“நம்புங்கம்மா நம்பிக்கை தான் வாழ்க்கை”, என்று சொல்லவும்,

    “நல்ல வாய் மட்டும் அடி, இரு உங்க அப்பாக்கு போன் பண்ணுறேன்”, என்று சொல்லவும்,

    “எதுக்கு”, என்றாள்.

       “நீ தானே டின்னருக்கு வெளியே போகணும்னு சொன்ன”, என்றார்.

     “சூப்பர் மா, போன் பண்ணுங்க எல்லாரும் கிளம்ப ஆரம்பிங்க” என்று வீட்டில் உள்ளவர்களை அதிகாரம் செய்து கொண்டிருந்தவளுக்கோ மனதிற்குள் சிறு எண்ணம் தோன்றி கொண்டு தான் இருந்தது.,

    ‘ஐயோ, ஆமா இல்ல எந்த ஊர் கிடைக்கும் தெரியலையே, சரி பார்ப்போம் ஏதாவது தெரிஞ்சவங்க இருக்கிற ஊர் என்றால், அப்படியே போய்க்கலாம்., இல்லன்னா  பாட்டி தாத்தாவை கையோட கூட்டிட்டு போய்விடுவோம்’, என்று மட்டும் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தாள்.

     அன்றைய இரவு உணவை அவள் சொன்னது போலவே வெளியில் சென்று அனைவரும் முடித்துவிட்டு வரும் போது ஆளாளுக்கு கல்யாண வேலைகளை பற்றி பேசிக்கொண்டே வந்தனர்.

    இவளோ யோசனையில் வருவதை பார்த்த அண்ணன் தான், “விடு, ட்ரைனிங் எங்க போட்டாலும் பாத்துக்கலாம் அம்மா சொன்னாங்க., அதான் யோசிக்கிறியா”, என்றான்.

   “அதுக்கு இன்னும் டைம் இருக்கு, கல்யாணம் முடிஞ்சு த்ரீ வீக்ஸ்ல கிளம்ப வேண்டியது இருக்கும், பார்ப்போம்”,என்றாள் யோசனையோடு,

     “நீ ஏன் யோசிக்கிற, எந்த ஊர் போட்டாலும் பாத்துக்கலாம்”, என்று சொல்லவும்,

   “எனக்கு யோசிக்கிறதுக்கெல்லாம் ஒன்னும் இல்ல., இன்னும் டைம் இருக்கு எனக்கு, இங்க ட்ரைனிங் பக்காவா எடுத்துட்டேனா, அங்க போற ஹாஸ்பிடல்ல நல்ல  பெர்ஃபார்மன்ஸ் கரெக்டா இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ளலாம்., இப்ப வரைக்கும் தனியா டெலிவரி ஹாண்டில் பண்ணல., ஒன்னு சீப் டாக்டர் அல்லது என்னோட சீனியர் டாக்டர் யாராவது கூட இருக்கிற மாதிரி தான் இருக்காங்க, தனியா டெலிவரி ஹாண்டில் பண்ற அளவுக்கு இந்த ஒன் அண்ட் ஆப் மந்த்ல நான் மாறனும்., அப்படின்னா தான் அங்க போய் என்னால கரெக்டா பண்ண முடியும்,  ஏன்னா கவர்மெண்ட் ஹாஸ்பிடல், அன்ட் பி ஹெச் அப்படிங்கிறது எல்லாம் ஒரு சின்ன தப்புனாலும் பெரிய இஷ்யூ ஆயிரும்., அது ஒன்னு தான் பயம்”, என்று சொன்னாள்.

     “இப்போ உள்ள காலத்துல தனியா அனுப்பவே பயமா இருக்குடி”, என்ற அம்மா சொல்ல.,

      “மா அது எல்லாம் பயப்படாதீங்க., நான் அதெல்லாம் சேபா இருப்பேன், எனக்கு என்னோட வொர்க் பர்ஃபெக்ட்டா இருக்கணும் அவ்வளவுதான்., அதுதான் யோசனையே”, என்று சொன்னவள்,

      “நாளையிலிருந்து எக்ஸ்ட்ரா நான் ஒன் ஆர்  டூ ஹவர் எக்ஸ்ட்ரா டூட்டி கேட்டு வாங்குவேன்”, என்று சொல்லவும்.

     “சரி சரி பாத்துக்கோ, உன் ஹெல்த்தையும் பாத்துக்கோ”,  என்று சொல்ல,

   “அதெல்லாம் பாத்துக்குவேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

      அதுபோலவே மறுநாள் ஹாஸ்பிடல் சென்றவள் அவளுடைய சீனியர் டாக்டரிடம் சென்று, “எக்ஸ்ட்ரா டைம் ஒர்க் தர முடியுமா”, என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

    “எக்ஸ்ட்ரா டைமுக்கு எல்லாம் உனக்கு பே பண்ண மாட்டாங்க., ஓடி மாதிரி கொடுக்க மாட்டாங்க”, என்று சொல்லவும்,

    “இல்ல மேம் அதெல்லாம் வேண்டாம், என்னோட ப்ராப்பர் டைமிங் மட்டும் சேலரி வாங்கிக்கிறேன்., எக்ஸ்ட்ரா டைம் நான் வாலன்டியரா வந்து பார்க்கிறது”, என்றாள்.

  மற்ற  சீனியர்களிடம் பெர்மிஷன் வாங்கிய பிறகே “சரி வா”, என்றனர்.

  அதுபோலவே அன்றிலிருந்து அவள் கூடுதலாக, ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் என்று இருந்து பார்ப்பது வழக்கமாக இருந்தது.

அப்போது தான் ஒரு நாள் அவள் தோழி, “என்னடி ஹார்ட் லப் டப் ன்னு அடிச்சிட்டா, கண்ணில் படபடன்னு அடிச்சுருச்சா, பட்டாம்பூச்சி பறந்துச்சா., இந்த மாதிரி எதுவும் ஆகுதா”, என்று கேட்டாள்.

     “இல்லையே ஏன்”, என்றாள்.

     “இல்ல புதுசா நிறைய டாக்டர்ஸ் ஜாயின் பண்ணி இருக்காங்களே., தலைவி வேற எக்ஸ்ட்ரா டைமிங் எடுத்து இங்க உட்கார்ந்திருக்கியே அதுதான் கேட்டேன்”, என்று சொல்லவும்.,

    “ஐயே அதெல்லாம் ஒன்னும் வரல”, என்று சொன்னாள்.

         அவள் தோழி தான் சிரித்துக்கொண்டே, “ஆனாலும் நீ இருக்க பாரு, இப்படி சொல்லியே எல்லாத்தையும் கழிச்சிட்டு இருக்கியே, ஏன்? உனக்கு யாரையும் பாக்கணும்னு கூட தோணலையா”, என்று கேட்டாள்.

     “ஏன்” என்றாள்.

      “இல்ல, ஜஸ்ட் இந்த சைட் அடிக்கிறது, அந்த மாதிரி இதெல்லாம் தோணலையா”,என்றாள்.

     “எனக்கு தான் ஏதோ ஹார்மோன் டிபெக்ட் ன்னு நினைக்கிறேன்”, என்று சொன்னவளுக்கு கண்ணுக்குள் வந்து சென்ற முகம் தான், ‘ஹார்மோன் டிபெக்ட் எல்லாம் ஒன்னும் இல்ல’ என்று மனதிற்குள் சொல்லி வைத்தது.,

   இவளும் தோழியிடம் சிரித்தபடி அவளை பார்த்து,  “எனக்கும் சீக்கிரமே தோணும்டி, தோணும் போது சொல்றேன்”, என்று சொன்னாள்.

    “இல்லையே பாத்தா அப்படி தெரியலையே, இப்ப கண்ணுல ஒரு ஸ்பார்க் வந்துட்டு போச்சே, ஜஸ்ட் பிபோர் யாரை நினைச்ச சொல்லு சொல்லு”, என்று கேட்டாள்.

      “அதெல்லாம் இல்லையே, ஒருத்தரையும் நினைக்கலையே”, என்று சிரித்தபடி சொன்னவளிடம்,

    “ஏய், நீ மறைக்கிற டி கள்ளி”, என்று சொன்னவள், “வீட்டில் நான் கேட்கட்டுமா”, என்றாள்.

       “அதெல்லாம் ஒன்னும் இல்ல, ஒரு சின்ன ஸ்பார்க் ஒருத்தரை பார்த்து தோனி இருக்கு., ஆனா அது  தானா அதுன்னு தெரியல”, என்று சொல்லவும்,

   “எது,  எது தானா”, என்று கேட்டாள்.

    “சும்மா இரு, நீ வேற”, என்று யோசனையோடு பார்த்தவளை அவள் தோழி தான்.,

       “அம்மாடி, நீ டாக்டர் டி ,  ச்சு போ, ஆனா இப்ப தான் டீன் ஏஜ் பொண்ணு மாதிரி யோசிக்கிற., முகம் பளபளக்குது”, என்று சொல்லவும்.,

        “அதெல்லாம் ஒன்னும் இல்ல”, என்று சொன்னவள்.
“கூடிய சீக்கிரம் சொல்றேன், அப்படி ஒரு வேளை எனக்கு பிடிச்சிருந்துச்சுன்னா., நான் சொல்றேன்”, என்று சொன்னாள்.

   அவளும் சிரித்துக் கொண்டே, “ஒருவேளை நீ போய் ப்ரொபோஸ் பண்ண போறியா”, என்று கேட்டாள்.

    “மேபி நான் தான் ப்ரொபோஸ் பண்ணுவேன்னு நினைக்கிறேன், ஏன்னா அந்த பக்கம் எந்த ரியாக்ஷனும் இருந்த மாதிரி தெரியல”, என்றாள்.

    “ஹேய், அப்போ நீ பாத்துட்ட”, என்று சொல்லவும்.,

    “பார்த்தேன் அவங்களுக்கு பிடிக்குமா ன்னு தெரியலை, இன்னும் ரெண்டு தடவை அவங்களை நான் பார்த்து, அதுக்கப்புறம் எனக்கு மனசுக்குள்ள அந்த எண்ணம் இருந்துச்சுன்னா., நானே போய் சொல்றேன் ஓகே வா”, என்றாள்.,

    “ஏய் அப்ப ட்ரீட் வைப்ப இல்ல”, என்றாள்.

     “வைக்கலாம் வைக்கலாம், முதல்ல அந்த பக்கத்தில் இருந்து பதில் வரட்டும்”, என்று சொன்னாள்.

    “அது சரி உங்க வீட்ல ஒத்துப்பாங்களா”, என்று கேட்கவும்,

    “முதல்ல அந்த மனுஷன் ஒத்துக்கொள்கிறாரா ன்னு பார்ப்போம்”,என்றாள்.

     “ஒரு வேளை ஒத்துக்கலைன்னா” என்று தோழி கேள்வியாக கேட்கவும்,

    இவள் சற்று அதிர்வோடு அவளை பார்த்தாலும், “பசங்க மட்டும் தான் விரட்டி விரட்டி லவ் பண்ணனுமா என்ன?, பொண்ணுங்க விரட்டி விரட்டி லவ் பண்ணா தப்பா என்ன?, என்றாள்.

  “அடிப்பாவி” என்ற தோழியிடம்,

   “பண்ணலாம் பண்ணலாம், தப்பு இல்ல” என்று அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டாள்.