அவர்களைப் பார்த்துக் கொண்டே பாட்டி அமர்ந்திருக்க.,
தாத்தா தான், “என்ன உன் மருமக மூணு பேரையும் புதுசா பாக்குற மாதிரி பாக்குற., பேரனுக்கு கல்யாணம் ஆயிட்டு, பேத்திக்கு கல்யாணம் ஆகி கொள்ளு பேரனும் வந்தாச்சு., இப்பதான் மூன்று பேரையும் புதுசா பார்க்கிற மாதிரி பாக்குற”, என்று கேட்டார்.
“அது இல்லங்க, முன்னாடி மூத்தவ அவ்ளோ அமைதி, யாரையும் இத செய்ங்க, அத செய்யுங்கன்னு ஏவுன பழக்கமும் கிடையாது., தன்னால இழுத்து போட்டு செய்வா, மத்தவங்களா போய் செஞ்சா தான் உண்டு., அதுல இந்த சின்னவன் பொண்டாட்டி இருக்காளே., வேலை செய்யாமலே ஒப்பேத்திடுவா., கடைசி மருமகளும், மூத்த மருமகளும் தான் வேலைய செஞ்சிட்டு இருப்பாங்க., இப்ப பாத்தீங்களா எப்படி பேசுதா., செஞ்சுதான் ஆகணும்னு சொல்லிருதா”, என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க.,
தாத்தா தான், “அது எல்லாம் அவ மருமக ட்ரைனிங் ஆக்கும்., அவ இங்க இருந்த பத்து நாள்ல அத்தனை பேரையும் ஆட்டி வைக்கல”., என்று சொன்னார்.
அன்று நடந்ததை யோசித்துக் கொண்டனர்,
அத்தனை பேரையும் பக்கத்துல வச்சுக்கிட்டே தான் சொன்னா, “நீங்க மட்டும் இந்த வீட்டுக்கு மருமக கிடையாது., கடைசி அத்தை அவங்களா வந்து செய்றாங்க., இந்த நடுவத்தைக்கு என்ன செய்து., ஒன்னும் செய்யுறது கிடையாது, நீங்க தனியா செய்ய கூடாது, இனி வேலைய பிரிச்சு குடுங்க., நீங்க மட்டும் செய்யணும்னு கட்டாயம் கிடையாது”,என்று சொல்லவும்.,
“அம்மாடியோ, இவ மட்டும் கொஞ்ச நாளைக்கு முன்னாடியே இங்க வந்து இருந்தா உண்டு இல்லைன்னு ஆக்கிருப்பாளே”, என்று சரிகா அம்மா சொல்ல.,
“என்னது, நீங்க சொன்னது சரியா கேட்கல”, என்று சொல்லவும்.,
“நான் ஒண்ணுமே சொல்லலாமா”, என்று பதிலுக்கு சொல்லி விட்டு சென்றார்.
அதை இப்போது பேசிக் கொண்டிருந்தனர்.
“இவளுக்கு அப்படி ஆளு தான் சரி”என்று சொல்லவும்.,
பாட்டியோ, “இந்த குடும்பம் பிரியாம இருந்தா போதும்”, என்றார்.
தாத்தாவோ, “அந்த புள்ள பிரிச்சுரும் நினைக்கிறீயா?, அதெல்லாம் பிரிக்காது, எப்பவும் சந்தோஷமா இருக்கும் இந்த குடும்பம், நீ வேணா பாரு”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
சென்னை வீட்டிலோ அனாமிகாவின் அம்மா யோசனையோடு அமர்ந்து கொண்டிருந்தார்.
சரிகாவோடு அமர்ந்து சாப்பிட்டு விட்டு ஹாலுக்கு வந்த நித்திலன்., அம்மா எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறார் என்பதை பார்த்துவிட்டு.,
“ம்மா , ம்மா”, என்றவன், “அம்மா” என்று வேகமாக அழைத்தான்.,
அமைதியாக அவனை நிமிர்ந்து பார்த்தவர்.,
“ஏன்டா கத்துற”, என்றார்.
“நான் கூப்பிடுறது உங்களுக்கு கேட்கல மா, அதனால் கத்தினேன், என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க”, என்றான்.
“இல்லடா அனாமிகா சொன்னது தான் யோசிச்சிட்டு இருக்கேன், உன் கல்யாணத்துக்கு பேச ஆரம்பிக்கும் போது அவ சொல்ல ஆரம்பித்தது., நான் உண்மையிலேயே கிண்டலுக்கு சொல்றா ன்னு தான் டா நினைச்சேன்., எப்படி அப்படி பட்டர்பிளை பறக்கும், எப்படி ஹார்ட் பீட் அதிகமாகும்., எப்படி படபட அடிச்சிக்கும் ன்னு, அதுவும் நீங்கெல்லாம் கோ எஜுகேஷன் ல படிச்ச பிள்ளைங்க., எப்படி அப்படி வரும் அப்படின்னு யோசிச்சேனே ஒழிய., இவளுக்கு உண்மையிலேயே அந்த மாதிரி தோணும் ன்னு நான் நினைக்கவே இல்ல டா., அதான் யோசிச்சிட்டு இருந்தேன்”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு தாத்தாவும் பாட்டியும் சேர்ந்து வந்தே அமர்ந்தனர்.
பாட்டியோ “இவ ட்ரெடிஷனல் ட்ரெடிஷனல் ன்னு பேசுறாளே, இவ நம்ம பார்க்கிற மாப்பிள்ளைய தான் கல்யாணம் பண்ணுவா ன்னு நினைத்தேன், ஆனா மாப்பிள்ளை பார்ப்பதில் மட்டும் மாடலா பார்க்க ஆரம்பிச்சிட்டா”, என்று சொல்லி பாட்டி சிரித்துக் கொண்டிருந்தார்.
தாத்தாவும், “எனக்கும் இப்ப வரைக்கும் புரியல., மருமக சொன்னது தான் நானும் யோசிப்பேன்., அது எப்படி அப்படி ஒரு ஃபீல் எல்லாம் வரும் அப்படின்னு”, என்று சொல்லவும்,
அதே நேரம் சரிகாவும் குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கு வந்து அமர்ந்தாள், அதேநேரம் நித்திலனின் அப்பாவும் வந்துவிட இவர்கள் பேசுவதை அறிந்து சிரித்துக் கொண்டவர்.
“என்னவோ போ, அவளுக்கு அப்படி தான் தோணி இருக்கு”, என்றார்.
அதே நேரம் நித்திலனும், “அப்பா அப்படியெல்லாம் இல்ல, அன்னைக்கு மூணாறில் வைத்து தான் ராகவன் கிண்டல் பண்ணிட்டு இருந்தாரு, மச்சான் கதைய சொல்லி, நம்ம பாப்பா எங்க நிச்சயதார்த்தத்துக்கு மதுரை வந்தா இல்ல, அப்ப மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து தான் ரெண்டு பேரும் முதலில் பார்த்துகிட்டார்களாம்”, என்று சொல்லி அவர்கள் சந்தித்த கதைப் பற்றி, யார் என்று தெரியும் முன்பே இருவருக்கும் வந்த உணர்வுகள், அதன்பிறகு இவள் காதல் சொல்லும் போது அவன் குடும்பத்திற்காக யோசித்தது., பிறகு அவனாலும் இவளை விட்டுக் கொடுக்க முடியாத சூழல் இது எல்லாவற்றையும் சொல்லி இருக்க அதையெல்லாம் இப்போது சொல்லிக் கொண்டு இருந்தான்.
சரிகா தான், “அண்ணி கிட்ட போய் சொல்லிக் கொடுக்கிறேன். நீங்க எல்லார்ட்டையும் கதை சொல்லிட்டீங்கன்னு”, என்று சொல்ல.,
“அவளுக்கு எனர்ஜி மிச்சம்னு நினைப்பா., இல்லாட்டி அடுத்த தடவை நம்ம மூணாறு போகும் போது பாட்டி தாத்தா ட்ட உட்கார்ந்து கதை சொல்லிட்டு இருப்பா”, என்று சொல்லி சிரிக்க.,
அனாமிகாவின் அம்மா தான், “அத்தை அடுத்த வாரம் நீங்க அங்க போறேன்னு சொன்னீங்க இல்ல., போனீங்கன்னா சுத்தி போட்டுட்டு வாங்க., நம்மளே கண்ணு போட்டுருவோம் ன்னு பயமா இருக்கு”, என்று சொல்லவும்.,
பாட்டியோ “ஆமா மா, அவளும் பேரனும் நல்லபடியா ஒத்து போறாங்க., அப்புறம் என்ன அவங்க பாத்துக்குவாங்க”, என்று பாட்டி சொல்லிக் கொண்டிருக்க.,
சரிகா தான், “அண்ணிக்கு எந்த அளவுக்கு அபக்சனோ அதைவிட அண்ணனுக்கும் பயங்கர அபக்சன், அன்னைக்கு அண்ணி உங்ககிட்ட கதை சொல்லிக்கிட்டு இருந்தாங்களா”, என்று நித்திலனை பார்த்து கேட்க.,
“ஆமா”, என்று சொல்லவும்.,
“அப்போ நான் அண்ணனையும், அண்ணியையும், மாத்தி மாத்தி நோட் பண்ணேன்., அண்ணி சிரிச்சுக்கிட்டே கதை சொல்ல, சொல்ல அண்ணனோட பார்வை ஃபுல்லா அண்ணி மேல்தான் இருக்குது., அதையே சிரிச்ச முகத்தோட வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்காங்க., நான் கூட சொல்லிட்டேன் அண்ணா இடையில் கண் சிமிட்டிக்கோ ண்ணா ன்னு எல்லாம் சொல்லி பாத்துட்டேன்., ஆனாலும் அப்படி ஒரு பார்வை, அவ்வளவு ஒரு பிடித்தம் இரண்டு பேருக்குள்ள., அந்த அளவுக்கு பிடித்தம் வருமா”, என்று கேட்க.,
நித்திலனோ, “நாம அரேஞ்ச் மேரேஜ் இல்ல”, என்று சொல்ல,
இவளோ, “ஓஹோ அப்ப லவ் பண்ணலாம்னு இருக்கா”, என்று அவனிடம் கேட்க.,
“அய்யய்யோ இல்லம்மா, அந்த மாதிரி இல்லம்மா, நம்ம ட்ரை பண்ணுவோம் இனிமேல் நமக்குள்ள இந்த மாதிரி ஒரு அபக்சன் வருதான்னு பார்ப்போம்”, என்று சொன்னான்.
நித்திலனின் அப்பா தான், “டேய் கணவன் மனைவி அப்படின்னு ஒரு உறவு வந்துட்டாலே, அந்த இடத்துல அன்பு பாசம், நேசம்னு சொல்ற எல்லாமே இருக்கும், ஆனா இது கொஞ்சம் கூடுதலா இருக்கு அவ்வளவுதான், அது இவங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் இவங்க வந்தா நல்லா இருக்கும்னு யோசிச்சி, இவங்க தான் வேணும் அப்படின்னு அவங்களுக்குள்ளயே முடிவு செய்து யோசிச்சு, வேற யாரப் பற்றியும் அவங்களுக்கு தோணாம இருந்துச்சு பார்த்தியா., அந்த அஃபெக்ஷன் தான் அது”, என்று சொல்ல.,
பாட்டியோ, “என் மகன் எங்கேயோ போய் கிளாஸ் படிச்சிட்டு வந்த மாதிரி இருக்கு மருமகளே., என்னன்னு விசாரி”, என்று சொல்ல.,
“அம்மா குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணாதீங்கம்மா., நான் என் பிள்ளைகள பார்த்து கத்துக்கிட்ட விஷயம் இதெல்லாம்”, என்று சொல்லவும்.,
“எப்படியோ ரெண்டு பேரும் நல்லா இருந்தா சரிதான்”, என்று தாத்தா சொல்லவும் அவர்களும் சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தனர்.
அதே நேரம் தாத்தா, “வாழ்க்கை என்பது ஒரு தடவை தான், நம்ம வாழ்க்கை அது வரமா சாபமா என்கிறது நம்ம நடந்துக்கிற முறைல தான் இருக்கு., வரமா மாத்திக்கிறதும் சாபமா மாத்திக்கிறதுமே நம்ம கையில தான் இருக்கு., கிடைத்த வாழ்க்கை துணையை நமக்கு ஏத்தாப்புல மாத்திக்கிறதுக்கு பதிலா நம்மை அவங்களுக்கு ஏத்தாற் போல மாத்துறது நல்லது தானே., அதை அவங்க ரெண்டு பேரும் செஞ்சிருக்காங்க அவ்வளவுதான்.,
எல்லாரும் அவங்க அவங்களுக்கு கிடைத்த வாழ்க்கை துணை ஏன் அவங்க மாறனும்னு நினைக்கிறீங்க., நம்மளால எப்பவுமே அடுத்தவங்களை மாத்த முடியாது., நம்ம வேணா அவங்களுக்கு தகுந்தாப்ல மாறிக்கலாம் அப்படின்னு நினைச்சா வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்” என்று சொல்ல.,
பாட்டியும் ஆமோதிப்பதாக தலையாட்டிக் கொண்டார்.
கேட்டவர்களும் அப்படித்தான் போல என்று நினைத்துக் கொண்டனர்.
வாழ்க்கை என்பது அழகான பூந்தோட்டம், அதில் பூக்கள் பூப்பதும், முட்கள் வளர்வதும் நம் கையில் தான் இருக்கிறது., வாழ்க்கையை வரமாக மாற்றிக் கொள்ளுங்கள்.
நாம் மாற்ற முடிந்த ஒரே ஒரு ஜீவன் நாம் மட்டுமே, மற்றவர்கள் இல்லை.