“ஆமா ரொம்ப நேரமாகி விட்டது”., என்று சொன்னவன்., “வேலை கொஞ்சம் இருந்தது” என்று மட்டும் சொல்லி முடித்துக் கொண்டான்.
அதன்பின்பு வீட்டினர் தான் “சரிப்பா., நாங்க நாளைக்கு காலையில பொண்ணு வீட்டுக்கு போயிட்டு பேசிட்டு வரலாம்னு இருக்கோம்”., என்று சொன்னார்கள்.,
அவன் கேள்வியாக அவர்களை நோக்க., “இல்ல பொண்ணு பாக்க போறதுக்கு முன்னாடி., வெளிய வச்சு பேசிக்கலாம் அப்படின்னு சொன்னோம்., அவங்க தான் ஜாதகம் பார்த்துட்டு., அப்படியே வீட்டையும் பார்த்துட்டு வந்த மாதிரி இருக்கும் ன்னு சொன்னாங்க., ஏன்னா நம்ம பொண்ணு பாக்கப் போறது கோயில்ல வச்சு தான்., அங்க வைச்சே பார்க்கலாம்னு இருக்கோம்”., என்று சொன்னார்கள்.,
அவர்களை நிமிர்ந்து பார்த்தவன் வேறு எதுவும் சொல்லாமல் உணவை வாயில் அடைத்துக் கொண்டவன் “ம்ம் ம்ம்” என்றான்.,
அவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை., “அப்புறம் மகனே” என்று பெரியவர் அழைத்தார்.,
“சொல்லுங்க பெரியப்பா”., என்றான்.,
“நாங்க பொண்ணு வீட்டுக்கு போறோம் ன்னு சொல்லுறோம். நீ ஒன்னுமே சொல்லலையே”., என்று கேட்டார்.
எதுவுமே சொல்லாமல் அவரை பார்த்த வண்ணம் இருந்தவன்., வேறு எதுவும் சொல்லாமல் சாப்பிட தொடங்கினான்.,
“என்னடா சொல்றதுக்கு எதுக்குமே பதில் சொல்ல மாட்டேங்கிற”., என்று அப்பா கேட்டார்.
“அதான் நீங்களே முடிவு பண்ணி., நீங்களே சொல்லிட்டு இருக்கீங்க., அப்புறம் நான் என்ன பதில் சொல்லனும் ன்னு சொல்றீங்க., என்று சொன்னான்.,
“ஏண்டா தப்பா நினைக்கிற., நீ என்ன எவ்வளவு பெரியவனா வளர்ந்தாலும்., எங்க புள்ளைக்கு நல்லது செய்ய எங்களுக்கு தெரியாதா”., என்று சொன்னார்.,
அப்போது மனதில் ஒரு ஓரமாக உறுத்தினாலும்., ‘7 வருடம் தன்னை நம்பி மட்டுமே காத்திருத்தவளுக்கு என்ன பதில் சொல்வது’., என்றும் தோன்றியது.,
‘தப்பு தான்’., என்று நினைத்தவன் ‘எதுவாக இருந்தாலும் முதலிலேயே முடிவு செய்திருக்க வேண்டும்., குடும்பத்தினர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது., என்று நினைத்திருந்தால்., நிச்சயமாக காதல் செய்திருக்கக் கூடாது.,
ஆனால் காதல் என்று வந்தபின்., ஒரு பெண்ணிற்கு நம்பிக்கை துரோகம் செய்வது இருப்பதிலேயே பெரும் பாவம்’., என்று நினைத்துக் கொண்டான்.,
அவன் எதுவும் சொல்லாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்., பின்பு உணவை முடித்துக் கொண்டு எழுந்தவன்., “அதை நீங்களே யோசித்து., நீங்களே முடிவு பண்ணிட்டீங்க இல்ல., எதுக்கு என்கிட்ட கேக்குறீங்க”., என்று சொல்லி விட்டு கைகளை கழுவி விட்டு தன் அலுவலக பையை எடுத்துக்கொண்டு கிளம்ப போனான்.
“டேய் நாங்க இன்னைக்கு கடைக்கு போறோம் டா”., என்று சொன்னார்கள்.,
திரும்பிப்பார்த்தவன்., “என்ன திடீர்னு”., என்றான்.
“இல்ல ஊர்ல எல்லாருக்கும் டிரஸ் எப்பவும் வாங்கிட்டு போவோம் இல்ல., இந்த தடவை பிள்ளைங்க., என்ன கலர் டிரஸ் வாங்கணும்னு முடிவு பண்ணி சொல்லி இருக்காங்க., அதுக்குத்தான் கடைக்கு போகனும்”., என்று சொன்னார்.,
‘கடைக்கா’., என்று யோசித்தவன்., “எந்த பக்கம் போறீங்க” என்று கேட்டான்.,
“ஏன்டா” என்று கேட்டனர்.
“இல்ல தெரிஞ்ச கார் இருக்கு வர சொல்லுறேன்” என்று சொன்னான்.
“இல்லடா நாங்களே போய்விடுவோம்”., என்று சொன்னார்கள்.
“இல்ல இல்ல., நீங்க எல்லாரும் அந்த காரில் போயிருங்க., வெயிட் பண்ணுங்க”., என்று சொல்லி விட்டு அவசரமாக தெரிந்த வண்டிக்கு அழைத்தவன்., வீட்டிற்கு வந்து அவர்கள் சொன்ன நேரத்தை சொல்லி அவர்களை அழைத்து செல்லும் படி கூறினான்.,
பாட்டியோ., ‘நீ அவ்வளவு நல்லவன் எல்லாம் இல்லையடா’ என்னும் விதத்தில் பார்த்துக்கொண்டிருந்தார்.,
அவன் சொல்லிவிட்டு கார் எத்தனை மணிக்கு வரும்., அதன் டிரைவர் ன் போன் நம்பர் என்று அவர்களுக்குக் கொடுத்துவிட்டு கிளம்பினான்.
“பெரிய கார் தான் சொல்லி இருக்கேன்., நீங்க 6 பேர் போற மாதிரி தான் இருக்கும்”., என்று சொன்னான்.
சரி என்று கேட்டுக்கொண்டனர்.,
பாட்டியோ ஒரு சந்தேகப் பார்வையோடு பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த தாத்தா.,
‘இவளுக்கு உடனே டவுட் வந்திருக்குமே’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
அது போலவே அவன் வெளியே கிளம்பவும்., பாட்டி தான் “எனக்கு ஒரு டவுட்டு”., என்று சொன்னார்.
தாத்தா தான் “நினைச்சேன்., நீ பார்த்த பார்வையிலேயே நினைச்சேன்”., என்று தாத்தா சொன்னார்.
வீட்டில் உள்ள பெண்களும்., அவருடைய மகன்களும் பார்க்க., “எனக்கு என்னவோ இவன் மேல ஒரே சந்தேகமா இருக்கு., உங்க கிட்ட கல்யாணத்துக்கு பிடி கொடுத்து பேச மாட்டிக்கான்., மெனக்கெட்டு கார் எல்லாம் அரேஞ்ச் பண்ணி அனுப்புறான்., நீங்க நல்ல விசாரிங்க ஏற்கனவே கல்யாணம் கில்யாணம் பண்ணிட்டா னா ன்னு”., என்றார்.,
“நீ வாய மூடிட்டு இரு”., என்று தாத்தா சொன்னார்.,
“இல்ல இல்ல., எனக்கு சந்தேகமா இருக்கு., நம்ம வர்ற நேரத்துல அவன் பொண்டாட்டி ஒருவேளை ஊருக்கு போய்ட்டாளோ”., என்று சொன்னார்.,
“வீட்ல பொம்பள யாரும் கிடையாது., எல்லாம் அவன் டிரஸ் மட்டும் தான் இருக்கு”., என்று சொன்னார்.,
“இல்ல நம்ம வர்றோம் ன்னு., அன்னைக்கே சொல்லிட்டோம் இல்ல., அதனால ரெண்டு நாள் முன்னாடியே ஊருக்கு அனுப்பி வைத்திருந்தான் னா”., என்றார்.
“இவ ஒருத்தி எப்ப பாரு.,சந்தேகம் சந்தேகம் ன்னுட்டு., ஆனா நீ தானே படிக்க அனுப்பின., நீதானே பெரிய வேலை கிடைச்சி இருக்கு வேலை பார்க்கட்டும் சொன்ன., இப்ப நீயே சொல்லு., அவன் வெளியே ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வெளியே போய் செட்டில் ஆயிட்டான்னு சொல்லு., உனக்கு ஒரு வேளை தெரியுமோ.,
அவன் யாரையும் கல்யாணம் பண்ணி வச்சிருக்கானா., அது தெரிஞ்சு தான்., எங்க கிட்ட இப்படி சொல்லுறீயா”., என்று கேட்டார்.
“அப்ப அவனே வீட்ல பொண்ணு பார்க்க வேண்டாம் ன்னு சொல்லி இருப்பானே”., என்று தாத்தா சொன்னார்.,
“எனக்கு இப்ப உன் மேல தான் சந்தேகம் வருது., பொண்ணு பார்க்கணும் பேச்சு எடுக்கும் போது., நீ என்ன சொன்ன., அவன் ட்ட ஒரு தடவைக்கு பத்து தடவை கேளுங்க ன்னு சொன்ன இல்ல”., என்று தாத்தா பேச்சை ஆரம்பித்தார்.,
பெரியப்பாவும் அப்பாவும் “இரண்டு பேரும் ஆரம்பிச்சுட்டாங்க”., என்று சொன்னாலும்.,
அவர்களுக்கும் ‘ஏன் கல்யாணம் வேண்டாம் சொல்லலை ஆனாலும் கல்யாண விஷயத்தில் பிடி கொடுக்காமல் இருக்கானே’., என்ற எண்ணம் தோன்றத்தான் செய்தது.,
ஆனால் எதுவும் சொல்லாமல் “அப்பா பேசாம இருங்க., அம்மா தான் ஏதோ சொல்றாங்க ன்னா., நீங்க வேற”., என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.,
“இல்லடா அவ சொல்றத பார்க்கும் போது., ஒருவேளை அவளுக்கு ஏதும் விஷயம் தெரியுமா., தெரிஞ்சு தான் நம்ம கிட்ட மறைக்கிறாளோ”., என்று சொன்னார்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல., ஆனா எனக்கு ஒரு சந்தேகம் இருந்துட்டே இருக்கு., இந்த பையன் மட்டும் எதிலும் பிடி கொடுத்து பேசவே மாட்டான்., நேத்து நைட்டே அவனை பிடித்து வைத்து பேச நினைச்சீங்க., ஆனா தப்பிச்சுட்டேன் பாத்திங்களா., ஏதேதோ காரணம் சொல்லி தப்பிக்கிறான்., ஒருவேளை உண்மையிலேயே ஏதாவது பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்கலாம் இல்ல., லவ் பண்ணின மாதிரி எதுவும் தெரியலையே”., என்று பாட்டி சொன்னார்.,
பெரியம்மாவும் அம்மாவும் தான் “முதல்ல நீங்க இந்த லவ் பாட்டு., அதெல்லாம் பாக்குறத குறைங்க., அது மட்டும் இல்லாம ரொம்ப சினிமா., சீரியல் இதெல்லாம் பார்ப்பதெல்லாம் குறைங்க.., அப்பதான் உங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் எண்ணம் வராது., என்று சொன்னார்கள்.
“இவ கெடக்கா கூறு கெட்டவ”., என்றார் தாத்தா.,
“நான் என்ன அப்படியா பார்க்கேன்., ஊர்ல நடக்காததையா சினிமாவா எடுக்கான்., சீரியலா எடுக்கான்., எங்கேயோ நடக்கப் போய் தானே எடுத்திருக்கான்.., அதே மாதிரி தான் இதுவும்., எனக்கென்னவோ இந்த பய முழிக்கிற முழியே சரி இல்ல.,
நேத்து நைட்டு மே சாப்பிட்டுட்டு இருக்கும்போதே போன் ல ஏதோ அடிச்சுகிட்டே கிடந்தான்., பாரு கொஞ்ச நேரத்தில் போன் வந்தது., உடனே போன் அடிக்கவும் காதில் வைத்துட்டு அப்படியே ஓடி போய்ட்டான்., ஆபீஸ் வேலை ன்னு சொன்னான்., உண்மையிலே ஆபீஸ் வேலைய தான் பார்த்தானா., உங்களுக்கு தெரியுமா., இல்ல எனக்கு தான் தெரியுமா.,
நம்ம ரெண்டு பேருக்கும் அவன் கைல வெச்சி இருக்கானே ஒரு பொட்டி., (லேப்டாப்) அதை நோன்டி பார்த்துட்டே இருக்கான்”., என்று சொன்னார்கள்.
மருமகள்கள் இருவரும் “அய்யோ எதோ சந்தேகம் வந்தா உங்களுக்கு ஒரேடியா சந்தேகம் வரும்., இல்லாட்டி நீங்க தான் அவனுக்கு ஓவரா சப்போர்ட் பண்ணி பேசுங்க”., என்று சொல்லிவிட்டு சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்ய நகர்ந்துவிட்டனர்.,
பெரியப்பாவும் அப்பாவும் “இந்த அம்மாக்கு வேற வேலையே இல்ல., சும்மா சீரியலை சினிமா பார்த்துட்டு அப்படியா இப்படியா ன்னு அதுவா யோசிச்சுகிட்டு இருக்கும்”., என்று சொன்னார்கள்.,
தாத்தா மட்டும் சற்று சிந்தனை வயப்பட்டவராக., “நீ வந்து அப்படியா சொல்லுற”., என்று கேட்டார்.,
“பின்னே நான் என்ன பொய்யா சொல்றேன்., எனக்கு என்னமோ அப்படி தான் தோணுது”., என்று தாத்தாவிடம் கதை சொல்லிக் கொண்டிருந்தார் பாட்டி.,
இதற்கிடையில் வீட்டிலிருந்து கிளம்பியவன் அந்த கார் டிரைவருக்கு போன் செய்து., “அவங்க எந்த கடைக்கு கிளம்பினாங்க., எந்த கடைக்கு போக சொல்லுறாங்க ன்னு காரில் போகும்போதே வேற யார் கூடவோ பேசுற மாதிரி., எனக்கு மெசேஜ் பாஸ்பண்ணி விடனும்., அல்லது பேசி சொல்லியே ஆகணும்”., என்று சொன்னான்.,
சரிங்க சார் என்று சொல்லி இருந்தான்., கார் டிரைவர் சரி என்றவுடன்., சமாளிப்போம் என்ற எண்ணத்தோடு அவனும் அலுவலகம் சென்று சேர்ந்து இருந்தான்.
அதன் பிறகே நண்பர்களின் உதவியோடு மீண்டும் அலுவலகத்தில் பெர்மிசன் சொல்லிவிட்டு., தன் மீதி வேலையை முடிப்பதற்காக வெளியே சென்றிருந்தான்.
அதற்கிடையில் நீதா விற்க்கு போன் செய்து., ” மதியம் 2 மணிக்கே பெர்மிசன் சொல்லிவிட்டு இவ்விடத்திற்கு வா., அல்லது லீவு போட்டுவிட்டு வா”., என்று சொன்னான்.
அவளும் “சரி”., என்று சொல்லி இருந்தான்., வேறு எதைப் பற்றியும் பேசிக் கொள்ளவில்லை.,
அவரவருக்கு அவரவர் பயம் மனதில் அழுத்திக் கொண்டிருந்தது.,
அதற்கிடையில் கேப் டிரைவர் போன் செய்து., “சார் இந்த கடைக்கு போய் இருக்காங்க” என்பதை ரகசியமாக சொல்லிவிட., அவனும் நிம்மதியாக அப்பாடா என்று பெருமூச்சு விட்டான்.,
குடும்பத்தினர் அவன் ஏற்பாடு செய்திருந்த காரில்., ஏறி குடும்பத்திற்கு தேவையான உடைகள் வாங்க சென்னையில் உள்ள பிரபலமான கடைக்கு சென்றனர்.,
அதை அறிந்து கொண்டவன் அந்த பக்கம் இல்லாமல் வேறு கடைக்கு சென்று இறங்கியிருந்தான்.,
“என்ன ஆச்சு., எங்கே போறோம்” என்று அவள் கேட்டாள்.,
முன் பக்கத்திலிருந்து பிரணவ்ம் அவன் நண்பனும் இறங்க., பின்புறம் இருந்து நீதா இறங்கினாள்.,
உள்ளே அழைத்து சென்றவன் பட்டு புடவை செக்சனில் போய் “சாரி செலக்ட் பண்ணு”., என்று சொன்னவன்.,அவனும் உடன் வந்து இருந்து திருமண புடவையாக பட்டு புடவை ஒன்றை எடுத்தான்., அவனை என்ன என்ற கேள்வியோடு பார்க்க.,
அவனை கேள்வியாக பார்த்தவளிடம்., “என் மேல நம்பிக்கை இருக்கு தானே”.,என்றான்.,
“நம்பிக்கை இல்லாமல் தான் கூட வந்திருக்கேனா”., என்றவள்.
பதினைந்து நாள் கழித்து நடக்கப்போகும் திருமணத்திற்கு இப்பவே எடுக்கிறான் போல என்று எண்ணிக்கொண்டாள்., அவனும் அவனுக்கு தேவையான உடைகளை வாங்கிக்கொண்டான்.,
பின்பு அவளை அழைத்துக்கொண்டு நகை கடைக்கு சென்றான்., அங்கு அவர்கள் குடும்பத்தில் எப்படித்தாலி அணிவார்கள் என்பது அவனுக்குத் தெரியும் என்பதால்., அது போலவே தாலி செயினோடு சேர்த்து வாங்கியவன்., அதிலேயே கயிறும் சேர்த்து கட்டி தர சொன்னான்., அது போலவே கட்டிக் கொடுத்தனர்.,
ஜுவல்லரியில் கடவுளை வணங்கி அதன் பின்பே அவன் கேட்டபடி செய்து கொடுத்தனர்., அதை வாங்கிக் கொண்டு வெளியே வந்தவனுக்கு மனம் நிம்மதி பெருமூச்சு விட்டது.,
நீதா அவனை கேள்வியாக பார்க்க., “சொல்கிறேன்” என்று சொல்லி அவளை காரில் அழைத்துக் கொண்டு சென்றான்.
முடிவு எடுத்த பின் எப்பொழுதும் பின் வாங்குவது என்பது யாரும் வைத்துக் கொள்ள கூடாத செயல்., முடிவு எடுக்கும் போது தெளிவாக யோசித்து முடிவெடுப்பது மிகவும் நல்ல செயல்., அதை எப்போதும் கடைபிடிப்பது நலம் பயக்கும்.
அறிவு நம்மை கைவிடும் போது
நம்பிக்கையே உதவுகிறது..!