“இவர் பேரன்களுக்குன்னு தனியா சமைச்சு கொடுக்கிறது எனக்கு தெரியாதா என்ன? ஒரு நேரத்துக்கு என்னமோ ரொம்பதான். நான் இல்லாமலா அவனுங்க வந்துட்டானுங்க” என்று பொறுமியபடி உண்டான் நல்லவன்.

“சாப்பிடும் போது கோபம் வேணாம். நான் தெரியாம சொல்லிட்டேன். நீ நல்லா சாப்பிடு” என்று குருமூர்த்தி அவர் உண்ணுவதை விட்டு, அவனுக்கு வைக்க,

“ப்பா. நீங்க சாப்பிடுங்க. நான் அவருக்கு பரிமாறுறேன்” என்றாள் சம்யுக்தா.

“நீ சரியா வைக்க மாட்ட. பாரு இந்த கிரேவி எங்க வைச்சிருக்க நீ?”

‘சரிதான் எனக்கேவா? எப்படியோ போங்க!’

‘எப்படியும் நைட் என்னை தூங்க விட மாட்டார். நல்லா சாப்பிட்டு தெம்பு ஏத்திக்க வேண்டியது தான்’ சம்யுக்தா உஷராகிவிட்டாள்.

குருமூர்த்தி உண்டு முடிக்கவும், மூவரும் டேபிளை விட்டு எழுந்தார்கள்.

கிட்சன் நிலைய பார்த்து, “கற்பகம் பாட்டி காலையில வந்து பார்த்து டென்சன் ஆக போறாங்க” என்றாள் சம்யுக்தா.

“நான் கிளீன் பண்ண சொல்லிடுறேன். நீங்க தூங்க போங்க” என்ற குருமூர்த்தி, “சம்யுக்தா. அவர் கோவத்துல ஸ்வீட் சாப்பிடலை. இந்தா எடுத்துட்டு போ” என்று பவுல் நிறைய கொடுத்தார் தந்தை.

இவ்வளுவா? பெண்ணுக்கு இப்போதே தொண்டை குழி ஏறி இறங்கியது.

“ப்பா. கொஞ்சம் எடுத்துட்டு”

“எடுத்து போம்மா”

“சரிப்பா” பெண் முனகி கொண்டு சென்றாள்.

“ஏசி ரிமோட் எங்க?” என்று கேட்டபடி வந்தான் சர்வாச்சார்யா.

குருமூர்த்தி எடுத்து கொடுத்தவர், “டேய் தம்பி” என்றார்.

சர்வாச்சார்யா நிற்க, “சாதிச்சுட்ட. சந்தோசம்” என்று அவனை அணைத்து கொண்டார்.

ம்ஹ்ம். ஒரு வழியாக வாழ்த்திவிட்டார்!

அவரின் அணைப்பு எல்லா நேரமும் கிடைத்து விடுவதில்லை.

சர்வாச்சார்யா கைகள் உயர்ந்து அவரை அணைத்து கொண்டது.

நல்லவன் முதுகை வருடி தட்டி கொடுத்தார் குருமூர்த்தி.

இருவரும் மற்றவருக்கு பலம்!  பலவீனமும் இவர்கள் தான்!

நன்றி கடனில் ஆரம்பித்த உறவு இது!

இப்போது என்னவாக இருக்கிறது என்று கேட்டால் தெரியாது!

மருமகனா? மகனா? வில்லனா? சண்டைக்காரனா? கோவக்காரனா? அடங்காதவனா?

இல்லை எல்லாமுமாக இருக்கிறானோ? குருமூர்த்தியின் ஆழ்ந்த அணைப்பு இதைத்தான் சொல்கிறது.

அன்று குருமூர்த்தியின் பின் நின்ற பிம்பம் அவரின் பயம்!. ஆம்!

சுபத்ராவை மனதில் கொண்டு இவர்கள் திருமணத்தை மறுத்தவர், சம்மதம் சொன்ன நேரம், அவரின் பயம் தான் பின் தங்கிவிட்டது.

நல்லது தானே!

மனிதர் தெம்பாக மருமகனை விடுவித்தவர், “என் பொண்ணு ஏசி இல்லாம இருப்பா” என்றார்.

“இந்த குளிர்ல என் பொண்டாட்டிக்கு ஏசி தேவைப்படாது” அடங்காதவன் சொல்ல,

“அப்புறம் எதுக்கு ஏசி ரிமோட்?”

“எனக்கு ஏசி வேண்டாமா? வைச்சுக்கோங்க உங்க ரிமோட்டை” உடனே எகிறினான்.

“டேய் தம்பி. ஏதோ கவனத்துல, இந்தா எடுத்திட்டு போ”  என்று குருமூர்த்தி சொல்ல, நல்லவனோ மடமடவென அறைக்குள் வந்துவிட்டான்.

“அப்பா. நான் பார்த்துகிறேன். நீங்க தூங்க போங்க” சம்யுக்தா தான் அவரிடம் இருந்து வாங்கி கொண்டாள்.

“சரிம்மா” என்றவர், மகளின் உச்சியில் கை வைத்து சென்றார் குருமூர்த்தி.

சம்யுக்தா தந்தை அறைக்கதவை அடைக்கும் வரை அங்கேயே நின்றவள், பின் ரகசிய அறைக்கு வேகமாக வந்தாள்.

“இனி என் அப்பாகிட்ட ஓவரா போனீங்க அவ்வளுதான் பார்த்துக்கோங்க” என்று பொரிய,

“நானாச்சு, அவராச்சு! நீ முதல்ல உன் கணக்கை தீர்க்கிற வழியை பாருடி என் பட்டர்!” என்று அவளை இழுத்து கீழே சரித்தான்.

“கட்டில் இருக்குல்ல”

“எனக்கு இங்க கீழே தான் வேணும்”

“முடியாது. உங்களுக்கென்ன நான் தானே தரையில் இருப்பேன்”

“அப்போ நான் தரையில் இருக்கேன்” என்று அப்படியே மனைவியை தனக்கு மேலே கொண்டு வந்தான்.

“எதுக்கு இந்த பிடிவாதம்?”

“இந்த ரூம் என்னை ரொம்ப சோதிச்சு இருக்கு. அதுக்கு தான் இந்த ரூமுக்கு பனிஷமென்ட் கொடுக்க போறேன்” என்றான் விதண்டாவாதக்காரன்.

“அய்யே! எல்லாத்துக்கும் ஒரு சப்பை காரணம்!”

“சரிடி அப்படியே வைச்சுக்கோ. எங்க ரசகுல்லா?”

“தூக்கி போட்டுட்டேன்” என்றவள் அவன் மேல் வாகாக படுத்து கொண்டாள்.

“ஹேய். உன்னை அவ்வளவு தான் சொல்லிட்டேன்” என்று மிரட்டியவன் கை என்னமோ அவளை வருடி கொண்டிருந்தது.

சம்யுக்தா கணவன் முகம் பார்த்திருக்க, “பார்வையிலே சாப்பிடாதடி. நான் உனக்கு தான். எடுத்துக்கோ” என்றான் கேடிப்பையன்.

“நாம இன்னும் ப்ரொபோஸ் பண்ணிக்கலை”

“பண்ணனுமா என்ன?”

“வேணாமா?”

“அதுக்கு நாம காதலிச்சு இருக்கணும்டி” உதடு சுளித்தான் நல்லவன்.

“என்னை இரண்டு முறை வேணாம் சொல்லிட்டு, ப்ரொபோஸ் வேற பண்றாங்க”

“என்னால தான் நமக்கு கல்யாணம் நடந்தது ஞாபகம் வைச்சுக்கோங்க” பெண் சிலிர்த்து கொண்டாள்.

“அடேங்கப்பா. இல்லாட்டி நடந்திருக்காது பாரு. போடி”

“போடா மலைமாடு”

“மலைமாடு சொல்லாத. அப்புறம் மாடு மாதிரி நானும்”

“ராஸ்கல் வாயை திறந்தா கொன்னுடுவேன்டா”

“அப்போ என் வாயை அடைச்சுக்கோ. அதுதான் உனக்கு நல்லது”

“எங்க போனாலும் சரியா வந்து நில்லு”

“ம்ஹ்ம்.  உன்கிட்ட தான் என் ஸ்டாப்பிங் இருக்கு”

சம்யுக்தா அவன்  மூக்கை பிடித்து ஆட்டியவள், அவன் கைகளை வருடி கொடுத்தாள்.

ஊட்டி வந்த நேரம் இயலாமையில் இதே தரையில் தான் கையை ஓங்கி, ஓங்கி அடித்தான் சர்வாச்சார்யா.

அன்று இவன் பேர் கூட தெரியாது. ஆனால் இன்றோ இவன்தான் அவளின் உலகமாக பிரம்மாண்டமாக அவளுள் நிறைந்து நிற்கிறான்.

சம்யுக்தா கணவன் உதடுகளை தானே எடுத்து கொண்டாள்.

சர்வாச்சார்யா அவளின் முத்தத்தை உயிர் வரை நிரப்பி கொண்டான்.

“பிள்ளைங்க பிறந்தும் குட்டி இடுப்பு தாண்டி!” என்று ஹஸ்கி குரலில் குறை படிக்க,

“உங்களுக்கும் கல்மனசு தான்” என்றாள் சம்யுக்தா.

“நான் என்ன அவங்களுக்கு?”

“ஷ்ஷ்ஷ்” சம்யுக்தா திரும்ப அவன் உதட்டை அவனிடம் இருந்து பிடுங்கி கொண்டாள்.

“கடிச்சா வைக்கிற? என் லையன்ஸ் நாளைக்கு இந்த காயத்தை பத்தி கேட்பானுங்க. சொல்லி கொடுக்கிறேன் இரு” என்று மனைவியை மிரட்டினான்.

“அப்படியே இதையும் சொல்லுங்க” என்று அவன் நெஞ்சத்தில் பலமாக கடித்து வைக்க,

“அடியேய்” என்று அவளை கீழே தள்ளி இவன் மேலே வந்தவன்,

“ஜீரா எடுத்தாதான் நீ அடங்குவ” என்றான்.

“அதான் இல்லையே” சம்யுக்தா சொல்ல,

கட்டிலுக்கு அடியில் இருந்த பவுலை எடுத்தான் நல்லவன்.

“ஒளிச்சா வைக்கிற? இதுக்கு டபுள் ஷிப்ட்”

“இல்லன்னா மட்டும்” என்றவள் உதட்டுக்குள் ரசகுல்லா திணிக்கப்பட்டது.

அதன் பின் என்ன இருவரும் ரசகுல்லாவாக மாறி போனார்கள்.

“குட்டி இடுப்பை பெருசாக்க என்னடி பண்ணனும்? இது பெருசாகிடுச்சு. இடுப்பு தான் என்னை படுத்தது” என்று முனகினான் பேராசைக்காரன்.

“இப்போ ப்ரொபோஸ் பண்ணவா?” என்று வில்லங்கமான நேரத்தில் இமை சிமிட்டி கேட்டான் சேட்டைக்காரன்.

“மலைமாடு அடங்க மாட்டியா நீ?” சம்யுக்தாவிற்கு அவன் உதடுகளை அடைப்பதே வேலையாகி போய்விட்டது.

விடியலில் தான் இருவரும் குளித்து வர, சர்வாச்சார்யா மனைவியை தன் கை மேல் படுக்க வைத்து கொண்டான்.

கணவன், மனைவிக்குள் அமைதி!

எந்த இரைச்சலும் இல்லை. ஆர்ப்பரிக்கும் அலையும் இல்லை.

தூக்கம் இல்லாத இரவாக இருந்தாலும், முகத்தில் அப்படி ஒரு வெளிச்சம். மலர்வு!

அகம் நிறைந்த வாழ்க்கை சிறு சிறு குறைகளை தூசியாக தட்டி செல்கிறது.

குருமூர்த்தி, சம்யுக்தாவின் கடந்த காலம் இப்போதும் சர்ச்சையை கிளப்பாமல் இல்லை.

ஆனால் அதை தங்களின் வெற்றியால் ஈடுகட்டுகிறார்கள்.

குருமூர்த்தியின் தொழில் எண்ணிக்கை கூட, சம்யுக்தாவை அவர்கள் தொழிலுக்குள் இழுத்து விடுகிறார் சிவப்பிரகாசம்.

என் மருமகளுக்கான உரிமை இது! நான் கொடுப்பேன்! என்று உறுதியாக சொல்லிவிட்டார்.

சம்யுக்தாவும் மாமனார் நம்பிக்கையை காப்பாற்ற கடுமையாக உழைக்கிறாள்.

சர்வாச்சார்யா உதவி அவளுக்கு நிச்சயம் இருக்கும் என்றாலும் சம்யுக்தா இயல்பிலே போராடும் குணம் கொண்டவள் தானே?

இதிலும் வெற்றி பெறுவாள் பெண்!

சர்வாச்சார்யா மனைவி பக்கம் திரும்பி படுத்தவன் அவளின் உதட்டில் முத்தம் வைத்தான்.

சம்யுக்தா பதிலுக்கு கொடுக்க, அவனும் கொடுக்க என்று முத்தம் தொடர்ந்தது.

இருவரின் கண்களும் மற்றவர் பிம்பத்தை ஆழ்ந்து உள்வாங்கி கொள்ள, வன்மையாக மாறியது முத்தம்! பின் தானே மென்மைக்கு தாவினார்கள்.

தொழிலால் அடிக்கடி பிரிந்து இருக்கும் நிலை. போதாத இரவு தான். ஆனாலும் நீட்டிக்காமல் மற்றவரை வருடி கொடுத்தார்கள்.

சம்யுக்தா கணவன் மீசையை மெலிதாக இழுத்து, அவன் மூக்கை கடித்து, கன்னத்தில் முத்தம் வைத்து, தலை முடியை இறுக்கமாக பற்றி, அவனை தன்னுடனே இறுக்கமாக பிணைத்து கொண்டாள்.

சர்வாச்சார்யா கரம் முன்பே அவளை இறுக்கமாக தான் பிணைத்திருந்தது.

இந்த விடியல் மட்டுமில்லை எல்லா விடியல்களும் அவர்களுக்கான விடியல் தான்.

கடந்த காலத்தை காதலால், அன்பால் மட்டுமே கடந்து வந்தவர்கள் இவர்கள்!

கடந்த கால துயரங்களை தூக்கி சுமக்க அதிக பலம் வேண்டும்!

இன்பமோ, துன்பமோ எதுவாக இருந்தாலும் அது கடந்து தான் விட்டது.

இப்போது மிச்சமிருப்பது காதல் மட்டும் தான்!

சுபத்ரா மீதான குருமூர்த்தியின் காதல்!

சர்வாச்சார்யா மீதான சம்யுக்தாவின்  காதல்!

எத்தகைய இருண்ட பக்கங்களுக்கும் வெளிச்சம் கிடைத்து விடும்!

குருமூர்த்தி, சம்யுக்தாவிற்கு கிடைத்தது போல!

பணம், பாரம்பரியம், அந்தஸ்து, அதிகாரம் இதையெல்லாம் கடந்து ஜெயித்தது அப்பா, மகளின் குணம்தான்!

இப்படிதான் வாழ வேண்டும் என்று வாழ்ந்தவர்கள்!

தவறான வழி சுலபம். பாதை மாறிவிட்டால்  என்ன? கல், முள்ளை கடந்து நல்ல பாதைக்கு திரும்பி விடலாம்!

குருமூர்த்தி திரும்பிவிட்டார். காயங்கள் ஆறிப்போனது. வாழ்க்கை வசந்தமாகி போனது.

மகள், மருமகன், பேரன்களுடன் ஓர் நிறைவான வாழ்க்கை. இதை விட வேறென்ன வேண்டும்?

சர்வாச்சார்யாவிற்குள் இருந்த சம்யுக்தாவிற்கு கிடைத்திருப்பது எல்லாவற்றையும் கடந்த காதல்!

பலசாலிகளான அப்பா, மகள் இருவரும் அன்பின் முன் பலவீனமானவர்கள்! ம்ஹ்ம் அடங்காதவனிடம் பலவீனமாக தான் இருக்கிறார்களா என்ன?

இல்லை. பலவீனமான அன்பால் யாரையும் இழுத்து பிடிக்க முடியாது! குருமூர்த்தி, சம்யுக்தா போன்ற போராளிகளை நிச்சயம் முடியாது!

சர்வாச்சார்யாவின் அன்பும், காதலும் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது!

இவர்கள் மூவரும் காதலால் கடந்து வந்துவிட்டார்கள்!

நாமும் இவர்களை கடப்போம்!!!