“நீங்களே கல்யாணம் பண்ணிக்கோங்க”., என்றாள்.

அவரோ மனைவியை பார்க்க., கண்ணைக் காட்டி.,  மகளிடம் எடுத்துச் சொல்லும்படி அவரை கட்டாயப்படுத்தினார்.,  “எடுத்து சொல்லுங்க பிள்ளை புரிஞ்சிப்பா”.,  என்று சொல்லிவிட்டு இரவு உணவுக்கான வேலை பார்க்க உள்ளே சென்றார்.,

பள்ளியில் படிக்கும் தம்பி  சந்தோஷமாக ஓடி வந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்., “எப்ப வந்த அக்கா” என்று சொல்லி கேட்டுக்கொண்டிருந்தான்..

இப்போது தான் பத்தாம் வகுப்பு படிக்கிறான்.,  நிவிக்கும் அவனுக்கும் ஆறு வருடங்கள் வித்தியாசம்.., நிவி அவன் தலையைக் கோதிவிட்டபடி., “எப்படி படிக்கிற.,  டியூசன் போயிட்டு வந்துட்டியா”.,  என்று கேட்டு.., அவன் படிப்பை பற்றி பேசிக்கொண்டு இருந்தாள்.,

தந்தை அமைதியாக தன் பிள்ளைகள் இருவரையும் ரசித்துக் கொண்டிருந்தார்.,

சற்று நேரத்தில்  அவள் கையை பிடித்தவன் “அக்கா மாப்பிள சூப்பரா இருக்காரு அக்கா.., எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”., என்று சந்தோஷமாகச் சொன்னான்.,

“போடா உனக்கு என்ன..,  நீ சொல்லுவ அப்ப நீ வேணா கட்டிக்கோ”., என்று சொன்னாள்.

“போக்கா லூசு மாதிரி பேசாதே”., என்று சொல்லி விட்டு “அம்மா சாப்பிடுவதற்கு என்ன இருக்கு”., என்று கேட்டபடி தாயை தேடி அடுப்படிக்கு போனான்.,

அதற்குள் அவள் தந்தை அமைதியாக இருக்க.., இவளோ “அப்பா ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க நான் வேலைக்கு போகணும் பா”., என்றாள்..,

“எங்க குரூப்ல எனக்குதாம்ப்பா கேம்பஸில் கிடைச்சிருக்கு..,  வேலைக்கு போகணும் ன்னு.,  எனக்கு ஆசையா இருக்கும் ப்பா..,  கொஞ்ச நாள் ப்ரீயா இருக்கணும்.., நான் படிச்சு முடிக்க முன்ன  நீங்க கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சா எப்படி.., கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ் அப்பா”.., என்று தன் தந்தையை ஐஸ் வைக்கும் வழியை யோசித்து வந்தவள்., அதையே இங்கு நடைமுறைப் படுத்த தொடங்கினாள்.

அதற்குள் உணவை தயார் செய்திருந்த அம்மா அனைவரையும் சாப்பிட அழைத்தார்.

சாப்பிடும் போது ஆனால் எதுவும் பேச்சுகள் இருக்கக்கூடாது என்பதற்காக அமைதியாக சாப்பிட.., அப்போதும் அவள் பேச தொடங்கவும் நிவேதாவின் தாய் தான் “சாப்பிட்டதுக்கு அப்புறம் பேசலாம்” என்று சொன்னார்.

சாப்பிட்டு முடிக்கவும் தாயோடு சேர்ந்து அனைத்தையும்  ஒதுக்க உதவி செய்தவள் அனைவரும் ஹாலில் வந்து அமரவும் மீண்டும் பேசத் தொடங்கினாள்.

“அப்பா ப்ளீஸ் நான் எதுக்கு சொல்றேன் புரிஞ்சுக்கோங்க”.., என்றாள்.

“புரியுதுடா தங்கம்.., அதுக்காக அப்படியே இருக்க முடியாது இல்லையா..,  நல்ல இடம் டா..,  நம்மள மாதிரி மிடில் கிளாஸ் ஃபேமிலிக்கு எல்லாம்.,  நல்ல ஒரு கவர்மெண்ட் ஜாப் ல மாப்பிள்ளை வந்தா உடனே சரி என்று தான் சொல்வோம்..,

அதுவும்  மாப்பிள்ளை ஆஃபீஸர் ரேங்க்ல  இருக்காரு..,  பையனும் நல்ல பையனா இருக்கான் பாக்குறதுக்கு”., என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே

“பார்த்த உடனே உங்களுக்கு தெரிஞ்சிருச்சா., பையன் நல்ல பையன்னு” என்றாள். இடையே மறித்து பேசியப்படி.,

நிவேதாவின் அம்மாவோ “நிவி சத்தம் போடாம அப்பா சொல்லுறத கவனி”., என்றார்.,

வாயில் விரலை வைத்தப்படி தலையை மட்டும் ஆட்டியபடி சொல்லச் சொன்னாள்.

அவள் தந்தையோ சிரித்தபடி.,  “குடும்பமும் நல்ல குடும்பம் டா.,  இன்னும் ஆறு மாசம் தானே படிப்பு இருக்கு., காலேஜ்  அங்கிருந்து போய் படி..,  நீ தானே முன்னாடி சொல்லுவ..,  நம்ம ஊர்ல காலேஜ் கிடைச்சிருந்தா நம் வீட்டிலிருந்தே காலேஜ் போய் இருப்பேன்னு.,  சொல்லிட்டே இருப்பேன் இல்ல.., இப்போ உன் வீட்டிலிருந்து ஒரு ஆறு மாசம் போ., உன்னோட ஆசை நிறைவேறுது னு நினைச்சுக்கோ”.., என்று சொன்னார்.

மூஞ்சி சுளித்துக் கொண்டு செல்லம் கொஞ்சிய படி., வாயில் இருந்து விரலை எடுக்காமல் “அப்பா ப்ளீஸ்” என்று மறுபடியும் ப்ளீஸ் போட்டாள்.

“அதெல்லாம் இல்லடா வரட்டும்..,  அவங்க வந்து பார்க்கட்டும்.., நம் பார்த்தவுடனே முடிக்க போறதில்ல..,  எங்களுக்கு புடிச்சிருக்கு.., ஜாதகம் பொருந்தி இருக்கு ன்னு., மாப்பிள வீட்ல நேற்றே  சொல்லிட்டாங்க.., நாம பார்த்து பேசிட்டு அதுக்கப்புறம் தான் முடிவு பண்ண போறோம்.., நீ எதுக்கு இப்பவே தடுக்குற”.., என்று சொன்னார்.,

நகம் கடித்தபடி யோசித்துக் கொண்டிருந்தவள் அமைதியாக திரும்பிப்பார்த்தாள்.,

அப்பா மாப்பிள்ளை பற்றிய தகவலைச் சொல்ல தொடங்கினார்.,

“பேரு ரகுநந்தன் பையன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடிச்சிருக்காரு.,  இப்போ ஆர்டிஓ ஆபீஸ்ல ஆபிஸர்., அவ்ளோ நல்ல பையன், கூட பிறந்தது ஒரே தங்கச்சி தான்., அம்மா அப்பா இருக்காங்க.., அப்பா ரிட்டயர்ட் தாசில்தார்..,

இதைவிட உனக்கு என்ன வேணும்…,  நல்ல குடும்பம் டா..,  உன்னை அவங்க பொண்ணு மாதிரி பார்த்துப்பாங்க”., என்று சொன்னார் நிவேதாவின் தந்தை…

“அப்ப நீங்க பொண்ணு மாதிரி பார்த்துக்க மாட்டீங்க.., அப்படி தானே.,  அதுக்கு தான்  இப்போ என்னைய  உடனே பேக் பண்றதுல  குறியா இருக்கீங்க” என்று படபடவென்று பேசினாள்.

நிவேதாவின் தாய்க்கு சிரிப்பு தான் வந்தது., “ஏண்டி நீ எங்க பொண்ணு டி.,  உன்ன பொண்ணு மாதிரி பாக்காம எப்படி பார்ப்போம்”.., என்றார்.

“நீங்களே  பெத்த பொண்ணு ன்னு.,  கூட பார்க்காமல் இத்தனை வேலை வாங்குறீங்க..,  இன்னொரு வீட்டுக்கு மருமகளாக போனா.,  வேலை ஏவிட்டே இருப்பாங்க மா.,  நீ என்னைய ஒரு வீட்டுக்கு மருமகளா அனுப்பல.., இன்னொரு வீட்டுக்கு சர்வண்ட் ஆ அனுப்ப ட்ரை பண்ணுறீங்க”.,  என்று தாயிடம் வாதாட தொடங்கினாள்…

“நீ தான் எல்லா வேலையும் செய்வ இல்லடா..,  அப்புறம் என்னமா”.., என்று கேட்டார்.

“அந்த வேலை செஞ்சு காமிச்சது தான் நான் பண்ணின  தப்பு..,  அதனால தான் இப்ப என்னைய  பேக் பண்ண அவசரப் படுறீங்க..,  இதே இது ஒரு வேலை செய்யத் தெரியாமல் இருந்திருந்தால்.., என்னைய கல்யாணம் பண்ணி கொடுக்க யோசிச்சு இருப்பீங்க இல்ல.., இந்த வேலை செய்யத் தெரியாத பிள்ளையை எப்படி கல்யாணம் பண்ணி கொடுக்குறது ன்னு., யோசிப்பீங்க இல்ல.., இப்ப எதையும் யோசிக்கலை”..,  என்று மறுபடியும் படபடவென்று பேசினாள்.

இப்போது அம்மாவும் அப்பாவும் சிரித்த முகமாக ‘இன்னும் சிறு பிள்ளையாகவே இருக்கிறாளே’ என்ற எண்ணத்தோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.,

“இங்க பாரு., உனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லங்கிற காரணத்தை தவிர.,  என்கிட்ட வேற ஏதாவது  ஒரு ரீசன் சொல்லு..,  உனக்கு வேற யாரையும் பிடிச்சிருக்கா சொல்லு ., அப்பா பேசுறேன்” என்றார்.

“ச்சீ., அப்படி எல்லாம் ஒன்னும் இல்லப்பா.,  நான் நீங்க பார்க்கிற மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்.., ஆனா எனக்கு இப்ப வேண்டாம்பா.., இன்னுமொரு டூ இயர்ஸ் போட்டும் பா., பிளீஸ்”.,  என்று மறுபடியும் ப்ளீஸ் போடத் தொடங்கினாள்.

“நீ எத்தனை ப்ளீஸ் போட்டாலும் ஒன்னும் நடக்காது..,   இந்தா  இருக்கு மாப்பிள்ளை போட்டோ..,  இந்த இருக்கு மாப்பிள்ளை பத்தின டீடெயில்ஸ்.., நீயே பார்த்துக்கோ”.,  என்று போட்டோவையும் சுய விவரம் அடங்கிய பேப்பரையும் அவள் முன் டீப்பாயில் வைத்தார்.,

முறைத்து பார்த்தவள் “பார்க்கணும்னு ரொம்ப தான் பண்றீங்க” என கூறியவள்.,  “வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன்..,  நீங்க என்னைய  இன்னொரு வீட்டுக்கு சர்வண்ட் ஆ அனுப்புறதிலேயே குறியா இருக்கீங்களே”.., என்று சத்தம் போட்டாள்.

“போடி வீட்டுல உள்ளங்களுக்கு சமைச்சுக் கொடுத்தா சர்வண் டா.., அப்ப நான் உனக்கும்.,   உங்க அப்பாக்கும்.,  உன் தம்பிக்கும்.,  நான் என்ன சர்வன்ட் ஆ., டி” என்று அம்மா கேட்டார்.

“நீ அம்மா.,  இந்த வீட்டு  ஆள்.., நீ தான் இந்த வீட்டினுடைய பிரைம் மினிஸ்டர்.., சீப் மினிஸ்டர்..,  எல்லாமே நீ தாம்மா அப்ப நீ செய்யலாமே”.,  என்று தாயிடம் ஐஸ் வைக்க தொடங்கினாள்.

“இங்க பாருடி ஓவரா பேசாத., இதே தான் நீயும் உன் வீட்டுக்கு போனா., நீ தான் எல்லாம்.., என்றார்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல..,  நான் எல்லாம் போக மாட்டேன்”., என்று பிடிவாதம் பிடிக்க தொடங்கினாள்.

நிவேதாவின் அப்பா தான் “சரி இப்ப என்ன பண்ணனும் அதை சொல்லு”., என்றார்.

“எனக்கு வேண்டாம் ப்பா.,  கல்யாணம் வேண்டாம் ப்பா., நீங்கள் வர வேண்டாம் ன்னு.,  சொல்லிடுங்க”.,  என்று சொன்னாள்.

“இல்ல டா.,  அவங்க பொண்ணு பார்க்க வர்றது  வர தான் போறாங்க..,  வேற வழி இல்ல., நாங்க சரி னு சொன்னோம்., அவங்க வர தான் செய்வாங்க.., நாங்க என்ன செய்யணும் ன்னு நீ  சொல்லு”., என்றார்.

“வந்தாங்கன்னா.., மாப்பிள பிடிக்கல னு சொல்லிடுங்க” என்று தலையை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருக்கவும்….

“இந்த மாப்பிள்ளை பிடிக்கலைன்னா.,  வேற மாப்பிள்ளை பார்ப்போமா”., என்று அப்பா கேட்டார்.

“நான் கல்யாணமே புடிக்கலை ன்னு., சொல்லுறேன்.,  நீங்க என்ன பா”., என்றவள் மீண்டும் “அப்பா ஒரு ஐடியா நீங்க மாப்பிள்ளை வீட்டுல எனக்கு சமைக்க தெரியாது.,  ஒருவேலையும் செய்யத் தெரியாது அப்படின்னு சொல்லிருங்க.,  நல்ல சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கு வா ன்னு சொல்லணும் சரியா”., என்று சொன்னாள்.

அவரோ இந்த பிள்ளை என்னவெல்லாம் யோசிச்சிட்டு வந்திருக்கு இருக்கட்டும்  நாம பேசுவோம் என்று மனதிற்குள் நினைத்து கொண்டார்.

ஆனால் தாயோ “சரிம்மா நான் சொல்லிடுறேன்., என் பொண்ணுக்கு சமைக்கவே தெரியாது ன்னு., சரியா” என்றவர்.,  “ஒரு வேலையும் செய்ய தெரியாதுன்னு சொல்லிருவேன் சரியா..,  ஆனா நீ ஒரு வேலையை செய்யத் தெரியாது னு சொன்னா நான் தான் வாஷிங் மெஷின் முதற்கொண்டு  வாங்கி கொடுக்கணும்.., மத்த எல்லாத்தையும் நான் தான் பார்க்கணும் அதையும் பார்த்துக்கோ”., என்றார்.