“நீங்களும் இந்த ஒரு மாசமா இப்படித்தான் சொல்றிங்க. ஷிப்ல அரெஸ்ட் பண்ணவங்க கிட்ட இருந்தே ஒரு தகவலும் வாங்க முடியலை உங்களால. இங்க வந்தும் சஸ்பெக்ட்ஸ் ஒருத்தரையும் விசாரிச்ச மாதிரி தெரியலை. என்னதான் பண்ணலாம்னு இருக்கீங்க?
கேஸ்ல சம்பந்தப்பட்ட மினிஸ்டர் பொண்ணு உங்களுக்கு வேண்டப்பட்டவங்க. அதனால தான் நீங்க ஆக்சன் எடுக்க தயங்குறிங்கன்னு டிப்பார்ட்மென்ட்குள்ள டாக்ஸ் ஓடுது. இவ்வளவு ஏன் அவங்களை கஸ்ட்டடில எடுத்த மாதிரி கூட தெரியலையே” என்றார் நக்கலாக.
“சாரி சார்..! மிஸ். வெண்மொழி சஸ்பெக்ட் லிஸ்ட்ல இருக்கலாம். பட் அக்யூஸ்ட் கிடையாது. அப்படி அக்யூஸ்ட் லிஸ்ட்ல சேர்க்கனும்னா கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஸ்டூடட்ன்ஸ சேர்க்கணும் சார். வெண்மொழின்னு இல்லை , சஸ்பெக்ட்ஸ் யாரையுமே நாங்க கஸ்ட்டடியில எடுக்கலை சார்.
நான் கடையோட ஓனரைத் தேடுறேன். நீங்க கடையில பொருள் வாங்குனவங்களை அரெஸ்ட் பண்ண சொல்றிங்க? இது எந்த விதத்துல சார் ஞாயம். இன்பேக்ட் அந்த ஒரிஜினல் அக்யூஸ்ட்டோட பிளானும் அது தான். எந்த பிரச்சனை வந்தாலும் அவன் முகம் வெளிய வரக் கூடாதுன்றதுல அவன் தெளிவா இருந்திருக்கான். சோ, எல்லாரையும் ஏதோ ஒரு வகையில பிளாக்மெயில் பண்ணி, பிளாக் பண்ணி அவன் காரியத்தை சாதிச்சுட்டு இருக்கான். இதுல கொடுமையான விஷயம் என்னன்னா? அவங்க குடிக்கிறது ட்ரக்ஸ்ன்னு அவங்களுக்குத் தெரியாது. அவங்க சப்ளை பண்ணது ட்ரக்ஸ்னு அவங்களுக்குத் தெரியாது” என்றான் அவர் கண் பார்த்து.
“என்ன சொல்றிங்க தீரன்?” என்றவருக்கு இது அதிர்ச்சியான விஷயம் தான்.
“எஸ் சார்! இன்னொரு மோசமான உண்மையையும் நீங்க தெரிஞ்சுக்கனும். இந்த ட்ரக்ஸ் மாபியால மாட்டுன எல்லாருமே பெரிய இடத்து பசங்க. ஐ மீன் இண்டஸ்ட்ரியலிஸ்ட், பொலிட்டிசியன், டாக்டர்ஸ் இப்படி இன்னும் ஒரு பொசிஷன்ல இருக்குறவங்க வீட்டு பசங்க தான் அதிகம். த பிட்டர் ட்ரூத் என்னன்னா?” என்று ஒரு வினாடி தயங்கியவனை அவர் யோசனையுடன் பார்க்க,
“உங்க பையன் கூட இதுல சம்பந்தப்பட்டிருக்கான்” என்றவனை அதிர்ந்து நோக்கினார்.
“என்ன சொல்றிங்க தீரன்?” என்றவரைப் பார்க்கவே அவனுக்கு பாவமாக இருந்தது.
“நிஜம் தான் சார். இன்பேக்ட் ஒரு நாள் புல்லா என்னோட கஸ்ட்டடியில தான் இருந்தான். உங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு நினைச்சேன்” என்றான்.
“சார் டென்ஷன் ஆகாதிங்க. இன்பேக்ட் ரூபன் நல்ல பையன் தான். எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் கொஞ்சம் கெத்து கட்டுவான். மத்தபடி கஸ்ட்டடியில எடுக்கவும் ரொம்ப பயந்துட்டான். உங்க பேரை எந்த இடத்துலையும் அவன் யூஸ் பண்ணவே இல்லை. அவனோட அப்பா யாருன்னு எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுட்டான் போல. நீங்களும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேண்டாம்” என்றான் தீரன்.
“நீங்க என்ன சொல்றிங்கன்னு எனக்கு புரியலை தீரன்” என்றவர் நிஜமாகவே அப்படிப்பட்ட நிலையில் தான் இருந்தார்.
நடந்த அனைத்தையும் சுருக்கமாக விவரித்தான் தீரன். கடைசியாக மொழிக்கு வந்த வீடியோ முதற்கொண்டு அவரிடம் சொல்ல, மனுஷன் கதி கலங்கி விட்டார்.
“தீரன்” என்றவர் அப்படியே இருக்கையில் இருந்து எழுந்து விட,
“உங்களுக்கு புரியும் படி சொல்லணும்னா, விசாரிக்கும் போது உங்க பையன் சொன்னதும் பொய் தான். மொழி வர சொல்லி போனதா எங்ககிட்ட சொன்னான். அதாவது அவங்க மாட்டிகிட்டா போலீஸ் விசாரிக்கும் போது என்ன சொல்லணும்னு அவங்களுக்கு ஆர்டர் வருதோ அதைத் தான் அவங்க சொல்றாங்க. ரூபன் பேசுனதை வச்சு பார்க்கும் போது” என்று தயங்கியவன்,
“அவன் தங்கச்சி சம்பந்தப்பட்ட வீடியோ இல்லைன்னா ரூபன் சம்பந்தபட்ட வீடியோ இப்படி ஏதோ ஒன்னை வச்சு அவனை பிளாக் பண்ணியிருக்கனும். அதை வச்சு அவனை ஹோட்டலுக்கு வர வச்சிருக்காங்க. மொழியையும் அதே மாதிரி தான் வர வச்சிருக்காங்க. ஆனா அவங்களுக்கு அங்க ட்ரக்ஸ் இன்ஜெக்ட் பண்ணுவாங்கன்னு அவங்களுக்கே தெரியாது” என்றான் தீரன்.
“அய்யோ தீரன் என் பொண்ணு” என்றவர் தன்னுடைய பொசிஷன் மறந்து நெஞ்சில் கைவைத்து விட்டார்.
“சார் பிளீஸ்..! இதை சொல்லி உங்களை பதட்டப்பட வைக்கிறது என் நோக்கம் கிடையாது. வெண்மொழிக்காக நான் பேவர் பண்றேன்னு நீங்க சொன்னதைத் தான் என்னால் அக்சப்ட் பண்ணிக்க முடியலை. உங்ககிட்ட சொல்ல வேண்டிய சிச்சுவேஷன் எனக்கு” என்றவனை கலங்கிப் போய் பார்த்திருந்தார்.
“ஆனா தீரன் ஏன் இப்படி?” என்றார் வார்த்தை வராமல்.
“ஜஸ்ட் சிம்பிள் சார்..! எல்லாருமே சொசைட்டில ஒரு பேரோட இருக்குற வீட்டு பசங்க. அவங்க குறி வச்சதும் பெரிய பெரிய காலேஜ், ஸ்கூல்ஸ் தான். பசங்களை காப்பாத்த பேரண்ட்ஸ் எந்த எல்லைக்கும் போவாங்க. பசங்க பேர் வெளிய வராம இருக்க என்ன பண்ணனுமோ அதை பண்ணுவாங்க. அவனுக்கு தொழிலும் நடந்த மாதிரி ஆச்சு. விஷயம் வெளிய வந்தா அவன் கஷ்ட்டப்படவே தேவையில்லை. அவன் மாட்டவும் போறதில்லை. மாட்டப் போறது இடையில இருக்குற பசங்க தான். அவங்களையும் பேரண்ட்ஸ் காப்பாத்தி முடிஞ்ச அளவுக்கு விஷயத்தை மூடி மறைச்சுடுவாங்க. சோ எல்லா வகையிலும் அவனுக்கு லாபம். சிம்பிளா சொல்லனும்னா அவன் ஒரு எலைட் பிஸ்னஸ் பண்றான் சார். சோ செலக்ட் பண்ற பீப்பிள்ஸ் கூட எலைட்தான்” என்றான் தீரன்.
“இவ்வளவு விஷயம் கலெக்ட் பண்ணியிருக்கிங்க. ஆனா எனக்கு ரிப்போர்ட் பண்ணவே இல்லையே தீரன்? அப்போ அக்யூஸ்ட் யாருன்னும் உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே?” என்றார்.
“அல்மோஸ்ட் நெருங்கிட்டோம் சார். ஆனா சட்டுன்னு கை வைக்க முடியாது. எவிடன்ஸ் தேவை. அதுக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். அது மட்டுமில்லை சார், ஒவ்வொருத்தரையும் பிளாக் பண்ண ஒவ்வொருத்தர் சம்பந்தப்பட்ட வீடியோவும் அவன்கிட்ட இருக்கு. கொஞ்சம் மிஸ் ஆனாலும் அதை அவன் வெளிய விட சான்ஸ் அதிகமா இருக்கு. அதோட விளைவுகளை பத்தி உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பல பொண்ணுங்க வாழ்க்கையோட விளையாட எனக்கு விருப்பமில்லை சார். அதிக பட்சம் ஒரு வாரம், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாம அக்யூஸ்ட்டை உங்க முன்னாடி நிறுத்துறேன்” என்றான்.
“தீரன் அந்த வீடியோ விஷயம்” என்று அவர் தயங்க, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் தீரன். அவன் நினைத்தது எவ்வளவு சரி? தங்கள் பிள்ளைகள் என்று வரும் போது எப்பேர்பட்ட பதவியில் இருந்தாலும் பதறித் துடிக்கிறார்களே? இதைத் தானே அந்த முகம் தெரியாதவனும் கெட்டியாய் பிடித்துக் கொண்டிருக்கிறான்.
“ட்ரஸ்ட் மீ சார். வீடியோ எக்காரணம் கொண்டும் லீக் ஆகாது. அன்ட் அதுல இருக்குறது என் வொயிப். அவ கூட இருக்குறது நான் தான்னு எப்படி எல்லாரையும் நினைக்க வச்சேனோ இனியும் அப்படித்தான். ரூபன் பேர் கண்டிப்பா வெளிய வராது. அன்ட் இன்னொரு விஷயம். இதுல ரெண்டு பேர் மேலயும் தப்பில்லை. சோ அவங்களுக்கான பாதுகாப்பை கொடுக்க வேண்டியது நம்ம கடமை சார்” என்றான்.
“ஐ ஆம் சோ ப்ரௌட் ஆப் யு தீரன்” என்றவர் அவனை அணைத்துக் கொள்ள,
“தேங்க் யு சார்” என்று அவருக்கு சல்யூட்டை வைத்து விட்டு தன் அறைக்கு வந்தவனுக்கு ஆயாசமாய் வந்தது.
“என்ன சொல்றார் டிஐஜி” என்றான் விவேக்.
“அவர் மகன் விஷயத்தை உடைச்சு விட்டு வந்துட்டேன்” என்றான் தீரன்.
“எனக்கு வேற வழி தெரியலை விவேக். நான் மொழிக்கு பேவர் பண்றதா பேசறார். நிஜமா நான் அப்படி பண்ணுவேனா? இதுல சம்பந்தப்பட்ட எல்லா பசங்களோட ப்யூச்சரையும் யோசிச்சு தான அமைதியா இருக்கேன். அதான் வர்றது வரட்டும்னு சொல்லிட்டேன்” என்றான் தீரன்.
“சரி விடு அதி. அவர் என்ன செய்வார் பாவம்? அவருக்கும் மேல இருந்து பிரஷர் வந்திருக்கும்” என்ற விவேக் சொல்ல,
“இத்தனை நாள் வராத பிரஷர் இப்போ ஏன் விவேக் வரணும். இன்பேக்ட் நாம இன்னும் அந்த அவேர்னஸ் வீடியோவைக் கூட எங்கயும் அனுப்பலை. கேஸ் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் யார் கிட்டவும் ஷேர் பண்ணலை. அப்பறம் எப்படி?” என்றவன் தலையைப் பிடித்தான்.
“நீ ரொம்ப காம்ப்ளிகேட் பண்ணிக்கிற அதி. அவர் ஒரு ஹையர் ஆபீசரா உன்கிட்ட கேட்டிருக்கலாம்” என்றான் விவேக்.
“நோ..! நாம அவனை நெருங்குறது ஏதோ ஒரு விதத்துல அவனுக்கு தெரிஞ்சிருக்கு. அதான் நம்மளை நாடி பிடிச்சு பார்க்குறான்” என்று யோசித்தவன்,
“நாளைக்கு அவேர்னஸ் வீடியோ எல்லா ஸ்கூல் காலேஜ்லையும் டெலிகாஸ்ட் ஆகியிருக்கணும். மேஜிக் ட்ரிங்க் சம்பந்தமா ஏதாவது செய்ய சொல்லி யாராவது கம்பல் பண்ணியிருந்தா அவங்களை தைரியமா கம்ப்ளைன்ட் குடுக்க சொல்லிடுங்க. கம்ப்ளைன்ட் குடுக்குறவங்க தகவல் எக்காரணம் கொண்டும் வெளிய போகாதுன்னு சேர்த்து சொல்லிடுங்க. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு” என்றான் தீரன்.
அதற்குள் போன் வர, எடுத்துப் பேசிய விவேக்..
“அதி அந்த தாரிக்கை கஸ்ட்டடியில எடுத்தாச்சு” என்றான்.
“இல்லீகல் டார்க் வெப் அன்ட் அடல்ட் வீடியோஸ் ரிலீஸ் பண்ற சைட்ஸ், அன்ரிஜிஸ்ட்டர் விபிஎன்ல இருந்து அப்லோட் ஆகுற வீடியோஸ் எல்லாத்தையும் இருபத்தி நாலு மணி நேரமும் வாட்ச் பண்ணுங்க. மெயினா நான் சொல்லும் போது எல்லாரும் ரெடியா இருக்கணும். அன்ட் டிப்பார்ட்மென்ட் சைடுல இருக்குற ஹேக்கர்ஸ வர சொல்லுங்க. எப்ப வேணும்னாலும் என்னோட ஆர்டர் வரும். சோ அலெர்ட்டா இருங்க” என்றவன் மேற்கொண்டு செய்ய வேண்டிய அனைத்தையும் விவேக்கிடம் விவரிக்க, கண்களை விரித்தான் விவேக்.
“இது பாசிபிளா அதி?” என்றான் விவேக்.
“ஹன்ட்ரெட் பர்சன்ட் பாசிபிள் தான் விவேக். சுத்தியிருக்குற எல்லாத்தையும் கிளியர் பண்ணிட்டு சாவகாசமா அவன் கூட கேம் விளையாடுவோம்” என்றான் தீரன்.
“பட் அதி” என்று விவேக் ஏதோ சொல்ல வர,
“பார்த்துக்கலாம் விவேக். இப்போ தாரிக்கை பார்க்க போகலாமா?” என்றபடி தாரிக் முன் சென்றவனை அதிர்ச்சியுடன் பார்த்திருந்தான் தாரிக்.
“சார் இதெல்லாம் ரொம்ப தப்பு” என்றான் கோபமாய்.
“எதெல்லாம் ரொம்ப தப்பு?”
“நீங்க மொழியை என் கிட்ட இருந்து பிரிக்கிறதுக்காக இப்படி பண்றிங்க?” என்றான் தாரிக்.
“நான் ஏன்டா மொழியை உன்கிட்ட இருந்து பிரிக்கணும்? எனக்கென்ன வேண்டுதலா? நான் கேட்குற கேள்விக்கு மட்டும் சரியா பதிலை சொல்லிடு. நானே மொழியை உன் கூட சேர்த்து வைக்கிறேன்” என்றான் தீரன்.
“என்கிட்ட என்ன கேட்க போறீங்க?” என்றான் அசட்டையாய்.
“அப்படியா? நான் என்ன கேட்பேன்னு உனக்குத் தெரியாது?” என்றவனின் பார்வையில் தாரிக் எச்சில் விழுங்க,
“சரி சொல்லு ஜித்தேஷ் உன் அண்ணன் தான?” என்றான். அது வரை அசட்டையாய் இருந்தவனின் உடலில் ஒரு பதட்டம் வந்திருந்தது.
“ஆ..ஆமா சார்” என்றான்.
“அன்னைக்கு ஷிப்ல மொழிகிட்ட மிஸ்பிகேவ் பண்ணது அவன் தான?” என்றான்.
“நோ சார்..! எனக்குத் தெரியாது” என்றான் தாரிக்.
“உனக்கு எப்படி தெரியாம இருக்கும்?” என்றான் தீரன்.
“நிஜமாவே எனக்குத் தெரியாது. அது என் பிரண்ட்ஸ் கூட போன ட்ரிப். அதுல எங்க இருந்து ஜித்தேஷ் அண்ணா வந்தான். பர்ஸ்ட் அவர் அந்த ட்ரிப்ல இல்லவே இல்லை” என்றான் தாரிக்.
“ஆர் யு ஷ்யர்” என்றான் தீரன் கூர் பார்வையுடன்.
“ஆமா சார்”
“அப்போ இது யாரு மேன்?” என்று ஒரு வீடியோவைக் காட்ட, அதில் ஜித்தேஷும் தாரிக்கும் நின்று பேசிக் கொண்டிருப்பது தெளிவாய் தெரிந்தது. தாரிக்கின் கண்கள் விரிய சட்டென்று மறைத்துக் கொண்டவன்,
“அது..அது..! இந்த ட்ரிப்ல எடுத்தது இல்லை. அது வேற ஒரு ட்ரிப்” என்றான் தாரிக்.
“மாட்டினதுக்கு அப்பறம் இப்படி பச்சையா சமாளிக்கிற பார்த்தியா? இந்த புட்டேஜ் எடுத்த தேதி நேரம் முதற்கொண்டு அதுலயே இருக்கு. அறிவை அடகு வச்சிடுவியோ? உண்மையை நீ சொல்றியா? இல்ல நான் சொல்ல வைக்கவா? எத்தனை நாளா ரெண்டு பேரும் இந்த ட்ரக் டீலிங் பண்றிங்க” என்றான் தீரன்.
“சார்..!சார்..! நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை சார். நான் மொழியை மூணு வருஷமா லவ் பண்ணேன். அவ என் லவ்வை அக்சப்ட் பண்ணலை. அதை ஒரு நாள் அண்ணாகிட்ட சொல்லி புலம்புனேன்.அவளை என் லவ்வை அக்சப்ட் பண்ண வைக்கிறதா சொன்னான். அதை செய்யவும் செஞ்சான். மொழி என் லவ்வை அக்சப்ட் பண்ணிகிட்டா” என்றான் தாரிக்.
“அதுக்கு நீ என்ன பண்ண?” என்றான் தீரன்.
“சார் நான் ஒண்ணுமே பண்ணலை சார். நான் நிஜமாவே மொழியை லவ் பண்ணதை தவிர்த்து வேற எந்த விஷயத்தையும் நான் பண்ணலை” என்றான் தாரிக்.
“அந்த ஷிப் ட்ரிப் நீ போட்டது தானே? ஆனா அது நீயா போட்ட மாதிரி தெரியலையே?” என்றான் தீரன்.
“அது அண்ணா சொன்ன ஐடியா தான் சார். மொழி என்கிட்டே சரியா பேசறது இல்லை. என்கூட டைம் ஸ்பென்ட் பண்றது இல்லைன்னு புலம்புனேன். அவன் தான் இந்த ட்ரிப் பிளான் பத்தி சொன்னான். உங்களுக்கு பேசிப் பழக நேரம் கிடைக்கும்னு சொன்னான்” என்றான் தாரிக்.
“லவ் பண்றதுக்கே அடுத்தவன் ஹெல்ப்பை எதிர்பார்க்குற உனக்கு லவ் ஒரு கேடு” என்ற தீரனின் வார்த்தைகளில் தலையை குனிந்து கொண்டான் தாரிக்.
“எனக்கென்னவோ இவன் பொய் சொல்றான்னு தோணுது அதி” என்றான் விவேக்.
“தோணுது என்ன விவேக்? இந்த நாய் சொன்னதுல பாதிக்கு மேல பொய் தான். கண்டு பிடிச்ச கேஸுக்கு எதுக்கு இவன்? பேசாம என்கௌன்ட்டர்ல முடிச்சு விட்றலாம். இவன் எதுக்கு பூமிக்கு பாரமா?” என்றான் தீரன் போகிற போக்கில்.
“சார்” என்று எச்சில் விழுங்கினான்.
அவனை ஓங்கி அறைந்தவன்,”என்னடா சாரு?” என்றான் தீரன் கோபமாய்.
தாரிக் திகைத்து போய் பார்க்க,
“எல்லா உண்மையும் எனக்குத் தெரியும்? உன் டியரஸ்ட் பிரண்ட் டயானா தான் உன் வருங்கால அண்ணின்னும் எனக்குத் தெரியும்” என்ற தீரனைப் பார்த்த தாரிக்கின் விழிகளில் நிச்சயம் பயம் இருந்தது.
“வேறென்ன தெரியனும் உனக்கு? ங்கான்..! காலேஜ்ல இருக்குற பெரிய இடத்து பசங்களோட லிஸ்ட் எடுத்துக் குடுத்ததே நீயும் டயானாவும் தான் இல்லையா? மொழி பேரை சொல்லி, மேஜிக் ட்ரிங்க் சப்ளை பண்ணது கூட நீங்க தான். காலேஜ்ல நடந்த ஒரு பையனோட டெத் மூலமா இதைத் தெரிஞ்சுகிட்ட விமலை, அந்த ஷிப் டீலிங் அப்போ அவனை அங்க வர வச்சதும் நீங்க தான். அவனைத் தப்பிக்க வச்சதும் நீங்க தான். அதாவது அவனையும் உங்க வேலையில ஒரு கூட்டாளி மாதிரி காட்டிட்டா அவன் வாயைத் திறக்க மாட்டான்னு பிளான் பண்ணி பண்ணியிருக்கிங்க. எந்த இடத்துலயும் உங்க மேல சந்தேகம் வராம இருக்க எல்லா இடத்துலையும் ஒருத்தரை யூஸ் பண்ணியிருக்கிங்க? இதுல உன் குளோஸ் பிரண்ட் ரூபனை கூட நீ விட்டு வைக்கலை. சோ பிரண்ட்ஷிப்ன்ற பேர்ல நீ பண்ண எல்லாமே மொள்ளமாரித்தனம்” என்றான் தீரன்.
“சார் என்னை நம்புங்க சார். அண்ணா சொல்றதை எல்லாம் செஞ்சா மொழியை எப்படியாவது என்கூட சேர்த்து வைக்கிறேன்னு சொன்னான். அதனால தான் அவன் சொன்ன மாதிரி எல்லாம் செஞ்சேன். நான் மொழியை நிஜமாவே லவ் பண்றேன் சார்” என்றான் தலையை குனிந்தபடி.
“இசிட்..! அப்போ ப்ரூவ் பண்ணு” என்றான் தீரன்.
“நீங்க என்ன சொல்றிங்க?” என்றான் தாரிக்.
“நீ மொழியை நிஜமா லவ் பண்றேன்னு இப்போ எனக்கு ப்ரூவ் பண்ணு” என்றான் தீரன் தெளிவாக.
“என் அண்ணன் எந்த தப்பும் செய்யலை சார்? நான் ஏன் வாக்குமூலம் குடுக்கணும்?” என்றவனை மீண்டும் தீரன் ஒரு அறை விட, வாயைத் திறந்திருந்தான் தாரிக்.
அரைமணி நேரம் கழித்து வெளியே வந்த விவேக்,
“எல்லாம் ரெக்கார்ட் பண்ணிட்டேன் அதி. ஆனா இவன் ஒரு டம்மி பீஸ் மாதிரி தான் தெரியுது அதி. நீ சொன்ன வரைக்கும் தான் அவனுக்குமே தெரிஞ்சிருக்கு. அந்த டயானாவும் அப்படித்தான் போல. ஜித்தேஷை பிடிச்சா மட்டும் தான் மேற்கொண்டு நாம மூவ் பண்ண முடியும்.இப்போ இவனை என்ன பண்றது?” என்றான்.
“அவனைப் போக சொல்லிடு விவேக்” என்று தீரன் கூறியதைக் கேட்டு அதிர்ந்த விவேக்,
“இப்போ இவனை வெளிய விட்டா நேரா போய் அவன் அண்ணன் கிட்ட நடந்ததை சொல்ல மாட்டானா அதி?” என்றான் விவேக்.
“அதானே நமக்கு வேணும். எங்க போய்ட போறான். அனுப்பிடு” என்று அசால்ட்டாய் சொன்னவன் தன் அறைக்குள் சென்று அமர்ந்து கொள்ள, விவேக் அவனை அனுப்பி விட்டு வந்தான்.
விட்டத்தைப் பார்த்து அமர்ந்திருந்த தீரனைப் பார்த்த விவேக்,
“எனக்கு ஒரு விஷயம் புரியலை அதி?” என்றான். தீரன் அவனை அமைதியாக பார்க்க,
“இந்த ட்ரக் டீலிங், ஸ்டூடண்ட்ஸ் கிட்ட ட்ரக்ஸ் சப்ளை பண்ணது, இன்டர்நேஷனல் டீலிங் இப்படி எல்லாமே ஒரே ட்ராக்ல இருக்கு. எல்லாரையும் ஏதோ ஒரு விதத்துல பிளாக்மெயில் பண்ணி காரியம் சாதிச்சிருக்காங்க எல்லாமே ஓகே தான். பட் எனக்கு ஒரு விஷயம் மட்டும் தான் பிடிபடலை” என்றான் விவேக்.
“அதான் வாய் வரைக்கும் வந்துடுச்சே..! கேட்டுரு” என்றான் தீரன்.
“இவங்க ஏன் எல்லாரையும் டீல் பண்ண மாதிரி வெண்மொழியை டீல் பண்ணலை. எதுக்காக வெண்மொழி பேரை டேமேஜ் பண்ண நினைக்கணும். இதுல சம்பந்தப்பட்ட எல்லாரையும் காப்பாத்த தான் பார்த்திருக்காங்க. விமல் உட்பட. ஏன்னா அவங்க மூலமா அவங்களுக்கு கடைசி வரைக்கும் காரியம் ஆகணும். அப்போ அதே மாதிரி தான மொழியை டீல் பண்ணியிருக்கணும். எதுக்காக அவங்களை மட்டும் வெளிய எக்ஸ்போஸ் பண்ண நினைக்கணும்? கிட்டத்தட்ட நமக்குத் தெரிஞ்சே தௌசண்ட் பிளஸ் ஸ்டூடண்ட்ஸ் இதுல சம்பந்தப்பட்டிருக்காங்க. ஆனா கோர்ஸ் முடிச்சு ஆறுமாசம் ஆகியும் ஏன் மொழியை மட்டும் விடாம துரத்தனும்?” என்றான் விவேக்.
அவனை அமைதியாக பார்த்த தீரன்,
“கூடிய சீக்கிரம் தெரிஞ்சுக்குவ விவேக்” என்ற தீரன்,
“நாளைக்கு எனக்கும் மொழிக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ்” என்று அதிராமல் குண்டைத் தூக்கிப் போட்டான்.
“என்ன சொல்ற மச்சான்?” என்ற விவேக் நம்பாமல் அவனைப் பார்க்க, விவேக்கைப் பார்த்து கண்ணடித்த தீரன்,
“மாமனார் வீட்டுக்குள்ள எத்தனை நாளைக்குத்தான் ஆபீசராவே போறது. ஒரு தடவை மாப்பிள்ளையா தான் போய் பார்ப்போமே?” என்று சிரித்தவனைப் பார்த்து தலையில் கை வைத்து விட்டான் விவேக்.
விவேக்கின் பாவனையைப் பார்த்து தீரனுக்கு சிரிப்பு வர,
“மாமா உன் பொண்ணக் குடு, ஆமா சொல்லிப் புடு
இது சாமி போட்ட முடிச்சு, அது தான்டா மூணு முடிச்சு” என்று உல்லாசமாய் பாடியபடி தாளம் தட்டிய படி விவேக்கைப் பார்த்து சிரிக்க,
அவன் சிரிப்பின் அர்த்தம் உணர்ந்த விவேக்கோ,
“மச்சான் நிஜமாவா?” என்றான் நம்பாத பாவனையுடன்.
“ஆமா” என்றான் ராகமாய்.
“அப்போ கல்யாண வேலையை பார்ப்போமா?” என்றான் விவேக்.
“அதெல்லாம் வீட்ல பார்ப்பாங்க. இப்போ இன்னொரு வேலை இருக்கு” என்று லேப்டாப்பை அவனை நோக்கி திருப்பியவன்,
“நம்ம லவ்வர் பாய் தாரிக் போய்கிட்டு இருக்குற ரூட். நம்ம ஆட்களை பாலோ பண்ண சொல்லு. கொஞ்சம் கூட சந்தேகம் வரக் கூடாது. அப்பறம் சார் எங்க போய் யார்கிட்ட பேசுனாலும் மொபைல் ஆன்ல இருக்குற வரைக்கும் நமக்கு கேட்கும். ரெக்கார்ட் பண்ணிக்கோ” என்றான் தீரன்.
“எப்படி மச்சான்?” என்றான் விவேக்.
“நீ அவன்கூட அரைமணி நேரம் பேச்சு வார்த்தை நடத்துன நேரத்துல சும்மா இருக்க போர் அடிச்சதா? அதான். இதுக்குப் பேரு தான் அவன் பொருளை எடுத்து அவனையே போடுறது. அவன் மொபைல் நம்ம ஹேக்கிங் டீம் கண்ட்ரோல்ல இருக்கு” என்றான் தீரன்.