“நம்ம வீட்ல இருந்து கொஞ்சம் கேப் விட்டு, கீழ ஒரு வீடு கட்டி இருந்தாங்க, வயல்ல இருந்து வர்ற பொருட்கள் மற்றும் விளைஞ்ச பொருட்கள் அங்கே தான் வைப்பாங்க, மாடிப்படி வெளியே ஒன்று உண்டு, அந்த படியிலிருந்து கனெக்ட் பண்ணி அந்த வீட்டுக்கு மேல ஒரு வீடு கட்டுனாங்க, ஒரு மூணு ரூம் மட்டும் இருக்கிற மாதிரி., ஏன்னா வீட்டுக்கு யாரும் வந்தா வேணும், அது மட்டும் இல்லாம வீட்ல ஆளுங்க வந்தா எக்ஸ்ட்ரா இருந்தா நல்லது தான் சொன்னாங்க, அதை ஒரு வீடு மாதிரியே கட்டினாங்க, அந்த வீட்டுக்கு வாசப்படி வெளியே இருந்து மட்டும் இல்லாம, பெரிய வீட்டுக்குள் இருந்து வரதா இருந்தாலும் வரலாம் அண்ணி”, என்று சொன்னவள்,
பெரிய வீட்டு மாடியில் பெரிய அண்ணனுக்கு உள்ள ரூம் மட்டும் தான் தங்குற மாதிரி இருக்கும், மத்தபடி பெரிய ஹால் வெளியே சிட் அவுட் கொஞ்சம் இடம் மொட்டை மாடி தான், மத்தவங்க ரூம் எல்லாமே கீழ தான் இருக்கும், பெரியண்ணா பத்து அல்லது 15 நாளைக்கு ஒரு தடவை தான் வருவாங்க, வந்தாலும் மேக்ஸிமம் கிளம்பி போயிருவாங்க”.,என்று சொல்லவும்,
“ஓ” என்று கேட்டுக் கொண்டவள், “ஜஸ்ட் பாப்போம் ஓகேவா இருந்துச்சின்னா பாத்துக்கலாம்”, என்று சொன்னாள்.
“சரி அப்ப போய் பாத்துட்டு வந்துருவோமா” என்று பாட்டி கேட்டார்,
“பாட்டி எதுக்கெடுத்தாலும் அவசரம் தானா? எனக்கு ஆர்டர் வரணும் அப்புறம் நான் இங்க காலேஜ்ல இருந்து லெட்டர் வாங்கணும்., எல்லாம் வாங்கிட்டு தான் கிளம்ப முடியும்., இன்னும் பைவ் டேஸ் ஆகும்”, என்று சொல்ல.,
“நீ 10 நாள் ல ஜாயின் பண்ணனும்னு சொன்னியே” என்ன தாத்தா கேட்டார்.
“ஆமா ஆர்டர் வந்தவுடனே கிளம்புவோம், அதுக்கு முன்னாடி பாட்டிக்கு வேலை தரேன், போர் அடிக்கு தானே, அதனால தானே வா போவோம் ன்னு சொன்னாங்க, ரெண்டு சூட்கேஸ் எடுங்க என்னோட சாரீஸ் எல்லாம் பேக் பண்ணுங்க, இன்னொரு குட்டி பேக் எடுங்க அதுல என்னோட சுடிதார் கொஞ்சமா பேக் பண்ணுங்க, நிறைய பேக் பண்ணாதீங்க, அப்புறம் ஒரு கோட் தான் இருக்கு, ரெண்டு கோட்டுல ஒன்னு பழசாயிடுச்சு, இன்னொரு கோட்டு தைக்கணும், அப்புறம் என்னோட கிட்பேக் அது இதுன்னு எல்லாத்தையும் எடுத்து வைங்க, இங்க இருந்து போகும் போது என்னோட கார் எடுத்துட்டு போகணும், சோ காரை சர்வீஸ் விட்டு வாங்கி வைங்க”, என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே
“ஆத்தாடி ஆத்தா எவ்வளவு வேலை சொல்லுத”, என்று பாட்டி குறுக்கே புகுந்து கேட்டார்.
“நீங்கதானே பாட்டி 10 நாள்ல கிளம்பணுமா, வா அப்ப உடனே போவோம் ன்னு சொன்னீங்க, நீங்க இப்ப இதெல்லாம் ரெடி பண்ணுங்க, இதெல்லாம் ரெடி பண்றதுக்கு டைம் வேணும்ல, ரெடி பண்ணுங்க சாரி வேணா ஒரு சூட்கேஸ், சுடிதார் ஒரு பேக் போதும், இதுக்கு இடையில நான் வந்து கூட எடுத்துக்கிறேன்., இல்ல நீங்க யாராவது வந்தீங்கன்னா எனக்கு கொண்டு வந்துருங்க”, என்று சொல்லவும்.
“ஏண்டி அங்கேயே போய் இருக்கவா போற எல்லாத்தையும் அள்ளிட்டு போற”, என்று சொல்ல.,
“ஹலோ பாட்டி இதெல்லாம் சரி கிடையாது, நான் ஆஸ்பத்திரிக்கு கட்டுற சேரி துவைத்து அயன் பண்ணி திருப்ப வந்து உடனே நான் கட்றது எல்லாம் எனக்கு செட் ஆகாது., நான் வாரத்துக்கு ஒரு தடவைதான் தோய்ப்பேன்., அம்மா மறந்துராம வாஷிங் மெஷின்”, என்றாள்.
“அய்யய்ய” என்ற அவள் அம்மா, “வாங்கிருவோம் வாங்கிருவோம் போ”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவள் சொன்னது போல ஐந்து நாளில் அங்கிருந்து கிளம்ப, அங்கு சென்ற பிறகு வீட்டை அவர்கள் ஏற்கனவே கழுவி சுத்தம் செய்து வைத்திருக்க,
போன உடனே இவர்கள் வீட்டு பாத்திரத்திலேயே அங்கு மாடியில் அவளுக்கென பால் காய்ச்சி எல்லாம் தயார் செய்தனர்.
பின்பு இவளுக்கு தேவையான பொருட்கள் வாங்க இவளுக்கு தனி குடித்தனதிற்கு பொருள் வாங்குவது போல வாங்கிவிட்டு அதை அரேஞ் செய்து கொண்டிருந்தனர்.
அனைவருமே அங்கு தான் வந்திருந்தனர்.
பாட்டி தான், “ஆத்தாடி ட்ரெய்னிங்கு ஒரு வருஷம் வந்ததுக்கே இவ்வளவையும் அரேஞ்ச் பண்ணி, அதை வாங்கித்தா, இதை வாங்கி தா ங்காளே இவளை கல்யாணம் கட்டிக் கொடுத்தோம்னா, இன்னும் எவ்வளவு பொருள் வாங்கணும்”, என்று சொல்லி சிரித்தார்.
“போங்க போங்க அதெல்லாம் வாங்கி ரெடி பண்ணுங்க, ட்ரைனிங் முடிச்சு வாரேன்”, என்று சொல்லவும்,
“ஏண்டி மாப்பிள்ளை பார்த்துட்டியா” என்று பாட்டி கேட்க.,
“ஐயே ஆசைப்பாரு போங்க பாட்டி”, என்று சொல்லி விட்டு “இன்னும் நெஞ்சு பட பட ன்னு அடிச்சுக்கல, வயிற்றுல பட்டர்பிளை பறக்கல”, என்று சொல்லவும்.,
சரிகா சிரிக்க, “ஏன் அண்ணி உங்ககிட்ட அண்ணா சொல்லிட்டானா”, என்று கேட்டாள்.
“இல்ல கல்யாணம் பேசினாலே, இந்த டயலாக் தான் அடிக்கடி விடுவீங்கன்னு சொன்னாங்க., அதுதான் சிரிப்பு வந்துச்சு” என்று சொல்ல,
“நோ இந்த டயலாக் யாருக்கும் தெரிய கூடாது, சொல்லிடாதீங்க”,என்றாள்.
“சொல்ல மாட்டேன்” என்று சொல்லி சொன்னவள், “அது உங்களுக்கான பர்சனல் அண்ணி, உங்களோட பர்சனல் ஃபீல் உங்களுக்கானதா மட்டும் தான் இருக்கணும், யார்கிட்டயும் சொல்லக்கூடாது”, என்று சொல்ல,
“தேங்க்யூ”, என்றாள். கண்சிமிட்டி.,
அதை பார்த்துக் கொண்டிருந்த சரிகாவோ, “அண்ணி ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே”, என்றாள்.
“என்ன” என்றாள்.
“இல்ல, நீங்க இந்த கண் சிமிட்டி சிரிக்கும் போது அவ்ளோ க்யூட்டா இருக்கீங்க”, என்று சொன்னாள்.
“இப்ப வெயிலடிக்கும் மழை காலம், குளிர் காலம் வந்துச்சுன்னா குளிரா தான் இருக்கும், இங்க வீட்ட சுத்தி தோட்டம் வயல் அந்த மாதிரி தானே இருக்கு, க்ளைமெட் நல்லா இருக்கும், ஆனா என்ன உங்களுக்கு இங்க இருந்து ஜி ஹெச் போறதுக்கு நான் 25 நிமிஷம் ஆகும், சில நேரம் டிராபிக் ஜாஸ்தி இருந்துச்சுன்னா 40 நிமிஷம் கூட ஆகும்”, என்று சொன்னாள்.
“அதெல்லாம் ட்ரைவ் பண்ணி போயிருவேன், ஒன்னும் பிரச்சனை இல்ல, இப்போதைக்கு பிஹெச் போட்டு இருக்காங்களே, அது தான் கொஞ்சம் டிஸ்டன்ஸ் போல, ஓகே சமாளிக்கலாம்”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவளை ட்ரைனிங்கிற்காக இங்கு விட்டுவிட்டு அவள் குடும்பத்தினர் கிளம்பும் போது, ஆளாளுக்கு அவளை கட்டிக்கொண்டு “பார்த்து பத்தரமாய் இருந்துக்கோ” என்று சொன்னார்கள்.
“அய்யய்யே ஒரு ஒன் இயர் ட்ரைனிங் விடுவதற்கு இவ்வளவு சொல்றீங்களே, உங்களை நம்பி நான் கல்யாணத்துக்கு பேசியிருந்தா, எல்லாரும் உக்காந்து அழுது இருப்பீங்க போலயே”, என்று சொல்லவும்.,
“போடி கிண்டல் பண்ற”, என்று சொல்லி ஆளாளுக்கு அறிவுரை கூறியே சென்றனர்.
கிளம்பும் போது இங்கு சரிகா வீட்டினர் தான், “நாங்க பாத்துக்குறோம், நீங்க எதுக்கு இவ்வளவு வருத்தப்படுறீங்க, போயிட்டு வாங்க”, என்று சொல்லி அனுப்பினர்.
இவள் ட்ரெயினிங்காக இங்க வீட்டில் தங்கப் போவது சித்தார்த்தனின் அம்மா வாயிலாக சித்தார்த்தனுக்கு ஏற்கனவே தெரிய, அவன் அதன் பிறகு “ஓகே மா, நான் வருவேன், ஆனா முன்னாடி மாதிரி அடிக்கடி வருவேன்னா ன்னு தெரியாது”, என்று சொல்லவும்,
“ஏண்டா அந்த பொண்ணு இங்கே இருக்காளே ன்னு வரமாட்டேன்னு சொல்லுறீயா”, என்று கேட்க
“அய்யோ அப்படிலாம் இல்லமா, வேலை இருக்கு”, என்று சொல்லி இருந்தான்.
இவளுக்கென கொடுக்கப்பட்டிருந்த பிஹெச்க்கு முதல் நாள் அவளை அழைத்து சென்றது சித்தார்த்தனின் அப்பா தான்.
“வந்திருவேயாம்மா, இல்ல இருக்கனுமா”,என்று கேட்டார்.
“அதெல்லாம் வந்துருவேன் மாமா”, என்று சொல்லி அவரிடம் சாதாரணமாக பேசியவள்,
“நீங்க மெனக்கெட்டு எனக்காக வந்து இருக்கீங்க., திருப்பி போணுமே காரை எடுத்துட்டு போறீங்களா”, என்று கேட்டாள்.
“இல்லம்மா நமக்கு வேண்டப்பட்ட ஏரியா தான், நம்ம நெல்லு போடுற இடம் இங்க தான் இருக்கு., அதனால நான் அவங்களை ஒரு எட்டு பார்த்துட்டு, அவன் இப்ப கிளம்பி அங்கன தான் நெல் எடுக்க போவாய்ங்க, நான் அவனோட போயிருவேய்ன், நீ பார்த்து வாமா” என்று சொல்லிவிட்டு சென்றார்.