அங்கு வைத்து அவளுக்கு அறிவுரை மழை தொடங்கியது., “உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா., இன்னும் சின்னப் புள்ளை மாதிரி நடந்துட்டு இருக்க., கல்யாணம் ஆயிற்று உனக்கு.,  கொஞ்சம் கூட அறிவே இல்லையா..,  மாப்பிள்ளை ட்டையும் விளையாட்டா.,  பாப்பா ன்னு.,  நினைச்சுகிட்டு இருக்கியா நீனு.., எல்லாரும் சின்னப்பிள்ளை சின்னப்பிள்ளை உன்னை  பார்க்க போய்., நீ ரொம்ப தான் பண்ணுற., இப்படி எல்லாம் பேசுனா இருக்கு பாத்துக்கோ உனக்கு..,

உன்னை தவிர அவருக்கு இங்க யாரு நல்ல பழக்கம் சொல்லு.., நீ தானே பார்த்து பார்த்து கவனிக்கணும்.., நீ எப்படி இருந்தா எப்படி” என்று அவர் அறிவுரை மழை அங்கு பொழிந்து கொண்டிருக்க…,

இவ்வளோ மானசீகமாக கன்னத்தில் கை வைத்தபடி.., ‘அய்யோ அம்மா உனக்கு வாயே வலிக்காதா., எப்படி தான் அட்வைஸ் பண்ணனும் னா., பிளா பிளா பிளா பிளா  பேசுறீங்களோ ன்னு தெரியலயே..,  பேசிக்கிட்டே இருக்கீங்களே’..,  என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அதற்குள்  அவருடைய அறிவுரையை மழையும் முடிய.., “இனிமேலாவது ஒழுங்கா பொண்ணா லட்சணமா நடந்துக்கோ.., நாளைக்கு நீ என்ன தப்பு பண்ணினாலும் எல்லாரும் என்னைய தான் குறை சொல்லுவாங்க.,  என்ன லட்சத்தில் பிள்ளைய வளர்த்துருக்கா பாருங்க..,   கெட்ட பேரு வாங்கி கொடுத்து விடாதே”..,  என்று சொல்லவும்.

தலையைத் தலையை ஆட்டியபடி மெதுவாக அறைக்கு வந்தாள்….

அவள் அறிவுரை வாங்கிக்கொண்டு முகம் முழுவதும் கோபத்தோடு அறைக்குள் வரவும்., நந்தன் சத்தமாக சிரிக்க அவனை பார்த்தவளுக்கு அத்தனை கோபம் வந்தது.,

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க., என்ன மாட்டி வைச்சி பலி வாங்குறீங்க இல்லை”., என்று சொல்ல

“நான் எதுக்கு பலி வாங்கப் போறேன்” என்று சொன்னவன்.

அவள் முகம் வாடுவது பொறுக்காமல் அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்து பிடித்துக் கொண்டு “லூசு பூனைக்குட்டி., சும்மா ஜாலிக்கு விளையாடினேன் டா..,  நான் பாத்துக்குறேன் சரியா”.,  என்று சொல்லி அவள் கன்னம் தட்டி அவளை தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டான்.

பின்பு அருகே அமர வைத்துக் கொண்டவன்., “என்ன முகம் இன்னும் நார்மலா ஆகலை” என்றான்.

“அம்மா திட்டினாங்க”என்றாள்.

“நீ தான சொன்னா அம்மா திட்டுவாங்க.,  கொஞ்ச நேரத்துல போய் சாப்பாடு ன்னு.,  கேட்டா தந்திடுவாங்கன்னு சொன்ன”.., என்றான்.

“இல்ல இப்ப தர மாட்டாங்க”., என்றாள் சோகமாக.

“ஏன் தர மாட்டாங்க”.,என்றான்.

“முதல்ல மாப்பிள்ளைய கவனி ன்னு சொல்லுவாங்க”., என்றாள்.,

அவன் சிரித்தபடி “சரி அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்”., என்று சொல்லி அவளை பேச்சிலேயே தன் கைக்குள் கொண்டு வந்திருந்தான்.

அவள் பேச்சு சுவாரஸ்யத்தில் அதை கவனிக்க மறந்து இருந்தாள்..

மாலை நேரம் வீட்டிற்கு வந்த உறவினரோடு அமர்ந்து நந்தன் பேசிக்கொண்டிருக்க.., இவளோ மெதுவாக மொட்டை மாடிக்கு சென்று தரையில் அமர்ந்து காலை நீட்டியபடி சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தவள்..,

சுற்றிப் பார்த்துக் கொண்டே இருந்தாள்., ‘இனி இந்த வீட்டிற்கு எப்போதாவது வரும் விருந்தினர் போல ஆகி விடுவேனோ’ என்ற எண்ணம் மனதிற்குள் தோன்றவும்.,

மனதிற்கு கஷ்டமாக தோன்ற.., அது திருமணமாகி போகும் பெண்களுக்கே உரிய உணர்வு தான் என்பது புரிந்தாலும்..,  அதற்காக இத்தனை சீக்கிரம் பிரிய வேண்டுமா என்றும் தோன்றியது.,

ஆனாலும் எதுவும் யோசிக்க மனம் அற்று.,  அமைதியாக சுவரில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டிருக்கும் போது.,

தன் அருகில் யாரோ அமர்வது போல உணர்ந்தாள்., அவனுடைய பர்பியூம் வாசத்தில் அது அவன் தான் என்பதை உணர்ந்தவள் அசையாமல் இருந்தாள்.

சற்று நேரம் அவளிடம் எந்த அசைவும் இல்லை என்று உணர்ந்தவன் மெதுவாக அவள் தோளில் கையை போட்டு தன்னோடு சேர்த்து கொண்டவன்., “என்னாச்சு நிவி மா” என்று கேட்டு பேசத் தொடங்கினான்..,

அவள் மனதில்  தோன்றியதை மறைக்காமல் அவனிடம் சொல்ல அவனோ அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு “அதெல்லாம் ஒன்னும் இல்லைடா நிவி.., நீ எப்ப சொன்னாலும் நான் உன்னை இங்க கூட்டிட்டு வரேன் சரியா” என்றான்.

அமைதியாக தோள் சாய்ந்தவளை  பார்த்து கொண்டே..,

“அது என்ன எப்ப பாத்தாலும் மொட்டை மாடிக்கு.,  மொட்டைமாடிக்கு
வந்துற.,  கல்யாணத்துக்கு முதல் நாள்  மொட்ட மாடில தான் நிக்கிற.., நம்ம வீட்டிலேயே நம்ம ரூம்ல இருந்து வெளிய போய்  அந்த டெரஸ் ல தான் நிக்குற”..,  என்று கேட்க..,

“இல்ல எனக்கு இந்த காத்து ரொம்ப பிடிக்கும்.., அது தான் அங்க நிக்கிறது”., என்று சொன்னாள்.

“அப்படியா”., என்று கேட்டபடி அவளிடம் பேசி அவள் மனதில் இருக்கும் சிறு சிறு எண்ணங்களையும் மாற்ற தொடங்கியிருந்தான்.,

சிறுபிள்ளையாக சில நேரங்களில் விளையாட்டுகளுடன் அவள் இருப்பதை அவன் உணர்ந்தாலும் மற்ற நேரங்களில் பொறுப்பான ஒரு பெண்ணாக இருப்பதையும் அவன் அறிந்து கொள்ள தொடங்கியிருந்தான்…

திருமணமான முதல் நாள் தொட்டு அவனுடைய பழக்கம் கால்களால் காலை பிடித்துக் கொள்வதும்., அவளை தன்னோடு சேர்த்து அவள் இடுப்பில் கை போட்டபடி அவள் கையை பிடித்துக் கொள்வதும் பழக்கமாக இருந்தது., அதை அப்படியே இத்தனை நாட்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறான்.,

அதுபோல காலை எழும்போது அவன் மேல் தான் அவள் தலை வைத்து கையும் காலையும் போட்டு தூங்கிக் கொண்டிருப்பது.., அவனுக்கு இப்பொழுதெல்லாம் பழகிய ஒன்றாகிவிட்டது.,

இதை என்றாவது அவள் எழும்பும் வரை அப்படியே விட வேண்டும் என்று நினைத்தாலும் முடிவதில்லை.., நிச்சயமாக ஒருநாள் அவள் என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்காகவாது.., இவளை தன் மேல் சாய்ந்த படி படுத்து இருப்பதை காண எழுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்…

அதன்பிறகு நிவேதா விட்டு உறவுகளில் முக்கிய விருந்தை முடித்துக்கொண்டு.,  திருச்சி வர.

அங்கேயும் சில முக்கிய உறவுகளோடு விருந்து முடித்துக்கொண்டு வீட்டில் இருந்தனர்.,

இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்க..,  மறுநாள் அவன் அலுவலகத்திற்கும் அவள் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று முடிவோடு இருக்கும் போது அவள் கல்லூரிக்கு செல்வதைப் பற்றி பேச்சு வந்தது.,

அவளுடைய வண்டியை இங்கே கொண்டு வருவதாக சொல்ல.., நந்தன் மறுத்துவிட்டான்.

“வேண்டாம் எங்க வீட்டுல ஸ்வேதா வண்டி நிக்குது., அதை யூஸ் பண்ணிக்கலாம்.,  வேற வண்டி வேண்டாம்” என்று சொல்லி விட்டான்.

இங்கு வந்தவுடன் எப்பொழுதும் சர்வீஸ் பார்க்கும் இடத்தில் கொடுத்து வண்டியை சர்வீஸ் செய்து வாங்கி வைத்திருந்தான்.

ஆனால் அவளுக்கு இன்னும் பாதை பழக வேண்டும்., பாதை தெரியாது என்ற காரணத்தினால் நன்கு பாதை தெரிந்த பிறகு வண்டியில் அனுப்ப வேண்டும்..,

அதுவரை யாராவது ஒருவர் கொண்டு போய் விட்டு வரலாம் என்று பேசிக்கொண்டிருக்க., நந்தன் அலுவலகத்திற்கு எப்போது ஜீப்பில் செல்வது வழக்கம்.,  காலையில் தான் சென்று விடுவதாக நந்தன் சொல்ல..,

இவளோ வேண்டாம் ஆபீஸ் ஜீப்பில் எல்லாம் நான் வரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்.

அப்போது ஷியாம் “சரி நான் வேணா கொண்டு விட்டு கூட்டிட்டு வரேன்”., என்று சொல்ல.,

“இல்ல ண்ணா., வேண்டாம்., என்னோட காலேஜ் டைம் க்கு நீங்க கிளம்புற மாதிரி ஆகும்.,   ஆபீஸ் பத்து மணிக்கு னா நீங்க ஒன்பது மணிக்கு மேல தான் போவீங்க..,  எனக்காக நீங்க டைம் மாறனும்., அது எல்லாம் செட்டாகாது..,  அதெல்லாம் வேண்டாம்..,

எனக்கு ஒரு நாள் பாதை காமிச்சு கொடுத்தா போயிருவேன்”.,  என்றாள்.

அப்போதுதான்  அவர்கள் வீட்டிற்கு எப்பொழுதும் வரும் ஆட்டோ டிரைவரிடம் சொல்லி ஒரு வாரத்திற்கு கூட்டிக் கொண்டு போய் விட்டு வரட்டும்., அதன் பிறகு வண்டியில் செல்லலாம்.,  அதற்குள் பாதை பழகி விடும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் தேவகி.,

அது மட்டுமல்லாமல் அவள் வண்டியில் செல்ல தொடங்கிய பிறகு ஒரு இரண்டு நாள்  யாராவது உடன் சென்று வருவது என்று பேசிக் கொண்டிருந்தனர்…

நடைமுறை வாழ்க்கையில் தான் இன்னும் என்னென்ன மேடுபள்ளங்கள் இருக்குமென்பது இருவரும் உணர்ந்து கொள்ள வைக்கும்., சந்தர்ப்பம் வருமா ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வார்களா .,

உங்களை தனியாக விட்டாலே போதும் வாழ்க்கை அழகானதாக தான் இருக்கும்”.,        
சார்லி சாப்ளின்.