“மாமா எழுதி தந்தாங்க., படம் வரைந்து தந்தது நந்தன்”., என்று சொல்லவும்.,
“அடிப்பாவி கையெழுத்து கண்டு பிடிக்காமல் பிரபஸர் எப்படி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்”என்று கேட்க.,
“அதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க., நான் கேட்டதுக்கு சொல்லிட்டேன்.., அவசர அவசரமா எழுதிட்டு வந்தேன் சார்., அதனால ஹாண்ட் ரைட்டிங் கொஞ்சம் மாறின மாதிரி இருக்கும் தப்பா எடுத்துக்காதீங்க., அப்படின்னு சொல்லிட்டேன்., அதனால கண்டுக்காம விட்டுடுங்க”.., என்றாள்.
“அடிப்பாவி.,தப்பிச்ச., பிழைச்சிப் போ”., என்றனர்.
நாளும்., பொழுதுகளும்., அவளது சேட்டையோடும்., கல்லூரிக்கே உண்டான கலகலப்போடு துரத்தப்பட்டு ஓடிக்கொண்டிருந்தது.,
அன்றும் அப்படித்தான் கல்லூரி விட்டு வந்தவள் கிச்சனில் தேவகிக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டு வந்து ஹாலில் அமர்ந்தாள்.
மறுநாள் சனிக்கிழமை என்பதால் வேலையை சீக்கிரமாக முடித்துவிட்டு வந்த தேவகி “என் கூட கோயிலுக்கு வரியா நிவேதா” என்று அழைக்க அவளும் அவரோடு சென்றாள்.
கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கோயிலை சுற்றி வரும் போது மஞ்சரி யாரோ ஒரு ஆடவனுடன் நின்று பேசுவதை பார்த்தவள்., கண்டுகொள்ளாதது போல அவ்விடத்தை தாண்டி சென்றாள்.
மஞ்சரியும் அவள் அங்கு பேசிக்கொண்டிருந்த சுவாரஸ்யத்தில்., இவள் வந்து கொண்டிருந்ததை கவனிக்கவில்லை., ஆனால் கோயில் என்றும் பாராமல் ஒரு ஆடவனுடன் அவ்வளவு நெருங்கி நின்று பேசியதைக் கண்ட உடன் நிவேதாவிற்கு தான் ச்சை என்று இருந்தது…
கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும் போது நந்தனும் வந்திருக்க., டீ போட்டுக் கொடுத்தவர்., அமர்ந்து சீரியல் பார்க்க தொடங்கினார்.
இவளோ மறுநாள் கல்லூரி இல்லாத காரணத்தினால் அவர் சோபாவில் அமர்ந்து இருக்க., அவர் காலடியில் போய் அமர்ந்து கொண்டு..,
“அத்தை இப்படி தலையை தடவி விடுங்க”., என்று சொல்லி அவர் கையை எடுத்து அவள் தலையில் வைத்து தடவி விட சொன்னாள்.
“சும்மா இருடா” என்றவர் டிவியில் கவனத்தை திருப்பினார்.
உனக்கு பூனைக்குட்டி ன்னு சொன்னா மட்டும் கோபம் வருது., இப்ப என்ன பண்ணுற., பூனைக்குட்டி எல்லாம் இப்படி தான் சாஞ்சிக்கும்., நீயும் அப்படித்தான் இருக்க.., என்று சொல்லவும்.
“நீங்க சொன்னதுகாக எல்லாம் மாறமாட்டேன்., அதெல்லாம் முடியாது”., என்று சொல்லி அவர் மடியில் தலைவைத்து சாய்ந்துகொண்டு இருந்தாள்.
நந்தன் தான் “அம்மா இது சரி இல்ல நீங்க இவளுக்கு ஓவரா செல்லம் கொடுக்குறீங்க”., என்றாள்.
“போடா பொறாமை பிடிச்சவனே”., என்ற தேவகியை பார்த்தவன்.,
“அம்மா இதெல்லாம் அநியாயம்., என்னை பார்த்தா அந்த மாதிரி இருக்கு” என்று அவன் சொல்லிக் கொண்டே இருக்க.,
அவரோ எதுவும் சொல்லாமல் தன் மடியில் தலை சாய்த்து இருந்த மருமகளின் தலையைக் கோதி கொடுத்து கொண்டு இருந்தார்.,
இப்படியே 2 மாதங்கள் நகர்ந்திருக்க அன்று நந்தனின் அப்பா அவருடன் வேலை பார்த்தவரின் மகனுக்கு திருமணம் என்று சொல்லி வெளியூர் கிளம்பி இருந்தார். மாலைக்குள் வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு காலையிலே கிளம்பிவிட்டார்.
நந்தனும் பொல்யூஷன் கண்ட்ரோல் மீட்டிங் இருப்பதால் தான் இப்போது சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்றும் வருவதற்கு தாமதமாகும் என்றும் சொல்லி கிளம்பி இருந்தான்.
கிளம்பும் போது “பூனைக்குட்டி பார்த்து போயிட்டு பார்த்து வரணும் சரியா., எதுவும் போன் பண்ணிறாத., மீட்டிங் முடிய லேட்டாகும்., ஷியாம் வீட்டுல கல்யாண வீட்டுக்கு போறாங்க., அவன் தங்கச்சி வழியில ஒரு கல்யாணம்”., என்று சொன்னவன்., கிளம்பி விட்டான்.
அனைவரும் சீக்கிரம் கிளம்ப சிம்பிளாக மட்டுமே சமைத்திருந்தார் தேவகி.,
அவர் முகம் வாடி இருப்பதை கண்டவள்., கல்லூரி கிளம்பி கீழே வந்திருந்தாள்.
“அத்தை ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க., ரொம்ப டல்லா இருக்கீங்க”.., என்று கேட்க.
“ஒன்னும் இல்லடா., நீ கிளம்பு”., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
“உடம்பு முடியலையா” என்றவளிடம்
“ஒன்னும் இல்லம்மா.., வயசாகுது தானே”., என்று சொன்னார்.
“அப்புறம் ஏன் தனியாக காலையில வேலை செய்றீங்க.., என்ன கூப்பிட்டு இருக்க வேண்டியது தானே”., என்றாள்.
“இன்னைக்கு என்னடா.,நாம மட்டும் தானே., சிம்பிளாக தக்காளி சாதம் தான் செஞ்சேன்., வேற ஒன்னும் இல்லை”., என்று சொல்லவும்..,
அவர் சொல்ல சொல்ல கேட்காமல் சில வேலைகளை மட்டும் செய்து முடித்து விட்டு கல்லூரி கிளம்புவதற்கு பேகை எடுத்துக் கொண்டு கிளம்ப போனவள்.
அவர் வயிற்றை பிடித்துக் கொண்டு சுருண்டு அமர்ந்திருப்பதை கண்டு..,
அவள் “என்னத்தை செய்து” என்றாள்.
அவர் அது என்று சொல்லி பெண்களுக்கே உரிய பிரச்சனையைப் பற்றி சொன்னார்.
அது மட்டுமல்லாமல் அவருக்கு “இது மெனோபாஸ் பீரியட் காண நேரம் என்றும் தனக்கு முதலில் எல்லாம் மூன்று மாதத்துக்கு ஒருமுறை மாதப்பிரச்சினை வந்ததாகவும்.., இப்பொழுதெல்லாம் 6 மாதத்துக்கு ஒருமுறை வருவதாகவும் சொன்னார்.,
ஆறு மாதமாக வராமல் இப்போது வந்திருக்கிறது., அதுதான் ரொம்பவும் படுத்தி எடுக்கிறது”., என்றார்.
“என்னைக்கு வந்தது” என்று கேட்டாள்.
“நேத்து மா”., என்று சொன்னவுடன்
“நீங்க எப்படி இருப்பீங்க., இன்னைக்கு வீட்ல யாரும் இல்லையே”., என்று சொன்னவள் “உங்களை எப்படி தனியா விட்டுட்டு போவேன்”.,என்றாள்.
அப்பொழுது தான் அவர் சொன்னார் “இல்லம்மா நான் பாத்துக்கிறேன்., நீ கிளம்பு”., என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இருமுறை பாத்ரூமுக்குள் சென்று வருவதை கண்டவள்.,
தன் தோழிக்கு உடனடியாக போன் செய்து தான் “இன்று கல்லூரிக்கு வரவில்லை விடுப்பு சொல்லிவிடு” என்றவள் அவசரமாக தேவகி அறைக்கதவை தட்டி கொண்டு உள்ளே வந்தாள்.
அப்போதுதான் தேவகி சொன்னார்., “சற்று அதிகமான உதிரப்போக்கு இருப்பதால் அடிக்கடி ஓய்வு அறைக்கு செல்ல வேண்டியது இருக்கிறது மற்றபடி ஒன்றுமில்லை.., நீ கிளம்பு என்று சொல்லவும் அவள் இல்ல வேண்டாம் உங்கள தனியா விட்டுட்டு நான் போக மாட்டேன்.., எனக்கு தெரிஞ்சு நான் மாடியில் போய் ட்ரஸ் மாத்திட்டு வர்றதுக்குள்ள நீங்க ரொம்ப டல்லா ஆயிட்டீங்க.., அது மட்டுமில்லாம இப்ப பேசிட்டு இருக்கும் போதே இரண்டு தடவை ரெஸ்ட் ரூம் போயிட்டீங்க., வாங்க ஹாஸ்பிட்டல் போலாம்”., என்று சொன்னாள்.
அவரோ “இல்லமா என்னால இங்கிருந்து ஹாஸ்பிடலுக்கு கூட வரமுடியாது”., என்று சொல்லவும் தான் உதிரப் போக்கின் தீவிரத்தைப் புரிந்து கொண்டாள்.
“இருங்க வரேன்” என்று சொல்லிவிட்டு சற்று நேரம் தாக்குப் பிடிக்கக் கூடிய அளவில் கல்லூரிக்கு என வாங்கி வைத்திருக்கும் சிலவற்றை எடுத்துக் கொண்டு வந்தாள்.
“இதை யூஸ் பண்ணி பாருங்க” என்று சொல்ல.,
“வேண்டாம் நான் இதெல்லாம் யூஸ் பண்ணி பழக்கம் கிடையாது”., என்று சொல்லி ஒரு மாமியாராக அவர் கூச்சத்தோடு தெரிவிக்க.,
“நீங்க எதுக்கு இப்ப யோசிக்கிறீங்க., நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்”., என்று சொல்லி அவருக்கு உடை மாற்ற உதவி செய்ததோடு.,
ஒரு வாரம் கல்லூரிக்கு ஆட்டோவில் சென்ற பழக்கத்திற்கு ஆட்டோ டிரைவருக்கு போன் செய்து வரச் சொல்ல., அவர் வந்தவுடன் தேவகியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள மகளிர் நல மருத்துவமனைக்கு கிளம்பினாள்…
அங்கு சென்றவுடன் அவரது நிலையை எடுத்துச் சொல்ல உடனடியாக மருத்துவம் பார்க்கப்பட்டது.,
அப்போது டாக்டர்தான் “சீக்கிரமாவே கூட்டிட்டு வந்திருக்கீங்க நல்லதா போச்சு., கொஞ்சம் அதிகமான உதிரப்போக்கு தான் இருக்கு” என்று சொன்னவர் “சின்னப்பிள்ளையா இருக்கீயேமா., வேற யாரும் வரலையா” என்று கேட்க..,
‘அடக்கடவுளே எல்லாருக்கும் இப்படி சின்ன பிள்ளையா வா தெரியனும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் சொல்லத் தொடங்கும் முன்.,
தேவகி சொல்லியிருந்தார் தன் மருமகள் என்று.., அது மட்டுமில்லாமல் அவள் நெற்றியில் வைத்திருந்த குங்குமம் கழுத்தில் இருந்த தாலி சரடு அவளை பெரிய பெண்ணாக டாக்டருக்கு நினைக்க தோன்றியதோ என்னவோ “சில டெஸ்ட் எடுத்துட்டு தான் சொல்ல முடியும்” என்று அவரை அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்யவைத்தார்..,
பெண்களைப் பொருத்தவரை இது மெனோபாஸ் நேரம் அதனால் இப்படி இருக்கிறது என்றோ.., அல்லது இப்படித்தான் இருக்கும் என்றோ.., அவர் அவர்களாக கற்பனை செய்து கொண்டு அதை அப்படியே விடக் கூடாது., அது பின்னாளில் பெரிய பிரச்சனையே விளைவிக்கக் கூடும் என்பதை இப்பொழுதும் நிறைய பெண்கள் கவனிக்க தவறிவிடுகின்றனர்.,
அப்படிதான் தேவகியும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தார் போல மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் அவருக்கு தேவையான சில மருத்துவம் செய்யவேண்டும் என்று சொன்னவர்., அதை உன்னிடம் எப்படிமா சொல்வது என்ற எண்ணத்தோடு.,
“இப்போ அது பண்ணிட்டா அவங்களுக்கு சரியாயிடுமா”., என்றாள்.
“அப்புறம் சில டெஸ்ட் எடுக்கணும் அதையும் எப்படி சொல்றதுன்னு தெரியலமா”., என்று தயங்கி சொல்ல..,
இவள் அன்றைய வீட்டின் சூழ்நிலையை சொன்னவள்., “எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லுங்க., அத்தை ட்டஎதுவும் சொல்ல வேண்டாம்”., என்று சொன்னாள்.
“இல்லம்மா கர்ப்பப்பை வாய் எல்லாம் புண்ணாக இருக்கிறது.,அதற்கென்று ஒரு பரிசோதனை செய்ய வேண்டும் வேறு ஏதும் பிரச்சினை இருக்கிறதா என்று பார்க்கனும்”., என்று சொல்லவும்.
இவளுக்கு டாக்டர் சொல்ல வருவதின் அர்த்தம் புரிந்து கொள்ள முடிந்தது., ஏனெனில் இப்பொழுதெல்லாம் மருத்துவத் துறையைப் பற்றி அனைவருமே நன்றாக அறிந்து வைத்திருப்பதால்..,
அவள் யோசனையோடு டாக்டரை பார்த்து “வேறு ஏதும் பயப்படுற மாதிரி இருக்காதே டாக்டர்”., என்று கேட்க.,
“டெஸ்ட் செய்து ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் தான் சொல்ல முடியும்”., என்று சொன்னார்.
“ப்ளீஸ் டாக்டர் அத்தை கிட்ட எதுவும் சொல்லாதீங்க.., அதே மாதிரி வீட்ல உள்ளவங்க யார்கிட்டயும் எதுவும் சொல்லாதீங்க.., ரொம்ப பயந்துருவாங்க., டெஸ்ட் எடுங்க ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் எதுனாலும் சொல்லிக்கலாம்., அதுவரைக்கும் சொல்லாதீங்க ப்ளீஸ்”.., என்று கேட்கவும்.
சிறு பெண்ணாக இருந்தாலும் அவளுக்கு இருக்கும் மனநிலையை மருத்துவரால் புரிந்துகொள்ள முடிந்தது..,
“கடவுள் இருக்கார்”.,என்று சொல்லி தேவையான சிலவற்றை மட்டும் எழுதிக் கொடுக்க வீட்டிற்கு சென்றுவிட்டு வருவதாக கிளம்பினாள் நிவேதா…
தேவகி இடமும் வீட்டுக்கு போயிட்டு தேவையானது எடுத்துட்டு வரேன் அத்தை., நீங்க இருங்க டாக்டர் எப்படியும் வீட்டுக்கு போறதுக்கு ஈவ்னிங் ஆகும் சொல்லி இருக்காங்க.., இங்க இப்பதிக்கு நர்ஸ் உங்க கூட இருப்பாங்க ன்னு டாக்டர் சொன்னாங்க… உங்க டிரீட்மென்ட் முடிய எப்படியும் ஒன் ஹவர் ஆகும் ன்னு சொன்னாங்க..,
நான் மெய்ட் நம்பர் இருக்குல்ல., போன் பண்ணி அவங்கள வர சொல்றேன் வந்தாங்கன்னா.., நான் போய் உங்களுக்கு எல்லாம் எடுத்துட்டு வரதுக்குள்ள அவங்க கிளீன் பண்ணி முடிச்சிருவாங்க..,
நானும் வீட்டை பூட்டிட்டு வந்துருவேன்., நீங்க இருந்துக்கோங்க”., என்று சொல்லிவிட்டு காத்திருந்த ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பினாள்., அவள் அறியாமல் மனதில் ஒரு படபடப்பும்., பயமும் வந்து சூழ்ந்து கொண்டது.