Advertisement

யோகி ரசித்து பார்த்தான்.. பின் தன் கைகளை மடக்கிக் கொண்டு பக்கவாட்டில் பெரிதாக்கிக் கொண்டே “குண்டாகிட்ட” என்றான்.

மிர்த்தி “இல்ல.. அப்படியேதான் இருக்கேன்..” என்றாள் சினுங்களாக.

யோகிக்கு, அந்த சினுங்களை செல்ல பிரியத்தை பற்றிக் கொள்ள வேண்டும் போல இருந்தது.. ம்.. அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் போலவே அவனின் உணர்வுகள் கிளர்ந்தது. ம்கூம்.. சரியில்லை இது என தளர்ந்தான்.

யோகி, நிதானித்து தன் கையில் வைத்திருந்த லட்டு இருந்த பாக்ஸ்சை இப்போது அவளிடம் கொடுத்தான்.. வாங்கிக் கொண்டாள். பின்  மிர்த்தி “என்ன அமைதியா இருக்கீங்க” என்றாள்.

யோகி “இல்லையே.. முன்னைவிட அழகாவும் இருக்கியா.. அதான் பார்த்தேன்” என்றான்.

மிர்த்திக்கு மீண்டும் இதயம் படபடவென அடித்துக் கொண்டது.. நிமிர்ந்து யோகியை பார்க்க முடியவில்லை.. பதில் சொல்லவோ.. அதை மறுத்து போசவோ தோன்றவில்லை. அமைதியாக நின்றாள்.

யோகி “எப்போ வருவேன்னு நான்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ரிசல்ட் அன்னிக்குதான் வருவியோன்னு நினைச்சிட்டேன். தனியா ரிசல்ட் பார்க்க பயமா இருந்தது.. என்னமோ தெரியலை.. ஒருமாதிரி இருந்தது நீ இல்லாமல்.” என்றான்.

மிர்த்தி ஏதும் பேசவில்லை.

யோகியே மீண்டும் “இனி எங்கயும் ரொம்பநாள் போகாத” என்றான்.

மிர்த்தி பதில் சொல்லவில்லை.

யோகியும் சற்று நேரம் ஏதும் பேசவில்லை.

சற்று நேரத்தில் ஜில்லென்ற காற்று யோகியின் நாசி நுழைய.. உயிர்ப்பு வந்தவன் போல “மிர்த்தி, லட்டு வாங்கிட்டு வந்திருக்கேன்.. அதே மாதரியே நீயும் இருக்க.. சாப்பிடு உனக்குத்தான்… அந்த கடையில் வாங்கினால் உனக்கு பிடிக்குமே.. ம்.. சாப்பிடு” என்றான்.

மிர்த்த்தி பொறுமையாக அந்த பாக்ஸ் திறந்து, தான் ஒன்று எடுத்துக் கொண்டு அவனிடம் ஒன்றை நீட்டினாள்.. யோகி “நீ சாப்பிடு, நான் இன்னும் டிபன் சாப்பிடல” என்றான்.

மிர்த்திக்கு அவன் பேசிய வார்த்தைகளே ஓடிக் கொண்டிருந்தது.. அதனால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை யோகியை.

யோகி “மிர்த்தி.. அமைதியா இருக்கா” என்றான் கேள்வியாக.

மிர்த்திக்கு இப்போது அவனின் சாதாரண குரல் புரிகிறது. ஆனால், அப்போது பேசிய அந்த குரலின் ஏக்கமான ஓசை இன்னமும் அவள் காதில் கேட்டுக் கொண்டே இருக்க ஏதும் பேச முடியவில்லை அவளால்.

யோகி “நான் பேசினதை சீரியஸா எடுத்துட்டியா.. உனக்கு நான் பேசினது புரியுதா..” என்றான்.

மிர்த்தி “ரொம்பநாள் என்னை விட்டு போகாதேன்னு சொன்னால்.. எனக்கு புரியலை. நான் எங்கும் போனதே இல்லை.. இப்போதானே போனேன்..” என்றாள் சிறுபிள்ளையாக.

யோகிக்கும் அதே பக்குவமில்லா நிலைதான் “ஏன் சொல்ல கூடாதா.. நான் சொல்ல கூடாதா.. எங்கயும் போகாதேன்னு..” என்றான் அவளின் முகத்தை நிமிர்த்தி பிடித்துக் கொண்டு.

மிர்த்திக்கு கண்கள் மின்னியது “தெரியலையே.. அப்பாதானே அனுப்பினார், நான் எப்படி போகமாட்டேன்னு சொல்லுவேன்.” என்றாள் உதடுகள் அழுகைக்கு தயாராகிய நிலையில்.

யோகிக்கு உண்மைதானே என தோன்ற.. “சரி மிர்த்தி.. எதோ எனக்கு தோணினத சொன்னேன். சாரி.. நான் நீ இல்லாமல் கொஞ்சம் தனியா இருந்த மாதிரி இருந்தது, அதான். ம்.. சரி நீ போயிட்டு வா.. இதுக்கு எதுக்கு அழற” என்றான் அதட்டலான குரலில்.

மிர்த்தி “நீங்களும் உங்க மாமா ஊருக்கு போங்க.. யார் வேண்டாம்ன்னு சொன்னது, சம்மர்ன்னா எல்லோரும் ஊருக்கு போவாங்கதானே” என்றாள்.

யோகிக்கு லேசாக புன்னகை வந்தது “சரி போறேன்.. நீ லட்டு சாப்பிடு” என்றான்.

மிர்த்தி அமைதியாக இருந்தாள்.

யோகி “லட்டு சாப்பிடு..” என்றான்.

பின்தான் உண்டாள் பெண்.

யோகியே கேட்டான் “ம்.. அடுத்த பத்து நாளில் உனக்கும் ரிசல்ட் வந்திடும்.. என்ன குரூப் எடுக்க போற..” என்றான்.

மிர்த்தி “செகண்ட் குரூப்..” என்றாள்.

யோகி “ம்.. இஞ்சினியர்.. ம்..” என்றான்.

மிர்த்தி “நீங்க என்ன படிக்க போறீங்க” என்றாள்.

யோகி “ஆடிட்டிங்தான்..” என்றான்.

நீண்ட நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்துவிட்டு தான்.. கீழே வந்தனர்.

ஜெகனுக்கு நான்கு நாட்களில் பள்ளி தொடங்கியது.

மிர்த்திக்கும் ஒருமாதத்தில் பள்ளி தொடங்கியது. அவள் தன் விருப்பபாடம் எடுத்து படிக்க தொடங்கினாள். என்ன இப்போதெல்லாம் யோகியை பார்க்க முடிவதில்லை. அவனும் வாரத்தில் இரண்டு நாட்கள்.. அவளோடு பஸ் ஏறுவதற்கு என நடந்து வந்து ஏற்றி விடுவான். தினமும் முடியாதல்லவா.. அது நன்றாக இருக்காதென அவனிற்கே தோன்ற.. அவள் பள்ளி செல்லும் போது தன் கடை வாசலில் நின்று பார்ப்பான் புன்னகையோடு. மிர்த்தியும், யோகியை பார்த்து புன்னைப்பாள்.

யோகிக்கு, கல்லூரி தேடினர். யோகி வெளியூர் போகமாட்டேன் என்றுவிட்டான். சீனிவாசன், அவனின் மாமா சென்னைக்கு அழைத்தார்.. கல்லூரி படிப்பதற்கு யோகியை. ரெங்கனும் ‘போய் படிப்பா’ என்றார். ஆனால், யோகிக்கு எங்கும் போக மனதில்லை. இங்கேதான் கல்லூரி படிப்பேன் என அடம் பிடித்து B.Com சேர்ந்தான். 

ஆக, மிர்த்தியோடு அதே நேரத்திற்கு பஸ் ஏறுவதற்கு என மூவரும் தெரு முனைக்கு வருவர். முதலில் பள்ளி பேருந்து வரும்.. அவளை ஏற்றிவிட்டுதான் யோகி பஸ் ஏறுவான். எப்போதும் போல.. அவனுக்கு என உணவு வரும்.. இப்போதெல்லாம் பெரிய டப்பாவின் மதியம் லஞ்ச் வந்துவிடுகிறது யோகிக்கு. 

யோகி, கல்லூரி சென்றது முதல் தன்னையே சோதித்துக் கொண்டான்.. நிறைய பெண்களை பார்த்தான். ம்.. மிர்த்தி மாதிரி யார் இருக்காங்க? அவளை விட அழகாக இருந்தாலும் ஒகேதான்..  என தேடினான் பலநேரம். 

அதிலும் அவளே வந்து அளவுகோளாக நின்றாள்.. அது புரியாமல் யோகி அவளை தள்ளி வைக்க.. என சில நேரம் அவளிடம் பேசமால் இருந்து பார்ப்போம் என எண்ணி இரண்டு நாட்கள் பேசாமல் இருந்தான்.. விளையாட செல்லுகிறேன்.. என. அப்போதும் அவள் மனம் வாட கூடாது என.. சாமாதானம் சொல்லி சென்றான்.

ஆனால், மூன்றாம் நாள் எப்போதாட வரும்.. என விடியலை எதிர்பார்த்து அமர்ந்தே இருப்பான். அதிகாலை ஐந்து மணிக்கே “குட் மோர்னிங் லட்டு” என முதல் செய்தியை அவளுக்கு அனுப்பிவிட்டுதான் கிரௌண்ட்க்கு.. ரன்னிங் செல்லுவான். 

தன்னுள் அவளே உச்சந்தலை வரை நிறைந்து நிற்கிறாள் என யோகிக்கு புரிகிறது. ஆனால் பேச கூடாது என மௌனமாக இருந்தான். கடினம்.. ஆனால், முழுதாக சொல்லிவிட்டாள்.. அவள் தள்ளி சென்றுவிட்டாள்.!. எப்படி இவ்வளவு சுதந்திரமாக இருக்க முடியும் என யோசித்து எதையும் அவளிடம் பேசுவதே இல்லை யோகி. 

ஆனால், மிர்த்தி நிறைய சொல்லுவாள்.. “முடி வளர்ந்திடுச்சி..” என்பாள்.. அடுத்தநாள் கட் செய்து வருவான். ‘என்ன காம்பினேஷன் இந்த டிரஸ்சில், நல்லாவே இல்ல..’ என்பாள்.. அடுத்தநாள் கேட்டு சரியாக அவளின் ரசனைக்கு உடையணிவான். மிர்த்தி “இந்த கைடு வேண்டும் ஈவ்னிங்” என்பாள். வாங்கி.. ஜெகனிடம் கொடுத்துவிடுவான். அவளுக்காக அவளிடம் தன்னை ஒப்புவித்துக் கொண்டான், எல்லா வகையிலும்.  

“உன் கையில் சேர ஏங்கவில்லை..

உன் தோளில் சாய ஆசையில்லை..

நீ போனபின்பு சோகமில்லை..

என்று பொய் சொல்ல தெரியாதடி..”

அன்று எதோ கல்லூரியில் ஒரு பெண் இவனை பற்றி வகுப்பில் கம்ப்ளைன்ட் சொல்லிவிட்டது. முறைச்சி முறைச்சி பார்க்கிறான்.. என்னோட நோட்ஸ் கேட்டு டிஸ்டர்ப் பண்றான்.. கொடுக்கலைன்னா நிறைய கமெண்ட் பண்றான் என. அது HOD வரை புகாராக சென்றிருந்தது.

யோகி HODயிடம் பேசிவிட்டு வந்து.. அதாவது, ‘வான்’ செய்து விட்டார் அவர். யோகியோ அந்த பெண்ணிடம் ‘நீயல்லாம் பெண்ணா.. நோட்ஸ் எடுக்கிறேயேன்னு கேட்டேன்.. உன்னை என்ன கமென்ட் பண்ணாங்க..’ என்பது போல.. வகுப்பில் வந்து சண்டை. 

அந்த பெண்ணோ ஒரு அழுகை.. இவன் மிரட்டியதில். வகுப்பு மாணவர்கள் எல்லோரும் இருவரையும் திட்டினர். சின்ன பிள்ளை மாதிரி கம்ப்ளைன்ட் பண்ணுவியா!… நீயும் இங்க வந்து மிடட்டுவியா! என இருவரையும் குறை சொல்லினர். யோகிக்கு, அந்த வாரம் முழுவதும் மூட் ஆஃப்.

இப்படி யோகி இருப்பதை பார்த்து மிர்த்தி என்னவென கேட்டாள். யோகியும் நீண்டநாள் சென்று மொட்டைமாடிக்கு வர சொன்னான் அவளை. அவளிடம் ஒரு பொண்ணு என்னை இப்படி சொல்லிடுச்சு என சொன்னான். 

மிர்த்திக்கு என்னமோ போலிருந்தது.. பெண் மனது.. எதற்கோ தவித்தது. சொல்ல பயம்.. தயக்கம்.. அமைதியாகவே கேட்டுக் கொண்டிருந்துவிட்டு கீழே வந்துவிட்டாள் பெண்.

யோகிக்கும் ஒரு தயக்கம்.. அவள் ஏதும் சொல்லாமல் சென்றதில்.

யோகியின் பார்வை அக்கறை எல்லாம் புரிய தொடங்க.. இருவருக்கும் நடுவில் பேர் வைக்க தோன்றாத பந்தம் வளர்ந்தது. இருவரும் சத்தமில்லாமல் அதை பாதுகாத்துக் கொண்டனர். அதில் இப்போது ஒரு சிக்கல்.

Advertisement