Advertisement

ப்ரனவிகா மிகுந்த சந்தோஷத்துடன் தன் நண்பர்களுடன் அந்த ஆடிட்டோரியம் உள்ளே சென்றாள். ப்ரனவிகாவும் ஹரிதாவும் மட்டும் தான் பெண்களில் இங்கு வந்துள்ளனர். மற்றவர்கள் அனைவரும் மால் சென்று விட்டார்கள். அவர்களுடன் துணைக்காக ஒரு பையன் சென்றான். மற்ற மூவரும் ப்ரனவிகா மற்றும் ஹரிதாவுடன் இங்குத் தான் இருந்தார்கள்.

“ஏய் முப்பத்திரண்டு பல்லும் தெரியுது. பார்த்து மா அப்புறம் எவனாது கோல்கேட் ஆட்னு நினைச்சு உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கானு கேட்டுட போறாங்க.” என்று ஹரிதா சிரிக்காமல் நக்கலடிக்க,

“காமெடியா? ஹீ ஹீ சிரிச்சுட்டேன் போதுமா?”

“என்ன நக்கலா?”

“இல்லை விக்கல். கொஞ்சம் நேரம் அமைதியா இரேன் அண்ணி.”

“ஏய் இன்னும் உன்னோட ஆள் ட்ர்ன்(turn) வரவே இல்லை.”

“ப்ச் சும்மா இரு அண்ணி. ஆள் எல்லாம் கிடையாது. இது ஜஸ்ட் க்ரஷ் தான்.”

“நம்பிட்டேன் நம்பிட்டேன். ஓகே சீரியஸா ஒன்னு கேட்கிறேன். நாம இங்க இருந்து போனதும் எப்படி அவரை கான்டேக்ட் பண்ணுவ? அவரோட ஃபோன் நம்பர் வாங்க வேண்டாமா?”

“ப்ச் அண்ணி, இது ஜஸ்ட் க்ரஷ் அவ்ளோ தான். நீ நான் சொல்றதை நம்ப மாட்டீங்கிற!! வேணும்னா பார் நாம திரும்ப ஊருக்குப் போனதும் நான் அவரை முழுசா மறந்துருவேன். அப்போ நீ ஒத்துக்குவ நான் சொல்றது உண்மை தான்னு.” என்று தீவிரமாக ப்ரனவிகா கூற, ஹரிதாவும் தான் தான் தேவையில்லாமல் யோசிக்கிறோமோ என்று அமைதியாகி விட்டாள்.

பின்னர் இருவரும் நிகழ்ச்சியை ரசிக்க ஆரம்பிக்க, சரியாக அரை மணி நேரத்தில் இளமுகிலன் மேடை ஏறினான். அரங்கமே அமைதியாகி விட்டது. குண்டூசி விழுந்தால் கூட முழு அரங்கிற்கும் கேட்கும் அளவுக்கு அமைதி. ப்ரனவிகா வியப்பாகப் பார்த்தாள்.

மேடை ஏறிய இளமுகிலன் அவனுக்கு என்று அவனது நண்பன் கொண்டு வந்த இருக்கையில் ஒரு கால்லை தரையில் வைத்தும் மறு கால்லை இருக்கையின் கம்பியில் வைத்தும் அமர்ந்தான். பின்னர் அவன் முன்பு இருந்த ஒலிவாங்கியை அவனுக்கு ஏற்றது போலச் சரி செய்தான்.

ப்ரனவிகாவிற்கு என்ன தோன்றியதோ அவளது கைப்பேசியை எடுத்து முதலில் வீடியோ எடுக்கலாம் என்று வீடியோ எடுக்கும் செயலியை எடுத்தாள், ஆனால் எங்கு ஹரிதா கிண்டலடிப்பாளோ என்று யோசித்து, குரல் பதிவு செய்யும் செயலியை எடுத்து அவனது இனிமையான குரலைப் பதிவு செய்ய ஆரம்பித்தாள்.

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனி விழும் காடு
ஒத்தையடி பாத உன் கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே

மூங்கில் தோட்டம்  மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்

குளத்தாங் கரையில குளிக்கும் பறவைகள்
சிறகு உலக்குமே துளிகள் தெரிக்குமே

முன் கோபம் விடுத்து முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க நான் ஒன்ன அணைக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே

மரங்கள் நடுங்கும் மார்கழி எரிக்க
ரத்தம் ஒரையும் குளிரும் நிறுத்த

உஷ்னம் யாசிக்க உடலும் இருக்க
ஒத்த போர்வையில இருவரும் இருக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு

நீ போதுமே…

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனி விழும் காடு
ஒத்தையடி பாத உன் கூட பொடி நட

இது போதும் எனக்கு இது போதுமே

வேறேன்ன வேணும் நீ போதுமே

பாட்டை இளமுகிலன் பாடி முடிக்க, அரங்கமே முழுவதும் கரகோஷம் எழுப்பி அவனைப் பாராட்டினர். ப்ரனவிகாவிற்கு கண்ணீர் வந்து விட்டது. அவளுக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று. பாட மட்டும் செய்யாமல் அவனது கிட்டாரிலும் அவன் இசையமைக்க, பாட்டுப் பிடிக்காதவர்கள் கூட கண்டிப்பாக மெய் மறந்து போய் விடுவார்கள். அவனது கச்சேரி அவ்ளோ அருமையாக இருந்தது.

ப்ரனவிகாவும் மெய் மறந்து உட்கார்ந்திருக்க, ஹரிதா தான்,”ஏய் ப்ரனு நம்ம பசங்க கிளம்பிட்டாங்க, வா நாமளும் போகலாம்.” என்று அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.

இவர்களது தோழர்கள் இளமுகிலனிடம் தான் பேசிக் கொண்டு இருந்தார்கள். ப்ரனவிகாவும் ஹரிதாவும் வேகமாக அவர்களிடம் சென்று,”நீங்க சூப்பரா பாடுனீங்க. சான்ஸே இல்லை, உங்க வாய்ஸ் அவ்ளோ ஸ்வீட்டா இருந்தது. இந்த சாங்குக்கு ஏத்த மாதிரி கிட்டார் வேற வாசிச்சீங்களா செம சார் நீங்க.” என்று மெய் மறந்து உளமார ப்ரனவிகா கூற, இளமுகிலனிற்கு ஒரு மாதிரி கூச்சமாகி விட்டது.

“தாங்க் யூ.” என்று சிறு வெட்கத்துடன் அவன் கூற, அவனது முகமும் செம்மையுற, ப்ரனவிகாவின் இரு விழிகளும் அவனது முகத்தைப் படம் பிடித்து அவளது நெஞ்சத்தில் சேகரித்து விட்டது.

“ஆமா அண்ணா நீங்க செமயா பாடுனீங்க.” என்று ஹரிதா கூற, இளமுகிலனிற்கு அவளது அண்ணா அவனது மனதை மகிழ்வித்தது.

“தாங்க்ஸ் மா.” என்று அவனும் சிரித்த முகமாகக் கூறினான். ஆனால் இந்தச் சிரிப்புக்கும் சற்று முன்னர் ப்ரனவிகாவிடம் நன்றி கூறிய போது வந்த சிரிப்புக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது.

சிறிது நேரம் பேசிவிட்டு அனைவரும் கிளம்பி விட, ப்ரனவிகாவிற்கு தான் மனம் ஒரு நிலையிலே இல்லை. அவளைப் பொறுத்த வரை இளமுகிலன் மேல் வந்துள்ள உணர்விற்குப் பெயர் க்ரஷ் தான். அவளது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டாள் இளமுகிலனை மறந்து விடுவாள் என்று அவளை அவளே சமாதானப்படுத்திக் கொண்டு ஊருக்குக் கிளம்பினாள்.

ஆனால் அவள் நினைத்தது போல் அவளது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி மாதங்கள் கடந்தும் அவளால் இளமுகிலனை மறக்க முடியவில்லை. அவளது காலையே இளமுகிலனின் குரலில் தான் விடியும். எதையோ பறி கொடுத்தது போலவே இருந்தாள். வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவு கேட்டும் அவள் பதில் சொல்லவில்லை. ஹரிதாவிடமும் அவர்கள் கேட்க, அவளுக்கு என்ன காரணம் என்று தெரிந்தும் அவர்களிடம் அவள் எதுவும் சொல்லவில்லை. தனக்கும் எதுவும் தெரியாது என்று பொய்யுரைத்தாள்.

“உனக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஒழுங்கா உண்மையைச் சொல்லு ஹரிதா.” சற்று அதட்டலாக பூர்ணிமா கேட்க,

“அம்மா நிஜமா எனக்குத் தெரியாது. நான் வேணா அவகிட்ட கேட்டுட்டு சொல்றேன்.” என்று அவள் கூற,

“விடு பூர்ணி. அதான் கேட்டு சொல்றேன்னு சொல்றாளா!!” என்று கூறிய பாட்டி, ஹரிதாவிடம் திரும்பி,”நீ என்னன்னு கேட்டுட்டு சொல்லு ராஜாத்தி. ப்ரனுவ இப்படிப் பார்க்கவே எங்களுக்குப் பிடிக்கலை. என்ன பிரச்சனை இருந்தாலும் சரி பண்ணிடலாம்” என்று உருக்கமாகப் பாட்டிக் கூற, ஹரிதாவிற்கு தான் சங்கடமாகியது.

“அம்மாச்சி நீங்க வருத்தப்படாதீங்க. கண்டிப்பா எந்தப் பிரச்சனையும் இருக்காது. நான் அவகிட்ட என்னன்னு கேட்கிறேன்.” என்று கூறிவிட்டு, ஹரிதா ப்ரனவிகா அறைக்குச் சென்றாள்.

ப்ரனவிகா அவளது அறையின் பால்கனியில் உள்ள ஊஞ்சலில் எதையோ பரிக் கொடுத்தவள் போல் அமர்ந்திருந்தாள். அதைப் பார்த்ததும் ஹரிதாவிற்கு பயங்கர கோபம். வேகமாக அவளிடம் சென்று அவளை ஒரு உலுக்கு உலுக்க, ப்ரனவிகா எரிச்சலாக ஹரிதாவைப் பார்த்தாள்.

“அண்ணி உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சருக்கு. எதுக்கு இப்படி பிசாசு மாதிரி உல்லுக்குற?” சற்று எரிச்சலாகப் பர்னவிகா கேட்க,

” ஆமா நீ பண்றது எல்லாம் பண்ணிட்டு உனக்கு எரிச்சல் வேற வருதா.”

“ப்ச் நான் என்ன பண்ணினேன்.”

” நீ என்ன பண்ணல. உன்னால வீட்டுல இருக்குறவங்களுக்கு தான் நிம்மதியே இல்லை.”

“அவங்க நிம்மதி போற மாதிரி நான் என்ன செஞ்சேன்.”

“என்கிட்ட அடி வாங்காத ப்ரனவிகா. நீ இப்படி எதையோ தொலைச்ச மாதிரி உட்கார்ந்து இருக்கறதுனால அம்மாச்சி, தாத்தா, மாமா, அத்தான், அம்மா எல்லாருமே சோகமா இருக்காங்க.”

“என்ன சொல்ற அண்ணி?”

“ஆமா உன்னை யாரும் கவனிக்கலைனு நினைச்சியா?எல்லாரும் உனக்கு ஏதோ பிரச்சனை நெனச்சு பயந்துட்டு இருக்காங்க.” என்று கோபமாக ஹரிதா கூற,

” இல்ல அண்ணி எனக்கு முகிலன் ஞாபகமாவே இருக்கு.”

“நான் தான் அப்பவே சொன்னேன்ல அண்ணா கிட்ட ஃபோன் நம்பர் வாங்கு அப்படின்னு!! அப்போ எல்லாம் இது வெறும் கிரஷ்னு சொல்லிட்டு இப்போ எதையோ தொலச்ச மாதிரி உட்கார்ந்து வீட்டுல இருக்கிறவங்களோட நிம்மதியையும் கெடுக்கிற.”

“எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல அண்ணி.”

“இப்போ வந்து புலம்பி என்ன பண்றது? நான் சொல்லும் போதே கேட்டுருக்கனும். சரி இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை, நம்ம க்ளாஸ் பசங்க அன்னைக்கு வந்தாங்கள அவங்ககிட்ட கேட்டுப் பார்க்கலாம். கண்டிப்பா அவங்ககிட்ட அண்ணா நம்பர் இருக்கச் சான்ஸ் இருக்கு.”

“அட ஆமா அண்ணி. நான் இதை யோசிக்கவே இல்லை.” என்று சற்று மகிழ்ச்சியுடன் கூற,

“இங்கப் பார் ப்ரனு இந்த உலகத்துல முடியாத காரியம்னு எதுவுமில்லை. நாம நினைச்சா கண்டிப்பா அதை முடிச்சுக் காட்டாலாம். அதை விட்டுட்டு இப்படிச் சோர்ந்து உட்கார்ந்தா எல்லாம் ஆச்சா?”

“சாரி அண்ணி. எனக்கு மூளையே வேலை செய்யலை. நீ சொல்லும் போதே அவர்கிட்ட எப்படியாவது ஃபோன் நம்பர் வாங்கியிருந்தா இப்போ இவ்ளோ பிரச்சனை இருந்துருக்காது.” என்று அவள் கூற,

“இப்போவும் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் ஒன்னும் செவ்வாய் கிரகத்துல இல்லை சரியா. நமக்குக் கண்டிப்பா ஏதாவது வழி கிடைக்கும்.” என்று நம்பிக்கையாக ஹரிதா கூற, ப்ரனவிகா எழுந்து கீழே சென்றாள்.

அவள் சிரித்த முகமாக வருவதைப் பார்த்ததும் தான் பெரியவர்களுக்கு மூச்சே வந்தது. நம்பியப்பன் அவளது தலையை வருடி,”இங்கப் பார் ப்ரனு, உனக்கு எந்தப் பிரச்சனையா இருந்தாலும் எங்ககிட்ட சொல்லிடு டா, இப்படி மூஞ்சை தூக்கி வைச்சுட்டு மட்டும் இருக்காத. எங்களால உன்னை அப்படிப் பார்க்க முடியலை.” உருக்கமாகத் தாத்தா கூற, ப்ரனவிகாவிற்கு அவளது தவறு அப்பொழுது தான் புரிந்தது. இனி இப்படிச் செய்து அவர்களை நோகடிக்கக் கூடாது என்று முடிவெடுத்தாள்.

“கண்டிப்பா இனிமேல் இப்படி இருக்க மாட்டேன் தாத்தா.” என்று சத்தியம் செய்யாத குறையாக உறுதியுடன் ப்ரனவிகா கூறினாள்.

அடுத்த அடுத்த வந்த நாட்களில் அவர்கள் எவ்ளோ முயற்சி செய்தும் இளமுகிலன் பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவளது துரதிஷ்டம் அவர்களது வகுப்புத் தோழன் கொடுத்த நம்பருக்கு அழைத்தாள் உபயோகத்தில் இல்லை என்றே வந்தது. என்ன தான் டெக்னாலஜி வளர்ந்தாலும் சிலருக்கு சமூக ஊடங்களில் பெரிதாக ஈர்ப்பு இருக்காது. இளமுகிலனும் அந்த வகையில் உள்ளவன் தான். அவனுக்குச் சமூக ஊடகங்களில் ஈர்ப்பு என்றுமே வந்தது இல்லை. அதனால் அதிலெல்லாம் அவன் எந்தக் கணக்கையும் தொடங்கவில்லை. அதனால் அவர்களால் இளமுகிலனை கண்டுபிடிக்க முடியவில்லை.

ப்ரனவிகாவும் மற்றவர்கள் முன்பும் ஹரிதா முன்பும் சிரித்த முகமாக வலம் வந்தாள். ஆனால் மனதிற்குள் நான்கு வருடமாகியும் இளமுகிலனை அவள் மறக்கவில்லை. அதை ஹரிதாவும் நன்குப் புரிந்து வைத்து இருந்ததால் தான் அஸ்வத், ப்ரனவிகா திருமணம் பற்றிப் பேசும் போது அவளது விருப்பத்தைக் கேட்கக் கூறி வற்புறுத்தினாள்.

இதை எல்லாம் ப்ரனவிகா இளமுகிலனிடம் கூற, மற்றவர் யாராவது இருந்திருந்தால் கண்டிப்பாக அவளது காதலை எண்ணி வியந்து இருப்பார்கள். ஆனால் அவள் முன்னால் இருந்தது இளமுகிலன். வியப்பிற்குப் பதில் அவனுக்குப் பயமே வந்தது. மறுபடியும் காதல்லா என்று யோசித்தான்.

அவனது யோசனை நிறைந்த முகத்தைப் பார்த்த ப்ரனவிகா,”எனக்குப் புரியுது முகிலன், உங்களுக்கு நான் சொன்னது கேட்டு அதிர்ச்சியா இருக்கும். ஏன் என்னைப் பைத்தியம்னு கூட நீங்க நினைச்சுருக்கலாம். ஆனால் இது முழுக்க முழுக்க என்னோட எண்ணம் மட்டும் தான். நான் உங்களை எந்த விதத்திலும் வற்புறுத்த மாட்டேன். எனக்கு உங்களைப் பிடிச்சுருக்கு முகிலன். அதைச் சொல்றதுல எனக்கு எந்த வித தயக்கமும் இல்லை. உங்களுக்கு என்னைப் பிடிக்கனும்னு நான் கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்.” என்று அவள் கூற,

இளமுகிலனிற்கு பர்னவிகா கூறியதைக் கேட்டு தேஜாவு போலத் தான் இருந்தது. ஏனென்றால் இதே போல் காதல் வசனங்களைப் பேசி அதனால் அவன் சந்தித்த பிரச்சனை எல்லாம் அவன் மனதில் வந்து போகப் பட்டென்று எழுந்து,”சாரி நான் கிளம்புறேன்.” என்று கூறி, பர்னவிகாவிற்கு பேச வாய்ப்பு அளிக்காமலே அவன் அங்கிருந்து சென்று விட்டான்.

ப்ரனவிகா இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அசையாமல் அப்படியே அமர்ந்திருக்க, ரேஷ்மி உள்ளே வந்தவள் அவள் மட்டும் இருப்பதைப் பார்த்து,”மேம் இளமுகிலன் இல்லையா?” என்று கேட்க, அப்பொழுது தான் நிதர்சனத்திற்கு வந்தாள்.

“இல்லை அவர் போயிட்டார்.” என்று மட்டும் அவள் கூற,

“என்ன சொல்றீங்க மேம்?” என அவள் கேட்க,

“நத்திங். நீங்க டேபிள் அண்ட் சேர் அரேன்ஜ் பண்ணுங்க. கூடவே இருந்து பார்த்துக்கோங்க. எதாவது அவசரம்னா எனக்குக் கூப்பிடுங்க. நான் கிளம்புறேன்.” என்று கூறிவிட்டு அவளும் அங்கிருந்து செல்ல, ரேஷ்மிக்கு ஒன்றும் புரியவில்லை. இது போல் என்றுமே ப்ரனவிகா வந்தவுடன் கிளம்பியது இல்லை. அதே போல் அந்த இடத்தில் இளமுகிலன் இல்லை என்பதும் அவளை யோசிக்க வைத்தது. ஆனால் அவளால் ஒன்றும் பண்ண முடியாதே அதனால் ப்ரனவிகா கூறிய வேலையை முடித்து விட்டே அவள் அவளது இருக்கைக்குச் சென்றாள்.

~~~~~~~~~~

நேராக வீட்டிற்கு வந்த இளமுகிலனிற்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. அவனால் மறுபடியும் ஓடி ஒளிய முடியாது. ஒரு தடவை அவன் காதலால் பட்டது போதும். மறுபடியும் அதில் சிக்க அவன் விரும்பவில்லை. இதை பரத்திடமும் கூற அவனுக்கு மனது வரவில்லை. அவனுக்கு இனிமேலும் பாரமாக இருக்க விரும்பவில்லை. இதுவரை பரத் அவனிற்குச் செய்ததே பெரிய விஷயம். இந்தப் பிரச்சனையைத் தனியே எதிர் கொள்ளலாம் என்று முடிவெடுத்தான். கூடவே இனி இந்த ஊரில் இருக்கக் கூடாது என்றும் முடிவெடுத்தான். பல சிந்தனையுடன் தான் இந்த ஊருக்கே வந்தான் ஆதன். சிறிது நாட்கள் எவ்வளவு முடியுமோ அவ்ளோ சந்தோஷமாக இங்கு இருந்து விட்டு திருச்சி செல்ல வேண்டும் என்பது தான் அவனது திட்டம். இதை பரத்திடம் கூட அவன் கூறவில்லை. ஆனால் வந்த இரண்டாவது நாளே இப்படி ஒரு திருப்பத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை. எங்குச் செல்வது எனப் புரியாமல் முழித்துக் கொண்டிருந்த போது தான் அவனது கைப்பேசி ஒலி எழுப்பியது. தயக்கத்துடன் எடுத்துப் பார்த்தான் இளா. பரத் தான் அழைத்திருந்தான்.

நிம்மதியுடன்,”சொல்லு பரத்.” என்று எதுவும் நடக்காதது போல் கேட்க,

“டேய் இப்போ எங்க இருக்க?”

“வேற எங்க டா இருப்பேன்? அகாடமில தான் இருக்கேன். ஏன் கேட்கிற?”

“நல்லா பொய் சொல்ற இளா. உனக்குப் பொய் சொல்லத் தெரியும்னு எனக்கு இப்போ தான் தெரியும். நீ வேக வேகமா கிளம்புனதை ஓவி பார்த்துட்டு எனக்குக் கூப்பிட்டா.”என்று அவன் சற்றுக் கோபமாகக் கூற,

“இல்லை பரத் அது வந்து….” என்று அவன் தயங்க,

“இளா அவங்களுக்கு உன்னைத் தெரியும்னு சொன்னாங்களே? ஒரு வேளை திவ்யாவுக்கு தெரிஞ்சவங்களா? அதான் நீ கிளம்பி வந்துட்டியா?” என்று அவசரமாகக் கேட்க,

“இல்லை பரத். இது வேற விஷயம்.” என்று நடந்த அனைத்தையும் கூற, பரத்திற்கு என்னப் பதில் சொல்வது என்று புரியவில்லை.

“இளா இங்கப் பார் எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க டா!! ஓவி அவங்களை சொன்னதை வைச்சு பார்க்கும் போது கண்டிப்பா அவங்க நல்லவங்களா இருப்பாங்கனு தான் தோனுது. நீ தேவையில்லாம மனசைப் போட்டு குழப்பிக்கிறனு தோனுது இளா.”

“தெரியலை பரத், உண்மையைச் சொல்லப் போனால் எனக்குப் பயமா இருக்கு. எங்க மறுபடியும் நான் ஓடி ஒளியனுமோனு இருக்கு. கண்டிப்பா என்னால இதுக்கு மேல ஓடி ஒளிய முடியாது டா.”

“இளா நீ உடனே எந்த முடிவும் எடுக்காத. நல்லா யோசிச்சு அப்புறமா முடிவெடு. நீ எந்த முடிவெடுத்தாலும் நான் உன் கூட இருப்பேன். அதை மட்டும் மறந்துடாத. ஆனால் ஒன்னு சொல்றேன் இளா, நீ எல்லாரையும் திவ்யா மாதிரி பார்க்காத. அப்படிப் பார்த்தா உனக்கு எல்லாமே தப்பா தான் தெரியும்.” இளா வாழ்க்கையில் ஏதாவது அதிசயம் நிகழாதா என்ற ஆசையில் அவன் கூற, இளா எதுவும் கூறவில்லை.

“நீ சரிப்பட்டு வர மாட்டா இரு நான் அங்க வரேன்.” என்று பரத் கூற,

இளா வேகமாக,”ப்ச் போதும் பரத் நீ எனக்காகப் பார்த்தது எல்லாம். இனிமேல் நான் பார்த்துக்கிறேன் டா. நீ ஊருக்குக் கிளம்புற வேலையை மட்டும் பார். ப்ளீஸ் நீ இங்க வந்தா எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கும். நீ சொன்ன மாதிரி நான் யோசிக்கிறேன் டா. ப்ராமிஸா நான் எந்தத் தப்பான முடிவும் எடுக்க மாட்டேன்.” என்று கூற,

பரத்தும் அவனைப் புரிந்து கொண்டு,”இளா உன்னை நான் நம்புறேன். என்னை ஏமாத்திடாத. எல்லாரும் கெட்டவங்களா இருக்க மாட்டாங்க டா. அந்த வேலை வேண்டாம்னா விட்டுரு. நாம வேற ஏற்பாடு பண்ணிக்கலாம் சரியா.”

“ம் சரி டா. எனக்கு வாழ நிறைய ஆசை இருக்கு பரத். அதனால எந்தக் கஷ்டம் வந்தாலும் நான் தாங்குவேன். தப்பான முடிவெடுக்கிறதா இருந்தா எப்போவோ எடுத்திருப்பேன். அதனால் நீ என்னை தாரளமா நம்பலாம்.” என்று இளா கூற தான் பரத்திற்கு நிம்மதியாக இருந்தது. மேலும் சிறிது நேரம் பேசியவுடன் தான் வைத்தான் பரத்.

பரத்திடம் பேசி முடித்ததும் இளமுகிலனின் நினைப்பு கடந்த காலத்திற்குச் சென்றது.

Advertisement