அத்தியாயம் 5

         உருண்டு விழுந்து., கீழ்நோக்கி வந்தவர்கள் ஆங்காங்கு கட்டைகளிலும்,கல்லிலும், இடித்துக் கொண்டு இருவரும் நல்ல காயத்தோடு உருண்டு கீழே வந்து சேர்ந்தனர். அவ்வளவு தூரம் உருண்டு வரும் போதும் அவளை தன் கையில் சேர்த்து அணைத்து வைத்திருந்தான். அவளும் பயத்தில் அவனை  இறுக அணைத்து பிடித்து இருந்தாள். கீழே வந்து சேர்ந்து சமதளமான தரையில் விழுந்த பிறகு கூட இருவரும் பிரிந்து எழுந்து கொள்ளவில்லை., ஏனெனில் உருண்டு வந்த வேதனை இருவருக்குமே இருந்தது., ஒருவர் பாரத்தை ஒருவர் தாங்கிய படி உருண்டு வந்தது இன்னும் வலிகளை அதிகப்படுத்தி சொல்லியது.., எத்தனை தூரம் அடிப்பட்டு இருக்கிறது என்று இருவரும் உணர்ந்தாலும், அணைப்பை விலக்கி கொள்ளவில்லை.

     சற்று நேரம் அப்படியே ஒய்ந்து  இருந்தவர்கள்., பின் மெதுவாக எழுந்து கொண்டு அங்கு அருகில் ஓடிக்கொண்டிருந்த ஓடை நீரில் கை கால்களை கழுவி.,  உடம்பில் ஒட்டி இருந்த சகதியை (சேறு) தண்ணீர் வைத்து துடைத்து எடுத்தனர்.,

        அப்பொழுது  காயத்தில் ரத்தக்கசிவும் வீக்கமும் இரத்தக்கட்டும் இருப்பதை இருவருமே பார்த்துக்கொண்டனர்., ஒருவருக்கொருவர் உதவியும் கொண்டனர். அவனுக்காக ஒரு இடத்தில் கையை வைத்து கல்லைத் தள்ளியதில்., அவளுக்கு அக்கல்லில் இருந்த கூர்முனையாக இருந்த பகுதி கையை நன்றாகவே குத்தி இருந்தது. அதை பார்க்கும் போது அவனுக்கு தோன்றியது.,

    “நீ ஏன் கையை வைச்சி தள்ளுன., பாரு எப்படி குத்தியிருக்கு”, என்றான்.

“ நீங்க ஏன் காப்பாத்த வந்திங்க.., அத்தனை பேரும் வேடிக்கை தானே பார்த்தாங்க., நீங்களும் அப்படியே விட்டுருந்திங்க ன்னா., உங்களுக்கு அடி எதுவும் பட்டுருக்காது இல்ல”…

   “லூசா..டி, உனக்கு,  நீ., கீழே விழும் போது பார்த்துட்டு அங்கேயே நின்னு நான் என்ன பண்ணப் போறேன்”.

   அவளோ கலங்கிய கண்ணோடு அவனை நிமிர்ந்து பார்க்க., இருவரும் வேறு பட்ட மனநிலை., ஆனாலும் வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

  அவனுக்கோ.., ஏன் சட்டுன்னு இப்படி சொன்னோம் ன்னு ஒரு எண்ணம் வந்த பிறகுசுய அலசல் செய்ய தொடங்கினான்.

   அவளுக்கோ விழுந்த இடம் தெரியவில்லை., போகும் பாதையும், எங்கு கொண்டு சேர்க்கும் என்ற எண்ணத்தோடு ஒரமாக இருந்த கல் மேல் அமர்ந்து விட்டால்.,

    தான் அவளை காப்பாற்ற வந்த ஒரே காரணத்திற்காக அவள் தன்னை காப்பாற்ற போய் கையில் பெரிய காயத்தை உண்டு பண்ணி விட்டோமே என்று நினைத்துக்கொண்டான்.., அக் கல் மட்டும் அவன் தலையில் குத்தி  இருந்தால் கண்டிப்பாக நிறைய ரத்தம் போயிருக்கும்., அவள் கையிலும் ரத்தம் போய் இருக்க தான் செய்தது.

          அதுபோலவே நெற்றியிலும்., அவளுக்கு ஒரு மரத்தில் இடித்துக்கொண்ட போது அதில் இருந்த செதில் போன்ற பகுதி நெற்றியில் கிழித்து அதிலும் ரத்தம் அதிகமாக வந்து  இருந்தது.., அவளுக்காக சில இடங்களில் மட்டும் தான் இவன் கட்டையை தட்டிவிட்டான்.,மற்றபடி அவளை சேர்த்து பிடித்து இருந்த்தால் அவளின் முதுகு புறம் அதிகமான அடி இல்லை., பெரிய அடியாக இல்லாமல்.,  லேசாக ஆங்காங்கு சிராய்ப்பு மட்டும் நிறைய இருந்தது ., அவளுக்கு தான் நல்ல அடி.,

   வயநாடு பகுதி எப்போதும் மழை பெய்து கொண்டிருக்கும் பகுதி., ஆதலால் அங்கு மழை தூறிக்கொண்டே இருந்தது., இவர்கள் அந்த ஓடையில் கை கால்களை கழுவிய பின்பு அவன் ஜர்க்கின்க்குள் போட்டிருந்த ஸ்வட்டரை  மட்டும் கழட்டி அவளுக்கு போட கொடுத்துவிட்டான். ஜீன்ஸும் குர்தியும் போட்டிருந்தால் ஆங்காங்கு முதுகுப்பகுதியில் கிழிந்து இருந்ததால்.,முதலில் தயங்கியவள் இவளுக்கு குளிரிலும் உடையில் பின்புறம் இலேசான கிழிசல்களும் இருந்ததால் அவனுடைய ஸ்வட்டரை போட்டுக்கொண்டாள்.  அவனுடைய ஜர்க்கின் மழைத் தண்ணீர் பட்டால் கூட ஒட்டாத அளவிற்கு வழுவழு தன்மை இருந்ததால் அதில் அவனுக்கு சகதி கூட அவ்வளவாக ஒட்டவில்லை., அதை லேசாக துடைத்து விட்டு அப்படியே போட்டுக் கொண்டான்.

       இருவரும் அங்கிருந்து நடக்கத் தொடங்கினர். சற்று தள்ளி ஏதோ வீடுகள் நெருக்கமாக இருப்பது போல் தோன்றியதால் இருவரும் மெதுவாக நடந்து சென்றனர். ஆனால் இருவருக்கும் நல்ல அடி அவன் காலில் ஷூ போட்டிருந்ததால் அது கலண்டு போகவில்லை உருண்டு வரும் போதும்., ஆனால் இவளுடைய செருப்பு எல்லாம் போன இடம் தெரியவில்லை., இவள் வெறும் காலில் நடப்பது பார்க்கும் போது அவனுக்கு பாவமாகத்தான் இருந்தது., ஆனால் அவனாலும் தான் என்ன செய்ய முடியும்.

    சற்று தூரம் சென்ற பிறகு மகிமா என்று மெதுவாக அழைத்தான்

    சொல்லுங்க என்றாள் அவளுக்கு வலியின் வேதனை அதிகம் இருப்பதை அவள் குரல் வழி அவன் புரிந்து கொண்டான்., உருண்டு வந்த வேகத்தில் அவள் கழுத்தில் போட்டிருந்த ஸ்டோல் கிழிந்து போனதால்.,  அதை எடுத்து இவள் கையில் காயம் பட்ட இடத்தில் கட்டி விட்டிருந்தான்., நெற்றியில் அதை நனைத்தே துடைத்து விட்டு இருந்தான். கையில் கட்டியிருந்த துணியை மட்டும் நீக்காமல் பார்த்தான். காயத்தில் எதுவும் இடித்து விட கூடாதே என்று சொல்லி தான் கட்டி விட்டிருந்தான்., வேதனையோடு மெதுவாக நடந்து கொண்டிருந்ததால்., அவளிடமிருந்து மெதுவாக சிறிய ஒற்றை வார்த்தை பதில் மட்டுமே கிடைத்தது..

    “பயமா இருக்கா கொஞ்சம் பொறு., அந்த பக்கம் ஏதோ ஊர் தெரியிற மாதிரி இருக்கு போயிடலாம்., அங்க போய் எப்படி போறதுன்னு விசாரிப்போம்” என்று சொல்லும் போதே மழை வேகமாக தொடங்கியது…

    சற்று வேகமாக சென்று., அங்கே இருந்த அடர்ந்த மரத்தின் அடியில் ஒதுங்கிக் கொண்டனர். அவ்விடத்தில் அவ்வளவாக மழை விழவில்லை.,  ஏனெனில் மரத்தின் அடர்த்தி அவ்வளவு அதிகமாக இருந்தது..,

       சற்று நேரம் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்., அவளோ வலியின் வேதனையோடு மழை விழும் வேகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்., அந்த நேரத்திலும் அவளுக்கு மழையை ரசிக்க தான் தோன்றியது போல, என்று அதையும் அவன் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். அவள் வேறேதும் பேசவில்லை, அவள் ஏதோ யோசனையில் இருக்கிறாள், என்று மட்டும் அவனுக்கு தோன்றியது…

   அவள் கை இரண்டையும் முன்பக்கமாக இருக்கமாக கட்டிக் கொண்டு நிற்பதிலேயே புரிந்தது அவனுக்கு..,  அவளுக்கு குளிர்கிறது என்று.,  அவன் ஜெர்கின் போட்டிருந்ததால் அவனுக்கு அவ்வளவாக குளிர் தெரியவில்லை..

     மறுபடியும் மகிமா என்று அழைக்கவும், அவள் பதில் ஏதும் சொல்லாமல் அவனை திரும்பி மட்டும் பார்த்தால்., அவன் அவளது பார்வையிலேயே ஒன்னும் தப்பா நினைக்க மாட்டியே என்று கேட்கவும்..,

      என்ன என்று வாயை திறந்து கேட்டாள்

          “ரொம்ப குளிருது இல்ல” என்று அவளிடம் கேட்கவும்.,

     “ஏற்கனவே நனைந்திருத்த டிரஸெல்லாம்., இப்போ மழைத்தண்ணி படவும் கொஞ்சம் குளிருது” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே…,

        அவன் அவளை இழுத்து தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான்., அவள் அவனிடமிருந்து விடுபட அவனைத் தள்ளிக் கொண்டு நகர முற்படும்போது., அவன் சொன்னது “ஒன்னும் இல்ல, உன்னோட குளிருக்காக மட்டும் தான் தப்பான எண்ணத்தில் எதுவும் இல்லை., அதனால கொஞ்ச நேரம் அப்படியே அமைதியா நில்லு., கொஞ்சம் கதகதப்பா இருக்கும்” என்று சொல்லி அவளை மேலும் இறுக்கமாக அணைத்து தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான்..

        ஆனால் அவளுக்கு தான் ஏதோ போல் இருந்தாலும்., அந்த குளிருக்கு அவளால் எதுவும் சொல்ல முடியாததால் அவன் தோளில் தலைசாய்த்து அமைதியாக அவன் அணைப்பில் அடங்கி நின்றாள்..

      அவனுக்கும் அப்போதுதான் புரிந்தது தான் என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறோம் என்று.., இருந்தாலும் அவளை குளிரில் நடுங்க விட மனம் வரவில்லை., இத்தனை நாள் வகுப்பில் அவளை திட்டும் போதெல்லாம் வராத ஒரு பரிவு., அவளை தினமும் ஒரு மணிநேரம் முழுதாக நிற்க விட்டு தண்டனை கொடுக்கும் போதெல்லாம் வராத எண்ணம்., இப்போது ஏனோ அவளை தான் அதிகமாக கஷ்டப்படுத்தி விட்டதாகவே அவன் நினைத்தான்…

அது மட்டும் அல்ல., அவனுடைய சுய அலசலில் கிடைத்த பதில்., அவளை தனக்கு பிடித்திருக்கிறது என்று.., ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறது அல்லவா.., என் எண்ணம் என்னோடு போகட்டும்., என்று நினைத்துக் கொண்டிருக்க.., மழையின் வேகம் அதிகரிக்க தொடங்கவும்., சிறு சிறு தூரல் மரத்தின் அடர்த்தியும் மீறி விழுந்தது.

    மரத்தின் தண்டு பகுதியை ஒட்டி இருந்த வேர்., பெரிதாக திண்டு போல் இருக்க., அவளோடு அங்கு சென்று.., அமர்ந்தான். அப்போதும் அவன் கையணைப்பை விடாத படி..,

    தோளில் தலை சாய்ந்தவளின் தலையில்., அவனுடைய கன்னம் சாய்த்து அமர்ந்திருந்தான்.,

   அவளுடைய மனதிற்க்குள்ளும் ஆயிரம் கேள்வி., அவளோ பதில் தேட விரும்ப வில்லை.., எது எப்படி இருந்தாலும்., இந்த நிமிடம் நிஜம்., அதை மட்டும் பார்க்க வேண்டும். என நினைக்க., மனசாட்சியோ., நிரஞ்சன் இடத்தில் வேறு யாரும் இருந்தால் என்ன செய்திருப்பாய் என்று கேட்க., மனம் நடுங்கி போனது., கண்டிப்பாக இப்படி இருந்திருக்க மாட்டேன்., உயிர் போனாலும் பரவாயில்லை என்று காட்டுக்குள் காணாமல் போயிருப்பேன்…

    ஏற்கனவே என்ன பிரச்சனை எல்லாம் காத்திருக்கிறதோ.., இதுல இந்த மனசு வேற குழப்பி விடுதே… என்று திடப்படுத்திக் கொண்டாலும்., அவள் மன ஒட்டம் அவள் அறியாமல் இல்லை…,