ராஜ ராஜன் வீடே புயல் அடித்து ஓய்ந்ததைப் போன்று இருந்தது. அப்படி ஒரு ஆழ்ந்த அமைதி. யாருக்கும் யாரிடமும் எதுவும் பேசத் தோன்றவில்லை. அவர்கள் அடைந்த அதிர்ச்சி அப்படி. வாழ்க்கையின் எத்தனையோ காலகட்டங்களைத் தாண்டி வந்த தியாகராஜன் எதையும் ஜீரணிக்கும் சக்தியின்றி சோர்ந்து விட்டார். அரசியலிலும் தொழிலும் அத்தனை நிகழ்வுகளைக் கடந்து வந்த ராஜ ராஜன் கூட நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் உடைந்து போய்விட்டார்.
விஹானுக்கோ தன் தந்தையா இப்படி என்ற அதிர்ச்சி. வீட்டில் இருந்தவர்கள் முகத்தை நிமிர்ந்து பார்க்க கூட முடியாமல் அறைக்குள் சென்று அடைந்து கொண்டான். பிரகதியோ அடைத்த கதவை திறக்கவேயில்லை. வீட்டின் நிலவரத்தைப் பார்த்த வெண்மொழிக்கு காலையில் ஏன் தீரன் தன்னிடம் அப்படி கூறினான் என்று இப்போது தான் புரிந்தது. அவளுக்கும் ஜீரணிக்க முடியாத அதிர்ச்சி தான். ஆனால் அவள் தான் ஆரம்பத்தில் இருந்து பாதிக்கப்பட்டிருக்கிறாளே?
அருகில் இருந்த ராஜ ராஜன் வீட்டைச் சுற்றிலும் போலீஸ் இருக்க, உள்ளிருந்து பத்து கோடி மதிப்பிலான போதை வஸ்துக்களை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர். அன்று முழுவதும் அந்த செய்தியே பரபரப்பு செய்தியாக ஓடிக் கொண்டிருக்க, சம்பந்தபட்ட பல இடங்களில் இருந்து பலர் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர்.
கமிஷனர் அலுவலகத்தில் தீரனின் அறையில் நின்றிருந்த சஞ்சய்யோ ஜன்னல் வழியாக தூரத்தை வெறித்திருந்தான். தீரனுக்கு அவனின் எண்ணவோட்டம் புரிந்தது.
“சஞ்சய்” என்ற தீரனின் குரலில் ஜன்னல் கம்பிகளை பற்றியிருந்தவனின் கைவிரல்கள் இறுகியது.
“நமக்கு வேலை இருக்கு” என்றான் தீரன்.
“நான் எப்படி அதி பிரகதி முகத்துல முழிப்பேன். எப்படி அவளை பேஸ் பண்ணுவேன். அவ கேட்குற கேள்விக்கு நான் என்னன்னு பதில் சொல்லுவேன்? என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம ஒரு முட்டாளா இருந்திருக்கேன். என்னைய என்னாலேயே ஜீரணிக்க முடியலை அதி. ஐ பீல் வெரி கில்ட்டி” என்ற சஞ்சய்க்கு கண்கள் கூட கலங்கிவிட்டது.
“அதெல்லாம் எல்லாத்தையும் அழிச்சாச்சு. சும்மா அதையே நினைச்சு பீல் பண்ணாம ஆகுற வேலையை பார்க்க சொல்லு அதி” என்ற விவேக்கை அவன் குரல்வலையோடு பிடித்திருந்தான் சஞ்சய்.
“டேய் விடுங்கடா ரெண்டு பேரும். உங்க சண்டையை தீர்க்கவே எனக்கு நேரம் சரியா இருக்கு” என்றான் தீரன் ஒரு அதட்டலுடன்.
“பின்ன என்ன அதி? இவனுக்கு என்ன தெரியும்? அவனுக்கு நடந்திருந்தா தெரியும். எப்படி பேசுறான் பாரு? அவன் தான் என் கூட பேச மாட்டானே. அப்படியே இருக்க சொல்லு” என்ற சஞ்சய்யின் முகத்தில் அப்படி ஒரு கோபம்.
“சஞ்சய் நீ டென்ஷனா இருக்க. பர்ஸ்ட் ரிலாக்ஸ் ஆகு” என்றான் தீரன்.
“எப்படி அதி ரிலாக்ஸ் ஆக சொல்ற? இந்த கேசுக்காக ஒரு வருஷம் வேலை பார்த்திருக்கோம். எல்லா இடத்துலையும் சரியா இருந்திருக்கேன். இதை எப்படி கோட்டை விட்டேன். ஊர் பிரச்சனையை தீர்க்க தெரிஞ்ச எனக்கு சொந்த பொண்டாட்டியை..” என்று நிறுத்தியவன் “அவளை எப்படி பேஸ் பண்ணுவேன் அதி” என்றவனுக்கு கண்ணீர் வெளியே வந்து விட்டது.
“டேய் சஞ்சய்” என்ற தீரன் அவனை அணைத்துக் கொள்ள, நண்பனை இறுக அணைத்துக் கொண்டான் சஞ்சய்.
அப்போது தான் தீரனுக்கு ஒரு விஷயம்தெளிவாய் புரிந்தது. விஷயம் இப்படி என்று கேள்விப்பட்ட ஒரு ஆணே இப்படி கலங்கும் போது, மொழியின் பயமும் கலக்கமும் அவள் என்ன நிலையில் இருந்திருப்பாள் என்பதும் தெளிவாய் விளங்கியது. தானும் தன் பங்கிற்கு அவளை அதட்டிப் பேசியதும் ஞாபகத்தில் வந்து சென்றது.
“நீயே இப்படி யோசிச்சா, அப்போ அவன் வீடியோ எடுத்த பொண்ணுங்க நிலைமை எல்லாம் யோசிச்சு பாரு. அந்த ஜித்தேஷ் அவன் லவ்வர் டயானாவைக் கூட விட்டு வைக்கலை. எல்லாருமே படிக்கிற பொண்ணுங்க. பாதிப் பேர் புதை குழின்னு தெரியாம விழுந்தவங்க. பாதிப்பேர் புதை குழின்னு தெரிஞ்சே விழுந்தவங்க. இதையெல்லாம் எங்க போய் சொல்றது சஞ்சய்?” என்றான் சற்று குரலை உயர்த்தி.
“என்கிட்டே ஏன் இதைப் பத்தி நீங்க ரெண்டு பேரும் சொல்லலை?” என்றான் கோபத்துடன்.
“புரிஞ்சுக்கோ சஞ்சய். மொழியோட அந்த கோயம்புத்தூர் இன்சிடன்ட்டுக்கு அப்பறம் தான் இந்த விஷயமே தெரிஞ்சது. அதுவும் ஒரு யூகத்துல விசாரிக்க ஆரம்பிச்சது தான். அது கூட மொழி மூலமா தான் தெரிய வந்தது. நாம வெறும் ட்ரக்ஸ் சப்ளைன்னு தான இறங்குனோம். அதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய நெட்வொர்க் இருக்கும்னு நமக்குத் தெரியுமா? இல்லை இவங்களோட நோக்கம் தான் நமக்குத் தெரியுமா? முன்னாடியே தெரிஞ்சிருந்தா எப்படி உனக்கு இன்பார்ம் பண்ணாம இருந்திருப்போம்?” என்றான் தீரன் குரல் இறுக.
“சாரி அதி! ஏதோ டென்ஷன்” என்றான் சஞ்சய்.
“லுக் சஞ்சய்..! அவன் மொழியை மிரட்டுறதுக்காக பர்ப்பசா எடுத்த மாதிரி தெரியுது. உன்னோட ரூம்ல கேமரா வைக்க சான்ஸ் இல்லை. நீ அலெர்ட்டா தான் இருந்திருப்ப. சோ வெளிய எங்கயோ எடுத்த வீடியோ. அதை நீ தான் யோசிக்கணும்” என்றான் தீரன்.
“புரியுது அதி. அதையெல்லாம் எப்பவோ யோசிச்சுட்டேன். அது பிரகதிக்கு பர்த்டே பார்ட்டின்னு அந்த பக்கத்து வீட்ல தான் செலிபரேட் பண்ணோம். அன்னைக்குத்தான்” என்று நிறுத்தியவன் தலையை கோதிக் கொள்ள,
அவனின் சங்கடம் புரிந்து தீரன் அவன் தோளில் தட்டிக் குடுக்க, விவேக்கோ தலையில் அடித்துக் கொண்டான்.
“அதி, பிரகதின்னு இல்ல எப்படி அந்த பொண்ணு மொழி முகத்துலையும் முழிப்பேன்” என்ற சஞ்சயின் சங்கடம் இப்போது தீரனுக்கு தெளிவாய் புரிந்தது.
“பிரச்சனையை நான் டீல் பண்ணிக்கிறேன் விடு. இதை நினைச்சு எவ்வளவு நேரம் இப்படியே பீல் பண்ணிட்டு இருப்ப சஞ்சய். நமக்கு அடுத்து செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு. ஆத்திரம் தீர அந்த நாயை காட்டுக் காட்டுன்னு காட்ட வேண்டாம்” என்று தீரன் சொல்ல,
“ஆமாடா ஏற்கனவே அவன் ஆத்திரத்துல இருக்கான். நீ சலங்கை கட்டி விடு. செத்துடப் போறான். அந்த நாயெல்லாம் அவ்வளவு சீக்கிரம் சாகக் கூடாது” என்றான் விவேக்.
“வெளிய பிரஸ் பீப்பிள் எல்லாரும் வெயிட் பண்றாங்க சார்” என்று ஒரு காவலர் வந்து சொல்லி விட்டு செல்ல, அவர்களை சந்திக்க சென்றான் தீரன். அவர்களின் கேள்விகளுக்கு பொறுமையாய் அவன் பதில் சொல்லிக் கொண்டிருக்க, இறுதியாக வந்தது அவன் எதிர்பார்த்த கேள்வி.
“இதுல அமைச்சர் ராஜராஜனுக்கும் தொடர்பு இல்லைன்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா சார். இல்ல அவர் உங்க மாமனார் அப்படின்றதால மூடி மறைக்கப் பார்க்குறிங்களா?” என்றனர்.
கேட்டவனை முறைத்தவன்,
“உங்களுக்கெல்லாம் எப்படி வேலை பார்த்தாலும் திருப்தியே வராது இல்லையா? மாமனாரை காப்பாத்தனும்னா சின்ன மாமனாரை காப்பாத்தி இருந்தாலே அமைச்சர் பேரே இங்க வந்திருக்காதே. எங்களுக்கு அப்படி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அமைச்சர் ராஜ ராஜனும் இதை விரும்ப மாட்டார். ஒருவேளை அவருக்கும் இந்த கேஸ்ல தொடர்பிருந்திருந்தா கண்டிப்பா அவரையும் அரஸ்ட் பண்ணியிருப்போம். இந்த கேசுக்காக கிட்டத்தட்ட ஒரு வருஷம் வேலை பார்த்திருக்கோம். நூறு பேருக்கு மேல அரஸ்ட் பண்ணியிருக்கோம். ஆயிரம் கோடி ரூபா மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் பண்ணியிருக்கோம். மாமனாரை காப்பாத்தனும்னா இதையெல்லாம் ஏன் பண்ணனும்? நேர்மையா வேலை பார்க்குறவங்க கிட்ட தான் இந்த கிராஸ் கேள்வி கேட்கத் தோணும் உங்களுக்கு” என்றவனின் பதிலில் வேறு கேள்வியின்றி அமைதியாகி விட்டனர்.
“டாக்டர் சுகந்தன் இதை தனியா பண்ணியிருப்பார்ன்னு நினைக்கிறிங்களா சார்?” என்றனர்.
“நோ வே..! சுகந்தன் ஒரு டாக்டர். ஆனா இதுக்கு பின்னாடி ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கு. சுகந்தனுக்கு பின்னாடி ஐடி செக்டார்ல இருந்து யாரோ ஸ்ட்ராங்கா இருக்காங்க. அவன் யாருன்னு கண்டுபிடிக்கணும். அது எங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை இல்லை. மேபி அதுக்கு வேற ஸ்பெஷல் ஆபீசர்ஸ் வரலாம். த கேஸ் கிவ்வன் டூ அஸ் ஹியர்பை குளோஸ்டு” என்றவன் பேட்டியை முடித்துக் கொண்டான்.
ரிமாண்ட் அறிக்கை தயார் செய்து சுகந்தனையும், ஆனந்த ராஜனையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ரிமாண்ட் செய்து விட்டு வர அன்று இரவாகியிருந்தது.
வீட்டிற்குள் நுழையும் போதே சஞ்சய் சற்று தயங்க..
“நான் பார்த்துக்கிறேன் சஞ்சய்” என்றான் தீரன் அவன் கைகளை அழுத்தியபடி.
வீடு, அவர்கள் சென்ற போது எப்படி இருந்ததோ அப்படியே தான் இருந்தது. ஆளுக்கொரு இடத்தில் முடங்கியிருக்க, பெருமூச்சு விட்ட தீரன்..
“அங்கிள் ப்ரோசிஜீசர்ஸ் எல்லாம் முடிஞ்சது. ரெண்டு பேரையும் ரிமாண்ட் பண்ணியாச்சு. நீங்க ஏன் இன்னமும் இப்படியே இருக்கீங்க. எப்படி இருந்தாலும் இதை ஓவர்கம் பண்ணி வந்து தான் ஆகணும்” என்றான் ராஜனிடம்.
அவர் முகத்தில் அப்படி ஒரு இயலாமை. உடன் பிறந்தவன் செய்த வேலையை அவரால் அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது என்று தீரனுக்கும் புரிந்தது.
சஞ்சயின் கண்கள் பிரகதியைத் தேட,
“அவ ரூமை விட்டு வெளியே வரவே இல்ல மாப்பிள்ளை” என்றார் சங்கரி கசங்கிய குரலில்.
“நான் பார்த்துக்கிறேன் ஆன்ட்டி” என்றவன் மனைவியைத் தேடி சென்று விட,
“அங்கிள் சஞ்சய்” என்றான் தீரன்.
“அவர் சொல்லலைன்னாலும் எனக்கு ஏற்கனவே தெரியும் தீரன். அவர் அண்டர்கவர் ஆப்ரேஷன்ல இருக்காருன்னு தெரியும். ஆனா இப்படி என் வீட்டு ஆப்ரேஷன்னு தான் தெரியாம போய்டுச்சு தீரன்” என்றார் ராஜன்.
“விடுங்க அங்கிள். நீங்க எப்பவும் போல ஸ்ட்ராங்கா இருந்தா மட்டும் தான் வீட்ல இருக்குறவங்களும் ஸ்ட்ராங்கா இருப்பாங்க. நீங்க இப்படி துவண்டு போய் இருக்குறதை பார்க்க முடியலை. நீங்க எப்பவும் போல பழைய ராஜ ராஜனாவே இருங்க அங்கிள்” என்றவனை அணைத்துக் கொண்டார் ராஜன்.
“ரொம்ப நன்றி தீரன். நீங்க மட்டும் இல்லைன்னா என் பொண்ணுங்க நிலைமை என்ன ஆகியிருக்கும்னே தெரியாது. சரியான சமயத்துல எல்லாத்தையும் சரி பண்ணிட்டிங்க. அவங்களுக்கு ஒண்ணுன்னா என்னால யோசிக்கக் கூட முடியலை தீரன்” என்று அவன் கைகளை நன்றியுடன் பற்றிக் கொள்ள,
“இது என் டியூட்டி அங்கிள். நான் அதைத் தன் பண்ணேன். அப்பறம் மொழி என் வொய்ப். அவளுக்கு ஒரு பிரச்சனைன்னா எப்படி பார்த்துட்டு இருக்க முடியும். எதைப் பத்தியும் கவலைப் படாதிங்க. நீங்க தான் இங்க பில்லர் மாதிரி. நீங்க எந்த தப்பும் பண்ணலை. சோ எப்பவும் போல தலை நிமிர்ந்து நில்லுங்க அங்கிள். செய்யாத தப்புக்கு நீங்க தலைகுனியனும்னு எந்த அவசியமுமில்லை” என்று மாமனாரை ஒரு வழியாக தேற்றியவன்,
“ஆன்ட்டி ரொம்ப பசிக்குது. சீக்கிரம் ஏதவாது சாப்பிட செய்றிங்களா?” என்று அவரின் கவனத்தையும் திருப்பி விட்டான்.
“இதோ செய்றேன் மாப்பிள்ளை” என்றவர் சமைலறைக்குள் நுழைந்து கொள்ள, தங்கள் அறைக்குள் சென்றான். அங்கு மொழியோ கால்களை கட்டிக் கொண்டு அதில் தலைசாய்த்தபடி சுவரை வெறித்திருக்க,
“நான் என்ன சொல்லிட்டு போனேன் மொழி. நீ என்ன பண்ணிட்டு இருக்க? வீட்ல இருக்குற மத்தவங்களை கேர் பண்ணுன்னு சொல்லிட்டு போனேன். இங்க உன்னையே நான்தான் வந்து கேர் பண்ற மாதிரி இருக்கு” என்றவனின் குரலில் திரும்பியவளின் முகம்கண்டு அதிர்ந்தான்.
“என்னடி முகமெல்லாம் இப்படி வீங்கிப் போயிருக்கு. மறுபடியும் அழுதியா?” என்றான் பல்லைக் கடித்தபடி.
“இந்த ரூம்ல அவன் வச்ச கேமரா எங்க இருக்குன்னு உங்களுக்குத் தான தெரியும். அதை எடுங்க ஏசிபி” என்றாள் அமைதியான குரலில்.
“மொழிமா” என்றான் திகைப்புடன்.
“தயவு செஞ்சு எடுங்க ஏசிபி” என்றாள் மீண்டும் அழுத்தமாய். ஒரு பெருமூச்சுடன் அவன் அதை எடுக்க.. அதுவரை பொறுமையாய் இருந்தாள்.
“எடுத்துட்டேன்டி” என்றவனை,
“நீங்க வச்சது?” என்றாள் வேகமாய்.
அவளை முறைத்தவன், அதையும் எடுத்து இரண்டையும் அவள் கண் முன்னே உடைத்திருந்தான்.
“போதுமா?” என்றவனை அடுத்த நிமிடம் கழுத்தோடு கட்டிக் கொண்டவள், அவன் முகம் முழுவதும் ஒரு ஆவேசத்துடன் முத்தமிட, அவளின் இந்த அதிரடியில் திகைத்து நின்று விட்டான். அன்று போதையில் இருந்த நாளைத் தவிர்த்து அவளாக இதுவரை அவனுக்கு முத்தமிட்டதே இல்லை. அப்படி ஒரு நிறைவு அவனுக்குள். ஏனோ அந்த நிமிடங்களில் எதையும் பேசி அந்த உணர்வை இழக்கத் தோன்றவில்லை அவனுக்கு.
அவளிடம் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு அமைதியாய் நின்றவனுக்கு சற்று நேரம் சென்ற பிறகு தான் தெரிந்தது அவள் இயல்பாக இல்லை என்று.
“மொழி” என்றவனின் குரலெல்லாம் அவளுக்கு கேட்கவே இல்லை.
“மொழி” என்று அவளைப் பிடித்து அவன் உலுக்கிய பிறகு தான் அவளுக்கு நிஜமே உரைத்தது.