அங்கு சென்ற பிறகு அவன் தேனிக்கு சென்று விட., இவ்ளோ எப்போதும் போல மருத்துவமனை ட்ரைனிங்., அவளுடைய வேலை என்று இருந்தாலும் சரிகாவை கவனித்துக் கொள்வதிலும் தவறவில்லை.,
அன்று மாலை மருத்துவமனையில் இருந்து வந்தவள், சரிகா அருகில் செல்லாமல் தள்ளியே நின்று., “அண்ணி நான் இப்ப குளிச்சுட்டு வரேன்., நீங்க வாக்கிங் போனீங்களா”, என்று கேட்டாள்.
சேரில் அமர்ந்திருந்தவள், “இல்ல அண்ணி” என்று சொல்லவும்.,
“நோ, அண்ணி கண்டிப்பா ஒரு ஹாஃப் அன் ஹவராவது நடக்கனும், உள்ளேயே நடங்க”, என்று சொன்னவள்.,
“மெதுவா நடக்கணும், ஸ்பீடா நடக்கக்கூடாது., குறைஞ்சது அரை மணி நேரமாவது நடக்கணும்., பாட்டி இன்னைக்கு அவங்க என்ன என்ன சாப்பிட்டாங்க”, என்று சொல்லி அவள் உணவையும் கேட்டுக் கொண்டவள்.,
“சரி, இங்க டாக்டர் பார்க்க நீங்க யோசிச்சிட்டீங்களா”, என்று கேட்டாள்.
“நீ தான் பார்த்து சொல்லணும்”, என்று பாட்டி சொன்னார்.
அவளோ அங்குள்ள ஒரு மருத்துவரை சொன்னாள்., “சரி நாளைக்கு அவங்ககிட்ட கேட்டுட்டு வரேன்., அதுக்கப்புறம் போகலாம்”, என்றாள்.
ஏனென்றால் இவர்கள் வந்து ஒரு வாரம் ஆயிருக்க., இன்னும் டாக்டரை பார்க்க வில்லை,
“நடந்து கொண்டே இருங்க, நான் இப்ப வந்துடறேன்”, என்று சொல்லி மேலே சென்றவள்., அவள் குளித்து முடித்துவிட்டு, ஒரு டீ போட்டு குடித்துவிட்டு கீழே வந்தவள்., அண்ணியோடு பேசியபடி நடக்க தொடங்கினாள்.
“ஓகேவா இருக்கா, மூச்சு வாங்குதா, எதுவும் னா சொல்லுங்க”, என்று சொன்னவள்.
“இனிமேல் நீங்க எக்ஸ்சைஸ்சும் பண்ணனும் அண்ணி, ஒன்பது மாசம் பிறந்து பத்து நாள் ஆயிடுச்சு, சோ இனிமேல் எக்ஸ்சைஸ் பண்ணனும்., இந்த வாரம் செக்கப் நாளைக்கு நான் கேட்டுட்டு முடிஞ்சா உங்களை நானே டாக்டர் கிட்ட கூட்டிட்டு போயிடறேன்., அதுக்கப்புறம் நீங்க டாக்டர் ட்ட கேட்டுக்கோங்க, பெயின் எப்பனாளும் வரும்., சோ எதுவும் மிஸ் பண்ணிட கூடாது., நான் உங்களுக்கு குட்டி குட்டி எக்ஸ்சர்சைஸா சொல்லித் தரேன்”, என்று சொல்லி அவளுக்கு தேவையானவற்றை சொல்லிக் கொடுத்தாள்.
மறுநாள் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல., ” நீயே பார்த்துர வேண்டியது தானே”, என்று இவளை அறிந்தவர் ஆக சொல்ல.,
“நானும் கூட இருப்பேன் டாக்டர், ஆனால் என்னுடைய டியூட்டி டைம் கரெக்டா கொடுத்திருக்க டேட் வரைக்கும் இருக்கு, ஒர்க் ல இருக்கும் போது வந்தது ன்னா அதனாலதான்”, என்று சொல்ல.,
“ஒர்க்கில் இருந்தால் பர்மிஷன் போட்டு ஓடி வந்துரு”, என்று சொல்ல.,
“பின்ன மருமகனை கையில வாங்க வேண்டாமா”, என்று இவள் சொல்லவும்.,
ஏற்கனவே வளைகாப்போடு அனைவருக்கும் சொல்லி இருந்தனர்.
பாட்டி தான் “எக்ஸசைஸ் எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்காமா”, என்று சொல்ல.
“அவ சொல்றபடி கேளுங்க, கரெக்டா இருக்கும்., அங்க எல்லாருக்கும் உங்க பேத்திய ரொம்ப பிடிக்குமாக்கும்., ஜி ஹெச் ல டெலிவரிக்கு வர்ற நிறைய பேர் இவளை தான் கேட்பாங்க., இவ டூட்டி டைம்ல இருக்கும் போது நல்ல பாத்துக்குவா போல., நாங்க எல்லாம் சீனியர்., ஆனா எங்களை தேடுறத விட இவளை தான் அதிகமா தேடுறாங்க”, என்று சொல்ல.,
பாட்டிக்கும் பெருமையாக தான் இருந்தது.,
அதன் பிறகு நாட்கள் அதன் போக்கில் செல்ல., ஒருநாள் இவள் காலை வேலைக்கு கிளம்பும்போதே, அன்று சித்து வருவதாக தேனியில் இருந்து மெசேஜ் செய்திருந்தான்.
“நான் இன்று வந்தாலும் வருவேன்”, என்று..,
இவளும், “வெல்கம் வெல்கம் நேர்ல பாக்காம ரொம்ப கஷ்டமா தான் இருக்கு”, என்று சொல்லியிருந்தாள்.
அவனும், “இன்னும் ரெண்டு மாசம் தான், அதுக்கப்புறம் எப்பவும் பக்கத்துல இருப்போம்., அப்புறம் ஏன்டா இவன பார்க்கிறோம் ன்னு ஃபீல் பண்ண கூடாது”, என்று சொல்ல.,
“அப்படி எல்லாம் பீல் பண்ண மாட்டேன்”, என்று இவளும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
கீழே கிளம்பி வந்தவள்., சரிகாவை பார்க்க,
அவள் எப்போதும் போல இருந்தாலும், முகத்தில் ஒரு வாட்டம் தெரிவதை உணர்ந்து கொண்டவள் அருகில் சென்று அவள் வயிற்றில் கையை வைத்து பார்த்தாள்.
பார்த்தவள், “அண்ணி கொஞ்சம் எந்திரிங்க”, என்று சொல்லி அவளை எழுப்பி அவள் அடி வயிறு வரை கை வைத்து பார்த்தவள்.,
பாட்டியிடம் “பாட்டி கூடவே இருங்க, தனியா எதுக்கும் விடாதீங்க”, என்று சொல்லிவிட்டு..,
“அண்ணி லேசா பெயின் வந்தாலும் சொல்லணும்”, என்று சொன்னவள்.
“இங்கெல்லாம் வலிக்குதா”, என்று கேட்டாள்.
“இல்லையே”, என்றாள்.
“இல்லையே, நீங்க இன்னைக்கு டல்லா இருக்கீங்க”, என்று சொல்லிவிட்டு.,
பல்ஸ் செக் பண்ணியவள் காரில் இருந்து ஸ்டெத்தையும் எடுத்து அவளை ஒருமுறை செக் செய்துவிட்டு யோசனையோடு நின்று கொண்டே இருந்தாள்.
“கிளம்பலையா”, என்று சின்ன மாமனார் கேட்க.,
“போகனும் மாமா”, என்று சொன்னவள்.,
யோசித்துக் கொண்டே இருக்க., பாட்டி தான் “என்னம்மா பெயின் வந்துரும்னு யோசிக்கிறியா”, என்றார்.
“ஆமா பாட்டி”, என்றவள்.,
“அண்ணி ஒரு நிமிஷம் ரூமுக்கு வாங்களேன்”, என்று சொல்லி அழைத்துக் கொண்டு சென்றவள்.,
உள்ளே சென்று, மீண்டும் அடி வயிறு வரை கை வைத்து பார்க்க., ஒரு மருத்துவராக அவளுக்கு தெரிந்தது., குழந்தையின் தலை இறங்கி இருக்கிறது என்பது மட்டும் தான்.,
‘எப்போது வேண்டுமானாலும் வலி வரலாம்’, என்று யோசித்தவள்., “ரொம்ப இன்னைக்கு நடக்க கூடாது., இன்னைக்கு பாத்ரூம் போறதா இருந்தா கூட கதவை லாக் பண்ண கூடாது”, என்று சொல்லி பாட்டிடமும் சொல்லிவிட்டு.,
சரிகாவின் அம்மாவிடம் அதட்டலாகவே சொன்னாள். “கூடவே இருந்து பாத்துக்கோங்க., வெட்டி வியாக்கியானம் பேச வெளியே போய்டாதீங்க”, என்று சொல்ல.,
சரிகாவின் அம்மாவோ., “எம்மாடி உங்க அத்தை அங்க இருக்கா., நீ மிரட்டுறதா இருந்தா உங்க அத்தைய தான் மிரட்டணும்., என்ன மிரட்டிட்டு இருக்க., அவங்க தான் உனக்கு மாமியார்”, என்று சொல்ல..,
“நான் எதுக்கு எங்கத்தைய மிரட்டணும்., எங்க அத்தை பிரச்சினையே கிடையாது., நீங்கதான் ஊரு கதை பேச வெளியே போயிருவீங்க., ஒழுங்கா இருங்க”, என்று சொல்லிவிட்டு..,
பாட்டியிடம் மறுபடியும் சொல்லிவிட்டு காரில் ஏறியவள், மனது கேட்காமல் அண்ணனுக்கும் போன் செய்து சொன்னாள்.
“எதுக்கும் நீ மதியம் மேல கிளம்பி வர்றியா” என்று சொல்ல.,
“ஏன்” என்று கேட்கவும்.,
“எனக்கு என்னவோ, அண்ணிக்கு இன்னைக்கு பெயின் வரலாம், பேபி இன்னைக்கோ அல்லது நாளைக்கோ பொறக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு”., என்றாள்.
“இன்னும் பத்து நாள் டைம் இருக்குடா”, என்று சொல்ல.,
“இல்ல அவ்வளவு நாள் போக வாய்ப்பு இல்ல”, என்று சொன்னவள்., மருத்துவருக்கும் அழைத்து கேட்க..,
ஏற்கனவே நான்கு நாட்கள் முன்பு தான் செக்கப்பிற்கு அழைத்து சென்றவளிடம் டாக்டர் ஏற்கனவே சொல்லி இருந்தார், “இனி எப்போது வேண்டுமானாலும் டெலிவரி இருக்கலாம்”, என்று சொல்லி இருந்ததால்.,
இன்று அதையே யோசித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தவள் எப்போதும் யோசனையாகவே இருந்தாள்.