“அவங்களும் உங்க பையனும் ஒன்னு இல்ல சரியா., அவங்களுக்கு பட்ட அடியும் உங்க பையனுக்கு உள்ள முதுகுபிடிப்பும் ஒன்னு கிடையாது சரியா., எதுக்கெடுத்தாலும் போட்டிக்கு வராதீங்க., எது எதுல போட்டிக்கு வரணும்னு இல்லையா., நாளைக்கு அவர் ஒரு பொண்ண கூட்டிட்டு வந்தா, உங்க பையனும் கூட்டிட்டு வரட்டும் விட்ருவீங்க அப்படி தானே”, என்று கேட்கவும்.
இவனும் அதிர்ச்சியோடு அவளை பார்க்க., அவளோ வீட்டினரை பார்த்து தான் பேசிக் கொண்டிருந்தாள்.
“எது எதுல போட்டி போடணும்னு உங்களுக்கு தெரியாதா”, என்றாள்.
பாட்டியோ, “என்னமா சொல்ற” என்று கேட்க.,
“ஒரு எக்ஸாம்பிளுக்கு சொன்னேன் பாட்டி., எதுக்கெடுத்தாலும் அவனுக்கு பார்த்தா, அவனுக்கு பார்த்தானா. அவருக்கு கையில் அடிபட்டு ரத்தம் வந்துச்சு உடனே பார்த்தாச்சு., வேணும்னா ஒன்னும் பண்ணுங்க உங்க பையனுக்கு முதுகுல கத்தியால நாலு குத்து குத்துங்க, அல்லது கண்ணாடி எடுத்து நாலு இடத்துல கீறி விடுங்க, அதுக்கப்புறம் வந்து பார்க்கிறேன்”, என்று சொல்லவும்.,
” நீ டாக்டர் மாதிரியா பேசுத., இரக்கமே இல்லாம பேசுத”,என்று சொல்லவும்.
“ஹலோ எல்லா இடங்களிலும் இரக்கப்படனும்னு எனக்கு அவசியம் இல்லை சரியா., வேலைய பாத்துட்டு போங்க” என்று சொல்லி அவரை கையால் நகர்த்தி தள்ளிவிட்டு., காரில் ஏறி அமர்ந்தாள். அதற்குள் ராகவனும் சித்தார்த்தும் காரில் ஏறி அவர்களின் காரை கிளப்பி இருக்க., இவளும் அவர்கள் பின்னே சென்றாள்.
அங்கு ராகவனோ சிரித்துக்கொண்டே காரை ஓட்டினான். “டேய் அவ இன்னைக்கு ஒரு எக்ஸாம்பிளுக்கு சொன்னேன் பாட்டின்னு, உங்க பாட்டி வாயை அடைச்சுட்டாடா., இன்னைக்கு மட்டும் ஏதாவது ஏக்கு தப்பா ஆயிருந்துச்சு., உங்க சித்தி தலைகீழா நின்றிருக்கும்”, என்று சொல்ல.,
“இப்பவே பார்த்தில்லை, என்ன செஞ்சாங்கன்னு., அவ எனக்கு பார்த்தா அதுக்காக அவங்க பையனுக்கு பாக்கணும்னு , முதுகு புடிச்சிருக்குன்னு சொல்லுது பாரு”, என்றான்.
“சரி விடு விடு, அவங்க குணம் தெரிஞ்சதுதானே, பதிலுக்கு பதில் உங்க அம்மா கொடுக்கா விட்டாலும், நல்லா கொடுக்குது டா தங்கச்சி”, என்றான்.
“இவ வாயாலே சமாளிச்சுருவா, கோபம் வந்துச்சுனா எடுத்து விட்டுருவா ன்னு நினைக்கிறேன்”, என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான்.
“கொஞ்ச நேரத்தில் எல்லாரையும் பயங்காட்டிட்ட”, என்றான்.
“என்னமோ பார்த்துக்கலாம் ன்னு சொன்னீங்க”, என்று அவனிடம் சிரித்தபடி கேட்டாள்.
சற்று பேசிவிட்டு போனை கட் செய்தனர்.
மாலை சித்தர்த்தனும் ராகனும் வீட்டில் வந்து அமர்ந்திருக்க., இவளோ அதற்கு முன்பே மருத்துவமனையில் இருந்து திரும்பி இருந்தாள்.
பாட்டி தான் மேலே சித்தார்த்தின் அறைக்கு வந்தவர்.,அவளிடமும் வந்து பேசினார்.
“நீ அவ காலையில பேசினது தப்பா எடுத்துக்காதம்மா., எதுவும் சரிகா ட்ட சொல்லிறாத மா”, என்றார்.
“அதெல்லாம் சொல்ல மாட்டேன் பாட்டி, எனக்கு தெரியும்”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
மறுநாள் காலையில் அவர்கள் அவர்களிடத்திற்கு திரும்ப அவனுக்கு மருந்தை மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு, “வலி வந்தால் போடுங்கள்” என்று மட்டும் சொன்னாள்.
கைக்கு மருந்து மாற்றுவது எப்படி என்பதை ராகவனுக்கு சொல்லிக் கொடுத்தவள், “காயம் டிரையாகுற வரைக்கும் ஈரம் படாமல் பாத்துக்கோங்க”, என்று சொல்லியே அனுப்பினாள்.
அப்போது பாட்டியும் கூடவே இருந்தார்.
அவனும் ‘போன்ல பேசுறேன்’ என்று மெசேஜோடு கிளம்பினான். இவளும் அன்று காலையில் மருத்துவமனைக்கு சென்று விட்டாள்.
அதன் பிறகு நாட்கள் அதன் போக்கில் போக., அதற்கு அடுத்த ஒரு வாரத்தில் சரிகாவிற்கு நாள் தள்ளி போயிருப்பதாக அவள் பாட்டி இடம் இருந்து போன் வந்தது.
“அதுக்கு தான் டெஸ்ட் கிட் இருக்கிறதே பாட்டி., டெஸ்ட் போட்டு பாருங்க”, என்று சொன்னாள்.
“அதெல்லாம் போட்டு பார்த்துட்டாங்க, டாக்டர் செக்கப் போகனும், அதுக்கு தான் உனக்கு போன் பண்ணேன்”, என்றார்.
இவளுடைய சீனியர் டாக்டர் , ப்ராக்டிஸ் செய்த மருத்துவமனையின் பெயர் சொல்லி, ” நான் அப்பாயின்மென்ட் போட்டு வைக்கிறேன், நீங்க போங்க”, என்று சொன்னாள்.
“நீ வரலையா”, என்று பாட்டி கேட்டார்.
“நான் போன்ல கேட்டுக்குறேன், என்ன டீடெயில்ஸ்னு விசாரிக்கிறேன், நீங்க போயிட்டு வாங்க”, என்று அம்மாவிடமும் சொன்னவள்., அவள் அண்ணியிடமும் பேசிவிட்டு, அண்ணனிடமும் சொல்லியே வைத்தாள்.
இவளுடைய வேலை பற்றி தெரிந்ததால் அவர்களும் அதற்கு மேல் கட்டாயப்படுத்தவில்லை.
இங்கிருந்து பாட்டியும் சரிகாவின் அம்மா அப்பாவும் செல்ல., அனைவரும் சென்று அவளுக்கான முதல் செக்கப்பை முடித்து விட்டே வந்தனர்.
இவள் டாக்டரிடம் சொல்லி இருந்ததால், டாக்டரும் அவர்கள் செக்கப்பிற்கு சென்ற போது இவளுக்கு அழைத்து சரிகாவின் நலனை எல்லாம் சொல்லி இருந்தார்.
அதைக் கேட்டுக் கொண்டவள், அதன்பிறகு சரிகாவிற்கும் போன் செய்து பேசுவதற்கு தவறவில்லை., எப்படி எப்படி பார்த்துக்கணும் என்பதை ஒரு மருத்துவராக அறிவுரை சொன்னாலும், அவள் உடல் நலத்தையும் விசாரித்து விட்டே வைத்தாள்.
சரிகாவின் செக்கப்பிற்காக அவர்கள் ஊருக்கு சென்ற நேரத்தில், இங்கு வந்திருந்த சித்து கை ஓரளவுக்கு சரியாகி இருக்க., வந்தவன் அவளை காலையில் கிளம்பி மீனாட்சியம்மன் கோயிலுக்கு வர சொல்லிவிட்டு இவனும் சென்றான்.
இவ்வளோ காரை அவனுக்கு தெரிந்த இடத்தில் பார்க் செய்துவிட்டு, அவனோடு கோயிலுக்கு சென்றாள்.
அவள் கேட்டது போலவே, கோயில் வாசலில் பூ வாங்கி முதல் முதலாக இருவரும் பார்த்துக் கொண்ட இடத்தில் வைத்தே, அவள் கையில் பூவை கொடுத்தான்.
பின்பு இருவரும் கடவுளை வணங்கி விட்டு வெளியே வந்தவர்கள், ஒரே காரில் பயணிக்க, முதல் முதலாக அவள் கையை தன் கையோடு கோர்த்துக் கொண்டான்.
கோர்த்து இருந்த கைகளை பார்த்துக் கொண்டே இருந்தவள், தனது செல்லில் இருவர் கையும் கோர்த்திருப்பதை போட்டோ எடுத்தவள், “நான் சீக்கிரமா வீட்டுக்கு இன்பார்ம் பண்ணி விடுவேன்” என்று சொன்னாள் .
“ஏன் சொல்ல போறியா”, என்றான்.
“யாருன்னு சொல்ல மாட்டேன், ஆனா சொல்ல போறேன்., அதுக்கு தான் இந்த போட்டோ”, என்று சொன்னவள்,
அந்த புகைப்படமும் அதன் பிறகு இருவரது வலது கை சுண்டு விரலும் கோர்த்து இருப்பது போல வைத்து அதையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டவள், இரண்டையும் சேர்த்து பார்த்தாள்.
அவனிடம் காட்ட , அவனும் “ஏய் அழகா இருக்கு, எனக்கும் அனுப்பி வை”, என்றான்.
இருவரும் சிறு சிறு சந்தோஷங்களையும், காதல் காலங்களில் ஒவ்வொரு நிமிடமும் எதையும் தவறவிடக்கூடாது என்று பேசி வைத்திருந்தனர்.
அது போல அதன் பிறகு வந்த நாட்களில், அவள் ஆசைப்படி கோயில்களுக்கு எல்லாம் சென்றனர்.
ராகவன் குடும்பமும் வர அவர்களோடு சென்று விட்டு வந்தனர். பின்பு அவளை அழைத்துக் கொண்டு அவ்வப்போது மதுரையை சுற்றி வருவது அவனுக்கும் வேலையாயிற்று.
அவன் வரும்போதெல்லாம் இவளுடைய வேலை நேரத்தை பொறுத்தே அவளை அழைத்துக் கொண்டு செல்வான்.
அவனோடு சுற்றுவதற்காக, இவர்கள் வேலையில் எல்லாம் எந்த குறையும் வைக்கவில்லை., தனது பிராக்டிசை சரியாக முடிக்க வேண்டும் என்பதிலும் அவளுக்கு தீவிரமான எண்ணம் இருந்தது.
அவனும் “உன்னுடைய வேலை உனக்கு ரொம்ப முக்கியம் அதனால அதை எந்த வகையிலும் மிஸ் பண்ணிட கூடாது., வேலை நேரம் போக மீதி நேரம் நம்மக்கான டைம்”, என்று சொல்லிக் கொள்வான்.
முதல் மூன்று மாதங்கள் இருவரும் சாதாரணமாக ஃபோனில் பேசிக்கொள்ள., அதன்பிறகு வீடியோ காலில் பார்க்கத் தொடங்கி இருந்தனர்.
இவள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சென்னை சென்று வருவதையும் வழக்கமாக வைத்திருந்தாள்.
ஜிஹெச் ட்ரைனிங் ஆரம்பித்து நான்கு மாதங்கள் முடிந்திருந்தன, இப்போது அவள் அண்ணிக்கு 3 மாதம் முடிந்து நான்காவது மாதம் நடந்து கொண்டிருந்தது. இன்னும் மூன்று மாதத்தில் வளைகாப்பு எனும் சமயத்தில் தான் இவள் அந்த முறை சென்னை சென்றிருக்கும் போது வேண்டுமென்றே ஃபேமிலி குரூப்பில் இருவர் கையும் சேர்ந்திருப்பது போன்ற போட்டோவை அனுப்பி வைத்தாள்.
அனுப்பி வைத்துவிட்டு அமைதியாக இருந்து கொண்டாள்.
பார்த்தவர்கள் இவளிடம் ‘எப்படி கேட்பது’ என்று யோசனையோடு இருந்தனர்.
பாட்டி தான் “நான் கேட்கேன்” என்று அவள் கிளம்பி வருவதற்கு முன் பேசிக்கொண்டிருந்தனர்.