அத்தியாயம் 8:

“சார் ஒரு நிமிஷம்” என்ற விவேக் அவனைத் தனியாய் அழைக்க,

“என்ன விவேக்?”

“அதி என்ன நடக்குது இங்க? என்கிட்ட இருந்து மறைச்சுட்ட இல்ல. நான் அவ்வளவு தூரம் கேட்டும் நீ வாயைத் திறக்கவேயில்லை” என்றான் விவேக்.

“நடக்குற விஷயத்தை சொல்லலாம். நடக்கவே நடக்காதுன்னு தெரிஞ்ச ஒரு விஷயத்தை எப்படி சொல்ல முடியும்?” என்றான் தீரன்.

“நிஜமாவே இந்த பொண்ணுக்கு கிறுக்குத் தான் பிடிச்சிருக்கு. அவன், ஆள் பார்க்க மட்டும் தான் நல்லா இருக்கான். மத்தபடி ஸ்டேபிள் மைன்ட் இருக்குற பெர்சனா தெரியலை. அவனை நம்பி குடும்பத்தை விட்டுட்டு வர்ற அளவுக்கு அப்படி என்ன இருக்கு அவன்கிட்ட?” என்றான் விவேக்.

“காதலுக்கு கண்ணில்லை விவேக். நீ கேள்விப்பட்டதில்லை?” என்றான் நக்கலுடன்.

“அது சரி” என்ற விவேக் வேடிக்கைப் மட்டுமே பார்த்திருந்தான்.

சிறிது நேரத்தில் பெற்றோருடன் வந்த தாரிக்,

“கிளம்பலாம் பேபி. இப்போதைக்கு நீ வீட்டுக்கு போ. நம்மளை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. உங்க வீட்ல சம்மதிக்கிற வரைக்கும் நாம வெயிட் பண்ணுவோம்” என்றான்.

மொழி அவனைத் தீ பார்வை பார்க்க,

“உன் கோபம் புரியுது பேபி.எல்லாம் என்னோட தப்புத் தான். நான் சூசைட் பண்ணிப்பேன்னு உன்னைக் கார்னர் பண்ணது என்னோட தப்பு. கொஞ்ச நாள் மட்டும் வெயிட் பண்ணு. டாடி மம்மியும் அதைத்தான் சொல்றாங்க. நம்ம விருப்பம் இல்லாம வீட்ல யாரும் எதுவும் பண்ண முடியாது” என்றான்.

“இந்த ஈர வெங்காயத்தைத் தான நானும் சொன்னேன்” என்றாள் கோபமாய்.

“ஹோ இது தான் தெய்வீகக் காதல் போல” என்றான் விவேக் தீரனிடம்.

அவளைப் பார்த்த தீரனுக்கு,அவள் கண்களில் வேறு ஏதோ இருக்கிறது என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது.

“வா பேபி. உன்னை உங்க வீட்ல ட்ராப் பண்ணிட்டு போறோம்” என்றான் தாரிக்.

“ஒரு ஆணியும் புடுங்கத் தேவையில்லை. மரியாதையா கிளம்பிடு” என்றாள் கோபத்துடன்.

“கோபமா மொழி” என்றவனை விட்டால் பார்வையால் எரித்திருப்பாள்.

“என்னைக்கா இருந்தாலும் நீதான்மா எங்க வீட்டு மருமக. நாங்க முறைப்படி பொண்ணுக் கேட்டு வர்றோம். தாரிக், விஷயம் இதுன்னு முன்னமே சொல்லியிருந்தா இவ்வளவு தூரம் வர விட்டிருக்க மாட்டோம். இதுல ரெண்டு குடும்பத்தோட மானம் மரியாதை அடங்கியிருக்கு. உங்கப்பா எவ்வளவு பெரிய ஆள். அவருக்கு இது எவ்வளவு பெரிய தலைகுனிவுன்னு யோசிச்சு பார்த்தியாம்மா? இப்போதைக்கு நீ வீட்டுக்கு போமா” என்றவர்கள் தாரிக்கை அழைத்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்க,

“ஒரு நிமிஷம்! உங்க வீட்டுக்கு அடியாட்கள் யாரும் வந்தாங்களா?” என்றான் தாரிக்கின் பெற்றோரிடம்.

“வீட்டுக்கு யாரும் வரலையே சார்” என்றவர்களை முறைத்த தாரிக்,

“அது நான் ஆபீஸ் போகும் போது அட்டாக் பண்ண வந்தாங்க சார்” என்றவனை கண்களில் கூர்மையுடன் பார்த்திருந்தான் தீரன். மொழியும் அதே பார்வை தான் தீரக்கைப் பார்த்தாள். அவளிடம் வீட்டிற்கே ஆட்கள் தேடி வந்துவிட்டனர் என்று கூறியிருந்தான். இப்போது அவன் மாற்றிப் பேசவும் முதன் முறையாக அவன் மேல் அவளுக்கு சந்தேகம் வந்தது.

“நீ சொன்னது எல்லாம் உண்மையா இருக்குற வரைக்கும் தான் நீ சேப்” என்றவனை பார்த்துக் கொண்டே சென்றான் தாரிக்.

அவள் துவண்டு போய் அங்கிருந்த இருக்கையில் அமர, அவள் முன் தண்ணீர் பாட்டிலை நீட்டியிருந்தான் அதி தீரன். அதை மறுக்க வேண்டுமென்று தோன்றவில்லை அவனுக்கு.

“தேங்க்ஸ்” என்றவள் வேகமாய் தண்ணீரைக் குடிக்க, விவேக் இருவரையும் தான் பார்த்துக் கொண்டு நின்றான். தீரன் அவனைப் பார்த்து தலையசைக்க,”சரி” என்பதைப் போல் சென்று விட்டான்.

விவேக்கின் பின்னால் சென்ற தீரன்,

“இன்ஸ்பெக்டர் உதய குமரனை இமீடியட்டா காண்டாக்ட் பண்ணு விவேக். கிடைச்ச தகவல் உண்மையான்னு ஒன்னுக்கு ரெண்டு தடவை செக் பண்ணுங்க. அன்ட் அது வரைக்கும் எல்லாரும் நம்ம கண் பார்வையில தான் இருக்கணும். வெரி கான்பிடன்ஷயல்” என்றான்.

“ஓகே அதி” என்ற விவேக்,

“இந்த பொண்ணு” என்றான் கேள்வியாக.

“நான் பார்த்துக்கிறேன்” என்ற தீரன், ராஜ ராஜனுக்கு அழைப்பு விடுத்தான்.

“சொல்லுங்க தீரன்” என்றார் எதிர்முனையில்.

“தேங்க்ஸ் அங்கிள்..! நான் சொன்ன மாதிரி பேசுனதுக்கு. உங்க பொண்ணை பத்திரமா வீட்ல கொண்டு வந்து விட வேண்டியது என் பொறுப்பு” என்றான்.

“நீங்க இருக்கும் போது நான் ஏன் கவலைப் படனும் தீரன். பார்த்துக்கோங்க, சரியான அழுத்தம் பிடிச்ச பொண்ணு” என்றார் ஆயாசத்துடன். அவரிடம் பேசி விட்டு வைத்தவன் அறைக்குள் வர, அவளோ கொஞ்சம் பதட்டத்துடன் தான் இருந்தாள். அறையில் அவனையும் அவளையும் தவிர யாருமில்லை என்பதே அவள் பதட்டத்திற்கு காரணம்.

“ரிலாக்ஸ் வெண்மொழி. அடுத்து என்ன பண்றதா பிளான்?” என்றான்.

“வீ..வீட்டுக்கு போகணும் சார்” என்றாள்.

“அதுக்கு முன்ன உங்களால எனக்கு ஒரு உதவி ஆகணுமே?” என்றவனை கேள்வியாய் பார்த்தாள்.

“நீங்க என் கூட கோயம்புத்தூர் வரை வர வேண்டியிருக்கும். ஜஸ்ட் ஒரு நாள். ஒரு கேஸ்ல உங்க உதவி தேவைப்படுது” என்றான்.

“நோ, என்னால வர முடியாது சார்” என்றவள் பதட்டத்துடன் எழுந்து கொள்ள,

“உட்காருங்க மொழி” என்றான் பொறுமையாய்.

“இல்ல, நான் கிளம்பனும்” என்றாள்.

“ஐ செட் சிட் டவுன்” என்றவனின் குரலில் இருந்த அழுத்தத்தில் அப்படியே அமர்ந்தாள். அவள் விழிகள் எதையோ அவனுக்கு படம் பிடிக்க, கண்களை மூடி நிதானித்தவன்,

“ஓகே இப்போ உங்களை வீட்ல டிராப் பண்றேன். பட், நாளைக்கு கண்டிப்பா நீங்க என் கூட வந்தாகணும். இல்லைன்னா ஆர்டரோட வந்து உங்களைக் கூட்டிட்டு போக வேண்டியதா இருக்கும்” என்றான்.

“நானே வர்றேன் சார்” என்றாள் அவன் முகம் பார்க்காமல்.

“குட்..! இப்போ கிளம்புங்க, நான் உங்களை உங்க வீட்ல ட்ராப் பண்றேன்” என்றான்.

“உங்களுக்கு எதுக்கு சிரமம். நானே போய்டுவேன்” என்றாள்.

“இங்க பாருங்க வெண்மொழி, எனக்கும் உங்களை டிராப் பண்ணனும்னு ஆசையெல்லாம் இல்லை. இப்போதைக்கு நீங்க என்னைப் பார்க்க வந்திருக்கிறதா தான் வெளிய எல்லாருக்கும் தெரியும். விவேக் என்னோட பிரண்ட். என்னோட ரூம்ல இருந்தவங்க எல்லாம் என்னோட ஆட்கள். எங்களைத் தாண்டி விஷயம் எங்கயும் போகாது. அதனால தான் நான் ட்ராப் பண்றேன்னு சொன்னேன்” என்றான் அழுத்தமாய்.

“ம்ம்!” என்றாள் தலையைக் குனிந்து.

“நான் கேள்விப் பட்டவரை வெண்மொழின்ற பொண்ணு அமைதின்னாலும் எதையும் நேருக்கு நேரா பேஸ் பண்ற தைரியமான பொண்ணுன்னு சொன்னாங்க. ஆனா இங்க என்னடான்னா வந்ததுல இருந்து தலையை குனிஞ்சுட்டே இருக்கிங்க? நான் கேள்விப்பட்டதுக்கும் நீங்க நடந்துக்கிறதுக்கும் சம்பந்தமே இல்லாம இருக்கே” என்றான் யோசனையுடன்.

“ஐ ஆம் சாரி..! உங்களுக்கு பால்ஸ் ஹோப் கொடுத்ததுக்கு” என்றாள் தயக்கத்துடன்.

“இதுக்காகத் தான் இவ்வளவு நேரம் தயங்குனிங்கன்னா அது தேவையில்லாத விஷயம்” என்றவன் அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

மகளுடன் வந்த அதிதீரனை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டார் ராஜ ராஜன். வீட்டில் இருப்பவர்களுக்கு விஷயம் எதுவும் தெரியாததால்  அவள் தீரனுடன் வந்ததை ஆச்சர்யமாய் பார்த்திருந்தனர்.

“அக்கா அப்போ மொழி மனசு மாறிட்டாளா?” என்ற வாசுகியிடம் சிரிக்க முயன்றார் சங்கரி.

வீட்டில் இருப்பவர்களை எப்படி எதிர்கொள்வது என்ற பயத்துடன் வந்தவளுக்கு அவர்களின் முகத்தை வைத்தே அவர்களுக்கு விஷயம் தெரியவில்லை என்று உணர்ந்தாள். உணர்ந்தவளுக்குள் அப்படி ஒரு நிம்மதி.

“அடடே வாங்க மாப்பிள்ளை” என்று தியாகராஜன் உற்சாகமாய் வரவேற்க, தீரனுக்கோ எதையும் வெளியில் சொல்ல முடியாத நிலைமை. அவருக்கு சிறு புன்னகையுடன் தலையசைப்பைக் கொடுத்தான். மொழி அவனை தவிப்புடன் பார்க்க,

“உங்க ரூம்க்கு போங்க மொழி”  என்றான். அவளும் மாடியை நோக்கி செல்ல,

“ஒரு நிமிஷம்” என்றார் ராஜ ராஜன். அவள் அதிர்வுடன் திரும்பினாள்.

எங்கே அவர் நடந்ததை அனைவரின் முன்னிலையிலும் சொல்லி விடுவாரோ என்று அவளுக்கு பயம்.

“இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டிருக்கார். அவருக்கு குடிக்க குடுக்கனும்னு தோணலையா? ஜூஸ் போட்டு குடுக்க சொல்லு சங்கரி” என்றார் மனைவியிடம்.

“நான் எடுத்துட்டு  வர்றேன் மாமா” என்று வாசுகி செல்ல முற்பட, ராஜன் பார்த்த பார்வையில் அப்படியே அடங்கினார் அவர்.

“அதெல்லாம் வேண்டாம் அங்கிள். நான் கிளம்புறேன்” என்றான் தீரன்.

“என்ன தீரன்? இவ்வளவு தூரம் வந்துட்டு எதுவும் குடிக்காம போனா எப்படி?” என்ற ராஜனின் பேச்சை அதற்குமேல் அவனால் தட்ட முடியவில்லை.

“உட்காருங்க சார்” என்றபடி அவள் சமையல் அறையை நோக்கி செல்ல,

“வீட்ல விஷயத்தை சொல்லிடுவிங்களோன்னு  ரொம்ப பீல் பண்றாங்க போல அங்கிள்” என்றான் ராஜனிடம் மெதுவாக.

“இனி கவலைப் பட்டு என்ன ஆகப் போகுது தீரன்?” என்றவரின் குரலில் ஒரு தகப்பனின் ஆற்றாமை.

மொழியோ ஏதோ யோசனையில் ஜூசைப் போட்டுக் கொண்டு வந்தாள். அவளின் கவனம் வேறு யோசனையில் இருக்க, சோபா தட்டி கால் இடறியவள், மொத்த ஜூசையும் அவன் மேல் கொட்டியிருந்தாள்.

“அச்சோ சாரி சார்” என்று பதட்டமடைந்தவள், கீழே தரையில் கொட்டிய ஜூஸில் கால் வைத்து மீண்டும் இடற,

“ஹேய் மொழி பார்த்து” என்றவன் அவளை இழுத்து தன்னோடு நிறுத்தியிருந்தான். அவள் உடல் எல்லாம் நடுங்கிக் கொண்டிருக்க, அதை உணர்ந்த தீரனோ அவளை யோசனையுடன் பார்த்தான்.

“உன்னோட கவனம் எங்க இருக்கு மொழி? என்னதான் ஆச்சு உனக்கு?” என்றார் தியாகராஜன் கோபமாய்.

“சாரி தாத்தா” என்றவளுக்கு கண்ணீரே வந்து விட்டிருந்தது.

“இட்ஸ் ஓகே..! தெரியாம நடந்த ஒரு விஷயத்துக்கு ஏன் இவ்வளவு ஹார்ஷா பிகேவ் பண்றிங்க தாத்தா” என்ற தீரன்,

“வாஷ் ரூம் யூஸ் பண்ணிக்கலாமா?” என்றான்.

“என்ன தீரன் இதெல்லாம் கேட்டுகிட்டு. கெஸ்ட் ரூம் இருக்கு. யூஸ் பண்ணிக்கோங்க ” என்றவர், “மொழி டவல் எடுத்து குடும்மா” என்ற தந்தையை அதிர்வுடன் பார்த்தாள். ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சியைத் தான் தாங்குவாள் அவளும்.

“சரிங்க டாடி” என்றவள் டவலை எடுத்துக் கொண்டு சென்றாள்.

“ராஜன் என்ன பழக்கம் இது?” என்று தியாகராஜன் எதையோ கேட்க வர, ராஜனின் அர்த்தம் பொதிந்த பார்வையில் அப்படியே அமைதியாகிவிட்டார்.

“எதுவும் பிரச்சனையா ராஜா?” என்ற தந்தையை மெச்சிக் கொண்டவர்,

“நான் பார்த்துக்கிறேன் ப்பா” என்றார்.

அவள் டவலுடன் நுழைய,  சட்டையை அலசி உதறியவாறு.. பேண்ட் மற்றும் பனியனுடன் வந்தவனைக் கண்டு ஒரு வித சங்கடத்துடன் டவலை நீட்டினாள்.

அவள் நீட்டிய டவலை வாங்கிக் கொண்டவன், ஈர சட்டையை அப்படியே அணிந்து கொள்ள,

“சாரிங்க! என்னோட மிஸ்டேக் தான்” என்றாள்.

“இட்ஸ் ஓகே..!” என்றான்.

“சட்டையை கொஞ்ச நேரம் உலர்த்தி போட்டுக்கலாமே” என்றாள்.

“டைம் இல்லைங்க! முக்கியமான வேலை இருக்கு. நான் உடனே கிளம்பியாகணும்” என்றபடி அறையை விட்டு வெளியேற முற்பட்டவன்,

“நானும் சாரிங்க மிஸ்.வெண்மொழி” என்றான்.

“எதுக்கு??”

“இல்ல, என்கூட மேரேஜ்க்கு சம்மதம்னு சொல்லிட்டு, இப்படி லவ்வர் கூட ட்ரிப் வந்து டபுள் கேம் ஆடுறிங்கன்னு கோபப்பட்டு தான் அன்னைக்கு அப்படி நடந்துகிட்டேன். என்ன காரணம் சொன்னாலும் நடந்துகிட்ட விதம் தப்புன்னு எனக்குத் தெரியும், அதான்” என்றவனை இமைக்காமல் பார்த்திருந்தாள்.

நிமிடத்தில் எண்ணங்கள் எங்கெங்கோ பயணிக்க, அவள் முன் சொடக்கிட்டு அழைத்தவன்,

“ரொம்ப யோசிச்சு ஸ்ட்ரஸ் ஆகாதிங்க. நாடகம் முடிஞ்சா நடிக்கிறவங்க ஸ்டேஜை விட்டு கீழ இறங்கித்தான் ஆகணும்” என்றவனைப் புரியாமல் பார்த்திருந்தாள்.

அவளை ஒரு நிமிடம் பார்த்தவன்,”பயப்படாதிங்க..! இதை சாக்கா வச்சு மறுபடியும் இந்த மேரேஜ் ப்ரோப்போசல் உங்க வீட்டுக்கு வராது. எனக்கு வேணும்னு நினைக்கிற வரைக்கும் தான் அது எனக்கு பொக்கிஷம். வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா, தங்கமா இருந்தாலும் இந்த தீரனுக்கு அது தேவையில்லை” என்றவன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

காரில் சென்று கொண்டிருந்தவனின் எண்ணம் முழுவதும் வெண்மொழியே!

அவன் பார்த்த மொழிக்கும் இப்போது இருப்பவளுக்கும் அத்தனை வித்தியாசம் இருந்தது. காரணம் தெரியாமல் குழம்பிப் போயிருந்தான். சரியாக அதே நேரம் விவேக் அழைக்க,

“விஷயம் என்னாச்சு விவேக்” என்றான் எடுத்த எடுப்பில்.

“நாம கெஸ் பண்ணது சரிதான் அதி. இப்போ அவன் கோயம்புத்தூர்ல இருக்குற ஏகே ஹாஸ்பிட்டல்ல தான் அட்மிட் ஆகியிருக்கான்” என்று விவேக் சொல்ல,

“ஏகே ஹாஸ்பிட்டல் சேர்மன் யாரு?” என்றான் தீரன் யோசனையுடன்.

“கார்டியாலஜிஸ்ட் டாக்டர். அகன் கார்த்திகேயன் தான் சேர்மன் அதி” என்றான் விவேக்.

“ஓகே விவேக்..! அவரை மீட் பண்ண ஒரு அப்பாயின்மென்ட் வாங்கிடு. அன்ட் வெரி கான்பிடன்ஷயல்னு அவருக்கு இன்பார்ம் பண்ணிடு. அன்ட் நாம அங்க போகும் போது இன்ஸ்பெக்டர் உதய குமரனையும் வர சொல்லிடு” என்றான்.

“ஓகே அதி”

“தீரக்கோட கால் ஹிஸ்டரி,அன்ட் அவங்க பிரண்ட்ஸ் கேங்ல இருக்குற எல்லாரோட கால் ஹிஸ்டரியும் வேணும் விவேக்” என்றான்.

“இன்பார்ம் பண்ணிட்டேன் அதி. இன்னும் ஹாப்னார்ல கைக்கு கிடைச்சுடும்” என்றான் விவேக்.

விவேக்குடன் பேசி முடித்தவன், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடலை மனதிற்குள் வகுத்துக் கொண்டான்.

தன்னுடைய அறையில் தலையை கைகளில் தாங்கியபடி அமர்ந்திருந்த வெண்மொழிக்கு எவ்வளவு முயன்றும் அழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை.

“முட்டாள் முட்டாள்..! என்னடி பண்ணி வச்சிருக்க? மொழி உனக்கு என்னாச்சு? உனக்கு என்னதான் ஆச்சு?” என்று எண்ணியவளுக்கு சுத்தமாக ஒன்றும் புரிபடவில்லை.

‘அந்த தாரிக் தான் சொன்னான்னா உனக்கு எங்க போச்சு அறிவு? இப்போ அசிங்கப்பட்டு நிக்கிறது யாரு? இது சரிப்பட்டு வராது. இப்படியே போனா அடுத்து என்ன நடக்கும்னு தெரியாது. இதுக்கு ஒரு முடிவு கட்டித் தான் ஆகணும்’ என்று எண்ணிய நிமிடத்தில் அவளுக்கு உடல் உதறத் தொடங்கியது.

அப்போது தான் ஞாபகம் வந்தவளாக வேகமாய் சென்று தன் அறையில் இருந்த கபோர்டின் ட்ராவைத் திறந்து எதையோ தேட, அது அவ்வளவு சீக்கிரம் அவள் கையில் அகப்படவில்லை. விடாமல் தேடியவள், இறுதியாக அந்த கவரை கண்டுபிடித்து எடுத்தாள்.

அந்த கவரை வேகமாக பிரித்து, உள்ளே இருந்த போட்டோவை வெளியே எடுத்தாள். அதில் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தான் அதிதீரன்.