பாட்டியோ பழைய கதையெல்லாம் சொல்லி, ஒரு பாடு புலம்பி தீர்த்தார், வீட்டில் உள்ள அத்தனை பேரும் சரிகாவின் அம்மாவின் மேல் கோபத்தை காட்டத் தொடங்கினர்.
அப்போது தான், பிஹெசில் சென்று சேர்ந்திருந்தவள், அங்கு இருக்கும் உதவியாளர் மூலம் உணவை அந்த பெண்ணிற்கு கொடுத்து விட்டவள், “இன்று எத்தனை கேஸ் இருக்கிறது” என்று கேட்டுக் கொண்டே அமர்ந்தாள்.
அப்போது தாத்தாவிடம் இருந்து போன் வருவதை பார்த்தவுடன், ‘என்ன இந்த நேரத்தில் தாத்தா போன் பண்றாங்க, கூப்பிட மாட்டாங்களே’, என்று யோசித்துக் கொண்டே,
“சொல்லுங்க தாத்தா, இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்கீங்க”, என்று சிரித்தபடி பேச,
தாத்தாவும், “ஏம்மா எதுவும் பிரச்சினையில்லையே”, என்று கேட்டார்.
“என்ன பிரச்சனை தாத்தா”, என்றாள்.
“இல்லம்மா”, என்று தாத்தா சொன்னவற்றை சொன்னார்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல தாத்தா, அண்ணியோட அம்மாக்கு பேசவே தெரியாது, எப்ப பாருங்க நொய்யி நொய்யின்னு பேசிப்பேசியே எரிச்சல் பண்ணுவாங்க, நான் கோபம் எல்லாம் படுறதுக்கு தயாரா இல்லை, எனக்கு ஒரு உறவு முறிச்சுக்கவோ, ஒரு உறவை வேண்டாம் ன்னு தூக்கி போட, நமக்கு ஏதும் பெரிய காரணம் கிடையாது தாத்தா, அண்ணியோட அம்மா ன்ற நிலை தான், அது தான் அந்த பேச்சோடு விட்டேன்., வேற யாருமா இருந்தா இந்நேரம் நான் பேசுற விதமே வேறயா இருக்கும்., மத்தபடி ஒன்னும் இல்ல, நான் சும்மா தான் சொல்லிட்டு வந்தேன்., அவங்க எப்ப பாத்தாலும், நான் என்ன செய்றேன், என்ன பண்றேன், எப்ப வர்றேன், எப்போ போறேன், யாருகிட்ட பேசுறேன், இதெல்லாம் நோட் பண்றாங்க., நானும் அவங்க நோட் பண்றத கவனிச்சேன், எனக்கு ஒரு அன்சியா இருக்கு தாத்தா,
மத்தபடி அவங்க வீட்டுல வேற யாரும் அந்த மாதிரி எல்லாம் பாக்குறது கிடையாது, அந்த மாதிரி நோட் பண்றது கிடையாது., இவங்க ஒருத்தவங்க தான் அந்த மாதிரி பண்றாங்க., அது எனக்கு கொஞ்சம் இரிடேடிங்கா இருக்கு., நானே தற்செயலா அண்ணி கிட்ட சொல்லி சொல்ல சொல்லணும்னு நெனச்சேன்., ஆனா இவங்களா வாய கொடுத்து என்கிட்ட மாட்டிக்கிட்டாங்க”, என்று சொன்னாள்.
“வேற ஒன்னும் இல்லையே, நீ ஏதோ வீடு காலி பண்ணுவ ன்னு”, என்று தொடங்கினார்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல தாத்தா, ஓகே தாத்தா நீங்க சொல்லிருங்க., அவங்க மட்டும் என் விஷயத்துல தலையிடாம என்ன நோட் பண்றத விட்டுட்டு, நான் யார் கூட போன்ல பேசுறேன், நான் எத்தனை மணிக்கு வரேன் எத்தனை மணிக்கு போறேன் இதெல்லாம் நோட் பண்ணாம இருந்தா நான் கொஞ்சம் ஃப்ரீயா இருப்பேன்., யாரோ என் பின்னாடி கண்காணித்துட்டு அலையுற மாதிரி, ஹாஸ்டல்ல இருக்குற மாதிரி ஒரு ஃபீல் குடுக்குறாங்க, ஹாஸ்டல் வார்டன் மாதிரி அப்பப்போ நோட் பண்றாங்க., இது ஒண்ணு தான், இரிடேடிங்கா இருக்கு”, என்று சொல்லிவிட்டவள்,
“அதுக்காக நம்ம வீட்டுக்கு வந்தவங்க கிட்ட நாம எதுவும் முகம் காட்டக்கூடாது, பேச்சிலேயே கூட நம்ம வீட்ல யாரும் அண்ணி கிட்ட காட்டிட கூடாது, அதுல கேர்ஃபுல்லா இருங்க”, என்று சொல்லவும்.,
அதையும் ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு தாங்கள் தங்கள் பிள்ளையை சரியாகத்தான் வளர்த்திருக்கிறோம் என்ற சந்தோஷம் இருந்தது.,
அவளோ, “நான் பேசுறேன் தாத்தா”, என்று சொன்னாள்.
“இல்லமா இதை நானே சொல்லிறேன், நீ எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத, நீ எப்பவும் போல இரு, நீ எதையும் யோசிக்க வேண்டாம்”, என்று சொன்னார்.,
“ம்ம் ம்ம்”, என்று சொல்லி தலை அசைத்துக் கொண்டாலும்.,
சரிகாவோ, ‘இதை கண்டிப்பா பாட்டியிடமோ அல்லது அப்பாவிடமோ பேசியே ஆக வேண்டும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
தாத்தாவும் பேசி விஷயத்தை சொல்லிவிட, அங்கு வீட்டில் உள்ளவர்களோ, “பாரு அந்த பொண்ணு எவ்வளவு பெருந்தன்மையா பேசி இருக்கு, நீ என்ன அவளை நோட் பண்ணுறது, என்ன நெனச்சிட்டு இருக்க”, என்று சொல்லி ஆளாளுக்கு சத்தம் போட்டனர்.
சற்று நேரத்தில் சரிகாவிடம் இருந்து போன் வர, தாத்தா தான் பதறிப் போய் போன் எடுத்தவர்,
“என்னம்மா” என்று கேட்டார்.
“என்ன தாத்தா, ஒன்னும் இல்லையே, நான் அப்பாட்ட அல்லது பாட்டி கிட்ட யார் கூடவாது பேசணும்னு கூப்பிட்டேன்”, என்று சொன்னாள்.
சரிகாவின் அம்மாவோ பதட்டத்தில் பார்த்திருந்தார்,
இவளோ, “தாத்தா அந்த பொண்ணு, அதாவது எனக்கு அண்ணியா இருக்குறவங்க, எவ்வளவு நல்ல குணமா இருந்தா, வீட்ல அவங்க தாத்தா கிட்ட பேசுறாங்க, இதெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு அண்ணி கிட்ட யாரும் முகம் காட்டிட கூடாது அப்படிங்கிறத அவ்ளோ தெளிவா பேசுறாங்க,
இந்த அம்மாக்கு என்ன தேவை இல்லாத வேலை, அவங்க பின்னாடி எதுக்கு நோட் பண்ணிட்டு அலையறாங்க., அவங்க எத்தனை மணிக்கு வந்தா என்ன, எத்தனை மணிக்கு போனா என்ன, இவங்களுக்கு என்ன வந்துச்சு, யார்கிட்ட பேசினா என்ன, அப்பப்போ மாடி வரைக்கும் போய் எட்டி எட்டி பாத்துட்டு வராங்களாம்., இது என்ன பழக்கம்”, என்று சொன்னாள்.,
“இது எங்களுக்கு தெரியாதே ம்மா”, என்று தாத்தா சொல்ல.,
“முதல்ல அம்மாவை கீழே இருக்க சொல்லுங்க., இன்னொரு தடவை மாடிக்கு போறதா அண்ணி சொன்னாங்கனா நடக்கிறதே வேற”, என்று சொன்னாள்.
“இல்லமா நான் பார்த்துக்கிறேன்”, என்று சொன்னார்.
“தாத்தா, நான் உங்க வீட்டு பொண்ணா பேசல, இந்த வீட்டு பொண்ணா பேசுறேன்., என்னோட நாத்தனார அங்க அனுப்பி வைத்திருப்பது பாதுகாப்புக்காக மட்டும் தான்., அங்க வீட்டில் தங்க வச்சு இருக்கோம்., இல்லனா வீடு கிடைக்காமல் ஒன்னும் இல்ல., வெளிய வீடு பார்த்து அவங்க தங்கிப்பாங்க., அவங்கள நோட் பண்றது, இந்த மாடிக்கு போறது, யாருகிட்ட பேசுறாங்க என்பதை பார்க்கிறது, வீட்ல என்ன செய்றாங்க றத உள்ள போய் நோட் பண்றது., இந்த வேலையெல்லாம் நிறுத்திக்க சொல்லுங்க., இல்லாட்டி மரியாதை கெட்டு போய்டும். நான் அந்த பக்கம் வரவே மாட்டேன், எனக்கு என் புருஷன் வீடு தான் முக்கியம்”, என்று சொன்னாள்.
“என்னத்தா இப்படி பேசிட்ட”, என்று பாட்டி சத்தம் கொடுக்க,
“ஓ நீங்களும் கேட்டுட்டு தான் இருக்கீங்களா, அப்ப கேட்டுக்கோங்க, எங்க அண்ணி இதுவரைக்கும், நான் இருக்கேன்னு கல்யாணம் முடிஞ்சு இத்தனை நாள்ல,
என் முன்னாடி அவங்க அண்ணன் கிட்ட உரிமை கொண்டாடி கூட பேசினது கிடையாது, இதெல்லாம் பார்க்கும் போது எப்படி இருக்கணும் அப்படிங்கறத நான் இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய கத்துக்கிட்டேன், தயவுசெய்து அவங்களுக்கு தொந்தரவு பண்ணி, அவங்க வீட்டுக்கு ஏதாவது இன்ஃபார்ம் பண்ணாங்க, இல்ல வீட்ல ஏதும் பிரச்சினை ன்னு கேள்விப்பட்டேன்னா, அப்புறம் அதோட நீங்க என்னை மறந்துடனும்”, என்று சொன்னவள்,
“முக்கியமா இதை உங்க மருமககிட்ட சொல்லுங்க பாட்டி”, என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள்.
சரிகாவின் அம்மாவோ சிலை போல நின்றார்.
சரிகாவின் தாத்தாவோ, “நல்ல கேட்டுக்கோ, இதுதான் உன் மகள் சரியா, அவங்க எப்படி வச்சிருந்தா இந்த வீடே வேண்டாம், எனக்கு என் புருஷன் வீடு போதும் சொல்லுவா., அதுவும் கல்யாணம் முடிஞ்சு நாலு மாசத்துல..,
நம்ம அத்தனை குடும்பத்துக்கும் ஒரே பொண்ணுன்னு, தங்கம் ன்னு தாங்கி வளர்த்தோம்., ஆனால் அதெல்லாம் வேண்டாம், எங்க அண்ணிய ஒரு வார்த்தை நீங்க சொன்னீங்கன்னா நடக்கிறதே வேற அப்படிங்கா, உன்னால பிள்ளைங்க வராம போகாம இருந்திட போகுது பாத்துக்கோ”, என்று சத்தம் போட்டு விட அமைதியாக அதே இடத்தில் அமர்ந்து விட்டார்.
ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை மெல்லும், என்பது எத்தனை உண்மை என்பதை பாட்டி புரியும்படி குத்தி காட்டிக் கொண்டிருந்தார்.
அவ்வீடே ஒரு அமைதியில் இருந்தது, இவனோ ‘நாம இடத்தை காலி பண்ணுவோம்’, என்று மட்டும் நினைத்தவன்,
வீட்டில் பெரியவர்களிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து தன் இருப்பிடம் நோக்கி கிளம்பி சென்றான்.