அதில் மென்னகை பூத்தவன் ” ஷி இஸ் மை வைஃப் !!!!” என்று மைத்ரேயியை நிதிஷிற்கு அறிமுகப்படுத்தி வைத்ததோடு
” மைத்தி… இவர் நிதிஷ்…. உதிக்காவின் கிளாஸ் மேட் ….. ஒரே ஸ்கூல்!!!” என்று மட்டும் தன் மனைவியிடத்தில் விளக்கம் கூறினான் பிரணாவ் ….
நிதிஷ் உதிதாவை காதலித்தை மறைத்து!!!
மைத்ரேயியிடம் திரும்பிய நிதிஷ் ” ‘அப்பா இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர் ‘ என்று நீங்கள் சொல்லவும் தான் எனக்கு உயிரே வந்தது டாக்டர்….
என்னால் நேற்று இங்கு வர முடியாத சூழ்நிலையில் மாட்டிக்கொண்டேன்!!!!
அதிலும் நான் எப்போது போன் செய்த
போதும் மறுக்காமல் அதை ஏற்று பொறுமையாக பதில் அளித்தீர்கள்!!!!
இவை அனைத்தையும் ‘நன்றி’ என்று ஒரு வார்த்தையை மட்டும் உங்களிடம் சொல்லி என் நன்றி கடனை செலுத்தி விட முடியாது டாக்டர்!!!!
” என்று கையெடுத்துக் கும்பிட்டான் நிதிஷ்….
” அவள் கடமையை தானே செய்தாள்…. விடுங்க அண்ணா!!!!” என்றபடி கூப்பிய கரங்களை இறக்கிவிட்ட பிரணாவ்
” நேற்று உங்கள் அப்பா பற்றியும் நீங்கள் போன் செய்தது பற்றியும் கூறினாள்…. ஆனால் எனக்குத்தான் அது நீங்கள் என்று ஸ்ட்ரைக் ஆகவில்லை ” என்றான்…
பிறகு தந்தை குறித்து சில விவரங்களை கேட்டு தெரிந்து கொண்ட நிதிஷ் கிளம்பும் சமயத்தில்
” நான் வரும்போது இப்போது ஒரு பெண் இங்கிருந்து அழுது கொண்டே வெளியே ஓடினார்களே???!!!
அவர்களுக்கும் இல்லை அப்பெண்ணை சார்ந்தவர் எவருக்கும் இதய சம்பந்தபட்ட பிரச்சனையா??????” என்றான் விதுல்யாவை குறித்து….
” சாரி சார்….. இட்ஸ் அவர் பர்ஸனல்!!!!” என்று மைத்ரேயி கூறவும்
“ஓ…… சாரி ஃபார் தி டிரபுள்!!!!” என்று தானும் கேட்டு கொண்டு வெளியேறிவிட்டான் நிதிஷ் ….
அவன் சென்ற பிறகு தன்னையே பார்த்திருந்த கணவனிடம் ‘என்ன???’ என்பது போல் மைத்ரேயி தலையசைக்க
” எதற்காகடி பஜாரி ‘சாரி’ கேட்டாய்??
என்றான் பிரணாவ்…
” பின்னே ஒருவரிடம் பதில் கூற முடியாத போது எப்படி சொல்வதாம்???
அதிலும் அவர் கலெக்டர் எனும் பட்சத்தில்!!!!
அவர் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் அல்லவா????
நிதிஷ் கலெக்டர் என்றதும் இவரை யுகி அண்ணாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறதோ என்று நினைத்தேன்???
ஆனால் இப்படி உனக்கும்
உதிஅண்ணிக்கும் ஃபிரெண்ட் என்று தெரியவில்லை!!!!!” என்று பேசிக் கொண்டு சென்றவளிடம்
” நான் அதைக் கேட்கவில்லை…. விதுவிடம் ஏன் சாரி கேட்டாய்?????” என்றான்….
அதில் அப்படியே அவள் முகம் மாறி போக
” வேறு என்ன என்னை கேட்க சொல்கிறாய்??????
இவ்வுலகிலேயே தெரிந்தோ தெரியாமலோ நான் ஒருவருக்கு துரோகம் செய்து இருந்தால் அது விதுவிற்கு மட்டும்தான்…….
ஸ்ரீதீப்பிடம் கூட நான் இப்படி மன்னிப்பு கேட்டது இல்லை!!!!
அவனுக்கும் எனக்கும் ஒத்து வராது என்று தெரிந்ததும் அதை எடுத்துரைக்க தான் முயன்றேன்….
ஆனால் நீ உண்மையாக விதுவை நேசித்து இருக்கிறாய்!!!!!!
இந்த துரோகம் நம்மை சும்மா விடாது பிரணாவ்!!!!!”
கண்ணீர் தெறிக்க அவள் படபடக்க வாயடைத்துப் போய் நின்றான்
பிரணாவ்….
உடனே கணவனின் முகம் பிரதிபலித்த அதிர்ச்சியில் அவனை நோகடித்து விட்டோமே என வருந்தியவள்
” சாரி பிரணாவ் !!!! நான் வேண்டும் என்றே அப்படி கூறவில்லை…..”
என்று அவன் கை பற்ற
தன் மேல் படர்ந்த ஜில்லட்ட கைகளை பிடித்து வெளியே இழுத்து சென்றான் பிரணாவ்…..
அவன் முகத்தில் பொதிந்திருந்த செய்தியை தெரிந்து கொள்ள தவறியவள்
” பிரணாவ் நில்லு!!!!! ஏன் இப்படி வேகமாக ஓடுகிறாய்?????”
அவள் கைகளை உருவிகொள்ளாது அவன் பின்னோடு சென்றபடி மைத்ரேயி வினவ
மருத்துவமனை முன் வாயிலில்
நின்றவன் அவள் கையை விடுத்து கொட்டும் மழையில் அவளை பார்த்தபடியே கால்களை பின் வைக்க
அதில்
” என்ன பண்ணுகிறாய் பிரணாவ்????
முதலில் இங்கு வா!!!!” என்று கிட்டத்தட்ட கத்தினாள் மைத்ரேயி …
ஆனால் மறுப்பாக தலையசைத்தவனோ அவளுக்கு மிச்சமாக குரலை உயர்த்தி இருந்தான் ……….
” எனக்கு மழையில் நனைய ரொம்ப பிடிக்கும்டி பஜாரி!!!!
சின்ன வயதில் அப்பா எவ்வளவு திட்டினாலும் கேட்க மாட்டேன்…..
அப்புறம் நாள் ஆக ஆக ‘ என்ன இது இன்னும் சின்ன பிள்ளையாக????’ எனும் கேள்வி என்னுள்ளே எழ
இச்சந்தோசத்தை அனுபவிக்கும் வாய்ப்பை நானே தடை செய்தும்
கொண்டேன்…..
அப்படி பல வருடம் கழித்து இன்று என்னை மழையில் நிறுத்தியிருக்கிறாய்!!!!
வேண்டாம் வராதே!!!!”
என்று முன்னேறியவளை தடை செய்தவன்
” நான் பேசி கொள்கிறேன்….
உன்னை பக்கத்தில் வைத்து கொண்டு அது முடியாது…….
இத்தனை நாட்களாக நனையும் சமயம் உண்டாகும் உவகை அனைத்தையும் இன்று மனம் சுக்குநூறாக இழந்திருக்க மாறாக என்னுள் ஒரு பரவசத்தை ஏற்படுத்திவிட்டாயடி என் பஜாரி பொண்ணே !!!! “
இவனுக்கு என்ன ஆனது என்று பிரமித்து பார்த்தவளை நேராக பார்த்து கூவினான்
பிரணாவ்….
சிறு மழை துளியை கையிலேந்திய வண்ணம்
” இவ்வுலகத்திலேயே புனிதமானது மழை நீர் என்று எண்ணி இருந்தேன்
உன் மனதை படிக்கும் வரை!!!!
வெட்டும் மின்னலின் ஒளிகீற்றிற்கு மேலாக உன் வதனத்தின் பொலிவு ஜொலித்து மிளிர
போரொலி இடியை அவ்வபோது உன் இதழ்பிரியா மௌனம் வென்று விட
மழையினும் மேன்மையானவள் நீ என்று கண்டுகொண்டேன்!!!!
நின் மனதை கொள்ளை கொண்ட கர்வம் துளியுமின்றி பன்மடங்கு ஏங்கி போனவனாய்
நம் உறவை ‘காதல்’ எனும் பந்தத்தில் திணிக்க விழையாது யாசிக்கிறேன்……”
என்றவன் தன் மனதை கண்களில் தேக்கி
விடை தெரிந்தும் அவள் பதில் வேண்டி பதின் மாணவனாக
“என்னை ஏற்று கொள்வாயாடி பஜாரி????”
என்றான் இடியோடு கூடிய பெரும் சத்தம் எழுப்பி……
அவன் காதல் மொழிகளில் அவள் வார்த்தைகள் சிக்கி கொள்ள பாய்ந்து சென்று கணவனை கட்டி கொண்டாள் அவனவள்…..
அவளை அப்படியே தூக்கி கொட்டி தீர்க்கும் மழைக்கு நிகராக தட்டாமாலை சுற்றவும்
அவளை இறக்கிவிட்ட நொடியில்
அவன் முகம் பற்றி கணக்கில்லா முத்தங்களை பரிசளித்திருந்தாள் அவன் பஜாரி….
மனைவியின் இதழொற்றலில் திளைத்தவன்
எங்கு தன் கண் காது மூக்கு கன்னங்களில் மாற்றி மாற்றி கதை பேசும் ரோஜா மொட்டிதழ்களுக்கு வலிக்குமோ
என்று
தன் அதரம் கொண்டு அவற்றிற்கு மருந்திட ஆரம்பித்தான் அவள் கள்வன்….
அக்காட்சியை கண்டு களிக்க விருந்தினராய் வந்து
கண்சிமிட்டிய மின்னலையும்
கைதட்டிய இடியையும்
அவர்கள் பொருட்படுத்தாது தங்கள் பணியில் மூழ்கியிருக்க
வரவேற்காத காரணம் கொண்டு விருந்தினர்கள் பெய்த மழையையும் சேர்த்து கூட்டி போய்விட
அதன்பின்னும் கூட மனமே இல்லாமல் தான் தன்னவளை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தினான் பிரணாவ்…..
அப்போதும் மயக்கம் தெளியாதவள்
அவனது முதுகினை இறுக்கி பிணைந்த கரங்களை பிரிக்காது அவன் மார்பில் முகம் புதைக்க
” வீட்டிற்கு போகலாம்டி பஜாரி!!!!!!!!!” என்றான் அவள் காது மடல்களில் முத்தம் பதித்து….
அதில் சுயநினைவு பெற்று விலக நினைத்தவளை துளியும் அசைய அனுமதிக்காதவன் அவளை அப்படியே தூக்கி பகானி நின்ற இடத்திற்கு சென்றவன்
” சாவி எங்கேடி பஜாரி ????” என்று கேட்க
மைத்ரேயினால் பதில் கூற தன் விழிகளை திறக்க முடியாதபடி வெட்கம்
வந்து சூழ
சிவந்த இதழ்களையும் திறக்க முயற்சிக்காது அவன் கரங்களிலேயே தான் தஞ்சம் அடைந்திருந்தாள்……
அவளது மந்தக நிலை அவனை மொத்தமாக ஆட்கொள்ள உடனே அவளை மெதுவாக இறக்கி விட்டவன்
” டூ செக்கண்ட் டி பஜாரி !!!!” என்று மருத்துவமனைக்குள் ஓடினான்..
அவளறைக்கு சென்று அங்கிருந்த சாவியை கைபற்றியவன்
அடுத்த இரண்டாவது நிமிடத்தில் அவள் முன் விரைந்திருந்தான்….
மழையில் நனைந்து பழக்கமில்லாதவளுக்கு குளிர் பிறக்க
கார் கதவினை திறந்து அவளை உள்ளே தள்ளியவன் சுற்றி வந்து
டிரைவர் இருக்கையில் அமர்ந்து
அவள் மறுக்க மறுக்க தன் மடி மீது தன்னவளை அமர்த்தி கொண்டான்…..
இன்னும் நடுக்கம் குறையாது வீற்றிருந்தவளை கண்டு ஒருகணம் பயந்து
” என்னடி பஜாரி பண்ணுது உனக்கு ??????
வீட்டிற்கு போய்விடலாமா இல்லை டாக்டரிடம் காண்பிக்கலாமா????”
அவன் பதற
அவன் கன்னங்களை பற்றியவள்
” ஒன்றுமில்லை …… வீட்டிற்கு போகலாம்!!!!” என்றாள்….
” சாரிடி உனக்கு ஒத்து கொள்ளுமா என்று தெரியாமல் நான் தான் உன்னை மழையில் இழுத்து……”
அவன் வாக்கியம் முடியுமுன்னே
” உனக்கு மழையில் நனைய அவ்வளவு பிடிக்குமா பிரணாவ்???????”
கண்களில் ஆர்வத்தை தேக்கி கேட்டவளின் கரத்தை தன் உதட்டினில்
ஒற்றி எடுத்து
” இல்லை ” என்று மறுப்பாக தலையசைத்தவன்
“மழை தான் ‘பெஸ்ட் ‘ என்று நினைத்த போது பிடித்தது
ஆனால் எப்போது நீ தான்!!!! என்று புரிந்ததோ அப்போதிலிருந்தே உன்னில் நனைய தான் பிடிக்கிறது……..
நனையட்டுமா??????????????”
ஆசை வழிந்தோட மோகம் சொட்ட கேட்டவனை பார்க்க திறனிறாது நகர முற்பட்டாள் அவன் பஜாரி …..
ஆனால் அவள் செய்கையை தடுத்து வண்டியை ஸ்டார்ட் செய்திருந்தான் பிரணாவ்….
” இப்படியே வண்டி ஓட்டுவதற்கு
கம்ஃபர்டபிளாக இருக்காது பிரணாவ் !!!!”
அவள் கூறியதற்கு
” என்னுடைய கம்ஃபர்டபிள் ஜோன் நீ தான்!!!! பேசாமல் உட்காரு…. இல்லாவிட்டால் நாம் வீடு திரும்புவதற்கு தாமதம் ஆகும் !!!
எனக்கு ஓகே பா …….” எனவும் அமைதியாகிவிட்டாள் மைத்ரேயி….
வீடு வரையில் அவளை தன் மடிமீது உட்கார வைத்தே பயணித்தவன் பகானியை நிறுத்தியதும்
” அழுத்தக்காரா!!!!” அவன் மீசையை பிடித்து திருகிவிட்டபடி இறங்கியவள் அவன் பதில் கூறுமுன்னரே வீட்டிற்குள் தாவியிருந்தாள்….
அங்கு காஞ்சனாவின் கையில் எதோ ஒரு விளையாட்டு பொம்மையை ஆராய்ச்சி செய்தபடி வீற்றிருந்த மைந்தன்