யோகி கை காட்டினான் அங்கே என. ஜெகன் “கொடுத்துட்டு வரேன்..” என சொல்லிக் கொண்டே அக்காவிடம் சென்றான்.

யோகிக்கு என்னமோ அவளைவிட்டு செல்லவே மனதில்லை.. ஜெகன் இப்போது டேபிளில் வந்து அமரவும் யோகி “க்கும்.. கொஞ்சம் பேசணும் ஜெகா” என்றான்.

ஜெகன் “ம்.. பேசலாம் அண்ணா.. சொல்லுங்க” என்றான்.

யோகி “இல்ல.. வீட்டுக்கு போயிடலாம்” என்றான்.

ஜெகன் “ம்.. போலாம்.. அக்காவை கூட்டிட்டு வரேன்” என்றான். ஜெகன் எழுந்தான்.. யோகியும் எழுந்துக் கொண்டான்.

யோகி தன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு பார்க்கிங் சென்று காரெடுத்துக் கொண்டே அந்த வளாகத்தின் முன்னே நின்றான்.

மிர்த்தியோடு ஜெகன் வண்டியில் வந்து நின்றான்.. மூவரும் இப்படியாக ஜெகனின் வீடு வந்து சேர்ந்தனர். 

மிர்த்திக்கா தம்பியிடம் வரும் வழியெங்கும் கேள்வியாக கேட்டுக் கொண்டே இருந்தாள்.. ‘ஏன் எதுக்கு அவரை வீட்டுக்கு கூப்பிட்ட.. என்கிட்டே சொல்ல வேண்டாமா’ என கேட்டுக் கொண்டே வந்தாள்.

ஜெகனுக்கும்.. அக்காவை பற்றி யோசிக்கும் போதெல்லாம்.. யோகி என்ற பெயர் அவன் மனதில் எழுவதுண்டு.. அக்காவிற்கு என்ன நடந்தது என அவனுக்கு முழுதாக புரியவில்லை.. அதை தன் நிகழ்விலிருந்து எடுக்கவும் முடியவில்லை.. அவளிடம் கேட்டு தெளிவு பெறவும் முடியவில்லை.. எதோ அக்கா யோகி அண்ணாவினால் டிஸ்டர்ப்டா இருக்கிறாள் என புரிகிறதே! அதனால்.. எதோ ஒரு முடிவுக்கு வரட்டும் இருவரும் பேசி.. என எண்ணிக் கொண்டே அக்காவிடம் ‘வரேன்னு சொன்னார் அக்கா.. வேண்டாம்ன்னு நான் எப்படி சொல்ல.. சும்மா வந்து பார்த்துட்டு போகட்டுமே என்ன இப்போ’ என சமாதனமாக பேசிக் கொண்டே வந்தான்.

மிர்த்திக்கு பதில் சொல்ல முடியவில்லை. 

வீடு வந்தது மிர்த்தி அமைதியாக இருப்பதாக காட்டிக் கொண்டாள்.. லிப்ட்டிற்காக மூவரும் காத்திருந்தனர். யோகி, பெண்ணவளின் பின்னால் நின்றிருந்தான்.. அவனுக்கு என்னென்னமோ எண்ணங்கள் பூதாகரமாக உருவேக்குகின்றன அவனுள்.. ‘நாங்கள் செய்த தவறு ஏதேனும் பெரிதாகிவிட்டதா..’ என மனதில் எண்ணம் வந்துவிட்டது. தடதடக்கும் மனதோடு.. ‘என்னை பார்த்தாலே அதனால்தான் நடுங்குகின்றாளா..’ என எண்ணிக் கொண்டே லிப்டில் ஏறினான். போனமுறை வந்த போது.. இருந்த கோவம் எல்லாம் காற்றில் கரைந்து மறைந்தேவிட்டது இப்போது. அவளுக்கு என்னாச்சு.. என மனது தடதடத்துக் கொண்டே இருந்தது.

ஜெகன் சாவி கொண்டு கதவு  திறந்தான்.. மிர்த்திக்கா உள்ளே சென்றாள்.. தனதறைக்கு செல்ல எத்தனித்தாள் மிர்த்திக்கா.

யோகி “மிர்த்தி இரு.. உங்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

ஜெகன் சோபாவில் அமர்ந்தான். இருவரும் நின்றுக் கொண்டிருந்தனர்.

மிர்த்திக்கா, யோகியின் பேச்சை காதில் வாங்காதது போல உள்ளே செல்ல.. யோகி ஜெகனிடம் “ஜெகா.. கொஞ்சம் என்னான்னு கேட்க சொல்லுடா.. நானும் அவளும்” என சொல்ல சொல்ல.. 

மிர்த்திக்கா “ஜெகா அவரை பேச வேண்டாம்ன்னு சொல்லு. அமைதியா இருக்க சொல்லு.. கிளம்ப சொல்லு” என்றாள். யோகியை முறைத்துக் கொண்டே.. தம்பியை பார்த்து சொன்னாள் பெண்.

யோகி “சரி மிர்த்தி, அவன்கிட்ட நான் ஏதும் பேசலை நீ பேசு” என்றான் குரலில் ஒரு தெளிவு.. தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற தெளிவு வந்திருந்தது.

மிர்த்தி “ஜெகா.. என் தம்பி. அவனும்.. என்னை ஏதாவது நினைச்சிட்டா.. நான் வாழவே முடியாது. யாருக்காகவோ.. என்னை எங்க அப்பா வெறுத்துட்டார். இப்போ தம்பியையும் அப்படி ஆக்கிடாதீங்க.. போங்க.. போயிடுங்க.. இத்தனை வருஷம் எப்படி இருந்தீங்களோ அப்படியே இருங்க” என்றவள்.. உள்ளே சென்றாள்.

ஜெகனுக்கு தன்னுடைய கற்பனை எல்லாம் சரியோ என தோன்ற அப்படியே அமர்ந்திருந்தான்.

யோகிக்கும் அதேதான் ஆனால், நூரில் ஒருபங்காக அது.. அப்படி  இருக்க கூடாது எனவும் நம்பிக்கை. தவறு செய்தவனுக்கு தெரியாதா.. என்ன நடந்திருக்கும் என. ஆனால், இதனை வருடங்கள் சென்றுவிட்டது என்பதால்..  எதுவும் சரியாக் தெரியவில்லை. 

ம்.. ஏதாவது நடந்திருந்தால், ஜெகன் இந்நேரம் என்னை இங்கே எப்படி கூட்டி வருவான்.. சட்டையை பிடித்திருப்பானே.. என ஒரு நம்பிக்கை யோகிக்கு. ஆனால், அவளை பேச வைக்காமல்.. தன் குழப்பத்திற்கு விடை கிடைக்காது என தோன்ற.. யோகி “டேய், அந்த ஆறுமாதம் என் வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னே தெரியாது டா.. நான் சொல்றதை கேளு டா.. கேட்க்க சொல்லுடா.. அன்னிக்கு, அவனுக்கும் எனக்கும் சண்டை.. லேசாக தட்டினேன்.. அவன் கீழே விழுந்துட்டான்.. லேசாகத்தான் தட்டினேன்.. பெரிய பிரச்சனையாகிடுச்சி..” என சொல்லி மிர்த்தியை பார்த்தவன் “நைட்டோட நைட்டா.. சென்னை வந்துட்டேன்” என பேசிக் கொண்டே இருக்க.. மிர்த்திக்கா கதவை சாற்றிக் கொண்டாள்.

யோகி பேச்சை நிறுத்திக் கொண்டான்.

ஜெகன் “அக்கா.. அக்கா” என கதவை தட்டினான்.

யோகி அப்படியே அமைதியாக இருந்தான்.

ஜெகன் “அக்கா.. எனக்கும் எதுவும் தெரியாது அக்கா. என்னவாக இருந்தாலும் நான் உன்னை எப்படி விட்டு போவேன். என்னை புரிந்துக் கொண்டது அவ்வளவுதானா..” என பேசினான்.

மிர்த்திக்கா கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள் “இல்ல டா.. அப்படி இல்லடா.. எனக்கு இப்போ ஏதும் கேட்க வேண்டாம். விட்டுட சொல்லு டா.. நீ பீல் பண்ணாத.. ம்.. இது வேற, உன்னை கஷ்டபடுத்த மாட்டேன். ம்.. “ என்றவள் யோகியை முறைத்தாள். தம்பி நடுவில் மாட்டிக் கொண்டானே. அவன் என்ன நடந்தது என தெரியாமல் நிற்கிறானே என தோன்ற யோகியை முறைத்தாள்.

ஜெகன் “அக்கா, எனக்கு தெரியும்.. ஓரளவு தெரியும், யோகியை உனக்கு பிடிக்கும்ன்னு தெரியும். இப்போ ஏன் இப்படி பண்ற.. பேசு அவர்கிட்ட.. நீயும் கஷ்ட்டம்தானே படுற.. எனக்காக யோகிக்காத” என்றான் தணிவான குரலில்.

யோகி நிமிர்ந்து மிர்த்திக்காவையே பார்த்தான்.

மிர்த்திக்கா அமைதியாக நின்றாள்.

ஜெகன் வெளியே சென்றான்.

யோகிக்கும் மிர்த்திக்கும் நடுவில் அமைதிதான். மிர்த்திக்கா அறை வாசலில் நின்றுக் கொண்டாள். யோகியினால் இப்போது மிர்த்திக்காவின் முகத்தை பார்க்கவே முடியவில்லை. அன்று போல.. அவளை நெருங்க முடியவில்லை.. தானும் எழுந்து நின்றுக் கொண்டான்.. “மிர்த்தி.. மிர்த்தி.. சாரி..” என்றான்.

மிர்த்திக்கா அடக்கபட்ட கோவமான குரலில் “எதுக்கு சாரி.. இப்போ எல்லாம் தெரிஞ்சிடுச்சா” என்றாள்.

யோகி “சரியா தெரியலை.. ஆனால், எதோ பெரிதா நடந்திருக்கு.. எனக்கு அதை கேட்க்கும் சக்தி இருக்கா தெரியலை..” என்றவன் அவளின் அருகில் வந்தான்.

மிர்த்திக்கா “கிட்ட வராதீங்க. அங்கேயே நில்லுங்க” என்றாள்.

யோகி நிமிர்ந்து அவளையே பார்த்தான்.

மிர்த்தி “ப்ளீஸ்.. என்னை வாழ விடமாட்டீங்களா” என்றாள்.

யோகி “ஹேய்.. என்னடி..” என தலையை கோதிக் கொண்டவன் “வாழலாம்ன்னு தானே, இப்படி வந்து நிக்கறேன்” என்றான் யாசகமான குரலில்.

மிர்த்தி “இவ்வளோ நாள்.. நானில்லாமல் தானே இருந்தீங்க.. இப்போ என்ன புதுசா.. கல்யாணம் ஆகலை.. கண்ணில் வேறு பட்டுட்டா.. ஈசியா வளைச்சிடலாம்.. ம்.. அதான் வந்தீங்களா” என்றாள் நெருப்பாக.

யோகி “ஏய் பல்லை பேத்துடுவேன்..” என கத்தியவன்.. உடனே தணிந்தான் “எனக்கு கல்யாணம்ன்னு ஒன்னு ஆகினால் உன்னோடுதான்னு எப்பவோ முடிவெடுத்துட்டேன். நானே உன்னை தேடி வந்திருப்பேன்.. கொஞ்சநாளில். நீயே இப்போ வந்துட்ட.. அதுக்காக உன்னை மறந்துட்டேன்னு இல்லை.. தினமும் உன்னை எவ்வளோ தேடியிருக்கேன்னு.. வந்து பாரு என ஷெல்ப்பில். உன்னை தேடி வரும் போது.. நானும் நல்ல நிலையில் இருக்கனுமில்ல.. அதற்குதான் இந்த வேலை படிப்புன்னு வருஷம் போகிடுச்சி. உங்க அப்பா வேற, என் அப்பாகிட்ட எதோ மிரட்டியிருக்கார் போல.. அதையெல்லாம் உடைக்க வேண்டாமா” என்றான் வேண்டுதலில் தொடங்கிய அவனின் குரல்.. ரோஷமாக முடிந்தது.

மிர்த்தி நிமிர்ந்து பார்த்து.. அவனை ஆராய்ந்தாள்.. ‘இந்த பிரிவுகள் ஏன்.. ஏன்! என் வாழ்க்கையில் மட்டும் உரிமையானவர்கள் என்னிடம் பரிவு காட்டவோ! பாசம் வைக்கவோ!  அது நிலைத்து நிற்ப்பதோ இல்லை! என பெண்ணவளின் மண்டையில் எண்ணம் ஓடுகிறது. இப்போது இங்கிருப்பவனை ஏன் என் கண்ணில் காட்டுகிறது விதி.. இல்லையென்றால்.. அப்படியே விட்டுவிடாதா.. என தன்னவனையே பார்த்தாள் பெண்.

கலைந்த சிகை.. நேர் பார்வையாக தன்னையே பார்க்கும் அந்த கண்களில் என்றோ உணர்ந்த அதே காதல்.. ம்.. பார்வை சொன்னது.. அவளிடம்.. அஹ.. அதை உணர்ந்தவளின் நெஞ்சம் சில்லென்ற காற்றை உள்ளிழுக்கிறது. பாலைவனத்தை கடந்தவளின் மூச்சில் குளிகாற்று பரவுவதை போல.. அவளுள் ஒரு குளுமை. ஆனால், அந்த சில்லென்ற காற்றை வெளிவிட முடியவில்லை.. திணறுகிறாள் இவளும். முன்பைவிட நல்ல உயரம்.. திமிறிய உடல் மொழி.. இப்போது சற்று தன்னிடம்.. திணறி நிற்கிறது.. அன்னியமாக நிற்கிறான்..  தன் தவறை உணருகிறேன் என்றோ..  என்னமோ..  புரியவில்லை. சிரித்துக் கொள்கிறாள் பெண். அவன் இப்படி வந்து நிற்பான் என கனவிலும் கண்டதில்லை அவள். தன் எதிரே தவறு செய்தேன் என நிற்பவனை பார்க்க பார்க்க.. கோவமும் காதலும் வருகிறது.

கிரேப் நிற ஆம்கட் டி-ஷர்ட்.. அவனின் கோதுமை நிறத்திற்கு பொருந்தி போக.. முழு ஆண்மகனாக.. அவளின் முன்.. யாசித்துக் கொண்டிருந்தான். அவனை அளவிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள் பெண். 

யோகி “மிர்த்திம்மா.. மிர்த்தி” என்றான்.

மிர்த்திக்கா இன்னுமும் இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்  யோகி “ஏதாவது சொல்லு மிர்த்தி” என்றான்.

மிர்த்தியின் கண்ணில் கண்ணீர் “ம்.. நான் அன்னிக்கு உங்ககிட்ட சொல்லனும்ன்னு நினைச்சப்போ.. நீங்க இல்லை. எ..ல்லாம்.. முடிஞ்சி போகிடுச்சி” என்றவள் கண்களை துடைத்துக் கொண்டாள், பின் அவளே “நீங்க கிளம்புங்க.. நான் இப்போ யாரையும் நம்பறதில்லை என பர்சனலை சொல்ற அளவுக்கு நீங்..க இப்போ எனக்கு எதுவும் இல்லை. ம்.. கிளம்புங்க.. உங்க சாரியும் வேண்டாம்.. அதன்பின் வரும் கரிசனமும் வேண்டாம்.. கிளம்புங்க” என்றவள் அறைக்கு செல்ல எத்தனித்தாள்.

யோகி அவளின் கையை பிடித்தான். பெண்ணவள் உதறினாள்.. அழுத்தி பிடித்தினான் யோகி.. அப்படியே அவளின் முன் வந்து நின்றான்.. “எனக்கு புரியுது..” என்றவன் அவளின் கண்களை பார்த்தான் “மன்னிச்சிடு” என சொல்லி அவளின் கைகளை கண்ணில் ஒற்றிக் கொண்டான்.

மிர்த்திக்கா கையை இழுத்தாள்.. “போயிடுங்க.. எனக்கு பிடிக்கலை” என்றாள்.

யோகி “போயிடுறேன்.. உன்னை கஷ்ட்டப்படுத்தமாட்டேன். மனசில் இதை வைச்சிக்க.. நான்தான் தப்பு.. நீயில்லை. நீ குழந்தை.. நீ தேவதை.. எனக்கு மட்டும் வரம் தந்த தேவதை.. நான்தான் மிஸ்யூஸ் பண்ணிட்டேன். அந்த பாரத்தை என்னிடம் கொடுத்திடு.. சொல்லிடு.. ப்ளீஸ். நீ தனியா கஷ்ட்படாத.. மிர்த்திம்மா” என சொல்லி மீண்டும் அவளின் கைகளை கண்ணில் ஒற்றிக் கொண்டான். 

மிர்த்திக்கா அப்படியே சுவரில் சாய்ந்துக் கொண்டாள்.. 

இரண்டு நிமிடம் கடந்து அவளை நிமிர்ந்து பார்த்தான்.. மிர்த்தியும் பார்த்தாள்.. யோகியின் கண்கள் சிவந்து இருந்தது.. யோகி “உட்கார் வா” என்றான்.

மிர்த்தி அவனின் கையை உதறிக் கொண்டு உள்ளே.. தனதறைக்கு சென்றுவிட்டாள்.