கடந்து செல் காதலுடன்! 49 1 9083 கடந்து செல் காதலுடன்! 49 “இதெல்லாம் நடக்கும்ன்னு முன்னாடியே தெரியும்” என்றான் சர்வாச்சார்யா. “நானும் கெஸ் பண்ணேன் தான். ஆனா இவ்வளவு சீக்கிரம் நடக்கும்ன்னு நினைக்கலை” சிவப்பிரகாசம் பெருமுச்சுடன் சொன்னார். தந்தையும், மகனும் அடுத்தென்ன முடிவெடுப்பது என்ற நிலையில் நின்றனர். “எனக்கு என் குடும்பம் முக்கியம் ராஜா, யாருக்கும் எந்த கஷ்டமும் இல்லாமல் தான் நாம இதை செட்டில் பண்ணனும்” தந்தை சொல்ல, “உங்க தங்கச்சிங்க மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு சொல்லுங்க டாட்” என்றான் மகன் புன்னகையுடன். “உண்மைதான். ஏன் அதுல ஏதும் தப்பிருக்கா ராஜா?” என்று அவர் கேட்க, “உங்ககிட்ட என்னால ஆமான்னு சொல்லிட முடியுமா டாட்” என்றான் நல்லவன். “ராஜா. என்ன இது? அத்தைங்க பேமிலி கொஞ்சம் அப்படி, இப்படி தான். அதுக்காக அவங்களை விட்டு கொடுத்திடணுமா என்ன?” அண்ணனுக்கு கோவம். “டாட். அவங்களை நானுமே ஏன் விட்டு கொடுக்க போறேன்? எனக்கு உங்களை தெரியும் டாட். அத்தைங்களுக்காக இல்லைன்னாலும் உங்களுக்காகவே நான் சிலதை செய்ய மாட்டேன். நான் மட்டுமில்லை என் அம்மா, தங்கச்சியும் தான்“ “ராஜா“ “இத்தனை வருஷம் ஆகியும் உங்களுக்கு எங்கமேல நம்பிக்கை இல்லை டாட். சீரியஸ்லி. லைஃப் லாங் நாங்க மூணு பேரும் இதை நிரூபிச்சிட்டே இருக்கணுமா?” “இல்லை. இல்லை ராஜா“ “டாட். யூ க்னோ ஒன் திங்! உங்களுக்கு அவங்க மேல அதிகமான பாசம் உண்டு. ஆனா உங்க பலவீனம் நாங்க மூணு பேரும் தான்“ “ராஜா என்ன இது?” “நோ டாட். ப்ளீஸ், உங்க மாப்பிள்ளைகளை கட்டுப்படுத்த முடியாமல் நீங்க என்னை கண்ட்ரோல் பண்ண பார்க்கிறீங்க“ “ராஜா, என்ன பேசுற நீ? கண்ட்ரோல்“ “எஸ் டாட். நான் முடிவெடுக்கும் முன்ன நீங்க என்னை தடுக்க நினைக்கிறீங்க? எப்போதும் போல கண்டும் காணாம போயிடலாம் நினைக்கிறீங்க, இனியும் அப்படி இருக்க முடியுமா என்ன?” “எனக்கும் கோவம் தான் ராஜா. நான் அவங்ககிட்ட பேசவே இல்லை தெரியுமா? முகத்தில கூட கோவத்தை காமிச்சு, என் மகனுக்கு நானே செலவு பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன். உங்க பெரிய மாமா கூட என்கிட்ட இப்போ பேச ட்ரை பண்ணார். நான் கண்டுக்கலையே” சிவப்பிரகாசம் வேகமாக சொல்ல, “டாட். டாட்” என்றான் மகன். “வீடு முழுக்க கெஸ்ட் வைச்சுக்கிட்டு சண்டை போட முடியுமா ராஜா“ “சரி அவங்களை பீச் அவுஸ் கூட்டிட்டு வரேன். அங்க வைச்சு சண்டை போடுறீங்களா?” “சண்டை போடுறதிலே ஏன் நிக்கிற நீ ராஜா? பேசி தீர்க்க முடியாதா?” “பேசினா மொத்தமா தீர்ந்துடும் பரவாயில்லையா?” மகன் மிகவும் தீவிரமாக கேட்டான். “நோ, நோ. நீ அவங்ககிட்ட பேசாத ராஜா, நான், நானே பார்த்துகிறேன்” என்றார் சிவப்பிரகாசம் வேகமாக. மகனை பற்றித்தான் தெரியுமே! அத்தனை வில்லங்க வேலையும் பார்ப்பான்! “சரி பேசுங்க. என் ரிசப்ஷன் செலவு பொதுவுல வர மாதிரி பேசுங்க” சர்வாச்சார்யா சொல்ல, “அது ஏன் ராஜா? என் கணக்குல செய்றேன்னு“ “ஓகே. அப்போ போன மாசம் சின்ன மாமா ப்ராஜெக்ட் லாஸ் ** கோடியும் அவர் கணக்குலே எழுதுங்க“ “ஆஹ்ன். அது, அது“ “என்ன டாட்? மாமா ஒத்துக்க மாட்டாரா?” என்று மகன் கேட்க, “புதுசா ஏன் ராஜா? எப்போவும் போல“ “எப்போவும் போல, எப்போவும் போலன்னு நீங்க தான் போகணும். அவங்க போக மாட்டாங்க. அதுக்கு உதாரணமே என் ரிசப்ஷனுக்கு பணம் கொடுக்க விடாம பண்ணது” மகனுக்கு கோவம் வந்துவிட்டது. “ராஜா. எனக்கும் புரியாமல் இல்லை. நம்ம பக்கம் சில கணக்கு இடிக்கிறதால, பேச்சு பெரிசாகிட கூடாதுன்னு பார்க்கிறேன்“ “எந்த கணக்கை சொல்றீங்க?” “எம்பையர் அப்ரூவலுக்கு நீ கொடுத்த பணம் தான் பிரச்சனையாகும்னு தோணுது” “ஏங்க?” என்று வசுந்தரா குரல் இடையிட்டது. அப்பாவும் மகனும் திரும்பி பார்க்க, சம்யுக்தா கால்கள் அறை வாசலிலே தேங்கி நின்றது. “வாங்க. உள்ள வாங்க, மருமகளே உள்ள வாம்மா?” என்று சிவப்பிரகாசம் அழைக்க, “டிஸ்டர்ப் பண்ணிட்டோமா?” என்று கேட்ட வசுந்தரா மருமகளின் கரம் பற்றியபடி அறைக்குள் வந்தார். “லஞ்சுக்கு நேரம் ஆச்சு. அதான் உங்களை கூட்டிட்டு போகலாம்ன்னு வந்தோம்” என்று வசுந்தரா சொல்ல. “ஓஹ், நேரம் பார்க்கலை. உட்காருங்க” என்று இருக்கையை காட்டினார் சிவப்பிரகாசம். சம்யுக்தா தனி நபர் இருக்கையில் அமர போக, எட்டி அவளின் கைப்பற்றி இழுத்த நாயகன், அவளை தனக்கு பக்கத்தில் அமர வைத்து கொண்டான். கூப்பிட்டா வர போறேன். அதுக்கேண்டா இழுக்கிற மலைமாடு! சம்யுக்தா கண்களை சுருக்கி அவனை பார்க்க, “என்ன?” என்று சத்தமாக கேட்டான் நல்லவன். இவனை! சம்யுக்தா ஒன்னுமில்லை என்பதாக தலையசைக்க, “உண்மையாவே ஒன்னுமில்லையா?” என்று பெண்ணின் முகத்துக்கு அருகில் சென்று அவளை உற்று பார்த்தான் கேடி. சம்யுக்தா அவன் நெற்றியில் விரல் வைத்து தள்ளிவிட்டவள், “ஒன்னுமில்லை தான்” என்றாள். “ச்சு. நான் கூட எம்பையருக்கு பணம் கொடுத்தது பத்தி கேட்பன்னு நினைச்சேன்” என்றான் உதடு பிதுக்கி. “ராஜா என்ன இது?” சிவப்பிரகாசம் மகனை கண்டித்தவர், “மருமகளே நீயும் இதை தெரிஞ்சுக்கிறது நல்லது தான்” என்றவர், தானே எல்லாவற்றையும் சொன்னார். “ஓஹ்” சம்யுக்தாவிடம் இருந்து அவ்வளவு தான் பதில். “அநியாயம்டி. என்ன ரியாக்ஷன் இது? அத்தான்‘னு என்னை பாய்ஞ்சு கட்டி பிடிக்கலைன்னா கூட போகுது. அட்லீஸ்ட் பாராட்டவாவது செய்யலாம் இல்லை” சர்வாச்சார்யா கேட்க, “நீதான் அநியாமா பேசுற மகனே? அந்த பிரச்சனை வந்ததுக்கு காரணமே நாமதான். அதை சால்வ் பண்ண வேண்டியதும் நம்ம கடமை தான். சோ உன் குற்றசாட்டு நிராகரிக்கப்பட்டது” என்றார் நீதிபதி வசுந்தரா. “மாம். உங்க தீர்ப்பை எதிர்த்து நான் மேல்முறையீடு பண்ணுவேன்“ “ஸாரி மகனே. வாய்ப்பில்லை. எங்களுக்கு மேல கோர்ட்டே கிடையாது” “ஏன் இல்லை. என் மாமனார் இருக்கார்“ “அது கோர்ட் இல்லை. சண்டை மைதானம்டா மகனே!” என்றார் வசுந்தரா. “மாம். அங்கேயும் ஜட்ஜ் வேணும்“ “உங்களுக்கு தீர்ப்பு கொடுக்கிறளவு நான் இன்னும் படிக்கலை. என்னை விட்டுருடா” வசுந்தரா உடனே பின்வாங்கிவிட, “போங்க எங்களுக்கு தீர்ப்பு கொடுக்க என் பொண்டாட்டி இருக்கா“ “யார் நீங்க?” என்று கேட்டு வைத்தாள் சம்யுக்தா. “ஹேய் நாங்க யாரா?” சர்வாச்சார்யா கடுப்பாகி மனைவியை கழுத்தோடு வளைத்து தன்னிடம் இழுத்து கொண்டான். இருவருக்குள்ளும் நன்றாகவே நெருக்கம். சம்யுக்தா தான், அதிர்ந்து திமிறியவள், “அத்தை மாமா இருக்காங்க. விடு” என்று அவனை சின்ன குரலில் கடிய, “விடணுமா? ஓகே. அப்போ ரூம்ல அத்தான்‘னு ஸ்லோ மோஷன்ல ஓடி வந்து என்னை கட்டிபிடிக்கணும்” என்று மனைவி காதில் டீல் பேசினான் கள்ளன்பையன் சம்யுக்தா காண்டாகி போனவள், முழங்கை முட்டியால் அவன் வயிற்று பகுதியில் மெலிதாக இடித்து, அவன் பிடி தளர்ந்த நொடி, டக்கென வெளியே வந்துவிட்டாள். “ராட்சசி இடிச்சுட்டா போற? ரூமுக்கு வா உன்னை எப்படி லாக் பண்ணி காட்டுறேன்னு மட்டும் பாரு” என்று நல்லவன் மிரட்ட, “அதையும் பார்ப்போம்” என்று சிலுப்பி கொண்டாள் சம்யுக்தா. எனக்கு பின்னாடி சண்டை கத்துக்கிட்டு ஓவரா மிரட்டுறான்! பெற்றவர்கள் தங்களுக்குள், எதாவது பிரச்சனையா? அப்புறமா சொல்றேன் என்பதாக கண்களால் பேசி கொண்டிருக்க, “மாம். உங்க ஹஸ்பண்ட் ஒன்னும் சரியில்லை. பார்த்துக்கோங்க” என்றான் மகன். “என்ன சர்வா? அப்பாக்கு எதாவது காரணம் இருக்கும். அவர்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு“ “ஓஹ். என் ரிசப்ஷனுக்கு பணம் கொடுக்க கூடாதுன்னு சொல்லியிருக்காங்க, இதுக்கென்ன காரணம் மாம்” என்று கேட்டான் மகன். வசுந்தரா அதிர்ந்து அதன் பின் கோபம்கொண்டு கணவரை பார்க்க, “எனக்குமே கோவம்தான் வசுந்தரா. அதான் என் மகனுக்கு நானே பண்ணிக்கிறேன்னு என் கணக்குல எடுத்துக்க சொல்லிட்டேன்” என்றார் சிவப்பிரகாசம். “நீங்க இதை பெருசாக கூடாதுன்னு அப்படியே அடக்கியிருக்கீங்க சிவா” வசுந்தரா அதிருப்தி கொள்ள, “இப்போ எனக்கு அட்வைஸ் பண்ணுங்க மாம்” என்றான் மகன். கடவுளே! இவரோட! சம்யுக்தா நெற்றி நீவி விட்டு கொண்டாள். “மாம். லன்ச் முடிச்சுட்டு நாம பேசணும். சுஹா இருக்கணும்” சர்வாச்சார்யா சொல்ல, “சுஹா! அவகிட்ட என்ன பேசப்போற நீ?” சிவப்பிரகாசம் அரண்டு போனார். “பதறாதீங்க டாட். கார்த்திக் தான் உங்க மாப்பிள்ளை” என்று மகன் உறுதியளிக்க, சிவப்பிரகாசம் நெஞ்சில் கைவைத்து ஆசுவாசம் கொண்டார் அவருக்கு தெரியவில்லை. அதைவிட மகன் பெரிதான ஒன்றை தூக்கி கொண்டு வர போகிறான் என்று! நால்வரும் ஹாலுக்கு வர, “உங்களுக்கு தான் வெய்ட் பண்ணிட்டு இருக்கோம். வாங்க சாப்பிட போலாம்” என்று எல்லோருமாக உணவுண்ண அமர்ந்தனர்.