பரீட்சை தொடங்கிய பிறகு எப்போதும் படிப்பு என்று இருப்பவள் சரியாக சாப்பிடுவதும் இல்லை தூங்குவதும் இல்லை என்ற நிலைக்கு வந்து இருந்தாள்.,

அவள் அவ்வளவு தீவிரமாக படிப்பதை பார்த்தவர்களுக்கு தான்.., இவ்வளவு படிப்பாளா என்ற எண்ணம் தோன்றியது.

ஏனெனில் அதுவரை விளையாட்டுத் தனமாக இருப்பாள்., பரீட்சை நேரத்தில் லேசாக படிப்பதைப் பார்த்து இருக்கின்றனர்.,

ஆனால் இது கடைசி வருடம் கடைசி தேர்வு என்பதால்., அதற்கு நன்றாகவே கடின முயற்சி செய்து படித்துக் கொண்டிருந்தாள்..,

இரவு வெகு நேரம் படிப்பவள் பின்பு காலை சற்று தாமதமாக எழுந்தாலும்., தேவகி அனைத்தையும் பார்த்துக் கொள்வார்.,

சில நாட்களில் அதிக பசி இருக்கிறது என்றாள்., சில நாட்களில் பசியே இல்லை என்றாள்., அது முழிப்பதும்., தூங்குவதும் நேரம் மாறி மாறி இருப்பதால்., அவளுக்கு  சரிவர ஒத்துக்கொள்ளவில்லை., அதனால் அப்படி இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டாள்..,

இன்னும் இரண்டு பரீட்சை  மட்டுமே இருக்கிறது என்ற நிலையில்., அன்று தேவகி தான் கீழே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது நிவேதாவிடம்.,

“நிவி நான் உங்க அம்மாக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்.,  பரீட்சை முடிந்து ஒரு வாரம் நீ உங்க அம்மா வீட்ல போய் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வா சரியா.,  இங்க இருந்தா நீ ஒழுங்கா தூங்க மாட்ட.,  பகல் ல என் கூட சேர்ந்து டிவி பார்ப்ப.,  இல்ல ன்னா உங்க மாமா கூட உட்கார்ந்து சீட்டு விளையாடுவ., அல்லது ஸ்வேதா வந்தனா உன் கூட வந்து பேசிட்டே இருப்பா.., நீ ரெஸ்ட் எடுக்கவே மாட்ட.,

படிக்கணும் எக்ஸாம் ன்னு சொல்லிட்டு கொஞ்சம் மெலிந்த மாதிரி ஆயிட்ட.., அதனால நல்லா தூங்கி எந்திரிடா..,  அதுக்கப்புறம் தான் இங்க வரணும்”., என்றார்.

“அத்தை நீங்களே என்ன விரட்டுறீங்க”., என்று அவரிடம் சொல்லி விளையாடிக் கொண்டிருந்தாள்.,

ஆனால் அவளுக்குமே தம்பிக்கு பரீட்சை முடிந்து ஏற்கனவே வீட்டில் இருப்பதால் சென்று வந்தால் நன்றாகத் தான் இருக்கும் என்று தோன்றியது.,

ஆனால் அவள் தேவகியிடம் “அத்தை நான் எப்படி போறது”., என்று கேட்க.,

“உங்க அம்மாட்ட சொன்னேன்., உங்க அப்பா வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு மா., அல்லது நான் வந்து விட்டுட்டு வாறேன்”.,  என்று சொல்லவும்.,

நந்தனை பார்த்தாள்., அவனோ இவளிடம் சிரித்து கொண்டே “அம்மா இதெல்லாம் அநியாயம் பாத்துக்கோங்க.,  இப்படி  எல்லாம் பண்ண கூடாது.., எக்ஸாம் முடிஞ்சா அவங்க அம்மா வீட்டுக்கு ரெஸ்ட் எடுக்க அனுப்புறீங்க., எங்களுக்கு எக்ஸாம் முடிஞ்ச அப்ப எல்லாம்.. அது தானே படிப்பு முடிஞ்சதே.. வேலை செய்து பழகு ன்னு சொன்னீங்க”.., என்றான்.

“பேசாமல் இருடா., புள்ள ரெஸ்ட் எடுத்துட்டு வரட்டும்”., என்று பேசி கொண்டிருந்தாலும்.,

சிரித்தபடி அவளிடம் “நான் சும்மாதான் சொன்னேன்., நீ போய் ரெஸ்ட் எடுத்துட்டு வா”., என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

அதற்கேற்றார்போல் கடைசி தேர்வு முடிந்து மதியம் வீட்டிற்கு வரவும்.,  நிவேதாவின் தந்தை அழைத்துச் செல்ல வந்திருந்தார்…

திண்டுக்கல்லில் நிவேதா அவள் அம்மா வீட்டிற்கு வந்த பிறகு ஏதோ மிகவும் மகிழ்ச்சியான ஒரு உணர்வு வந்திருந்தது.,

அவளறியாமல் எப்போதும் பரீட்சை முடிந்தவுடன் வீட்டிற்கு வரும் போது இருக்கும் அதே சந்தோஷ மனநிலை அவளிடம் இருப்பது போலவே உணர்ந்தாள்.,

சிரித்துக்கொண்டே இது மட்டும் தேவகிக்கும்., நந்தனுக்கும்  தெரிந்தால் இருவரும் சேர்ந்து மொத்தி விடுவார்கள் என்று அவளுக்கு தெரியும்.,

அப்போது ஹாஸ்டலில் இருக்குறதா நினைச்சுட்டு இருந்தியா என்று சொல்லி ஒரு செல்ல சண்டையே வரும் என்பதும் அவளுக்குத் தெரியும்..,

அன்று தம்பியோடு அரட்டை அடித்து அவளுக்கு பிடித்த உணவை உண்டு.,  படுக்கச் செல்லும் போது நேரம் ஆகிவிட்டது.,  அதன்பிறகு நந்தனிடம் பேசினாள்.

தேவகியிடம் ஏற்கனவே பேசியிருந்ததால் தூங்க செல்லும் முன்பு நந்தனை போனில் அழைத்து சற்று நேரம் பேசியவள் அதன்பிறகே தூங்கினாள்..,

காலையில் சற்று சீக்கிரமாகவே முழிப்பு வந்தது போல எழுந்துகொண்டாள்.,

எப்பொழுதும் அங்கு வீட்டில் எழும் நேரம் என்பதால் அதே நேரத்திற்கு இங்கும் விழிப்பு வந்தது.,

ஆனால் எழுந்தவுடன் பசிப்பது போன்ற ஒரு உணர்வு இருந்தது., ஏற்கனவே இரவு நேரம் சென்று தூங்க வந்ததால்  காலையில் சீக்கிரமாக பசிக்கிறது போல என்று நினைத்துக் கொண்டாள்.

“அம்மா பசிக்குமா ஏதாவது சாப்பிட தாங்க” என்று எழுந்தவுடன் கேட்கவும்.

“என்னடி இது காலங்காத்தால பசிக்குதா”.,  என்று கேட்டார்.

“தெரியல பசிக்கு  தாங்க” என்று சொல்லவும்.

பெரிய டம்ளரில் சத்துமாவை பாலில் கலந்து ஆத்தி கொடுத்தவர்., கூடவே ஒரு தோசையும் விட்டுக் கொடுத்து “பொடிவைத்து சாப்பிடு”., என்று செய்து கொடுத்தார்.,

அவசரமாக பல் தேய்த்து விட்டு வந்து சாப்பிட்டவள்.,  மறுபடியும் “அம்மா தூங்க போறேன்”.,  என்று சொல்லி விட்டு போக..,

“அது தான்  எந்திரிச்சிட்ட இல்ல., மறுபடியும் உடனே தூங்கப்போனா எப்படி”., என்றார்.

“ப்ளீஸ் அம்மா.., சாப்பிட்ட உடனே அப்படியே தூக்கமா வருது”.,   என்று சொல்லி போய் மறுபடியும் படுத்துக் கொண்டாள்.,

இத்தனை நாள் படிப்பு படிப்பு என்று இருந்ததால் தூக்கம் தொலைத்து  இப்பொழுது தூங்குகிறாள் என்று நிவேதாவின் அம்மாவும் சரி போய் தூங்கு என்று அனுப்பிவிட்டார்.,

மீண்டும் எட்டரைக்கு மேல் தேவகி அலைபேசியில் அழைக்கவே எழுந்து கொண்டவள்., “அய்யோ அத்தை சாரி இவ்வளவு நேரம் தூங்கிட்டேன்” என்று தூக்க கலக்கத்தோடு பேசிக் கொண்டிருந்தாள்.,

அவரோ “இதுக்கு தான் உன்னைய அனுப்புனது., அங்கனா நீ பேசாம தூங்குற பாத்தீயா., இங்க ன்னா எப்பவும் எந்திரிக்கிற நேரத்துக்கு எந்திரிச்சு வந்து.,  வேலை செய்ய வேண்டாம்னு சொன்னாலும் என் கூட சேர்ந்து செஞ்சிட்டு., சரியா தூங்காம இருப்ப., அதுக்கு தான் அனுப்பி வைத்தேன்.., நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு வா.,  என்னடா”., என்றார்.

“சரி” என்று சொன்னபடி அதன் பிறகு நந்தனுக்கு அழைத்து பேசியவள்.,  “என்ன செய்றீங்க.,  நான் இல்லாம ஜாலியா இருக்கீங்களா”.,  என்றாள்.,

அவனோ “நீ இல்லாமல் ஜாலியா எப்படி இருக்க முடியும்”., என்றான்.,

“பின்ன உங்களை மிதிக்க ஆள் இல்ல..,  உங்கள அடிக்க ஆளில்லை”.,  என்று சொல்லவும்.,

“ஆமா பூனைக்குட்டி எனக்கு ஹக் பண்ணவும் ஆள் இல்லை” என்று சொன்னான்.,

இவளோ மௌனமாக சிரித்தபடி “ஒரு வாரம் நல்ல தூங்கி எந்திரிங்க.,  நான் வந்து மிதிக்க வாறேன்” என்றாள்.,

சிரித்துக் கொண்டே “சரி நான் ஆபீஸ் கிளம்புறேன்”.,  என்று சொல்லி விட்டு போனை வைத்தான்.,

இவளும் எழுந்து வெளியே வந்தவள் மறுபடியும் பல் தேய்த்து விட்டு வந்து “அம்மா காலை சாப்பாடு என்ன”., என்றாள்.

“இது என்னடி., இப்பதான் சாப்பிட்டு தூங்கின” என்று சொல்லவும்.,

“அம்மா சாப்பாடு கொடுக்குறத கணக்கு பார்க்காதீங்க.,  தூங்கி எழுந்தா மறுபடி பசிக்குது இல்ல..,  பசிக்காதா… பசிக்கும் தானே”., என்று கேட்டாள்.

அவரும் சிரித்துக் கொண்டு “சரியான வாயாடியா மாறிட்டே போற., உனக்கு அங்கே கண்டிப்பும் இல்லை”., என்றார்.

“இங்கே இருக்கும் போது நான் கம்மியாவா பேசினேன்.., அங்க போய் தான் இப்ப நிறைய பேசுறேனோ”.,  என்றாள்.

மீண்டும் அம்மா உணவு எடுத்து வைத்துக் கொண்டிருக்க., அவரை பின்புறமாக சென்று கட்டிக் கொண்டவள்.,

“ரொம்ப மிஸ் பண்ணினேன் தெரியுமா ம்மா.., அத்தை நல்ல பார்த்துக்கிட்டாங்க., அதுனால எனக்கு ஒன்னும் தோணலை..,  ஆனா நம்ம வீட்ட  ரொம்ப மிஸ் பண்ணினேன் ம்மா”.,  என்று சொன்னவள்.,  “அம்மா நீ என்னை மிஸ் பண்ணினேயா”.,  என்று கேட்டாள்.

“ஆறு மாசம் சத்தமே காட்டாமல் மாமியார் வீட்ல உட்கார்ந்துட்டு., இங்கே வந்து நான் மிஸ் பண்ணினேன்., நீ மிஸ் பண்ணுனேயா ன்னு.,  கேட்கிற”.,  என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டு இருந்தார்.,

அவள் தம்பி வந்து “அக்கா இதெல்லாம் அநியாயம் வா..,  நம்ம ரெண்டு பேரும் ஹால்ல உட்கார்ந்து பேசலாம்.,  நிறைய பேசணும்., அடுத்து என்ன குரூப் எடுக்கலாம்.., அதை பத்தி தான் சொல்லு வா”., என்றான்.

“இருடா சாப்பிட்டு வாறேன்”., என்று சொல்லி சாப்பிட தொடங்கினாள்.

சாப்பிட்டு முடிக்கவும் மறுபடியும் கொட்டாவி விட..,

நிவேதா அம்மா “ஏண்டி மறுபடியுமா தூக்கம் வருது”., என்று கேட்டார்.

“அது என்னவோ தெரியலை., என்ன மாயமோ தெரியலை., எக்ஸாம் டைம்ல கொஞ்சமும் தூங்காமல் படிக்குற எனக்கு., இந்த தடவை  தூக்கம் வர தான் செஞ்சது., நான் தான் கண்ட்ரோல் பண்ணிட்டு கஷ்டப்பட்டு படித்தேன்..,

எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சு இருக்கேன் தெரியுமா.., அதெல்லாம் ரொம்ப கண்ட்ரோல் பண்ணி இருக்கேன் போல..,  அதுதான் இப்போ ஒரே தூக்கம் தூக்கமா வருது”., என்றாள்.

“ஓ அப்ப தூங்கு போ” என்றவர்., பேசிக் கொண்டிருக்கும் அதே நேரம் நிவேதாவின் தம்பி அவன் தோழர்களோடு விளையாட கிளம்பினான்.,

” அக்கா நான் வந்த அப்புறம் பேசுவோம்.,  உனக்கு எதும் வேணுமா”., என்று கேட்டான்.,

“டேய்”.,  என்று சொல்லி அவன் விளையாட செல்லும் கிரவுண்டுக்கு அருகில் இருக்கும் கடையில் இருக்கும் மிட்டாயை சொல்லி “அதை வாங்கிவிட்டு வா” என்று சொன்னாள்.,

அவனும் “சரி வாங்கிக்கொண்டு வருகிறேன்”.,  என்று சொல்லிவிட்டு சென்றான்.

இயந்திரதனத்தை விட 
மனித தன்மையே வேண்டும்., 
அறிவாளி தனத்தை விட 
அன்பே வெல்லும் 
இவை இல்லாத வாழ்க்கை வீணே 
   
                                  –சார்லி சாப்ளின்