“தலையிடுறதுக்கு ரைட்ஸ் கிடையாது, ஆனால் அது அவங்க வீட்ல சொல்ற விதமா சொல்லி பிரச்சனையை கிரியேட் பண்ணாங்கனா”, என்று சொன்னான்.
“நான் பாத்துக்குறேன்”, என்று சொல்லி சிரித்தவள் “உங்க பிரண்ட் வாயை திறந்து சொல்லவே மாட்டாரா”, என்றாள்.
“அவன் சொல்லுவான், நீ தான் அவன் ட்ட பேசி வாயிலிருந்து வாங்கணும்”, என்றான்.
“பாத்துக்கலாம் அண்ணா., முயற்சி பண்ணுவோம்”, என்று சொல்லி விட்டு “அண்ணா எனக்கு தெரிஞ்சதா நானும் காட்டிக்க மாட்டேன், நீங்க என்கிட்ட சொன்னதா காட்டிக்காதீங்க”, என்று சொல்லிவிட்டு “பாத்துக்குறேன்” என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்று விட்டாள்.
ராகவனும் சித்தார்த்தை பார்த்துவிட்டு கீழே சென்று பாட்டி தாத்தாவிடம் பேசி விட்டே மாடியில் அமர்ந்தான்.
அதற்குள் சித்துவும் முழித்து விட, சித்து அம்மா தான் இருவருக்கும் உணவு எடுத்துக் கொண்டு மாடிக்கு வந்தவர், உணவை கொடுக்க.,
இவனோ “ஏன் கீழ வச்சா நான் வந்து கீழே சாப்பிட மாட்டேனா”, என்று கோபமாக பேச.,
ராகவன் தான், “டேய்” என்று அதட்டினான்.
சித்து அம்மாவோ, “இருக்கட்டும் தம்பி அவனுக்கு இருக்கிற கோபம் தெரியும், ஆனா நான் ஒன்னும் பண்ண முடியாது”, என்று சொல்லிவிட்டு “சாப்பிடுங்க” என்று சொன்னவர்,
“நான் எடுத்து தரவா டா”, என்று சித்தார்த்திடம் கேட்க.,
அவனுக்கு வலது கையில் அடிபட்டு இருப்பதால் பார்த்தவன், “வேண்டாம் நானே சாப்பிடுகிறேன்”, என்று சொல்ல.,
ராகவன் தான், “நீங்க எடுத்து கொடுங்க ம்மா, அவன் வாங்குவான்”, என்று சொல்லவும்.
அவர்தான் இட்லி ஊட்டி விட்டார். இரண்டு இட்லிகளை மட்டுமே வாங்கிக் கொண்டவன்.,
“போதும் ம்மா”, என்று சொல்லிவிட்டான் அதன் பிறகு அவனுக்குரிய மருந்துகளை எடுத்துக்கொண்டு படுத்து விட்டான்.
சரியான தூக்கம் இல்லை, வலி இருந்தது, லேசாக காய்ச்சலும் வர மணி 11 1/2 கடந்திருக்க, ‘யாரை அழைக்கலாம்’ என்று யோசித்து விட்டு சித்தார்த் வீட்டிற்குள் செல்லும் வழியில் கால் எடுத்து வைக்க., மாடியில் இருந்த ஹாலில் ராகவனின் அம்மாவும் பாட்டியும் படுத்திருந்தனர்.
இவன் தான், “ஏன் நீங்க இங்கு படுத்து இருக்கீங்க” என்று கேட்டான்.
“ஏதும் அவசரம் னா, கீழே இறங்கி வரணுமேப்பா, அது தான் நீங்க சொன்னா, நான் போய் எடுத்துட்டு வரேன்”, என்று சொல்ல..,
“அவனுக்கு லேசா காய்ச்சல் இருக்குமா., அந்த பொண்ண கூப்பிடலாம்னு யோசிச்சேன்., ஆனா நான் கூப்பிடறத விட நீங்க யாராவது கூப்பிட்டீங்கன்னா”, என்று சொல்ல.,
பாட்டி தான், “நான் போய் கூப்பிடுகிறேன் பா, காய்ச்சல் ரொம்பவா இருக்கு”, என்று கேட்க.,
“இல்லை லேசான சுடு தான் இருக்கு, ஆனாலும் மாத்திரை கொடுத்துட்டோம்னா., நல்லது தானே ன்னு யோசிச்சேன்”, என்றான்.
பாட்டி சென்று கதவை தட்டினார்., எழுந்து வந்தவள், “என்ன ஆச்சு பாட்டி”, என்று கேட்டாள்.
“அவனுக்கு லேசா காய்ச்சல் இருக்குமா., கொஞ்சம் வரியா”, என்று கேட்க.,
“இதோ வரேன்” என்று சொல்லி தலை முடியை கொண்டைப் போட்டுக் கொண்டவள்., தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு அங்கு சென்றவளுக்கு அவனைப் பார்க்க லேசான காய்ச்சல் இருந்தாலும் வலியில் தூக்கம் வராமல் அமர்ந்திருந்தான்.
இவளை பார்த்தவுடன் “இப்ப எதுக்கு இவள கூப்பிட்டீங்க”, என்று பாட்டியிடம் சொன்னான்.
பாட்டியோ “டேய்” என்று சத்தம் போட்டார்.
“நீ போ, எனக்கு ஒன்னும் இல்ல”, என்றான்.
அவளோ, “அத நான் பார்த்து சொல்றேன் கேளுங்க”, என்று சொல்லிவிட்டு அவனுக்கு டெம்பரேச்சர் பார்த்துவிட்டு, வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த தெர்மாமீட்டரை அங்கேயே வைத்துவிட்டு.,
“அண்ணா பீவர் இருக்கு, இப்ப மருந்து கொடுத்துடுறேன், ஒருவேளை இதுக்கு மேல ஃபீவர் இருந்துச்சுன்னா., டெம்பரேச்சர் பார்த்துக்கோங்க”, என்று சொல்லிவிட்டு.,
நீங்க படுங்க என்று சொல்லி அவனை படுக்க சொல்லிவிட்டு, அவனுக்கு மருத்துவ முறைகளை மேற்கொள்ள தொடங்கினாள்.
மாத்திரையை மட்டும் கொடுத்து., பின்பு ஈரத்துணியை நெற்றியில் போட்டு அவனது காய்ச்சல் குறைகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.,
ஒரு மணி நேரம் சென்று மீண்டும் அவனைப் பார்க்க, அப்போது காய்ச்சல் நன்றாக குறைந்து இருந்தது.,
“ஓகேவா இருக்கேன் தூங்கிடுவேன்”, என்று சொன்னான்.
“பெயின் குறைந்து இருக்கா”, என்று அவனைப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.
தலை மட்டும் அசைக்க., ராகவன் தான், “ஓகே மா இனிமேல் தூங்கிடுவான்”, என்று சொல்லவும்.,
“என்ன சாப்டீங்க”, என்றாள்.
சித்தார்த் அம்மா தான்., “ரெண்டு இட்லி தாமா சாப்பிட்டான்”, என்று சொல்ல.,
“அது எப்படி பத்தும், எவ்வளவு டேப்லெட் போடுறாங்க”, என்று சொன்னவள்.,
“இப்போ ஒரு டம்ளர் பால் குடிச்சிட்டு படுங்க”, என்று சொல்லும் போது..,
பாட்டி தான், “நான் கீழே போய் சூடு பண்ணிட்டு வர்றேன்”, என்று சொல்ல..,
“இருங்க இருங்க., நான் எடுத்துட்டு வர்றேன் பொறுங்க”, என்று சொல்லிவிட்டு பாட்டியை அழைத்துக் கொண்டே சென்றவள்.,
பாலை நன்றாக சூடு செய்து, மிதமான சூட்டிற்கு ஆத்தி இனிப்பிற்காக தேனை கலந்தவள்., பாட்டியிடம் கொடுத்து விட..,
பாட்டியோ “ஏன்மா”, என்று கேட்டார்.
“தேன் போட்டு பால் குடிச்சா நல்ல தூக்கம் வரும் பாட்டி., அதனால அவங்க தூங்கட்டும்”, என்று சொல்லவும்.,
“தேன் நிறைய உத்தினயே மா”, என்றார்.
“அப்பதான் பாட்டி நல்ல தூக்கம் வரும்., நல்ல தூங்குவாங்க”, என்று சொல்லி பாட்டியிடம் கொடுத்து விட்டு பின்னாடியே அவளும் கிச்சனை சுத்தம் செய்து விட்டு வர.,
பாட்டி தான் அங்கு வந்து சொல்லிக் கொடுத்தார்., “பால்ல நிறைய தேனூத்தி இருக்குடா, பேத்தி பொண்ணு., அப்படி னா நல்லா தூக்கம் வருமாம்”, என்று சொல்லவும்.,
அவன் அவளை நிமிர்ந்து பார்க்க, “மருந்தா கலந்தேன், தேன் தான் கலந்தேன்”, என்று சொல்லவும்.,
அவனும் ராகவனை திரும்பி பார்க்க., ராகவன் யாரை பார்த்து சிரிப்பது என்று தெரியாமல் தலையை ஆட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.
பாட்டிக்கும் சித்தார்த்தின் அம்மாவிற்கும் எதுவும் புரியாமல் இருந்தாலும்., “தேன் தானடா குடிச்சிட்டு தூங்கு”, என்று சொன்னார்.
அவனும் அமைதியாக குடித்துவிட்டு டம்ளரை கொடுக்க.,
அவள் டம்ளரை வாங்கிக் கொண்டு நகலவும்., ராகவன் தான் “உடனே கிளம்புற” என்று சொல்ல.,
“நான் இதை வாங்கிட்டு போக தான் வந்தேன்”., என்று கிண்டலாக சொல்லிவிட்டு செல்ல.,
பாட்டியோ சிரித்துக்கொண்டே., “சரி நாங்க அங்க தான் படுத்து இருக்கோம் பா., எதுவும் வேண்டும் னா கூப்பிடு”, என்று சொல்லிவிட்டு சென்றார்.
ராகவன் தான், சித்து விடம் “என்னடா ஏதாவது ஒன்னு சொல்லேன்., அந்த பொண்ணோட எதிர்பார்ப்பு உனக்கு புரியலையா”, என்று கேட்டான்.
இவனோ, “இந்த வீட்ல ஒரு பெரிய அரசியலே ஓடுது டா., அதுக்குள்ள அவளையும் சேர்த்து இழுத்து விட சொல்றியா”, என்று கேட்டான்.
“அந்த அரசியலை சமாளிக்க அவளுக்கு தெரியுமா, அப்படிங்கிறது உனக்கு தெரியுமா., ஒருவேளை அவ பண்றதுல உங்க சித்திய மாட்டி விட்டா., என்னடா பண்ணுவ”, என்று கேட்டான்.
முதல் முதலாக ராகவனை கேள்வியாக பார்த்தான்., “நீ முதல்ல பேசி பாரு., அதுக்கு அப்புறமா பதில் சொல்லு”, என்று சொல்லவும்.,
யோசனையோடு படுத்தே இருந்தவன், சற்று நேரத்திற்கெல்லாம் உறங்கிப் போனான்.,
விடிவிளக்கு எரிய விட்டுவிட்டு., கதவை எல்லாம் சாத்திவிட்டு அவனுக்கு அருகிலேயே படுத்த ராகவனும்.
‘ரெண்டு பேரும் நல்லா இருந்தா சரி’, என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
இருவரும் மனம் விட்டு பேசிக்கொள்வார்களா என்ற எண்ணமும் இருந்தது., ‘அவள் பேசுவாள், இவன் பேசுவானா’, என்ற எதிர்பார்ப்பு மட்டுமே ராகவனுக்கு அதிகமாக இருந்தது.