“மிஸ் யுகந்தாரா தான் டாக்டர். எந்த பைத்தியத்தையும் நம்பி கழுத்தை நீட்டி, மிஸ்சஸ் ஆகி, அந்த பைத்தியம் என்னை விட்டுட்டு போய், நான் அவனை நினைச்சு பைத்தியம் ஆகுற அளவுக்கு முட்டாள் இல்லை டாக்டர்” என்றவளை அயர்ந்து போய் பார்த்தான் அகன்.
‘ஆத்தி ஆரம்பிக்கவே இல்லை. இந்த போடு போடுறா. திருப்பியும் என்னை பைத்தியம் ஆக்காம விட மாட்டா போலயே. இவளை நான் எப்போ சமாதனப் படுத்தி, குடும்பம் குட்டின்னு வாழ்றது. இப்பவே வயசு முப்பத்தி அஞ்சு ஆச்சு.கடைசி வரைக்கும் சந்நியாசி வாழ்க்கை தான் போல’ என்று மனதிற்குள் எண்ணியவன், யோசனையில் இருக்க,
“கேன் ஐ கோ டாக்டர்” என்றாள் அழுத்தமாய்.
“ப்ரோபஷனலா பேசி முடிச்சாச்சு. எனக்கு பர்சனலா கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. உங்க அப்பாயின்மென்ட் எப்போ கிடைக்கும் டாக்டர்” என்றான் அகன்.
“சாரி டாக்டர். தெரியாதவங்க யார்கிட்டயும் நான் பர்சனலா பேசுறது இல்லை” என்றாள் பட்டென்று.
“யுகா” என்றான் பட்டென்று தவிப்புடன்.
“யுகந்தாரா பூமிநாதன்” என்றவள் அடுத்த நிமிடம் அந்த அறையை விட்டு வெளியேறிருந்தாள். தன் அறைக்கு வந்து அமர்ந்தவளுக்கு தலையே சுற்றியது.
‘எப்படியெல்லாம் என்னை முட்டாளாக்கியிருக்கான். இவன் டாக்டர்ன்னே என்கிட்ட இருந்து மறைச்சிருக்கான். இன்னும் என்னென்ன மறைச்சிருக்கானோ தெரியலை. கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம எவ்வளவு கூலா பேசுறான். எத்தனை வருஷம் கழிச்சு வந்தாலும் இந்த இளிச்ச வாச்சி இவனை ஏத்துக்குவான்னு மனசுக்குள்ள நினைப்பு போல அவனுக்கு. மவனே நீ மட்டும் பக்கத்துல வந்து பாரு உன் மண்டையை உடைக்கலை, நான் தாரா இல்லடா’ என்று எண்ணிக் கொண்டவளுக்கு ஏனோ காரணமே இல்லாமல் அழுகையாய் வந்தது. வெளியே சொல்லாவிட்டாலும் அவள் மனதில் இருந்த வலிகள் இல்லையென்று ஆகிவிடாதே. அதற்கு மேல் அங்கு இருக்க முடியும் என்று தோணவில்லை.
‘ச்ச்ச..! அவளை எப்படியெல்லாம் சர்ப்ரைஸ் பண்ணனும்னு நினைச்சு வச்சிருந்தேன். எல்லாம் இந்த பாட்டியாலா சொதப்பிடுச்சே’ என்று நொந்து கொண்டவன், அவள் கிளம்பி செல்வதைப் பார்த்து வேகமாய் தானும் சென்றான்.
மதியமே வீட்டிற்கு வந்த மகளைப் பார்த்து பெற்றவர்கள் புரியாமல் பார்க்க, கோபமாய் வந்தவள் அறைக்குள் சென்று விட்டாள்.
“என்னாச்சு? ஒருவேளை மாப்பிள்ளை தாராவைப் பார்க்க போயிருப்பாரோ?” என்றார் வேணி.
அவர்கள் கணித்ததைப் போல் அவளின் பின்னாலேயே வந்திருந்தான் அகன்.
“தாரா” என்றான்.
“கோபமா ரூம்க்குள்ள போய்ட்டா மாப்பிள்ளை” என்று வேணி சொல்லி முடிக்கும் முன் அவனும் அவள் அறைக்குள் சென்றான்.
கையில் இருந்த ஹென்ட்பேக், கோட், ஸ்டெதஸ்கோப் என்று அனைத்தையும் விட்டு எறிந்திருந்தாள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலையில் கிடக்க, கைகளுக்குள் முகத்தை புதைத்தபடி அமர்ந்திருந்தாள்.
உள்ளே வந்த அகனோ நிதானமாய் அனைத்தையும் எடுத்து ஓரிடத்தில் வைத்தவன்,
‘நான் பார்த்துக்கிறேன்’ என்பதாய் அவள் பெற்றவர்களிடம் தலையசைத்துவிட்டு கதவை சாற்றியிருந்தான்.
கதவை அடைக்கும் சத்தத்தில் நிமிர்ந்தவள், அகனை அங்கே எதிர்பார்க்காது திகைத்து பின் அவனை முறைத்திருந்தாள்.
கைகளை கட்டியபடி அவன் அவளையே பார்த்திருக்க, அவளோ அவனைப் பார்ப்பதையே தவிர்த்தாள்.
“உன்னைத் தேடி நான் தான் வரணும்னு சொன்ன. இப்போ வந்துட்டேன்” என்றான் நிதானமாய்.
அவனைப் பார்த்து நக்கலாய் சிரித்தவள்,
“சார் ரொம்ப சீக்கிரம் வந்துட்டிங்க. ஏன் ஆற அமர யோசிச்சு இன்னும் ஒரு பத்து வருஷம் கழிச்சு வந்திருக்க வேண்டியது தானே” என்றாள் கோபமாய்.
“யுகா” என்று அவளின் அருகில் வந்தவனை,
“பக்கத்துல வந்த கொன்னுடுவேன். எனக்கு உன்கிட்ட பேசுறதுக்கு இஷ்ட்டமில்லை. மரியாதையா கிளம்பிடு” என்றாள்.
“யுகா” என்றான் மீண்டும்.
“எத்தனை பொய்? எல்லாமே பொய்? நீயும் பொய் தான், நீ சொன்ன எல்லாமே பொய் தான்” என்றாள் ஆத்திரம் தாங்க மாட்டாமல்.
“நான் உன்கிட்ட எந்த பொய்யும் சொல்லலை யுகா” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.
“ஹோ, அப்போ நீ டாக்டர்ன்றதை மறைச்சது பொய்யில்லையா?” என்றாள் கோபமாய்.
“நீ தெரிஞ்சுக்க விருப்பப்படலைன்னு சொல்லு. நான் மறைச்சேன்னு சொல்லாத” என்றான் பொறுமையுடன்.
“எஸ் நீ சொல்றது தான் கரெக்ட். உன்னைப் பத்தி எதுவுமே தெரிஞ்சுக்காம உனக்காக மட்டுமே உன்னை மேரேஜ் பண்ணேன் பாரு, அது தான் நான் செஞ்ச பெரிய தப்பு. அதான் விட்டுட்டு ஓடிப் போன?” என்றாள் ஆத்திரத்துடன்.
“விட்டுட்டு ஓடிப் போனேன்னு சொல்லாத யுகா. நான் உன்கிட்ட இன்பார்ம் பண்ணிட்டு தான் போனேன்” என்றான்.
“எது அந்த ரெண்டு வார்த்தை மெசேஜா. வாவ், அதுக்கப்பறம் சார் நாலு வருஷம் கோமாவுல இருந்திங்களா?” என்றாள் நக்கலாய்.
“அந்த நாலு வருஷம் என்னை குணப்படுத்திக்க நான் எடுத்துகிட்ட டைம். ஏன் என்னை சொல்றியே? நாலு வருஷம் நீ கோமாவுல இருந்தியா? அதே நம்பர் தான் இப்ப வரைக்கும் யூஸ் பண்றேன். உனக்கு ஏன் என்னை கூப்பிடனும்னு தோணலை. நானா வரணும்னு நீ சொன்னதுல ஒரு லாஜிக் இருக்கு. போன் கூட நானா பண்ணனும்னு அவசியம் இல்லையே. இவ்வளவு ஏன் நான் போட்ட மெசேஜ்க்கு கூட நீ ரிப்ளே பண்ணவே இல்லையே. நீயே எப்போடா இந்த பைத்தியதை விட்டொழிப்போம்னு நினைச்சிருப்ப. சமயம் கிடைச்ச உடனே யூஸ் பண்ணிகிட்ட” என்றான் அவள் கண் பார்த்து.
அவனின் பேச்சில் வெகுண்டவள்,
“இப்படி அபாண்டமா பேசாதிங்க அகன்” என்றாள் கோபமாய்.
“நீ பேசுனா கோபம், நான் பேசுனா அபாண்டமா? நல்ல கதையா இருக்கே. நீ அன்னைக்கு என்ன சொன்ன? நல்லா ஞாபகப் படுத்திப் பார் தாரா. என் அம்மாவோட நினைவு வேணுமா, இல்லை தாரா வேணுமா? ஒன்னும் அவசரமில்லை. யோசிச்சு முடிவு பண்ணிட்டு வாங்கன்னு தான சொன்ன. அதான் நானும் அவசரமில்லாம யோசிச்சு முடிவு பண்ணி தாரா தான் வேணும்னு வர நாலு வருஷம் ஆகிடுச்சு” என்றான் நக்கலாய்.
“நீ நம்பலைன்னாலும் அது தான் நிஜம் தாரா. நாலு வருஷம் என்ன நாற்பது நிமிஷம் கூட நீ இல்லாம இருக்க முடியாதுன்னு அன்னைக்கு நீ வந்தப்பவே எனக்கு புரிஞ்சிடுச்சு. இனி எந்த விதத்துலையும் உன்னை கஷ்ட்டப்படுத்தக் கூடாதுன்னு தான் நான் ஆஸ்திரேலியா கிளம்பிப் போனேன். உன்னை பிஜி அங்க படிக்க வைக்கிறது தான் என் பிளானே. அதுக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு இங்க வந்து பார்த்தா மேடம் டெல்லி கிளம்பிட்டிங்க. சரி படிக்கிற உன்னை தொந்தரவு பண்ண வேண்டாம்னு தான் கிளம்பிப் போனேன். உனக்காக மட்டுமில்லை. எனக்கான ட்ரீட்மென்ட் டைமா அதை மாத்திகிட்டேன். இப்போ உன் முன்னாடி நிக்கிறது யுகந்தாரா புருஷன் அகன் கார்த்திகேயன் மட்டும் தான்” என்றான் நிதானமாய்.
“எனக்கு அப்படி எந்த புருஷனும் இல்லை” என்றாள் பட்டென்று.
“ஆனா எனக்கு பொண்டாட்டி இருக்காளே” என்றான் அவனும் விடாமல்.
“எனக்கு நீ வேண்டாம். இப்பன்னு இல்ல எப்பவுமே நீ வேண்டாம்” என்றாள் தாரா.
“இதுல யோசிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லை. எனக்கு நீ வேண்டாம் அகன்” என்றாள்.
“ஆனா எனக்கு நீ மட்டும் தான் வேணும். தாராவும் தாராவோட மொத்த லவ்வும் அகனுக்கு மட்டும் தான் வேணும்” என்றான்.
“இந்த ஜென்மத்துல அது நடக்காது. நீ என்ன ட்ரை பண்ணாலும் என்னை நெருங்கவே முடியாது” என்றாள்.
“நைட் முழுசா உன்கூட உன் பெட்ல ஒன்னாத்தான் தூங்கிட்டு இருந்தேன். இன்பேக்ட் மெத்தைன்னு நினைச்சு நீ என் மேல தான் தூங்கிட்டு இருந்த. இப்போ வந்து நெருங்க முடியாது அப்படி இப்படின்னுட்டு இருக்க” என்றான் நமட்டுச் சிரிப்புடன்.
“நீ..நீ பொய் சொல்ற” என்றவளுக்கு அப்போது தான் உரைத்தது.
‘அப்போ எனக்கு அவன் விஷ் பண்ணது கனவு இல்லையா? காலையில கூட அந்த பெர்ப்யூம் ஸ்மெல் அடிச்சதே’ என்று எண்ணியவள் அவனை முறைக்க,
“மேடம்க்கு ஞாபகம் வந்திடுச்சு போல” என்றவன்,
“சும்மா சொல்லக் கூடாது உன்னோட கன்னம் அப்படியே பன் பட்டர் மாதிரி அப்படி ஒரு சாப்ட்” என்றபடி முன் சிகையை கோதியவனை முறைத்துப் பார்த்திருந்தாள்.
“உனக்கு நிஜமாவே குற்ற உணர்ச்சியே இல்லையா அகன்?” என்றாள் ஆழ்ந்த குரலில்.
“யுகா” என்றவன் அவளின் தவித்த முகத்தைக் கண்டு அப்படியே நிற்க,
“எந்த விதத்துல எனக்கு நியாயம் பண்ண அகன்? கல்யாணம் பண்ணி இரண்டு நாள்ல விட்டுட்டு ஓடிப் போயிட்டு இப்போ வந்து பக்கம் பக்கமா நீ வசனம் பேசுனா உடனே மயங்கி உன் பின்னாடி நான் வரணுமா? உங்க வீட்ல இருக்குற எல்லாரும் உனக்கு தண்டனை குடுத்தாங்க. ஆனா நீ அவங்களையெல்லாம் விட்டுட்டு எனக்கு தண்டனை கொடுத்திருக்க வேண்டாம் அகன். உனக்கு எப்பவுமே நான்னா இளக்காரம். எங்க போய்டப் போறா இவன்ற எண்ணம்? உன் அப்பாவுக்கும் உனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை” என்று அவள் சொன்னது தான் மாயம்,
“ஏய்..!” என்று கையை ஓங்கியவன், அவளின் மிரண்ட முகம் பார்த்து நிதானித்தான்.
“யாரை யார் கூட கம்பேர் பண்ற? நானும் அந்த ஆளும் ஒண்ணா? உனக்கு கோபம்னா என்னை செருப்பால கூட அடி வாங்கிக்கிறேன். ஆனா அந்த ஆளோட என்னை கம்பேர் பண்ணி பேசாத. அந்த அளவுக்கு தரங்கெட்டுப் போகலை இந்த அகன் கார்த்திகேயன்” என்று தன்னைத் தானே நிதானப்படுத்தியவன்,
“இங்க பார், ஆஸ்திரேலியாவை விட்டு இங்க வரணும்னு எனக்கு எந்த அவசியமுமே கிடையாது. அங்கயே நல்ல பொசிஷன்ல நல்ல நேமோட நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு கை நிறைய சம்பளம்னு ஜம்முன்னு இருந்தவன் நான். இந்த நாலு வருஷம் உன் படிப்பையும் தொந்தரவு பண்ணக் கூடாது. அதே சமயம் நானும் இங்க ஸ்டெடி ஆகணும்னு நினைச்சேன். அங்க இருந்துட்டு இங்க ஹாஸ்பிட்டல் ஸ்டார்ட் பண்றது அவ்வளவு ஈசி இல்லைன்னு உனக்கே தெரியும். எத்தனை ப்ரோசீஜர்ஸ்? எவ்வளவு அலைச்சல்? எவ்வளவு மெனக்கெடல்? எத்தனை பார்மாலிட்டிஸ்? எத்தனை பாலிடிக்ஸ்? அத்தனை பேரையும் சமாளிச்சு, எல்லாத்தையும் தாண்டி நிக்கிறது தான் ஏகே ஹாஸ்பிட்டல். இதெல்லாம் யாருக்காக? இந்த ஊரை விட்டு வர மாட்டேன்னு சொன்ன தாராவுக்காக. அவ ஒருத்திக்காக மட்டும் தான் இத்தனையும்.
நான் அப்ப சொன்னது தான் இப்பவும். நீ என் வாழ்க்கையில முக்கியமான பெர்சனா இருக்கணும்னு தான் இப்ப வரைக்கும் நினைக்கிற. ஆனா என் வாழ்க்கையே நீதான்னு நான் இப்பவும் சொல்றேன். இந்த நாலு வருஷம் உனக்கு மட்டுமில்ல, எனக்கும் வலி தான். உனக்காவது ஆறுதல் தேடிக்க ரெண்டு ஜீவன் இருந்தாங்க. எனக்கு அப்பவும் யாருமில்லை. இப்பவும் யாருமில்லை” என்றவன், பிரம்மை பிடித்தார் போல் நின்றிருந்தவளை இழுத்து அணைத்து முகம் முழுவதும் ஆவேசமாய் முத்தமிட்டவன், இறுதியில் அவள் இதழ்களில் இளைப்பாறிய பின்னரே அவளை விட்டான்.
அவளோ எந்த எதிர்வினையும் புரியாமல் இருக்க,
“நீ எப்பவும் போல ஹாஸ்பிட்டல் வரலாம். என்னோட தொந்தரவு உனக்கு இனி இருக்காது” என்றவன் அடுத்த நிமிடம் அங்கு நிற்காமல் கிளம்பிவிட்டான்.
அகன் கோபமாய் வெளியேறி வரவும், என்னவோ ஏதோ என்று பதறிப் போயிருந்த பூமிநாதனும் வேணியும் அவன் முகம் பார்க்க,
“விளக்கம் கேட்டா சொல்லலாம். ஆனா விலக்கி வைக்கனும்னு பேசுறவகிட்ட என்ன பேசியும் விளக்க முடியாது. அவளுக்கு என்னமோ அதையே பண்ணட்டும். இந்த அகன் வேண்டாம்னு முடிவு பண்ணா, நான் டிவேர்ஸ் குடுத்துடுறேன். அவளாவது நிம்மதியா இருக்கட்டும்” என்றவனின் வார்த்தைகள் அறைக்குள் இருந்த தாராவிற்கும் கேட்டது.