Advertisement

இளமுகிலனுக்கு ப்ரனவிகாவின் செயல் வினோதமாக அதே சமயம் அதிசயமாகவும் பட்டது. இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தான்.

“ஓகே இண்டர்வியூ ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று ப்ரனவிகா கேட்க,

“எஸ் மேம்.” என்று கூறி அவனது கோப்புகளை அவளிடம் கொடுத்தான். ப்ரனவிகா அதை வாங்கிப் பார்த்தவள் ஆச்சரியம் அடைந்தாள்.

“பி.ஈ. முடிச்சுட்டு இரண்டு வருஷம் வேலைப் பார்த்துட்டு அடுத்து எம்.சி.ஏ. வேற படிச்சுருக்கீங்க ரைட்?”

“ஆமா மேம்.”

“ஓகே. ஆனால் இதுல உங்களோட எந்த செர்டிஃபிகேட்டும் இல்லையே? வெறும் ரெஸ்யூம் மட்டும் தான் இருக்கு?”

“சாரி மேம். எல்லாம் எடுக்க முடியாத இடத்துல இருக்கு. பட் ஐ ஹேவ் சாஃப்ட் காப்பி.” என்று கூறி அவனது மடிக் கணினியை எடுத்து அதிலிருந்த அவனது செர்டிஃபிகேட் அனைத்தையும் காட்டினான்.

“ஓகே எடுக்க முடியாத இடம்னா? செர்டிஃபிகேட் இல்லாம எப்படி?”

“மேம் அதை என்னால சொல்ல முடியாது. இட்ஸ் பெர்சனல் மேம் சாரி. பட் நீங்க என்னை நம்பலாம் மேம்.”

“ஓகே! ஐ பிலீவ் யூ.” என்று பர்னவிகா கூற, இளமுகிலிற்கு ஆசுவாசமாக இருந்தது.

“சரி மூணு வருஷம் ப்ரீலேனஸ்ரா வொர்க் பண்ணிருக்கிறதா போட்டுருக்கீங்க? ஏன் எதாவது ஸ்பெசிஃபிக் ரீசன் இருக்கா? பிகாஸ் நீங்க ஃப்ரீலேனஸ்ரா வொர்க் பண்றதுக்கு முன்னாடி நல்ல கம்பெனில தான் வொர்க் பண்ணிருக்கீங்க. அப்புறம் ஏன் மாறுனீங்க?” என்று ப்ரனவிகா கேட்க,

“மேம் சாரி அதுவும் கொஞ்சம் பெர்சனல். சில ரீசன்னால நான் வீட்டுல இருந்து வொர்க் பண்ற மாதிரி சிட்டுவேஷன் தேவைப் பட்டது. அதனால தான் ஃப்ரீலேனஸ்ரா வொர்க் பண்ணேன் மேம்.” என்று இளமுகில் கூற, ப்ரனவிகாவிற்கு ஏதோ சந்தேகமாகவே இருந்தது. எதற்கு எடுத்தாலும் அவன் பெர்சனல் என்று சொல்லுவது அவளுக்குக் கொஞ்சம் இடித்தது.

அவளது முக பாவத்திலே அவளது மனதிலிருப்பதைப் படித்தவன்,”மேம் ஐ கேன் அண்டர்ஸ்டேன்ட் யூவர் கன்சர்ன். பட் ஐ கேன் ஜஸ்ட் அஸ்யூர் யூ ஒன் திங்க் மேம், ஐ வில் பி குட் இன் மை ஜாப். யூ கேன் ஃபைன்ட் நத்திங் ராங்க் இன் மை வொர்க்.” திடமாக இளமுகில் கூற,

“ம் இன்ட்ரஸ்ட்டிங்க். இங்க நீங்க வேலைப் பார்க்க ஆசைப் பட்டா நீங்க தினமும் அகாடமி வந்து தான் ஆகனும். வீட்டுல இருந்துலாம் வொர்க் பண்ண முடியாது தெரியும் தானா?”

“எஸ் மேம் ஐ நோ தேட்.” என்று இளா கூற,

“அப்போ ஓகே இண்டர்வியூக்கு போகலாம். ஒரு வெப் டெவலப்பரோட கீ ரெஸ்பான்ஸ்பலிட்டி என்னது?”

“பக்ஸ் இருந்தா அதை நிவர்த்தி செய்றது, ப்ரோக்ராம் டெஸ்ட் பண்றது, செர்வர் டவுன் ஆனா அதைச் சரி பண்றது அப்புறம் மெயின் ஆன கீ ரோல் ஒரு வெப்பை டிசைன் பண்ணி அதை டெவலப் பண்ணி டெஸ்ட் பண்ணி டிப்ளாய் பண்ணனும் மேம்.”

“ஓகே அடுத்த கேள்வி…” என்று ப்ரனவிகா கேட்கக் கேட்க எல்லா கேள்விக்கும் தெளிவாகப் பதில் கூறினான் இளமுகில். ப்ரனவிகாவிற்கும் அவனது பதில்கள் எல்லாம் திருப்தியாக இருந்தது. என்ன ஒன்று அவனது செர்ட்டிஃபிகேட் இல்லாதது ஒன்று மட்டும் அவளுக்குக் குறையாக இருந்தது.

ஒரு சில நிமிட அமைதிக்குப் பிறகு,”சரி நீங்க நாளைல இருந்து வொர்க்குக்கு வந்துருங்க.”என்று ப்ரனவிகா கூற, இளமுகிலிற்கு சந்தோஷம்.

“ரொம்ப தாங்க்ஸ் மேம். அப்புறம் இன்னொரு விஷயம் நான் ப்ரீலேனஸ்ரா வொர்க் பண்ற ஒரு கம்பெனிக்கு இன்னும் கொஞ்சம் வொர்க் இருக்கு மேம் முடியுறதுக்கு. அதுக்கு உங்க பெர்மிஷன் வேணும் மேம்.”

“என்ன எதிர்பார்க்கிறீங்க நீங்க? நான் அதுக்கு என்ன செய்ய முடியும்?”

“மேம் நீங்க எதுவும் செய்ய வேண்டாம் மேம். அந்த வொர்க் பார்க்க உங்க பெர்மிஷன் வேணும் மேம் அவ்ளோ தான். அதனால அகாடமி வொர்க் எதுவும் பாதிக்காது மேம்.”

“எனக்கு என்னோட வொர்க்குக்கு பாதிப்பு வராமா நீங்க பண்றதுனா தாராளமாகப் பண்ணலாம். என்கிட்ட பெர்மிஷன் வாங்க வேண்டிய அவசியமில்லை.” என்று கூற, இளமுகிலிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“ரொம்ப தாங்க்ஸ் மேம்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

ஓவியா இளமுகிலனுக்காக காத்துக் கொண்டிருந்தவள் அவன் வந்தவுடன் வேகமாக அவனிடம் சென்று,”அண்ணா இண்டர்வியூ என்ன ஆச்சு?” என்று கேட்க,

“பாசிட்டிவ் தான் மா. நாளைல இருந்து வேலைக்கு வரச் சொல்லிட்டாங்க.” என்று சிரித்த முகமாகக் கூற,

“வாவ் சூப்பர் அண்ணா. எனக்குத் தெரியும் நீங்க செலக்ட் ஆகிடுவீங்கனு. கங்க்ராட்ஸ் அண்ணா, பரத் அண்ணா கீழ உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கானாம். இப்போ தான் ஃபோன் பண்ணிச் சொன்னான்.” என்று கூற,

“அப்படியா சரி மா நான் கிளம்புறேன்.” என்று கூற, ஓவியாவும் பாடம் நடத்த வேண்டும் என்று கிளம்பி விட்டாள்.

பரத் அவனது வண்டியில் அமர்ந்து கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தான். இளமுகில் சந்தோஷமாக அவனிடம் வந்தான்.

“ஹேய் இளா வந்துட்டியா? இண்டர்வியூ எப்படிப் போச்சு?”

“ம் நல்லா தான் போச்சு. நாளைல இருந்து வரச் சொல்லிட்டாங்க பரத்.”

“சூப்பர் டா. இளா அப்புறம் ஞாபகம் வைச்சுக்கோ இது இப்போதைக்கு மட்டும் தான் இதுவே நிரந்தரம் கிடையாது. உன்னோட சூழ்நிலை சரியாகிட்டா நீ முன்னாடி வொர்க் பண்ண மாதிரி ஐ.டி. கம்பெனில வொர்க் பண்ணலாம் சரியா.” என்று பரத் கூற, இளமுகில் அவனது மனது கஷ்டப்படக் கூடாது என்று தலையை மட்டும் சரியென்று அசைத்தான்.

இளமுகில் பொறுத்தவரை அவன் அவனது வாழ்க்கையை வாழ்ந்து விட்டான். கடவுள் கொடுத்த வாழ்க்கையை எடுத்துக் கொள்ளக் கடவுளுக்கு மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது. அதனால் தான் அவன் இதுவரை தற்கொலை என்ற எண்ணத்திற்குச் செல்லாமல் இருந்தான். இப்போதும் அந்த எண்ணம் துளி அளவுக்குக் கூட இல்லை. இனி அவன் வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கையும் துளி அளவுக்குக் கூட இல்லை. அவர்கள் கையில் அவன் கிடைக்கும் வரை நன்றாகச் சந்தோஷமாக வாழலாம் என்று முடிவு செய்து விட்டான். அவனது பழைய வாழ்க்கை இனி கனவில் கூடக் கிடையாது என்று எண்ணினான். அதை பரத்திடம் கூறி அவனைக் கஷ்டப்பட வைக்க வேண்டாம் என்று தான் அமைதியாகத் தலையசைத்தான்.

“என்ன டா என்ன யோசனை?” என்று பரத் கேட்க,

“இல்லை டா அதலாம் எதவும் இல்லை. சும்மா தான்.”

“சரி வா முதல்ல போய் சாப்பிடலாம். அதுக்கு அப்புறம் நமக்கு நிறைய வேலை இருக்கு.”

“என்ன வேலை பரத்?”

“முதல்ல உனக்கு மொபைல் வாங்கனும். அதுக்கு அப்புறம் வீட்டுக்குத் தேவையான திங்க்ஸ் வாங்கனும். நிறைய வொர்க் இருக்கு இளா.”

“பரத் எதுக்கு மொபைல்?”

“சும்மா இரு இளா. இத்தனை நாள் நான் உன் கூட இருந்தேன் உனக்குத் தேவைப்படலை சரி, ஆனால் இனிமேல் தேவைப்படும் டா. உன்னை நாங்க எப்படி கான்டாக்ட் பண்ண முடியும் சொல்லு?” பரத் கேட்க, இளமுகிலிற்கும் அவன் கூறுவது சரியென்று தோன்ற,

“சரி பரத் போகலாம். அப்படியே புதுசா பேங்க் அக்கவுண்ட் ஸ்டார்ட் பண்ணிடலாம் பரத். சென்னைல உன் பேர்ல இருக்கிற அக்கவுண்ட்டை நீயே யூஸ் பண்ணிக்கோ டா.” என்று இளமுகில் கூற, பரத்தும் ஆமோதித்துத் தலையசைத்தான்.

இளமுகில் ஃப்ரீலேன்சராக செய்யும் அனைத்து நிறுவனங்களும் இணையம் வாயிலாகத் தான் சம்பளம் கொடுப்பது வழக்கம். அவனுக்கு அவனது பெயரில் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப் பயம். அதனால் பரத் பெயரில் தான் ஆரம்பித்து அதை இவன் உபயோகித்து வந்தான். அதைத் தான் இளமுகில், பரத்திடம் அவனையே உபயோகப் படுத்தச் சொன்னான்.

“அப்போ நாம முதல்ல போய் ஃபோன் வாங்கிடலாம். பேங்க் அக்கவுண்ட் ஸ்டார்ட் பண்ணும் போது நம்பர் வேணும்ல.” என்று பரத் கூற, சரியென்று முதலில் கைப்பேசி வாங்கச் சென்றனர்.

விலைக் குறைந்த கைப்பேசியைத் தான் முதலில் இளா பார்த்தான். ஆனால் பரத்,” என்ன இளா இவ்ளோ கம்மிமா வாங்கிற? இதுல என்ன ஃபீட்சர்ஸ் இருக்கப் போகுது?”

“பரத் எனக்கு அதைப் பத்தி எல்லாம் கவலை இல்லை. நான் ஃபோன் வாங்கிறது பேச மட்டும் தான். ஸோ எனக்கு இது போதும்.” என்று கூறிய இளா பரத்தை மேலும் எதுவும் பேசாமல் செய்து அவன் பார்த்த கைப்பேசியே வாங்கி விட்டான். அதே கடையில் இளாவின் ஆதார் எண்ணைப் பயன் படுத்தி சிம்மும் வாங்கி விட்டான்.

“இளா எப்படி ஒரே நாள்ல இவ்ளோ தைரியமா மாறுன?”

“இல்லை பரத் பயந்து பயந்து செத்தது போதும். இதுக்கு மேல எனக்குத் தெம்பு இல்லை டா. அதான் இனி என்ன வந்தாலும் ஃபேஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்.” என்று இளா கூற, பரத்திற்கு மகிழ்ச்சி.

“ரொம்ப சந்தோஷம் இளா. நீ எதுக்கும் கவலைப்படாத. உனக்கு நாங்களாம் இருக்கோம்.” என்று கூறினான்.

“தெரியும் பரத். நீ இவ்ளோ பண்றதே பெரிய விஷயம். ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் பரத்.” உணர்ச்சி பொங்க இளா கூற,

“டேய் விடு டா. சரி வா நாம பேங்க் போகலாம். அங்கப் போறதுக்குள்ள உன்னோட நம்பரும் ஆக்டிவேட் ஆகிடும்.” என்று கூறி அவனை வங்கிக்கு அழைத்துச் சென்றான் பரத்.

பரத் கூறியது போலவே வங்கிக்குச் செல்வதற்கு முன்பே இளமுகிலின் கைப்பேசி எண் செயல்பட ஆரம்பித்து விட்டது.

பரத்தின் நண்பன் ஒருவன் அந்த வங்கியில் வேலைச் செய்வதால் அவர்களுக்கு வந்த வேலை சுலபமாகவே முடிந்தது. எல்லாம் முடித்து விட்டு இருவரும் சோர்ந்து போய் வீடு வந்தனர்.

“ஹப்பா நல்ல வெயில். இதுக்கே இவ்ளோ டையர்டாகிடுச்சு.”

“ஆமா பரத். ஆனால் எனக்கு நல்லா இருந்துச்சு டா. வெளி உலகத்தைப் பார்த்து ரொம்ப நாளாகிடுச்சு டா. இன்னைக்கு இப்படி பயப்படாம வெளில வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு டா.”

“நான் தான் சொல்றேன்ல இனிமேல் உன் வாழ்க்கையில எல்லாம் சந்தோஷமாகவே இருக்கும் பார்.” என்று பரத் கூற, இளாவுக்கும் முதல் முறை அப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

இளாவும் பரத்தும் அவர்களே எடுத்துப் போட்டு சாப்பிட்டு விட்டு திரும்பவும் வெளியே கிளம்பிட்டனர். இளா புது வீட்டில் தங்குவதற்குத் தேவையான பொருட்கள் வாங்கச் சென்றனர். எல்லாம் வாங்கி அதை இளாவிற்குப் பார்த்த வீட்டில் அடிக்கி வைத்து விட்டு பரத் வீட்டிற்கு இருவரும் வர இரவாகி விட்டது.

~~~~~~~~~~

ப்ரனவிகா, இளா அவளது அறையிலிருந்து வெளியேறியதுமே ரேஷ்மியிடம் திரும்பி,”வேற எதாவது வொர்க் இருக்கா எனக்கு?”

“இப்போதைக்கு எதுவும் இல்லை மேம்.” என்று ரேஷ்மி கூற,

“சரி அப்போ நான் கிளம்புறேன். எதாவது வொர்க் இருந்தா எனக்கு ஃபோன் பண்ணுங்க. அவசரம் இல்லாட்டி நான் ஈவ்னிங்க் வரும் போது சொல்லுங்க.” என்று கூறிவிட்டு ப்ரனவிகா எழுந்து சென்று விட்டாள்.

ப்ரனவிகா வெளியே வந்து அவளது வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக அவளது வீடு நோக்கிச் சென்றாள். இன்று இளமுகிலனை சந்தித்ததை ஹரிதாவிடம் கூற வேண்டும் என்ற ஆவல். அதனால் எவ்ளோ சீக்கிரம் செல்ல முடியுமோ அவ்ளோ சீக்கிரம் சென்றாள்.

வீட்டிற்கு வந்த ப்ரனவிகா ஹாலில் அமர்ந்திருந்த தன் பாட்டியிடம்,”மரோ ஹரிதா அண்ணி எங்க?”

“என்ன விஷயம் வந்ததும் வராததுமா உன் அண்ணிய கேட்கிற?”

“அச்சோ சொல்லுங்க மரோ. அண்ணி எங்க? அவள் ரூம்ல இருக்காளா?” என்று கேட்க, சரி ஏதோ அவசரம் போல என்று எண்ணிய பாட்டி,

“அவள் பூர்ணியோட வெளில போயிருக்கா ப்ரனு.” என்று கூற,

“ப்ச் இன்னைக்குனு பார்த்தா இந்த அண்ணி வெளில போகனும்.” என்று ப்ரனவிகா சலித்துக் கொள்ள,

“ஏன் ப்ரனு என்னைக்கும் இல்லாத திரு நாளா இன்னைக்கு உன் அண்ணிய இப்படித் தேடுற?” என்று பாட்டி கேட்க, உடனே சுதாரித்துக் கொண்ட ப்ரனவிகா,

“அதலாம் ஒன்னுமில்லை மரோ. இன்னைக்கு ஒரு ப்ரண்ட ரொம்ப நாள் கழிச்சு பார்த்தேன். அதை அண்ணிகிட்ட சொல்லனும் அவ்ளோ தான்.” என்று திக்காமல் திணறாமல் ப்ரனவிகா கூற, பாட்டியும் அவள் கூறுவது உண்மை என்று நம்பி,

“அப்படியா விஷயம். அவங்க பக்கத்துல தான் போயிருக்காங்க.வந்துடுவாங்க, நீ போய் முகம் கழுவிட்டு வா.” என்று பாட்டி கூற, மறுபேச்சு எதுவும் பேசாமல் ப்ரனவிகாவும் அவளது அறைக்குச் சென்றாள்.

ப்ரனவிகாவும் பாட்டி சொன்னபடி முகம் கை கால் எல்லாம் கழுவி விட்டு அவளது படுக்கையில் படுத்தாள். இத்தனை நாட்களும் அவள் இளமுகிலனை திரும்பிப் பார்ப்போம் என்று எண்ணியது இல்லை. இன்று அவனை நேரில் அதுவும் தனது அகாடமியில் பார்த்தது அவ்வளவு மகிழ்ச்சியை அளித்தது. அவள் கண் மூடி படுத்திருக்க, சரியாக ஹரிதா வந்து அவளது கையில் அடிக்கப் பட்டென்று எழுந்தாள் ப்ரனவிகா.

“ஹேய் அண்ணி நீ தானா? இப்படியா அடிப்ப நீ? ஹப்பா வலிக்குது லூசு அண்ணி.”

“ஏய் என்னைத் தேடுனதா அம்மாச்சி சொன்னாங்க. அதான் என்னன்னு கேட்கலாம்னு வந்தா என்னை லூசுனு சொல்ற.” கோபமாக ஹரிதா கேட்க,

“ஆமா எவ்ளோ ஹாப்பி நியூஸ் தெரியுமா. அதுத் தெரிஞ்சா என்னை விட நீ தான் ரொம்ப சந்தோஷப்படுவ.” புதிராக ப்ரனவிகா கூற,

“அப்படி என்ன ஹாப்பி நியூஸ் ப்ரனு?”

“அண்ணி இன்னைக்கு நம்ம அகாடமிக்கு யார் வந்தாங்கனு தெரியுமா?”

“ஏய் அகாடமி போறது நீ. அங்க நான் வரவே மாட்டேன். என்கிட்ட அங்க யார் வந்தாங்கனு கேட்டா நான் என்ன பதில் சொல்றது ப்ரனு?”

“அச்சோ அண்ணி, சரி நான் உனக்கு க்ளூ தரேன். எனக்கு ரொம்ப பிடிச்ச பெர்சன் வந்தாங்க.” என்று சிரித்துக் கொண்டே ப்ரனவிகா கூற,

“இது என்ன க்ளூ ப்ரனு? உனக்குப் பிடிச்ச பெர்சன் நிறையப் பேர் இருக்காங்க. அதுல நீ யாரை சொல்ற?”

“ப்ச் அண்ணி எனக்குப் பிடிச்ச பெர்சன் நிறையப் பேர் இருக்காங்க தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனால் நான் இவரை ஒரு இரண்டு மூணு வாட்டி தான் பார்த்திருப்பேன்.” என்று ப்ரனவிகா கூற, ஹரிதா யோசித்தாள். அவளுக்குச் சட்டென்று எதுவும் தோன்றவில்லை.

“ப்ச் ப்ரனு எனக்குத் தெரியலை.”

“அண்ணி நல்லா யோசி. அந்த பெர்சனை பத்தி நாம நிறைய வாட்டி பேசிருக்கோம். ஏன் இன்னைக்கு கூட பேசினோம்.” என்று அவள் கூறவும் அப்போது தான் மூளையில் ஒலி அடித்தது.

“ஹேய் நீ முகிலன் அண்ணாவையா பார்த்தா? அவங்க எப்படி நம்ம அகாடமிக்கு? உன்னைத் தேடித் தான் வந்தாங்களா? அப்போ அவங்களுக்கு உன் மேல ஒரு இது இருக்கா?” என்று வரிசையாகக் கேள்விகளை ஹரிதா கேட்க,

“அண்ணி நீ சொன்னபடி நான் முகிலனை தான் பார்த்தேன். ஆனால் நீயா வேற எதுவும் கற்பனை பண்ணிக்காத. அவர் நம்ம அகாடமில வேலை கேட்டு வந்தார்.”

“என்ன சொல்ற? வேலை கேட்டு வந்தாரா? அவர் எதுக்கு நம்ம அகாடமிக்கு வேலைக்கு வரனும்?”

“அது எனக்கும் தெரியலை. நம்ம அகாடமில வெப் டெவலப்பரா அவரை நான் அப்பாய்ன்ட் பண்ணிருக்கேன்.”

“ஹேய் சூப்பர் ப்ரனு. அவர் எதுக்கு வந்தா நமக்கு என்ன?இத்தனை நாள் அவர் எங்க இருக்கார்னு நமக்கு எதுவும் தெரியாமல் இருந்தது. இப்போ அவர் உன் பக்கத்துலயே வந்துட்டார். அது தான் நமக்கு முக்கியம். அப்புறம் இது தான் விதியோ?”

“ப்ச் ரொம்ப யோசிக்காத அண்ணி. அவருக்கு நான் யார்னு கூடத் தெரியலைத் தெரியுமா.” சோகமாக ப்ரனவிகா கூற,

“ஹேய் லூசா நீ. அவருக்குத் தெரியாட்டி என்ன இனிமேல் அவர் உன் கூடத் தான இருப்பார். அப்புறம் என்ன கவலை? உன்னோட காதலை அவருக்குத் தெரியப் படுத்து அது போதும்.” என்று ஹரிதா கூற,

“அப்படியா சொல்ற?”

“ஆமா. அதுக்காக நாளைக்கே போய் லவ் பண்றனு சொல்லிடாதா. கொஞ்சம் கொஞ்சமா அவர் மனசுல இடம் புடிச்சு அதுக்கு அப்புறம் உன்னோட காதல்லை சொல்லு.” என்று ஹரிதா கூற, இப்பொழுதே ப்ரனவிகா கனவுலகம் சென்று விட்டாள்.

ப்ரனவிகா தன் காதலைத் தெரியப் படுத்துவதற்கு முன் அவள் சில இன்னல்களைச் சந்திக்க வேண்டும் என்று பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை. இவர்கள் இருவரது பேச்சையும் கேட்டு விதிக் கை கொட்டிச் சிரித்தது.

Advertisement