இவனுடன் எப்போது இவ்வளவு நெருக்கமாக பழகினாள்? சிந்தனையுடன் சர்வா உணவுண்ண, பிரணிதா வேகமாக உணவை முடித்து சர்வாவை கவனித்தாள்.
“சர்வா மெதுவாக உணவுண்ணட்டும். நானும் யாதவும் வாரோம்.
வா பிரணி” சம்பத் பிரணிதாவை அழைக்க, கண்ணீரே வந்து விட்டது அப்சராவிற்கு.
“அப்பூ என்னாச்சு?” யாதவ் அவளருகே வந்தான்.
“தூசி விழுந்திருச்சு…” அப்சரா கூற, யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் சம்பத் சிந்திக்கவில்லை. அவளது முகத்தை தன் கைகளில் ஏந்தி ஊதி விட்டான். அனைவரும் இருவரையும் புன்னகையுடன் பார்த்தனர்.
சர்வாவும் பிரணிதாவும் மட்டும் இறங்கினார்கள். யாதவ் டிரைவர் சீட்டிலே அமர்ந்து இவர்களை பார்த்தான்.
“தேங்க்ஸ்” அவள் கூற, “ஒரு நிமிஷம்….” பாட்டி தாத்தாவை பார்த்துக் கொண்டதற்கு நன்றி கூறி அவன் நகர, பெரிதான வயிற்றுடன் “சர்வா” அழைத்தார் பிரணிதாவின் சகோதரி.
அவன் அவரை பார்த்து புன்னகைத்தான்.
“உள்ள வராம போற சர்வா” அவர் கேட்க, “இன்னொரு நாள் வாரேன்” அவன் காரை சுற்றி வர, எதிரே இருந்த சிறு வீதியை பார்த்தவனுக்கு அன்றைய வந்தனாவின் நினைவுகள்.
“சரா, ஒரே ஒரு முத்தம் தானடா கேட்டேன். கொடு…” சர்வாவின் தாடையை இழுத்தாள் வந்தனா. “போடி” அவன் அவளை இழுத்து வந்து பிரணிதா வீட்டின் முன் நிறுத்தினான்.
இப்பொழுது அவன் விழிகளின் பார்வையில் அவன் எண்ணத்தை உணர்ந்த பிரணிதா, “சர்வா” அழைத்தாள். அவன் விழிகளில் தேங்கி இருந்த கண்ணீரை சகோதரிகள் பார்த்தனர்.
“பார்த்து கவனமா போ..” பிரணிதா சொல்லி ஒரு நிமிடம் கூட வெளியே நிற்காமல் உள்ளே சென்று அவளது படுக்கையில் பொத்தென விழுந்தாள்.
“பிரணி….” அழைத்தவாறு அவள் சகோதரியும் உள்ளே செல்ல, யாதவ் காரை எடுக்க சர்வா ஏறினான்.
வெந்நீரை அறைக்கு எடுத்து வந்த கந்தசாமி தன் மகள்களை கவனித்தவாறு குளியலறை சென்று வாளியில் நீரை ஊற்றி பிரணிதாவின் சகோதரியை அழைத்தார்.
அப்பா…அவள் அழைக்க வெளியே வந்தார்.
தர்மராஜ்னு யாரையாவது உங்களுக்கு தெரியுமா? சகோதரி கேட்க, அவனை பற்றி எதுக்கு கேக்குற? தன் சின்ன மகளை ஆராய்ந்தார்.
பெரியவள் நடந்ததை விளக்க, பிரணி அந்த தர்மா சாதாரண ஆள் இல்லை. பழகியவர்கள் என்று கூட பாராது வெட்டி வீழ்த்திடுவான். அவன் சவகாசம் வச்சுக்காதம்மா…எச்சரித்தார்.
சரிப்பா…. படுத்தாள் பிரணிதா.
அதே நேரம் சம்பத்தை பற்றிய விவரம் தர்மராஜ் கைக்கு வந்தது.
அவன் பெற்றோரையும் தங்கையையும் இழந்த பின் தான் பூம்பாறையில் சித்தப்பா மகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தான் என்றும் சேந்தன் அவன் நண்பன் என்றும் தெரிய வந்தது.
ஆட்களை அவ்வூருக்கு அனுப்பி தாரணி, சேந்தனை கண்காணிக்க சொல்ல, சென்றவன் தர்மதுரையை அழைத்து, மற்ற ஒருவனும் அவர்களுடன் இருக்கிறான். அவன் அந்த பொண்ணின் காதலன் போல தெரிகிறான் சார். ஒரே கெஞ்சலாக உள்ளது என்று கூறினான்.
சிரிப்புடன்…கொஞ்ச நாள் அந்த பொண்ணு காதலனை கெஞ்ச வைத்தோ கொஞ்சியோ வாழ்ந்து விட்டு போகட்டும். பின் பார்க்கலாம் தாரணியை பின் தள்ளினான்.
படுத்த தர்மராஜ் கண்ணில் கந்தர்வராணியாக பிரணிதா வலம் வர, அவளை தன்னவளாக்க முடிவெடுத்தான் தர்மராஜ்.
அப்சரா அறையினுள் அமைதியாக இருக்க, சம்பத் அவளருகே வந்து அமர்ந்தான்.
அப்சா, எனக்கு நேரம் தருகிறாயா? கேட்டான்.
என்ன நேரம்?
நம் வாழ்க்கை….தயங்கினான்.
மனதில் விரக்தியுடன், அதான் அவள் உங்கள் மனதில் இருக்கிறாளே! எண்ணமுடன் ம்ம்! படுத்துக் கொண்டாள்.
“இன்னும் கண்ணு வலிக்குதா?” அவன் அவளை நெருங்கி வர, அவனது மார்பில் கை வைத்து தடுத்து, “நான் தூங்கணும்” என்றாள்.
அவளது புன்னகையை காணாமல் ஏதோ போல இருந்தது சம்பத்திற்கு.
ஏதும் பிரச்சனையா அப்சா?
“இல்ல மாமா, கால் வலிக்குது. சோர்வா இருக்கு” கண்ணை மூடினாள்.
அப்சராவின் காலடியில் அமர்ந்து அவளது அடிபட்ட பாதத்தில் முத்தமிட்டான்.
“மாமா….” அவள் காலை இழுத்துக் கொண்டாள்.
வலிக்குதுன்னு சொன்னேல்ல?
இருக்கட்டும் மாமா. நீங்களும் உறங்குங்க. நாளை நாம கம்பெனிக்கு போகணும்.
பதில் கூறாமல் அவனை பார்த்த சர்வா…”உறங்க செல்” படுத்துக் கொண்டான். யாதவும் அங்கிருந்து அகன்றான்.
பனிமறைத்த அற்புதமான காலைபொழுதில் பிரணிதா அவளது சகோதரியுடன் பேசிக் கொண்டே நடந்து வீட்டிற்கு வந்தனர்.
கந்தசாமி தன் மகள்களுக்கும் அவருக்கும் டீ போட்டு எடுத்து வந்து அமர்ந்தார். மூவரும் தேனீரை பருகிக் கொண்டிருந்தனர்.
அழைப்புமணி ஒலிக்க கந்தசாமி எழுந்து கதவை திறந்தார்.
ஆட்களுடன் நின்றிருந்தான் தர்மராஜ்.
“தர்மா…” வாயிலை மறைத்து கந்தசாமி நிற்க, “இப்படி வழி மறைத்தால் எப்படி மாமா உள்ளே செல்வது?” அவன் கேட்க, அவருக்கு தலையில் இடி விழுந்தது போல உணர்ந்தார்.
யாருப்பா? தேனீர் கோப்பையுடன் அங்கே வந்தாள் பிரணிதா.
வாவ்…இந்த ஆடை கூட நன்றாக உள்ளதே! வச்ச கண் வாங்காமல் அவளை பார்த்தான் தர்மராஜ்.
ஆட்கள் கந்தசாமியை நகர்த்தி தர்மராஜிற்கு வழி வகுத்து கொடுக்க, அவன் பிரணிதாவை பிரமிப்புடன் பார்த்தான்.
உன்னை யாரு உள்ள வர சொன்னது? வெளிய போ…..
அவன் முகம் மாற, அதிர்ந்து நின்று கொண்டிருந்த பிரணிதா சகோதரி அருகே சென்று அவள் வயிற்றை பார்த்தான். பயந்து சகோதரி நகர்ந்தார்.
பட்டென அவரை இழுத்து அவர் கழுத்தை பிடித்து பிரணிதாவை பார்த்தான். பிரணிதாவும் கந்தசாமியும் அவனிடம் ஓடி வந்து, “அவளை விட்ருங்க” கதறினர்.
சகோதரியை விட்டு, “கந்தசாமி உம் பொண்ணுக்கும் எனக்கும் இன்னும் ஒரே வாரத்தில் திருமணம் இல்ல…..???” என்று மூத்தவளை பார்த்தான்.
கந்தசாமி கையெடுத்து கும்பிட்டு, “எங்களை விட்ருங்க” அவன் காலில் விழுந்தார்.
“அப்பா…..” இரு பெண்களும் சத்தமிட்டனர்.
அவன் சிரித்துக் கொண்டே, எனக்கு நீ எதுவும் செய்ய வேண்டாம் பிரணிதாவை பார்த்து, உன்னோட மகள் மட்டும் போதும்…
ஒரு மணி நேரம் தருகிறேன். சரின்னு சொன்னா சின்ன பொண்ணுக்கு கல்யாணமாலை இல்ல பெரிய பொண்ணுக்கு என்று அவன் வயிற்றை பார்க்க, பிரணிதா அக்கா கண்ணீருடன் திரும்பி நின்றார்.
புன்னகைத்து, “நல்ல பதிலா சொல்வீங்கன்னு நினைக்கிறேன் மாமா” என்று அங்கிருந்து அகன்றான்.
தன் சகோதரியின் நலனை கருத்திற்கொண்டு பிரணிதா ஓர் முடிவோடு எழுந்து அவளது வண்டியை எடுத்தாள்.
“பிரணி…..” தந்தை அழைக்க, “அவனை நான் திருமணம் செய்து கொள்கிறேன்” சொல்லி செல்ல, பெற்றவர் மனதில் எண்ணிலடங்கா வருத்தம் ஏறிக் கொண்டது.
அப்பா சம்பத்திடம் கூறலாமே! உதவுவார்ல்ல?
எப்படிம்மா?
“இருங்க, நான் பேசுகிறேன்” பிரணிதாவின் சகோதரி அவனை அழைத்தாள். அலைபேசி “ஸ்விச் ஆப்” என வந்தது.
அப்பா ஸ்விச் ஆப் ல இருக்கு. சர்வாவை அழைக்கிறேன் அவள் அழைக்க, டைனிங் டேபிளில் உணவுண்ண அமர்ந்திருந்தான் சர்வேஸ்வரனும் மற்றவர்களும்.
கீர்த்திகா எடுத்து வைக்க, ஒரு வாய் எடுத்து வைத்தான்.
அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டு, “ஹலோ…” என்றான்.
“சர்வா” என்ற குரலில் சம்பத்தும் சர்வேஸ்வரனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
சொல்லுங்க..
சம்பா இல்லையா ஸ்வீச் ஆப்ல இருக்கு..
இங்க தான் இருக்கேன். எதுவும் பிரச்சனையா? சம்பத் கேட்கவும், அவளுக்கு அழுகை வந்து விட்டது.
எதுக்கு அழுறீங்க? அவன் கேட்கவும், நடந்ததை கூறி விட்டு, இப்ப பிரணி அவனை திருமணம் செய்ய சம்மதம்ன்னு சொல்ல போயிருக்கா.
“என்ன சொல்றீங்க?” என்ற சர்வாவிற்கு அவனது பார்வை நினைவுக்கு வர, “நாங்க வாரோம்” சர்வா அழைப்பை துண்டித்து சம்பத்தை பார்த்தான்.
“அப்சா நான் வந்த பின் நாம கம்பெனிக்கு செல்லலாம்” சம்பத்தும் சர்வாவுடன் சேர்ந்து நடந்தான்.
உங்கள் இருவருக்கும் அவளை தெரியும்னா நீங்கள்? ஜெயா கேட்க, தனலட்சுமி அவரிடம் ஏதோ கூறி சமாளிக்க, இருவரும் சென்றனர்.
அப்சராவிற்கும் கீர்த்திகாவிற்கும் சந்தேகம் எழுந்தது. யாதவை அப்சரா கவனிக்க, அவன் அவள் கவனிப்பதை பார்த்து, “எனக்கு போதும்” என்று அவசரமாக உள்ளே சென்றான்.
அப்சரா அவன் பின் செல்ல, அவளை பின் தொடந்தாள் கீர்த்திகா.
“யாது, இருவருக்கும் எப்படி அந்த பொண்ணை தெரியும்?” அப்சரா கேட்க, எனக்கு தெரியாது அப்பூ..
உனக்கு தெரியாதா? சினமுடன் கேட்டாள்.
அந்த பொண்ணு நல்ல பொண்ணுன்னு மட்டும் தான் தெரியும். வேற எதுவும் எனக்கு தெரியாது.
சொல்லப் போறீயா? இல்லையா? சத்தமிட்டாள்.
“முடியாது” அவனும் கோபமாக கத்தினான்.
அப்ப உனக்கு தெரியும்?
ஆமா..ஆனால் சொல்ல மாட்டேன்…
“சொல்லுடா? அவருக்கும் அந்த பொண்ணுக்கு என்ன உறவு?” அப்சரா கேட்க, யாதவ் அவளை அடித்து விட்டான்.
சும்மா மாமாவ சந்தேகப்படாத…
எப்படி படாம இருக்குறது? கட்டி புடிச்சி பேசுறாங்க. அவளுக்கு என்றவுடன் முன்னாடி போறாங்க. இன்று தான் முதன் முறையாக கம்பெனிக்கு கிளம்புகிறோம். அவரு அங்க போயிருக்காரு…
மாமாகிட்ட இப்படி கேட்டு உன்னோட வாழ்க்கையை பாழாக்கிக்காத…
நான் கேட்பேன்..
அந்த பொண்ணு நிலையையும் யோசி அப்பூ
அவளை பத்தி நான் எதுக்கு யோசிக்கணும்?
“அப்ப நீ வெளிய போகலாம்” இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர்.
அறைக்கதவு மூடி இருந்ததால் என்ன பேசுகிறார்கள் என்று கேட்கவில்லை என்றாலும் இருவரும் சண்டை போடுவது தெளிவாக கீர்த்திகாவிற்கு தெரிந்தது.
படாரென கதவை திறந்து அழுது கொண்டே அப்சரா அவளறைக்கு ஓடினாள்.
“என்ன நடக்குது? எதுக்குடா அவ அழுதுட்டே போறா?” தனலட்சுமி கீர்த்திகா அருகே வந்து உள்ளிருந்த தன் மகனிடம் கேட்டார்.
அவள பார்த்துக்க சொல்லி தேவையில்லாததுன்னு சொன்னால் என்ன அர்த்தம்? அவர் கீர்த்திகாவை பார்க்க, அவள் தோளை குலுக்கினாள்.
சம்பா பைக்கை ஓட்ட, சர்வா பின்னே அமர்ந்தான். இருவரும் பிரணிதா வீட்டிற்கு தான் சென்று கொண்டிருந்தனர்.
ரோட்டின் ஓரத்தில் பிரணிதா முகத்தை மூடி அழுது கொண்டிருப்பதை பார்த்து இருவரும் பைக்கிலிருந்து இறங்கி அவளிடம் ஓடினர்.
சர்வாவை பார்த்து கண்ணுமுன்னு தெரியாமல் அவனை அடித்து அழுது கொண்டு,…. “உன்னால் தான் எல்லாமே! நீ தான் நீ தான்…” திரும்பத் திரும்ப கூறினாள். இருவரும் பேசுவது அவள் காதில் விழவில்லை.
“சரி வா…” அவளையும் அவர்களது பைக்கில் ஏற்றி அவள் வீட்டிற்கே அழைத்து வந்தனர்.
தந்தையை பார்க்கவும் ஓடிச் சென்று அவரை அணைத்து அழுதாள்.
“என்னடா?” அவர் மேலும் பதற, “சொல்ல மாட்டேங்கிறா அங்கிள்” என்றான் சம்பத் கடுப்புடன்.
சர்வேஸ்வரன் வீட்டிற்குள் வரவும் வந்தனாவின் எண்ணங்கள் சுழல அப்படியே நின்று விட்டான்.
“இங்க பாருடா…..” மெதுவாக தன் மகளை ஆஷ்வாசப்படுத்தினார் கந்தசாமி. அவள் அமைதியானாள்.
“அவனை பார்த்தாயாம்மா?” அவர் கேட்க, “ஆம்” தலையசைத்தாள்.
என்ன சொன்னான்?
நான் அருகில் செல்லவில்லை. நேற்று நடந்த பிரச்சனையில் சம்பத் அண்ணாவை பற்றி விசாரித்து இருக்கிறான்.
நம்ம வந்துப்பா..வந்து…என்று கலங்கினாள்.
சர்வா, சம்பத் அவளை ஆழ்ந்து பார்த்தனர்.
நம்ம வந்தனா கொலை பற்றி அவனுக்கு தெரிஞ்சிருக்கு தர்மராஜை தவறாக எண்ணினாள். அந்த நிரஞ்சன் கேஸை வந்துவிடம் இவன் தான் கொடுத்தான் சர்வாவை முறைத்தாள்.
அதுல ஏதோ சிக்கல் இருந்திருக்கும் போலப்பா.
“இவனுக யாரோ தான் நம்ம வந்தனாவை கற்பழித்து கொன்றுக்காங்க” இதழ்கள் நடுங்க அழுது கொண்டே கூறினாள்.
சர்வாவிற்கு இதயம் படபடவென அடிக்க, சம்பத்திற்கு தன் உடன் பிறந்தவளின் புகைப்படத்தை பார்க்கவும் இதயம் நின்றது போல இருந்தது. தன் கோபத்தை சிரமப்பட்டு தேக்கி வைத்துக் கொண்டிருந்தான் சம்பத்.
பைல்லை எடுத்து வந்து சர்வா முன் விட்டெறிந்தாள் பிரணிதா.
நிரஞ்சன் ஒரு பொண்ணை பலவந்தமாக இழுத்து சென்ற புகைப்படம்.. அறையினுள் நுழைந்தது வரை எடுத்து வைத்திருந்தாள் வந்தனா.
இல்ல…நான் நிரஞ்சனது பைல்லை அவளிடம் கொடுக்கவில்லை. அதை கீழே விட்டான் சர்வா.
எப்படி அவளிடம் இது வந்தது? சத்தமிட்டாள் பிரணிதா.
மாத்தி எடுத்துட்டாளா? என்னிடம் இதை பற்றி கூறவேயில்லை. எப்பொழுதும் கூறாமல் செய்ய மாட்டா. உனக்கு தெரியும்ல்ல பிரணி என்றான் சர்வா.
அது தெரியல எனக்கு…
இந்த தர்மராஜ் தனியே தானே வாழ்கிறான். அவனுக்கும் இந்த நிரஞ்சனுக்கும் என்ன சம்பந்தம்?
நிரஞ்சனின் அண்ணன் தர்மராஜ்… கந்தசாமி கூற,
அப்பா உங்களுக்கு தெரியுமா?
புகைப்படத்தை கீழிருந்து எடுத்த கந்தசாமி, இந்த பொண்ணு தற்கொலை முயற்சி செய்திருந்தான்னு எனக்கு கால் வந்தது. எங்க டிப்பார்ட்மெண்ட்ல்ல எல்லாரும் சென்றோம். தற்கொலைன்னு மூடி வச்சுட்டாங்க..
அந்த பொண்ணு வீட்டினர் தற்கொலை செய்யுமளவு எங்க பொண்ணு கோழை இல்லைன்னு அழுதாங்க. யாருமே கேட்கலை. ஆனால் அந்த பொண்ணுக்கு அங்கங்கு காயம் ஏற்பட்டு தான் இருந்தது.
மருத்துவரை ரகசியமாக சந்தித்து பேசினேன். அவரும் அந்த பொண்ணை பார்த்து கற்பழித்து கொன்றதாக தான் கூறினார்.
டிஜிபியிடம் நேரடியாகவே சென்று விசயத்தை சொன்னேன். அவர் மூலம் தான் நிரஞ்சன் சாதாரண பணக்காரன் மட்டுமல்ல அவன் அண்ணா தர்மராஜ்ன்னு தெரிஞ்சது.
நான் இதை நிரூபிக்கிறேன்னு சொன்னேன்.
நிரூபித்து உங்க குடும்பத்தை இழக்க போறீங்களான்னு கேட்டாரு. உங்களுக்கு நான் மட்டும் தானம்மா இருக்கேன். அந்த கேஸை விட்டுட்டேன்.
அண்ணா, இவனுகள சும்மா விடக் கூடாது. அவன் பக்கத்தில் இருந்தால் தான் நடந்தது தெரியவரும். நிரஞ்சனும் சரி தர்மராஜூம் சரி….. உயிரோட இருக்கக் கூடாது பிரணிதா கூறினாள்.
“பிரணி சும்மா இரு” என்ற அவளது சகோதரி, இந்த பிரச்சனையை அப்புறம் பார்க்கலாம். கொஞ்ச நேரத்தில் அந்த தர்மராஜ் வருவான். என்ன செய்றது? பதறினார்.
அங்கிள், பிரணியும் எனக்கு தங்கை தான். வந்தனா பிரச்சனையின் போது நான் அவளருகே இல்லை. இனி யாருக்கும் ஏதும் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது என்னோட பொறுப்பு.
பிரணி, நீ அவனிடம் திருமணத்திற்கு ஒத்துக்கோ. ஆனால் ஏதாவது ஒரு காரணம் கூறி ஒரு மாதம் திருமணத்தை தள்ளி வைக்க சொல்லு…
அண்ணா…அவள் தயக்கமுடன், அவனருகே இருந்தால் தான் விசயம் தெரியவரும்.
அது ஆபத்து பிரணி. அவன் அருகே யாரும் இருப்பது கூட நல்லதில்லை. வெளியுலகில் தான் அவன் கட்டப்பஞ்சாயத்து செய்வான். அவனுக்கு சந்தேகம் வந்தால் கேட்கலாம் மாட்டான். போட்டு தள்ளீட்டு போயிருவான். அதான் சொல்றேன். ஒரு மாதம் மட்டும் நேரம் கேளு என்றான் சம்பத்.
ம்ம்! அலைபேசியை துண்டித்து மேசையில் வைத்து விட்டு, “நான் சொல்லீட்டேன். மிரட்டிட்டு தான் வச்சான்” சொல்லி அறைக்குள் புகுந்து கதவை தாழிட்டாள்.
பிரணி…
“அப்பா அவள் தனியே இருக்கட்டும்” பிரணிதா அக்கா அவளறையை பார்த்து விட்டு, அவளது அலைபேசியை எடுத்து சம்பத், சர்வா கையை பிடித்து கந்தசாமி அறைக்கு அழைத்து சென்று தன் தந்தையுடன் சேர்த்து கதவை அடைத்தார்.