Advertisement

கமிஷ்னர் பத்திரிகையாளர்களிடம் பேசி முடித்துவிட்டு உள்ளே வர, ஆதன் இன்னும் வெறித்த பார்வையுடன் தான் நின்று கொண்டிருந்தான். அவனிற்கு அடுத்து என்ன செய்வதெனப் புரியவில்லை. யாரோ என்ன யாரோ கண்டிப்பாக இதை அந்த பாண்டி தான் செய்திருக்க வேண்டும். ஆனால் எப்படி அவன் உள்ளே வந்து இந்த ராஜாவை அடித்துக் கொன்றான் என்பது இன்னும் கேள்விக் குறியே!! ஆனால் அதற்கு முன்னர் தான் செய்யவில்லை என்று கூறினால் கமிஷ்னர் நம்ப மறுக்கின்றார். இதற்கு மேல் எப்படித் தன்னை நிரூபிப்பது என்று பலவாறு யோசித்துக் கொண்டிருந்தான் ஆதன். ஆனால் எதற்கும் விடைத் தான் தெரியவில்லை.

கோபமாக வந்த ஆதன்,”இனி ஒன்னும் பண்ண முடியாது ஆதன். ஏன் இப்படிப் பண்ண? நான் உன்கிட்ட இருந்து இப்படி ஒரு செயலை சுத்தமா எதிர்பார்க்கலை!!” என்று கூறினார்.

“சார் நிஜமா நான் எதுவும் பண்ணலை. இவ்ளோ நேரம் நான் வீட்டுல தான் இருந்தேன். நீங்கக் கூப்பிட்டீங்கனு எனக்கு ஃபோன் வந்ததும் தான் நான் ஸ்டேஷனுக்கு வந்தேன் சார்.”

“அப்போ இதை யார் பண்ணா? உன்னோட ஸ்டேஷன் வேற யார் வந்து இப்படிப் பண்ண முடியும்?”

“சார் அது தான் எனக்கும் சந்தேகமா இருக்கு. இவன் ரம்யா கேஸ்ல முக்கியமான குற்றவாளி சார். எங்க நான் உண்மைத் தெரிஞ்சு அவங்களை அரெஸ்ட் பண்ணிடுவேன்னு இப்படிப் பண்ணிருக்காங்க சார்.”

“நான் இதை எப்படி நம்புறது ஆதன்?”

“சார் இங்க இருக்கிறவங்ககிட்ட கேட்டுப் பாருங்க, இவனோட நிலைமைக்கு நான் காரணம் இல்லைனு உங்களுக்குப் புரியும்.” என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறினான் ஆதன்.

கமிஷ்னரும் எட்வின், தியாகு மற்றுமொரு காவலரிடம்,”ஆதன் சொல்றது உண்மையா? இங்க வேற யாராவது வந்தாங்களா? உண்மையை மட்டும் தான் சொல்லனும். பொய் ஏதாவது சொன்னீங்க அப்புறம் நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பு கிடையாது அதை நல்லா மனசுல வைச்சுட்டு சொல்லுங்க.” என்றார் அவர்.

“சார் ஆதன் சார் மட்டும் தான் வந்தார். எட்வின் கூட எவ்ளோவோ தடுத்துப் பார்த்தான் சார். ஆனால் ஆதன் சார் பயங்கர கோபத்துல எட்வினை கீழே தள்ளிவிட்டுட்டு அந்த அக்யூஸ்ட்ட போட்டு மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சுட்டார் சார். அவர் அடிச்சுட்டு வீட்டுக்குப் போனதும் நாங்க உள்ள போய் பார்த்தோம் சார். மூச்சுப் பேச்சு எதுவுமே இல்லை சார் அவன்கிட்ட. அதான் உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணேன் சார்.” என்று தியாகு கூறவும் ஆதனுக்குப் பயங்கர அதிர்ச்சி.

“தியாகு எதுக்கு இந்தப் பொய்? யாரைக் காப்பாத்த இப்படிப் பொய் சொல்றீங்க?”

“சார் நான் உண்மையைத் தான் சொல்றேன். நான் எதுக்கு சார் மத்தவங்களை காப்பாத்தனும்? உங்களால என் வேலையே போயிடும் போல இருக்கு சார்.” என்று தியாகு கூற, ஆதனிற்குப் பயங்கர கோபம் வந்துவிட்டது. அப்படியே தியாகுவை அடிக்கப் பாய்ந்து விட்டான் ஆதன்.

“ஆதன்.” என்ற கமிஷ்னரின் அதட்டலில் தான் அவன் அமைதியானான்.

“சார் நான் அவன்கிட்ட முன்னாடியே வாக்கு மூலம் வாங்கிட்டேன் சார். அவனும் உண்மையைச் சொல்லிட்டான் சார். அப்புறம் நான் எதுக்கு சார் அவனை அடிக்கனும்?”

“வாக்கு மூலம் வாங்கிட்டியா? அப்புறம் எதுக்கு இன்னும் எப்.பை.ஆர் போடாமல் இருந்த?”

“சார் இவன் கூட இருந்தவன் தான். மொத்தம் ஐந்து பேர் சார். எல்லாரையும் பிடிச்சுட்டு மொத்தமா போடலாம்னு நினைச்சேன் சார். ஆனால் இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை சார்.”

“இதை நான் எப்படி நம்புறது ஆதன்?”

“சார் அவன் வாக்கு மூலம் கொடுத்ததை நான் ரெக்கார்ட் பண்ணி வைச்சுருக்கேன் சார். அதை எடுத்துட்டு வரேன் நீங்களே பாருங்க.” என்று கூறி அவனது அறைக்குச் சென்றான்.

ஆதன் அவனது மேஜையின் ஒரு ட்ராயரில் தான் வைத்திருந்தான். இப்போது அந்த ட்ராயரை திறந்து பார்த்தால் அங்கு அவன் வைத்த பென் டிரைவ் இல்லை. அதிர்ச்சியாகி விட்டான் ஆதன். அந்த மேஜையில் உள்ள அனைத்து ட்ராயரையும் திறந்து அவன் பார்க்க, எதிலும் அந்த பென் டிரைவ் இல்லை. எப்படித் தொலைந்து போனது என்று சுத்தமாகப் புரியவில்லை. அப்போது தான் நிதானமாக யோசித்தான். அவன் ராஜாவிடம் வாக்கு மூலம் வாங்கியது இருவருக்கு மட்டும் தான் தெரியும். ஒன்று மாசாணி மற்றொன்று எட்வின். மாசாணி கண்டிப்பாக எடுக்கவில்லை. அப்போது எட்வின் தான் என்ற முடிவுக்கு வந்த போது தான் இத்தனை நேரமும் எட்வின் அமைதியாக இருப்பது அவன் மூளையில் வந்து போனது. இப்போது எல்லாம் அவனுக்குப் புரிந்தது. எட்வின் துரோகியாக மாறிவிட்டான் என்று. அதை அவனால் சுத்தமாக ஜீரணிக்கவே முடியவில்லை. தொங்கிய முகத்துடன் வெளியே வந்தான் ஆதன்.

“என்ன ஆதன் ஏதோ வாக்கு மூலம் வாங்குனேன் சொன்ன அதுக்கு ஆதாரம் எடுக்கத் தான போன? எங்க காட்டு?” என்று கேட்டார் கமிஷ்னர்.

விரக்தியாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு,”சார் நான் நம்பக் கூடாதவங்களை நம்பி ஏமாந்துட்டேன். நண்பனா இருந்தவன் துரோகியா மாறி நேருக்கு நேர் சண்டை போடத் துப்பில்லாமல் என்னோட முதுகுல குத்திட்டான். அதனால நான் தளர்ந்து போக மாட்டேன் சார். நீங்க இந்தச் சம்பவத்துக்கு என்ன ஆக்ஷன் எடுக்கனுமே எடுங்க சார். நான் கண்டிப்பா உண்மையைக் கூடிய சீக்கிரமே நிரூபிக்கிறேன்.” என்று அவன் தலையை நிமிர்த்தி கமிஷ்னரை நேருக்கு நேர் பார்த்து அவன் கூற, அதிலே புரிந்தது கமிஷ்னருக்கு ஆதன் எந்தத் தப்பும் செய்யவில்லை. அவருக்கு முன்னால் இருந்தே ஆதன் மேல் நம்பிக்கை இருந்தது. ஆனால் நம்பிக்கை மட்டும் வைத்து எதுவும் செய்ய முடியாது. ஆதாரம் வேண்டும், அதனால் தான் அவர் அவனிடம் சாட்சிகளைக் கேட்டார். அவன் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை.

அவனது தோளில் தட்டிக் கொடுத்து,”இவன் ஒரு அக்யூஸ்ட். ஸோ அந்த பாயின்ட்டை நான் பின்பாயின்ட் பண்ணி கமிஷனுக்கு சொல்றேன். இருந்தாலும் ஆதாரம், சாட்சி இல்லாமல் யாரும் நம்ப மாட்டாங்க. ஸோ இதுக்கு யார் காரணம்னு சீக்கிரம் கண்டுபிடிக்கிற வழியைப் பார். அண்ட் இந்த கேஸ் முடியுற வரைக்கும் உன்னை நான் சஸ்பெண்ட் பண்றேன்.” என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார்.

ஆதனிற்கு அதற்கு மேல் அங்கு நிற்கப் பிடிக்கவில்லை. சுற்றிலும் துரோகிகளை வைத்துக் கொண்டு ஒரு வினாடி கூட அவனால் அங்கு இருக்க முடியாது. அதனால் யாரையும் திரும்பிக் கூடப் பார்க்காமல் அவன் வெளியே வந்து அவனது வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டான் ஆதன்.

~~~~~~~~~~

அடுத்த நாள் காலையில் அனைத்து நியூஸ் சேன்னல்களிலும் ஆதன் தான் தலைப்புச் செய்தியாக வந்தான். அவனது விபரம் முதலில் பத்திரிகையாளர்களுக்குத் தெரியாது. ஆனால் பாண்டி யாரோ ஒருவனாக அனைத்து சேன்னல்களுக்கும் ஆதன் தான் அந்தச் சாவுக்குக் காரணம் என்று தெரியப்படுத்தி விட்டான். அதனால் அவர்களும் தங்கள் சேன்னல் டீ.ஆர்.பி.யை ஏற்ற ஆதனின் புகைப்படத்துடன் செய்தியை வெளிப்படுத்தி விட்டனர்.

இந்தச் செய்தி உலகம் முழுவதும் பரவிய போது, அவனது வீட்டிற்குத் தெரியாமல் இருக்குமா? உடனே அவனுக்கு அழைத்து விட்டனர்.

ஆதன் காவல் நிலையத்திலிருந்து வந்ததிலிருந்து அவன் ஒரு சொட்டு தூக்கம் கூட தூங்கவில்லை. அவனால் எட்வினின் துரோகத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எந்த நிலையில் அவன் நிலை மாறினான் என்று யோசித்து யோசித்துக் கலைத்துப் போய்விட்டான் ஆதன். ஆனால் விடைத் தான் கிடைக்கவில்லை.

அவனது யோசனைக் கலைப்பது போல் அடித்தது அவனது கைப்பேசி. எடுத்துப் பார்த்தான் அவனது அண்ணன் பாலாஜி தான் அழைத்திருந்தான்.

“என்ன நடக்குது ஆதன்? ஏதோ லாக்ஆப் டெத்தாமே!! நீயா டா இப்படிப் பண்ண?”

“ப்ச் பாலாஜி, எனக்கும் அதுக்கும் சம்மதம் இல்லை. என்னை மாட்டி விட சதிகாரங்க பண்ணச் சதி. நீ இதெல்லாம் எதுவும் நினைக்க வேண்டாம் சரியா. அம்மா அப்பாகிட்டயும் இதைப் பத்தி யோசிக்க வேண்டாம்னு சொல்லு. இந்தப் பிரச்சனைல இருந்து எப்படி வெளியே வரதுனு எனக்கு நல்லா தெரியும். சொந்தகாரவங்க இதைப் பத்திப் பேசக் கண்டிப்பா நம்ம வீட்டுக்கு வருவாங்க. அப்படி வந்தால் அடிச்சு துரத்தி விடு. நல்ல விஷயம் எதுவும் நடந்தால் வந்து கேட்காத சொந்தங்க இப்படி ஏதாவது தப்பா நடந்தா மட்டும் அவங்கச் சந்தோஷப்பட்டு நம்மளை சங்கடப்படுத்தவே வந்துடுவாங்க. அதனால் யாரையும் உள்ள விடாத.”

“நீ இவ்ளோ நம்பிக்கையா பேசுறதா பார்த்தால் எனக்கு நிம்மதியா தான் இருக்கு ஆதன். ஆனாலும் கொஞ்சம் பயமா தான் இருக்கு. இதனால உன்னோட ப்யூட்சர் எதுவும் அடிப்பட்டுடுமோனு ரொம்ப பயமா இருக்கு.”என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனது அம்மா ருக்மணி வேகமாக பாலாஜியிடம் இருந்து கைப்பேசியைப் பறித்தார்.

“இதுக்கு தான் ஆதன் நான் தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன் போலிஸ் வேலை வேண்டாம்னு. இப்போ பார் எங்க கொண்டு வந்து விட்டிருக்கனு. இப்போ என்ன பண்ணப் போற? அடுத்து அவங்க என்ன பண்ணுவாங்க? நியூஸ்ல எல்லாம் உன்னை அரெஸ்ட் பண்ணிடுவாங்கனு சொல்றாங்க. எங்க மானமே போயிடும் போல இருக்கு. ப்ச் அதைக் கூட விடு, உன்னை அரெஸ்ட் பண்ணா உன்னோட ப்யூட்சர் என்னாகிறது? யார் உன்னைக் கல்யாணம் பண்ணிப்பாங்க ஆதன்? எதையும் யோசிச்சு செய்ய மாட்டியா?” என்று சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டு அவனுக்குப் பதில் கூற வாய்ப்பு அளிக்காமல் அவரே பேசிக் கொண்டிருந்தார்.

“அம்மா கொஞ்சம் என்னைப் பேச விடுங்க, எனக்கு ஒன்னுமாகுது. என்னை அரெஸ்ட் எல்லாம் பண்ண மாட்டாங்க. அதுக்குள்ள இதுக்கு காரணம் ஆனவங்களை நான் பிடிச்சுடுவேன். அதனால் நீங்க எந்தக் கவலையும் படாதீங்க. இப்போ எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நான் அப்புறமா உங்ககிட்ட பேசுறேன்.” என்று கூறினான் அவன்.

“ப்ச் என்ன ஆதன் இது? இரு அப்பா பேசுனமாம்.” என்று கூறி அவனது தந்தை ஸ்ரீநிவாசனிடம் கைப்பேசியைத் தந்தார். அவரிடமும் ஆதன் அதையே கூறி அவரைச் சற்று ஆசுவாசமாக்கிய பிறகு தான் அவன் கைப்பேசியை அணைத்தான்.

அவர்களிடம் அவன் தைரியமாகப் பேசிவிட்டான். ஆனால் இந்தப் பிரச்சனையில் இருந்து எப்படி வெளி வருவது என்று அவனுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. சரியாக அந்த நேரம் அவனது வீட்டின் அழைப்பு மணி சத்தம் கேட்க, யார் இந்த நேரத்தில்? ஒரு வேளை செல்வமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கதவைத் திறக்க, சாத்விகா நின்று கொண்டிருந்தாள். அவனைச் சுத்தமாக அவன் எதிர்பார்க்கவில்லை.

“ஹேய் சாத்விகா நீ எங்க இங்க?”

“இந்த டைம்ல நான் உங்க கூட இல்லாமல் எப்படி இருக்க முடியும்?” என்று அவனிடம் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள்.

அவள் உள்ளே வந்ததும் அவளை இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவனுக்கு இத்தனை நேரம் இருந்த மண்ட சூட்டில் கண்டிப்பாக இந்த அணைப்பு அவசியம் என்று தோன்றியது. அவளும் எதுவும் கூறாமல் அவனது முதுகில் தட்டிக் கொடுத்தால். சிறிது நேரம் கழித்து அவளை விடுவித்தவன் அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்தான்.

“டூ பி ட்ரூ ஐ ஆம் வெறி டையர்ட். உன்னைப் பார்த்ததும் தான் கொஞ்சம் மைன்ட் ரிலாக்ஸ் ஆன மாதிரி இருக்கு.”

“அப்புறம் எதுக்கு சார் என்னை வெளில பார்த்ததும் நீ எங்க இங்கனு கேட்டீங்க?”

“அது சும்மா, அப்புறம் நான் அலையிறேன்னு நீ நினைச்சுடக் கூடாதுல.” என்று சிரித்துக் கொண்டே கூறினான் ஆதன். ஆனால் அந்தச் சிரிப்பில் உயிர்ப்பு இல்லை என்பதை சாத்விகா நன்றாகப் புரிந்து கொண்டாள். இருந்தாலும் அதைக் காட்டாமல் அவனிடம் சாதாரணமாகப் பேசினாள்.

“அடுத்து என்ன பண்ணப் போறீங்க நிவாஸ்?”

“ம் தெரியலை. இப்போ வரைக்கும் எப்படி ப்ரோசீட் பண்றதுனு ஒரு ஐடியாவும் இல்லை. எட்வின் தான் இதுக்கு எல்லாம் காரணம். அவனைப் பிடிச்சால் எல்லாம் முடிவுக்கு வரும். ஆனால் அவன் அவ்ளோ சுலபமா உண்மையை ஒத்துக்க மாட்டான். இப்போ நான் திரும்ப ஜீரோல வந்து நிக்கிறேன். ரம்யா கேஸ்ல ஒன்னும் பண்ண முடியாமல் போயிடுமோனு தோனுது.”

“நிவாஸ் என்ன சொல்றீங்க? எட்வின்னா அன்னைக்கு உங்க கூட வீட்டுக்கு வந்தாரே அவரா? அவர் உங்க ப்ரண்ட் தானா?”

விரக்தியாகச் சிரித்து,”ப்ரண்டா? அவன் துரோகியா மாறி ரொம்ப நாளாகிருச்சு. எனக்குத் தான் அது தெரியலை. இத்தனை நாள் நான் ஒரு நல்ல பாம்பை என் கூட வைச்சுட்டு இருந்தேன்னு நினைக்கும் போது!!! ஷிட்.” என்று கோபமாகக் கூறினான் ஆதன்.

“ரிலாக்ஸ் நிவாஸ். ஐ ஆம் தேர் ஃபார் யூ. ஸ்க்ராட்ச்ல இருந்து திரும்ப ஆரம்பிப்போம். கண்டிப்பா உண்மை தான் ஜெயிக்கும். இதை மட்டும் மறந்துடாதீங்க.”

“அதுக்கு எல்லாம் நேரமில்லை சாத்விகா. கண்டிப்பா என்னை அரெஸ்ட் பண்ணிடுவாங்க. ஐ ஹேவ் நோ அதர் ஆப்ஷன். அவங்க அரெஸ்ட் பண்றதுக்கு முன்னாடி நான் எல்லாத்தையும் நிரூப்பிக்கனும். அதுக்கும் சான்ஸ் ரொம்ப கம்மி. பிகாஸ் நாளைக்கே, நாளைக்கு என்ன நாளைக்கு? இன்னைக்கே என்னை அரெஸ்ட் பண்ணாலும் ஆச்சரியப்படுவதுக்கு இல்லை.”

“நோ நிவாஸ் நெகட்டிவ்வா யோசிக்காதீங்க. நாம எப்படியாவது இந்த அரெஸ்ட்ட ஸ்டாப் பண்ண முடியுதானு பார்ப்போம். நான் எந்த ஹெல்ப்னாலும் செய்றதுக்கு தாயாரா இருக்கேன். சோ சொல்லுங்க நான் என்ன செய்யனும்?” என்று சாத்விகா கேட்க, அவளைப் பார்த்துச் சிரித்தவன் அவளது இடையில் கைவிட்டு அவளை இழுத்து அவனது மடியில் அமர வைத்துக் கொண்டான். அது சாத்விகாவிற்கு ஒரு நொடி அதிர்ச்சியைத் தந்தது. ஆனால் அடுத்த நிமிடமே அவனது கழுத்தில் மாலையாகக் கையைப் போட்டுக் கொண்டு அவனது முகத்தைப் பார்த்தவாறு அமர்ந்து கொண்டாள்.

அவளது கண்ணத்தில் அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்துவிட்டு,”சாத்விகா நீ எதுவும் பண்ண வேண்டாம். மாசாணி பார்த்துக்குவான். அவன்கிட்ட ஒரு வாரத்துக்கு முன்னாடியே ஒரு வேலை தந்திருந்தேன். அதை அவன் கச்சிதமா செய்துட்டு வரான். ஸோ டோண்ட் வொர்ரி.”

“ப்ச் நிவாஸ் அவனும் உங்களை ஏமாதிட்டா என்ன பண்றது? அவன்கிட்ட என்ன வேலை குடுத்தீங்க? அதை என்கிட்ட சொல்லுங்க நான் செய்றேன்.”

“டோண்ட் வொர்ரி சாத்விகா. மாசாணி அப்படிப் பண்ண மாட்டான். அதுக்கு நான் கியாரண்டி.”

“ஓ என்கிட்ட சொல்ல கூடாதுனா டைரக்ட்டா சொல்லுங்க, அதை விட்டுட்டு ஏன் இப்படிச் சுத்தி வளைச்சு பேசுறீங்க.” என்று கூறிவிட்டு அவள் எழுந்திருக்க, அவளை மீண்டும் இழுத்து அவன் மடி மேல் அமர வைத்தான் ஆதன்.

“ஹா ஹா..” என்று சத்தமாகச் சிரித்து மாசாணியை எதற்கு அவன் அனுப்பி வைத்தான் என்ற விபரத்தை ஆதன் கூறவும் வேகமாக சாத்விகா,”அப்போ நானும் போறேன் அங்க.” என்றாள்.

“விளையாடுறியா? அது ரொம்ப ஆபத்தானது சாத்விகா. நான் மாசாணிக்கே எதுவும் ஆக கூடாதுனு கடவுளை வேண்டிட்டு இருக்கேன். இதுல நீ வேற அங்க போறேன்னு சொல்ற?”

“நான் விளையாடல நிவாஸ். ஐ ஆம் டேம் சீரியஸ் நிவாஸ். ஐ வான்ட் டூ ஹெல்ப் யூ நிவாஸ். உங்களுக்குத் தான் புரிய மாட்டேங்குது. நான் முடிவுப் பண்ணிட்டேன். ஐ ஆம் கோயிங்க் தேர்.” என்று தீர்மானமாகக் கூறினாள் சாத்விகா.

அதைக் கேட்ட ஆதனிற்கு பயங்கர கோபம் வந்து அவளை தன் மடியின் மீது இருந்து அப்படியே தூக்கி பக்கத்தில் உட்கார வைத்து விட்டு கோபமாக அவன் எழுந்து அவனது தலையைக் கோதினான்.

“சாத்விகா இட்ஸ் டேன்ஜரஸ்…” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனைத் தடுத்தாள்.

“நிவாஸ் நீங்க பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது. ஐ வில் பீ வெரி கேர்ஃபுல். உங்ககிட்ட சொல்லாமல் கூட என்னால செய்ய முடியும். ஆர் உங்ககிட்ட இப்போ சரினு சொல்லிட்டு நான் போய் செஞ்சாலும் உங்களுக்குத் தெரிய போறது இல்லை. பட் ஐ டோண்ட் வாண்ட் டு டூ லைக் தேட். புரிஞ்சுக்கோங்க நிவாஸ்.” என்று அவள் கூறவும் அவன் யோசித்தான்.

அவள் தான் சரியென்று கூறினாலும் இல்லை போக வேண்டாம் என்று கூறினாலும் அவள் போகத் தான் செய்வாள் என்பது அவளது பேச்சிலே புரிந்தது ஆதனிற்கு.

“இங்கப் பார் சாத்விகா நீ அங்க போக வேண்டிய அவசியம் இல்லை…” அவன் பேசிக் கூட முடிக்கவில்லை சாத்விகா ஏதோ பேச வர, அவன் கை காட்டி அவளைப் பேச விடாமல் தடுத்து மீண்டும் அவனே பேசத் தொடங்கினான். அவன் பேசப் பேச சாத்விகாவிற்கு அதிர்ச்சி தான். இப்படி ஒன்றை அவள் எதிர்பார்க்கவே இல்லை. வேகமாக எழுந்து அவனை எட்டிப் பிடித்து இழுத்து அவனது கண்ணத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.

“சூப்பர் நிவாஸ். இருந்தாலும் நான் போவேன் டாட் அவ்ளோ தான்.” என்று அவள் கூற, ஆதன் அதைக் கூறினால் அவள் செல்லமாட்டாள் என்று எண்ணித் தான் கூறினான். ஆனால் அப்போதும் அவள் செல்வேன் என்று அடம்பிடிப்பதால் வேறு வழியில்லாமல் சரியென்று சம்மதித்து விட்டான்.

Advertisement