13

உன் விழிகள் சொல்லும்
மொழியில் தான்.,
காதல் தேசத்தின்
மொழி அகராதி
மொழிபெயர்ப்பு
செய்யப் பட்டிருக்கும்..

காலை எழும்பியவள் அவன் கை அணைப்பில் இருக்கவும்., எழுந்து கொள்ள மனமில்லாமல் சற்று நேரம் அப்படியே இருந்தவள்.,

பின்பு மெதுவாக அவன் உறக்கம் கலையாமல் எழுந்து கொண்டவள் குளித்து உடைமாற்றி நிதானமாக கீழே வந்தாள்..,

இன்னும் கொஞ்சம் தூங்க சொல்லி கண்ணின் இமைகள் அவளிடம் கெஞ்ச., விட்டால்  இன்னும் இரண்டு மணி நேரம் உறங்குவேன் என்று மனம் சொல்ல..,

ஆனால் அவள் எண்ணமோ முதல் நாள் மாலை நடந்த விஷயங்களை அசை போட்டுக் கொண்டிருந்தது.,

எனவே எழுந்து கீழே வரும் போதே பானுவிடம் சற்று பேச வேண்டும் என்று தகவல் அனுப்பிவிட்டு வந்திருந்தாள்.,

ஏனெனில் வசுவை விட பானு சற்று தெளிவாக பதில் சொல்பவள்., எனவே அவளிடம் கேட்டாள் எதுவாக இருந்தாலும்., அவள் சொல்வது  சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை.,

கல்லூரி சேர்ந்த புதிதில் இருந்தே அந்த எண்ணம்  உண்டு., எனவே பானுக்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பிவிட்டு கீழே வந்தாள்.

தேவகி கொடுத்த காபி அருந்தி விட்டு அவருக்கு எப்பொழுதும் போல கிச்சனில் உதவி செய்து கொண்டிருக்க.., தேவகி தான்   ஒவ்வொன்றாக பேச அதற்கு பதில் சொல்லிய படி வேலை செய்தாலும்., நினைப்பெல்லாம் எதுவும் பிரச்சனை வந்து விட கூடாது என்று நினைத்து கொண்டு இருந்தாள்.,

அதற்குள் பானுவின் போன் வர அத்தை பானுகிட்ட இருந்து போன்.., பேசிட்டு வரட்டுமா என்று கேட்டுக்கொண்டே நகர்ந்தாள்.

அவரும் பேசிட்டு வா மா., வேற வேலை தான் இல்லையே., என்று சொன்னார்.,

போனை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.,  பேச ஆரம்பிக்கும் போதே மாடியிலிருந்து நந்தன் இறங்கி வந்தவன் கீழே ஹாலில் இவளை பார்த்துக்கொண்டே அமர்ந்தான்.,

இவளோ அவனை பார்க்காதது போல அவசர அவசரமாக மாடிக்கு சென்றாள்.,

அவனுக்கு அவள் இவனை நிமிர்ந்து பார்க்காமல் சென்றது ஒரு புறம் சிரிப்பு தான் வந்தது., இருந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் அம்மா காபி என்று ஹாலில் இருந்து சத்தம் கொடுத்தான்.,

“டேய் வந்து எடுத்துட்டு போ., நீ என்ன சின்ன பிள்ளையா”., என்றார்.

இவனோ இங்கிருந்து கொண்டே “அம்மா எனக்கு கொடுக்கணும் னா மட்டும் வந்து எடுத்துட்டு போ னு சொல்லுங்க.., இதே இது உங்க மருமகள் னா., இருக்குற இடத்துல தேடி போய் கொடுத்துட்டு வாங்க”.,  என்றான்.,

“எப்ப பாத்தாலும் சின்ன புள்ள மாதிரி போட்டி போடாதடா”..,   என்று சொன்னார்.

“அம்மா இதெல்லாம் அநியாயம்., அவ சின்ன பிள்ளையா”., என்றான்.

“டேய் வாய மூடிட்டு வந்து காபி எடுத்துட்டு போ.., இல்லை னா  தூக்கி தூர  வச்சிருவேன் பார்த்துக்கோ”.,  என்று சொல்ல..,

அவனே கிச்சனுக்கு சென்று எடுத்துக் கொண்டு வந்து மறுபடியும் ஹாலில் அமர..,  நடைப்பயிற்சி முடிந்து வந்த தந்தையோடு பேசியபடி காபி குடித்துக் கொண்டிருந்தான்…

மாடிக்கு சென்ற நிவேதா பானுவிடம் பேசத் தொடங்கியிருந்தாள்., “என்னடி காலங்காத்தால மெசேஜ் பண்ணி இருந்த..,  பேசணும்னு என்ன ஆச்சு”.,  என்றாள்.

“ஒன்னும் இல்ல பானு., உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்”., என்று சொல்லவும்.

“காலங்காத்தால என்னத்த கேக்க போற”., என்றாள்.

“ஒன்னும் இல்லை”., என்று சொல்லி நேற்று பார்க்கில் தான் கேட்டவற்றில் சிலவற்றை சொல்லியும்., சொல்லாமலும்.,  கோடிட்டு காட்டினாள்.

ஏனெனில் திருமணம் முடிந்த புதிதில் ஒரு முறை அவளிடம் சொல்லி இருந்தால்.,  இப்படி அந்தப் பெண் திருமணத்தின் அன்று வந்து பிரச்சினை செய்ததையும்.,

அப்போது அவள்  “இதெல்லாம் கண்டுகொள்ளாமல் போ.,  எல்லா இடத்திலும் இருக்கிறது தான்.., சில பொண்ணுங்க வேணும்னே பண்ண தான் செய்யும் கண்டுக்காத”.., என்று சொல்லி இருந்ததால் அதைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடிந்தது.,

நிவேதா சற்று தெளிவாக தான் முடிவெடுப்பாள்  என்றாலும் மனதிற்குள் இருக்கும் பொசசிவ்னஸ் தன்னை எங்க தவறாக முடிவு எடுக்க வைத்து விடுமோ.,  தவறாக பேச வைத்து விடுமோ., என்று அடிக்கடி யோசித்து தான் செயல்படுவாள்.,

சில விஷயங்களை வீட்டினரிடம் சொன்னாள் பிரச்சனை வர வாய்ப்பு உண்டு.,  அந்த விதத்தில் தான் பானுவிடம் கேட்டிருந்தாள்., இதையும் சொல்லி பானுவிடம் கேட்டாள்.

பானுவோ “சரி இன்னைக்கு காலையில வருவா ன்னு எதிர்பார்க்கிற  என்றால்.,  நிச்சயம் வருவா ன்னு,  தோணுது”., என்றவள்.  “சரி இப்ப நான் உன்கிட்ட ஒன்னு கேக்குறேன்., நீ உண்மையான பதிலை சொல்லணும் எனக்கு.., சொல்லுவீயா நிவி”., என்றாள்.

“நிச்சயமாக சொல்லுவேன் சொல்லு”.,  என்றாள்.,

“சரி இப்ப நீ சப்போஸ் நேற்று அவங்க பேசின இடத்தில.,  நீ இல்ல.., அந்த விஷயம் உனக்கு தெரியவே தெரியாது.., அப்போ உன்னோட மென்டாலிட்டி எப்படி இருந்திருக்கும்”., என்று கேட்டாள்.

“எப்படி இருந்திருக்கும்”., என்றாள் யோசனையோடு.,

“இல்ல அந்த விஷயம் உனக்கு தெரியாது., மற்ற பிரச்சினை தெரியாது., ன்ற அப்போ.,

நீ நேத்து அண்ணன் திட்டினாங்க ன்னு சொன்ன இல்லையா.., திடீர் ன்னு அப்படி திட்டி இருந்தாங்கன்னா., நீ அந்த விஷயங்களை கேட்காம வந்திருந்தா.,   நீ என்ன பண்ணிருப்ப”.., என்றாள்.

“ஏதோ கோபத்துல இருக்காங்கனு நினைச்சு இருப்பேன்.., அப்புறம்  நார்மலா மாற்ற சமாதானப்படுத்த  ட்ரை பண்ணி இருப்பேன்.., என்ன கோபம்., என்ன பிரச்சினை ன்னு கேட்டிருப்பேன்..,

அவங்க சொல்லாத பட்சத்தில்.., அத மேற்கொண்டு தொடராமல் விட்டு இருப்பேன்” என்றாள்.,

“சரி இப்ப அவ வருவது தெரியாது உனக்கு ன்னு வச்சிக்கோ சரியா..,  அப்படி இருக்கும் போது உன் முன்னாடி வந்து நின்னா.., உன்னோட மென்டாலிட்டி எப்படி இருக்கும்”., என்று கேட்டாள்.

சற்று நிதானமாக யோசித்தவள்.,  “கொஞ்சம் கோபம் வரும்.., அவங்களுக்கு வேற வேலையே இல்லையா அப்படின்னு சலிப்பு வரும்.., அப்புறம் என்ன தோணும்  அவ கிட்ட எப்பவும் போல பேசுவேன்.., மே பி அவ  யாருனே தெரியாத போது கூட கிண்டல் பண்ணினேன் இல்ல., ஸோ இப்ப அந்த மாதிரி கிண்டல் பண்ணுறதுக்கு வாய்ப்பு இருக்கு”.., என்றாள்.

“அதைத்தான் நான் சொல்ல வர்றேன்.,  உன்னோட குணம் யார் என்ன சொன்னாலும் கிண்டல் பண்ணி பேசுறது தான்..,  சீரியஸா பேசுறது இல்ல சரியா”.,  என்றாள்.

“ஆமா” என்று சொல்லவும்.,

“அதையே  ஃபாலோ பண்ணு.,  உனக்கு இப்போ அவ வருவது தெரியாது..,  வரும் போது தெரிஞ்ச மாதிரி இருக்கட்டும் சரியா”.., என்றாள்.

“சரி”., என்று சொல்லவும்.,

” அந்த போட்டோ சொன்ன இல்ல., அது  உனக்கு தெரியாம இருந்துச்சுன்னா., நீ நேத்து கேட்காமல் இருந்திருந்தால் அந்த போட்டோ மார்ப்பீங்  பார்த்து உனக்கு என்ன  தோணும்”..,என்றாள் பானு.

“கண்டிப்பா அந்த அளவுக்கு நேச்சுரலா  மார்பிங் பண்ணி கொடுக்கிறவங்க இந்த ஊர்ல இருக்க வாய்ப்பு இல்லை.., என்ன பண்ணிட்டு வருவா.., பார்த்த உடனே ஷாக்கா தான் இருக்கும்.., அப்புறம் அதை பத்தி ஒன்னு கிண்டல் பண்ணுவேன்.., இல்லாட்டி நந்தன் கிட்ட கோபப்படுவேன்”., என்றாள்.

“அண்ணன சந்தேகப்படுவீயா” என்றாள் பானு.

“அவரை நான் எதுக்கு சந்தேகப்பட போறேன்”., என்றாள்.,

“அப்ப நீ என்ன பண்ணுவ”., என்று கேட்கவும்.,

“கண்டிப்பா அதில் ஏதாவது ஒரு ஓட்டை  எவிடென்ஸ்  இருக்கா ன்னு.., செக் பண்ணுவேன்.., அந்த ஓட்டையை வைத்து அவளை ஓட ஓட விரட்டுவேன்., அவளைக் கிண்டல் பண்ணுவேன்., கேள்வி கேட்பேன்”., என்றாள்.

“நீ போட்டோவை பார்க்கும் போது உன்னோட மைண்ட் எப்படி இருக்கும்”..,என்றாள்.

“எப்படி இருக்கும்..,  கோவம் வரும் தூக்கி தூர வீசனும் போல இருக்கும்.,  உனக்கு வேற வேலை இல்ல அப்படின்னு சொல்ல தோனும்., டக்குனு அவ புத்தி இப்படித்தானே போகும் ன்னு., யோசிப்பேன்.,  வேற என்ன சொல்ல அப்படி தான் பேசுவேன் ன்னு நினைக்கிறேன்”., என்று சொன்னாள்.

“சோ நீ இப்ப தெரிஞ்ச மாதிரி பேசக்கூடாது., நீ தெரியாம அவ உன் முன்னாடி வந்து இதெல்லாம் பண்றா அப்படின்னா., உன்னோட ஆன்சர்  என்னவா இருக்குமோ., அதை சொல்லு”., என்று சொல்லவும்.

“ஓகே உன் கிட்ட சொன்னது தான் அது தான் பதிலா இருக்கும்”., என்று சொல்லவும்.

“அப்படியே பேசு வேற ஒன்னும் பேச வேண்டாம் சரியா” என்று சொன்னாள்.

“சரி”என்று கேட்டுக் கொள்ளவும்., நிவி என்று பானு அழைக்கவும்.,

“சொல்லு பானு” என்றாள்.

“உனக்கு அண்ணாவ எவ்வளவு பிடிக்கும்”., என்று கேட்டாள்.

“ரொம்ப பிடிக்கும்.., கல்யாணம் வேணாம்னு சொன்னவ போட்டோவை பார்த்தவுடன் கல்யாணத்துக்கு சம்பாதிச்சு இருக்கேன்.,  ஏதாவது சாக்கு போக்கு சொல்லி கல்யாணத்தை நிறுத்தனும் ன்னு தான் பஸ்ட் தோணுச்சு.,

வீட்ல எல்லாரும் சம்மதம் சொன்னப்போ  எனக்கும் ஓகே அப்படிங்கற மாதிரி தோணிச்சு..,  ஏதாவது சாக்கு போக்கு கிடைக்குமா காட்டுவதற்கு அப்படியெல்லாம் யோசிச்சேன்.., ஆனா அவங்க போட்டோ பார்க்க பார்க்க ரொம்ப பிடிச்சது., அதனால தான் சரி சொன்னேன்”., என்றாள்.

“சரி இதை எப்பவாவது  சொல்லி இருக்கியா”., என்றாள்.

“இல்ல சொன்னது இல்ல”., என்றாள்.

“நீ இன்னைக்கு பேசுறதுல்ல.,  அண்ணன் மேல  எந்த அளவுக்கு அபக்ஸன் வச்சிருக்க.., லவ் வச்சுருக்க  அப்படிங்கிறது மொத்தம் மத்தவங்களுக்கு தெரியணும்.,

முக்கியமா அந்த பொண்ணுக்கு தெரியணும்.., சோ அந்த பொண்ணு தன்னால பெட்டியை கட்டிட்டு போய்விடுவா சரியா.., மைண்ட் ப்ரீயா விடு எதைப்பற்றியும் யோசிக்காமல் நல்லபடியா பேசு”., என்று சொல்லவும்.,

“போட்டிக்கு போற மாதிரி வாழ்த்துற” என்று சொல்லவும்..,

பானுவும் சிரித்தபடியே “இதே வாய அப்படி மெயின்டெயின் பண்ணி பேசு சரியா” என்று சொல்லி போனை வைக்க முன்..,

“ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீயே.., நீ அண்ணனுக்காக சில விஷயங்கள் பேசுறது செய்றதெல்லாம் நாங்களும் நோட் பண்ண தான் செய்யுறோம்.., இந்த அண்டர்ஸ்டாண்டிங் எப்படி வந்துச்சு.,  அப்படின்னு வசுவும்.,  நானும் அடிக்கடி யோசிச்சப்போம்., அதையே தான் இப்ப கேட்கிறேன்., சின்ன சந்தேகம் கூட வரலையே., உனக்கு.,

உன்னால உன் ஹஸ்பன்ட் காக பேசமுடியும் அப்படின்னா.., அந்த அண்டர்ஸ்டாண்டிங் வரதுக்கு  நீ அண்ணன் மேல வச்சிருக்க லவ்  அதுதான் முக்கிய காரணம்”., என்று சொன்னாள்.