“குடும்பத்தை பிரிக்கிறான் பாருங்க அத்தை”, என்று மாமியாரிடம் கம்ப்ளைன்ட் செய்யும் போது தான் கையில் ரத்தம் வடிவதையே பார்த்தனர்.
சித்தார்த்தின் அம்மா தான் “சித்து”, என்று அவன் கையைப் பிடிக்க வர,
அதன் பிறகு தான் வலியை உணர்ந்தவன், “விடுங்கம்மா வலிக்குது”, என்றான்.
ரத்தம் வடிவதை பார்த்த பிறகு கையில் கண்ணாடி குத்தி கிழித்து இருக்க, போட்டோவும் விழுந்து உடைந்து இருந்தது,
அங்கு நடந்த சண்டையில் போட்டோ விழுந்ததை முதலில் கவனித்தாலும், அவன் கையை கிழித்ததை யாரும் கவனித்திருக்கவில்லை.
ரத்தம் கொட்டுவதை பார்த்தவுடன், “ஐயோ டாக்டர் கிட்ட போலாம்”, என்று சொல்லி கடைசி சித்தப்பாவும் அவன் அப்பாவும் துரிதப்படுத்த.,
இரண்டாவது சித்தப்பாவோ, போய் அவர் மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
“உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை பார்க்க, அவனுக்குள்ளது பத்தி பேச உனக்கு என்ன இருக்கு, உங்க அண்ணன் பொண்ண உன் மகனுக்கு பேசு., உன் பிள்ளை இன்ஜினியரிங் படித்து இருக்கானா, உன் பிள்ளைக்கு வேற பொண்ணு பார்ப்ப னா, அவனும் தான் படிச்சிருக்கான்., அவன் என்ன படிக்காமலா இருக்கான்”., என்றார்.
“அவன் ஹோட்டல் பிசினஸ் தான பண்ணுறான், என் மகன் வெளியே கம்பெனில வேலை பார்க்கிறான்”, என்றார்.
“இந்த மாதிரி பேச்சு வச்சுக்காத, நீ தான் இப்போ குடும்பத்தை பிரிச்சிட்டு இருக்க”, என்று சொல்லி அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க,
இங்கோ கையில் ரத்தம் வடிய இருந்தவனை., “வா டாக்டர் கிட்ட போலாம்”, என்று அழைத்தார்.
“ஒன்னும் செய்யாது மா விடுங்க, ஒரு துணியை நனைச்சு எடுத்துட்டு வாங்க”, என்று இவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே.,
வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது, பாட்டி தான் வேகமாக சென்று காரில் இருந்து இறங்கிய அனாமிகாவை,
“அம்மாடி பேத்தி பொண்ணு., கொஞ்சம் வா மா இவனுக்கு கையில அடிபட்டுட்டு”, என்று அழைக்க,
அவளோ “இந்தா வரேன் பாட்டி”, என்று சொல்லி தன் காரில் இருந்த ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்துக்கொண்டு வேகமாகச் சென்றாள்.
வீட்டிற்குள் சென்று அவள் பார்க்கும் போது சித்தார்த்துக்கு அடிபட்டு இருப்பதை பார்த்தவள்.,
‘இவன் எப்ப வந்தான்’ என்று மனதிற்குள் நினைத்தாலும் கையில் இருந்து ரத்தம் வடிவதை பார்த்தவுடன் மனம் பதறியது.
அவன் அருகில் சென்றவள், சேலையை இழுத்து சொறுகிய படி, சித்தார்த்த அம்மாவிடம், “அத்த கொஞ்சம் ஹாட் வாட்டர், ஐஸ் இரண்டும் கொண்டு வாங்க, அதோட ஒரு துணியை எடுத்துட்டு வாங்க”, என்று சொன்னாள்.
அவன் சோஃபாவில் அமர்ந்திருக்க, அவன் காலுக்கு அருகில் முட்டி போட்டு அமர்ந்தாள்,
அவன் கையைப் பிடிக்க போக., அவன் கையை இழுத்து கொள்ள, அப்படியே வலுக்கட்டாயமாக அவன் கையை தன்னை நோக்கி இழுத்து, அவர்கள் கொண்டு வந்த தண்ணீரைத் தொட்டு கையை துடைத்து விட்டாள்., ஐஸ் வைத்து இரத்ததை நிறுத்தினாள்.,
பின் கண்ணாடி ஏதும் இருக்கிறதா என்று பார்த்தவள், பிறகே மருந்தை வைத்து கட்டினாள், அவன் அருகில் இருந்த சித்தார்த்தன் அப்பாவிடம், “மாமா ஒரு பேப்பரும் பென் னும் தாங்க, மருந்து எழுதி தர்றேன், இரண்டு இன்ஜெக்ஷன் மட்டும் வாங்கி தந்தீங்கன்னா, இப்போ போட்றலாம்., அல்லது ஹாஸ்பிடல் போறதா இருந்தாலும், போய் போட்டுட்டு வந்துருங்க, டேப்லெட்ஸ் எல்லாம் எழுதி தரேன் வாங்கிட்டு வந்துடுறீங்களா”, என்று கேட்டாள்.
“வாங்கிட்டு வர்றேன்மா”, என்றார்.
இவளோ அவன் கையில் மற்ற இடத்தில் வடிந்திருந்த ரத்தத்தை எல்லாம் ஈரத்துணியை வைத்து துடைத்து எடுத்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது ஏற்கனவே அவன் கையை அவளிடம் கொடுக்காமல் நகட்டும் போதே, இவள் இழுத்து பிடிக்க இவள் சேலையில் ஆங்காங்கே ரத்தம் தெளித்து இருந்தது.,
இப்போது துடைத்து எடுக்கும் போதும் சரி, கண்ணாடி இருக்கிறதா என்று பார்க்கும் போதும் சரி இவள் சேலையில் ஆங்காங்கே ரத்தம் தெளித்து இருந்தது.,
கணவனுடன் சண்டை போடுவதை இவள் வரும்போதே நிறுத்தி இருந்த சரிகாவின் அம்மா வேகமாக அருகே வந்து, “இங்க பாருமா, உன் சேலைகள் எல்லாம் ரத்தமாகுது”, என்று சொல்லவும்.
இவளோ “பாட்டி தயவு செய்து அவங்கள தள்ளிப் போக சொல்லுங்க, நான் கோவத்துல எதாவது திட்டிட போறேன்”, என்று சொல்லிவிட்டு,
“நான் இன்னைக்கு நல்ல மூடுல இருக்கேன், கெடுத்து விடாமல் போ சொல்லுங்க”, என்றவள்.
அவன் கையை சுத்தம் செய்து மருந்து வைப்பதிலும், சித்து அப்பாவிற்கு மருந்து எழுதிக் கொடுப்பதிலும் கவனமாக இருந்தாள்.
முதலில் கையை அவளிடம் தராமல் இழுத்தாலும் பின்பு அதையும் மீறி அவள் இழுத்து கையை துடைக்கும் போதே, அவன் வலியில் பல்லை கடித்து கட்டுப்படுத்திக் கொள்ள, அவனைப் பார்த்தபடியே கையை சுத்தம் செய்தவளுக்கு அவனின் வலி புரியதான் செய்தது.
சித்தார்த் அம்மா அவ்வப்போது தண்ணீர் ஐஸ் கட்டி என்று எடுத்துக் கொடுத்துக் கொண்டு தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.
அவன் அப்பாவோ, பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொண்டு வர சென்றார்.
அதே நேரத்தில் தான் மெதுவான குரலில் அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“கொஞ்சம் பொறுத்துக்கோங்க, இன்னைக்கு பெயின் இருக்க தான் செய்யும்., கிளாஸ் குத்தி இருக்கு, உள்ள ஏதும் பெயின் இருக்கா, எதுவும் நச்சுன்னு குத்துற மாதிரி பீல் பண்றீங்களா”, என்று சாதாரணமாக கேட்டாலும்,
அவள் குரல் கலங்கி இருப்பது அவனாலும் புரிந்து கொள்ள முடிந்தது., அவனிடமிருந்து பதில் இல்லை என்றவுடன் நிமிர்ந்து அவனைப் பார்க்க., அவனும் அப்போது அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
சித்தார்த்தின் அப்பா மருந்து வாங்கி வர, அவனுக்கு ஊசி போட தயார் செய்யும் போது தான்,
“கையில போடு”, என்று அவன் சொன்னான்.
இவளோ, “ஒரு ஊசி கையில் போட முடியாது, இடுப்புல தான் போடணும்”, என்று சொன்னாள்.
அவனும், “இல்ல வேண்டாம்” என்று சொல்ல.,
“ஒரு ஊசி கைல போடலாம், அப்படியே இருங்க, இடுப்புல போடுறத நான் டிரஸ்க்கு மேலயே போட்டு விடுறேன்”, என்று சொல்லியபடி சித்தார்த்தின் அப்பாவிடம் மாமா நான் இந்த ஊசியை போட்ட உடனே கொஞ்சம் நல்ல தேச்சு விடுங்க., பெயின் ஜாஸ்தியா இருக்கும்”, என்று சொல்லி ஊசியை போட்டுவிட்டு, கையில் போட கூடியதையும் போட்டு அவனுக்கு மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தாள்.
“இப்பவே போடுங்க”, என்று சொல்லி சித்தார்த் அம்மாவிடம் தண்ணீர் கொண்டு வரும்படி சொல்ல.,
அவனும் “இல்ல நான் அப்புறம் போடுறேன்”, என்று சொல்ல,
“இப்ப போடுங்க, பெயின் குறையணும்”, என்று சொன்னாள்.
மாத்திரை போட்டு தண்ணீரை குடித்தவன் சாய்ந்து அமர்ந்தான்.
சித்தார்த்தின் அம்மா தான் “ரூமுக்கு வாடா, வந்து டிரஸ் மாத்து”, என்று அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார். சித்தார்த்தின் அப்பாவும் உடன் சென்றார்.
“அவங்க தூங்கி எந்திரிக்கட்டும், பெயின் குறையனும், இல்ல னா கூப்பிடுங்க, நான் ரூம்ல தான் இருப்பேன் அத்தை”, என்று சொல்லியபடி தன்னறைக்கு செல்ல திரும்பியவளிடம் பாட்டி தான்.,
“ஒன்னும் செய்யாது இல்லம்மா”, என்று கேட்டார்.
“ஒன்னும் இல்ல பாட்டி பயப்படாதீங்க, ஆனா பெயின் இருக்கும், ரெண்டு மூணு இடத்தில வெட்டி இருக்கு., ஃபீவர் வரதுக்கு வாய்ப்பு இருக்கு., அதனால தான் இப்பவே மாத்திரை போட சொன்னேன், நீங்க அத்தை கிட்ட சொல்லிருங்க”, என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றவளோ.,
புடவையில் ஆங்காங்கே தெரிந்த ரத்த துளிகளை பார்த்தபடி கண்ணாடியில்., “காலைல தானடா சந்தோஷமா போனேன்., அதுக்குள்ள ஏன்டா இப்படி வந்து பிரச்சினையில நிக்கிறாரு., என்ன பிரச்சனைன்னு தெரியலையே., என்ன கோபம் தெரியலையே”, என்று புலம்பியவளுக்கு ‘என்னவாக இருக்கும்’ என்ற யோசனையே அதிகமாக இருந்தது.