நித்திலனும் “கரெக்ட் தான் நம்ம வீட்டு விஷயம் நம்மளோடே இருக்கட்டும்”, என்று சொன்னான்.
மறுநாள் செக்கப் பார்க்க சென்றவர்கள் எப்போதும் போல மற்றவர்கள் அமைதியாக கேட்டுக்கொள்ள.,
இவளோ 1008 சந்தேகங்களை அவள் சீனியர் டாக்டரிடம் கேட்க தொடங்கினாள்.
“ஓகேவா இருக்காங்களா, பேபியோட கிரௌத் எப்படி இருக்கு , ரீசண்டா பண்ண ஸ்கேன் ல ரிப்போர்ட் எப்படி இருக்கு., அப்போ இப்ப பண்ண போற ஸ்கேன் எப்படி இருக்கும்., பேபி வெயிட் கெயின் இருக்கா ன்னு பாக்கணும்., அண்ணியோட ஃபுட் இப்போ நிறைய எடுக்க முடியாது., இன்னும் என்னென்ன எல்லாம் சேர்க்க ஆரம்பிக்கலாம்”, என்று இவள் கேள்விகளை அடுக்க.,
அவள் சீனியரோ, “ஏமா நீயும் டாக்டர் தான் ங்கிறத மறந்துட்டியா”, என்று கேட்டார்.
“நான் டாக்டரா இருந்தாலும், நான் சொல்றத விட இப்ப நீங்கதான் சொல்லணும்., நான் சொன்னேன்னா அது சரி வராது., நான் ஏன் பேசன்ட் ட்ட மட்டும் தான் சொல்லலாம்., எங்க அண்ணி கிட்ட சொல்ல முடியாது., அதனால இப்போ எங்க அண்ணி தான் உங்க பேஷன்ட்., நீங்க சொல்லுங்க”, என்று சொல்லவும்.,
சீனியரோ சிரித்துக்கொண்டே, “எம்மா டயட் எல்லாம் பார்த்து சாப்பிடுமா”, என்று சொல்லி அவள் கேட்ட சந்தேகங்களை எல்லாம் சொன்னவர்.
அன்று மாலை ஸ்கேனிற்கு வரும்படி சொன்னார். ஸ்கேனிற்கு வந்தவளுக்கு ஒரு டாக்டர் ஆக என்ன குழந்தை என்று தெரிந்த போதும் சந்தோஷமாக ஸ்கேன் டாக்டரை பார்க்க.,
அவரும் “நீங்க டாக்டர் உங்களுக்கு தெரிஞ்சிடும், எப்படினாலும் வீட்ல சொல்ல தான் போறீங்க., அப்புறம் என்ன”, என்று சொல்லி சிரித்து விட்டு.,
” சரி நல்லபடியா வரட்டும், அதுக்கப்புறம் பார்ப்போம்”, என்று சொல்லி சிரித்தார்.
குழந்தைக்கு வெயிட் சாதாரணமாக இருந்தாலும்., ஏழு மாதத்திற்கு பிறகு தான் கவயிற்றில் இருக்கும் குழந்தைகளின் எடை அதிகரிக்கும்., என்பதால் இதற்குப் பிறகு கவனமாக உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையோடு டாக்டர் அனுப்பி வைத்தார்., அது மட்டும் இல்லாமல் அனாமிகா விடம் தனியே சில விஷயங்கள் சொல்லி அனுப்பினார்.
வீட்டில் வந்த பிறகு., சரிகா ஸ்கேன் டாக்டர் சொன்னதை சொல்ல.,
எல்லோரும் அவளை திரும்பிப் பார்த்து., “அப்ப என்ன குழந்தைன்னு தெரிஞ்சிருச்சு உனக்கு., அது தானே”, என்று சொல்ல.,
“அதற்குத்தானே நான் வந்ததே., ஏழாவது மாசம் ஸ்கேன் நான் இருக்கணும்னு சொன்னது”, என்று சொல்லவும்.
“என்ன பேபி” என்றனர் , பொதுவாக.,
“எனக்கு மருமகன் வரப்போறான்”, என்று சொன்னவள் அந்த செய்தியை சித்தார்த்திடமும் பகிர்ந்து கொண்டாள்.
நித்திலனின் பாட்டியோ, “உங்க வீட்ல சொல்லிருவோம் மா”, என்று சொல்ல.,
சரிகா தான், “இல்ல பாட்டி இப்ப யார்கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம்., அண்ணிக்கு தெரிஞ்சதால தான், நான் அண்ணி கிட்ட கேட்கணும்னு நினைச்சேன்., சரி வீட்ல வச்சு எல்லாரும் முன்னாடி அவங்களே சொல்லட்டும் அப்படிங்குறதுக்காக தான் நான் கேட்கல., அங்கெல்லாம் இப்ப தெரிய வேண்டாம்., வளைகாப்பு அப்ப சொல்லிக்கலாம் “, என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க.
“தேதி பார்க்க சொல்லுவோமா., ஏழாவது மாதம் முடிய போகுது, வளைகாப்பு போட்டு கொள்ளலாம்”, என்று சொல்லிக் கொண்டிருக்க.,
இவளோ, “இல்ல அண்ணி கொஞ்சம் இங்க இருக்கட்டும்., ஒன்பதாவது மாசம் ஸ்டார்டிங்ல வளைகாப்பு போட சொல்லுங்க,” என்று சொன்னாள்.
“ஏன்”, என்று கேட்டனர்.
“சீனியர் டாக்டர் சொன்னாங்க., அண்ணி இங்க இருக்கட்டும் அவ்வளவு தான் சொல்லுவேன்., நான் அண்ணி கிட்ட பேசுகிறேன்” என்று சொல்லி விட,
அம்மாவும் பாட்டியும் “என்ன” என்று கேட்கும் போது.
“மா கொஞ்ச நாளைக்கு அண்ணன் கூட இருக்கட்டுமா., கொஞ்சமாவது விடுங்களேன்., இப்பவே கொண்டு போய் அங்க எதுக்கு விடணும்ங்கறீங்க”, என்று சொல்ல.,
அவர்கள் புரிந்து கொண்டவர்களாக, “நீ கல்யாணம் ஆகாத பொண்ணுடி”, என்று பாட்டி சொல்ல.,
“நான் கல்யாணம் ஆகாத பொண்ணுதான்., ஆனால் டெலிவரி பாக்குற டாக்டர்”, என்று சொல்லி பாட்டி கிண்டல் செய்துவிட்டு.,
“நான் நாளை காலை கிளம்பிடுவேன்., சோ அண்ணி ஒழுங்கா சாப்பிடணும்., ஒழுங்கா உடம்ப பாத்துக்கோங்க., நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா”, என்று சொல்லி அவளுக்கு தனியாக அழைத்து சொன்ன அறிவுரைகளையும் சொல்லிவிட்டு.,
” இதெல்லாம் நான் அண்ணன் ட்ட சொல்ல முடியாது அதான் உங்ககிட்ட தனியா சொல்றேன், பேசிக்கோங்க” என்று சொன்னபடி மறுநாள் அவள் கொண்டு செல்ல வேண்டியவற்றை பேக் செய்துவிட்டு,
கொண்டு வந்த அழுக்கை எல்லாம் இங்கே போட்டு விட்டு “துவைச்சு அயன் பண்ணி வைக்கணும்”, என்று சொன்னாள்.
அதிகாலையில் கிளம்பும் நேரத்தில் அவளுக்கு அழைப்பு வந்தது, அதில் மச்சி என்று மட்டும் போட்டிருக்க, சைலண்ட் ல் இருந்தது.,
காரில் செல்லும் போது அழைப்பு வர, திரும்பி பார்த்தவன் மச்சி என்று அழைப்பை பார்த்தவுடன்., ‘இப்பதான் பொம்பள பிள்ளைங்களே மச்சினு தானே பேசுது., இந்த நேரத்துல யாரு இவளுக்கு பேச போறா’ என்று யோசித்தவன்.,
“யாரு பாப்பா” என்று கேட்டான்.
“யாரா இருந்தா நீ சந்தோஷப்படுவ”, என்று கேட்டாள்.
“நான் கேட்கல மா கேட்கல, நீ பேசு”, என்று சொல்லவும் அவள் அழைப்பை எடுக்காமல் மெசேஜ் செய்தாள், “ஆன் தி வே” என்று,
அவனோ “என்ன பேசல” என்று கேட்டான்.
“நான் ட்ரெயின்ல போய் பேசிக்குவேன், இப்ப பேச மாட்டேன்”, என்று சொல்லவும்.
“அது சரி” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
இருவரும் ஒன்றாக செல்வது அவனுக்கு தெரியாது, ஆனால் அழைப்பு வந்திருப்பது அவனாக தான் இருக்கும் என்று இவன் முடிவு செய்து கொண்டான்.
ஆனால் அந்த அவன் எவன் என்று தான் நித்திலனுக்கு புரியவில்லை.
எதுவாக இருந்தாலும் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு அவளை ஸ்டேஷனில் கொண்டு வந்து விட்டவன், அவளுக்குரிய பெட்டியில் ஏறியவுடன் அவள்தான் நீ போ ண்ணா, நேரம் இருக்கு, நான் பாத்துக்குறேன்,
“அண்ணிய பாத்துக்கோ” என்று சொல்லிவிட்டு இவள் ஏறிக்கொண்டாள், அவனும் சிரித்தபடியே போக., ட்ரெயினில் வேறு இடத்தில் அமர்ந்திருந்து இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தனுக்கோ.,
இவ அண்ணன் ஏன் வெட்கப்படுறாங்க என்று யோசித்து சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தான்.
இவள் வந்து அவர்களுக்கான சீட்டில் அமர்ந்த பிறகு அருகே அமர்ந்தவன், “அப்படி என்ன சொன்ன உங்க அண்ணன் வெட்கப் பட்டு போறாங்க” என்று கேட்டான்.
இவளோ “இல்ல ஒன்பதாவது மாசம் தான் வளைகாப்பு வைக்கணும்னு சொன்னேன்ல” என்று சொல்லவும்.,
“ஏன் அப்படி”, என்றான்.
“அண்ணிக்கு நேத்து ஸ்கேன் பண்ணும் போது சில விஷயங்கள் சீனியர் டாக்டர் சொன்னாங்க., நானும் கெஸ் பண்ணேன், அதனாலதான் ஒன்பதாவது மாசம் வரைக்கும் அங்கே இருக்க சொன்னது, அண்ணி கிட்ட சொல்லிட்டேன்”, என்று சொல்லி இவள் சொல்ல.,
அவனும் “இத உங்க அண்ணன்ட்ட வேற சொன்னியா நீனு”, என்று கேட்டான்.
“அண்ணன் கிட்ட சொல்லல, அண்ணி கிட்ட தான் சொன்னேன்., அண்ணி நேத்து சொல்லியிருப்பாங்க ன்னு நினைக்கிறேன், அதான் அண்ணிய பாத்துக்கோ சொன்னா., அண்ணனுக்கு வெட்கம் வந்துருச்சு., நான் என்ன செய்யறது”, என்று சொல்ல.
சிரித்தபடி அமர்ந்திருந்தவன், அவள் தோளில் கை போட்டு பிடித்தபடி அவளோடு பேசிக் கொண்டு இருந்தான். அவர்களுக்கான அந்தப் பயணம் அழகாக தொடங்கியது.