கண நேரத்தில் ரொம்பவும் இயல்பாக அவள் கன்னத்தில் தன் உதடுகளை ஒற்றி பிரித்தவன்
மகன் கண்களை கசக்குவதை பார்த்து
” இது சோட்டுவுடைய நாப் டைம்
ஆயிற்றே????
தூங்கலாமா????” என்று கேட்டபடி அங்கு நின்ற ஒருத்தியை சட்டை செய்யாமல் மெத்தையில் படுக்க வைக்க சென்றான்…
அதில் கோபத்தின் உச்சிக்கு சென்றவள் ” நான் உனக்காக இங்கு வரவில்லை…. என் பையனுக்காக தான் வந்தேன்…….
நாளை அவனுக்கு பிறந்த நாள் !!!!!”
என்றதும் மனைவியை ஏறிட்டு பார்த்த பிரணாவ் உடனே மகனை தூங்க வைக்கும் வேலையை கவனிக்க தொடங்கிவிட்டான்…..
வேகமாக அறையை விட்டு வெளியேறியவளை கண்ட யசோதாவும் காஞ்சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு
” சாப்பிடு மைத்தி” என்றனர்….
அப்போது வீடு திரும்பியிருந்த கதிரேசன்
மருமகளை கண்டு அகமகிழ்ந்து ” வாமா!!! இப்போது தான் நம் வீடு வீடாக தெரிகிறது !!” என்று கூற
” ஏன் மாமா இரண்டரை மணி ஆகிவிட்டது…
இப்போது தான் சாப்பிட வருகிறீர்கள்????”
என்று கேட்டபடி அவரை உட்கார வைத்து பரிமாற ஆரம்பித்தாள் மைத்ரேயி…
அப்போது கீழே இறங்கி வந்த பிரணாவ்
” அப்பா நாளை சோட்டுவின் பிறந்த நாளாம்!!!!” என்று நிறுத்த
” அப்போது நாளை காலை……..” என்று ஆரம்பித்த காஞ்சனாவிடம்
” நாளை மாலை பிறந்த நாள் விழாவை வைத்து கொள்ளலாம் அம்மா !!!!” என்றிருந்தான் பிரணாவ்…
மேலும் ” பார்ட்டி ஹால் புக் செய்கிறேன் அப்பா….. கிராண்டாக செலிபிரேட் பண்ணலாம்…. ஆஃபிஸிற்கு சென்று
சித்தப்பாவிடம் கேட்டு கொண்டு யார் யாரை அழைப்பது தெரிந்து கொள்கிறேன்……
பிரணிக்கா வீட்டிற்கும் உதிக்கா வீட்டிற்கும்
நீங்கள் நேரில் சென்று கூப்பிட்டு விடுங்கள்!!!!
டின்னர் அரேஞ்மெண்ட், ஃபோட்டோகிராபர் எல்லோரையும் பிடித்தாக வேண்டும்” என்று கூறியபடி கிளம்ப எத்தனித்தவனை
” சாப்பிட்டு போ பிரணாவ்!!!”
என்றிருந்தார் காஞ்சனா….
” தலைக்கு மேல் வேலை கிடக்கு …..
நைட் சாப்பிட்டு கொள்கிறேன் அம்மா !!!”
என்று கூறியவன்
” காலையிலும் நீ சாப்பிடவில்லை பிரணாவ்!!!” என்று அன்னை கூறியதையோ அவருக்கு பக்கத்தில் நின்று தன்னையே பார்த்து கொண்டிருந்தவளையோ
பொருட்படுத்தவில்லை….
கணவன் சாப்பிடவில்லை என்று தெரிந்ததும் தொண்டையினுள் இறங்க மறுத்த பருக்கையை தன் யசோத்தையின் வற்புறுத்தலின் பேரில் கொறித்தவள் அவனை பற்றிய எண்ணங்களை புறம் தள்ள முயன்று அதில் தோல்வியையும் தழுவி தன் நேரத்தினை போக்கினாள்…..
இரவு பத்தரை மணி வரையிலும் வாசலிலேயே தன் கண்களை வாடகைக்கு விட்டிருந்தவள் சோட்டு தூக்கத்திற்கு சிணுங்க ஆரம்பிக்கவும் தங்கள் அறைக்கு திரும்பியிருந்தாள்….
மகனை தூங்க வைத்தவளின் வாய் நிறுத்தாது அவளது அத்தானை வசை பாட ஆரம்பித்தது…..
என்ன நினைத்து கொண்டிருக்கிறான்?????
என்னை பற்றிய அக்கறை கொஞ்சமேனும் உள்ளதா பார்????
அவன் பாட்டிற்கு வருகிறான்!!!!! போகிறான்!!!!!
இவனை எல்லாம் யார் கல்யாணம் செய்ய சொன்னார்களாம்?????
என்று புலம்பியவளின் மனசாட்சி
“உதிஅண்ணி!!!!!!!!!!!”
என்று பதில் கொடுக்க
ஹான்….. தெரியும் தெரியும்…. ஆனால் கட்டி கொண்டவன் இவன் தானே????
அதோடு விட்டானா????
என்னென்ன பேசி இருக்கிறான் ????
‘என் உதிக்கா மாதிரி ஒரு பாப்பாடி பஜாரி’
என்று அவன் மனதில் காதல் இல்லாத போதும் தன் பின்னால் திரிந்தவனுக்கு இப்போது என்ன கொம்பு முளைத்துவிட்டதா?????
இப்படி பலவாறு அர்ச்சனைகளை மேற்கொண்டவள் அறையினுள் நுழைந்து கதவை தாளிட்டவனை கண்டதும் கப்சிப் ஆகிவிட்டாள்…..