“தெரியலைமா, அவங்க வீட்ல என்ன சொல்றாங்கன்னு தெரியலையே”, என்று பாட்டி சொல்ல.,
“வளைகாப்பு எப்பன்னு சொல்லுங்க, அதுக்கு முன்னாடி அவரை கொண்டு வந்து உங்க முன்னாடி நிறுத்துறேன்”, என்று சொல்லவும்.
“ஏழு மாசமா இருந்தாலும், இன்னும் மூணு மாசம் இருக்கே”, என்று தாத்தா சொல்ல.,
“ஏன் தாத்தா, மூன்று மாசம் எனக்கு அவர் கூட பழகுவதற்கான டைம் ன்னு நினைச்சுக்கோங்களேன்”, என்று சொல்லவும்.,
பாட்டியோ, “நீ நெஜமாதான் சொல்லுறீயா, இல்ல எங்களை ஏமாத்துறீயா”, என்று கேட்டார்.
“பாட்டி இது ஏப்ரல் 1-ம் தேதி கூட இல்ல, அப்புறம் எதுக்கு நான் ஏமாத்த போறேன்., நிஜம் நிஜம் நிஜம்”, என்று சொல்லவும்.,
“நீ உன் போனை கொண்டா போட்டோ பார்க்குறேன்”, என்று சொல்லவும்.
“அதெல்லாம் தர முடியாது”, என்று மறைத்து வைக்க.,
“அப்போ போட்டோ இருக்கு உன் செல்லுல”, என்று சொல்லவும்.
“கண்டிப்பா இருக்கு, ஆனா இப்ப காட்ட மாட்டேன்., அப்புறமா காட்டுறேன்”, என்று சொல்லி சிரித்தாள்.
“உனக்கு கொஞ்சமாவது பயம் இருக்காடி, அம்மா அப்பா தாத்தா பாட்டி அண்ணன் அண்ணி அத்தனை பேர் இருக்கோம்., எவ்வளவு ஹாயா நான் செலக்ட் பண்ணிட்டேன்னு சொல்ற”, என்றார்.
“மா நீங்க தானம்மா செலக்ட் பண்ணிட்டியா, பண்ணிட்டியான்னு கேட்டுட்டே இருந்தீங்க., இப்ப செலக்ட் பண்ணினாலும் குற்றம் சொல்றீங்க”, என்று சொல்லவும்.,
அவள் அம்மா தான்., “ஐயோ நீ சும்மா சொல்லுற ன்னு நினைச்சேன் டி., நான் வேற மாப்பிள்ளை வீட்டுக்கு சொல்லி எல்லாம் வச்சுட்டேன்., வளைகாப்போட தான் பொண்ணு பாக்க வர சொல்லலாம் நினைச்சிருந்தேன்., இப்படி சொல்லிட்டியே”, என்று சொல்லவும்.,
“இப்ப நான் சொன்னதுக்கு சந்தோஷப்படுறீங்களா, இல்ல வருத்தப்படுறீங்களா அத சொல்லுங்க”, என்று கேட்டாள்.
“எங்க வருத்தப்பட, சரி எப்படியோ கூட்டிட்டு வா”, என்று சொல்லவும்.
அவர்கள் முன்பு வைத்தே அதே போட்டோவை தன்னுடைய வாட்ஸ் அப் டிபி ஆக வைத்தாள்.
ஏனென்றால் அவன் கை கீழே இருக்க., இவள் கை தான் மேலே இருந்தது. அதனால் இவள் கையை அடையாளம் காண முடியும்., அவன் கைவிரல் இவளை பிடித்திருந்தது., அவன் நகம் மற்றும் விரல்களின் பாதி அளவு மட்டுமே இவள் கையில் தெரிய., அடையாளம் கண்டு பிடிக்க முடியாது போல இருந்தது.,
பாட்டியோ, “நெஜமாதான் சொல்றியா”, என்றார்.
“கன்ஃபார்மா இந்த பையன் தான் பாட்டி “, என்றாள்.
உடனே தாத்தா தான், “கேட்டா தப்பா நினைக்க மாட்டியே” என்றார்.
“என்ன தாத்தா”, என்றாள். சாப்பிட்டுக் கொண்டே.,
“நீ சொன்ன வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கிறது, கண்ணுல ஒரு ஸ்பார்க் வர்றது, லப் டப் பு” என்று சொல்ல,
“எக்ஸாக்டா வந்துச்சு தாத்தா, வந்துச்சு., நான் கூட ஃபர்ஸ்ட் வரலையே வரலையே ன்னு நினைச்சேன்., அதுக்கப்புறம் வந்துருச்சு தாத்தா, அதனால தான் கன்ஃபார்மா இவர் தான்னு நம்புனேன்”, என்று சொல்ல.,
“இவ பைத்தியமா, இவ பேசுறதெல்லாம் கேக்குற நம்ம பைத்தியமா”, என்று அவள் அம்மா கேட்க.,
இவளோ “ஒருத்தரும் பைத்தியம் இல்ல., பேசாம இருங்க., நான் தான் இப்ப அவர் மேல பைத்தியமா இருக்கேன் போங்க”, என்று சொல்ல.,
“அதுதாண்டி, உன்ன பைத்தியம் ஆக்கினவன் யாரு”, என்று கேட்க.,
“அதெல்லாம் அப்புறம் சொல்றேன்” என்று சாப்பாடு தட்டை எடுத்துக் கொண்டு கிச்சனுக்கு செல்ல எழுந்தவள், மீண்டும் சோபாவில் வைத்த போனை எடுத்து கையில் தூக்கி கொண்டே சென்றாள்.
அதன் பிறகு அவள் தோழியை பார்க்க சென்றவள்., மீண்டும் வந்து கிளம்பத் தொடங்கினாள்.
அடுத்த மாதம் வருவதாக சொல்லவும், சரிகா தான் அருகில் வந்தவள்., “அண்ணி சொல்றேன் தப்பா நினைக்க மாட்டீங்களே”, என்றாள்.
“சொல்லுங்க” என்றாள்.
” இல்ல நீங்க பார்த்திருக்கேன்னு சொன்னிங்க, புடிச்சிருக்குன்னு சொன்னீங்க, எல்லாம் ஓகே ஆனா அவங்க எப்படி டைப்ன்னு தெரியணும் இல்ல., நீங்க வீட்டுக்கு சொன்னாதான அவங்க விசாரிப்பாங்க., அதுதான்”, என்று மெதுவாக சொல்லவும்.
“கண்டிப்பா சொல்லிருவேன் அண்ணி., நான் அவர்கிட்ட எனக்கு புடிச்சிருக்குன்னு சொல்லி கொஞ்ச நாள் கழிச்சு தான் அவரும் ஓகே சொன்னாரு”., வீட்டில் எல்லோரும் கேட்டுக் கொண்டுதான் இருந்தனர். “அவர் எனக்கு ஓகே சொல்லி கரெக்டா 15 டேஸ்ல நீங்க பிரக்னென்ட் கிற நியூஸ் கிடைச்சுச்சு, அப்போ எனக்கு வரப்போறவர் ராசியானவர் தானே”, என்று சொல்ல.,
அவளோ, “அண்ணி நீங்க இதெல்லாம் பார்ப்பிங்களா” என்று கேட்டாள்.
“அப்படின்னு இல்ல, ஒரு ஹேப்பினஸ் வரும் போது கூடவே எல்லா சந்தோஷத்தையும் கூட்டிட்டு வருது, அப்படின்னு சொல்லியாச்சுன்னா கண்டிப்பா நமக்கு கிடைத்தது, நமக்கு நல்லதுக்கு தான் அப்படின்னு நினைக்கணும் இல்லையா., அது மட்டும் இல்லாம இது நான் ரொம்ப யோசிச்சு., எனக்கு திரும்பத் திரும்ப இவங்கதான் ஓகே அப்படின்னு மனசுல பதிஞ்சதுக்கு அப்புறம் தான்., நான் போய் சொல்லவே செஞ்சேன்., எல்லாரும் இருக்கீங்க எல்லார் முன்னாடியும் தான் சொல்றேன்., நான் தான் அவங்க கிட்ட போய் சொன்னேன்., அவங்களும் உடனே எல்லாம் டிசைட் பண்ணல., அவங்களும் யோசிச்சு தான் என்கிட்ட சொன்னாங்க., ஏன்னா அவங்களுக்கும் என்னை பிடிக்கும்”, என்று சொல்லவும்.,
“நீ போடுற புதிர் எல்லாம் பார்த்தா, எனக்கு பக்கு பக்குன்னு இருக்கே., எந்த ஊருமா பையன்”, என்றார்.
“எல்லாம் நம்ம ஊரு தான், நம்ம பையன் தான் பாட்டி”, என்று சொல்லிவிட்டு கிளம்பவும்.
அவள் அண்ணன் தான் “இரு நானே ரயில்வே ஸ்டேஷன்ல கொண்டு வந்து விடுறேன்”, என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
“ஏன் அப்படியே போயிருவேன்னு பயப்படுறியோ., அதெல்லாம் போகமாட்டேன்., வா வா, நீ தான் கொண்டு வந்து விடணும், நான் இதுக்கெல்லாம் அமோன்ட் ஸ்பென்ட் பண்ண முடியாது., எனக்கு கல்யாணம் ரெண்டு வீட்டு சம்மதத்தோட கிராண்ட் ஆ நடக்கணும்., சும்மா அப்படி எல்லாம் போய் எல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன், அதனால பயப்படாத என்ன”, என்று சொல்லி அண்ணன் தோளை தட்டி சொல்ல.,
அவனும் , “நீ பண்ண மாட்டேன்னு எனக்கும் தெரியுமா வா”, என்று சொன்னவன் காரில் செல்லும் போது “நிஜமாவே வா பாப்பா, உனக்கு புடிச்சிருக்கா”, என்று கேட்டான்.
“ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு அண்ணா”, என்று சொல்லவும்.,
“யாருன்னு சொல்ல மாட்டியா”, என்றான் .
“அண்ணி வளைகாப்பு க்கு முன்னாடி சொல்றேன்”, என்று அதே டயலாக்கை சொல்லிவிட்டு நிறுத்திவிட்டாள்.
அதன் பிறகு அவனும் எதுவும் கேட்கவில்லை., மதுரை சென்று சேர்ந்த பிறகு அவனுக்கு அழைத்து சொன்னவள்., வீட்டில் இதை மட்டும் செஞ்சேன் என்று சொல்லி அவள் சொன்னதை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவனும் “உனக்கு சேட்டை ஜாஸ்தி தெரியுமா”, என்றான்
“இருக்கட்டும் இப்பவே சொல்லி வைப்போம் , வளைகாப்புக்கு முன்னாடி சொல்லிட்டேனா., அண்ணி வளகாப்பு முடிஞ்சு இங்க வரும்போது., இவங்க பேசி ஒரு முடிவு பண்ணட்டுமே”, என்றாள்.
அவனும் சிரித்தபடி, “நீ என்ன சொல்றியோ அது தான்., நீ இப்பவே வா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னாலும் நான் கல்யாணம் பண்ணிக்க ரெடி தான்”, என்று சொல்ல.,
“நீங்க ரெடி தான் ஆனா., நான் ரெடி இல்லை”, என்றாள்.
அதன் பிறகு வந்த வாரங்களில் அவன் வரும்போது எல்லாம் அவர்களுக்கான நேரங்கள் மொட்டை மாடியில் கழிய தொடங்கியது.