கடந்து செல் காதலுடன்! 16

சம்யுக்தா சொல்லிய, “நாம நல்லது செய்யலைப்பா. இது உண்மைஎன்பதில் குருமூர்த்தி நிமிடம் அப்படியே நின்றார்.

அவரின் பார்வை மகளையே பார்த்திருந்ததில், “ப்பாஎன்றாள் மகள்.

நான் நல்லது செய்யலை. எனக்கு தெரியும்! அதுக்கான தண்டனையும் நான் அனுபவிச்சுட்டேன். ஆனா நீ? நீ என்னமா கெட்டது பண்ணிட்ட?” என்று அவரின் தீரா ஆதங்கத்தை கேட்டார்.

ப்பா. நடந்ததை விட்டுடுவோம்

இல்லை. அதெப்படி விடுறது?” 

ப்பா. வேறென்ன செய்யணும்ன்னு சொல்றீங்க? அவருக்கு சாப்பாடு கொடுக்காம விடுறதால என்ன மாறிடும்ன்னு நினைக்கிறீங்க? நான் பட்டது பட்டதுதான்! மாறாது, எதுவும் மாறாதுப்பா. புரிஞ்சுக்கோங்க

எனக்கு குறைஞ்ச பட்ச திருப்தி கிடைக்கும்” 

சம்யுக்தா கசப்பாக புன்னகைத்தவள், “உங்க கெஸ்ட் இப்போ இருக்கிற இடம் ஒரு காலத்துல நான் இருந்த இடம்என்றாள்.

நானும், அவரும் வேற இல்லை. வேற ஒருத்தரால தான் நாங்க கஷ்டப்படுறோம்!” என்றாள் மகள்.

குருமூர்த்தி முகம் சுருங்கிவிட்டது. “என்னமா பேசுற நீ?” மணி வருத்தத்துடன் கேட்டார்

இல்லைன்னு சொல்றீங்களா அங்கிள்?” என்று சம்யுக்தா கேட்க, எப்படி சொல்ல முடியும்?

நம்பிக்கை துரோகம் உங்களுக்கும் நடந்தது! உங்களை நம்பி அனுப்பி வைச்ச அவர் குடும்பத்துக்கும் நடக்குது!”

துரோகம் பண்றீங்க என்று மகள் நேருக்கு நேர் சொல்கிறாள்! குருமூர்த்திக்கு கோவம். ஆனால் பதில் சொல்ல இயலவில்லை

உங்க திருப்திக்கு இது மட்டும் போதுமாப்பா. இல்லை வேற எதையும் யோசிச்சிருக்கீங்களா? காலையில பயிற்சிங்கிற பேர்ல அவரை அடிச்சது போல!” 

நாந்தான், என்னோட கோவத்துல தான் அடிச்சுட்டேன். அண்ணா சொல்லலைஎன்று மணி சொல்ல,

உங்களை அவர் தடுக்கவும் இல்லையே அங்கிள்என்றாள் சம்யுக்தா.

என் அப்பா இவர் இல்லை அங்கிள்! இவருக்கும், அந்த ஹோம்ல இருந்தவங்கவளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை

சம்யுக்தாகுருமூர்த்தி கத்திவிட்டார்.

சம்யுக்தா உடல் திக்கென்று அதிர்ந்து போனது.

நான் இப்படித்தான். என் கோவத்தை நான் இப்படித்தான் காட்டுவேன். நீ இதுல தலையிடாதஎன்றார் தந்தை அதிகாரத்துடன்.

சாப்பிட்டு ரூமுக்கு போ

சம்யுக்தா அசையாமல் நிற்க, “உன்னை தான் சொல்றேன். சாப்பிடு போஎன்று குருமூர்த்தி குரல் உயர்ந்தே ஒலிக்க,

சம்யுக்தா தந்தையை நேருக்கு நேர் பார்த்தவள், “அநியாயத்துக்கான பலி நாங்க! எங்களுக்கு உங்க சாப்பாடு வேண்டாம்என்றாள்

குருமூர்த்தி அவளின் வார்த்தை தாக்கத்தில்  நின்றுவிட, சம்யுக்தா அவளின் அறைக்கு சென்றுவிட்டாள்.

கதவை அடைத்து கொண்டதில், “கண்ணுஎன்று கற்பகம் பாட்டி அவளின் அறைக்கதவை தட்டினார்.

சம்யுக்தாவிடம் இருந்து பதிலில்லை. “பாட்டிஎன்று மணி கண்ணசைத்து அவரை போக சொன்னார்.

அண்ணாஎன்று குருமூர்த்தியை ஆறுதலாக பற்றினார்  மாசிலாமணி.

மகளின் வார்த்தைகளில் இருந்து மீள முடியாமல் நின்றார் தந்தை!

நாம பண்றது தப்புண்ணா! நம்ம பொண்ணை இந்த விஷயம் ரொம்ப பாதிக்குது!” என்றார் மணி.

எனக்கு புரிஞ்சு வரைக்கும், அவர் இடத்துல பாப்பா இருக்கிறதா நினைக்கிறாங்க. அந்த அழுத்தம் நம்ம பாப்பாக்கு வேண்டாம்ண்ணா. அதோட, க்கும். அந்த தம்பியும் நம்ம புள்ளத்தான். அவர் சாப்பிடாம இருக்கிறதால நமக்கும் சாப்பாடு இறங்க மாட்டேங்குது. யோசிங்கண்ணா. வேணும்ன்னா நாம வேற மாதிரி இந்த கோவத்தை தீர்த்துக்கலாம். ஆனா இது வேணாம்ண்ணாஎன்றார் மணி.

குருமூர்த்தியிடம் மௌனமே! ஆனால் யோசிக்கிறார் என்பது சுளித்த புருவங்களில் தெரிந்தது.

நிமிடங்கள் ஓடிவிட்டது

குருமூர்த்தி தானே மகளின் அறைக்கதவை தட்டினார். சிறு அசைவும் அறைக்குள் இல்லை.

க்கும். நான் அவருக்கு சாப்பாடு கொடுக்க போறேன்தந்தை சொல்ல, எதிர்வினை இல்லை.

என்னை விட வீம்பு புடிச்சவளா என் மகள்

நீ வந்து சாப்பிடு. நான் எடுத்துட்டு போறேன்என்றார்.

பாட்டி அந்த தம்பிக்கு சாப்பாடு வைச்சு கொடுங்கஎன்று சத்தமாக சொன்னார் மணி.

தந்தை எதிர்பார்த்தது நடக்காமல் போகவும், “இப்போ நீ வந்து சாப்பிட போறியா இல்லையாஎன்று அதட்டினார் குருமூர்த்தி.

அவர் சாப்பிடணும்ன்னு தானே என்னை இவ்வளவு பேசின? இப்போ ஏன் வெளியே வர மாட்டேங்கிற? நீ வராம அவருக்கு சாப்பாடு போகாதுஎன்று வழக்கமான குருமூர்த்தி வெளிப்பட்டார்.

நீ வராம அவர் மட்டுமில்லை நானும் சாப்பிட மாட்டேன். நேரம் போயிடுச்சு, அந்த பேட்டை ரவுடி சாப்பிடாம தூங்கிட்டா, அதுக்கு நீதான் காரணம். பார்த்துக்கோகுருமூர்த்தி சொல்ல, நிமிடம் சென்று சம்யுக்தா அறை கதவை திறந்து கொண்டு வந்தாள்.

தந்தையை பார்க்காமல் டேபிளுக்கு சென்றவள், “அப்பாக்கும் சேர்த்து கொடுத்திடுங்க பாட்டி. அவரும் அங்கேயே சாப்பிடட்டும்என்றாள்.

நானா? முடியாது. நான் அவனோட சேர்ந்து சாப்பிட மாட்டேன்என்று குருமூர்த்தி வேகமாக மறுக்க,

அப்போ நான் அவரோட சேர்ந்து சாப்பிட்டுகிறேன்என்று உணவை எடுத்தாள்.

நீயா? சாப்பாடை வை முதல்ல, அவனோட சேர்ந்து நீ ஏன் சாப்பிடணும்? முடியாதுஎன்று குருமூர்த்தி வேகமாக மகளின் கையில் இருந்த உணவை பிடுங்கினார்.

ஒருநேரம் அவரோட சேர்ந்து சாப்பிடுறதால என்ன ஆயிடும் உங்களுக்கு? சாப்பிடுங்க போங்கஎன்று மகள் நேரடியாக சொன்னாள்.

இப்போ என்ன உனக்கு? அதான் நாம சாப்பாடு கொடுக்கிறோம் இல்லை. போதாதா?”

தானதர்மத்துக்கு சாப்பாடு கொடுக்கிறோமாப்பா?” என்று கேட்டாள் மகள்.

இல். இல்லை. அப்படியில்லைகுருமூர்த்தி தடுமாறினார்.

சிவபிரகாசம் குடும்பத்தின் இளவரசன்! அவர்கள் சாம்ராஜ்யத்தின் வருங்கால ராஜா! அவருக்கு நான்?

காலையில நீங்க அவர்கிட்ட பேசினது சரியாப்பா?” என்று சம்யுக்தா இந்த நேரத்தை பயன்படுத்தி கேட்டாள்.

அவர் உயிரை பாதுகாக்கிறது நம்ம கடமை! அப்படித்தானேப்பா?”

குருமூர்த்தி என்ன சொல்வார்! மகளையும், அவனையும் ஒரே தராசில் வைத்து பார்த்தவர்! இவர்களின் கரங்களை தன் இருகைகளால் இறுக்கமாக பற்றிகொண்டவர் பேசிய பேச்சா அது?

பணத்துக்காக நீங்க அவரை பாதுகாக்கலைன்னு புரியுதுப்பா! உங்களுக்கான கடமையா தானே அவர் பொறுப்பை எடுத்துகிட்டீங்க! அப்புறம் ஏன்ப்பா?” என்று கேட்டாள் மகள்.

சம்யுக்தாவிற்கு இன்னமும் சர்வாச்சார்யா யாரின் மகன் என்று தெரியாது

குருமூர்த்தி மகளிடம் சொல்லவில்லை. அப்படியும் அவள் இந்தளவு அவனுக்காக பேசுகிறாள் என்றால், அவன் வசுந்தராவின் மகன் என்று தெரிந்துவிட்டால் அவ்வளவு தான்!

சரி, நான். நான் அங்கேயே சாப்பிட்டுகிறேன். நீ சாப்பிடுஎன்று குருமூர்த்தி உணவுடன் சென்றார்.

 

காலையில் அவர் பேசிய பேச்சுக்கு நிச்சயம் முருங்கை மரத்தில் தான் அமர்ந்திருப்பான்!

கட்டிலில் குப்புற படுத்திருந்தான் சொகுசுக்காரன்! “சாப்பிட வாஎன்று குருமூர்த்தி அழைத்தார்.

கூப்பிட்டவுடன் வருவான் என்று குருமூர்த்தியும் நினைத்திருக்கவில்லை.

எனவே, “சாப்பிட்டு நாம கொஞ்சம் பேசணும்என்ற பிட்டை போட்டார்.

அசைவு இல்லாததில், “க்கும். ரொம்ப முக்கியமானதை பேசணும்என்றார்.

தூங்கிட்டானா?’ மறுபக்கம் திரும்பியிருந்த முகத்தை எட்டி பார்த்தார். கண்கள் மூடித்தான் இருந்தது

மெல்ல அவன் தோளில் தட்டியவர், “சாப்பிட்டு தூங்கு. எழுந்திருஎன்றார்.

நல்லா தூங்கிட்டானா?” முணுமுணுத்தபடி, திரும்ப அவன் தோளில் தட்டினார்.

சிறு அசப்பும் இல்லாமல் போக, “ஒருவேளை பசியில மயங்கிட்டானா?” குருமூர்த்தி வாய்விட்டு சத்தமாக சொன்னார்.

மனிதருக்கு குற்ற உணர்வாகிவிட்டது. “தம்பி. டேய் தம்பிஎன்று வலுவாக அவன் தோளில் தட்டியவர், தண்ணீர் தெளித்தார்.

இது வேலைக்கு ஆகாது என்று மருத்துவருக்கு போன் போட்டவர், “மயங்கிட்டார். கொஞ்சம் சீக்கிரம் வாங்கஎன்று பரபரக்க,

வரும் போது பிரியாணி வாங்கிட்டு வர சொல்லுங்கஎன்று ஓர் குரல்.

பிரியாணி எதுக்கு?” என்றவர்உணர்ந்து பட்டென அவனை திரும்பி பார்க்க

இவரை நன்றாக பார்த்தபடி படுத்தவன், “சாப்பிட தான். வாங்கிட்டு வர சொல்லுங்கஎன்றான்.

நீங்க வர வேணாம்என்று போன் வைத்தவர், “இவ்வளவு நேரம் முழிச்சுட்டு தான் இருந்தியா?” என்று கோவமாக கேட்டார்.

பதில் சொல்ல முடியாது என்று ஓர் திமிர் பார்வை!

உன்னை அப்படியே தூக்கி செவத்துல அடிச்சிடுவேன் ராஸ்கல்!” என்றார் குருமூர்த்தி.

அடிங்க பார்க்கலாம்என்று புருவத்தை சவாலாக தூக்கினான்.

இன்னைக்கு நாளே சரியில்லை! முதல்ல என் பொண்ணு, இப்போ இவன்

எழுந்து சாப்பிட வாஎன்றார்.

எனக்கு பிரியாணி தான் வேணும்என்று சட்டம் பேசினான்.

இப்போ எப்படி? நாளைக்கு செஞ்சுதர சொல்றேன்

எனக்கு இப்போதான் வேணும்

நேரம் என்னன்னு பார்த்தியா? இனி எப்படி செய்ய முடியும்என்று பல்லை கடித்தார்.

அதைப்பத்தி எனக்கென்ன?” என்று தோள் குலுக்கியவன், திரும்ப கவிழ்ந்து படுத்துகொண்டான்.

குருமூர்த்தி அதற்கு பிறகு என்ன பேசியும், அதட்டியும் பலன் இல்லை