“பானு நான் ஒன்னு சொல்லட்டுமா”.,  என்றாள். “அண்டர்ஸ்டாண்டிங் எப்ப வரும் தெரியுமா.., ஒருத்தர் மேல ஒருத்தருக்கு புரிதல் எப்ப வரும் தெரியுமா..,

எனக்கு அவங்க முக்கியம்.., என் லைஃப்ல அவங்க ரொம்ப ரொம்ப முக்கியம் அப்படின்னு நினைக்கும் போது அவர்களுக்காக சில விஷயங்களை விட்டுக் கொடுக்க ஆரம்பிக்க தொடங்குவோம்.,

அந்த விட்டுக் கொடுக்கிற விஷயம் ஆரம்பிக்கும் போதே கண்டிப்பா அவங்களுக்காக அப்படிங்கிற அந்த  பாசத்துக்காக அப்படின்னு நினைச்சு., செய்ய ஆரம்பிக்கும் போது தன்னால அந்த அன்டர்ஸ்டன்டிங் வந்துரும்..,

பல வருஷம் ஒன்னா  இருக்காங்க., ஆனால் வரலை  அப்படின்னு சிலர் சொல்லலாம்.., அது அவ்வளவு ஈசியா எல்லாருக்கும் வந்துருமா அப்படின்னு கேட்டா தெரியல..,

ஆனா கண்டிப்பா அவங்க வாழ்க்கையில அவங்களோட நடவடிக்கையில் புரிஞ்சுக்க முடியும் அப்படி தான்  நினைக்கிறேன்.

வாழ்க்கைல நமக்கு யார் முக்கியம் நினைக்கிறோமோ.., அவங்களுக்காக சில விஷயங்களை விட்டுக் கொடுத்து..,  அவங்களுக்காக செய்ய ஆரம்பிக்கும் போது நம்மை அறியாமல் ஒரு புரிதல் வரும்.,  அவங்களைப் பத்தின அந்த புரிதல்.,  அதுதான் அண்டர்ஸ்டாண்டிங் ன்னு.,  நினைக்கிறேன்.,

அது இத்தனை மாசத்துல தான் வரணும்., இத்தனை வருஷத்துல தான் வரணும் இல்ல.., சிலருக்கு பிடிச்சிருச்சு அப்படின்னா எந்த அளவுக்கு வேண்டுமினாலும் அவங்களுக்காக விட்டுக் கொடுத்து., அவங்கள புரிஞ்சி நடந்துக்க முயற்சி பண்ணுவாங்க.,

சிலர் பிடித்திருந்தாலும் எதைப்பற்றியும் யோசிக்காமல் சண்டை போட்டுக்கிட்டு இருப்பாங்க.,  இருக்காங்க.., சோ நான் இப்படி தான் நினைக்கிறேன்”.., என்றாள்.,

அவளும் சிரித்தபடி “ரொம்ப தத்துவம் பேசாதே., போய் நம்ம பேசினத கரெக்டா பேசு”., என்றாள்.

இவளும் “முடிஞ்சா காலேஜ் வந்திருவேன்.., சப்போஸ் லேட்டாயிடுச்சு னா லீவ் சொல்லிடு.., அல்லது நீயே லீவ் லெட்டர் எழுதி என் கையெழுத்தைப் போட்டு கொடுத்துரு”.., என்று சொன்னாள்.,

“இதே வேலையா பாரு”., என்று சொல்லி பேசியபடி வைத்தாள் பானு…

அவளிடம் பேசிவிட்டு கீழே வந்தவள் மீண்டும் சில உதவிகளை செய்து விட்டு மாடிக்கு உடைமாற்ற சென்றாள்.,

அவள் நந்தனிடம் முகம் கொடுத்து பேசாததை வைத்து நந்தன் ‘அய்யோ ஏதும் கோவத்துல இருக்காளோ’  என்று யோசித்தபடி மாடிக்கு வந்தான்.,

அவன் வருவதற்குள் உடை மாற்றி முடித்திருக்க தலையை விரித்து காயவிட்டு இருந்தவள் அதை பின்னலாக மாற்றிக் கொண்டிருந்தாள்.,

அவன் வரவும் கண்ணாடி வழியே அவளை பார்க்க.., அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..,

அருகில் வந்தபடி பின்னிருந்து சிரிக்க..,  அவனை பார்த்துக் கொண்டிருந்தவள் பாதி பின்னலில் விட்டு விட்டு திரும்பி.,  அவன் தோல் சாய்ந்து அவனை அணைத்தபடி நின்று கொண்டு கண்ணை மூடிக் கொண்டாள்.,

“நிவி ஏன் ஒரு மாதிரி இருக்க” என்று கேட்டான்.,

அவனை நிமிர்ந்து பார்த்தவள் “தூக்கம் வருது., காலேஜுக்கு லீவ் போடவா ன்னு யோசிக்கிறேன்”.,  என்று சொல்ல..,

“நீ  ரொம்ப லீவு போடுற தெரியுமா”., என்று சொல்ல..,

“ஐயோடா அன்னைக்கு அத்தைக்கு உடம்பு சரியில்லை ன்னு போட்டேன்”.,   என்றாள்.

“தூங்கு உன் இஷ்டம் தான்., நான் காலேஜ் போ ன்னு கட்டாயப்படுத்த மாட்டேன்.., ஆனால் சிலபஸ் போயிறாம பார்த்துக்கோ”..,  என்று சொன்னான்.

“பார்க்கிறேன்.., முடிஞ்சா கண்டிப்பா காலேஜ் போறேன்”.,  என்று சொல்லிவிட்டு கிளம்பி கீழே செல்ல

“இரு நானும் வர்றேன்”., என்று சொன்னான்.

“நீங்க கரெக்டா தானே கிளம்புவீங்க”.,   என்று சொல்ல.,

“சும்மா தான் உன்கூட கீழே வர்றேன்.,   சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவோம்” என்று சொல்லிவிட்டு கீழே அவளோடு  இறங்கி வந்தான்..

இருவரும் உணவு எடுத்து முடிக்கவும் தேவகி அவளுக்கு பூ கொடுத்து வைத்துக்கொள் என்று சொல்லும் போதே வைத்து கொண்டு., எப்போதும் போல கிளம்பி கொண்டிருக்க வாசலில் தெருவிலுள்ள தெரிந்தவர்கள்..,

அதாவது நந்தன் வீட்டிற்கு வேண்டியவர்கள்  சில பெண்களும்.,  எதிர்வீட்டு மஞ்சரியின் வீட்டுக்கு தெரிந்தவர்கள்.., அதாவது பழகியவர்கள் என்று சிலரும் வந்திருக்க..,

நந்தனின்  அம்மா “என்ன ஆச்சு காலையிலேயே எல்லாரும் வந்து இருக்கீங்க” என்று கேட்டார்.

பார்த்தால் பின்புறமாக மஞ்சரி வந்து நிற்பது தெரிந்தது..,  ஆனால் யாரும் நந்தன் வீட்டிற்கு பகை கிடையாது..,

மஞ்சரியின் அண்ணனால் பிரச்சினை ஏற்படும்போது தலையிட்டு பேசியவர்கள் தான் இவர்கள்..,

யாரிடமும் எந்த பதிலும் சொல்லாமல் நந்தனின் அம்மா “உள்ள வாங்க” என்று அழைத்தாள்.,

அவள் ஏதோ பிரச்சினை செய்ய வந்திருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவர் நந்தனையும் நிவேதாவையும் பார்க்க..,

நந்தனுக்கு சற்று பதட்டமாகவே இருந்தது.., நிவேதா எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று..,

நிவேதாவும் அவர்களை லேசாக கண் கொண்டு பார்த்தவள்.., பின்பு கவனிக்காதது போல இருந்து கொண்டு கல்லூரிக்கு தேவையானவற்றை எடுத்து பையில் வைப்பது என்று.., வேலையாக இருப்பது போல இருந்து கொண்டாள்.

தேவகி அழைத்து சொல்ல..,  முன் அறைக்கு வந்தவள்..,  “ஹாய் ஆண்ட்டிஸ் வாங்க..,  என்ன எல்லாரும் காலையிலேயே எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க”..,  என்று கேட்டாள்.

“அது ஒன்னும் இல்லம்மா.., இந்த பொண்ணு ஏதோ பேசணும்னு சொன்னா அதுதான்”.., என்று சொல்ல..,

அவர்களுக்கு பின்புறமாக நின்ற மஞ்சரியை அப்போது தான் பார்ப்பது போல பார்த்தவள்., “ஹேய் சூசைட் கேஸ்  நீ இன்னும் சாகலையா”..,  என்றாள்.

அவளோடு வந்தவர்களுக்கு தூக்கிவாரிப்போட்டது.,  “என்னமா சொல்ற”.,  என்று கேட்க.,

“அய்யோ ஆன்ட்டி உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா.., இந்த பொண்ணு சூசைட் பண்ணிக்குவேன் சொல்லிச்சு”..,  என்று சொல்ல.,

“எப்ப சொன்னா”.,  என்று கேட்டார்கள்.

“அது எங்க கல்யாணத்துக்கு முதல் நாள்.,  மண்டபத்தில் வந்து மொட்டை மாடியில் வைத்து என் கையில ஒரு லெட்டர் கொடுத்துட்டு..,  நான் எழுதி வச்சுட்டு சாகப் போறேன்., அப்படின்னு சொன்னாங்க..,

கல்யாணத்தை நிறுத்தலை னா., சூசைட் பண்ணி செத்து போயிருவேன் அப்படின்னு சொன்னாங்க.., நானுமே சொன்னதை செஞ்சிருப்பாங்க ன்னு நினைச்சேன்”., என்று அசால்டாக சொல்லிவிட்டு மீண்டும் வெளியே இருந்த கல்லூரி நோட்டை எல்லாம் எடுத்து பேக்கில் வைக்கத் தொடங்கினாள்…

அப்போது அங்கிருந்த ஒரு பெண்மணி தான்.,  “ஏமா மஞ்சரி என்ன பண்ணி வச்சிருக்க.,  கல்யாணத்துக்கு முன்னாடி போயி லெட்டர் கொடுத்து இருக்க..,  சூசைட் பண்ணிக்குவேன் சொல்லி இருக்க., இப்ப வேற ஏதோ பஞ்சாயத்த  கூட்டி இருக்க.., நீ  என்ன நினைச்சுகிட்டு இருக்க”.., என்று சற்றே அதட்டிக் கேட்கவும்.

நிமிர்ந்து அவர்களை பார்த்தவள் “என்ன  ஆன்ட்டி பிரச்சனை”., என்றாள்.

“இல்லம்மா இந்த பொண்ணு ஏதோ பிரச்சினை ன்னு.,  சொல்லி கூப்பிட்டா.,  அதனால தான் நாங்க வந்தோம்.., இங்கே வந்து பாத்தா நீ வேற மாதிரி சொல்ற”..,  என்று சொல்லவும்..,

“ஐயோ எனக்கு வேற எந்த பிரச்சினையும் தெரியாது ஆன்ட்டி..,  இவர்களைப் பார்த்தவுடன் சூசைட் கேஸ் ன்னு தோணுச்சு.., எப்ப பாத்தாலும் சூசைட் பண்ணிக்க போறேன் சொல்லிட்டு  இருந்தாங்க.,

என்கிட்ட மட்டும் இல்ல., அதே   மாதிரி இவங்க ட்ட கூட மிரட்டி இருக்காங்க..,  சூசைட் பண்ணிட்டு உன் பேரை எழுதி வச்சிட்டு செத்து போயிடுவேன்னு.,  எல்லாம் சொல்லி இருக்காங்க.., உண்டா இல்லையா என்று கேளுங்கள்”..,  என்று அவரிடமே சொன்னாள்.,

அவர் திரும்பிப் பார்த்து அவளை முறைத்தபடி “என்ன பொண்ணு நீ., இப்படி எல்லாம் பேசிட்டு எங்கிட்ட வந்து நல்ல பிள்ளை மாதிரி வந்து பேசவாங்க ன்னு கூப்பிடுற”., என்று சொன்னார் அப்பெண்மணி..

நிவேதாவோ மறுபடியும் சும்மா இருக்காமல் “ஆன்ட்டி நீங்க எல்லாம் பேச வந்து இருக்கீங்க.,  இவங்க அம்மா வரலையா”., என்று கேட்டாள்.

மஞ்சரி திருதிருவென திருட்டு முழி முழிக்க தொடங்கினாள்.,

“இத்தனை பேர் வந்து இருக்கீங்களே., அவங்க அம்மாவையும் கூட்டிட்டு வாங்க., அப்ப தானே நல்லா இருக்கும்.

ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு, சொல்லிட்டு அவங்க அம்மாக்கு தெரியாமல் பேசக்கூடாது இல்ல..,  அது தப்பு தானே”., என்று இவள் சொன்னாள்.

அங்கு இருந்த பெண்மணியோ.,  “இல்லம்மா., ஏதோ முக்கியமான விஷயம்  அவங்க அம்மாக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னா”.., என்றார்.

“முதல்ல அவங்க அம்மா எப்படி இருக்காங்க., பாருங்க உடம்பு சரி இல்லாம இருந்தாங்க னா.,  ஒன்னும் சொல்ல வேண்டாம் வந்துருங்க.., அவங்க அம்மா ஹெல்தியா இருந்தா.., அவங்க அம்மாவ கூட்டிட்டு வாங்க ஆன்ட்டி.., உங்கள எல்லாம் கூட்டிட்டு வந்து பேசுறாங்க.., ஏன் அவங்க அம்மாவ  கூட்டிட்டு வந்து பேசக்கூடாது”..,  என்று கேட்டாள்.,

“நீ என்னம்மா., அவ பிரச்சனை ன்னு சொல்லிட்டு இருக்கா ன்னு., நாங்க சொல்றோம், என்ன பிரச்சினை கேட்காம அவங்க அம்மா கூட்டிட்டு வர சொல்லுற”.,  என்றார்., மற்றொரு பெண்மணி.

“ஹலோ ஆன்ட்டி., இவங்க வந்தாளே.,  பிரச்சனை தான் ன்னு., எனக்கு தெரியுது.,  ஏன்னா நான் அவங்ககிட்ட பழகுனது இல்ல.,  அவங்கள பார்த்தது இல்ல.,   இவங்ககிட்ட பேசினது இல்ல..,  கல்யாணத்துக்கு முதல் நாள் வந்து..,  யாருனே தெரியாத என்கிட்ட வந்து அவ்வளவு பேச்சு பேசிட்டு போனாங்க..,

என்னைய  இவங்களுக்கு யார் என்று கூட தெரியாது.., அப்ப நான் தான் நந்தன கல்யாணம் பண்ணிக்க போறேன் கூட இவங்களுக்கு தெரியாது.., அப்பவே அவ்வளவு பேச்சு பேசினாங்க..,

அப்பவே தெரிஞ்சு போச்சு.,  பிரச்சனை பிடிச்சது ன்னு..,  சூசைட் பண்ணிக்குவேன்னு வந்து சொன்னாங்க..,
அப்படி இருக்கும் போது., இப்போ வந்து இருக்காங்க னா.,  நீங்க பிரச்சனை ன்னு.,  சொல்றீங்க.,

அது மட்டும் இல்ல.,  பஞ்சாயத்து வரை கொண்டு வந்து இருக்கீங்க., அப்ப அவங்க அம்மாவ கூட்டிட்டு வாங்க”., என்று மறுபடியும் அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

உடனடியாக அங்கிருந்த அவர்களுக்குள் வந்திருந்த ஒரு பெண்மணி அவள் அம்மாவை அழைக்க சென்றுவிட்டார்..,

மஞ்சரியோ “வேண்டாம்.,  எங்க அம்மா கிட்ட பேச வேண்டாம்.., நம்ம பேசிட்டு அதுக்கப்புறம் சொல்லலாம்”., என்று சொல்ல.,

இவளோ நிதானமாக மற்றவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.,

ஹைட்ரஜன் குண்டுகளும், அணுகுண்டுகளும்., நம்மை அழிப்பதற்கு முன்னால் அவற்றை நம்மால் அழித்து விட முடியும் என்று நான் நம்புகிறேன்“.,

                                  –சார்லி சாப்ளின்.